இமயமும் சிகரமும் ரெட்டச்சுழி (விமர்சனம்)

இமயமும் சிகரமும் இணைந்து நடிக்கும் படம்...தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரம்மாக்கள்...இரண்டு பேரையும் வைத்து வேலை வாங்குவதே பெரிய விஷயம்....

இரண்டுபேருமே சினிமாவையே கரைத்து குடித்தவர்கள்..இதில் இமயம் வெகு காலத்துக்கு பிறகு சமீபத்தில்தான் அரிதாரம் பூசியவர்.. சிகரம் ஏற்கனவே அரிதாரம் பூசி இருந்தாலும்... இப்போது திரும்பவும் பூசி இருப்பவர்...

எல்லா ஊரிலும் இப்படி இரண்டு கேரக்டர் இருக்கும்... ஏட்டிக்கு போட்டியாக செய்வது என்பதும்.. கடைசிவரை கவிழ்ந்து விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சப்பை கட்டு கட்டிவிட்டு திரும்பவும் கோதாவில் இறங்குவது இவர்களுக்கு கை வந்த கலை.... அப்படி இரண்டு தலைகட்டுகளின் குடும்ப பிரச்சனையை இந்த படத்தில் பசங்களை வைத்து சொல்லி இருக்கின்றார்...இயக்குனர் தாமிரா...


ரெட்டைசுழி படத்தின் கதை இதுதான்...

ராமசாமி (பாலசந்தர்) சிங்காரவேலன் (பாரதிராஜா) இருவரும் அந்த ஊரின் மிக்ப்பெரிய தலைகட்டு இருவரும் வீம்புக்கு சண்டை போட்டுக்கொள்பவர்கள்... இருவரிடத்திலும் ஒரு குழந்தைதனம் இருக்கும்...இருவருக்கும் பேரன் பேத்திகள்.. ஒரு டஜன்கணக்கில் இருக்க... தாத்தாக்கள் செய்த அதே சண்டை வேலையை பேர பிள்ளைகள் செய்கின்றார்கள்...சிங்காரவேலன் ஒரு காம்ரேட்...அவரது பேத்தி (அஞ்சலி) ஒரு டீச்சர் அந்த பெண்ணுக்கும், ராமசாமி அந்த பகுதி அரசியல்வாதி,அவர் வீட்டில் எடுத்து வளர்க்கும் அறிமுக நாயகனுக்கும் (ஹரி)... சிறுவயது முதலே காதல்... இந்த காதல் நிறைவேறியதா? பெரிசுகள் அடித்து்கொண்ட சண்டை முடிவு்க்கு வந்ததா? அல்லது இவர்கள் போல் அதிக அளவில் அடித்துக்கொண்டபேரபசங்களின் சண்டை முடிவுக்கு வந்ததா? என்பது தெரிய வெள்ளிதிரையில் பார்க்கவும்...

படத்தில் சுவாரஸ்யங்களில் சில....

படத்தின் எதிர்பார்ப்பே.. இமயமும் சிகரமும் எப்படி நடித்து இருக்கின்றார்கள்? என்பதுதான் படத்தின் முதல் ஈர்ப்புக்கு காரணம்... அந்த வேலையை இருவரும் சரியாகவே செய்து இருக்கின்றார்கள்..

மிக முக்கியமாக பாராதிராஜா வரும் காட்சிகள் ரொம்ப அற்புதம்... பாலச்ந்தர் வரும் காட்சிகள் சற்று குறைச்சல் தான் காரணம் அவர் வயது என்று நினைக்க தோன்றுகின்றது...

பாலசந்தர் வரும் பல காட்சிகளில் கைகளில் நடுக்கம் இருக்கின்றது... யாராவது இரண்டு பேரும் இப்போது நடிக்கவைக்க எடு்த்த முயற்ச்சியை பத்து ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து இருக்கலாம்....நல்ல நடிகர்களை வெகு லேட்டாக கண்டு கொண்டுள்ளது தமிழ்படஉலகம்...

தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகளில் வெளுத்து வாங்கிய முளைத்து மூன்று
இலைவிடாத பசங்கள் இந்த படத்தின் பெரிய பலம் ஒரு சில இடங்களில் கொஞ்சம் அதிகபடியாக இருந்தாலும் படத்தின் பலம் இவர்கள்தான்...

பாராதிராஜவுடன் சரிக்கு சமமாக தோழர் என்று அழைத்து நடித்து பேசியபடி நடக்கும் அந்த சின்னபையனின் நடை காட்சி ஒரு சான்று....

எப்போதும் பாலச்சந்தர் ஒரு துப்பாக்கி வைத்துக்கொண்டு சுட்டுவிடுவேன் என்று சொல்லியபடி பாராதிராஜாவை மிரட்டும் இடங்கள் அழகு...
பாலசந்தரின் நடிப்பில் இறந்து போன நாகேஷ் மாடுலேஷனை பார்க்க முடிந்தது...

ஒருசில இடங்களில் பாராதிராஜா 16வயதினிலே காலத்து டயலாக் போல் இழுத்து பேசி அப்புறம் சரி செய்து கொண்டு விட்டார்...

பாரதிராஜா பட்டாபட்டி டிராயருடன் வேட்டியை மடித்து கட்டும் போது பக்கத்து ஊர் கிராமத்தான் கண் முன்...

கல்யாணத்துக்கு பட்டு வேட்டி சட்டை போட்டு கம்பீரமாக நடந்து வரும் கேபி... ஒரு கிழ சி்ங்கம் என்பதை நிருபித்து இருக்கின்றார்...

ஆஞ்சலி டீச்சர் வேடத்தில் நடித்து இருக்கின்றார்... நாங்க எல்லாம் படிக்கும் போது 45 வயசுலதான் டீச்சரா வந்து பாடம் நடத்தினாங்க...
இவ்வளவு இளமையான டீச்சரை இப்போதுதான் பார்க்கின்றேன்... அப்படியே இது போல வந்து பாடம் நடத்தி இருந்தா.. நான் சத்தியமா உருபட்டு இருக்கமாட்டேன்...

டீச்சர் மனசுலு என்ன இருக்கு என்று கேட்கும் போது விஜய் டிவி பொடியன் அவுங்க மனசுல லாங் லாங் எகோ தேர் வாஸ் எ கிங்தான் இருக்கும் என்று சொல்லும் போது தியேட்டர் கொல் என்று சிரிக்கின்றது...அந்த புதிதாய் நடித்து இருக்கும் அந்த அறிமுக நாயகன் ஓகே...

படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் செழியன்தான்...சமீபத்தில் இப்படி ஒரு அழகான பச்சைபசேல் கிராமத்தையும், பிரேமிங்கையும் நான் பார்த்வரை எந்த படத்திலும் பார்க்கவில்லை.. முக்கியமாக அஞ்சலி அறிமுக மழை சாங் அருமை... செழியன் சார் யூ டன் ஏ குட் ஜாப்....

இத்தனை பசங்களை வைத்துக்கொண்டு வேலை வாங்குவது பெரிய விஷயம் என்றாலும்...நிறைய கேரக்டர் அறிமுக காட்சிகளில் குழப்பம் இருப்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்...எல்லா பிரேம்களிலும் பசங்கள் மீதான இம்பார்டன்ட் பலரை இல்லாமல் செய்து விடுகின்றது..

கருனாஸ் படத்தின் சில காட்சிகளில் கலகலப்பு ஏற்றுகின்றார்..


சில டயலாக்குகள் ரசிக்கும் படி உள்ளன...
உங்க தாத்தா கோவிலுக்கு போய் முருகனைஎப்படி கூப்பிடுவார்? காம்ரேட் முருகன்னா...

படத்தின் இரண்டாம் பாதியில் தியேட்டர் சிரிக்க வைத்தது போல் முதல் பாதியில் சிரிக்க வைத்து இருந்தால்... பார்க்கவேண்டயபடங்கள் லிஸ்ட்டில் சுழி வந்து இருக்கும்....

ரெட்டைசுழி டைம்பாசுக்காக, இமயத்துக்கும் சிகரத்துக்காக, நடித்த பசங்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்...

படத்தின் டிரைலர்


படக்குழுவினர் விபரம்...

Directed by Thamira
Produced by S. Shankar
Written by Thamira
Starring K. Balachander
Bharathiraja
Anjali
Music by Karthik Raja
Cinematography Chezhiyan
Studio S Pictures
Release date(s) 2010
Country India
Language Tamil


தியேட்டர் டிஸ்க்கி...

இந்த படத்தை சத்தியத்தில் சாந்தம் தியேட்டரில் பார்த்தேன்...எலைட்டில் ஜீடு ரோவில்உட்கார்ந்தேன்.. நல்லகுளு குளு ஏசி... ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை போட்டார்கள்...கதவுக்கு பக்கத்து சீட்டாக இருந்த காரணத்தால் படம் பார்க்கும் போது நடந்து நடந்து போய் திரையை மறைத்து டென்ஷன் ஏத்திக்கொண்டு இருந்தார்கள்...

விசில் சத்தம் ஏதும் இல்லாமல் பார்த்தேன்...

ஒரு பதுமை டிசர்ட்டில் ஸ்டுடியோ 5வுக்கு எப்படி போகனும் என்று என்னிடம் வழி கேட்டது..

பாலசந்தரின் நாடக சிஷ்யன் ஒருவர் குரு நடித்த படத்தை பார்க்கமுதல்நாள் முதல்காட்சி சத்தியத்தில் பார்க்க வந்து இருந்தார்...

எங்கள் தலைவர் உண்மைதமிழனை தேடினேன் அவரை காணவில்லை.. அவரும் பாலச்சந்தரின் சிஷ்யன்தான்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

17 comments:

 1. படத்துல ஏதாவது மெசேஜ் சொல்லி இருக்காங்களா அண்ணே ??

  டைம் பாஸ்க்கு படத்தை பார்த்தா போச்சு ..

  ReplyDelete
 2. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை பாஸ். ஷங்கரின் தயாரிப்பில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களை வைத்துக்கொண்டு தமிழின் மறக்க முடியாத படத்தை கொடுத்திருக்கலாம். தாமிரா சறுக்கிவிட்டார், படம் பெரிதாய் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சிறுவர்கள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். அங்காடித்தெரு அஞ்சலியை எதிர்பார்த்து இந்தப்படத்தை பார்க்க போக வேண்டாம்

  ReplyDelete
 3. நலல விமர்சனம் ஜாக்கி.

  ReplyDelete
 4. இந்த படத்துல பாலச்சந்தரின் வக்கிரம் மிகுந்த காட்சிகள் ஏதாவது இருக்கா?

  ReplyDelete
 5. //ஆஞ்சலி டீச்சர் வேடத்தில் நடித்து இருக்கின்றார்... நாங்க எல்லாம் படிக்கும் போது 45 வயசுலதான் டீச்சரா வந்து பாடம் நடத்தினாங்க...
  இவ்வளவு இளமையான டீச்சரை இப்போதுதான் பார்க்கின்றேன்... அப்படியே இது போல வந்து பாடம் நடத்தி இருந்தா.. நான் சத்தியமா உருபட்டு இருக்கமாட்டேன்...//

  பட்டாசு பன்ச் BOSS.

  மனோ

  ReplyDelete
 6. பகிர்விற்கு நன்றி.ஊருக்கு வந்தவுடன் பார்த்திடுவோம் ஜாக்கி.

  ReplyDelete
 7. டைம் பாஸ் ஆகலைனா ரெட்டைசுழி போறேன் அண்ணே....

  ReplyDelete
 8. நானும் உண்மைதமிழனும் மாலை காட்சி உதயம் தியேட்டரில் பார்த்தோம். உன்னையும் தேடினோம்.. அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 9. திரைவிமர்சனத்தை கொஞ்சம் நல்லாதான் எழுதுங்களேன். ஷாட் எப்படி எடுக்குறது?, ஷாட் பியூட்டி நா என்னது? இப்படியெல்லாம் கிளாஸ் எடுக்குரீங்க, ஒரு படத்த சரியா விமர்சனப்படுத்த தெரியலையே பாஸூ....

  ReplyDelete
 10. தல, கேமரா, பாட்டு, பின்னனி இசைனு ஏதாவது தேறுமா? பாழாபோன கார்த்திக்ராஜாவுக்கு அதிர்ஷ்டமே இல்லை போல, நீங்க என்ன சொல்ரீங்க.

  ReplyDelete
 11. விமர்சனம் சுருக்கமா, நல்லா
  இருக்கு.

  ReplyDelete
 12. no need to go th silverscreen to watch the climax, u can watch the climax in addhisha's post

  ReplyDelete
 13. //பாரதிராஜா பட்டாபட்டி டிராயருடன்//


  பதிவர் பட்டாபட்டி டிராயர் நடித்துள்ளதா? :)))

  ReplyDelete
 14. //ஒரு பதுமை டிசர்ட்டில் ஸ்டுடியோ 5வுக்கு எப்படி போகனும் என்று என்னிடம் வழி கேட்டது..//

  என்ன கலர் டீசர்ட்டுன்னு சொல்லவேயில்ல

  ReplyDelete
 15. "எங்கள் தலைவர் உண்மைதமிழனை தேடினேன் அவரை காணவில்லை.. அவரும் பாலச்சந்தரின் சிஷ்யன்தான்..."


  அவர் கேபிள் பதிவ படிச்சிருப்பாரு

  ReplyDelete
 16. //இவ்வளவு இளமையான டீச்சரை இப்போதுதான் பார்க்கின்றேன்... அப்படியே இது போல வந்து பாடம் நடத்தி இருந்தா.. நான் சத்தியமா உருபட்டு இருக்கமாட்டேன்...//

  உண்மைதான் ஜாக்கி, நான் என் டீச்சரையே லவ் பண்ணியிருக்கேன்!!!

  ஓஓ..........விமர்சனம் நல்லாயிருக்கு!!!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner