முதல்வருக்கோ அல்லது ஸ்டாலின் அவர்களுக்கோ ஒரு கடிதம்....

அன்பின் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் வணக்கம்... முதல்வருக்கு மட்டும் இதுவரை நான் ஒரு கடிதம் எழுதி இருக்கின்றேன்...துணைமுதல்வரான உங்களுக்கு இதுவரை நான் எந்த கடிதமும் எழுதியதில்லை... இப்போது இந்த பிளாக் வாய்ப்பு இருப்பதால் இதனை எழுதுகின்றேன்... நிற்க...

முதல்வரான உங்களுக்கு மட்டுமே இந்த கடிதத்தை எழுத நினைத்தேன்... ஆனால் பெரம்பூர் பாலம் திறப்பு விழாவில் எனக்கு துணையாக துணை முதல்வர் இருக்கின்றார் என்று சொன்ன காரணத்தால் அவரையும் இதில் சேர்த்துக்கொண்டு உள்ளேன்....

நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்க்கு எப்படி பயணப்படுகின்றீர்கள் என்று தெரியுமா?

உதாரணமாக நீங்கள் இரவு 8 மணிக்கு போரூரில் இருந்து கிண்டி செல்வதாக வைத்துக்கொள்வோம்.... கிண்டி பட் ரோடு அருகே ஒரு இன்ஸ்பெக்டர் சாலைகளில் முதலில் யாரும் நிற்க்காமல் பார்த்துக்கொள்கின்றார்....கையில் இருக்கும் வாக்கி டாக்கியில் நொடிக்கு நொடி உங்கள் வருகை மற்றும் அசைவுகள் அவருக்கு தெரிவிக்கபடுகின்றது... அவர் அதற்க்குள் இங்கு கூடுமானவரை டிராபிக் இல்லாமல் பார்த்துக்கொள்கின்றார்...

இந்த டூவீலர் யாருடையது...
என்னுதுங்க
எதுக்கு இங்க நிக்கற...???
என் அக்காவுக்கு வெயிட்டிங்...
வண்டிய தூக்கி ஓரம் போடு.....

ஹேய் ஷேர் ஆட்டோ...
அப்படியே ஓரம் கட்டு

ஏய் லாரி அப்படியே ஓரம் கட்டு... லைட்டை ஆப் செய்....

மாநகர பேருந்துகளுக்கும் இதே நிலைதான்,, அவர்களும் ஓரம் கட்ட பட்டு முன் விளக்கை ஆப் செய்து இருக்க வேண்டும்....

சைக்கிளில் செல்பவர் நடப்பவர் உட்பட எல்லோரம் ஓரம்கட்ட பட்டு இருக்க....
பைக்கில் இருந்து கிளைசாலையில் மெயின் ரோட்டுக்கு வரும் எதுவும் தெரியாத வாகன ஓட்டி, நீங்கள் வருவது தெரியாமல் சட்டென உள்ளே புகுந்தால் அவ்வளவுதான்...

....கோத்தா துரைக்கு அப்படி என்ன அவசரம்...
எங்க போய் கையெழுத்து போடபோறிங்க? எல்லாரும் நிக்கறாங்க இல்லை... உனக்கு ஸ்பெஷலா சொல்லனுமா? என்று அதே இன்ஸ்பெக்டர் திட்டுவார்....

நீங்கள் பட் ரோடு கடக்கும் வரை அதாவது அந்த இன்ஸ்பெக்டர் இடத்தை கடக்கும் வரை அவர் செல்போனிலும் வாக்கி டாக்கியிலும் வியற்வையோடு பேசி டென்ஷனோடு டிராபிக் கிளியர் பண்ணி வைக்க
அப்போது உங்கள் வாகனம் சென்னை டிரேட் சென்டரை தாண்டி இருக்கும்....

ஊர்ல ஒரு பழ மொழி சொல்லுவாங்க... ஆறு அங்க இருக்கும் போதே அவுத்துக்கனானாம் கோமனத்தை என்று சொல்லுவார்கள்.... அது போலவே அந்த இன்ஸ்பெக்டர் அவர் வேலையை செய்து கொண்டு இருப்பார்....சில நிமிடத்தில் இரண்டு வாகனங்களில் போலிஸ்காரர்க்ள சிகப்பு விளக்கு சுற்றும் வாகனத்தில் பாதி உடம்பை வெளியே வைத்தபடி மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் யாருமற்ற ரோட்டில் சீறி பாய...உங்கள் வாகனம் எளிதில் எந்த வித தடையும் அல்லது எந்த வித விபத்தும் இல்லாமல் எளிதில் கடந்து விடும்... இருந்தாலும் கடந்த ஆட்சியை கம்பேர் செய்யும் போது ஒரு சில நிமிடங்களில் டிராபிக் கிளியர் ஆகிவிடுகின்றது.... என்பது குறிப்பிட பட வேண்டிய விஷயம்...
நீங்கள் மக்களின் பிரதிநிதி உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும்... அதனால் நாங்கள் சில நிமிடங்கள் நின்று செல்ல எந்த பிரச்சனையும் இல்லை.. அதே போலதான் நீங்கள் விமானம் மூலம் செல்வதாக இருந்தாலும் அடிக்கு ஒரு போலி்ஸ் நின்று உங்கள் வாகனத்தை டிராபிக் மற்றும் பலவிஷயங்களில் இருந்து உங்கள் வீட்டில் இருந்து ஏர் போர்ட் வரை காப்பாற்றுகின்றது....

ஆனால் தமிழகத்தில் சாமானியவர்கள் செல்லும் பயணம் அவ்வளவு சேப்டி இல்லை என்பது நீங்கள் தினசரி செய்திதாளை வாசிப்பதால் உங்களுக்கு தெரிந்து இருக்கும்... பெரும்பாலும் விபத்துகள் இரவில்தான் நடக்கின்றன...

சாலை விபத்துகளில் பல உயிரிழப்புகள் தமிழகத்தில் அதிகம்...அதற்க்காக சாலைபாதுகாப்பு வாரம் எல்லாம் சமீபத்தில்தான் நடத்தினீர்கள்.... நீங்கள் நெடுஞ்சாலைகளில் வெகுதூரம் காரில் பயணம் செய்ய வாய்ப்பு இருக்காது அப்படியே இருந்தாலும் உங்களுக்கு போக்குவரத்து போலிசார் சாலைகளில் நிற்க்கும் வாகனங்களை ஒரத்தில் விட சொல்லி இருப்பார்கள்... உங்கள் காரும் அந்த இடத்தை இலகுவாக கடக்கும்....

போன மாதம் சென்னை கிழக்க கடற்கரை சாலையில் ஒரு அரசு விரைவு பேருந்து பிரேக்டவுன் ஆகி இருந்தது... காரணம் என்ன தெரியுமா ? சொன்னால் சி்ரிப்பொலி சேனல் போல் சிரிப்பீர்கள்... அந்த பேருந்தில் டீசல் இல்லை ...இன்னொரு கூத்து என்ன தெரியுமா? அந்த பேருந்தில் நடத்துனரும் இல்லை... இந்த லட்சனத்தில் அந்த பேருந்து கும்பகோணம் போய் சேர வேண்டும்....


டிரைவர் டீசல் வாங்க புறப்பட...புழுக்கம் காரணமாக பேருந்தின் முன் பக்கம் பயணிகள் காற்று வாங்க இறங்கி நின்று கொண்டு இருக்க... வேகமாக வந்த லாரி நின்று கொண்டு இருந்த பேருந்தின் பின் புறத்தில் மோத , இளைப்பாறியவர்களில் குழந்கைள் பெண்கள் உட்பட ஆறு பேர் ஸ்தலத்துலேயே நிரந்தரமாக இளைப்பாறினார்கள்....

காரணம் ரொம்ப சிம்பிள்.... அது ஒரு பழைய ஓட்டை பஸ்... அதுக்கு பிரேக்டவுனான ஆம்னி பேருந்துகள் போல இரண்டு பக்கமும் மினுக் மினுக் லைட் இல்லாததும், பேருந்தின் பின் புறம் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் இல்லாததும்தான் காரணமாக கூட இருக்கலாம்...

லாரிக்கு பேருந்து நின்று இருக்கின்றதா? அல்லது போகின்றதா என்று தெரியவில்லை... அது பிரேக்டவுன் பற்றி எந்த அறிவிப்பும் பேருந்தின் பின்பக்கம் இல்லை.... அதனால் இந்த மோதல்....

சரி இந்த லாரிகள் செய்யும் கொட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல... டீ குடிக்க வேண்டுமா? நடு ரோட்டில் நிறுத்தி விட்டு டீ குடிப்பார்கள்... சரி தங்க நாற்கர திட்டத்தில் பெங்களுர் செல்லும் சாலைகளில் நீங்கள் ஒன்றை கவனித்து இருக்கின்றார்களா? லாரிகளுக்கு நிறுத்தும் இடம் இருந்தாலும் அங்ககே நிறுத்துவது இல்லை எல்லாம் சாலையின் ஓரங்களில்தான்..... இரவில் நம்மை யார் கேட்க போகின்றார்கள் என்ற தெனாவெட்டுதான்...

பொதுவாக தமிழகத்தில் நடக்கும் பல கார் விபத்துகளில் நின்று கொண்டு இருந்த லாரி மீது, பேருந்து மீது , வேன் மீது, மோதிய விபத்துகளில் உயிரிழந்தவர்கள் ஏராளம்...


முன்பெல்லாம் மாட்டு வண்டிகளில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்ட கட்டாய படுத்த பட்டார்கள்... ஆனால் இப்போது அப்படி இல்லை.... விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர் பகுதிகளில் சக்கரை அலைகளுக்கு கரும்பு ஏற்றி செல்லும் எந்த மாட்டு வண்டிக்கும், டிராக்டர் டிரைலருக்கும் இரவில் ஒளிரும் சிவப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டபட்டு இருப்பதில்லை... இரவில் வெகு வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அருகே வந்துதான்... எதிரில் வாகனம் இருப்பதை அறியும் போதே டமால் சத்தம் ஏற்பட்டு, ஐயோ அம்மா என்று கூக்குரல் கேட்கின்றது...

பேருந்து வாங்கும் போது கம்பெனிகாரன் சிகப்பு ரிப்லெக்டர் ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டிதான்கொடுக்கின்றான்.. ஆனால் நாம் அது பழசாக நிறம் மங்கும் போது மாற்ற வேண்டும்... அப்படி நம்ம வேலையை ஒழுங்கா செஞ்சிட்ட பருவ மழை சரியா வந்து தமிழகத்து தண்ணி கஷ்டம் சரியாயிடுச்சின்னா? என்ன பன்னறது..

ஸ்டிக்கர் ஒட்ட எவ்வளவு காசு ஆவும்....வாகனங்களில் நம்பர் போர்டுகளுக்கு கிழே மட்டு்மே சிகப்பு கலர் ரிப்லெக்டர் இருந்துச்சு....இப்ப வாகனங்களோட சைடுலயும் ஒட்ட சொல்லி கண்டிப்பான உத்தரவு ஒன்னு போடுங்க...

பெங்களுர்ல பல பேருந்துகளில் இப்ப ஒட்ட ஆரம்பிச்சு இருக்காங்க... அதை எல்லா வாகனத்தையும் செயல் படுத்த உத்தரவு போடுங்க... எந்த வாகனமும் ரோட்டின் ஒரத்தில் நிற்க்க சொல்லி உத்தரவு போடுங்க....

ஆத்துல ஒரு கால் சேத்துல ஒருகால் போல தார் ரோட்டுல பாதி, மண்ரோட்டுல மீதின்னு நிக்கற எந்த வாகனமா இருந்தாலும் போக்குவரத்து போலி்ஸ்கிட்ட சொல்லி அவுங்கிட்ட முடிஞ்ச வரைக்கும் பணத்தை கறக்க சொல்லுங்க.... அவுங்க கறக்கற கறப்புக்கு எந்த வண்டியும் ரோட்டு ஒரத்துலதான் நிறுத்தனம்


அப்படியே ஹெவி லோடோட பிரேக் டவுன் ஆகி ஒரு வாகனம் நின்னா 15 மீட்டர் முன்னாடியே முக்கோண ரிப்ளெக்டர் வச்சி பின்னாடி வரும் வாகனத்துக்கு அறிவிக்க வேண்டும்...

நம்ம பொறுத்தவரை மரத்து கிளைகளை ஒடிச்சி மாரியாத்தா கோவிலுக்கு கூழ் உற்றுவது போல் வைத்து இருப்போம்.... முக்கோண ரிப்லெக்டர் எல்லா வாகனத்துக்கும் ரொம்ப அவசியம்னு உத்தரவு போடுங்க...

சும்மா மிடில்கிளாகிட்ட ஹெல்மேட் போடலையான்னு தொந்தரவு பண்ணறதுக்கு முன்னாடி இதுமாதிரி வேலைகள் எல்லாத்தையும் செஞ்சிட்டு அப்புறம் தனிமனிதன்கிட்ட ஹெல்மெட் ஏன் போடலைன்னு கேள்வி கேளுங்க....

இது போலான விபத்துக்களுக்கு தனிமனித தவறுகளும் தெனாவெட்டும்,அலட்சியமும்தான் தான் முத காரணம்.. அந்த தெனவெட்டை சட்டம் போட்டு குறைங்க.... விபத்துல சிக்கனா லைசென்ஸ் கேன்சல்னு தைரியமா சொல்லுங்க.....
உயிர் என்பது விலைமதிக்க முடியாத ஒன்னு.....

இது யாருக்கோ எவருக்கோ நடந்து விட்டதாக என்னால் போக முடியவில்லை... கண் எதிரில் 3 லட்சம் தமிழர்கள் இறக்கும் போது கை கட்டி வேடிக்கை பார்த்தோம்... அதற்க்கு இறையான்மை என்ற நந்தி ஒன்று குறுக்கே இருந்தது... ஆனால் இது போலான உயிரிழப்புகளில் அதிகம் இருப்பது நம்மவர்கள்... அதுவும் அவர்கள் இந்திய பிரஜைகள்....... அவர்களை காப்பாற்றுவதில் எந்த பிரச்சனையும் உங்களுக்கு இருக்காது என்று எண்ணுகின்றேன்...

எல்லோருக்கும் உயிர் பாதுகாப்பு அளிப்பது உங்கள் கடமை... அதனால்தான் உங்களுக்கு இவ்வளவு பெரிய கடிதம்...
(PUDUKOTTAI: The Transport Department, in co-ordination with non-governmental organisations, police and State Transport Corporation officials, has taken up special measures to paste bull’s eye on the headlights, X-posters on the front glass-panes and fix reflectors at the rear of heavy vehicles in the district. )


மேலே உள்ளது இந்து பத்திரிக்கையில் வந்த செய்தி... அது போலான விஷயங்கள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன... இது போல நல்லது நடக்கும் விஷயங்களுக்கு அரசின் பாராட்டும் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை மறவாதீர்...

அதே போல் சாலை ஓரத்தில் உள்ள மரங்களுக்கு கருப்பு வெள்ளை பெயிண்ட் அடிச்சி அந்த காலத்துலயே இருக்காதிங்க.. இது போல ரிப்லெக்டர் ஸ்டிக்கரை மரத்துல ஆணியில அடிச்சு உடுங்க.... பாலத்து ஓரம் மற்றும் விபத்து ஏற்படுத்தும் இடங்களில் எல்லாம் இது போல செய்யுங்க...

மேலே உள்ள பத்திரிக்கை செய்தியெல்லாம் கடந்த மூனு மாதத்துல எடுத்த செய்தி சேகரிப்புதான்.... பேப்பரை எடுத்தாலே வாரத்துக்கு நின்ற வாகனத்தின் மீது வந்த வாகனம் மோதல்னு செய்தியை படிச்சிட்டு....

வண்டி ஓட்ற அத்தனை பயலுகளும் கேனை பயல்களா? என்ற கோபத்தில் எழுதியது... ஒரு ரெண்டு பேர் வேணா தூங்கிகிட்டே பின்ன போயி குடுத்து இருப்பான்...எல்லாருமேவா?

கோவத்துல உங்களுக்கு லட்டர் எழுதிகிட்டு இருக்கேன்... யாரோ ஒரு வீட்டின் கனவு விபத்து என்ற பெயரில் நசுக்கபடுகின்றது... அதற்க்கு இந்த அரசு துணை போக கூடாது...

போக்குவரத்து காவல் துறைக்கு ஒன்றை கண்டிப்பான உத்தரவோடு சொல்லுங்கள்...போலிஸ் பேட்ரோல்கார்கள் நெடுஞ்சாலை ஓர புளியமரத்தின் நிழலில் பனியன் அவுத்து போட்டு விட்டு தூங்கும் நேரம் போக, சாலைகளில் நிற்க்கும் எந்த வாகனமாக இருந்தாலும் ஓரமாக நிறுத்த வாகன ஒட்டிகளை மிரட்ட சொல்லுங்கள்.... அவர்களுக்கு அது நன்றாகவே வரும்....

ஒரு வாரத்துக்கு முன்ன கூட போரூர் டோல்கேட்டுகிட்ட நின்னகிட்டு இருந்த லாரிக்கு பின்னால இன்னோரு லாரி மோதிகிட்டு நிக்கற படத்தை எடுத்தேன்.... அதையும் உங்க பார்வைக்கு இணைச்சு இருக்கேன்... அதே போல கடந்த மூனு மாதங்களில் ரவை சலிக்க, சப்பாத்தி போட என உபயோகபடுத்தி மீதமுள்ள பேப்பர்களில் இருந்து எடுத்த விபத்து செய்திகளை ஆதாரத்தோடபோட்டோவா பிடிச்சி போட்டு இருக்கேன்... என் மனைவி ரவயை சலிச்சதும் அந்த பேப்ரையும் சப்பாத்தி போட்டு முடிச்சதும் அந்த பேப்பரையும் குப்பையில போட்டுவா? இன்னும் அது இருந்து இருந்தா? இன்னும் நிறைய விபத்து செய்திகளை உங்களுக்கு கொடுத்து இருப்பேன்... அதேபோல் தொடர்ந்து செய்திதாள் வாங்கற பழக்கமும் என் வீட்டில் இல்லை..

நீங்க ஒரு கண்டிப்பான உத்தரவு போட்டா? பல உயிர்கள் காப்பாற்றபடும்...நான் என்ன சொன்னாலும் ஒரு பய கேட்க போறது இல்லை.. பட் நீங்க சொன்ன கேட்க உள்ளகட்டமைப்பில் செயல்படும் அரசு அதிகாரிகள் இருக்காங்க... அதனாலதான் கடந்த இரண்டு மணி நேரமா கை வலிக்க டைப் அடிக்கிறேன்... இந்திய தீப கர்பத்துலயே சுத்தன பையன் நானு... எனக்கு வெளிநாட்டுல போக்குவரத்து ரூல்ஸ் எப்படிஇருக்கும்னு இந்த பயபுள்ளைக்கு தெரியாது.... தெரிஞ்சா எதாவது உதாரணமாவது காட்டுவேன்... பத்து வருஷமா என் பாஸ்போர்ட் கன்னி பெண்ணாவே கன்னி கழியாமலே காலவதி ஆயிடுச்சி... நீங்க பல நாட்டுக்கு போயிட்டு வந்தவங்க...உங்களுக்கு நிச்சயம் என்னைய விட அதிகம் தெரிஞ்சு இருக்கும்.... அப்படி எதாவது டவுட்டுன்னா? நம்ம மதுரைகார அண்ணன் கூட இப்பதான் வெளிநாடு போயிட்டு வந்தார்.. அவர்கிட்ட கூட நீங்க கேட்டுகிடலாம்... எது எப்படி இருந்தாலும் இந்த சாலை விபத்துக்களுக்கு ஒரு முடிவு கட்டுங்க... ரோடு வேகமா போவ போட்டு்ட்டிங்க.. ஆனா விபத்தை தடுக்க மறந்துட்டிங்க.... எதாவது செய்யுங்க...

எனக்கு தெரியும் முதல்வர் பதவி எவ்வளவு கஷ்டம்னு இருந்தாலும் இருந்தாலும் இந்த வயதில் பதினெட்டு மணி நேரம் உழைக்கும் நீங்கள் இந்த கடிதத்துக்கும் செய்திக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்...

எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்கமாட்டோமா என்பது போல் இருந்து விடாதீர்கள்...108 அம்புலன்ஸ் சேவை அறிமுகபடுத்தி தமிழக மக்களின் உயிர் மீது இந்த அரசுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கின்றது என்பதை உணர்த்தினீர்கள்.. கலைஞர் உயிர் காக்கும் காப்பிட்டு திட்டத்தின் மூலம் பலர் பயணடைந்தார்கள். அதனால் உங்களுக்கு இந்த கடிதம்....

108 சேவை இனி பாம்பு கடித்தால் மட்டும் பயண்பட வேண்டுமாய் இருக்க வேண்டும்..108 சேவை சாலைவிபத்துகளில் அதிகம் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றேன்...

கடிதத்தில் தவறுதலா எதாவது வார்த்தை உபயோகபடுத்தி இருந்தாலோ அல்லதுதவறுகள் இருந்தாலோ என்னை மன்னிக்வும்... நான் நடுநாட்டுகாரன்.. அதாவது தென்னார்காடு மாவட்டத்துக்காரன்...


எதாவது செய்வீர்கள் என்ற எதிர்பார்புகளுடன்.....

நன்றி
அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

62 comments:

 1. Good letter friend....

  I appriciate this.... Please make sure it reaches Stalin

  Regards
  Sankar

  ReplyDelete
 2. Good letter friend....

  I appriciate this.... Please make sure it reaches Stalin

  Regards
  Sankar

  ReplyDelete
 3. Very Good letter... Please make sure it reaches Stalin

  ReplyDelete
 4. அருமையா சொல்லி இருக்கீங்க சேகர்.. பேப்பர் கட்டிங் எல்லாம் வச்சு சொல்ல ஒரு அக்கறை வேணும்.. நல்லாயிருங்க.. அப்படியே இதை துணை முதல்வருக்கு ஒரு நகல் அனுப்பி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 5. Super Sekar...

  Very good letter. I appreciate your effort. It is not easy to collect old newspapers. Awesome man..

  Regards,
  C.Vijayaraj.

  ReplyDelete
 6. ஜாக்கி சொல்லனும் என்றால் என்னென்வோ இருக்கு அத்தனையும் பட்டியல் போட்டு தாளாது.
  நம்மூரில் ஒரு வண்டி எவ்வளவு வருடம் சாலையில் ஓடனும் என்று ஏதாவது வறைமுறை இருக்கா? அப்படி இருந்தால் சாலையில் ஓடும் சில வண்டிகளுக்கு எப்படி அனுமதி கிடைச்சது என்று கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
  எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாக புரிந்தது.இது ஒரு அருமையான கடிதம் மற்றொன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி & உப்புமா தான் Favorites என்று. :-)

  ReplyDelete
 7. என்னா டீடெய்லா சொல்லியிருக்கிங்க? ஆனா எனக்கு ஒரு டவுட்டு, நீங்க சொல்லாம அவங்களுக்கு இத்தெல்லாம் தெரியாதா என்ன? ஆக்ஷன் எடுக்கனும்னு நெனைச்சிருந்தா எப்பவோ ஆக்ஷன் எடுத்திருக்கலாம். செவுடன் காதுல ஊதற சங்குதான் நீங்க சொல்றது எல்லாம். ஒண்ணும் நடக்காது.

  ReplyDelete
 8. சமீப காலங்களில் துணை முதல்வர் அவர்கள் அணைத்து விதமான மீடியா ரிபோர்ட்டுகளையும் படிக்கிறாராம். அதனால் இந்த பதிவும் செல்ல வாய்ப்பிருக்கிறது.

  வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 9. அருமையா சொல்லி இருக்கீங்க ஜாக்கி

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் !

  unmaivrumbi.
  Mumbai.

  ReplyDelete
 11. நல்ல சிந்தனை ஜாக்கி, துணை முதல்வரோட வெப் சைட்ல அப்படியே பதிவேற்றி விடுங்களேன்.
  (www.mkstalin.net)

  ReplyDelete
 12. முதல்வருக்கு புரியும் பாஷையில் கூட இந்த கடிதத்தைப் எழுதியிருக்கலாமே.

  புரியவில்லையா....அதுதாங்க...சினிமா மொழி...அங்காடித் தெரு படத்துல நாயகனும் நாயகியும் இப்படி வீதிக்கு வரக் காரணம் விபத்துதான்னு எழுதியிருந்தா கொஞ்சம் புரியும்னு நினைக்குறேன்.

  இவ்வளவு சீரியசான விஷயம் எழுதும்போது நக்கலான்னு கேட்காதீங்க...இயலாமையை இப்படி நக்கல் அடிச்சு மறைக்கப்பார்க்குறதுதானே தமிழனின் குணம்.

  ReplyDelete
 13. ஜாக்கி,

  கடிதத்திற்குப் பதில் கிடைக்குமா? தெரியாது. நல்ல மாற்றத்தை எதிர்பார்ப்போம். சமூக அக்கறை மிகுந்த இடுகை.

  ஸ்ரீ....

  ReplyDelete
 14. Good letter friend....

  I appriciate this.... Please make sure it reaches Stalin

  Regards
  Sankar//

  நன்றி சங்கர்

  ReplyDelete
 15. அருமையா சொல்லி இருக்கீங்க சேகர்.. பேப்பர் கட்டிங் எல்லாம் வச்சு சொல்ல ஒரு அக்கறை வேணும்.. நல்லாயிருங்க.. அப்படியே இதை துணை முதல்வருக்கு ஒரு நகல் அனுப்பி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..//
  நிச்சயம் அனுப்புவேன்...ஜெய் நன்றி..

  ReplyDelete
 16. Super Sekar...

  Very good letter. I appreciate your effort. It is not easy to collect old newspapers. Awesome man..

  Regards,
  C.Vijayaraj.//

  நன்றி விஜய் ராஜ்... நீங்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தியமைக்கும் என் நன்றிகள்

  ReplyDelete
 17. எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவாக புரிந்தது.இது ஒரு அருமையான கடிதம் மற்றொன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி & உப்புமா தான் Favorites என்று. :-)//

  நன்றி குமார்.. மேலுள்ள வரிகளை ரொம்பவே ரசிச்சேன்...

  நம் அரசு பேருந்துகளே பல வருடம் உழைத்த பின்னும் இன்னும் ஓடுகின்றது...

  ReplyDelete
 18. என்னா டீடெய்லா சொல்லியிருக்கிங்க? ஆனா எனக்கு ஒரு டவுட்டு, நீங்க சொல்லாம அவங்களுக்கு இத்தெல்லாம் தெரியாதா என்ன? ஆக்ஷன் எடுக்கனும்னு நெனைச்சிருந்தா எப்பவோ ஆக்ஷன் எடுத்திருக்கலாம். செவுடன் காதுல ஊதற சங்குதான் நீங்க சொல்றது எல்லாம். ஒண்ணும் நடக்காது.//


  வரதாராஜ் நாமலும் ச சங்கை ஊதுவோம் நிச்சயம் இதை ஒரு யோக்கியமான அதிகாரியாவது படிக்காமல இருக்க யோறாங்க....

  ReplyDelete
 19. அருமையா சொல்லி இருக்கீங்க ஜாக்கி//
  நன்றி ராதாகிருஷ்ணன்சார்..

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் !

  unmaivrumbi.
  Mumbai.//
  நன்றி உண்மை விரும்பி...

  ReplyDelete
 21. நல்ல சிந்தனை ஜாக்கி, துணை முதல்வரோட வெப் சைட்ல அப்படியே பதிவேற்றி விடுங்களேன்.
  (www.mkstalin.net)//

  நிச்சயமா சூர் நம்ம அளுங்க கருத்துக்களோடு...

  ReplyDelete
 22. இவ்வளவு சீரியசான விஷயம் எழுதும்போது நக்கலான்னு கேட்காதீங்க...இயலாமையை இப்படி நக்கல் அடிச்சு மறைக்கப்பார்க்குறதுதானே தமிழனின் குணம்.//

  சரவணன் உண்மைய அப்படியே சொல்லி இருக்கிங்க..

  ReplyDelete
 23. ஜாக்கி,

  கடிதத்திற்குப் பதில் கிடைக்குமா? தெரியாது. நல்ல மாற்றத்தை எதிர்பார்ப்போம். சமூக அக்கறை மிகுந்த இடுகை.

  ஸ்ரீ....//
  நன்றி ஸ்ரீ மிக்க நன்றி...

  ReplyDelete
 24. சமூக அக்கறையுள்ள பதிவு,
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. நல்ல சிந்தனை ஜாக்கி. நன்றி உங்கள் நல்ல மனதுக்கும் இந்த பதிவுக்கும்.

  ReplyDelete
 26. வணக்கம் ஜாக்கி

  நல்ல விழிப்புணர்வு பதிவு

  அயல்நாடுகளில் உள்ளதுபோல் சட்ட விதிமுறைகள், கடுமையான தண்டனைகள் , அபராத தொகை போன்றவை மூலமே இவைகளை சரி செய்யலாம்.

  ReplyDelete
 27. Dear Mr. J

  WELL WRITTEN ARTICLE...THE QUALITY OF THE ARTICLE IS 10000 TIMES BETTER THAN ANY ARTICLE PUBLISHED IN TAMIL DAILY OR WEEKLY.

  I POSTED THIS ARTICLE LINK TO MR. STALIN'S OFFICIAL WEBSITE.

  DEAR FELLOW READERS AND FRIENDS...PLEASE VISIT http://www.mkstalin.net/tamil/comments.php AND REQUEST MR. STALIN TO READ THE FOLLOWING LINK http://jackiesekar.blogspot.com/2010/04/blog-post_15.html

  IF HE GOT 50 TO 100 SIMILER REQUEST...THERE ARE MORE CHANCE TO GET NOTICED BY MR. STALIN

  ReplyDelete
 28. சமூகப் பொறுப்புடன் கூடிய கடிதம். நன்றி!!

  ReplyDelete
 29. சமூக அக்கறையுள்ள பதிவு. செய்திகள் தொகுப்பும்,உங்கள் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. பதிவுலக பத்திரிக்கை நண்பர்கள் மூலம் இக்கடிதத்தை வெகுஜனப் பத்திரிக்கைகளில் வெளிவர ஏற்பாடு செய்யுங்கள் ஜாக்கி.

  ReplyDelete
 30. /*
  கலைஞர் உயிர் காக்கும் காப்பிட்டு திட்டத்தின் மலம் பலர் பயணடைந்தார்கள். அதனால் உங்களுக்கு இந்த கடிதம்....
  */

  சீக்கிரம் மாத்திடுங்க ஐயா....

  ReplyDelete
 31. மிகவும் பொறுப்பான கடிதம், துணை முதல்வர் நிச்சயம் இதற்க்கு மதிப்பு கொடுப்பார் என் நம்புகிறேன்

  ReplyDelete
 32. நீங்க சொல்றது ரொம்ப சரி. நிக்கிற வண்டி மேல மோதிதான் விபத்துக்கள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. அவசியமான பதிவு.

  ReplyDelete
 33. தல தேறிடிங்க நியுஸ பேப்பரை மொபல்ல படம் எடுகிறிங்க

  ReplyDelete
 34. சமூக அக்கறையுள்ள கடிதம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ReplyDelete
 35. அக்கறையான பதிவு... சம்பந்தப்பட்டவர்கள் செயலில் இறங்கினால் நலம்.

  வாழ்த்துகள் ஜாக்கி :-)

  ReplyDelete
 36. //பேருந்து வாங்கும் போது கம்பெனிகாரன் சிகப்பு ரிப்லெக்டர் ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டிதான்கொடுக்கின்றான்.. ஆனால் நாம் அது பழசாக நிறம் மங்கும் போது மாற்ற வேண்டும்... அப்படி நம்ம வேலையை ஒழுங்கா செஞ்சிட்ட பருவ மழை சரியா வந்து தமிழகத்து தண்ணி கஷ்டம் சரியாயிடுச்சின்னா? என்ன பன்னறது//ஹாஸ்யம் கலந்து அருமையா சொல்லி இருக்கீங்க

  ReplyDelete
 37. Nalla iruku onga letter... policitians are not correcting themselves.

  ReplyDelete
 38. சமூக அக்கறையுள்ள பதிவு,
  வாழ்த்துக்கள்.---/// நன்றி சைவ கொத்து பரோட்டா.. தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்திற்க்-கும்

  ReplyDelete
 39. நல்ல சிந்தனை ஜாக்கி. நன்றி உங்கள் நல்ல மனதுக்கும் இந்த பதிவுக்கும்.//

  நன்றி ராமசாமி கண்ணன் எங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 40. அயல்நாடுகளில் உள்ளதுபோல் சட்ட விதிமுறைகள், கடுமையான தண்டனைகள் , அபராத தொகை போன்றவை மூலமே இவைகளை சரி செய்யலாம்.//

  உண்மைதான் கடுமையான விதிமுடிறகள் வந்தால் மட்டுமே சட்டத்துக்கு பயந்து வாழ வழி இருக்கின்றது...

  ReplyDelete
 41. WELL WRITTEN ARTICLE...THE QUALITY OF THE ARTICLE IS 10000 TIMES BETTER THAN ANY ARTICLE PUBLISHED IN TAMIL DAILY OR WEEKLY.

  நன்றி ராஜ்குமார் நீங்கள் எடுத்த முயற்ச்சிக்கு... மிக்க நன்றி..

  ReplyDelete
 42. சமூகப் பொறுப்புடன் கூடிய கடிதம். நன்றி!!//

  நன்றி செந்தில் வேலன்

  ReplyDelete
 43. சமூக அக்கறையுள்ள பதிவு. செய்திகள் தொகுப்பும்,உங்கள் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. பதிவுலக பத்திரிக்கை நண்பர்கள் மூலம் இக்கடிதத்தை வெகுஜனப் பத்திரிக்கைகளில் வெளிவர ஏற்பாடு செய்யுங்கள் ஜாக்கி.//

  அப்படி எல்லாம் எனக்கு எந்த பத்திரிக்கை நண்பர்களும் எனக்கு தெரியாது ராஜா.. அப்படியே தெரிந்தாலும் எனக்கு கூச்சசுபாவம் அதனால் அதற்க்கு வாய்பில்லை....

  ReplyDelete
 44. நன்றி தென்னவன் மாற்றிவிட்டேன் நன்றி

  நன்றி கேஆர்பி செந்தில்....

  நன்றி ஜெயந்தி எங்கள் முதல் வருகைக்கு...

  நன்றி அக்பர்...

  நன்றி ரோஸ்விக்

  நன்றி சினேகன்

  நன்றி அசோக்

  நன்றி அரசு உங்கள் அனைவரின் கருத்துக்கும் பின்னுட்டத்துக்கும்

  ReplyDelete
 45. கலைஞரின் குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும் நாங்களும் பொதுமக்கள் தான் என்று வியாக்கியானம் பேசும் எந்த வாரிசுக்காவது இதைப் போல ஒரு சம்பவம் நடந்த்திருந்தால்… நம்ம ஜாக்கி சாருக்கு இவ்வளவு பெரிய கடிதம் எழுத நேரமாவது மிச்சமாகி இருக்கும்.
  இருந்தாலும் உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு…!!!

  ReplyDelete
 46. ஒரு பாராட்டு விழா நடத்த தயாரா இருந்த , இந்த பிரச்சனைய சரிபண்ணிடலாம்

  ReplyDelete
 47. really gud letter..

  it should reach the concern person..

  regards
  Sachanaa

  ReplyDelete
 48. நல்ல விஷயம் திரு.சேகர்......
  குறை சொல்றதோட நிக்காம,எல்லோரும் இது பொறுப்புல உள்ளவங்க கண்ல படற மாதிரி ஏதாவது பண்ணுங்க.மெயில்,பாக்ஸ் னு பரப்புங்க.....
  எல்லோருமா சேந்து பூனைக்கு மணி கட்டலாம்.....
  முதல் மணி கட்டிய ‘zero to infinity’ ராஜ்குமாருக்கு எனது நன்றிகள்....

  ReplyDelete
 49. நல்ல பதிவு நானும் ஒருமுறை நந்தம்பாக்கம் போயிருந்தபோது நடந்த வாக்கி டாக்கி போலீஸ் அடாவடிங்க எல்லாம் பார்த்தேன் பதிவும் போட்டேன் . என்னபண்ண நம்மால இத மட்டும் தான் செய்ய முடியும் .ஒருஒருமுறையும் சிக்னல் ல பஸ் ரொம்ப நேரம் வழக்கத்துக்கு மாறா நிக்கும்போதும் அரசியல்வாதிங்களுக்குதான் என் முதல் திட்டு விழும் . இப்போ மன்மோகன் ஐயா வந்தபோது கூட பஸ் எங்கயோ சுத்தி நடுவுல அரைமணி நேரம் நின்னு , அப்புறம் அண்ணாசாலையை அடைஞ்சதும் நடுவுல எங்க மறுபடியும் மாட்டுமோனு டிரைவர் பஸ் ஓட்டின வேகம் ....... அரசு பஸ் டிரைவருங்க ரொம்ப பாவம் . ஸ்டாலின் தனி வெப்சைட் இருக்கே , அதுல சேர்க்க பாருங்க . தெரிஞ்சா அந்த வெப்சைட் சொல்லுங்க . எனக்கும் ஒன்னு அனுப்ப வேண்டியது இருக்கு .

  ReplyDelete
 50. நண்பரே உங்கள் அக்கறைக்கு தலை வணங்குகிறேன்.

  இதெல்லாம் தெரியாமலா இவர்கள் ஆட்சி செய்கிறார்கள்???

  அல்லது அது சம்பந்தமான அதிகாரிகள் அவர்களுக்குத் தெரிவிக்காமலா இருக்கிறார்கள்???

  ReplyDelete
 51. "நம்ம பொறுத்தவரை மரத்து கிளைகளை ஒடிச்சி மாரியாத்தா கோவிலுக்கு கூழ் உற்றுவது போல் வைத்து இருப்போம்.... முக்கோண ரிப்லெக்டர் எல்லா வாகனத்துக்கும் ரொம்ப அவசியம்னு உத்தரவு போடுங்க..."
  Super.....Good intiative...

  ReplyDelete
 52. Hats off, Sekar for this social responsibility filled letter..

  Thanks! I think if this reaches the Dy.CM, he would take some positive steps. Pl. ensure this is read by Mr.Stalin

  ReplyDelete
 53. ஜாக்கி!சமூக உணர்வுள்ள கடிதம்.

  கூடவே நம்ம முதல்வர் முரசொலி,விண்ணப்பம் போன்ற மேசை முன் இருப்பவைகளை படிப்பவர்.இடுகையின் நகலையும் முதல்வர்,முதல்வரின் உதவியாளர்,துணை முதல்வர்,அவரோட உதவியாளர்ன்னு அனுப்பி வையுங்க.இந்த இடுகையால் மக்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பிருக்கு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 54. நம்மபக்கம் கொஞ்சம் எட்டப்பாருங்கண்ணே.....
  www.egathalam.blogspot.com

  ReplyDelete
 55. http://www.mkstalin.net/tamil/contact.php

  இங்க போயி தெரியப் படுத்துங்க!

  ReplyDelete
 56. அருமை! அருமை!! அருமை!!!

  -tsekar

  ReplyDelete
 57. தீராத பிரச்சினையை சிறப்பான கடிதம் முலம் பண்பாக எடுத்து உரைத்துள்ளீர்கள் .. தாமதமாக என் கண்ணில் பட்டது ..பாராட்டுகள்.. முதல்வர்களுக்கு முன்னமே கிட்டி நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்..

  ReplyDelete
 58. dialogue from INDIAN by INDIAN :

  Mayile Mayile na, yeraghu podaadhu!!! Naama dhaan pudungadum..

  Janagana Mana, Sudhandira thinathannikku Kodi yetharadhu, Bharath mathaaki jey nu Sonna podhaaadhu!!! Kalai edukkanum!!!

  ReplyDelete
 59. dialogue from INDIAN by INDIAN :

  Mayile Mayile na, yeraghu podaadhu!!! Naama dhaan pudungadum..

  Janagana Mana, Sudhandira thinathannikku Kodi yetharadhu, Bharath mathaaki jey nu Sonna podhaaadhu!!! Kalai edukkanum!!!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner