ஆல்பம்...
1800கோடிக்கு இண்டியன் கரண்சி...ஒன்றரை டன் தங்கம்... நினைத்து பார்க்கவே பயமாக இருக்கின்றது... இவ்வளவு பணத்தை ஒரு தனிமனிதன் லஞ்சமாக வாங்கி குவித்து இருக்கின்றான் என்றால் நம் நாட்டில் எப்படி வளர்ச்சி பணிகள் ஒழுங்காக நடக்கும்.இவனிடம் இப்படி கோடிகளை அள்ளி கொடுத்து முறைகேடாக சீட் வாங்கிய கல்லூரிகள் மருத்துவக்லலூரியில் சேர வரும் மாணவனிடம் எத்தனை லட்சங்களை வாங்கி இருப்பார்கள்.. அப்படி என்றால் சாமானியன் மருத்துவ படிப்பே படிக்க முடியாதே... அப்படி சேரும் மாணவர்களின் பெற்றோர் இதே போல் ஏதாவது ஒரு இடத்தில் லஞ்சம் வாங்கினால் மட்டுமே இது போலான கல்லூரிகளில் சேர்க்க முடியும் அல்லவா? இந்த பிரச்சனையை எல்லாம் ஜனநாயக முறையில் கலைய முடியாது என்பது மட்டும் நன்றாக தெரிகின்றது.. ஊருக்கு ஒரு இந்தியன் தாத்தா வர வேண்டும் போல் இருக்கின்றது...
===============================
முதல்வரின் முன்னே ஒரு கலவரம் நடந்து இருக்கின்றது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலிஸ் கைகட்டி வாய் பொத்தி நின்று இருகின்றது...அப்ப தனிமனிதனின் நிலையை யோசித்து பார்க்கவே பயமாக இருக்கின்றது...மீடியாக்களில் வேலை செய்யும் கேமராமேன்கள் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க கெட்டுக்கொள்ள படுகின்றார்கள்...
================================
70லட்சம் கோடிகள் இந்தியர்களின் கருப்பு பணம் சுவீஸ் வங்கியில் இருக்கின்றதாம் யார் அந்த பணத்தை போட்டு வைத்து இருக்கின்றார்கள்..என்ற லிஸ்ட்டை கேட்டால் அந்த லி்ஸ்ட்டை கொடுக்க அந்த நாடு மறுத்து வருகின்றது.. அதனால் சுவிஸ் நாட்டு பொருட்களை புறக்கனிக்க சொல்லி இரண்டு நாட்களுக்கு முன் தலைநகரில் போராட்டம் நடைபெற்றது....ங்கோத்தா எவன்டா சொன்னது இந்தியா எழை நாடுன்னு....
====================================
மிக்சர்.....
சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பாரிஸ் கார்னர் போகும் சாலையில் 9 ஸ்பிட் பிரேக்குகள் மேல் போட்டு வைத்து இருக்கின்றார்கள்... அங்கு இருக்கும் ஒரு கடையில் கேட்ட போது... யாரோ ஒரு வக்கில் மீது பேருந்து மோதி அவர் இறந்து விட்டாராம் அதனால் இத்தனை ஸ்பீட் பிரேக் என்று சொன்னார்கள்... அது உண்மையா பொய்யா என்று தெரியாது... அதனை எடுக்க வேண்டும்...அவ்வளவுதான்... பொதுமக்கள் அதிகம் பேர் நடக்கும் இடம் என்று சொன்னால்... திநகரில் ரங்கநாதன் தெரு அருகில் ரோடு இருக்கவே கூடாது ஸ்பீட் பீரேக்கர் மட்டுமே இருக்க வேண்டும்....
====================================
என் வீட்டு அருகே கிரிக்கெட் விளையாடும் இரண்டு பொடிசுகள் பேசிக்கொண்டனர்
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற முக்கியகாரணம் விளையாட்டுக்கு முன் ஏஆர் ரகுமான் ஜெய் ஹோ பாடியதால் வெற்றி கிடைத்தது என்று இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டு சென்றார்கள்...
============================
சென்னையில் கோடைமழை...
சிறுநீர் கழிக்கும் போது கடைசி பிளிச்சில் ஒரு வேகமும் தொய்வும் இருக்குமே அது போல்சடாலென ஆரம்பித்து பாடால்என முடிந்து போனது இன்று காலை என் வீட்டு அருகில் பெய்து வைத்த கோடை மழை... ரொம்ப நாட்களுக்கு பிறக மண் வாசனை நாசிகளின் ஊடே உள்ளே சந்தோஷத்தை ஏற்படுத்தியது...
===============================
ஹர்பஜன் சிங்... முகேஷ் அப்பானி மனைவியை மார்போடு அனைத்து உற்சாகத்தில் தூக்க அதை வைத்து பல காமெடியான மெயில்கள் வந்து என் மெயில்பாக்சை நிரப்புகின்றன...ஆனா அன்னைக்கு நைட் முகேஷ் ஒரு லார்ஜ் எக்ஸ்ட்ரா சாப்பிட்டாலும் சாப்பிட்டு இருக்கலாம்... இது நம்ம கெஸ்...
==========================
கல்பாக்கம் கிரேட்லேக் கல்லூரி பட்டமளிப்பு விழா சென்னை டிரேட் சென்டரில் நடந்தது.. உறவுக்கார பையன் பத்து லட்சம் செலவு செய்து ஒரு வருடத்தில் எம்பிஏ முடித்தான்... அந்த நிகழ்ச்சிக்கு போய் இருந்தேன்... எல்லோர் கண்களில் பிரிவின் வலி சிரிப்பின் பின்னே இருந்தது...பட்டமளித்து விட்டு குருப்போட்டோவுக்கு பிறகு தலை தோப்பியை எல்லோரும் ஒரு சேர தூக்கி மேல் நோக்கி எரிந்தார்கள்.. அது என் கண்ணுக்கு கட்டு கட்டாய் பணம் பறப்பது போல் இருந்தது......
========================
ஒரு காமெடி...
இப்போது எனது தேசிய கீதம் பையா படத்தின் அடடா மழைடா சாங்தான்...
தமன்னா துள்ளி குதித்து ஆடும் அழகு அற்புதம்... அந்த பாட்டை பார்த்தாலே எனக்கு உற்சாகம் வந்துடும்..
ஒரு இரண்டு நாட்களுக்கு முன் குளித்து உடைமாற்றி வெளியே கிளம்பும் போது.. மனைவி தூங்கி கொண்டு இருந்தாள்..சட்டென ஒரு உற்சாகம் வந்து சூழ்ந்து கொள்ள....அடடா மழைடா சாங்கில் தமன்னா குதித்து குதித்து ஆடியது போல் நாம் ஆடினால் எப்படி இருக்கும் என்று நினைத்து சட்டென அதற்க்கு செயல்வடிவம் கொடுத்து... 85கிலோவுடன் நான் குதித்து குதித்து ஆட, பூமி அதிர்வில் தூங்கியவள் எழுந்து கொண்டாள்...
சேகர்பா..உன்னை தயவு செய்து கெஞ்சிகேட்டுக்குறேன்...புது வீட்டு டைல்ச உடைச்சுடாதே என்றாள்...அவள் சொல்வதின் நியாயம் புரிந்து ஏதும் பேசாமல் வெளியே போய்விட்டேன்....
=================================
காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு...
ஹாலிவுட்பாலான்னு ஒரு பதிவர் சினிமா விமர்சனத்தை ஹாலிவுட்ல இருந்து எழுதுவார்...டீப் இன் துரோட்னு ஒரு துத்துவமான படத்தை பத்தி எழுதிட்டு காணாம போயிட்டார்... அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிச நிச்சயம் உண்டு...
=======================
நேற்று இரவே சுறா படத்தின் ரசிகர் காட்சி இலங்கையில் வெளியாக படத்தைபற்றி காலையிலேயே ஒரு இலங்கை பதிவர் படத்தின் ரிசல்ட் சரியில்லை என்று சொல்லிவிட... காசி தியேட்டரில் இன்று 3மணிகாட்சிக்கு (இன்னும் இரண்டுமணிநேரத்தில்) டிக்கெட் புக்செய்து இருக்கின்றோம்...டிக்கெட் ஏதும் இல்லாத காரணத்தால் திரை அருகில் உட்காரும் வாய்ப்புதான் உள்ளது.. இருந்தாலும் படம் பார்த்து விட்டு நைட் விமர்சனம் போஸ்ட் போடறேன்....
இந்த வார சலனபடம்....
பாட்டியின் சமயோஜித புத்தி...
====================================
பார்த்தது ரசித்தது....
கே கே நகரில் ஒரு பிரபல பள்ளி அருகே ஒரு நண்பரை சந்திக்க காத்து இருந்தேன்... இப்போதுதான் அந்த பெண் பருவ வயதில் காலடி எடுத்து வைப்பது முகத்தின் விஷயத்திலும், இன்ன பிற வளர்ச்சியிலும் காட்டிக்கொடுத்தது... தம்பியோடு வெளியே வந்து இருக்க வேண்டும்.. அந்த பையனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து விட்டு யாருக்கோ செல்போனில் தகவல் சொல்ல அந்த பையன் வந்தான்.. கொஞ்ச நேரம் பேசினான்... திரும்பவும் தப்பிக்கு இன்னோரு ஐஸ்கிரிம் ஆர்டர் செய்தாள்...திரும்பவும் பேச்சு சுவராஸ்யமாக தொடர்ந்து... தம்பிபையன் கடையில் சப்புகொட்டியபடி நாக்கை சுழற்றி கொண்டு இருந்தான்...
இந்த வாரம் படித்ததில் பிடித்தது....
கவிதை...
பறையனுக்கு தனி சுடுகாடு
படையாட்சிக்கு தனி சுடுகாடு
தலைமுழுக ஒரே ஆறு....
கவிஞர் அறிவுமதி....
=======================
விஜயகாந்த் கேப்டன் டிவி தொடங்கி இருப்பதால் டிவி உலகில் ஏதாவது மாற்றம் வருமா?
இன்னும் சில மாதங்களில் விருத்தகிரி படத்துக்கு டாப்டென்னில் முதலிடம் கிடைக்கும்...
மு பழனி சென்னை...
நானெ கேள்வி நானே பதில் ஆனந்த விகடன்...
==============
நான்வெஜ்....18+
ஜோக் .1
சம்சாரம் அது மின்சாரம்.... அப்ப சின்ன வீடு... யோசிங்க... கரண்ட் போன புழுக்கத்தி்ல் கூட உங்களுக்கு மூளை வேலை செய்யலையா? சின்ன வீட்டை ஜெனரேட்டர்னு சொல்லலாம்....
==============================
ஜோக்..2
ஒருத்தன் கடவுளிடம் வேண்டினான் எனக்கு வேல்ட் பெஸ்ட் டிரின்க் மற்றும் பெண் வேண்டும் என்று சொல்ல.. கடவுள்.. ஒரு மினரல்வாட்டர் பாட்டிலையும் அன்னை தெரசா போட்டோவையும் கொடுத்தார்...
==============================
ஜோக்..3
ஒரு ஆங்கில பாடத்தின் கிராமர் டீச்சர் கோபத்தின் உச்சத்தில் சர்தார் மகனை ஓங்கி கன்னத்தில் ஒன்று வைத்தால்... காரகாட்டகார கவுண்டமணி போல் அதை எப்படிடா என்கிட்ட கேட்கலாம்? என்று திருப்பி ஒரு அறை... திரும்பவும் ஒரு அறை... இதை கவனித்த பக்கத்து கிளாஸ் டீச்சர் ஏன் இப்படி போட்டு அவனை அடிக்கிறிங்க? அப்படி என்ன சந்தேகம் உங்ககிட்ட கேட்டு தொலைச்சான் என்று கேட்க?
டீச்சர் இவன் என்ன டவுட் என்கிட்ட கேட்டான் தெரியுமா?
பிரான்னு சொல்லறாங்க... அது சிங்குளர்... அது ரெண்டுத்துக்கு யூஸ் ஆகுது...பேண்டிஸ் அது புலூரல் ஆனா அது ஒன்னுத்துக்கு மட்டும் யூஸ் ஆகுது... நீங்க தப்பா சொல்லிதர்றிங்க டீச்சர்னு சொல்லறான்...
இப்ப ஒரு அறைவிடும் சத்தம் கேட்டுது....
அடிச்சது பஞ்சாயத்து பண்ண வந்த டீச்சர்...
நன்றி.. தீபக்.. மும்பாய்...
அன்புடன்
ஜாக்கிசேகர்...
ஒரு நாளைக்கு சராசரியா என் தளத்தை 1500பேர் வாசிக்கிறிங்க... அதுல ஒரு 100 பேர் ஓட்டு போட நேரம் ஒதுக்கினா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க...
//ங்கோத்தா எவன்டா சொன்னது இந்தியா எழை நாடுன்னு....//
ReplyDeleteநண்பரே...
சுவீஸ் வங்கியில் எவன் பணம் போட்டு இருக்கிறானோ.... அவன் சொன்ன வார்த்தை தான் இந்தியா ஏழை நாடு என.....
ஓட்டு குத்தியாச்சுப்பா
ReplyDelete\\\ பிரான்னு சொல்லறாங்க... அது சிங்குளர்... அது ரெண்டுத்துக்கு யூஸ் ஆகுது...பேண்டிஸ் அது புலூரல் ஆனா அது ஒன்னுத்துக்கு மட்டும் யூஸ் ஆகுது... நீங்க தப்பா சொல்லிதர்றிங்க டீச்சர்னு சொல்லறான்...
ReplyDeleteஇப்ப ஒரு அறைவிடும் சத்தம் கேட்டுது....///
yoosikka vendiya visayam. ha ha haa...joke super ayyaa!!! ootum pottaasu... appaadaa.
maharaja
டீச்சர் ஜோக் டாப் தல ..
ReplyDelete\\சேகர்பா..உன்னை தயவு செய்து கெஞ்சிகேட்டுக்குறேன்...புது வீட்டு டைல்ச உடைச்சுடாதே என்றாள்...அவள் சொல்வதின் நியாயம் புரிந்து ஏதும் பேசாமல் வெளியே போய்விட்டேன்...//
ReplyDeleteநல்லவேளை பக்கத்துக்கு வீட்டுல இருந்து எல்லாம் ஆளுங்க வரலையே ..
ஒரு பதிவில் எவ்ளோ மேட்டர் எழுதுறீங்க!! அசந்துட்டேன். இன்று முதல் உங்கள் ப்ளாகை தொடர்கிறேன்
ReplyDeleteஎன்னோட ஒட்டு போட்டாச்சு .. ஆனா இன்னும் பிரியாணி வரல .
ReplyDeleteஇம்பூட்டு பணமா வச்சிருக்காங்க!!!
ReplyDelete//ங்கோத்தா எவன்டா சொன்னது இந்தியா எழை நாடுன்னு...//
ReplyDeleteநான்கூட சொல்லுவேனுங்க... ஏன்னா இங்கண மனுஷங்கள்லாம் ஏழைதானுங்க...
is Gratelake institude in Kalpakam or velacheri, I though it is velachery taramani road (bala Balasubramnian's college).
ReplyDeleteI am sure those graduates will get good job offers.
அண்ணாச்சி அடுத்த தடவை நீங்கள் நடனமாடும்போது வீடியோ எடுத்து பதிவில் போடுங்கள் கலக்கலாக இருக்கும்,
ReplyDeleteஎவன் சொன்னது இந்தியா ஏழை நாடு என? வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள் ஒரு டாலர் அனுப்பினாலே இந்தியா அபிவிருத்தி அடைந்துவிடும் ஆனாலும் செய்யமாட்டார்கள். காரணம் இன்றைக்க்கும்ம் இந்தியர்களீடம் ஹிந்திக்காரன் மளையாளி தெலுங்கன் என பாகுபாடு இருக்கின்ரது. ஒன்றுபட்ட பாரதம் கனவுதான்.
ஜாக்கி எனக்கும் அந்த பையா பாடல் மிக மிக புடிக்கும் அருமையான நடனமைப்பும் காட்சி அமைப்பும் படத்தின வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ஒளிப்பதிவு... பல படங்கள் ஒசிறந்த ஒளிப்பதிவாளர்களால் வெற்றிபடமாக மாற்றப்படிருக்கிறது எனக்கு சந்தோஸ் சிவன் படங்கள் என்றால் பார்க்க ரொம்ப விருப்பம் ராவணா வை பார்க்க மிக எதிரபார்ப்புடன் இருக்கிறேன்
ReplyDelete//ஹாலிவுட்பாலான்னு ஒரு பதிவர் சினிமா விமர்சனத்தை ஹாலிவுட்ல இருந்து எழுதுவார்...அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிச நிச்சயம் உண்டு...
ReplyDeleteAyya parisal engaeyya irukeer?
nanum pottuten ennoda otta
ReplyDeleteஒரு பதிவில் எவ்ளோ மேட்டர் எழுதுறீங்க!! அசந்துட்டேன். இன்று முதல் உங்கள் ப்ளாகை தொடர்கிறேன்
ReplyDeleteall are ok
ReplyDeletejoke 3 is too too good. keep rocking
ReplyDeleteசினிமா பாட்டு தேசிய கீதமா??? ஜாக்கி உன்னிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. பாட்டைப் பத்தி பெருமையா சொல்லணும்னா ஃபேவரைட், சூப்பர் சாங்குன்னு சொல்லிட்டுப் போ
ReplyDeleteதேசிய கீதம்னெல்லாம் சொல்லி ஜன கன மன பாட்டை அவமதிக்காதே..
கேதன் தேசாய் : என்ன சொல்றதுன்னு தெரியல, நான் போன முறை போனில் சொன்ன Good Money/ Bad Money கான்செப்ட்தான் நியாபகத்துக்கு வருது.
கொலைக்கு தூக்குதண்டனையை ரத்து செய்து விட்டு, லஞ்சம் வாங்கியது நிரூபணமானால் தூக்குதண்டனைன்னு சட்டம் கொண்டு வரணும், கொலை - உணர்ச்சி வசப்பட்டு செய்ய முடியும்,
லஞ்சம் வாங்குவது - மனசாட்சியை மொத்தமா அடகு வச்சிட்டு செய்யுற கேவலமான விசயம்.
கோடைமழை : வேற உதாரணமே கெடைக்கலயா உனக்கு????
ஐஸ்க்ரீம் மேட்டர் : வயசான காலத்தில நீ ஏன் அதையெல்லாம் பாக்கறே??
தெரசா உலகின் சிறந்த பெண்மணி ?? - எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.. அவங்க எடுத்து வளர்த்த அனாதைக் குழந்தைகளில் கிருஸ்துவ மதத்துக்கு மாற்றப் படாத ஒரு
குழந்தையைக் காட்டு, நான் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்...
ஜோக் 3 - ஜூப்பர்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Anna you are rocking...
ReplyDelete//70லட்சம் கோடிகள் இந்தியர்களின் கருப்பு பணம் சுவீஸ் வங்கியில் இருக்கின்றதாம் //
ReplyDeleteசேகர்,
என்னுடன் வேலைப் பார்க்கும் ஒரு வெள்ளைக்காரர் மிகப்பெரும் பணக்காரர். அவரால் 15000 டாலர் கொடுத்து சுவிஸ் வாட்சை வாங்க முடியும் அந்த அளவு செலவு செய்து வேறு சில சின்ன சின்ன பொருட்களை வாங்கியுள்ளார். உ.ம். இந்தியாவில் தயாரித்து ஸ்பெயினில் விற்பனை யாகும் 10 அங்குல பிள்ளியார் சிலை சுமார் $5000.
இவர் என்னிடம் இந்தியாவின் டைடான் வாட்சை வாங்கித் தருமாறுக் கேட்டுக் கொண்டார். அவரிடன் ”உன்னிடம் இருக்கும் பணத்திற்கு நீயே சுவிட்ஸர்லாண்டிற்கு போய் வாட்ச் வாங்கலமே” என்றேன். அதற்கு அவர் சுவிட்ஸர்லாண்ட் ஒரு பாவபட்ட நாடு பல ஏழைகளின் வயித்தை அடித்து ஏழைமக்களின் பணம் அங்கே ஏழைநாட்டு அரசியல்வாதிகளால் கொட்டப்படுகிறது. அதற்கு அந்த நாடு உடந்தை. அந்த கொள்ளைப் பணத்தில் கிடைக்கும் வட்டியில் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்வா. அந்த பாவபட்ட நாட்டின் திசைக் கூட நோக்கமாட்டேன் என்றார்.
நாம் எல்லாரும் சுவிஸ் நாட்டின் புராடெக்டகளை நம்மால் முடிந்த அளவிற்கு தவிர்ப்போம்.
அறிவுமதி கவிதை
ReplyDeleteஜொக் 2
இரண்டு ஓட்டு
///பறையனுக்கு தனி சுடுகாடு
ReplyDeleteபடையாட்சிக்கு தனி சுடுகாடு
தலைமுழுக ஒரே ஆறு....//
எவ்வளவு அழகான வரிகள்.....
இத்தனை எளிமையான வார்த்தைகளால்கூட இவ்வளவு அருமையாக எழுதமுடியுமா என ஆச்சர்யம்
விருதுகள் வழங்க வழியில்லை, ஆனாலும் விருதுகள் என் ஓட்டுகளாக
ReplyDeleteDear Jack
ReplyDeleteLovely Presentation.
Thanks
S.Sakul Hameed
நாங்க காம்ப்லான் பாய் வளர்கிறோம் :)
ReplyDeleteநண்பரே...
ReplyDeleteசுவீஸ் வங்கியில் எவன் பணம் போட்டு இருக்கிறானோ.... அவன் சொன்ன வார்த்தை தான் இந்தியா ஏழை நாடு என.....---//உண்மை சங்கவி...
ஓட்டு குத்தியாச்சுப்பா//
ReplyDeleteநன்றிகிங்..
yoosikka vendiya visayam. ha ha haa...joke super ayyaa!!! ootum pottaasu... appaadaa.
ReplyDeletemaharaja//
மிக்க நன்றி மகராஜா... தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும்..
நல்லவேளை பக்கத்துக்கு வீட்டுல இருந்து எல்லாம் ஆளுங்க வரலையே ..//
ReplyDeleteரோமியோ கிரவுண்ட் பிளோர் எனபதால் வரலை.. இதுவே பஸ்ட் பிளோரா இருந்து இருந்தா.. கண்டிப்பா வந்து இருப்பாங்க...
நன்றி கே ஆர்பி செந்தில்...தம்பி இங்க டீயே வரலை..
ReplyDeleteநன்றி சைவ கொத்து பரோட்டா
நன்றி பாலாசி... எல்லாரும் எழைதான் சொல்ல முடியாது... நிறைய லஞ்ச பேயை ஒழிச்சாலே பல விஷயங்களில் முன்னேற்றம் நடக்கும்..
s Gratelake institude in Kalpakam or velacheri, I though it is velachery taramani road (bala Balasubramnian's college).
ReplyDeleteI am sure those graduates will get good job offers.//
சைதாபேட்டையில் ஒரு காலேஜ் இருப்பதாக சொன்னார்கள்...
நீங்கள் சொல்வது போல் எல்லோருக்கும் வேலை கிடைத்து விட்டது...
ஒரு பதிவில் எவ்ளோ மேட்டர் எழுதுறீங்க!! அசந்துட்டேன். இன்று முதல் உங்கள் ப்ளாகை தொடர்கிறேன்//
ReplyDeleteநன்றி மோகன் குமார்.. உங்கள் பாராட்டுக்கும் தொடர்புக்கும்...
அண்ணாச்சி அடுத்த தடவை நீங்கள் நடனமாடும்போது வீடியோ எடுத்து பதிவில் போடுங்கள் கலக்கலாக இருக்கும்,//
ReplyDeleteஅடப்பாவிங்களா... இப்படி ஒரு ஆசை எல்லாம் உங்க அடிமனசல இருக்கா... அந்த வீடீயோ வந்த உலகம் அழிச்சிடும்..//
இத்தனை வருசம் இவ்வளவு பிரிவினைகளை வச்சிகிட்டே ஒன்னாய் இருப்பதே பெரிய வி-ஷயம்தான்..
ஜாக்கி எனக்கும் அந்த பையா பாடல் மிக மிக புடிக்கும் அருமையான நடனமைப்பும் காட்சி அமைப்பும் படத்தின வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ஒளிப்பதிவு... பல படங்கள் ஒசிறந்த ஒளிப்பதிவாளர்களால் வெற்றிபடமாக மாற்றப்படிருக்கிறது எனக்கு சந்தோஸ் சிவன் படங்கள் என்றால் பார்க்க ரொம்ப விருப்பம் ராவணா வை பார்க்க மிக எதிரபார்ப்புடன் இருக்கிறேன்//
ReplyDeleteபாலா உங்களை போல நானும் அந்த படத்துக்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன்...
/ஹாலிவுட்பாலான்னு ஒரு பதிவர் சினிமா விமர்சனத்தை ஹாலிவுட்ல இருந்து எழுதுவார்...அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிச நிச்சயம் உண்டு...
ReplyDeleteAyya parisal engaeyya irukeer?//
எங்க போனார்னு தெரியலை பிரதீப்..
நன்றி ரகு ஓட்டுக்கு...
ReplyDeleteநன்றி குமார்...
நன்றி சேகர்
நன்றி ராமசாமி கண்ணன்..
சினிமா பாட்டு தேசிய கீதமா??? ஜாக்கி உன்னிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. பாட்டைப் பத்தி பெருமையா சொல்லணும்னா ஃபேவரைட், சூப்பர் சாங்குன்னு சொல்லிட்டுப் போ
ReplyDeleteதேசிய கீதம்னெல்லாம் சொல்லி ஜன கன மன பாட்டை அவமதிக்காதே..///
ஸ்ரீ அது ஒரு உயர்வு நவிர்ச்சி அணி...நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனான்னு பாலச்சந்தர் படம் பார்த்தலே பரவசம் படத்துல ஏஆர் மியூசிக்ல வரும்...
உங்க ஊர்ல கொடியை ஜட்டில கூட போடுவாங்க... ஆனாலும்சட்ட திட்டத்துக்கு பயப்படுவான்...
இங்க தேசிய கொடி எரிச்சா.. அது மேல உழுந்து பொரள்வோம் (ரோஜா) அப்படியே அந்த காட்சியை லாஜிக் இல்லாம கண்ணுல ஜலத்தோட பார்ப்போம்...
அது போல நீ கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டே...அவ்வளவுதான்..
கேதன் தேசாய் : என்ன சொல்றதுன்னு தெரியல, நான் போன முறை போனில் சொன்ன Good Money/ Bad Money கான்செப்ட்தான் நியாபகத்துக்கு வருது.
ReplyDeleteகொலைக்கு தூக்குதண்டனையை ரத்து செய்து விட்டு, லஞ்சம் வாங்கியது நிரூபணமானால் தூக்குதண்டனைன்னு சட்டம் கொண்டு வரணும், கொலை - உணர்ச்சி வசப்பட்டு செய்ய முடியும்,
லஞ்சம் வாங்குவது - மனசாட்சியை மொத்தமா அடகு வச்சிட்டு செய்யுற கேவலமான விசயம்.//
பணத்தை வாங்கி முடிவில்லாம குவிச்சு இருக்கான்... இது போல எத்தனை துறைகளில் இரக்கும்ட இது போல வேலை செய்யும் மனசாட்சி அற்றவர்கள்,.., எத்தனை கோடி குவித்து இருப்பார்க்ள்
கோடைமழை : வேற உதாரணமே கெடைக்கலயா உனக்கு????//
ReplyDeleteஏன்ஆதவும் ஒரு முக்கியமான பார்ட்டுப்பா...
ஐஸ்க்ரீம் மேட்டர் : வயசான காலத்தில நீ ஏன் அதையெல்லாம் பாக்கறே??
ReplyDeleteஉனக்கு வயசாயிட்டுச்சின்னு சொல்லு...உன் லிஸ்ட்ல என்னைய ஏன்டா சேர்க்கற..
தெரசா உலகின் சிறந்த பெண்மணி ?? - எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.. அவங்க எடுத்து வளர்த்த அனாதைக் குழந்தைகளில் கிருஸ்துவ மதத்துக்கு மாற்றப் படாத ஒரு
ReplyDeleteகுழந்தையைக் காட்டு, நான் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்...///
இப்படி கூட நடந்துச்சா.. இது எனக்கு புதுவிஷயம் ஸ்ரீ
நன்றி கோலிபையன்
ReplyDeleteநன்றி அசோக்..
அந்த நாடு உடந்தை. அந்த கொள்ளைப் பணத்தில் கிடைக்கும் வட்டியில் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்வா. அந்த பாவபட்ட நாட்டின் திசைக் கூட நோக்கமாட்டேன் என்றார்.
ReplyDeleteநாம் எல்லாரும் சுவிஸ் நாட்டின் புராடெக்டகளை நம்மால் முடிந்த அளவிற்கு தவிர்ப்போம்.//
அந்த வெள்ளைக்காரர் எவ்வளவு மானஸ்தனாய் இருக்கார்... அவர்களிடம் இருக்கும் இந்த ஒற்றுமை உணர்வை கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டும்...
நன்றி கால்கரி சிவா..(இப்படியும் ஒரு பேரா??)
///பறையனுக்கு தனி சுடுகாடு
ReplyDeleteபடையாட்சிக்கு தனி சுடுகாடு
தலைமுழுக ஒரே ஆறு....//
எவ்வளவு அழகான வரிகள்.....
இத்தனை எளிமையான வார்த்தைகளால்கூட இவ்வளவு அருமையாக எழுதமுடியுமா என ஆச்சர்யம்//
ரொம்ப அழகாக எழுதி இருந்தார்..
நன்றி யாழ்நிலாதந்தை
நன்றி வெறும் பய..
ReplyDeleteநன்றி சாகுல்..
நன்றி டிஜி
/
ReplyDelete\\சேகர்பா..உன்னை தயவு செய்து கெஞ்சிகேட்டுக்குறேன்...புது வீட்டு டைல்ச உடைச்சுடாதே என்றாள்...அவள் சொல்வதின் நியாயம் புரிந்து ஏதும் பேசாமல் வெளியே போய்விட்டேன்...//
நல்லவேளை பக்கத்துக்கு வீட்டுல இருந்து எல்லாம் ஆளுங்க வரலையே ..
/
haa haa
ROTFL