ஹைதராபாத் ஒரு பார்வை(பாகம்..2)


ஹைதராபாத்தில் ஒரு சில இடங்களில் முஸ்லீம் பெண்கள் பர்தாக்களுடன் வளம் வருகின்றார்கள்....மற்ற பொது இடங்களில் பெண்களை பார்க்கும் போது பணச்செழுமை அவர்கள் உடம்பில் கண்ணில் படும்படி தெரிகின்றது...சிலரை பார்க்கும் போது பூமி காலடியில் நழுவுகி்ன்றது...

உடை விஷயத்தில் பெங்களுர்போலவே ரொம்பவே தாரளமாக இருக்கின்றார்கள் என்பேன்... குளித்து கிளம்பும் போது என்னவிதமான உள்ளாடைஅணிந்தார்களோ அதை எல்லா ஆண்களுக்கும் காண்பிக்க சத்தியம் செய்து விட்டு வீட்டில் இருந்து புறபட்டது போல் இருக்கின்றார்கள்...

சார்மினார் அருகில் எதிரில் நடந்து வருபவன்.. மூக்கில் கை வைத்து ஒரு மாதிரியாக தலை சாய்த்து பார்த்தால் பெண் உங்களுக்கு வேண்டுமா? என்று அர்த்தமாம்..

ஹைதரபாத் போலிஸ் எல்லாம் டம்மி போலிஸ் போல் பிரிஸ்க் இல்லாமல் நோஞ்சானாக இருக்கிறார்கள்... பிரிஸ்க் என்றால் நம்ம ஊர் போலிஸ்தான்... லஞ்சத்திலியும் பிரிஸ்க்கிலியும் நம்மல அடிச்சிக்கவே முடியாது...

ஐடி வந்த பிறகு சென்னை ,பெங்களுர் போல ஹைதரபாத்தும் தன்னை ஐரோப்பாவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது...


இங்கு இருக்கும் எல்லா மால்களிலும்...மக்களை பார்க்கும் போது அவர்கள் வீட்டு பீரோ தேவையில்லாமல் நினைவுக்கு வந்த தொலைக்கின்றது...இங்கு பிராசாத் ஐ மேக்ஸ் தியேட்டர் போனேன்.. அது என் கனவு என்று கூட சொல்லலாம்....

சென்னையில் அந்த தியேட்டர் கட்ட இடம் கேட்ட போது அப்போது ஆட்சியில் இருந்த அம்மா.. பல கோடிகள் கமிஷன் கேட்க அந்த வளாகம் ஹைதராபாத்துக்கு தலை தெரிக்க ஓடியதாக அப்போது வந்த பத்திரிக்கை செய்திகள் சொல்லிக்காட்டியது...
ஐமேக்ஸ் தியேட்டர் பற்றி தனி பதிவு இன்னும் கொஞ்சம் நாட்களில்...

அந்த வளாகத்தில் இல்லாத விஷயங்கள் இல்லை எனலாம்.. அது பெரும் பணம் படைத்தவர்களுக்கான வளாகம் என்றால் மிகையில்லை... தியேட்டருக்கு வந்த மேல்தட்டு பெண்களில் நடுத்தர வ யதை தாண்டியவர்கள் கூட அதிக மேக்கப்பில் லி்ப்ஸ்டிக் புன்னகையுடன் மொக்கை காமெடிக்கு விழுந்த விழுந்து சிரித்தார்கள்...

ஜில்லட் கம்பெனி சவரம் செய்யும் சமாச்சாரங்கள் ஆண்களிடம் அறிமுக படுத்த ஒரு ஸ்டால் போட்டு இருந்தார்கள்...பெண்கள் அதுவும் பாரின் பெண்கள் ஆண்களுக்கு ஷேவ் செய்து கொண்டு இருந்தார்கள்... என்னை ஸ்டால் அறிவிப்பாளினி... என் தாடியை பார்த்துவிட்டு ஷேவ் செய்ய அழைக்க எனக்கு இருந்த கலர் காமினேஷன் பிரச்சனையால் அதனை தவிர்த்துவிட்டேன்...தியேட்டரில் ஐமேக்ஸ் தியேட்டரில் இரண்டு பெண்ள் எங்கள் சீட்டு பக்கத்தில் கருப்பு பிரா போட்டு அதன் மேல் டம்ப்ரைடர் என்ஜலீனா ஜுலி போல் ஒரு சின்ன பனியனை ஒப்புக்கு போட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார எனக்கு ஏசி குளிரிலும் கழுத்து பக்கம் வியர்வையும் தேவையற்ற உமிழ் நீர் சுரப்பையும் என்னால் தவிர்க்க முடியவில்லை.....

சென்னை போல் இல்லாமல் தியேட்டர் கட்டணம் கொஞ்சம் குறைவு என்று நினைக்கின்றேன்

அம்மாவாசைக்கு வீட்டை கழுவி விட்ட சென்னை போல் இல்லாமல் இங்கு எல்லா இடத்திலும் விளம்பர ஹோடிங்குகளில் இந்தியாவின் டாப் மாடல்கள்... தங்கள் சின்ன மார்பை இறுக்கிய உடைகளில் சலைகளில் பயணிப்பவரை கதறவைத்து கொண்டு இருந்தார்கள்...

இங்கு ஜுப்லி ஹீ்ல்சில் பெத்தம்மா கோவில் என்று ஒன்று இருக்கின்றது. அது முழுக்க முழுக்க தமிழர்கள் கிராமத்து கோவில்கள் போல கட்டிட அமைப்பு இருக்கின்றது... பெரிய கோவில்...
இன்னும் 3 ரூபாய்க்கு சின்ன பிங்கான் கப்பில் டீ கொடுக்கின்றார்கள்... அதே போல் இங்கிலிஷ் படத்தில் கல்ப்பா அடிக்க சின்னதா ஒரு கண்ணாடி கிளாஸ்சில் சரக்கு அடிக்க வச்சிரப்பானுங்களே .. அது போல் ஒரு சின்ன டி கிளாசில் டீ 3 ரூபாய்க்கு கொடுக்கின்றார்கள்....

அதே போல் சென்னையில் இரண்டுநாள் உறக்கம் தவிர்த்து படபிடிப்பில் கலந்த கொண்டு விட்டு பாத்ரூம் போனால் சி்றுநீர் கலர்... நாளைக்கு மஞ்சள்காமலை என் வீட்டு கதவை தட்ட ரெடியாக இருப்பது போல் கிலி ஏற்படுத்தும் ... காலையில் போய் சென்னையில் ஒரு இளநீர் கேட்டால்... அதற்க்கு மஞ்சள்காமாலை எவ்வளவோ தேவலை என்பது போல்இளநீர் ரேட் சொல்லி மயக்கம் வர வைப்பார்கள்... கேட்டால் நாமக்கல்காய்,பெங்களுர்காய் என்று கதை விடுவார்கள்...

அவ்வளவு பெரிய நகரத்தில் இளநீர் 5 ரூபாய்க்கு கிடக்கின்றது... அரிசி 20 ரூபாய் கிடைக்கின்றது... அதே அரிசி இங்கு37 ரூபாய் ...இங்க நம்பலை நல்ல ஏமாத்தராங்க....

பிரியானி150லிருந்து 250 வரை கிடைக்கின்றது.. ஒரு குடும்பமே சப்புகொட்டி சாப்பிடலாம்...75 ரூபாய்க்கு சிக்கன் பிரைட்ரைஸ் சொன்னேன்... அதையும் இரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு எடுத்து வந்து வைக்கின்றார்கள்...

பேருந்துகள் வெளிமாநிலத்துக்கு செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் கொஞ்சம் அழகாய் இருக்கின்றன...லோக்கல் பேருந்துகள் எல்லாம் நகரத்து அழகை கெடுக்கின்றன...ஏர்போர்ட் செல்லும் எசி பஸ்கள் பராவாயில்லை...

தனித்தேலுங்கான பிரச்சனை,கைது பஸ் எரிப்பு என ஆந்திராவின் அக்மார்க் கலவரம் ஆரம்பிக்கும் அன்றைக்கு முதல்நாள்இரவு... சென்னைக்கு வோல்வோ பஸ்சில் ஏறிவிட்டோம்...

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

20 comments:

  1. அவ்வளவு பெரிய நகரத்தில் இளநீர் 5 ரூபாய்க்கு கிடக்கின்றது... அரிசி 20 ரூபாய் கிடைக்கின்றது... அதே அரிசி இங்கு37 ரூபாய் ...இங்க நம்பலை நல்ல ஏமாத்தராங்க....


    நம்ம என்னைக்கும் இ.வா. தான் இரண்டு பகுதியும் நல்லா இருந்தது.

    ReplyDelete
  2. உங்க பார்வையே 'தனியா' இருக்கேப்பா ஜாக்கி.

    பதிவை கோபாலுக்குக் காமிக்கலாமா, வேணாமான்னு ஒரு சின்ன குழப்பத்தில் இருக்கேன்:-)

    "இவ்வ்ளோ இருக்கு.........என்னைச் சமாதிக்குக் கூட்டிட்டுப்போனீயே..."

    வேணுமா எனக்கு?!

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு..முத்துக்கடை பக்கம் போலையா???

    ReplyDelete
  5. //தனித்தேலுங்கான பிரச்சனை,கைது பஸ் எரிப்பு என ஆந்திராவின் அக்மார்க் கலவரம் ஆரம்பிக்கும் அன்றைக்கு முதல்நாள்இரவு... சென்னைக்கு வோல்வோ பஸ்சில் ஏறிவிட்டோம்...//

    கிரேட் எஸ்கேப்பா

    ReplyDelete
  6. Sir,idayum konjam paruinga http://worldphotocollections.blogspot.com/2009/12/driving-sense-photos-from-india.html

    ReplyDelete
  7. சூப்பரா இருக்கு தலைவா...

    ReplyDelete
  8. //உடை விஷயத்தில் பெங்களுர்போலவே ரொம்பவே தாரளமாக இருக்கின்றார்கள் என்பேன்... குளித்து கிளம்பும் போது என்னவிதமான உள்ளாடைஅணிந்தார்களோ அதை எல்லா ஆண்களுக்கும் காண்பிக்க சத்தியம் செய்து விட்டு வீட்டில் இருந்து புறபட்டது போல் இருக்கின்றார்கள்...//

    படம் எங்கே?????????
    பதிவை போட்டு படங்களை போடாம என்னை போன்ற சின்ன பசங்களை ஏமாதிறிங்க............::(((

    ReplyDelete
  9. அசத்தலான பதிவு. ஹைதைக்கே நேரடியாக சென்றது போல் இருந்தது.

    ReplyDelete
  10. எப்போதுமே, பிரியாணியும் மற்ற சாப்பாட்டு வகைகளும் நிறையவே கொடுப்பார்கள். எனது சில ஆந்திர நண்பர்கள் இரண்டு பிளேட் பிரியாணி கூட சாப்பிடுவார்கள் . :-))

    ஐமேக்ஸ் தியேட்டரும், NTR பூங்காவும், ஹூசைன் சாகர் ஏரியும் தான் அவர்களின் பிரபல பொழுதுபோக்குத் தளங்கள்.

    கிருஷ்ணா நகர் நமது கோடம்பாக்கம் போலத்தான். நிறைய சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள்.

    ஒரு சில ஏரியாக்கள் தவிர பெரும்பாலும் மீட்டர் ஆட்டோக்கள் கிடைக்கும்.

    முடிந்தால் நான் அங்கு வாழ்ந்த நான்கு ஆண்டுகால அனுபவத்தை பகிர்கிறேன். :-)

    ReplyDelete
  11. அப்படியே சொல்லிருக்கீங்க..! ரெண்டரை வருஷ ஹைதராபாத் வாழ்க்கை முடிச்சி சென்னை வரும்போது ஏதோ ஒன்னு இங்க குறையிற மாதிரி தோணிச்சி!.........அங்க உள்ள CLIMATE பத்தி நீங்க ஒரு வார்த்தை சொல்லலியே...???

    ReplyDelete
  12. //அவ்வளவு பெரிய நகரத்தில் இளநீர் 5 ரூபாய்க்கு கிடக்கின்றது... அரிசி 20 ரூபாய் கிடைக்கின்றது... அதே அரிசி இங்கு37 ரூபாய் ...இங்க நம்பலை நல்ல ஏமாத்தராங்க....//

    உண்மையாகவா? ஹைதராபாத்வாசிகளை நினைத்து பொறாமையாக இருக்கிறது.

    நாம்தான் ஏமாந்த சோனகிரிகளாச்சே, எவ்வளவு விலைக்கு வித்தாலும் வாங்க நாம்ப ரெடியா இருக்கோம்.

    ReplyDelete
  13. நல்ல பயணக்கட்டுரை. நேரில் சுற்றி பார்ப்பது போல. ஐமேக்ஸ் பற்றி மறக்காமல் எழுதுங்கள்.

    ReplyDelete
  14. னல்ல பதிவு. நன்றாக கவனித்து(!)எலுதி இருக்கிறீர்கள்.
    இன்னும் சில.
    கரண்ட் பில் பெரும்பலான ப்ரவுசிங் செண்டர்களில் கட்டலாம் (ஈ சேவா).மேக்சிமம் வீட்டிற்கு அருகில்.
    அதிகபட்சம் 5 நிமிடம். கடைசி தேதிக்குள் கட்டாவிட்டால் 3 மாதம் பிறகுதான் வந்து கேட்கிறார்கள்.
    வாடகை வீடுகளுக்கு அட்வான்ஸ்
    ஒரு மாதம் அல்லது இரண்டு மாத வாடகை மட்டுமே.
    ஸ்கூல் ஃபீஸ் நல்ல பள்ளிகளில் கூட
    ரீசனப்ள்.
    எல்லா இடங்களுக்கும் பங்கு ஆட்டோ
    ரூ.5 கிடைக்கிறது.
    டிரஸ்,பெண்கள் குறித்து நீஙகள் சொல்வது உண்மை.அல்காக இல்லாத
    பெண்களைதான் தேட வேண்டும்.
    பெரும்பாலானவர்களுக்கு பாய் ஃப்ரண்ட் உண்டு போல.பஸ்ஸில்,னடக்கையில் இயர் போன் மாட்டிக்கொண்டு பேசிக்கொண்டே செல்கிறார்கள்.
    பகலில் யாரைப்பற்றியும் கவலை இல்லாமல் காதலர்கள் கட்டிபிடித்து மடியில் படுத்து பேசும் இடம் இந்திரா பார்க்.
    வெள்ளை ரேஸன் கார்ட் உள்ளவர்களுக்கு ஆபரேசன் செலவுக்கு
    அரசே பணம் செலுத்திவிடுகிறது.

    ReplyDelete
  15. ஐமாக்ஸ் பத்தி சீக்கிரம் எழுதுங்கள். 3D,4D படங்கள், பேய் வீடு,3D show, ராமோஜி பிலிம் சிட்டி பதியும் எழுதுங்கள்.

    ReplyDelete
  16. ஐமாக்ஸ் பத்தி சீக்கிரம் எழுதுங்கள். 3D,4D படங்கள், பேய் வீடு,3D show, ராமோஜி பிலிம் சிட்டி பதியும் எழுதுங்கள்.

    ReplyDelete
  17. ஐமாக்ஸ் பத்தி சீக்கிரம் எழுதுங்கள். 3D,4D படங்கள், பேய் வீடு,3D show, ராமோஜி பிலிம் சிட்டி பதியும் எழுதுங்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner