ஜாக்கிசான்,கமலுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்...



ஹாங்காங் நடிகர் ஜாக்கியின் சுறு சுறுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்...அவருடைய சண்டையோடு கலந்த ஹுயூமர் மிகவும் பிடித்தமானது.
ஹீரோவும் நன்றாக வில்லனிடம் உதைவாங்குவான் என்று உலகுக்கு தெரிவித்தவர்...காரணம் வில்லன் சாதாரனஆள் அல்ல என்பதை சொல்ல அது போலான காட்சிகள் அமைத்தவர்... விளிம்புநிலையில் இருந்து போராடி ஆசியாவின் சூப்பர் ஸ்டாராக வளம்  வந்த அந்த வெறிப்பித்த  உழைப்பு பிடிக்கும்...அதனாலே எனது பெயரை ஜாக்கிசேகர் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டேன்....

அதன் பிறகு எனக்கு பிடித்த நடிகர் கமல்தான்.. எனக்கு அவரின் நடிப்பு. பிடித்தமானது.. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அந்த தேடல் அவரிடம் எனக்கு மிக பிடித்த ஒன்று... அவருடைய குரலில் வந்த பாடல்கள் எனக்கு பிடிக்கும் பன்முக திறமைக்கொண்ட கலைஞன்...அதனால் கமல் பிடிக்கும்...வலையில் சின்ன பசங்க போட்டுக்கொள்ளும் சண்டை போல கமலுக்காக இரண்டு பெரிய பதிவுகள் எழுதியவன்... அது எல்லோருக்கும் தெரியும்..

மேலே சொன்ன  இரண்டு ஆண்களை தவிர எனக்கு மற்றும் ஒரு நபரை பிடிக்கும் அவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு...  சாரி பிரின்ஸ் மகேஷ்பாபு என்றுதான் சொல்ல வேண்டும்.. இவ்வையென்றால் மனவாடுக்கள் கோபித்துக்கொள்வார்கள்..

சின்ன வயதில் ரஜினியின் வெறிப்பிடித்த ரசிகராக இருந்த போது அவரின் ஸ்டைல்  பிடிக்கும்.. அதன் பிறகு ஜாக்கியோட ஸ்டைல்தான் பிடிக்கும்....கமலின் ஸ்டைல் பெரியதாக என்னை கவரவில்லை.. ஆனால் ரொம்ப நாளைக்கு பிறகு வேட்டையாடு விளையாடு படத்தில் கமலின் ஸ்டைல் மற்றும் மேனாரிசங்களை நிரம்பவே ரசித்தேன்... அதன் பிறகு யாரையும் ரசிக்கவில்லை..அந்த வெற்றிடம் ரொம்ப காலியாகவே இருந்தது....


ஆனால் சில வருடங்களுக்கு முன் தெலுங்கு சீரியல் ஒர்க் செய்து இருப்பதால் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் எனக்கு  சுந்தர தெலுங்கு புரிய ஆரம்பித்தது... அதுக்கு முன்னே.. ஏமி எக்கட போய்யாவு.. இதுதான் எனக்கு தெரிந்த தெலுங்கு...


ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில்  ஒக்கடு  என்று ஒரு தெலுங்கு படம் ஓடிக்கொண்டு இருந்தது... ஒரு வாரத்துக்கு மேல் ஓடிக்கொண்டு இருந்த காரணத்தால் அந்த போஸ்டரின் மேல் எனக்கு இயல்பாய் ஒரு ஆர்வம் எழுந்தது... பாண்டிச்சேரி நண்பர் அன்பு என்னை அந்த படத்துக்கு அழைத்தார்... யோவ் எனக்கு தெலுங்கு எல்லாம் தெரியாது என்று மறுத்தேன் வற்புறுத்தி அழைத்து   சென்றார்...


மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பரபரபவென பார்த்த ஒரு திரைக்கதை அதை எல்லாம் விட அலட்டிக்கொள்ளாமல் அந்த படத்தில் நடித்த மகேஷ்பாபுவை ரொம்பவே பிடித்து விட்டது.. அதுக்கு பிறகு மகேஷ் நடித்த படங்களை எதையும் விட்டு வைப்பதில்லை....

அடுத்து என்னை மிகவும் விசீகரிக்க வைத்த அந்த தெலுங்கு படத்துக்கு பெயர்.. அத்தடு.... அதில் திரிஷாவுக்கும் மகேஷ் பாபுவுக்கு இடையே நடக்கும் காதல் காட்சிகளை எத்தனை முறை பார்த்து இருப்பேன் என்று எனக்கே தெரியாது..அந்த காட்சி உங்களுக்காக..

அந்த படம் எனக்கு ரொம்பவும் பிடித்த கமர்ஷியல் படம்...

மகேஷின் நடிப்பை அப்படியே அதிகமாக இமீடேட் செய்யத தமிழ் நடிகர்.. நடிகர் நம்ம விஜய்தான்.


எனக்கு தெலுங்கு பாடல்களின் அர்த்தம் அதிகம் புரியா விட்டாலும், ஹேப்பிடேஸ் படத்தின் பாடல்கள் எனக்கு ரொம் பிடிக்கும் அதே போல அத்தடு மற்றும் அதிதி படங்களின் அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்தமானவை
அத்தடுவில் எனக்கு பிடித்த பாடல்...


அதே போல பல நாட்கள் அதிதி படத்தில் வரும் இந்த பாடலை முனு முனுத்துக்கொண்டு இருந்தேன்.. முக்கியமாக மகேஷின் ஸ்டைல் இந்த பாடலில் எனக்கு ரொம்ப பிடிக்கும்...


வெகு நாட்களுக்கு பிறகு இன்று பிரின்ஸ்மகேஷ்பாபுவின் புதியபடம் டொக்குடு ரிலிஸ் ஆகின்றது...சைதை ராஜ் தியேட்டரில் இன்று காலை பார்க்கலாம் என்று இருக்குன்றேன்.
பார்ப்போம்...

ஜாக்கி பிடிச்ச நடிகர்களை பற்றிதான் எழுதுவிங்களா? பிடிச்ச நடிகைகளை பற்றி எழுதக்கூடாதா? ஓ.. தாராளமாக எழுதலாம்.. ஒரு 500  பதிவுகள் வரை போகும் பரவாயில்லையா???

=========

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
 
நினைப்பது அல்ல நீ.........
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

10 comments:

  1. டொக்குடு எப்படி இருந்ததென்று உடனே பதிவீர்கள் என நம்புகிறோம்

    ReplyDelete
  2. எனக்கும் தெலுங்கில் பிடித்த ஓரே நடிகர் மகேஷ் பாபு தான். அவரை பற்றி நன்றாக எழுதி இருக்கிங்க.

    ReplyDelete
  3. அலட்டி கொள்ளாமல் ,ஓவர் சீன் போடாமல் அனாயசமாக நடிக்கும் பிரின்ஸ் மகேஷ் பாபு சான்சே இல்லை....

    அத்தடு தான், நான் முதன் முதலில் பார்த்த முழு நீள தெலுங்கு படம்...அதுக்கப்புறம் எந்த மகேஷ் பாபு படமும் விடுவதில்லை...

    இன்னிக்கு dookkudu ரிலீஸ் ...waiting to watch the movie...

    ReplyDelete
  4. டொக்குடு இல்லை அது '''தூகுடு'''குதி என்று பொருள்

    ReplyDelete
  5. Dear Jackie..

    It is not டொக்குடு!!! It is DHOOKUDU..meaning PAAYCHAL in Tamil

    Kindly correct it.

    ReplyDelete
  6. டப் செய்யப்பட்ட அதடு படத்தை தமிழில் பார்த்த பிறகு அன்று முதல் மகேஷ்பாபுவின் தீவிர ரசிகனானேன்...
    அதற்கு முன் மகேஷ் பாபுவின் வேறு எந்த படங்களையும் பார்த்ததில்லை...
    “நந்து” படத்தை மட்டும் மூன்று முறைக்கு மேல் தியேட்டரில் பார்த்துள்ளேன்....

    ReplyDelete
  7. ரசிகனாய் விவரித்திருக்கிறீர்கள் வீடியோக்களுடன்...

    சே.குமார்

    ReplyDelete
  8. நான் தெலுங்குப் படம் பார்த்ததே இல்லை. ஆனால் இப்ப பார்க்கணுமென்ற அவாவை தூண்டிவிட்டுவிட்டியள்

    ReplyDelete
  9. நானும் மகேஷ் பாபு வின் பெரிய fan . அவருடைய ஆரம்ப கால கட்டங்களில் ஆள் எதோ ஹிந்தி ஸ்டார் மாதிரி இருந்ததாலும் , immature நடிப்பாலும் அவரை பெரியதை ரசிக்க வில்லை . ஆனால், முராரி படத்திற்கு பிறகுதான் அவருடைய நடிப்பு ரசிக்கும் படி இருக்கிறது . மகேஷ்பாபுவின் தீவிர ரசிகனானேன்...
    தெலுகு field இல் manly ஆனா ஆள் nagarjun கு பிருகு "மகேஷ் "than.
    athadu அப்புறம் kaleja படத்தில் அலட்டி கொள்ளாமல் ,ஓவர் சீன் போடாமல் அனாயசமாக நடிக்கும் மகேஷ் சான்சே இல்லை....

    Most awaiting movie "தூகுடு "

    ReplyDelete
  10. அருமையான பதிவு. எனக்கும் மகேஷ் பாபுவை பிடிக்கும். அவரைப் பற்றி முன்பு தனிப் பதிவு ஒன்றை போட்டுள்ளேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner