இனிதே நிறைவு பெற்ற 7வது சென்னை உலக படவிழா 2009
சென்னையில் பத்து நாட்கள் நடந்த உலக படவிழா கிருஸ்மஸ்க்கு முன் தினமான 24ம் தேதியோடு இனிதே நிறைவு பெற்றது....நான் ஒரு நாளைக்கு 5 படம் என்று 50 படம் பார்த்து இருக்க வேண்டும்... ஆனால் படபிடிப்பு எல்லாம் இருந்த காரணத்தால் என்னால் தொடர்ச்சியாக கலந்து கொள்ள முடியவில்லை...

இருப்பினும் வருனபகவான் மழை பெய்ய வைத்து பல நாட்கள் ஷுட்டிங் கேன்சல் ஆக நான் சென்னை படவிழாவில் கலந்து கொண்டேன்... எப்படியும் ஒரு 25 படமாவது பார்த்து இருப்பேன்....

ஒவ்வொறு உலக படவிழாவிலும் தினமும் நெஞ்சை தொடும் படங்கள் ஒரு நாளைக்கு ஒன்றாவது கிடைக்கும்.. இந்த முறை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அப்படி ஒரு பீலிங் மனதிற்க்கு கிடைத்தது...

இந்த விழாவில் பல கணவன் மனைவிகள் ஜோடி ஜோடியாக கலந்து கொண்டார்கள்... நான் போன 5ம் உலக படவிழாவுக்கு மட்டுமே என் மனைவியை அழைத்து போய் இருக்கின்றேன்...லீவ் இல்லாத காரணத்தால் போன முறையும் இந்த முறையும் மிஸ்சிங்...


இரண்டு ஜோடிகள் தொடர்ந்து ஒருபடத்தை கூட மிஸ் செய்யாமல் பார்த்தார்கள்... அதில் ஒருவர் டிவி சிரியல்களில் நடித்து வருபவராம்...

இந்த விழாவில் நடுத்தர வயது பெண்களும் கலந்து கொண்டது மனதுக்கு மகி்ழ்வை கொடுத்தது....இந்த வருடம் படங்களில் தி அதர் பேங்க என்ற ஜீயோர்ஜியா நாட்டு படமும்...அன்ட்டி கிரைஸ்ட் என்ற டென் மார்க் படமும் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. அதிலும் அன்ட்டி கிரைஸ்ட் படம் பெரிய அதிர்வலைகைளையும் வியப்பையும் முக்கியமாக பெண்களுக்கு ஏற்படுத்தியது.... ஆண்களே அதிர்ந்து போன போது பெண்கள் எம்மாத்திரம்.. விரைவில் நேரம் கிடைக்கும் போது அந்த படத்தின் விமர்சனம்....

இந்த விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டியில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற பிரசன்னா நடித்த படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது...சிறந்த ஒளிப்பதிவுக்கு பொக்கிஷம் படத்தின் கேமரா மேன்... ராஜேஷ்யாதவ்க்கு கிடைத்துது... பசங்க பாண்டி ராஜீக்கும்,இயக்குனர் சிவக்குமாருக்கும் வெவ்வேறு கேட்டகிரியில் பரிசுகள் கிடைத்து... பசங்க படத்துக்கு சிறந்து படம் விருது கிடைக்காது போனதுக்கு ரசிகர்களிடையே பேச்சில் கோபம் காணப்பட்டது...இறுதி நாள் விழாவில் சுஹாசினி மணிரத்னம் பேசும் போது...அவர் எப்படி பிலி்ம் இண்ஸ்ட்டியுட் மற்றும் திரைபடதுறைக்கு வந்த கதையை பகிர்ந்து கொண்டார்... இயக்குனர் பி. வாசு பேசுகையில் தமது தாமதமான வருகைக்கு மன்னிப்பு கேட்டு கொண்டதுடன்... எனது படபிடிப்புக்கு லேட்டாக வந்தால்.. அது 4 மணிக்கு எழுந்து கிளம்பும் கடைநிலை ஊழியனின் மனைவி வரையில் பாதிக்கும் என்று சொன்னார்...


விழாவில் நடிகையும் இயக்குனருமான ரேவதி பேசுகையில் கோவா படவிழா ஒரு பேண்டசி படவிழா... திருவனந்தபுரமும், கொல்கத்தாவிலும் நடக்கும் படவிழாக்களில் ரசிகர்கள் வெறியோடு படம் பார்ப்பார்கள்... ஆனால் சென்னை இப்போதுதான் சற்று வளர்ந்து வருகின்றது...

நிர்வாண காட்சிகள் திரையில் வரும் போது ஏன் தியேட்டரில் சல சலப்பு ஏற்படுகின்றது? ஏன் விசில் எல்லாம் அடிக்கின்றீர்கள்... ?அந்த நிலை சென்னை ரசிகர்களிடம் மாறவேண்டும்...நிர்வாணத்தையும் கலையாக பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்..

இந்த விழாவில் ஆண்டு தோறும் தொடர்ச்சியாக பங்கு கொள்ளும் பிரபலங்கள் இயக்குனர் சந்தான பாரதி..., நடிகை பாத்திமா பாபு, நடிகை சீ ஆர் சரஸ்வதி, நடிகர் ரமேஷ் கண்ணா போண்றவர்களை சொல்லலாம்.. ஆனால் இந்த முறை இயக்குனர் சந்தான பாரதி மிஸ்சிங்....

இந்த முறை சென்னை உட்லண்ட்ஸ்தியேட்டர் கொஞ்சம் சுத்தமாக வைத்து இருந்தார்கள்... மிக முக்கியமாக திரையை பெயிண்ட் அடித்து எந்த அழுக்கும் இல்லாமல் வெள்ளை வெளேர் என ஜொலித்து....

இந்த முறை சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பார்க்கிங் கட்டணம் வாங்க வில்லை.. அதற்கு ஏற்பாடு செய்த சென்னை உலகபடவிழா இந்தோ சினி அப்பிரிசேஷன் நிர்வாகிகளுக்கு என் நன்றிகள்..


கடைசி நாளின் போது சினிமா ஆர்வலர்கள் பிரியா விடை கொடுத்து பிரிந்து போனார்கள்....

இந்த உலக படழாவில் நான் பார்த்த காமெடி...அவர் ஒரு அரசியல்வாதி..எப்படியோ அவருக்கு இரண்டு பாஸ் கிடைக்க... அவளது செல்ல வயதுக்கு வந்த மகளை அழைத்து வந்தார்...இதுதான் உலக படவிழா, பல நாட்டு திரைபடங்கள் திரையிட படும் என்று பில்டப் விட்டுக்கொண்டு இருந்தார்...அவருக்கு இதற்கு முன் இது போலான பெஸ்ட்டிவலில் கலந்து கொண்ட அனுபவம் இல்லை என்பது அவரது பேச்சிலேயே தெரிந்து... படம் ஆரம்பித்து இரண்டு நிமிடத்தில் ஒரு உடலுறவு காட்சி திரையில் வர அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை .. மகளை அழைத்து கொண்டு தெரித்து ஓடிவிட்டார்...


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

23 comments:

 1. Anti கிரைஸ்ட் படம் அருமையா இருக்கும்! உங்க ஸ்டைல் விமர்சனத்தை எதிர் பார்க்கிறேன்!!

  ReplyDelete
 2. Antichrist பற்றி Hollywood Bala எழுதியிருந்தார். படத்தை பற்றிய உங்கள் பார்வையையும் அறிய ஆசை

  ReplyDelete
 3. தலைவா உங்களோட பதிவுகள இப்பதான் நான் படிக்க ஆரம்பிச்சு (லேட்டா வந்துட்டேன்) இருக்கேன், நீங்க ரசிச்ச சில விளம்பரங்கள் மற்றும் பாடல்கள பற்றின பதிவுகள் அழகு.

  ReplyDelete
 4. அண்ணே.. இந்த விழா உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்குமென்று நம்புகிறேன்.. விரைவில் வெள்ளித்திரையில் உங்கள் படைப்பை எதிர்பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள்.. :)

  ReplyDelete
 5. வழக்கம் போலவே அருமை!

  //இந்த விழாவில் நடுத்தர வயது பெண்களும் கலந்து கொண்டது மனதுக்கு மகி்ழ்வை கொடுத்தது...//

  Noted! ;)

  ReplyDelete
 6. //படம் ஆரம்பித்து இரண்டு நிமிடத்தில் ஒரு உடலுறவு காட்சி திரையில் வர அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை .. மகளை அழைத்து கொண்டு தெரித்து ஓடிவிட்டார்...//

  எப்படி ஒருத்தர் தன் மகளை பக்கத்தில் வைத்து
  கொண்டு நிர்வாண காட்சிகளை பார்ப்பார்....

  நம்மூரில் 95% அவர் முடிவதை தான் எடுத்து
  இருப்பார்கள்....

  நம்ம கலாச்சாரம் அப்படி....
  இல்லனா நம்ம படத்தில அவ்ளோ சீன்
  வந்தது இல்லைன்னு சொல்லலாம்....

  ReplyDelete
 7. Anti கிரைஸ்ட் படம் அருமையா இருக்கும்! உங்க ஸ்டைல் விமர்சனத்தை எதிர் பார்க்கிறேன்!!//
  ரிபீட்டேய்
  முடிந்தால் அந்த 120 படங்கலின் பெயர்களை வெளியிடவும்.வாக்களித்துவிட்டேன்

  ReplyDelete
 8. ஜாக்கி சார் நீங்க இப்போ செய்து கொண்டு இருக்கும் படம் பார்த்திபனின் வித்தகன் படம் தானே.. கண்டு பிடித்து விட்டேன் பார்த்தீர்களா..வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
 9. ஜாக்கி சார் நீங்க இப்போ செய்து கொண்டு இருக்கும் படம் பார்த்திபனின் வித்தகன் படம் தானே.. கண்டு பிடித்து விட்டேன் பார்த்தீர்களா..வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
 10. Anti கிரைஸ்ட் படம் அருமையா இருக்கும்! உங்க ஸ்டைல் விமர்சனத்தை எதிர் பார்க்கிறேன்!!--//

  கண்டிப்பா எழுதறேன்.. கலை.. மிக்க நன்றி என் விமர்சனத்தின் ஸ்டைல் மீது வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு..
  என் நன்றிகள்

  ReplyDelete
 11. தலைவா உங்களோட பதிவுகள இப்பதான் நான் படிக்க ஆரம்பிச்சு (லேட்டா வந்துட்டேன்) இருக்கேன், நீங்க ரசிச்ச சில விளம்பரங்கள் மற்றும் பாடல்கள பற்றின பதிவுகள் அழகு.//


  நன்றி சைவ கொத்து பரோட்டடா.. தொடர்ந்து வாசியுங்கள்...

  மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு..

  ReplyDelete
 12. அண்ணே.. இந்த விழா உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்குமென்று நம்புகிறேன்.. விரைவில் வெள்ளித்திரையில் உங்கள் படைப்பை எதிர்பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள்.. :)//
  வெகுவிரைவில் அதற்க்கான நேரம் கனியும் என்று எதிர்பார்க்கலாம்.. பார்ப்போம்.. பிரார்த்திப்போம்..

  நன்றி மணி...

  ReplyDelete
 13. வழக்கம் போலவே அருமை!

  //இந்த விழாவில் நடுத்தர வயது பெண்களும் கலந்து கொண்டது மனதுக்கு மகி்ழ்வை கொடுத்தது...//

  Noted! ;)//
  நன்றி மணிப்பக்கம் உங்கள் தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்துக்கும்..நல்ல நோட் பண்ணிகிங்க...

  ReplyDelete
 14. எப்படி ஒருத்தர் தன் மகளை பக்கத்தில் வைத்து
  கொண்டு நிர்வாண காட்சிகளை பார்ப்பார்....

  நம்மூரில் 95% அவர் முடிவதை தான் எடுத்து
  இருப்பார்கள்....

  நம்ம கலாச்சாரம் அப்படி....
  இல்லனா நம்ம படத்தில அவ்ளோ சீன்
  வந்தது இல்லைன்னு சொல்லலாம்....//
  ஜெட்லி நான் அப்படி சொல்ல வரலை.. அவருடைய பில்டப்பைதான் சொல்கின்றேன்.. அவருடைய அறியமைதான் இதற்க்கு காரணம்.. யாரோ ஓசியில் பாஸ் கொடுக்க அதை என்னவென்று தெரியாமல் அழைஙத்து வந்ததை சொன்னேன்..

  இங்கு அப்படி யாரும் பார்க்கவில்லை... ஆனால் அம்மா மகள்கள் வந்து இருந்தார்கள்... என்பதை கவனிக்கவும்...

  ReplyDelete
 15. Anti கிரைஸ்ட் படம் அருமையா இருக்கும்! உங்க ஸ்டைல் விமர்சனத்தை எதிர் பார்க்கிறேன்!!//
  ரிபீட்டேய்
  முடிந்தால் அந்த 120 படங்கலின் பெயர்களை வெளியிடவும்.வாக்களித்துவிட்டேன்//
  கண்டிப்பா எழுதறேன்... நிச்சயம் அந்த படம் பெரிய ஸ்கிரின்ல பார்த்துட்டு விக்கித்து போய் இருந்தேன் கார்த்தி...

  ReplyDelete
 16. ஜாக்கி சார் நீங்க இப்போ செய்து கொண்டு இருக்கும் படம் பார்த்திபனின் வித்தகன் படம் தானே.. கண்டு பிடித்து விட்டேன் பார்த்தீர்களா..வாழ்த்துகள் சார்.//

  உங்கள் வாழ்த்துக்கு நன்றிசார்.... நேரம் வரும் போது சொல்லிகின்றேன்..

  ReplyDelete
 17. Jackie,

  I am sorry.

  I was unable to call you after. I had some very tight things and most of the time I was away from mobile signal tower. I was in Kodaikanal most of the time.

  2 weeks vacation passed like lighting.

  Next time we will meet in Chennai.

  HAPPY New Year.

  Regards,

  Bala.

  ReplyDelete
 18. Jackie,

  Sorry. I was unable to call you after that break in conversation.


  My 2 weeks vacation went like lighting. Most of the time I was in Kodaikanal ( I will tell why I was there when we meet), in that area the mobile signal was not available.

  We will meet next time in Chennai.

  All the best till then.

  Wish you a HAPPY NEW YEAR.

  Regards,

  Bala.

  ReplyDelete
 19. //அவருடைய பில்டப்பைதான் சொல்கின்றேன்.. அவருடைய அறியமைதான் இதற்க்கு காரணம்.. யாரோ ஓசியில் பாஸ் கொடுக்க அதை என்னவென்று தெரியாமல் அழைஙத்து வந்ததை சொன்னேன்..//

  அப்படியா...அப்போ நீங்க சொன்னது சரிதான் அண்ணே....!!

  ஏதோ ஆர்வத்துல கேள்வி கேட்டேன் தப்பா நினைச்சுக்காதிங்க அண்ணே...

  ReplyDelete
 20. நல்ல பகிர்வு ஜாக்கி. அடுத்த உலகபட ரசிகர் கூட்டம் இன்னும் நிறையவரும் என்பது உறுதி.

  ReplyDelete
 21. பதிவு நன்றாக இருக்கிறது .. பார்த்த படங்களின் விமர்சனத்தை எதிர் பார்கிறேன் .

  ReplyDelete
 22. அந்த இரண்டு படங்களின் விமர்சனத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் ..................

  ReplyDelete
 23. உலகத் திரைப்பட விழா பற்றிய உங்களது பதிவைப் பார்த்து கடந்த வாரயிறுதியில் அடித்துப்பிடித்து சென்னை வந்து இரண்டு நாட்களில் 8 படங்கள் பார்த்தேன். எட்டில் மூன்று படங்கள் மிகவும் அற்புதமானவை. மற்றவை சுமார்தான். எனது முதல் படவிழா அனுபவம் இது. தகவலுக்கு மிகவும் நன்றி. இரண்டு நாள் விழா அனுபவம் பற்றியும், பார்த்த படங்களைப் பற்றியும் எழுத ஆரம்பித்துள்ளேன். வாசிக்கவும்...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner