வித்யாசமான ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்...
தமிழ் திரைப்படதுறை பல ஒளிப்பாதிவாளர்களை வழங்கி இருந்தாலும் விஜய் ஆம்ஸ்ட்ராங் சற்றே வித்தியாசமானவர் என்பேன்... தமிழ் பதிவுலகத்துக்கு அவரை இருகரம் கூப்பி வரவேற்க்கின்றேன்...
ஒருசில தமிழ்திரைப்பட கேமராமேன்கள் இருக்கின்றார்கள்.. அவர்களிடம் வாய்ப்பு கேட்டு சென்று நின்றீர்கள் என்றால் முதல் கேள்வி..
நீங்க டிஎப்டி யா?
இல்லைசார்...
ஆக்சுவலா நான் டிஎப்டி முடிச்சவங்கள மட்டும்தான் நான் எடுத்துக்கொள்வது... ஏனென்றால் அவர்களுக்கு பேசிக் தெரியும்....
பட் உங்களுக்கு இதெல்லாம் தெரியவே ஒரு படம் வேலை செய்யனும்.. என்று சொல்லுவார்கள்...அவர்களுக்கு வேலை சுளுவாக இருக்க வேண்டும் என்பதற்க்காக அவர்கள்... டிஎப்டி முடித்த ஆட்களை எடு்த்துக்கொள்வார்கள்... என்னை போல் டிஎப்டி முடிக்காதவர்கள்.. ஒளிப்பதிவின் மேல் காதல் உள்ளவர்கள்... திரும்பி வர வேண்டியதுதான்...
நண்பர் ஆம்ஸ்ட்ராங்....ஒளிபதிவுதுறையில் சேர்ந்து அசிஸ்டென்டாக வேலை செய்வதற்க்கு ஒன்றரை ஆண்டுகள் வாய்பு தேடி அலைந்தாராம்...ஆம்ஸ்ட்ராங் டிஎப்டி படிக்கவில்லை...ஒளிப்பதிவின் மீது உள்ள காதலால் ஒன்றரை வருட போராட்டம்...
பொதுவாய் தமிழ் திரைப்படதுறை ஒளிப்பதிவாளர்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல மரியாதை இருக்கின்றது....
இன்றும் வட இந்தியாவில் தமி்ழ்ஒளிப்பதிவாளர்களை யாராலும் அசைத்துக்கொள்ள முடியவில்லை... இப்போது தயாராகி கொண்டு இருக்கும் ஒரு பிரமாண்டமான படம் கூட ஒரு உச்ச வட இந்திய நட்சத்திரம் நடிப்பதாக இருந்து...நமது தமிழ் இயக்குனர் இயக்குவதாக இருந்தது... அந்த உச்ச நட்சத்திரம் ஒளிப்பதிவுக்கு நமதுதமிழ்நாட்டு ஒளிப்பதிவாளரை சிபாரிசு செய்ய,இதற்க்கு முன் அவரோடு வேலை செய்த இயக்குனர் சில கருத்து வேறுபாடுகளால் அவரோடு வேலை செய்ய முடியாது என்று சொல்ல அந்த படமே டிராப் ஆனது... என்பது காற்று வழி செய்தி...தென்னக ஒளிப்பதிவாளருக்கு பாலிவுட் தரும் மரியாதை இது...
சரி இதற்க்கு முன் தமிழ் திரையுலகம் பல ஒளிப்பதிவாளர்களை கடந்து வந்து இருக்கின்றது...நான் ஒளிப்பதிவாளர் டிஎஸ் வினாயகம் அவர்களிடம் வேலை செய்து இருக்கின்றேன்.. மனிதன்,உயர்ந்த உள்ளம் போன்ற பல வெற்றி படங்களின் கேமராமேன்... கமலையும் ரஜினியும் வைத்து பல படங்கள் இயக்கிய எஸ்பி முத்துராமனின் ஆஸ்தான கேமராமேன்...
நான் அவர் வாங்கி வைத்து இருந்த பீட்டா கேமராவில் கேமரா அசிஸ்டென்ட்டாக அவரிடம் இரண்டு வருடங்கள் வேலை செய்து இருக்கின்றேன்... அவராகட்டும் அல்லது கேமரா கவிஞர் என்று செல்லமாக அழைக்கும் பாலுமகேந்திரா போன்ற ஒளிபதிவாளர்களிடம் இருந்து ஒரு சிலரை தவிர யாரும் படம் பண்ணவில்லை...... அதே போல் தங்கள் அனுபவங்களை ஓரளவுக்கு மட்டுமே பகிர்ந்து இருக்கின்றார்கள்....ஆனால் பிசிஸ்ரீராம் வருகைக்கு பிறகு பல கேமராமேன்கள் அவரின் பள்ளியில் இருந்து வெளியே வந்தார்கள்... அது ஆலமரம் கிளை போல் இந்தியா எங்கும் வேர்விட்டு நிற்க்கின்றது....
ஒளிப்பதிவாளர் ஆம்ஸ்ட்ராங்... ஆட்டோகிராப்பில் இருந்து... வேலை செய்து பராதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் கண்ணன் அவர்களிடம் தொழில் கற்றவர்.... இவர் டிஎப்டி படிக்கவில்லை... சமீபத்தில் வெளியான புகைபடம் மற்றும் மாத்தியோசி படங்களின் கேமராமேன் ஆவார்....
நேற்று எதெச்சையாக அவர் தளத்தை பார்வையிட்டேன்... அசந்து போய்விட்டேன்.. எளிய தமி்ழில் சினிமா ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தை பிட்டு பிட்டு வைத்து இருக்கின்றார்.... வாழை பழத்தை உறித்து வாயில் வைத்தும் விட்டார்.. நீங்கள் படித்து விழுங்க வேண்டியதுதான் பாக்கி...
ஒளிப்பதிவாளர் ஆம்ஸ்ட்ராங் எழுதிய
இதே விஷயத்தை நீங்கள் சினிமாவில் கற்றுக்கொள்ளஒரு ஆறுமாதமாவது பிடிக்கும்..... சில கேமராமேன்கள் சொல்லிதர மாட்டார்கள்... அவர்கள் வேலை பளு அது போல்... உங்களுக்கு கிளாஸ் எடுக்க அவர்கள் இண்ஸ்டியூட் வைத்து நடத்தவில்லை...நிமிடத்துக்கு பல லட்சங்கள் தண்ணிராக செலவு செய்யபடும் இடம் அது... சரி நீங்களே கற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும் நீங்கள் சற்று மந்தம் என்றால்...ங்கோத்தா கொம்மா என்று திட்டு வாங்காமல் அவர் எழுதிய விஷயங்களைகற்றுக்கொள்ளமுடியாது... அப்படி பட்ட சினிமா விஷயங்களை ரொம்ப அற்புதமாக அவரது தளமான விஜய் ஆம்ஸ்ட்ராங் சினிமோட்டோகிராபர் என்ற தளத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றார்....ரொம்ப எளிய தமி்ழில் சினிமாஒளிபதிவு வித்தையை அவரது தளத்தில் அழகாய் சொல்லி தருகின்றார்...
ஆம்ஸ்ட்ராங்... விகடன் மாணவ நிருபர் திட்டத்தில் சேர்ந்து சில காலம் நிருபராக பணியாற்றிவர்....
இப்போது நான் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு எம்ஏ மாஸ் கம்யூனிகேஷன் அன்டு ஜேர்னலிசம் படித்து வருகின்றேன்...பிராக்டிக்கள் வகுப்புகளில் ஒரு வகுப்பில் எடிட்டர் லெனின் அவர்கள்... ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்த புகைபடம் திரைபடத்தின் பாடல் காட்சியை போட்டுகாட்டி எங்களுக்கு பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்... அதற்க்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் எனது மூன்று குறும்படங்கள் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட்டார்கள் அதற்க்கு தேர்வு குழு உறுப்பினாராக திரு லெனின் அவர்கள் கலந்து கொண்டு எனது படம் திரையிடலின் போது எனக்கு சால்வை போர்தி கௌரவபடுத்தனார்...
இரண்டு நாள் கழித்து எனக்கு வகுப்பு எடுக்கும் போது ரூபாய் 750 ல் படம் எடுத்த இயக்குனர் இதே கூட்டத்தில் இருக்கின்றார்.. என்று என்னை அறிமுகபடுத்த எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்... அப்போது எனக்கு பெரிய ஆச்சர்யம் புகைபடம் படத்தின் ஆவுட்டோர் காட்சிகள்... அப்படி என் மனதை கொள்ளை கொண்டது.....
நான் கூட எனது தளத்தில் இந்த தொழில் நுட்பத்தை எனக்கு தெரிந்தவரையில் சினிமாசுவரஸ்யங்கள் என்ற தலைப்பில் எழுதி வருகின்றேன்... அதற்க்கு நல்ல மூட் வேண்டும்.. அது 6 எப்பிசோடு அளவில் நிற்கின்றது... ஒளிப்திவாளர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் எழுத்துக்கள் என்னை மேலும் எழுத உற்சாகபடுத்துகின்றன....
ஒருசிலரால் மட்டுமே தான் கற்றுக்கொண்ட வித்தையை மற்றவர்களுக்கு சொல்லிதர எண்ணம் வரும்... அதுவும் எளிய தமிழில்.... நேற்றுதான் அவர் தளத்தை பார்த்துவிட்டு அவருக்கு கைபேசியில் பேசினேன்... அவரை இதுவரை நேரில் பார்த்ததுகூட இல்லை.... ஒரு நல்ல விஷயம் வளரும் பல கலைஞர்களுக்கு பயண்படும் என்பதால் இதனை அறிமுகபடுத்திகின்றேன்... உன்னை மாதிரி ஒரு மந்தமான அளவில் புரியும் சக்தி கொண்ட மனிதனுக்கும் புரியும் அளவில் அதை எழுதி இருப்பது ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நிருபர் அனுபவத்தின் வெற்றி என்பேன்...
ஆனால் அப்போது கூட அவரிடம் பேசுவேன் என்று நான் என் கனவிலும் நினைக்கவில்லை... இந்த பதிவுலகம் எனக்கு நிறைய நல்ல நண்பர்களை கொடுத்து இருக்கின்றது... அந்த எண்ணிக்கையில் மேலும் நான் நேசிக்கும் சினிமாட்டோகிராபி தொழில் தொடர்பு உடைய நண்பர் ஆம்ஸ்ட்ராங்கும்....
ஒளிப்திவு மற்றும் புகைபடகலைபயில விரும்புகின்றவர்கள் அவசியம் படித்து தெரிந்து கொள்ளவேண்டியதளம் அது.. விஜய் ஆம்ஸ்ட்ராங் சினிமோட்டோகிராபர் என்ற தயத்தில் படித்து உங்கள் கருத்துக்களை பின்னுட்டத்தின் மூலம் பதிவு செய்யுங்கள்...
அன்புடன்
ஜாக்கிசேகர்
(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....
Labels:
அனுபவம்,
திரைவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
///////நீங்க டிஎப்டி யா?
ReplyDeleteஇல்லைசார்...
ஆக்சுவலா நான் டிஎப்டி முடிச்சவங்கள மட்டும்தான் நான் எடுத்துக்கொள்வது... ஏனென்றால் அவர்களுக்கு பேசிக் தெரியும்....///////
என்ன இப்படி சொல்லிட்டீங்க !
அப்ப எங்களைப் போன்றவர்கள் எல்லாம் என்ன பண்ணுவது
பகிர்வுக்கு நன்றி அண்ணே...
ReplyDeleteபோய் படிக்கிறேன்...
வாழ்த்துக்கள்!!! மற்றும்
ReplyDeleteபுதிய தள அறிமுகத்திற்கு நன்றி.
ரொம்ப அருமை அண்ணே.
ReplyDeleteகண்டிப்பாக தெரிந்து கொள்ளபட வேண்டியவர்.
நன்றி ஜாக்கிசேகர்..
ReplyDeleteஅருமையான அறிமுகம் ஜாக்கி.
ReplyDeleteTHANKS TO INTRODUCE HIS PAGE...
ReplyDeleteMANO
படிச்சுட்டு வர்றேன் அண்ணே.. அப்புறம் முதல்வருக்கு எழுதுன கடுதாசியாலே எதாச்சும் நடதுச்சா?
ReplyDeleteபயனுள்ள தகவலுக்கு நன்றி.
ReplyDeleteஒளிபதிவாளரை பற்றி இன்னொரு ஒளிபதிவாளரின் வாழ்த்துக்களா?
ReplyDeleteவாழ்த்துக்கள்