சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(07/09/2011) புதன்


ஆல்பம்.
இன்னும் எத்தனை குண்டுதான் இந்தியாவில் வெடிக்கும் என்று  தெரியவில்லை...இன்னும் எத்தனை தடவைதான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சாக்கு சொல்ல போகின்றது  என்றும் தெரியவில்லை...
இன்று காலை பத்து மணிக்கு  டெல்லி உயாநீதிமன்றத்தில்  சக்திவாய்ந்த  குண்டு வெடித்து இருக்கின்றது.. நீதிமன்றத்தின் உள்ளே  செல்ல பாஸ் வாங்க வெயிட் செய்து கொண்டு இருந்த மக்களின் மத்தியில் குண்டு வெடித்து இருக்கின்றது.. இதுவரை ஒன்பது  பேர் பலியாகி இருக்கின்றார்கள்..சாலை விபத்தும் குண்டு வெடிப்பும் ரொம்ப இலகுவாக இந்தியாவில் நடக்கின்றது.... 
இந்தியாவின் இறையாண்மை என்ற வார்த்தை ஒரு வராத்துக்கு  அரசியல்வாதிகளால் பேசப்படும். அதன்பிறகு அடுத்த குண்டு வெடிப்புக்கு பிறகு அதே இறையாண்மை  என்ற வார்த்தை உயிர் பெரும்....
=========
100 நாள் ஜெ  ஆட்சியில், இதுவரை 90 பேருக்கு மேல்திமுகவினர் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி இருக்கின்றார்கள்..கைதானவர்கள் உண்மையில்  தவறு செய்து இருந்தால் நிச்சயம் பாராட்டலாம்...ஆனால் இது காழ்புணர்ச்சிக்காக கைது செய்யப்பட்டால் வரலாறு நிச்சயம் திரும்பும்..  சரி நான் தெரியம கேட்கின்றேன்.. அதிமுக வினர்.. அவ்வளவு அக்மார்க்  ஆன கை சுத்தமான ஆளுங்களா என்ன???
==========
 தூக்கு தண்டனைக்கு எதிரான நடைபயணத்தை   வேலூரில் இருந்து தொடங்கியதும் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்... ஈழ போராட்டங்களை கலைஞர் நசுக்கினார் என்று  பேசிய சீமான்.. இப்போது ஜெ ஆட்சியில் சட்டத்துக்கு கட்டுபட்டு கைதாவதாக சொல்லி இருக்கின்றார்... சீமான் சார்.. ஏன் இப்படி???? ஒரு இந்தியாவில் இருக்கும் மாநில முதலமைச்சர் என்ன செய்ய முடியுமோ  அதைதான் எல்லோரும் செய்வார்கள்..என்பதை திரும்பவும் சொல்லிக்கொள்கின்றேன்..சீமான் உங்கள் உணர்ச்சிகரமான பேச்சு எனக்கு பிடிக்கும் ஆனா...என் அண்ணி ரோஜா மூலம் ஆந்திராவில் காங்கிரஸை காலி செய்வேன் என்று  பேசி இருக்கின்றீர்கள்... ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுவிட்டிங்களோ???
=============
 அம்மா மக்கள் பணியில் ரொம்ப பிசி....சொத்துக்குவிப்பு வழக்கில் 125 முறை வாய்தா வாங்கியதால் உங்களுக்கு வசதியான தேதியை சொல்லுங்கள் என்று சுப்ரீம் கோர்ட் கெஞ்சி இருக்கின்றது.. அம்மான்னா அம்மாதான் அம்மாராக்ஸ்..
==========
2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்று தொலைத் தொடர்புத்துறைக்கு நாங்கள் பரிந்துரை ஏதும் செய்யவில்லை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.மேலும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விற்பனையால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை டிராய் கூறியுள்ளது.. இது ராஜாவுக்கு  சாதகமாகத்தான் இருக்கும்...ஏற்கனவே பிரதமர்,சிதம்பரம் இரண்டு பேரையும் மாட்டி விட்டு இருக்கின்றார்...
==========
சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்க்குள் சென்னை போலிசார் தினறித்தான் போய்விட்டார்கள்... சென்னையின் முக்கியசாலைகளில் போலிஸ்தலைகள்.. எல்லா சாலை சந்திப்புக்களிலும் டிராபிக் போலிசார் பதட்டமாய் பரபரப்பாய் காணப்பட்டார்கள்.. ஏற்கனவே பாலம் கட்டுவதால்   போக்குவரத்து தினரும் போரூரில் இருக்கும் நடிகர் விஜய் கல்யாணமண்டபம் எதிரில் ஒரு மேடை போட்டு வரிசையாக விநாயகர் சிலைகளை வாகனங்களில் நிறுத்திவைத்து,குமரி ஆனந்தன் மகள் தமிழிசை மைக்கில் ஆன்மீகத்தை பொழிந்து கொண்டு இருந்தார்.. நான் சென்னைவெயிலில் அவர்கள் ஏற்படுத்திய டிராபிக்கால் என் முதுகில் வியர்வை வழிய கேட்டுக்கொண்டு இருந்தேன்.
==========
வாகனங்களில் பிள்ளையார் சிலைகள் விரைந்தன நிறைய பேர் தலையில் காவி துணி கட்டி இருந்தார்கள்.. மாவா குதுப்பிய வாயோடு இருந்தார்கள்.. கேடம்பாக்கம் மேம்பாலம் சேகர் எம்போரியம் எதிரில் பாலத்தின் மேல் திடிர் என்று படுதா கட்டி குடை  வைத்து  நிறைய போலிசார் நின்று கொண்டு இருந்தார்கள்.. என்னவென்று பார்த்தால் பின்பக்கம் ஒரு மசூதி இருப்பதால் யாராவது சீண்டி விட்டு விடுவார்கள் என்பதால் பாதுகாப்பை பலபடுத்தி இருந்தார்கள். விநாயகர் ஊர்வலம் போகும் வழியெங்கும் உள்ள மசூதிகளின் வாயில் அருகில் நிறைய  போலிஸ்தலைகள் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தார்கள்...
=============
முதியோருக்கு வழங்கும் உதவிதொகைக்கு ஸ்மார்ட்கார்ட் மூலம் பணம் பெறும் வசதியை ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு நன்றி... அவர்கள் வாங்கும் சின்ன தொகையில் கூட லஞ்சம் பெற்று கொடுக்கும் தபால்காரர்களை  எல்லோரும் தெரியும்..
=================
கன்னியாகுமாரி அய்யன் வள்ளுவர் சிலை...வள்ளுவர் கோட்டம் இரண்டையும் வடித்த சிற்பி கணபதி இயற்கை எய்தினார்.. அவருக்கு அஞசலிகள்.. அவர் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது...
=========
மிக்சர்..
ஈரோட்டில் நடந்த கல்யாணத்துக்கு போனேன்..பேருந்து நிலையத்தை விட்டு   வெளிய வந்து அபிராமி தியேட்டர் பக்கம் இருக்கும்  சிக்னல் கடைசி வரை போனேன்.. அதே போல ஆக்ஸ்பேர்டு ஓட்டல் சிக்னல்வரை போய் பார்த்தேன்.. எங்கேயும் கிப்ட் விற்கும் கடை இல்லை.... செல்போன், செல்போன், செல்போன்,கடைகள்தான்.. ச்சே அப்படி என்னதான் இந்த ஈரோடு பயள்ளைங்க பேசுதுங்களோ???
====
எனது சொத்து மதிப்பு ரூ.51 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்// ஆத்தா என்னை உன் தத்து புள்ளையா எடுத்துக்கோ.. உனக்கு கோடி புண்ணியம்.
======
திருமதி செல்வம் தொடரில் ஒரு வாரமா கிரகபிரவேசத்துக்கு பத்திரிக்கை கொடுத்துகிட்டே இருக்காங்க..இதுல ஒரு பாட்டு வேற.. வீட்டா என் வீட்டுக்கே பத்திரிக்கை கொடுக்க வந்தாலும் வருவாங்க போல..
================
தர்மசங்கடம் என்றால் என்ன என்பதை கடந்த இரண்டு வாரங்களில் நான் தெரிந்து கொண்டேன்..ரொம்ப நெருங்கிய நண்பர்கள் உதவி கேட்டு  என்னால் செய்ய முடியாமல் தவித்தது கொடுமை.. அதை விட கொடுமை இந்த இரண்டு வாரத்தில் ஒரு நம்பிக்கை துரோகம்... நண்பர் கேட்டார். ராசியில் நம்பிக்கை உங்களுக்கு இருக்கா ஜாக்கி என்றார் இல்லை என்றேன். என்ன ராசி என்று கேட்டார்... கன்னிராசி என்றேன்.. என்ன நட்சத்திரம் என்றார்..?? அஸ்தம் என்றேன்...இன்னும் கொஞ்சம் நாளைக்கு அப்படித்தான் இருக்கும் என்றார்...நான் எதுவும் பேசவில்லை.
===========
சமீபத்தில் தொலைகாட்சிகளில் கலக்கும் டொக்கோமோ விளம்பரங்கள் அவத்தலாய் இருக்கின்றன... முக்கியமாக வேலைக்கரி மொபைலை திருடி விட... அப்போது ரிங் அடிக்க அந்த பெண்  முழிக்கும் திருட்டு முழி அல்டிமேட்.
==================
என் அம்மாவுக்கு நாளை (08/09/2011) தெவஷம் அதனால் நாளைக்கு கடலூருக்கு  செல்கின்றேன். அம்மா எங்களை விட்டு பிரிந்து 16 வருஷம் ஆகிவிட்டது..
=================
சென்னையில் பதிவர் சந்திப்பு கடந்த நான்காம் தேதி நடந்தது..வீட்டில்  நண்பர் திருமண  பத்திரிக்கை கொடுக்க வருவதாக சொல்ல அவருக்கு வெயிட்டிங்க.. அதனால் நான் சந்திப்புக்கு ஒரு ஆறுமணிக்கு போனேன்..நிறைய பேர் வந்து இருந்தார்கள்... நிறைய பேர் எனது தளத்தை படிப்பேன் என்று சொன்னார்கள். சிலர் எனது தளம்தான் பிளாக் எழுத இன்ஸ்பிரேஷ்ன் என்றார்கள்.. யாரோ ஒரு நண்பர் எனக்கு ஜாக்கியின் தளத்தை எனது கேர்ள்பிரண்ட் எனக்கு அறிமுகபடுத்தினார் என்று சொன்னார்...என் மேல் அதீத அன்பு வைத்து இருக்கும்  சதிஷ் மற்றும் கோகுல் வந்து அறிமுகபடுத்திக்கொண்டார்கள்..
குடந்தை அன்புமணி மற்றும் தென்றல் என்ற புத்தகத்தையும் ஷர்புதின் வெள்ளிநிலா என்று பத்திரிக்கையையும் கொடுத்தார்...

கேபிள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்..லக்கி புதிய பிளாக்கர்களுக்கு டிப்ஸ் வழங்கினார்..உருப்படாத நாரயணன் மற்றும் சுரேக சமுக விஷயங்களை எழுத சொன்னார்கள். கேமராமேன் ஆம்ஸ்டிராங் தனது தளத்தில் கேமரா தொழில் நுட்பம் பற்றி இன்னும் எழுதுவேன் என்று சொன்னார்..சிவக்குமார் ஈழதமிழர்கள் மேல் கவலை கொள்வது போல தமிழ்நாடு தமிழர்கள்மேலும் கவலை கொள்ள வேண்டும் என்று சொன்னார்..
பிலாசபி பிரபாகரன் மற்றும் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்கள்..நான் புதிய பதிவர்களுக்கு  ஒன்றே ஒன்றுதான் சொன்னேன்..எதுவாக இருந்தாலும் மனதில் தோன்றியதை எழுதுங்கள்..தொடர்ந்து எழுதுவதை நிறுத்தாதீர்கள் என்று சொன்னேன்.ஆனால் இணையம் மட்டும் வாழ்க்கையில்லை. அதிலே நேரத்தை வீணாக்காதீர்கள் என்ற சொன்னேன்.. நிறைய பேசி இருப்பேன் நேரமின்மையும் ஒரு காரணம்....
 (கேபிள் சதிஷ் மற்றும் நான்..)
காலேஜ் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் சதிஷ் என்பவர் புதிதாக வலைபதிவு எழுத வந்து இருக்கின்றார்... லக்கி புதியதலைமுறை பத்திரிக்கையில் வலைப்பதிவு  பற்றிய எழுதிய கட்டுரை வாசித்த பிறகே தனக்கு வலைப்பதிவு பற்றி தெரியும் என்று சொன்னார்...
என்னை பற்றியே ஒரு  பத்து நிமிடத்துக்கு பேசினார்.. எனக்கே கூச்சமாக இருந்தது....பேச்சில் நிறைய இடங்களில் வெகுளிதனம் அதிகமாக இருந்தது.. அந்த வெகுளிதனம் எனக்கு பிடித்து இருந்தது.. மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் என்னை போல பேசிய பேச்சு அது....சந்திப்பு முடிந்து என்னிடத்தில் பேசும் போது அந்த எக்சைட்மன்ட் சான்சே இல்லை...
 ==========
சினிமா பத்திரிக்கைகளில் இன்றைக்கு நடக்கும்  ஹாட் டாபிக் நடிகை காஜல் அகர்வால் டாப்லஸ்  போஸ் கொடுத்துவிட்டார் என்று பரபரப்பாகி இருக்கின்றது..

ஆனால்காஜலின் தங்கை அதனை மறுத்து இருக்கின்றார்..
இந்த புரோமோஷன் போட்டாக்களுக்காகவே இந்தி  சினிமாவில் பெரிய வாய்ப்புகளை காஜல் பெற்று விடுவார்..
 ==================
பிலாசபிபாண்டி
கலங்கிய கண்களை  நேசி ..ஆனால் நேசித்த கண்களை மட்டும் கலங்கவிடாதே...
================
நான்வெஜ் 18+
புதுசா கல்யாணமாயி ஹனிமூனுக்கு பொயிட்டு வந்த தோழிக்கிட்ட கேட்டா? ஹனிமூன் எப்படி இருந்துச்சின்னு?? நல்லா இருந்துச்சி... செம ஜாலியா இருந்தேன்.. 68 பொசிஷனுக்கு மேல எல்லாம் டிரை பண்ணோம்... ஆனா என் கணவருக்குதான் அதில் சின்ன வருத்தம் என்றாள்.. ஏன் அவருக்கு என்ன பிரச்சனை??  அடுத்த முறை ஹனிமூனுக்கு நான் போகும் போது அவரையும் கூட்டிக்கிட்டு போகனுமாம்.....
===========

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
=

நினைப்பது அல்ல நீ ..
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...


நினைப்பது அல்ல நீ...
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

17 comments:

  1. ஈரோடு பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இரண்டு கிஃப்ட் கடைகள் இருக்குதுங்க. பிருந்தாவன் ஹோட்டல் பக்கத்துல அண்டர் கிரவுண்ட்ல ஒரு கடை இருக்கு. டவுன் பஸ் நிக்கற இடம் பக்கத்துல கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல கிஃப்ட் எல்லாம் இருக்கும்.யாரையும் கேட்டு இருந்தா சொல்லி இருப்பாங்களே

    ReplyDelete
  2. இளம் பதிவர்களுடன் கலந்துரையாடி நிகழ்ச்சியை சிறப்பித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அவசர உலகில் செய்திகளை படிக்கக்கூட நேரம் இல்லாதவர்களுக்கும் வசதியாகத் துணுக்குத் தோரணமாகப் பல செய்திகளையும் தந்தற்கு நன்றிகள்

    ReplyDelete
  4. இப்படி ஒரு ஆச்சரியம் நடக்கும்னு நா நினைக்கல சார்... இந்த மாதம் தொடக்கம் முதலே எனக்கு லாபமாய் உள்ளது.... என்னை பற்றி நீங்கள் எழுதியது மற்றும் போட்டோ போட்டதற்க்கு மிக்க நன்றி.... நிச்சயம் இந்த சந்திப்பும் உங்கள் நட்பும் என்னை மேன்மேலும் வாழ்த்தும் சார்....

    உங்களின் ஆசியுடன் சதீஷ்....

    ReplyDelete
  5. //வரலாறு நிச்சயம் திரும்பும்// This will surely happen in 2016....

    ReplyDelete
  6. //என் அண்ணி ரோஜா மூலம் ஆந்திராவில் காங்கிரஸை காலி செய்வேன் // Super Comedy.. Seeman is fast filling up the place vacated by Vadivelu!!

    ReplyDelete
  7. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

    உங்களோட 1175 வது ஃபாலோயரா இணைஞ்சிருக்கேன்!

    ரொம்ப சந்தோசமா இருக்கு சார்! இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரேன்!

    ReplyDelete
  8. திருமதி செல்வம் தொடரில் ஒரு வாரமா கிரகபிரவேசத்துக்கு பத்திரிக்கை கொடுத்துகிட்டே இருக்காங்க..இதுல ஒரு பாட்டு வேற.. வீட்டா என் வீட்டுக்கே பத்திரிக்கை கொடுக்க வந்தாலும் வருவாங்க போல..
    ============////

    நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன் சார்! முடியல!

    ReplyDelete
  9. திருமதி செல்வம் தொடரில் ஒரு வாரமா கிரகபிரவேசத்துக்கு பத்திரிக்கை கொடுத்துகிட்டே இருக்காங்க..இதுல ஒரு பாட்டு வேற.. வீட்டா என் வீட்டுக்கே பத்திரிக்கை கொடுக்க வந்தாலும் வருவாங்க போல.

    அட்டகாசம் ஜாக்கி........

    ReplyDelete
  10. கிஃப்ட் வாங்க கடை இல்லையா அல்லது வேறு கடைக்கு போனதால் கிஃப்ட் கடை தெரியலையா?

    :)

    ReplyDelete
  11. Hi Sekar Please share கேமராமேன் ஆம்ஸ்டிராங் blog name.

    ReplyDelete
  12. உங்க நெஞ்ச தொட்டு சொல்லுங்க திமுக பண்ண மாதிரியா அதிமுககாரங்க நில அபகரிப்பு பண்ணாங்க. பாஸ் நியாயம்னு ஒன்னு இருக்குல‌

    ReplyDelete
  13. could you please share Armstrong's blog link?

    ReplyDelete
  14. Jackie,
    Your blog is visited by people of all political views. It is suprising to see you still support DMK inspite of all Spectrum scams. Even karunanidhi has more than 2000 crores. For that you had posted no comment on him. You belong to cinema industry. You would have known the atrocities of Maran family, stalin family, alagiri family made to cinema industry. It is so pathetic to see you still support DMK.

    ReplyDelete
  15. Where are you Jackie anne why no post for last two days ???

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner