பதிவர் சந்திப்பு...அகநாழிகைவெளியீடுகள்.. அய்யனார்கம்மா..(புகைபடங்களுடன்)


அகநாழிகை பதிப்பகத்தின் 5புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னை கே கே நகரில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸ் புத்தக கடையில் முதல் மாடியில் நடந்தது...பொதுவாக பதிவர் சந்திப்பு இடம் கொடுத்து உதவும் புத்தககடை இதுதான்.... பல பதிவர் சந்திப்புகள் இந்த இடத்தில் அறிவித்து... மழை மற்றும் சில பல காரணங்களால் தள்ளி போனது...

இப்போது அகநாழிகை வாசு இந்த இடத்தில் தனது பதிப்பக புத்தகங்களை வெளியிட்டார்...வழக்கம் போல் இந்த இடத்தினை தேர்வு செய்து விளம்பர படுத்த.... சரியாக 5 மணிக்கு வழக்கம் போல் மழை பிசுபிசுக்க ஆரம்பித்துவிட்டது...

புத்தக வெளியீட்டு விழா என்றாலும் இது பதிவர் சந்திப்பு போல் எல்லா பதிவர்களும் ஆஜர்....விழா சரியாக 6 மணிக்கு தொடங்கியது...மேடை என்று சொல்லபட்ட இடத்தில்... எழுத்தாளர்கள்அஜயன் பாலா,பாஸ்கர் சக்தி,ஞாநி, போன்றவர்கள் அமர ... விழாவை திரு அகநாழிகை பொன் வாசுதேவன் தொகுத்து வழங்கினார்....

5புத்தகங்களை மூவரும் மாற்றி மாற்றி வெளியிட்டு போட்டோவுக்கு சிரித்தனர்... விழாவின் ஹைலைட் ஞாநியின் பேச்சு என்பேன்...ஒரு சிறுபத்திரிக்கை கூட்டம் எப்படி நடத்த வேண்டும்.. அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று பேசினார்...


வெளியிட்ட புத்தகங்களில் எனக்கு நமது நர்சிம் மட்டுமே பழக்கம் ....கவிதை பற்றி சொல்லும் போது கவிதை தொகுப்பு என்பது எழுத்தாளனின் விசிட்டிங் கார்டு என்று ஞாநி... வேடிக்கையாக சொன்னார்...

பாஸ்கர் சக்தி பேசும் போது நர்சிம் கதைகளை வாசித்து விட்டு வந்து இருப்பார் போல.. சில கதைகளில் முடிக்கும் அவசரம் ஏன் என்று கேள்வி கேட்டார்...தான் தேர்ந்த சிறுகதை எழுத்தாளன் இல்லை என்றாலும் நர்சிம்மின் சில கதைகளை குறிப்பிட்டு அந்த கதைகள் இன்னும் செதுக்கி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்...

அஜயன் பாலா பேசம் போது சிறுபத்திரிக்கை மற்றும் இலக்கிய கூட்டங்கள் எப்படி எல்லாம் தன் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்தது என்று சொன்னார்.... பேசிக்கொண்டு இருக்கும் போது...எழுத்தாளர் சாருநிவேதா என்ட்ரி கொடுத்தார்....நர்சிம் முகத்தில் 100வாட் பல்பு பிரகாசம்...
இதற்க்கு முன் இலக்கிய கூட்டத்தில் ஊடு கட்டி இறங்கி எழுத்தாளர் சாரு கபடி விளையாடிய பழைய இலக்கிய கதையை அஜயன் பாலா சொன்னார்.... இலக்கிய எழுத்தாளர்கள் மென்மையாய் இருப்பார்கள் என்று தனது கருத்து தகர்ந்து போனதை சிரித்துக்கொண்டே எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார்...

அதன் பிறகு எழுத்தாளர் சாரு பேசினார்....இணையத்தில் எழுதும் எழுத்தாளர்கள் மட்டும் அல்ல இப்போது எல்லாம் பலர் தமிழை பிழையாக எழுதுகின்றார்கள் என்ற வருத்தத்தை பதிவு செய்தார்...தனது மகனுக்கு கொடுத்தசுதந்திரத்தில் அவன் தமிழ் படிக்காமல் பிரெஞ் படிப்பதாக சொன்னார்... பதிவர் நர்சிமுக்காக தான் இந்த விழாவில் கலந்து கொள்கின்றேன் என்று சொன்னார்....

பிறகு ஞாநி திரும்பவும் பேசினார்....வீட்டில் புத்தகங்களின் முக்கியத்துவத்தையும் தமிழ் நாட்டு குடும்ப அமைப்பு புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாததையும் சொல்லி வருத்தபட்டார்....

பதிவர் காவேரி கனேஷ் மற்றும் ஜியோரோம் சுந்தர் இருவரும் புத்தக வெளியீட்டு எழுத்தாளர்களுக்கு சிறு சிறு செடிகளை பிரபலபதிவர்களை கொண்டு அனைவருக்கும் வழங்கிய அந்த செயல் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது....


இடம் கொடுத்த டிஸ்கவரி புத்தக கடை உரிமையாளர் வேடப்பனுக்கு வாசு நன்றி தெரிவித்தார்...

பதிவர்களில் எனக்கு தெரிந்து சென்னை பதிவர்கள் எல்லோரும் ஆஜர் என்றே சொல்ல வேண்டும்... எனக்கு தெரிந்து புதியதாய் வந்தவர்கள் என்றால்... அன்புடன் மணிகண்டன்,நிலா ரசிகன், நித்யா,கார்க்கி ,அதிபிரதாபன், போன்றவர்களை சொல்லலாம்...அதே போல் ஆச்சர்யமான விஷயம் அண்ணன் உண்மை தமிழன் இந்த விழாவில் ஆஜர்....

விழாவுக்காக சில படங்கள் மட்டும் எடுத்தேன்....பல படங்கள் எடுக்கவில்லை படம் வராத பதிவர்கள் கோபித்து கொள்ளவேண்டாம்.... எனக்கு முன்னால் உட்கார்ந்து இருந்த, பட்டர்பிளை சூர்யா, கேபிள் போன்றவர்களின் படங்கள் இடம் பெறவில்லை என்பதை தெரிவித்து கொள்கின்றேன்....(பின்னுட்டத்தில் திட்ட வேண்டாம்....



எனது எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கும் திரு மறத்தமிழன் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டு விழா முடியும் வரையில் உடன் இருந்தார்...

கடைசியில் இது செங்கல்பட்டுகாரர்கள் விழா என்றால் பொறுத்தமாக இருந்து இருக்கும் போல... விழாவில் பேசிய ஏகபட்ட விஷயங்கள் செங்கல்பட்டு என்ற ஊரின் மண்ணின் மனத்தை கமழ செய்தன....

வாசுவின் இலக்கிய பணிக்காக அய்யனார் கம்மாவை காசு கொடுத்து வாங்கி வெளியே வந்தேன்... வழக்கம் போல் வெளியே பதிவர்கள் கும்பல் கும்பலாக பேசி கலைந்து சென்றனர்...

நேற்றைய மாலை நேரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிய ஆகநாழிகை பொன். வாசு தேவனுக்கும்.. அவர் பதிப்பகத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்....



ரொம்ப இலக்கிய வாசனை அதிகம் அடித்து விட்டதா? எதாவது செய்ய வேண்டும் அல்லவா? அதற்க்கு பரிகாரம் கீழே.....

தமிழில் பா படத்தை டப் செய்தார்கள் என்றால்? யார் நடிப்பார்கள்...... அதற்க்கு என்ன பெயர் வைப்பார்கள் கீழே.....









அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

56 comments:

  1. புத்தக வெளியீட்டு விழா முடிந்தவுடன் சுடச் சுடச் செய்திகளை கொடுத்து இருக்கின்றீர்கள்.

    வாழ்த்துகள்.

    பல பதிவர்களை படத்தில் பார்த்தது, நானே நேரில் கலந்து கொண்ட திருப்தியைத் தந்தது.

    வாழ்த்துகள் மற்றும் நன்றி சேகர்.

    ReplyDelete
  2. தொகுப்பு நல்லா இருக்கு தலைவரே. என்னோட பெயர் தான் மிஸ்ஸிங் ...

    ReplyDelete
  3. படம் எடுக்காம விட்டுட்டு திட்டாதீங்கன்னா விட்டுருவோமா.. ? உன்னை....... நல்லாருங்க...:)

    ReplyDelete
  4. "எப்பா" எப்பப்பா.... முடியலைங்க.... ஏன் இந்த கொலைவெறி ???!!!!

    ReplyDelete
  5. very nice

    Thanks for sharing.

    Wish to read soon a post stating that Blogger Jackieshankar's First film audio was released by Tamanna and received by actor surya.

    Actor Vijay and Ajith also particiapated in that function.

    ReplyDelete
  6. அண்ணே.. என் போட்டோவ போட்டு பதிவையே ரொம்ப சுவாரஸ்யமா ஆக்கிடீங்க....
    நன்றி.. நன்றி.. நன்றி... :)

    ReplyDelete
  7. அப்படியே பிராக்கெட்ல “யெ ட்ண்டனக்கு”னு ஒரு கேப்ஷனும் போட்டா சூப்பரு...

    ReplyDelete
  8. அண்ணே.. என் போட்டோவ போட்டு பதிவையே ரொம்ப சுவாரஸ்யமா ஆக்கிடீங்க....
    நன்றி.. நன்றி.. நன்றி... :)

    ReplyDelete
  9. //இணையத்தில் எழுதும் எழுத்தாளர்கள் மட்டும் அல்ல இப்போது எல்லாம் பலர் தமிழை பிழையாக எழுதுகின்றார்கள் என்ற வருத்தத்தை பதிவு செய்தார்..//

    உங்க ஃப்ளாக்கை படிச்சிருப்பாரோ? ஹி.. ஹி.. ஹி..

    வர..வர... சாருக்கும், ஞானிக்கும் மவுசு ஏறுதே?
    ஏதாவது ஊமைக்குத்து இருக்குமோ?????

    ReplyDelete
  10. தலைவரே...

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் மனதிற்கு மிகுந்த நிறைவு.

    அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  11. Good to know that most of the bloggers attended the function.

    பிறகு ஞாநி திரும்பவும் பேசினார்....வீட்டில் புத்தகங்களின் முக்கியத்துவத்தையும் தமிழ் நாட்டு குடும்ப அமைப்பு புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாததையும் சொல்லி வருத்தபட்டார்....

    Hmmmm...it is not mean that people stopped reading. People may shifted from one media to other and they are updating the things.

    Most of the chennai and other urban youths (including MEEEEEEEEEEEEEE) reading lot of management and self development books to survive corporate politics.

    Still lot of other so called big writers should attend these kind of functions. So that they can pass on their experience to current writers.

    If BLOG facilities are not there....we will miss lot of good writers. Previously a writer needs an publisher to reach readers.

    Now things are changing and I am seeing lot of good writers in BLOG WORLD.

    The finishing punch of this article will be "JOKE OF THE YEAR".

    But we have to wait till Dec 18th...I mean the release of "Vettaikaran" It may surpass entire jokes of this year and put a bench mark for upcoming years...............NAANGALUM vijay JOKE AADIPOM ILLA (vijay naave JOKE THAAN)

    ReplyDelete
  12. பா மேட்டர் கலக்கல் தல...

    ReplyDelete
  13. நடக்கின்ற சந்திப்புகள் மற்றும் விழாக்களின் நடப்புகளை தங்களின் பக்கத்தை வைத்தே அறிந்து வருகிறேன், கடுமையான உழைப்பு தங்களுடையது!
    அரிதான வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள் சேகர்! ;)

    ReplyDelete
  14. பா... புகைப்படத்தை வடிவமைத்தவர் நண்பர் ஆயில்யன்.

    ReplyDelete
  15. எனக்கு முன்னால் உட்கார்ந்து இருந்த, பட்டர்பிளை சூர்யா, கேபிள் போன்றவர்களின் படங்கள் இடம் பெறவில்லை என்பதை தெரிவித்து கொள்கின்றேன்....(பின்னுட்டத்தில் திட்ட வேண்டாம்....////////////

    நிச்சயம் திட்ட மாட்டேன். வீட்டுக்கு வந்து அடிக்கிறேன்..

    ReplyDelete
  16. பா... புகைப்படத்தை வடிவமைத்தது நண்பர் பதிவர் ஆயில்யன் அவர்கள்..

    (முன்னே ஒரு கமெண்ட் போட்டேன். அது காணாமப் போயிடுச்சா!)

    ReplyDelete
  17. நல்ல கவரேஜ்.

    யெப்பா ROTFL:))

    ReplyDelete
  18. என்னை இன்றளவும் ஆச்சரியப்படைவைக்கும் ஒன்று இந்த பதிவர் சந்திப்பு. பதிவர் சந்திப்பு என்பது எல்லாருக்குமா அல்லது உங்களுக்கு ஓட்டுப் போட்டு, தவறாமல் மறுமொழி இடுவோருக்கு மட்டுமா?

    அது என்ன ஒரு குறிப்பிட்ட பதிவர்கள் ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு, மற்ற பதிவுகளை அலட்சியப்படுத்தும் நாகரிகம் என்று புரியவில்லை.

    நீங்கள் சுமார் ஒரு 40 பேர் சேர்ந்து கொண்டு இந்த 40 பேர் பதிவை மட்டுமே படித்து, அதற்கு மட்டுமே கருத்துரையிட்டு ஏன் இந்த சொந்த விளம்பரம். பதிவு என்பது நாம் போடுவது மற்றவருக்கு பிடித்து கருத்துரையிட வேண்டும். மாறாக உங்கள் கூட்டத்தின் பதிவர்கள் எதற்கு வேண்டுமானாலும் கருத்துரையிடுவோம் ஆனால் ஒரே ஒரு கண்டீஷன், அது என் வட்டத்து நண்பரின் பதிவாக இருக்கவேண்டும் என்பது.

    இதில் தன்னையும் குழப்பிக் கொண்டு மற்றவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் சாரு நிவேதிதாவும் தான் தான் இந்த உலகின் ஒரே அறிவாளி என்று மார்தட்டிக் கொள்ளும் ஞானியும் அடக்கம்....

    விஜய் படத்தை விட காமெடி உங்கள் கூத்து. தைரியமிருந்தால் இந்த கருத்தை வெளியிடுங்கள்..

    ReplyDelete
  19. friend,i'm sort of new to the blogging world.do read my reviews and let me know of what you think.thank you.


    http://illuminati8.blogspot.com/2009/12/disclosure.html


    http://www.tamilish.com/user/view/shaken/login/ramkvp

    ReplyDelete
  20. நல்ல அனுபவம்...

    கடைசிப்படம் செம கலக்கல்

    ReplyDelete
  21. என் போட்டோவைக் காணலை.. ஆனா ஏதோ நாலு பேர் புத்தகம் கொடுக்குற போட்டோவை ரெண்டு தடவை போட்டிருக்க..!

    மவனே.. உன்னையெல்லாம் எப்படி மிதிக்கிறது..

    ReplyDelete
  22. Sarathguru, sorry for answering the question posed to Jackieshankar. I am sure he will answer you much better than me.

    The bloggers meet is open to all. No partiality between bloggers based on caste , religion, citizenship, country of residence, skin colour

    ReplyDelete
  23. நன்றி நண்பர் திரு ஜாக்கி சேகர்..

    நானும் அந்த கூட்டத்துக்கு வந்து இருந்தேன்... நாலாவது புகைப் படத்தில் இரு பெண்களுக்குப் பின்னால் இருப்பது நான் தான்..
    மிக அழகாக ஒரு வார்த்தை கூட விட்டுப் போய்விடாமல் தொகுத்து இருக்கிறீர்கள்..
    எட்டுப் பெண் பதிவர்களும் வந்து இருந்ததை குறிப்பிட்டு இருக்கலாம்

    33 சதவிகிதமிருக்காது என நினைக்கிறேன் பெண்களின் பங்கீடு..


    முடிவில் எனக்கு அதிகம் பேரை தெரியாததாலும்., பேச தயக்கமாக இருந்ததாலும் விரைவில் வீடு திரும்பி விட்டேன் ..
    பின்புதான் நினைத்தேன் ஒரு பேப்பர் கொண்டு சென்றாவது அனைவரின் வலைத்தள முகவரியாவது அவர்களிடமே கொடுத்து எழுதி வாங்கி வந்து இருக்கலாமேயென்று...

    மிக அருமையான பதிவு சேகர்..

    வாழ்த்துக்கள் ..
    இப்பதான் நண்பரொருவர் கூறியதால் முதல் முறையா உங்க வலைத்தளத்துக்கு வருகிறேன்

    மிக அருமையாய் இருக்கு

    ReplyDelete
  24. அகநாழிகை-புத்தக வெளியீடு-புகைப்படங்கள்.

    http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html

    ReplyDelete
  25. "யப்பா" சிரித்து சிரித்து வயிறு புன்னனது தான் மிச்சம்

    ReplyDelete
  26. அண்ணே மிகவும் அழகாக சொன்னீர்கள்,பதிவர்கள் பெயர் இருந்தால் நன்றாக இருக்கும், சாருவின் படமே இல்லையே ஏன்?

    ReplyDelete
  27. படங்களும், பகிர்வும் அருமை ஜாக்கி.

    ReplyDelete
  28. புத்தக வெளியீட்டு விழா முடிந்தவுடன் சுடச் சுடச் செய்திகளை கொடுத்து இருக்கின்றீர்கள்.

    வாழ்த்துகள்.

    பல பதிவர்களை படத்தில் பார்த்தது, நானே நேரில் கலந்து கொண்ட திருப்தியைத் தந்தது.

    வாழ்த்துகள் மற்றும் நன்றி சேகர்.---//

    நன்றி ராகவன் நைஜீரியா.. தஙக்ள் வாழ்த்துக்கு .. இது போல் வெயியூரில், வெளிநாட்டில் இருக்கும் பதிவர்களுக்காகத்தான் படங்கள் எடுத்து உடனே சுட சுட வழங்குகின்றேன்....

    ReplyDelete
  29. சதிஷ்குமார் மிக்க நன்றி..

    ரோமியோ பாய் மிக்க நன்றி....
    மன்னிக்கவும் உங்கள் பெயர் மறந்து போய் விட்டது.. அதனால்தான் பொதுவாக புகைபடங்கள் போடுவதோடு நிறுத்திக்கொள்வேன் பெய்ர் போட மாட்டேன்..

    கேபிள் போட்டோ போடும் போதுதான் எனக்கே தெரியும்.. உன் போட்டோ இல்லைன்னு சாரி...

    ReplyDelete
  30. நன்றி ரசிக்கும் சீமாட்டி..

    நன்றி அண்ணாமலையான்..

    நன்றி ஜெட்லி...

    நன்றி ராம் திருபூர்

    நன்றி சூர்

    உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  31. very nice

    Thanks for sharing.

    Wish to read soon a post stating that Blogger Jackieshankar's First film audio was released by Tamanna and received by actor surya.

    Actor Vijay and Ajith also particiapated in that function.//

    நன்றி குப்பன் உங்கள் வாய் முகூர்த்தம் மற்றும் எழுத்து முகூர்த்தம் எண்ண முகூர்த்தம் அப்படியே பலிக்கட்டும் அப்படி நடந்தால்.. சிறப்பு விருந்தினர் நீங்கள்தான்...

    அதே போல் என் பெயர் ஜாக்கிசேகர் ஜாக்கி சங்கர் அல்ல.. நன்றி குப்பன்..

    ReplyDelete
  32. நன்றி மணி கண்டன் ரொம்ப பாசக்கார புள்ளையா வேற ,இருக்கியா அதான் என் சாய்...

    ReplyDelete
  33. //இணையத்தில் எழுதும் எழுத்தாளர்கள் மட்டும் அல்ல இப்போது எல்லாம் பலர் தமிழை பிழையாக எழுதுகின்றார்கள் என்ற வருத்தத்தை பதிவு செய்தார்..//

    உங்க ஃப்ளாக்கை படிச்சிருப்பாரோ? ஹி.. ஹி.. ஹி..

    வர..வர... சாருக்கும், ஞானிக்கும் மவுசு ஏறுதே?
    ஏதாவது ஊமைக்குத்து இருக்குமோ?????//

    நன்றி கலை எனது எழுத்தை அவர் படிக்க சான்சே இல்லை...

    ReplyDelete
  34. தலைவரே...

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் மனதிற்கு மிகுந்த நிறைவு.

    அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    அன்பு நித்யன்//

    நன்றி நித்யன்...மதல் பதிவர் சந்திப்பு பற்றி உங்கள் பதிவில் எழுதியபோது அதுதான் ஆரம்ப தீப்பொறி...

    ReplyDelete
  35. Most of the chennai and other urban youths (including MEEEEEEEEEEEEEE) reading lot of management and self development books to survive corporate politics.

    Still lot of other so called big writers should attend these kind of functions. So that they can pass on their experience to current writers.

    If BLOG facilities are not there....we will miss lot of good writers. Previously a writer needs an publisher to reach readers.//

    உண்மை ராஜ்மார் நீங்க சொல்லற கருத்து உண்மைதான்

    நல்ல புத்தகங்களை அறிமுகபடுத்த அது பற்றி பேசி சிலாகிக்க இப்போது யாரும் இல்லை என்பேன் விரைவில் புத்தக அறிமுகம் நமது தளத்தில் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்..

    ReplyDelete
  36. நடக்கின்ற சந்திப்புகள் மற்றும் விழாக்களின் நடப்புகளை தங்களின் பக்கத்தை வைத்தே அறிந்து வருகிறேன், கடுமையான உழைப்பு தங்களுடையது!
    அரிதான வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள் சேகர்! ;)//


    நன்றி மணிபாக்கம் ரொம்ப நாளாக இந்த தளத்து பக்கமே வருவதில்லையே.... அடிக்கடி வாங்க உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  37. பா... புகைப்படத்தை வடிவமைத்தது நண்பர் பதிவர் ஆயில்யன் அவர்கள்..

    (முன்னே ஒரு கமெண்ட் போட்டேன். அது காணாமப் போயிடுச்சா!)==//

    நன்றி சென்ஷி அப்படியா.. இது புதுதகவல்.....

    ReplyDelete
  38. நன்றி சூர்யா மிக்க நன்றி.. சாரு புக் ரிலிஸ் எப்படி இருந்துச்சி....

    ReplyDelete
  39. நன்றி வித்யா...

    நன்றி கா பாலாசி மிக்க நன்றி உங்கள் இருவரின் முதல் வருகைக்கும்

    ReplyDelete
  40. என்னை இன்றளவும் ஆச்சரியப்படைவைக்கும் ஒன்று இந்த பதிவர் சந்திப்பு. பதிவர் சந்திப்பு என்பது எல்லாருக்குமா அல்லது உங்களுக்கு ஓட்டுப் போட்டு, தவறாமல் மறுமொழி இடுவோருக்கு மட்டுமா?

    அது என்ன ஒரு குறிப்பிட்ட பதிவர்கள் ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு, மற்ற பதிவுகளை அலட்சியப்படுத்தும் நாகரிகம் என்று புரியவில்லை.//

    அன்புள்ள விஜய் ஆன்ந்..

    பதிவர் சந்திப்பு என்பது எவர் வேண்டுமாளாலும் கலந்து கொள்ளும் இடம்... நீங்கள் கூடதான் 4 பேரை தட்டமே பாலோ பண்ணுகின்றேன் என்று சொல்லுகின்றீர்கள்... அப்போ மத்தவங்க எழுதறது நல்லா இல்லைன்னு அர்த்தமா?..

    நான்ல பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாமலேயேதான்.. நான் என்னை அதிகம் வாசிக்க வைத்தேன்...

    உங்கள் எழுத்து எதிராளி நெஞ்சை தொட்டால் நிச்சயம் உங்களை தேடி வருவார்கள்...


    அதே போல் கேபிள் சங்கர் எனக்கு நண்பர்... எல்லா பதிவுலிம் என் பின்னுட்டமோ அவர் பின்னுட்டமோ இருக்காது அதை புரிந்து கொள்ளுங்கள்...

    நன்றி உங்கள் எண்ணங்களை வெளிபடுத்தியமைக்கு

    ReplyDelete
  41. அகநாழிகை-புத்தக வெளியீடு-புகைப்படங்கள்.

    http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html//
    நன்றி காவேரி கனேஷ் பார்த்தேன் ரசித்தேன்

    ReplyDelete
  42. அண்ணே மிகவும் அழகாக சொன்னீர்கள்,பதிவர்கள் பெயர் இருந்தால் நன்றாக இருக்கும், சாருவின் படமே இல்லையே ஏன்?/

    நன்றி கார்த்தி..

    பல பதிவர்கள் பெயர் எனக்கு தெரியாது... அதனால்தான்.. அதே போல் 5வது படத்தில் சாரு உட்கார்ந்து இருக்கும் படம் உள்ளதே அதை நீ கவனிக்கவில்லையா?

    ReplyDelete
  43. என் போட்டோவைக் காணலை.. ஆனா ஏதோ நாலு பேர் புத்தகம் கொடுக்குற போட்டோவை ரெண்டு தடவை போட்டிருக்க..!

    மவனே.. உன்னையெல்லாம் எப்படி மிதிக்கிறது..// உண்மைதமிழா கசிாய வந்திங்க..

    போட்டோ சும்மா எடுக்கறது.. எல்லாத்தையும் எடு்த்தா ...? நான் எப்படி விழாவை கவனிக்கறது... சொல்லுங்க..

    ReplyDelete
  44. எட்டுப் பெண் பதிவர்களும் வந்து இருந்ததை குறிப்பிட்டு இருக்கலாம்

    33 சதவிகிதமிருக்காது என நினைக்கிறேன் பெண்களின் பங்கீடு..


    முடிவில் எனக்கு அதிகம் பேரை தெரியாததாலும்., பேச தயக்கமாக இருந்ததாலும் விரைவில் வீடு திரும்பி விட்டேன் ..
    பின்புதான் நினைத்தேன் ஒரு பேப்பர் கொண்டு சென்றாவது அனைவரின் வலைத்தள முகவரியாவது அவர்களிடமே கொடுத்து எழுதி வாங்கி வந்து இருக்கலாமேயென்று...

    மிக அருமையான பதிவு சேகர்..
    ==


    நன்றி தேனம்மை...வந்த பெண்மணிகள் பெண்பதிவர்கள் என்பது எனக்கு தெரியாது...


    எனக்கு பொதுவாக கூச்ச சுபாவம்.. அதனால் பெண்கள் பக்கம் அதிகம் திரும்ப யோசிப்பேன்...


    அப்படியே எதாவது விசாரித்தால் வழிகின்றேன் என்று சொல்லிவிடுவார்கள்.. அதனால்தான்...

    8 பெண் பதிவர்கள் வந்து கலந்து கொண்டது மகிழ்வை தருகின்றது...

    பதிவர் சந்திப்பு சேவல் பண்ணையாக இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை...

    நன்றி உங்கள் முதல் வருகைக்கு...

    ReplyDelete
  45. நன்றி துபாய் ராஜா... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.... எங்க இப்பவெல்லாம் உங்களை எனது தளத்தில் பார்க்க முடிவதில்லை??? அதிக வேலையோ???

    ReplyDelete
  46. புத்தக வெளியீட்டை நேரில் பார்த்தது போல இருந்தது.

    ReplyDelete
  47. சாரு இருக்கின்ற படத்தைப்போட்டிருக்கலாமே... புத்தக வெளியீடு நிகழ்ச்சியை அங்கு வந்து பார்த்தது போல் இருந்தது.

    ReplyDelete
  48. ஜாக்கி.. நீ என் போட்டோவை போடாட்டாலும் உன் போட்டோவை போட்டிருக்கிறேன். அது யாரு எதோ விஜயானந்தா.. அவரிடம் சொல்லுங்கள்.. குழு மனப்பான்மை நம்மிடம் இல்லை.. தாழ்வு மனப்பான்மை அவரிடம் தான் இருக்கிறது என்று..

    ReplyDelete
  49. திரு. விஜயந்தாவிற்கு வணக்கம்.

    நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. யாருக்கும் இங்கு எந்த குழுவும் இல்லை. சென்ற வருடத்தில் எந்த வலைபதிவரும் எனக்கும் தெரியாது. பல சந்திப்புகளுக்கும் சென்றதில்லை. ஒரே ஒரு முறை கேபிளை தொடர்பு கொண்ட போது அவர் பேசிய விதமும் நட்பும் ஆச்சிரிய பட வைத்தது.

    முதன் முறையாக சென்றேன். அனைவரும் மிக்க நடபுடனும் பழகுவதால் எந்த வேலையிருந்தாலும் அனைவரையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் போது தவற விடாமல் செலகிறோம்.

    நண்பர் கேபிளின் தந்தை மறைவை பற்றிய ஜாக்கியின் முநதைய பதிவுகளை ஒரு முறை படிக்கவும்.


    அடுத்த பதிவர் சந்திப்புக்கு அவசியம் வாருங்கள். நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

    நன்றி. வாழ்த்துகள் நண்பா.

    ReplyDelete
  50. //Sarathguru Vijayananda said...
    என்னை இன்றளவும் ஆச்சரியப்படைவைக்கும் ஒன்று இந்த பதிவர் சந்திப்பு. பதிவர் சந்திப்பு என்பது எல்லாருக்குமா அல்லது உங்களுக்கு ஓட்டுப் போட்டு, தவறாமல் மறுமொழி இடுவோருக்கு மட்டுமா//

    அதேதான். இப்படித்தான் நானும் ஹெல்த் மினிஸ்டர் ஆகனும் ஹெல்த் மினிஸ்டர் ஆகனும்ன்னு சொல்லிட்டே இருப்பேன். கவலைபடாதிங்க சரத்குரு. சரி பண்ணிடுவாங்க

    ReplyDelete
  51. விழா சிறப்பாக நடைபெற்றது. இறுதிவரை என்னால் இருக்கமுடியாமல் போனது வருத்தமே.
    நல்ல புகைப்படங்கள்.

    ReplyDelete
  52. //jackiesekar said...
    நன்றி துபாய் ராஜா... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.... எங்க இப்பவெல்லாம் உங்களை எனது தளத்தில் பார்க்க முடிவதில்லை??? அதிக வேலையோ???//

    ஆமாம் ஜாக்கி.இரண்டு மாதமாக பணிப்பளு அதிகம். இருக்கையில் அமர நேரமில்லை. வலைப்பக்கம் நள்ளிரவில் வந்து செல்வதை மற்ற நண்பர்கள் போல வருகை தருவோர் தகவல் மூலம் அறிந்திருப்பீர்கள். புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete
  53. பதிவர் விழாவை போடோவோடு போட்டு அதில் நண்பர்களையும் அறிமுக படுதிருக்க்ரீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  54. ஜாக்கி,

    நன்றாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்...

    உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் !

    அன்புடன்
    மறத்தமிழன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner