சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(30•11•09)

ஆல்பம்.....

முதல் இரவு அறைக்குவரும் கணவன் உடல் நிலை சரியில்லை என்று சொல்கின்றான்... சரி படுத்து உறங்குங்கள்... நாளை பார்த்து கொள்ளலாம் என்று சொல்கின்றாள் புது மனைவி... காலையில் கண் விழித்து பார்த்தால் கட்டில் மேலே இருக்கும் மின் விசிறியில் புது கணவன் தூக்கு போட்டு இறந்து போய் தொங்கி கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்?.... சேலத்தில்ஒரு புது பெண்ணுக்கு முந்தாநாள் நடந்து சம்பவம் இது...அந்த பெண்ணின் பார்வையில் இந்த பிரச்சனையை பாருங்கள்.. பிரச்சனை தீவிரம் மற்றும் அதிர்ச்சி உங்களுக்கு புரியும்...


சென்னை....
சென்னையில் டீ விலை திடிர் என்று ரூபாய் 6 க்கு நுரை தளும்பிய டீயை விற்க்க ஆரம்பித்த வி்ட்டார்கள்... ஒருஇடத்தில் ரூபாய் 4க்கும்... ஒரு சில இடங்களிலில் ரூபாய் 5க்கும் என இஷ்டம் போல் விலை ஏற்றி விற்று வருகி்ன்றார்கள்... இதை கேட்பதற்க்கு யாரும் இல்லை... இதில் அதிகம் பாதிக்கபடுபவர்கள் கொளுத்து வேலை செய்பவர்கள் மற்றும் தினக்கூலிகள் ... அந்த ஆறு ரூபாய் டீயில் பாதி கிளாசில் நுரைதான் இருக்கின்றது....


வெறிநாய்கடி மருந்தும்...அரசின் அலட்சியமும்....

இன்னும் நாய்கடிக்கு நமது மாநிலத்தில் பலர் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர்...காரணம் அந்த மருந்து விலை அதிகம்... கல்யாணத்துக்கு முன் பத்திரிக்கை வைக்க நானும் என் மனைவியும் நண்பர் வீ்ட்டுக்கு செல்லும் போது தெரு நாய் லேசாக பயமுறுத்த அப்போது என் மனைவி காலில் லேசாக நாயின் பல்லோ அல்லது நகமோ பட நாங்கள் ஜோசியம் ஏதும் பார்க்காமல் உடனே 1200ரூபாய் மதிப்பு கொண்ட ஊசி போட்டு விட்டோம்... ஆனால் அன்னாடம் காச்சி மக்களுக்கு அது ஒரு மாத வீட்டு வாடகை தொகை அவ்வளவு தொகைக்கு எங்கு போவார்கள்...
அதனால் நாய் கடித்ததும் எதாவது நல்ல எண்ணை குடித்துவிட்டு ,நாட்டு வைத்தியம் பார்த்துவிட்டு அலட்சியமாக விட்டு விடுகின்றனர் வெறிநாய் கடித்து இருந்ததால் பாதிப்பு 6மாதத்தில்ரொம்ப பயங்கரமான சாவாக இருக்கும்....

அரசு பொது மருத்துவமனையில் வெறிநாய்கடிக்கு ஊசி போட விடியலில்3 மணிக்கு இடம் போட்டு காத்து ,இருக்கும் கொடுமை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது... மருந்து தட்டுப்பாடு ஒரு காரணம்... இந்த மருந்து தட்டு பாடுகளை அரசு விரைந்து கலைய வேண்டும்...
மிக்சர்....

அமிதாப் நடிக்கும் இந்திபடம் பா வில் வரும் ராஜா பாடல்கள் அவருக்கு இந்தியில் மறுபடியும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும் என்று எண்ணுகின்றேன்... முக்கியமாக முடி முடி என்ற பாடல் அற்புதம் ....

வாழ்த்துக்கள்...
பதிவர் லவ்மேடி என்னை அவர் திருமணத்துக்கு தொலைபேசியிலும், மெயில் அனுப்பியும் அழைப்புவிடுத்தார்... எனக்கு ஹைதரபாத்தில் ஷுட்டிங் இருந்த காரணத்தால் என்னால் திருமணத்துக்கு போக முடியவில்லை.... பதிவர் ரம்யா திருமணத்துக்கு போக போவதாக சொன்னார்கள்.. அப்படி செல்லும் பட்சத்தில் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்க சொல்லி இருந்தேன்..... இப்போதும் எனதுஉள்ளப்பூர்வமான வாழ்த்துக்களை அந்த தம்பதிகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்...
வாழ்த்துக்கள்...
கணிணி மென்பொருட்களின் கூடம் எழுதும் பிளாக்கர் வடிவேலன் ஆர் அவர்கள் என்டிடிவி இந்து வில் பிளாக் எழுதுவது குறித்து நேர்காணல் ஒன்றை தந்துள்ளார்... அது வரும் வெள்ளி 4ம் தேதி இரவு 9,30க்கு ஒளிபரப்பாகும் என்பதை பேட்டி எடுத்தவர்கள் சொன்னதாக தெரிவித்தார்... அவருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் ...


விஷுவல் டெஸ்ட் எடுத்ததில் பிடித்தது....

ஹைதராபாத்தில் ஜுப்ளி ஹில்சில் உள்ள பெத்தம்மா கோவில்...விடியலில் போன போது சன் லைட் அந்த கோவிலுக்கு மட்டும் வருவது போல் இருந்த அந்த தருணத்தில் கிளிக்கியது

ஒரு பணக்கார வீட்டின் உட்புற தோற்றம்...


லோ ஆங்கிளில்
இரண்டுமே மனிதன் பயணிக்கத்தான் என்றாலும்....மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இது....

நான்வெஜ்...

அவன் எப்போதுமே நெட்டில் செக்ஸ, சிடியில் பிட் பார்க்கின்றவன்... காம புத்தகம் வாசிக்கின்றவன்...அவன் சவாசிப்பது... நேசிப்பது...தூங்குவது எல்லாம் அந்த புத்தகத்தை வைத்துதான்...அவனுக்கு கனவில்... படித்த கதாபாத்திரங்களில் அணுக்கு பதில் இவன் இருப்பான்.... அந்த அளவுக்கு செக்ஸ் போதை அதிகம் கொண்டவன்... செக்ஸ் புத்தகமும் பாத்ரூமும் என்று யாரவது கட்டுரை எழுதினால் எராளமான டீப்ஸ் கொடுப்பவன்...பல எதிர்கால டாக்டர்,வக்கில்,என்சினியர் ,விஞ்ஞானி,பொறிக்கி ,மொள்ளமாறி போன்ற கேரக்கடர்களை பாத்ரூமில் அழித்தவன்...
அவனுக்கு திருமணம் செய்துவைக்க அவன் பெற்றோர் முடிவெடுத்தனர்...அவனுக்கு ஜாதகம் இல்லை என்பதால் கைரேகை பார்ப்வனிடம் கை காட்டி நாள் குறிக்க சொன்னார்கள்...

அவனும் கை ரெகை பார்க்கும் ஜோசியகாரனிடம் போனான்...கைரேகை பார்க்க எவ்வளவு என்று கேட்க..150 ரூபாய் என்று சொன்னான்....கையை பார்த்த ஜோசியகாரன் அதிர்ந்து போனான் பாதிரேகையை காணவில்லை....உடனே அசராத ஜோசியக்காரன் இந்தகாலத்து பிள்ளைங்களை பத்தி் எனக்கு தெரியும்..உன் பெண்ட் ஜிப்பை அவுறு என்றான்.. பயந்த போன அவன் ஏன் என்று கேட்க? அதற்க்கு ஜோசியகாரன் மீதி பாதி ரேகை அதுலதானே இருக்கும் என்றான்....

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

20 comments:

 1. ஏமீரா..ஜாக்கி..பாக உண்ணாரா??

  ReplyDelete
 2. நானும் அந்த முதலிரவில் தற்கொலை சம்பவம் பற்றி படித்தேன்... அந்த பெண்ணின் சூழ்நிலையை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை... சாண்ட்விட்ச் வழக்கம் போல... :)

  ReplyDelete
 3. 'A' ஜோக் யப்பா!!!!!!!!!!!!!!!

  சண்ட்விச் நல்லா இருக்கு

  ReplyDelete
 4. இரண்டுமே மனிதன் பயணிக்கத்தான் என்றாலும்....மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இது...


  சூப்பர் விஷுவல் கவிதை,

  ReplyDelete
 5. //சென்னையில் டீ விலை திடிர் என்று ரூபாய் 6 க்கு நுரை தளும்பிய டீயை விற்க்க ஆரம்பித்த வி்ட்டார்கள்... //


  புளிய‌ங்கொட்டை விலையை ஏத்திட்டாங்க‌ளோ என்ன‌வோ?

  ReplyDelete
 6. சண்ட்விச் நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. /*தண்டோரா ...... said...
  ஏமீரா..ஜாக்கி..பாக உண்ணாரா??*/


  உங்க பக்கத்திலே இல்லே அல்லவா... அப்படின்னா...
  பாக உந்தி...

  உங்க பக்கத்திலே இருந்தா என்ன ஆவும்? பாக்க கேபிள் அண்ணாதே தொந்தி...

  ReplyDelete
 8. //அமிதாப் நடிக்கும் இந்திபடம் பா வில் வரும் ராஜா பாடல்கள் அவருக்கு இந்தியில் மறுபடியும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும் என்று எண்ணுகின்றேன்... முக்கியமாக முடி முடி என்ற பாடல் அற்புதம் ....//

  இந்தப் படத்தின் பாடல்கள் சரியில்லையென இசைப்பேரறிஞர் சாரு நிவேதிதா சொல்கின்றார். ஹிந்தியில் எல்லோரும் ராஜாவை ஜோக்கர் என்கின்றார்கள் என மலையாளிகளை தூக்கிவைக்கும் சாரு எழுதுகின்றார்.

  ReplyDelete
 9. நொந்த விஷ்யமாய் எழதும் நொந்தா
  எல்லாம் பிடித்த்து.அந்த் கை ஸோதிடம் தவிர
  அத்ற்கு நேரம் கிடையாதா

  ReplyDelete
 10. நொந்த விஷ்யமாய் எழதும் நொந்தா
  எல்லாம் பிடித்த்து.அந்த் கை ஸோதிடம் தவிர
  அத்ற்கு நேரம் கிடையாதா

  ReplyDelete
 11. தண்டோரா,,
  பார்த்து பேசுங்க, இதுக்கும் ஜாக்கி- உங்களுக்கு தன்நம்பிக்கை இல்லை, ஹைதராபாத் மேல காண்டு, இல்லன்னா பொறாமை Etc ன்னு பதில் போடப்போறான்... :)
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்..
  (எனக்கு என்னிக்கு ஜாக்கிகிட்ட மண்டகப்படி கெடைக்கப்போகுதுன்னு தெரியல)

  ReplyDelete
 12. சேலம் புது மணப்பெண்ணுக்கு நேர்ந்தது ஜீரணிக்க முடியாத அதிர்ச்சி. ஏ ஜோக் எல்லாம் ரொம்ப ஓவர் தலைவரே.

  ReplyDelete
 13. வணக்கம் ஜாக்கி

  புகைப்படங்கள் எல்லாம் நச்

  நாய்கடி விழிப்புணர்வு அவசியம் தேவையான தகவல்

  சேலம் பெண்னைப் பற்றி செய்தி படித்தவுடன் மனம் மிக வேதனை அடைந்தது.

  ReplyDelete
 14. எத்தன ஷாட்டுங்கிற அந்த பதிவுக்கு பதில் போடுங்களேன்!

  ReplyDelete
 15. //இன்னும் நாய்கடிக்கு நமது மாநிலத்தில் பலர் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர்...காரணம் அந்த மருந்து விலை அதிகம்...//
  //மருந்து தட்டுப்பாடு ஒரு காரணம்... இந்த மருந்து தட்டு பாடுகளை அரசு விரைந்து கலைய வேண்டும்...//

  இலவச கலர் டிவி முக்கியமா? இது முக்கியா? தல ! :-)

  தமிழக அரசு வாழ்க! (இன்றைய ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகளுக்கும் சேர்த்து தான்)

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner