(Driving Miss Daisy ) நாற்பது வயதுக்கு பிறகு நாய் குணமா???

சமீபத்தில் விஜய்டிவி மற்றும் இன்ன பிற விருதுகளை நீங்கள் பார்த்தீர்களானால் ஒன்று மட்டும் உரைக்கும்...விருதுகளை பெறுபவர்கள் எல்லோரும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் நடிக நடிகைகள்...


அப்ப அறுபது வயசுல இங்க யாரும் வாழவே யில்லையா? நடிக்கவேயில்லையா? ஏன் நடிக்காம?? இப்பகூட சரோஜதேவி ஆதவன் படத்துல நடிச்சாங்களே....ஆமாம் நடிச்சாங்க 30 பேர்ல ஒரு ஆளா நடிச்சாங்க....

பொதுவாக நம்மில் ஒரு பழமொழி இருக்கும் 40 வயதில் நாய் குணம் என்று.. அதில் உண்மை இல்லாமல் இல்லை.. ஆனால் அதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான்...

தன் இயலாமையின் மீதான கோபம்...எல்லாவற்றிலும் தன்னை கொண்டாடியவர்கள்.. தன்னை இப்போது கிள்ளுக்கீரையாய நினைக்கின்றார்களே என்று ஒரு வருத்தமே அந்த நாய் குணத்துக்கு காரணம்...

ஆனால் தமிழில் நாற்பது வயசுக்கு மேல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அல்லது அவர்களது ஆசா பாசங்களை தமிழ்சினிமா பதிய பட்டதேயில்லை... அதுவும் 60 வயதுக்கு மேல் அவர்கள் படத்தில் இருந்தாலும் தின்னையில் உட்கார்ந்து வெற்றிலை பாக்கு இடிப்பதாக காட்டுவதோடு சரி.....

சரி அப்படியே படம் எடுததாலும் தமிழ் ரசிகர்கள் ரசிப்பார்களா? திரையை பார்த்து டேய் கோத்தா 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி வந்தா.. இந்த கிழவன் கிழவி நடக்ககிறதைதான் காட்டுவியா என்று கோபபடுகின்றார்கள்...

பாலுமகேந்திரா 1989ல் சந்தியாராகம் என்று வயதான சொக்கலிங்கபாகவதர் வார்க்கை பிரச்சனையை மையபடுத்தி ஒரு படம் எடுத்தார்... அது தமிழின் மாற்று சினிமா...

அந்த படம் தேசிய விருது வாங்கியதோடு சரி... அப்படி ஒரு படம் இருக்கின்றது என்பது கூட பலருக்கு தெரியாது... அதுதான் தமிழ் சினிமா...
ஒரு பேட்டியில் இயக்குனர் பாலா... சந்தியாராகம் சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழா நடந்து கொண்டு இருந்தது....அப்போது விழாமுடிந்து வெளியே வந்த சொக்கலிங்க பாகவதர் செல்ல ஆட்டோவுக்கு பைசா கூட இல்லாமல் அவர் ரோட்டில் நடந்து போனதாக ஒருபேட்டியில் பாலா சொல்லி படித்ததாக எனக்கு ஞாபகம்....

விருது வாங்கிய கிழக்கலைஞன் தெருவில் நடந்து போனான்.... சொக்கலிங்க பாகவதர் நடித்த வீடு ,சதிலீலாவதி போன்ற படங்களில் அவருடைய கேரக்டர்கள் சிலாகிக்கபட்டன... அனாலும் அதற்க்கான அங்கீகாரம் சரியாக இல்லை என்பதுதான் வருத்தம்
நான் கடலூரில் பேங்க் ஆப் பரோடாவில் வேலைசெய்த 55 வயது மதிக்கதக்க ஐயங்கார் பெரியவர் பேங்கில் கணக்காராக வேலை செய்தார்... அவரிடம் நான் தினக்கூலியாக நான் வேலை செய்தேன்... என்னவேலை தெரியுமா? லுனாவுக்கு டிரைவர் வேலை...

லுனா என்றால் என்ன? அது ஒரு இரு சக்கர வாகனம்...அந்த வண்டி இப்போது எங்கு தேடினாலும் என் கண்ணில் படுவதில்லை... வேலை இதுதான் காலையில் 9மணிக்கு அவர் வீட்டுக்கு போய் அவர் லுனா வண்டியை ஸ்டார்ட் செய்து அவரை உட்கார வைத்துகொண்டு நேராக3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அவர் பேங்கில் விட்டு விட்டு வண்டிய அங்கேயே விட்டு விட்டு நான் வேறு வேலை பார்க்க போய் விடுவேன்...மாலை 4,30க்கு திரும்ப பேங்க் போய் அவரை அதே போல் அவர் வீட்டில் அழைத்து போய் விட்டு விட வேண்டும்...

பேருந்து கட்டணத்தையும் 15 ரூபாயும் அப்போதே கையில் கொடுத்து விடுவார்கள்...மாசம் 450 கொடுக்கலாம்.. ஆனால் வாரத்தில்4 ஞாயிற்றுகிழமை வருகின்றதே... அந்த 4 நாளைக்கு 60 ரூபாய் வேஸ்ட்தானே...

1991ல் நான் பத்தாம் வகுப்பு முடித்த போது இந்த சம்பளம் அப்போது நல்ல சைடு இன்கம்... இது பார்ட் டைம்....மெயின் ஒர்க் திருமணத்துக்கு வீடியோ எடுப்பது....

என்ன பிரச்சனைன்னா அவருக்கு காதில் ஆப்பரேஷன் செய்து விட்டார்கள்...அவர் அதிர்ந்து எந்த வாகனத்திலலும் செல்லகூடாது என்பது மருத்துவ உத்தரவு... ஆட்டோவில் போனால் இரண்டு நாளில் அவர் பரலோகம் போய்விடும் சாத்தியம் இருப்பதால் அவர் ஆபிசுக்கு போக நான் அவரை வாகனத்தில் அழைத்து போகும் வேலை....

என்ன கொடுமைன்னா 30 கிலோமீட்டர் ஸ்பீடுக்கு மேல போக கூடாது... எவனாவது எதிரில் வந்தால் இவர் பின் பக்கம் பதற ஆரம்பித்து விடுவார்.. ரோட்டில் வாகனம் ஓட்டும் போது எந்த வண்டியையும் ஓவர் டேக் செய்ய அனுமதிக்கமாட்டார்...எல்லாம் தனக்கு தெரியும் என்பதான பேச்சு...ரொம்ப கஷ்டம் ஆனால் என்ன செய்வது...இளம்ரத்தம் வேகமாக செல்ல மனது பதைத்தாலும் அவர் அனுமதிக்கமாட்டர்...

சரி நமக்கு ஓக்கே....ஆனால் 72 வயது பெண்மணிக்கு கார் ஓட்டியாக ஒருவன் இருப்பது எவ்வளவு கஷ்ட்டம்.. அப்படி கஷ்டபடும் ஒரு 59வயது ஆன டிரைவரை பற்றியபடம்தான்Driving Miss Daisy
Driving Miss Daisy படத்தின் கதை இதுதான்.........

நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த 1947க்கு பிறகு அடுத்த வருடத்தில் கதை நடக்கின்றது... டெய்சி(Jessica Tandy) 72வயதான கணவனை இழந்த யூத பெண்மணி...வீட்டில் ஐடெல்லா என்ற ஆப்பிரிக்க அமெரிக்க வேலைகார பெண்மணியுடன் தனி வீட்டில் வாழ்ந்து வருகின்றார்... டெய்சிமகன் போளி... அவன் மனைவியுடன் தனி வீட்டில் வாசம்....


டெய்சி... தனி வீட்டில் வாழ்ந்தாலும்... தன் வேலையை தானே செய்து கொள்ளும் மிடுக்கும்... தான் என்ற அகங்காரம் கொஞ்சமாக வைத்துகொண்டு வாழும் பெண்மணி.. எல்லாம் தனக்கு தெரியும் என்று வெளிபடுத்தும் குணம்...தான் பணக்கார பெண்மணியாக இருந்தாலும் நண்பர்கள் தன்னை ரொம்ப சிம்பிளான பெண்மணியாக சொல்ல வேண்டும் என்று நினைக்கும் ரகம்...

டேய்சியிடம் ஹட்சன் என்ற கார் இருக்கின்றது... அதை எப்போதும் ஓட்ட தெரியாமல் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது வாடிக்கை எந்த இன்சூர்காரனும் இன்சூர் செய்ய பயப்பட..தான் எந்த தவறும் செய்யவில்லை என்று எப்போதும் சாதிக்கும் ரகம்... இதற்கு முடிவு கட்ட காருக்கு ஒரு டிரைவர் வைக்க டெய்சி மகன் போளி விரும்புகின்றான்...

ஹுக் (Morgan Freeman) என்ற வயதானவரை தன் அம்மாவுக்கு கார் ஓட்டியாக நியமிக்கின்றான்... முதலில் இது டெய்சிக்கு பிடிக்கவில்லை....வேலையை விட்டு ஹுக்கை விரட்டுவதில் குறியாக இருக்கின்றார்....30கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் கார் ஓட்டவே கூடாது....

ஆனால் ஹுக் மிக நிதானமாக அந்த வயதான பெண்மணியை அனுகுகின்றார்..முதலில் முரண்டு பிடிக்கும் அந்த பெண்மணி எப்படி ஹுக்கை கார் டிரைவராக ஏற்றுக்கொண்டார் என்பதையும் அவர்களுக்குள் எப்படி நட்பு வளர்கின்றது என்பதையும் நெகிழ்ச்சியோடு கண்களில் நீர்வர பாருங்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.........

முதலில் இது போலான வித்யாசமான கதை அமைப்பை கையில் எடுத்தக்கொண்டBruce Beresford என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

எவ்வளவு அழகான நெஞ்சை நெகிழவைக்கும் காட்சிகள்...

டெய்சியாக நடித்த Jessica Tandy வாழ்ந்து இருக்கின்றார்....

அளவாய் பேசும் பெண்மணி.... அதிகம் பேசும் கார் டிரைவர்... இதுதான் கான்செப்ட்....அதில் உணர்பூர்வமாய் பூந்து விளையாடி இருக்கின்றார்கள்....

ஒரு கருப்பின வயதான ஆணுக்கும் அவரை விட வயதில் 13வயது வித்தியசமான யூத பெண்மணிக்கு இடையில் ஏற்படும் நட்பு கவிதைதான் இந்த படம்....

இந்த படத்தின் ஒளிப்பதிவை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்... பனிகாலம் கோடைகாலம் இரண்டிலும் மிக நுட்பமாக பதியபட்டு இருக்கின்றது...

ஹுக்கும், டெய்சியும் போகும் அந்த அலபமா பயணத்தின் போது பிரேமில் லெப்ட் சைடில் கார் பயணிப்பது போலான அந்த காட்சி ரொம்பவும் கஷ்டமான விஷயம்தான்....

பதியபட சின்ன சின்ன விஷயங்கள் எவ்வளவோ இருக்கு என்பதை நமக்கு உணர்த்தும் படம்....

கருப்பின யூத இன என்ற பாகுபாடு எல்லாம் மனித உணர்வுகளுக்கு மத்தியில் அதுவும் ரத்தம் சுண்டி இருக்கும் நேரத்தில் எதுவும் பெரிதில்லை என்பதை இந்த படம் உணர்த்துகின்றது...

படத்தில் ஒரு டயலாக் வரும்
ஐடிலா என்ற வேலைக்கார பெண்மணி இறந்த போது டெய்சி சொல்லுவாள்...ஐடில்லா ரொம்ப அதிஷ்டம் செயதவள் என்று ஹுக்கிடம் சொல்லுவாள்.. அதற்கு காரணம் படத்தின் மைய இஐழயின் டயலாக்... அது... ஏன் என்று இருவரும் வியக்கி கொள்ளமாட்டார்கள்... காரணம் அது இருவரும் உணரும் விஷயம் அது.....

நெஞ்சை நெகிழ வைத்த காட்சிகள்....

ஞாபகமறதி வியாதி வந்தாலும் நீ என் நண்பன் என்று ஹுக்கின் கையை பிடிக்கும் டெய்சி...

வாழ்ந்த வீட்டில் யாரும் இல்லை என்று காண்பிக்க... பல கோணங்களில் காட்டபடும் டெய்சி வீடு ஒளிப்பதிவாளர்... Peter James பாராட்டுக்கும் ரசனைக்கும் உரியவர்...

டெய்சிக்கு இரண்டு வாய் ஹுக் உணவு ஊட்டும் காட்சியும்... அப்போது வரும் பின்னனி இசையும்.....

படம் பெற்ற விருதுகள் பட்டியல்...

At the 62nd Academy Awards for 1989, Driving Miss Daisy received a total of four awards from nine nominations. The four awards included: Best Picture, Best Actress (Jessica Tandy), Best Makeup, and Best Adapted Screenplay. The remaining five nominations included: Best Actor (Morgan Freeman), Best Supporting Actor (Dan Aykroyd), Best Art Direction, Best Costume Design, and Best Film Editing.

Driving Miss Daisy also achieved the following distinctions at the 62nd Academy Awards ceremony:

* it is the only film based on an off Broadway production ever to win an Academy Award for Best Picture
* it is the last Best Picture winner to date to receive a PG rating;
* it is the last film to date (and one of only three films ever) to win Best Picture without having received a Best Director nomination;[3]and
* Jessica Tandy, at age 80, became both the oldest winner and the oldest nominee ever in the history of the Best Actress category.

Other awards

Driving Miss Daisy also won three Golden Globe Awards (Best Picture, Best Actor Morgan Freeman, and Best Actress Jessica Tandy) in the Comedy/Musical genre. At the 1989 Writers Guild of America Awards, the film won in the Best Adapted Screenplay category. Rounding out its United States awards, the film won both Best Picture and Best Actor from the National Board of Review of Motion Pictures. In the United Kingdom, Driving Miss Daisy was nominated for four British Academy Film Awards, with Jessica Tandy winning in the Best Actress categor

படத்தின் காட்சி முன்ணோட்டம்...



படக்குழுவினர் விபரம்...

Directed by Bruce Beresford
Produced by Lili Fini Zanuck
Richard D. Zanuck
Written by Alfred Uhry
Starring Morgan Freeman
Jessica Tandy
Dan Aykroyd
Esther Rolle
Patti LuPone
Music by Hans Zimmer
Cinematography Peter James
Editing by Mark Warner
Distributed by Warner Brothers
Release date(s) December 15, 1989 (1989-12-15)[1]
Running time 99 minutes
Country United States
Language English
Budget $7.5 million
Gross revenue $145.8 million

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

12 comments:

  1. இந்தப் படத்தை போல The Pianist படமும் உருக்கமான ஒன்று. அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  2. //பேருந்து கட்டணத்தையும் 15 ரூபாயும் அப்போதே கையில் கொடுத்து விடுவார்கள்...மாசம் 450 கொடுக்கலாம்.. ஆனால் வாரத்தில்4 ஞாயிற்றுகிழமை வருகின்றதே... அந்த 4 நாளைக்கு 60 ரூபாய் வேஸ்ட்தானே...//


    அப்பவே சுயமா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டீங்க..பெரிய ஆளூதான் நீங்க..

    ReplyDelete
  3. இப்பவே டவுன்லோட் போட்டுட்டேன்,
    நன்றி ஜாக்கி, உங்கள் ஆதரவிற்கு.

    ReplyDelete
  4. ஜாக்கி ஒரு படத்தின் முன்னோட்டம் போல , நீங்கள் உங்கள் சொந்த வாழ்கையில் நடந்த சம்பங்களை சொல்வது அழகு :-).

    ReplyDelete
  5. மக்களே,
    நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

    இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:

    வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

    ReplyDelete
  6. பார்க்கத் தூண்டும் விமர்சனம் ஜாக்கி அண்ணா.

    சொக்கலிங்க பாகவதர் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த நிகழ்ச்சியைப் பற்றி பாலா தனது 'இவன்தான் பாலா' நூலில் குறிப்பிட்டிருப்பார்.

    ஆர்யாவின் ஆட்டோ படத்தில் ஒரு காமெடி டிராக் இந்தப் படத்தின் கதையை நினைவுபடுத்தும்.

    பகிர்வுக்கு நன்றி ஜாக்கி அண்ணா.

    ReplyDelete
  7. நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த 1948ல் கதை நடக்கின்றது
    //


    இது எப்போ நடந்தது

    ReplyDelete
  8. ஒவ்வொரு படத்துக்கும் நீங்க ஒரு உதாரணம்/அனுபவத்தோட ஆரம்பிக்கறதே தனிநடை... படம் அப்படிங்கிற அந்நியத்தன்மை இல்லாம, ஒரு அனுபவமா பார்க்கிற மாதிரி இருக்கு... இனிதான் இந்தப்படம் பார்க்கணும்..

    ReplyDelete
  9. இந்தப் படத்தை போல The Pianist படமும் உருக்கமான ஒன்று. அறிமுகத்திற்கு நன்றி//

    பின்னோக்கி அந்த படமும் பார்க்கவேண்டும்...

    நன்றி தமிழ் வெங்கட்...

    நன்றி...தமிழ் வெங்கட்.. பத்தாவது படிச்சி முடிச்சதும் என்க அப்பாகிட்ட சவரம் செய்ய காசு கேட்டு தலை சொறியகூடாதுன்னு நான் ரொம்ப உறுதியா இருந்தேன்...

    நன்றி ஜி

    நன்றி ராமசாமி கண்ணன்...அதனாலதான் நிறைய பேர் விரும்பி படிக்கிறாங்க..

    வாழ்த்துக்கள் வெடிகுண்டு வெங்கட்..

    நன்றி தம்பி சரவணகுமார்...

    நன்றி ராமேஷ்

    நன்றி மின்னுது மின்னல்.. தப்பா எழுதிட்டேன் மாத்திட்டேன்.. சுட்டிக்காட்டியமைக்கு என் நன்றிகள்..

    ReplyDelete
  10. நன்றி ஜெய் நிச்சயம் இந்த படம் கவரும்.. அரைகுறை ஆங்கிலம் தெரிந்த எனக்கே இப்படின்னா உனக்கு கண்டிப்பா பிடிக்கும்..

    ReplyDelete
  11. உங்கள் வாழ்க்கையோடு பினைத்தது அழகு ஜாக்கி :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner