பதிவர் சந்திப்பு மற்றும் கேணி இலக்கிய சந்திப்பு...(10,11/04/2010)

பதிவர் சந்திப்பு சனிக்கிழமை மாலை மெரினாவில் நடந்தது.... கண்களுக்கு கலர் புல்லாக இருக்கும் என்பதால் எனக்கு முதல் நாளே உற்சாகம் வந்து என்னிடம் ஒட்டிக்கொண்டது... காரணம் அந்த இடம் நான் வாழ்ந்த இடம்.. அந்த இடங்களின் மாற்றமும் பழைய நினைவுகளும் அவ்வப்பபோது எனக்கு வந்து போகும் என்பதால் மெரினா காந்தி சிலை சந்திப்பு எனக்கு பிடித்தமான ஒன்று....

என் மனைவியின் அத்தை இருக்கும் மயிலாபூரில் என் மனைவிடிய விட்டு விட்டு அப்படியே பதிவர் சந்திப்புக்கு வருவதாக பிளான்...வரும் வழியில் ஒரு கடையில் வெயிலுக்கு இதமாக ஒரு ஜுஸ் சாப்பிட்டோம்.... சாப்பிட்டு விட்டு வண்டியை எடுக்க கொஞ்சம் நேரம் வளர்த்தினேன்... வெகுதூரத்தில் ஒரு பெண் டி சர்ட் ஜீன்சில் நடந்து வந்து கொண்டு இருக்க, அதை பார்த்து விட்ட என் மனைவி கேட்டாள்...

என் இப்ப வண்டி நிக்குது???

நிறைய வண்டி பாஸ் பண்ணிகிட்டு இருக்கு... நான் எப்படி இப்ப வண்டியயை வளைப்பேன் என்று அப்பாவியாய் கேட்க?
டேய் நீ யாரு?
எப்படி பட்டவன்?
நீ எப்பலாம் டைப் டைப்பா முழிய மாத்துவ?

எல்லாம் எனக்கு தெரியும்... நீதான் பீச்சுக்கு போறயே, அங்க போய் பார்த்துக்கோ... இதைவிட அதிகம் வரும் என்று என்னை நக்கல் விட...

இன்னும் உற்சாகமாய் வண்டியயை திருகினேன்... போகும் வழியில் நண்பர் வீட்டுக்கு போனோம்.... நண்பரின் குழந்தைகளுக்கு வெயில் காரணமாக அக்கி உட்ம்பு எல்லாம் வந்து இருக்க.... அழகு குழந்தைகள் எரிச்சலில் அவஸ்தை பட்டு கொண்டு இருந்தார்கள்...(நானும் பதிவர் காவேரி கணேஷூம்)

நண்பர் வீட்டிலேயே நிறைய நேரம் எடுத்துக்கொண்டோம்.. அதனால் பதிவர் சந்திப்புக்கு சரியான நேரத்துக்கு போக முடியவில்லை...நண்பர் சிவப்பிரியன் சொன்னது போல தமிழ் பட கிளைமாக்ஸ் போலி்ஸ் போல் போய் சேர்ந்தேன்...
பதிவர் சந்திப்பு பேச்சுக்கள் பொதுவாக விக்கிபீடியா, போன்ற பொதுவான விவாதங்கள் நடைபெற்று இருந்தது தெரிந்தது.. தப்பிதவறி எவரும் சங்கத்தை பற்றி எதுவும் பேசவில்லை என்பதை லேட்டாக போனாலும் என்னால் உணர முடிந்தது....(புருனோ, அதிஷா, தமிழ் குரல்)

சங்கத்தை பற்றி அன்று பேசி இருந்தால் இன்னும் சவுண்ட் அதிகமாக இருந்து இருக்கும் என்பது என் எண்ணம்... பக்கத்தில் இருக்கும் காந்தி கையில் வைத்து இருக்கும் தாங்கு கட்டையால் எல்லோரையும் தாக்கி இருப்பார்.... சோ சுவீட்... யாரும் அது பற்றி பேசவில்லை....வழக்கமான உற்சாகத்துடன் பேச்சு இருந்தது... டோண்டு வழக்கம் போல் பேர் கேட்டு குறித்து கொண்டு இருந்தார்.... "தமிழ் காமிக்ஸ் உலகம்"விஸ்வா வந்து நீங்க ஜாக்கிதானே என்று அறிமுகபடுத்திக்கொண்டார்....
(சாம்ராஜ்ய பிரியன்... "தமிழ் காமிக்ஸ் உலகம்" விஸ்வா....)

அதிஷாவிடம் பேசிக்கொண்டே டீக்கடை பக்கம் நோக்கி நகர்ந்து போக.... நல்ல கழுக்கு மொழுக்கு என்று கொஞ்சம் சதை பிடிப்புடன் ஒரு பெண் எங்கள் முன்னால் நடந்து போக.... அண்ணே என்று அதிஷா ஆரம்பிக்க....
அதுக்கெல்லாம் ஆசை படகூடாது ...
அது சரிவராது என்று சொல்ல....
சமீபத்திய அனுபவஸ்தன் அதிஷா அதை அமோதித்தான்....
எல்லோரும் டீக்கடைக்கு போக டீ சொல்லி விட்டு சூடாக வயிற்றையும் நுரையீரலையும் நிரப்பிக்கொண்டார்கள்...

எனது கேமராவை எடுத்து எல்லா போட்டோவையும் எடுத்தது அதிஷா....

வழக்கம் போல் குழு குழுவாக நின்று பேசிக்கொண்டார்கள்... பல நாட்களுக்கு பிறகு பாலபாரதியை சந்தித்தேன்...
(கேபிள் தண்டோரா.....)

கீ போர்டில் ஒட்டி டைப் அடிக்கும் தமிழ் ஸ்டிக்கர் வேண்டும் என்றதும் பதிவர் நட்டு மா சிவக்குமாரிடம் இருப்பதாக சொல்ல... நம்பர் காவேரி கணேஷிடம் கேட்டேன்.. அவர் யாருக்கோ போன் செய்தார் சிறுது நேரத்தில் மா சிவக்குமார் நம்பர் என்னிடம் கொடுத்தார்... நன்றி காவேரி கணேஷ் மற்றும் நட்டு....


தண்டோரா வெயிலுக்கு உடம்பை கூல் செய்ய அருகில் உள்ள அரசு கடைக்கு அழைக்க... என் மனைவி ஒரு சில விஷயத்துக்கு மட்டும்தான் சிரிப்பா... இது போலான விஷயத்துக்கு சீறிடுவா... நைட் சோறு எனக்கு கிடைக்கனும் அதனால நீங்க போயிட்டு வாங்க என்றேன்.... எல்லோரும் கிளம்பி போனாலும்... நான் விஸ்வா, லக்கி, நட்டு போல்ட், எல்லோரும் அங்காடி தெருவை பற்றி பேசினோம்... தெலுங்கு , விஜயகாந் படங்கள் என முதன் முதலில் சிலாகிப்பாய் பேசியதை இப்போதுதான் கேட்க முடிந்தது.... அதற்கான காரணம் ரொம்ப சிம்பிள்.. எலலா காட்சிகளையும் பார்த்து விட்டு நக்கல் வீட்டு என் ஜாய் செய்து விட்டு வரலாம் என்று சொன்னதுதான்(புருனோ, பாலபாரதி,தமிழ்குரல்,வக்கில் சந்தரராஜன்,லக்கி, நட்டு,)

நண்பர் ஸ்ரீ எப்போதும் பக்கத்தில் எதாவது ஒரு பஸ் ஸ்டாப்பில் டிராப் செய்து விட்டு செல்வது வழக்கம்.... இந்த கொஞ்சம் வேலை இருந்த காரணத்தால் அவர் பஸ் பிடித்தார்...

இந்த முறை எல்லோருக்கும் முன் நான் கிளம்பிவிட்டேன்...


ஞானி வீட்டு கேணி கூட்டம்......

தமிழக முதல்வருக்கு எவ்வளவோ வேலை பளு இருந்தாலும்... தினமும் ஞானி கனவில் மட்டும் தவறாது வந்து பயமுறுத்தி விட்டு போவார் போல.... அந்த வாரத்திலேயே ஓ பக்கத்தில் கலைஞரை லெப்ட் ரைட் வாங்கும் ஞானி வீட்டு கேணி கூட்டத்தை பற்றி நிறைய கேள்வி பட்டாலும் இதுவரை போய் பார்தத்தில்லை.. எல்லாம் வேலை பளுதான் காரணம்... நேற்ற அதற்கான நேரம் அமைந்தது.....

மிக நல்ல கூட்டம்.... ரொம்ப அற்புதமாய் இருந்தது..... இவ்வளவு கூட்டத்தை நான் எதிர்பார்ககவில்லை... அத்தனை பேருக்கும் உட்கார நாற்காலி போட்டு அமர வைத்து இருந்தனர்... சிறப்பு விருந்தினர் தோழர் தமிழ் செல்வன் சின்ன கார்ட்லெஸ் மைக்கில் உறையாற்றி கொண்டு இருந்தார்...

தோழர் தமிழ் செல்வனுக்கு அறிவொளி இயக்கம் மற்றும் தொழிற்சங்கம் என்று பல்வேறு தளங்களில் மக்களோட பழகிய காரணத்தால் மிக அழகாக பேச வருகின்றது... கூடுமான வரை இதயத்தில் இருந்து பேசினார்....நன்னறாக இருந்தது... இது போலான கூட்டங்களுக்கு போவது இதுதான் முதல் முறை என்றாலும் இந்த கூட்டம் ஏற்படுத்திய தாக்கம் மிக அழகாகனது என்பேன்... பல புத்தகங்கள் படித்து இருந்தாலும் மண்டையில் ஏறாத பல விஷயங்கள், இங்கே டிபேட் மூலம் பேசும் போது நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது....

நிறைய பேர் கேட்ட கேள்விகள் ரொம்பவும் சிறுபிள்ளைதனமாக இருந்தது.... ரொம்ப படித்தால் இதுதான் பிரச்சனை போல...

இந்த கூட்டத்தின் சிறப்பே மரங்கள் அடர்ந்த அந்த கிணற்றடிதான் என்பேன்... 5 தென்னை மரம், ஒரு பாதம் மரம், இரண்டு மா மரம் அந்த இடத்தை ரொம்பவும் ரம்யமாக இருக்கின்றன... ஒரு குயிலுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ரொம்ப நேரம் கத்திக்கொண்டே இருந்தது.... பறவைகளின் சத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டு இருந்தது....

பாதி பதிவர்களை அங்கு பார்க்க முடிந்தது...நிறைய சினிமா உதவி இயக்குனர்கள்...மெத்த படித்தவர்கள்... பெண்கள், தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை செய்யும் நுனி நாக்கு ஆங்கில யுவன்கள் யுவதிகள் என்று கூட்டம் கலை கட்டி இருந்தது.... பதிவர் பால பாரதி தன் மனைவியுடன் வந்து இருந்தார்... தலைவர் உண்மை தமிழன் முன் வரிசையில் உட்கார்ந்து இருந்தார்....இதுவரை முகம் பரிட்சயம் இல்லாத இரண்டு பேர் ஒருவர் பெயர் பாஸ்கர் மற்றவர் பெயர் மறந்து விட்டேன்... எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பதாய் சொல்ல ரொம்ப சந்தோஷமாக இருந்தது....ஒரு ஐடி பையன் எல்லோரும் படித்து இருப்பதாக சொல்லி அதனை மையமாக வைத்து கேள்வி கேட்க? இந்தியாவில் படிப்பறிவில்லாத பலர் இருப்பதாய் புள்ளி விவரத்தோடு சொல்ல... அந்த பையனை நினைத்தால் எனக்கு சிரிப்பாக இருந்தது....

இங்கே உட்கார்ந்து கொண்டு கேள்வி கேட்பதும், மடக்குவதும் ரொம்ப எளிது என்று தமிழ்செல்வன் உண்மையை போட்டு உடைத்தார்....
ஏனோ தோழர் தமிழ் செல்வனை எனக்கு பிடித்து விட்டது... கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த ஞானிக்கும், பாஸ்கர் சக்திக்கும் என் நன்றிகள்...

கூட்டத்தின் முடிவில் வாசலில் எனக்கும் பதிவர் புருனோவுக்கும் சரியான வாக்குவாதம் அது எனது பதிவை பற்றியது... பக்கத்தில் லேடிஸ் ஹாஸ்டல் இருப்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொன்னார்கள்...பதிவர் மயில் ராவணன் தன்னை போட்டோ எடுக்க சொல்லி இருந்தார் மறந்து விட்டேன்.... மயில் அடுத்த முறை நிச்சயம்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

18 comments:

 1. ஒரு குயிலுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ரொம்ப நேரம் கத்திக்கொண்டே இருந்தது....
  //////
  Agmark Jackisir ...

  ReplyDelete
 2. ஜாக்கி சார்,

  சூப்பர்.

  கேணி சந்திப்பிற்கு செல்லாவிடினும் சென்ற மாதிரியான அனுபவத்தினை ஏற்படுத்தி விட்டீர்கள்.

  ReplyDelete
 3. படங்களும்,பகிர்வும் அருமை ஜாக்கி.

  ReplyDelete
 4. //டேய் நீ யாரு?
  எப்படி பட்டவன்?
  நீ எப்பலாம் டைப் டைப்பா முழிய மாத்துவ?//

  அங்கேயும் இதே கதை தானா? enjoy jackie :-)

  ReplyDelete
 5. பதிவர் சந்திப்புக்கு வர முடியலை; உங்கள் மூலம் கொஞ்சம் updates கிடைத்தது நன்றி

  ReplyDelete
 6. ஜாக்கி,

  தண்டோரா ட்ராப் செய்து விட்டார். அனைவரிடமும் சொல்லாமல் சென்று விட்டேன். மன்னிக்கவும். அப்படியே எனது இடுகையையும் பார்வையிடவும்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 7. தவறவிட்ட இரண்டு சந்திப்புகள் பற்றிய சிறு அறிமுகத்திற்கு நன்றிண்ணே

  ReplyDelete
 8. Today I noticed you "என்னை பற்றி..."very nice.

  Now a days your cover-up stories are very much informative...means with less words you are covering all the things happened in that area. I like your seamless word flow.

  Thanks many for entertaining NON STOP!

  ReplyDelete
 9. ஒரு போட்டோ பிடிக்காம என்ன பிரதர் பேச்சு? காம்ப்ளான் சாப்பிட மறக்காதீங்க.
  ஃபீட் பர்னர் எங்கே? நன்றி.

  ReplyDelete
 10. நான் முதன் முதலில் வந்த பதிவர் சந்திப்பே சங்கம் அமைப்பது பற்றிய சந்திப்பில்தான்,
  அப்போதே தெரிந்துவிட்டது, நாமெல்லாம் தனிதனி குழுவாக மட்டும்தான் செயல்பட முடியும் என்று,
  அதனால் இந்த சந்திப்புக்கு வரவில்லை, அடுத்தமுறை பார்க்கலாம்,

  ReplyDelete
 11. தங்களுக்கு கூர்ந்து கவனித்து, எதையும் மறக்காமல் எழுதும் ஆற்றல் உள்ளது.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. [[[கூட்டத்தின் முடிவில் வாசலில் எனக்கும் பதிவர் புருனோவுக்கும் சரியான வாக்குவாதம் அது எனது பதிவை பற்றியது]]]

  அடிதடியெல்லாம் நடக்கலியா..?

  ReplyDelete
 13. நன்றி ராம் ஜி

  நன்றி உலவு

  நன்றி விஸ்வா

  நன்றி துபாய் ராஜா

  நன்றி கேகவிஆர் எல்லா வீட்டிலும் அப்படித்தான்...

  நன்றி சைவ கொத்துபரோட்டா

  நன்றி பாஸ்கி

  நன்றி நர்சிம்

  நன்றி மோகன் குமார்


  நன்றி ஸ்ரீ

  நன்றி உழவன்

  நன்றி மயில்ராவணன் அடுத்த மறை நிச்சயம்..


  நன்றி செந்தில்


  நன்றி ராஜ்குமார் எங்க ரொம்ப நாள் ஆளையே கானோம்...பாராட்டுக்கு நன்றி

  நன்றி உத.... தலைவர் உண்மைதமிழனுக்கு அடிதடி நடந்தாலும் சங்கத்து தலைவர் என்ற முறையில் நீங்கதான் எங்களுக்கு பஞ்சாயத்து பண்ணிவிட வரனும்

  நன்றி காவேரி கணேஷ் தங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு

  ReplyDelete
 14. ஒரு கம்யூனிஸ்டு என்பவர் சில நேரங்களில் மாத்திரம் தான் வேறு கட்சி வேறு என்றெல்லாம் பேச முடியாது. தானே இன்னமும் மனதில் ஏற்றுக்கொள்ளாத ஒரு விசயத்தை பொதுஜனங்களுக்கு ஒரு நியாயமானவன் எப்படி சொல்ல முடியும். எனவே அதற்கு மழுப்பலாக பதிலளித்த தமிழ்செல்வனைத்தான் நியாயமானவர்கள் விமர்சித்து இருக்க வேண்டும். அது டீக்கடை வைத்திருப்பவராக இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். சொல்லத் தவறினால் அது அதிமுக, திமுக போன்ற முதலாளிகளின் கட்சிகளுக்கு வேண்டுமானால் ஓகே. தொழிலாளி வர்க்க விடுதலைக்காக சமூக மாற்றத்திற்காக போராடுவதாக சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சியில் அது சாத்தியமில்லை. அப்படி ஒரு வேளை அவர்களுக்கு கியூபா சீனா பற்றி தெரியாமல் இருந்தாலும் அவர்களுக்கு அரசியலை சொல்லித் தராத குற்றத்திற்காக கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். கூடுதலாக மார்க்சிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன் என்ற முறையில் கேள்வி கேட்டது சரிதான். பதில் சொல்லாத்துதான் அவரது தவறு.

  அப்புறம் கம்யூனிஸ்டு கட்சிகளில் மாத்திரம்தான் தலைவர் முதல் தொண்டர் வரை ஒரே மாதிரியான அரசியலை பேபசுவார்கள். அவர்களுக்குள் மாத்திரம்தான் இது ஒரு வேலைப்பிரிவினை என்பது உண்மையில் இருக்கும் என்பதால் இதுபோன்ற கருத்துக்களின் சிறுபிள்ளைத்தனம் நினைத்து சிரிப்புதான் வருகிறது.

  எழுத்தாளனாக இருப்பதால் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நியாயத்தை யாரும் வலியுறுத்தவில்லை. ஆனால் நித்தியானந்தா பிரச்சினையில் அவர் தெரிவித்த கருத்துக்களும் உ.ரா வரதராசன் தற்கோலையில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கும் அவர்தானே பொறுப்பேற்க வேண்டும். இரண்டையும் ஒப்பிட்டு கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது பதில் இரட்டைத்தனைமையுடன் இருந்த்து.
  க‌ம்யூனிஸ்டுக‌ள் மாத்திர‌ம்தான் எல்லாப் பிர‌ச்சினைக‌ளும் த‌னிந‌ப‌ர் சார்ந்த‌ ஒன்ற‌ல்ல‌ அத‌ற்கு ஒரு ச‌மூக‌ அடிப்ப‌டை இருக்கும் என்ற‌ ரீதியில் சிந்திப்ப‌வ‌ர்க‌ள். ஆனால் நித்தியான‌ந்தா என்ற‌ ச‌மூக‌ம் ஏமாந்த‌ க‌தைக்கு ஒரு இளைஞ‌னின் பாலிய‌ல் தேவைக‌ளை முக்கிய‌மான‌தாக‌ த‌ந்தையின் ஸ்தான‌த்தில் இருந்து பார்ப்ப‌வ‌ர்க‌ளை நூறு ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ரே லெனின் தெளிவாக‌ குறிப்பிட்டுள்ளார். ஒரு பொருளின் வ‌ள‌ர்ச்சி ம‌ற்றும் வீழ்ச்சியை வைத்து அப்பொருளின் த‌ன்மையை வ‌ரைய‌றுத்து ம‌திப்பிடுகையில் அதில் இன்ன‌தும் க‌ல‌ந்திருக்கிற‌தே என்ப‌வ‌ன் புக‌ழ்பெற்ற‌ எத்த‌னாக‌வோ வாய்ப்புர‌ட்ட‌னாக‌வோ அல்ல‌து ஏமாளியாக‌வோதான் இருக்க‌ முடியும் என்ற‌ அந்த‌ மேற்கோள் த‌மிழ்செல்வ‌ன் நித்தியான‌த்தாவின் பாலிய‌ல் தேவைக்காக‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டு ம‌க்க‌ள் ஏமாந்த‌ ச‌மூக‌ விளைவை பின்னுக்கு த‌ள்ளிய‌ விச‌ய‌த்தில் பொருந்தாதா..

  ReplyDelete
 15. நந்திகிராம் பற்றியும் சிங்கூர் பற்றியும் உண்மைக்கு மாறாக அரசிலை மாத்திரமே அங்கு பேசினார். அதனை யாரும் விமர்சிக்கவில்லை. மக்கள் தாக்கப்பட்டது உண்மையில்லை என கருணாநிதி சொன்னால் கண்டிப்பதும் அதனை புத்த்தேவ் சொன்னால் ஆமோதிப்பதும் அங்கு வந்த பார்வையாளர்களால் ஏன் கேள்வியாக்கப்படவில்லை.

  லீனா கூட்ட‌த்திற்கு போக‌ மாட்டோம் என்ப‌தை இதுவ‌ரை அவ‌ர‌து இணைய‌த்தில் கூட அறிவிக்காம‌ல் அன்றைக்க‌ கேள்வி கேட்ட‌பிற‌கு ஒப்புக் கொள்ளும் ம‌னித‌ரின் நேர்மையை உங்க‌ளால் ஏற்றுக் கொள்ள‌ முடிகிற‌தா… ச‌ரி லீனாவுக்கு ஆத‌ர‌வாக‌ அ. மார்க்சு கூட்டியுள்ள‌ கூட்ட‌ம் க‌லாச்சார‌ போலீசுக்கு எதிரான‌ கூட்ட‌ம் என்றால், அவ‌ர‌து அக்கூற்றுக்கு மாறாக‌ அவ‌ர்க‌ள‌து க‌ட்சி தோழ‌ர் க‌வின்ம‌ல‌ர் கீற்று த‌ள‌த்தில் தான் க‌ல‌ந்து கொள்வ‌தாக‌த்தான் இதுவ‌ரை வாதாடி வ‌ருகிறார். இதுதான் க‌ட்சிக் க‌ட்டுப்பாடா. க‌லாச்சார‌ போலிசு வேலையை எதிர்ப்ப‌து என்ப‌தை சிபிஎம் பேசுவ‌தே வேடிக்கை. பால் ச‌க்காரியாவை தாக்கிய‌ அவ‌ர‌து தோழ‌ர்க‌ள் அச்ச‌ம்ப‌வ‌த்திற்கு முந்தைய‌ இரு வ‌ய‌தான‌ ஆண் பெண் இருவ‌ரையும் விபச்சார‌ வ‌ழ‌க்கில் கைது
  செய்ய‌ வைத்த‌ அவ‌ர்க‌ள‌து தோழ‌ர்க‌ள். த‌ஸ்லிமா பிர‌ச்ச‌னையில் ந‌ட‌ந்து கொண்ட‌ வித‌ம் என‌ எவ்வ‌ள‌வு க‌லாச்சார‌ போலிசு வேலை செய்து இருக்கிறார்க‌ள். இதெல்லாம் அங்கு வ‌ந்த‌ யாருக்கும் தெரியாதா. இதையெல்லாம் யாரும் கேட்டால் மிர‌ட்டுவ‌த‌ற்காக‌ சில‌ரும் வ‌ந்திருந்தார்க‌ள் என்ற‌ விச‌ய‌மும் உங்க‌ளுக்கு தெரியுமா..

  லீனா பிர‌ச்சினையில் க‌லாச்சார‌ போலிசுதான் பிடிக்காதா லா அண்டு ஆர்ட‌ர் போலிசுன்னா ஓகே வா என்ற‌ கேள்வி யில் உள்ள‌ கிண்ட‌ல் ஞானிக்குத்தான் புரிய‌வில்லை. உங்க‌ளுக்குமா புரிய‌வில்லை. சிங்கூரும், ந‌ந்திகிராமும் ஞாப‌க‌ம் வ‌ந்தால் நான் பொறுப்ப‌ல்ல்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner