திருமணத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் எல்லோருக்கும் உண்டு...அதுவும் புது பெண் அவளை பார்த்து பிடித்து பெரியோர்களால் நிச்சயத்து...தினமும் போனில் பேசி... ஆறுமாதத்துக்கு பிறகு கல்யாணம் என்பது ஒரு திரில்தான்... இப்போதாவது செல்போன் இருக்கின்றது மணிக்கணக்காக பேசி தன்னை பற்றி புரியவைக்கலாம்... ஆனால் ஒரு 15 வருடங்களுக்கு முன் இருந்த கல்யாண மாப்பிள்ளைகளை நினைத்து பாருங்கள்...
சிலருக்கு காதல் என்பது வாய்க்காது .. அல்லது அவர்களுக்கு கொஞ்சம் தைரியம் குறைச்சலாக இருக்கலாம்... சிலருக்கு கூச்சசுபாவமாக கூட இ ருக்கலாம்.. அதனால் பெண் அருகாமை என்பது அவர்களுக்கு பெரிய விஷயம்தான்.... அப்படி பட்டவர்கள்... எந்த பெண் பேசினாலும் கிறக்கம் கொள்வர்....
எனது நண்பன் ஒருவன் இருக்கின்றான்... அவன் கிருஸ்த்துவ புரோகிராம்களுக்கு கேமரமேனாக பணியாற்றினான்.... ஊரில் உள்ள பெருமாள் கோவில் குடமுழுக்குக்கு 50 ஆயிரம் நன்கொடை கொடுத்தான்...தினமும் பிள்ளையார் கோவிலுக்கு போய் தோப்புக்கரணம் போடுவது தவறுவதுவில்லை... அப்படித்தான் இருந்தான்... எதோ ஒரு அவுட்டோர் ஷுட்டிங் அங்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு கிருஸ்த்துவ பெண் வந்து அவனிடம் ரொம்ப எதெச்சையாக பேச அவ்வளவுதான்.... இதுவரை எந்த பெண்ணிடம் பேசாமல் இருந்தவனுக்கு அந்த பெண் பெசியது அவனுக்கு பிடித்து இருந்தது...இதுவரை அவனுக்கும் பெண் பார்த்து எந்த பெண்ணும் செட் ஆகவில்லை... நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் நடந்து கொண்டு இருந்தது...
அந்த பெண்ணுக்கு ரொம்பவும் உண்மையாக இருக்க ஆசைப்பட்டான்... பிள்ளையார் கோவில் நிகழ்ச்சி ஒன்றுக்கு கேமராமேனாக போக அங்கு பால் தீர்த்தம் வழங்க பட்டது... இதுவரை அமுதுபோல் அதை குடித்த அவன்.... அதை வாங்கவேயில்லை... கர்தருக்கு விசுவாசமாக இருக்க உறுதி பூண்டான்... அந்த பெண்ணொடு நிறைய பேசினான், நிறைய சுற்றினான்.., தேவி தீயேட்டர் இருட்டில் முதன் முறையாக அவன் வாழ்க்கையில்அந்த பெண்ணின் மார்புதடவி முத்தமிட்டு இருக்கின்றான்....
அதுதான் அவன் 30 வருட வாழ்வில் முதல் பெண் ஸ்பரிசம்.... தியேட்டர் போய் விட்டு மறுநபள் அந்த பெண்ணிடம் எவனாவது வம்பு செய்து இருந்தால், அவர்கள் சங்கு அறுத்து பரலோகத்து பார்சல் பண்ணி இருப்பான்.. அந்த அளவுக்கு அந்த பெண் மீது காதலும் காமமும் கலந்த வெறி அது. ஒரு கட்டத்தில் இவன் காதலை சொல்ல.. உங்களோடு நான் நட்பாய்தான் இதுவரை பழகினேன் என்று அந்த பெண் குண்டை தூக்கி போட்டு விட்டாள்...
காதலுக்காக மதம் எல்லாம் மாறினான்... அந்த பெண் துரோகி என்பது தெரிந்தும் இன்னும் அந்த பெண்ணை நினைத்துக்கொண்டு இருக்கின்றான்... எது பற்றி பேசினாலும் தாங்கி கொள்வான்... ஆனால் அந்த பெண்ணை பற்றி ஒரு வார்த்தை பேசினாலும்.... அடித்த பீருக்கு நாம் தெண்டம் அழவேண்டி இருக்கும்.... இப்படி நிறைய பேர் இருக்கின்றார்கள்.... அப்படி ஒரு பயலின் கதைதான் பர்த்டே கேர்ள் படத்தின் கதை....
BIRTHDAY GIRL படத்தின் கதை இதுதான்...
John Buckingham (Ben Chaplin) பிரம்ச்சாரி வார்ழ்க்கை தனியாக வாழும் ஒரு பேங்க கிளார்க்.... ரொம்ப அமைதியாணவன்...திருமணத்துக்கு பெண் தேடிக்கொண்டு இருப்பவன்..நெட்டில் எல்லாம் அலசி ஆராய்ந்து, Nadia (Nicole Kidman)என்கிற பெண்ணை தேர்ந்து எடுத்தான் அதுவும் ரஷ்யாவில் இருந்து.... அவளை பிக்அப் செய்ய விமானநிலையம் செல்கின்றான்.... அவளை பிக்அப்பும் செய்கின்றான்... அவளுக்கு ஆங்கிலம் தெரியாது... இவனுக்கு ருஷ்ய மொழி தெரியாது... இருவரும்புரிந்து கொள்ளுதல் ரொம்பவும் குறைவாக இருக்கின்றது அதற்க்கு மொழி ரொம்ப பிரச்சனையாக இருக்கின்றது.... அந்த பெண் செப்பு சிலை போல் இருக்கின்றாள்.... ஓரே வீடு... அந்த பெண் செக்சில் ரொம்பவும் போல்டாக இருக்க,,, நேரம் காலம் பார்க்காமல் தூங்கி எழுந்ததும், குளித்து விட்டு வந்ததும், ஆபிசுக்கு போகும் முன் என நேரம் காலம் பார்க்காமல் உறவு கொள்கின்றாகள்...
(இதை படிச்சதும் உடனே வீடியோ லைப்ரேரிக்கு போய் பர்த்டே கேர்ள் டிவிடி கொடுங்க என்று கேட்காதீர்கள்... அப்படி ஒன்னும் சீன் இல்லை.. தமிழ் படம் போல் இலைமறை, .....மறையாக காட்டுகின்றார்கள்..) ஜானுக்கு எல்லாம் கனவு போல் இருக்கின்றது.. வாழ்க்கை ரக்கை கட்டி பறக்கின்றது.... அவள் ஒரு நாள் தனக்கு பர்த்டே என்கின்றாள்... அப்போது அவள் கசின் என்று இரண்டு பேர் வந்து வீட்டில் தங்குகின்றார்கள்..... ஒரு கட்டத்தில் நாடியாவை கத்தி முனையில் மிரட்டி இவள் உனக்கு உயிரோடு வேண்டும் என்றால் உன் பேங்கை கொள்ளை அடித்து பணத்தை என்னிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல அந்த மங்கினியிம் நாடியா மேல் உள்ள கதலால் பேங்கை கொள்ளை அடிக்க..........
அதுக்கப்புறம் இப்ப போய் டிவிடி கடையில சீன் எதிர்பார்ப்பு இல்லாமல் படத்தை வாங்கி பாருங்க...
படத்தில் சில சுவாரஸ்யங்கள்...
ஒரு கவிதையான சஸ்பெண்ஸ் திரில்லர் இந்த படம்...
இந்த பத்துல ரொம்பவும் இளமையான பொண்ணா நிக்கோலை பார்க்கலாம்....
இந்த படத்தோட பெரிய பிளஸ் சினிமோட்டடடோகிராபிதான்... கண்ணுல ஒத்திக்கலாம் பிரேம் பை பிரேம்Oliver Stapleton உழைப்பை பார்க்கலாம்....
அவன் செக்ஸ்புத்தகம் படிப்பதையும், செக்ஸ் வீடியோ பார்ப்தை எல்லாம் ஆராய்ந்து விட்டு அது போல அவனுடன் அவள் செக்சில் ஈடுபட... அவன் உலகை மறக்க ஒரு காரணமாகவும், அந்த பெண்ணுக்காக எதையும் செய்ய ஒரு சாட்சியாக அந்த சீனை வைத்து இருப்பார்கள்..
இந்த படம் டீரயில்டு படத்தை போல இருந்தாலும் இது வேறுதளம்...
இந்த படத்தை தூக்கி நிறுத்துவது பென்செப்லின் நடிப்பும்.. நிக்கோலின் கவர்ச்சியான உடம்பும்தான்...
எவ்வளவு தப்பு செய்தாலும் அந்த பெண்ணிடம் ஒரு சாப்ட் கார்னர் வரும் இடம் ஒரு அழகான கவிதை... திரும்ப காதல் பூக்கும் இடங்கள் அழகானவை...
என்னை பொறுத்தவரை இந்த படம் ரொம்ப நீட்டான பிலிம்.....
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்...
Directed by Jez Butterworth
Produced by Steve Butterworth
Diana Phillips
Written by Tom Butterworth
Jez Butterworth
Starring Nicole Kidman
Ben Chaplin
Music by Stephen Warbeck
Cinematography Oliver Stapleton
Distributed by Miramax Films (U.S.)
FilmFour (UK)
Release date(s) September 6, 2001 (Venice Film Festival)
February 1, 2002 (U.S.)
June 28, 2002 (UK)
Running time 93 min.
Country United States
United Kingdom
Language English
அன்புடன்
ஜாக்கிசேகர்
(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....
நல்ல படம் தல, நன்றி.
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteஎனது கணினியில் VOTE போடும் OPTION தெரியவில்லை இது எனது பக்க தவறா
அல்லது உங்கள் பக்கத்துக்கு பிழையா என்று புரியவில்லை அதனால் VOTE போடவில்லை மன்னிக்கவும்.அப்புறம் நேரமிருந்தால் மௌனராகம் பார்த்தே தீர வேண்டிய படம் வரிசையில் விமர்சனம் எழுதவும்.
எனது பார்வையில் அத்திரைப்படம் ஒரு பாடமாக வைக்க தகுதி பெற்றதென்பது என் அபிப்ராயம்
/////இதுவரை எந்த பெண்ணிடம் பேசாமல் இருந்தவனுக்கு அந்த பெண் பெசியது அவனுக்கு பிடித்து இருந்தது...//////////
ReplyDeleteஅண்ணே அண்ணே நானும் அப்படித்தானே நல்ல பாய்யனா இருக்கேன் எனக்கு ஏதாவது !
வழக்கம்போல் விமர்சன நடை
ReplyDeleteநன்றாக உள்ளது.
ஜாக்கி அண்ணே,
ReplyDeleteஅருமையான பதிவு. என்னுடய சைட் பாரில் உங்கள் பதிவுகள் மட்டும் அப்டேட் ஆக மறுக்கின்றன. ஏனோ?
//அந்த பெண்ணிடம் ஒரு சாப்ட் கார்னர் வரும் இடம் ஒரு அழகான கவிதை... //
ReplyDeleteVery nice review sekar..
One small suggestion.. If you enable feed for your blog, the people who follow you can display ur blog link in their blog. It will be helpful for us to know ur latest posts too.. :-)
சில வருடங்களுக்கு முன் பார்த்தப் படம். எனக்கு பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் பார்த்த போது இந்தப் படம் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அது Derailed படத்தின் ரீமேக் என பிறகு தெரிந்தது. இரண்டிலும் கரு ஒன்றுதானே.
ReplyDeleteஇந்தப் படத்தில் நிகோல் கிட்மானின் காதலாராக வருபவரைப் (வின்சென்ட் காஸ்செல்) ஐப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். வேறோன்றுமில்லை அவர் மோனிகா பெல்லூச்சியின் கணவர்.
விமர்சனம் ரொம்ப அருமை அண்ணா.
ReplyDeleteநல்ல விமர்சனம் ஜாக்கி.
ReplyDeleteஆஹா....
ReplyDeleteநான் பார்த்த முதல் ஆங்கில திரைப்படம் இதுதான் அண்ணா ...
பேங்கில் திருடிய பின் காரில் அவன் மனைவி வேறு ஒருவனுடன் ரொமான்ஸ் செய்வதை பார்க்கும் போது ஹீரோவின் எக்ஸ்பிரசன்....
அவள் நாட்டிற்கு திரும்ப அனுப்பசெல்லும்போது காதல் கொள்ளும் இடம்...
எல்லாமே ஒரு கவிதை போலிருக்கும்...
அருமையான விமர்சனம் அண்ணா......... :)