(DIRTY PRETTY THINGS) 18+ உலக சினிமா இங்கிலாந்து... கழிவறையில் இதயம்....
வீட்டில் மழைகாலத்தில் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது.. திடிர் என்று கரப்பான் பூச்சி சட்டென ஓடும்.. வீட்டு பெண்கள் அலறுவார்கள்... நாம் ஹிட்டை எடுத்து கரப்பான் மேல் அடித்து நமது வீரத்தை பறை சாற்றுவோம்...
இதை விட கொடுமையானது சின்ன சின்ன தவளைகள்.. மழைகாலத்தில் அவைகள் செய்யும் அழிச்சாட்டியம் தாங்க முடியாத ஒன்று... அவைகளை பிடித்து வீட்டின் வெளியே துரத்துவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடும்...
டாய்லெட்டில் தண்ணி அடைத்து கொண்டு இருக்கின்றது... என்னவென்று பாருங்கள் என்று சொல்லி விட்டு செல்கின்றாள் ஒரு பெண்... அவனும்
போய் பார்க்கின்றான்... உண்மையிலேயே டாய்லெட்டில் அடைப்பு இருக்கின்றது... தண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது.... அதன் அடைப்பை எடுத்து விட அவன் நினைக்கின்றான்.. ஒரு கம்பியை எடுத்துக்கொண்டு வந்து குத்துகின்றான்.... உம்ஹும் ஒன்றும் அசைந்து கொடுக்கவில்லை...
சற்றே பலம் கொண்ட மட்டும் நெம்புகின்றான்... இப்போது அசைவு தெரிகின்றது... ஆனால் தண்ணீர் நிறம் இரத்த நிறமாக மாறுகின்றது...அவனுக்கு ஆச்சர்யம்.. கூடுதலாக பயம், ஆர்வம் ,எல்லாம் ஒரு சேர இருக்க....அவன் தன் கையை உள்ளே விட்டு நோண்டி எடுக்க...அதிர்ச்சியில் அவன் முகம்.. காரணம் அது ஒரு மனித இதயம்... டாய்லெட்டை சரி பண்ண வந்த அந்த மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்.????? என்ற சற்றே நீங்கள் நினைத்து பாருங்கள்...
DIRTY PRETTY THINGS படத்தின் கதை இதுதான்...
Okwe (Chiwetel Ejiofor) ஒரு லண்டனில் டாக்சி ஓட்டும் ஒரு டிரைவர்...அவன் ஒரு நீக்ரோவும் கூட... இரவு நேரங்களில் ஒரு ஹோட்டலில் ரிசப்சனிஷ்ட்டாக வேலை... பல இரவுகள் தூங்காமல் வேலை செய்து சம்பாதிக்கின்றான்...
Senay (Audrey Tautou) ஒரு பணிப்பெண்... அவள் ஓக்வீ... பணிபுரியும் ஓட்டலிலேயே அவளும் துப்புரவு பெண்ணாக பணி புரிகின்றாள்.. இதில் கொடுமை இருவரிடமும் லண்டனில் வாழ முறையான ஆவணம் ஏதும் இல்லை..
இருவரும் ஒரே அறையை பகிர்ந்து கொள்கின்றார்கள்.... அப்போதுதான் 512ம் அறையில் தங்கி இருக்கும் ஒரு விபச்சாரி... தனது ரூமில் டாய்லெட் அடைப்பு என்று சொல்லி அதை சரிசெய்ய சொல்கின்றாள்...
ஓக்வி போய் செக் செய்கின்றான்.. தண்ணீர் வழிந்து கொண்டு இருக்கின்றது.. அடைப்பை சரி செய்ய நோண்டி பார்த்தால்... ஒரு இள வயது மனிதனின் மனித இதயத்தை பார்க்கின்றான்....
காரணம்... அந்த ஓட்டலில் ஒரு அறையை இன்ஸ்டென்ட் ஆப்பரேஷன் தியேட்டராக மாற்றி...சட்டத்துக்கு புறம்பாக லண்டனில் வாழ்க்கை நடத்தும் அகதிகளை பணத்தாசை காட்டி அவர்களின் கிட்னியை எடுத்து விற்பதை அந்த ஓட்டல் மேனேஜர் வெகு நாட்களாக செய்து வருவதை கண்டு பிடிக்கின்றான்....
ஓக்வீ மீது சினாய் காதல் கொள்கின்றாள்... ஆனால் அவன் அதை ஏற்க்க மறுக்கின்றான்.... ஓக்வி நைஜிரியாவில் ஒரு டாக்டராக இருந்தவன்....லண்டனில் சட்டத்துக்கு பறம்பாக வாழ்க்கை நடத்தி வரும் மக்களுக்கு இலவச வைத்தியம் பார்ப்பவன்... ஒரு கட்டத்தில் சினாய் கிட்னிமேல் ஓட்டல் மேனேஜர் குறி வைக்க அந்த கிட்னியை ஓக்வி ஆப்பரேட் செய்து எடுக்க வேண்டிய சூழல் வருகின்றது... அதை எப்படி எடு்த்தான்.. அதை எடுக்க எப்படி ஒத்துக்கொண்டான்.. போன்றவற்றை வழக்கம் போல் வெண்திரையில் கானுங்கள்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
Audrey Tautou கதாநாயகியாக நடித்து இருப்பவர் ஏஞ்சல் அண்டு டெமொன்ஸ் படத்தின் கதாநாயகி... அந்த பெண்ணின் உதடு ஏதோ ஒரு மென் சோகத்தை உள்வாங்கியதாக இருக்கின்றது.....
Chiwetel Ejiofor படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கின்றார்... டாக்சி ஓட்டி விட்டு பணம் கொடுக்கும் இடத்தில் ...அந்த இடத்தின் ஓனர் பேண்ட் ஜீப்பை கழட்டி விட்டு அவனை ஏதோ செய்ய சொல்ல அவனும் வெறுப்பாய் முட்டி போட... கடைசியில் வேறு ஒரு காரணம் எனும் போது.. அந்த டுவிஸ்ட்டை ரசிக்க முடிகின்றது....
அதே போல் அகதியாய் வாழும் மக்கள் ஒரு போதும் பிரச்சனைகளை உரத்து சொல்லி போராட முடியாது என்பதையும்... எல்லாவற்றிர்க்கும் பணிந்தே வாழ வேண்டிய அவசியத்தையும் மிக அழகாக காட்சி படுத்தி இருப்பார் இயக்குனர்....
அதே போல் வலிந்து போய் செனாய் .. ஓக்வியிடம் அவள் காதலை தெரிவித்தாலும் அதை நாசுக்காக ஓக்வீ மறுக்கும் இடம் அழகு....
செனாயிடம் பாஸ்போர்ட் இல்லை என்பது தெரிந்ததும்.. போலிசிடம் மாட்டி விடாமல் அவளை தப்பிக்கவைத்து விட்டு அவளின் ஓனர் அவளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்த அவள் “அந்த” இடத்தில் கடித்து விட்டு ஒடி வருவது வெகு அழகு....
கிட்னியை பறி கொடுத்த ஏழைகள் அந்த ஆப்பரேஷன் காயத்தை ஆற்ற கூட அவர்களிடம் பணம் இல்லாதது கண்டு வருத்தபட்டு அவர்களுக்காக மருந்து திருடி மருத்துவம் பார்ப்பது ஓக்வியின் நல்ல மனதுக்கு ஒரு சல்யுட்....
இந்த படம் கிட்னி திருட்டு,அகதி குடியேற்றம்,சட்விரோத குடியேற்றம், பல விஷயங்களை அலசகின்றது... இருப்பி்னும் அந்த கிளைமாக்ஸ் அற்புதம் யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட் அது.....
இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு பெஸ்ட் ஸ்கிரின் பிளே விருதுக்கு பரிந்துரைக்கபட்டது...
இந்த படம் பெஸ்ட் பிரிட்டிஷ் பிலிமாக தேர்ந்து எடுக்கபட்டது...
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்
Directed by Stephen Frears
Produced by Robert Jones,
Tracey Seaward
Written by Steven Knight
Starring Chiwetel Ejiofor,
Sophie Okonedo,
Israel Aduramo,
Sergi López,
Benedict Wong,
Audrey Tautou
Music by Nathan Larson
Cinematography Chris Menges
Editing by Mick Audsley
Release date(s) December 13, 2002 (UK)
Running time 93 min
Country United Kingdom
Language English,
Somali
Budget $10,000,000
Gross revenue $13,904,766 (worldwide
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
படத்த விட நீங்க விமர்சனம் பன்ற விதம் நல்லாருக்கு.. வாழ்த்துக்கள். இந்த படத்துக்கு டோரண்ட் ட்ரை பன்றேன்.
ReplyDelete//அவன் ஒரு நீக்ரோவும் கூட...//
ReplyDeleteஇப்படி ஒரு அசிங்கமான சொற்பிரயோகம் தேவையா?
அருமையான படம். வசனங்கள், மற்றும் காட்சியமைப்புகள் ரொம்பக் கூர்மை. இந்தப் படத்தின் ரெண்டு காட்சிகளை என்னுடைய ஒரு இடுகையில் எழுதியிருந்தேன்.
ReplyDeleteஜாக்கி சார்,
ReplyDeleteநானும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.கதாநாயகியான Audrey Tautou நடிப்பு அருமை.
இவரின் படம் Priceless ( French )பார்த்திருக்கிறீர்களாஅ...?!?!?! அற்புதமான படைப்பு.
//படத்த விட நீங்க விமர்சனம் பன்ற விதம் நல்லாருக்கு.. வாழ்த்துக்கள். இந்த படத்துக்கு டோரண்ட் ட்ரை பன்றேன்.//
அண்ணாமலை சார்,
டோரன்ட் எல்லாம் எதுக்கு போறீங்க..டாட்டா ஸ்கை சப்ஸ்கிரைப் பண்ணுங்க..! அங்க World movies அப்டினு ஒரு சேனல் இருக்கு...எல்லா ஒலகப்படங்களும் காட்டறாங்க..!!
நல்ல படம் இதை பார்க்க தூண்டிவிட்டிர்கள் ............................
ReplyDeleteஅசத்தல் அண்ணே,ஓட்டுக்கள் போட்டாச்சு
ReplyDeleteஅசத்தல் அண்ணே,ஓட்டுக்கள் போட்டாச்சு
ReplyDeleteஇந்த Audrey Tatou Da Vinci Codeஇல் நடித்தார். Angels and Demons படத்தில் நடித்தவர் Ayelet Zurer என்பதாக நினைவு.
ReplyDeleteஹலோ.. எச்சுச் மீ.. சாண்ட்விட்ச் எங்க?
ReplyDeletegood review.. small correction, audrey is davinci code's heroine, not angels and demons
ReplyDeleteநல்ல விமர்சனம். படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி .
ReplyDeleteநன்று, பார்க்க ஆவலை தூண்டுகிறது!
ReplyDeleteகருப்பினத்தவன் அல்லது கருப்பன் (black) என்றே கூற வேண்டும்.
நன்றி அண்ணாமலையான்....
ReplyDeleteநன்றி மணிவண்ணன்.. மன்னிக்கவும் தவறாய் வந்து விட்டது...
நன்றி ஷங்கி நேரம் கிடைக்கும் போது போய் படிக்கின்றேன்...
நானும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.கதாநாயகியான Audrey Tautou நடிப்பு அருமை.
ReplyDeleteஇவரின் படம் Priceless ( French )பார்த்திருக்கிறீர்களாஅ...?!?!?! அற்புதமான படைப்பு.
//
நன்றி அமு செய்யது...
பிரைஸ்லெஸ் பத்தி முன்னாடியே பார்த்தே தீரவேண்டியபடங்கள் லிஸ்ட்ல போய் பாருங்க..
நன்றி இராஜகிரியன்..
ReplyDeleteநன்றி கார்த்தி...
நன்றி மணிகன்டன்..
இந்த Audrey Tatou Da Vinci Codeஇல் நடித்தார். Angels and Demons படத்தில் நடித்தவர் Ayelet Zurer என்பதாக நினைவு.//
ReplyDeleteநன்றி மகாதேவன்.. தவற்றை சுட்டி காட்டியமைக்கு
நன்றி காத்திக்கிருஷ்ன... தவநை சுட்டி காட்டியமைக்கு
ReplyDeleteநன்றி பிளாக் பாண்டி..
நன்றி மணிப்பாக்கம்.. நிச்சயம் அடுத்த முறை வார்த்தைகளில் கவனமாய் இருக்கின்றேன்..
நல்லதொரு பகிர்வு ஜாக்கி.
ReplyDelete