காதல் பற்றி என்ன பேசினாலும்.. எதோ ஒரு விதத்தில் எவர் மீதாவது காதல் வந்து தொலைத்து கொண்டேதான் இருக்கின்றது... சமுக கட்டுபாட்டுக்கு பயந்த போய் அது தலையில் தட்டி உட்கார வைக்கின்றோம்... அந்த சமுக கட்டுபாடு மட்டும் இல்லை எனில்... நினைத்த பார்க்கவே பயமாய் இருக்கின்றது...
திருமணத்துக்கு முதல்நாள் வரை சும்மா இருந்து விட்டு ...நாளை கல்யாணம் எனும் போது ஓட்டம் எடுக்கும் மணமகளையும் மணமகனையும் என்ன செய்யலாம்?... வீட்டில் பெண் பார்த்து நிச்சயம் எல்லாம் செய்து விட்டு எல்லா வற்றிர்க்கும் மண்டையை மண்டையை ஆட்டி விட்டு திருமணத்துக்கு முதல்நாள் கிளம்பிய மணமகன் கதைகள் ஏராளம்...
சில பெண்கள் நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த பின்பு அதன் பின்பு யாராவது பையனை பார்த்து மனதை கொடுத்து அந்த காதலுக்காக உயிரை கூட கொடுப்பார்கள்.. என்ன செய்வது காதல் அல்லவா? இந்த கதையும் அது போல் நிச்சயதார்த்தம் முடிந்து போய் இவன்தான் கணவன் என்று சொன்ன பிறகு... வேறு ஒரு ஆடவனுடன் காதல் வந்து தொலைக்கின்றது ஒரு பெண்ணுக்கு...
DOT THE I படத்தின் கதை இதுததான்....
Carmen ஒரு இளம் ஸ்பேனிஷ் பெண் அவளுக்கும் Barnaby'sக்கு திருமணம் நிச்சயம் செய்கின்றார்கள்..Barnaby's ஒரு பணக்காரன் ஒரு ஒயினை கூட சாதாரணகிளாசில் குடிக்கமாட்டான்... அதற்க்கு என்று இருக்கும் கோப்பையில்தான் குடிப்பான்.. அப்படி ஒரு பணக்காரதனம் அவன் வாழ்வில், நடவடிக்கையில் மிளிரும்...கார்மனுக்கு இவன் மேல்காதல்தான்....
ஸ்பெயி்னில் ஒரு பழக்கம் இருக்கின்றது... பெண்களுக்கான பேச்சிலர் பார்ட்டி அது.... அந்த பார்ட்டியில் அவள் ஒயின் குடித்து விட்டு யாருக்கு வேண்டுமானாலும் ஒரு ஆடவனுக்கு முத்தம் கொடுத்து விட்டு சிங்கிள் வாழ்க்கைக்கு குட் பை சொல்வது வழக்கம்.. அந்த பார்ட்டியில் இவள் அழகை ரசித்து அவளை வீடியோ எடுத்தக்கொண்டு இருக்கும் கிட்க்கு அந்த வாய்ப்பு கிடைக்கின்றது.... இருவரும் முத்தமிட்டாலும் அந்த முத்தமிடலில் அவள் அவன் மேல் காதல் வயப்படுகின்றாள்..... நிச்சயதார்த்த பெண்... யாரோ ஒருவனை முத்தமிட காதல் வந்து தொலைக்கின்றது... தமிழ்படம் போல இருக்கின்றதா?...
நிச்சயம் இல்லை இந்த படத்தின் ஆரம்பத்தில் தமிழ் படத்தை ஞாபக படுத்தினாலும்... போக போக இது உலக சினிமா என்பதையும் எதிர்பாராத திருப்பங்களையும் உள்ளடக்கியது இந்த படம்.....பார்த்து ரசியுங்கள்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
இந்த படம் முதல் பத்து நிமிடங்கள் .....ஒரு தமிழ் படம் பார்க்கும் உணர்வை இந்த படம் கொடுக்கும்...
ஒரு சாதாரண படத்தை போய் பார்க்கின்றோமே என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது இந்த படம் எதிர்பாராத திருப்பங்களை இந்த படம் கொடுக்கும்..
முக்கோண காதலாக இருந்தாலும்... அந்த பெண்ணின் உணர்ச்சி வெளிப்பாடு அற்புதம்...
கிளைமாக்ஸ் முடிந்து விட்டது என்ற பார்த்தால் டுவிஸ்ட் மேல் டுவி்ஸ்ட் வைத்து அசத்தி இருக்கின்றார் இந்த படத்தின் இயக்குனர்...Matthew Parkhill
இந்த படம் சுடான் பிலிம் பெஸ்ட்டிவலில் திரையிடபட்டது... பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்ற படம் இது...
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்...
Directed by Matthew Parkhill
Produced by George Duffield
Meg Thomson
Written by Matthew Parkhill
Starring Gael García Bernal
Natalia Verbeke
James D'Arcy
Tom Hardy
Charlie Cox
Music by Javier Navarrete
Cinematography Affonso Beato
Editing by Jon Harris
Studio Alquimia Cinema
Arcane Pictures
Summit Entertainment
Distributed by Artisan Entertainment
Release date(s) Sundance Film Festival
January 18, 2003 (2003-01-18)
Spain
02003-10-31 October 31, 2003
United States
02005-03-11 March 11, 2005
Running time 92 minutes
Country United Kingdom
Spain
United States
Language English
Gross revenue $306,224
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
சமூகத்திற்கு பயந்து வாழ்க்கையை ஓட்டும் சமூகம்தான் இன்று அதிகம்
ReplyDeleteஇந்த படத்தின் கிளைமாக்ஸ் போல தான் பிரகாஷ் ராஜ் நடித்த “வெள்ளித்திரை” படத்தில் கொஞ்சம் உல்டா செய்து இருப்பார்கள்.
ReplyDelete//திருமணத்துக்கு முதல்நாள் வரை சும்மா இருந்து விட்டு ...நாளை கல்யாணம் எனும் போது ஓட்டம் எடுக்கும் மணமகளையும் மணமகனையும் என்ன செய்யலாம்?... //
ReplyDeleteஎன்னைக்கேட்டால் செருப்பால அடிக்கனும்.
//யாரோ ஒருவனை முத்தமிட காதல் வந்து தொலைக்கின்றது... தமிழ்படம் போல இருக்கின்றதா?...//
அண்ணே கதாநாயகி அந்தமுத்தமிட்ட காட்சியை நினைச்சு நினைச்சு பெட்டுல உருண்டு புரண்டாத்தான் அதுதமிழ்படம்... இல்லன்னா அது உலகப்படம்.
விமர்சனம் சூப்பர்..சில மொக்கைப்படங்களுக்கு நீங்களை க்ளைமாக்சும் சொல்லிருங்கண்ணே... ஒரு படத்தை டவுன் பண்றநேரம் நேரமாவுது மிச்சமாவும்..
(வழக்கம் போல்) .................. நல்லாயிருக்குது தல .................. :)
ReplyDeletevaseegara???
ReplyDelete(வழக்கம் போல்) .................. நல்லாயிருக்குது தல .................. :)
ReplyDelete//நாளை கல்யாணம் எனும் போது ஓட்டம் எடுக்கும் மணமகளையும் மணமகனையும் என்ன செய்யலாம்?...//
ReplyDeleteஎன்ன செய்ய முடியும்? கேட்டால் மனசு என்பார்கள்.அந்த எழவ கல்யாணம் பிக்ஸ் பண்றதுக்கு முன்னாடி சொன்ன கெட்டா போய்டுவாங்க?
அடுத்த மாசம் சென்னை வந்ததும் நீங்கள் பரிந்துரைத்த படங்களின் டி.வி.டி வாங்க வேண்டும் சேகர்.
காதல் மன்னன் படத்தோட உல்டா இது?
ReplyDeleteஅண்ணே இதுவும் அருமை,சீக்கிரம் பார்ப்பேன்,ஓட்டுக்கள் போட்டாச்சு
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பரே.
அண்ணே நல்ல விமர்சனம்,இதுவும் பார்க்கிறேன்.ஓட்டுக்கள் போட்டாச்சி
ReplyDeleteReally tempted to see the movie:)Nice post :)
ReplyDeleteபார்க்க வேண்டும்.!! பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி..!!
ReplyDelete