(THE ASSIGNMENT) ஆள்மாறாட்டம்...

சமீபத்துல தென்மாவட்டத்துல ஒரு இன்ஸ்பெக்கடரை நடு ரோட்டுல வெட்டி சாய்ச்சாய்ங்க....அவருக்கு குத்து உசிரு கொலை உசிரா இருக்கும் போது, அந்த வழியா காருல வந்த அரசியல்வாதிங்க... அவருக்கு எந்த உதவியும் செய்யலை .. நம்மை எந்த விஷயத்துக்குமே, கண்டுக்கவே கண்டுக்காத வட இந்திய சேனல்கள் அந்த காட்சியை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி ... நம்மோட மனிதாபிமான செயலை ஊர் அறிய வெச்சாங்க....

இதுல கொடுமை என்னன்னா அந்த இன்ஸ்பெக்டர் துடி துடிச்சி இறந்து போயிட்டார்... சரி ஏதோ அவருக்கு எதிரிகளினால்தான் அந்த ஆபத்துன்னு நினைச்சிகிட்டு இருந்தவங்களுக்கு.... இவர் முக ஜாடையில இருக்கற வேற ஒரு இன்ஸ்பெக்டர்க்கும், ஒரு பெண்ணுக்கும் உண்டான காதலை அந்த இன்ஸ்பெக்டர் புறக்கனிக்க, அவரை தன் செந்தங்களுடன், தன்னை புறக்கனிச்ச,அந்த இன்ஸ்பெக்டரை நடு ரோட்டில் போடும் முடிவில் அந்த பெண் இருக்க... இரண்டு பேருக்கும் உருவ ஒற்றுமை ஒரே மாதிரியா இருக்க.... அவரை வெட்ட நினைச்சு, இந்த அப்பாவி இன்ஸ்பெக்டரை வெட்டிட்டு போயிட்டாங்க...உருவ ஒற்றுமை ஒரே மாதிரியா இருக்க.... தவறே செய்யாத ஒரு அப்பாவி நடு ரோட்டுல ஏன் சாகின்றோம் என்ற குழப்பத்துடன் நடு ரோட்டில் இறந்து போனார்... அவர் என்ன தவறு செய்தார்... உருவ ஒற்றுமை கொஞ்சம் ஒற்று போனது அவர்தவறா? அல்லது எல்லாம் விதியா...?
இது போலான ஆள்மாறாட்டத்துக்கு மாட்டிக் கொண்டு நிறைய பேர் பல அவஸ்தைகளை பார்த்து இருக்கின்றார்கள்.... நம்ம ஹீரோவுக்கும் இதே பிரச்சனைதான்....

(THE ASSIGNMENT) படத்தின் கதை இது தான்....

Carlos the Jackal (Aidan Quinn) இவன் ஒரு கொலை செய்யவும் பழி பாவத்துக்கு அஞ்சாமல் எதையும் செய்யும் ஒரு சைகோ.... ஒரே ஒருத்தனை சாவடிக்கனும்னு நினைச்சான் வச்சிக்கோங்க... அவன் ஒரு ஓட்டலுக்கு பக்கத்துல உட்கார்ந்து இருந்தா.. அந்த ஓட்டலையே அழிச்சிடுவான்... அங்க சாப்பிட்டு கிட்ட இருந்த மக்கள்... அங்க ஓடி திறிஞ்சு விளையாடிய குழந்தைகள்னு எதையும் நினைச்சு பார்க்காம இருக்கும் ஒரு கொடுரன்.... CIA agent Jack Shaw (Donald Sutherland) பல வருஷமா இந்த கார்லோஸ் கைல காப்பு மாட்டனும்னு அலைஞ்சி்கிட்டு இருக்கற மனுஷன்....20 வருஷமா பல கொலை மற்றும் வெடிகுண்டு வழக்குகளில் தேடபடும் குற்றவாளி கார்லோஸ்... அப்படி பட்டவன் மாட்டினான்னு வச்சிக்கோங்க எவ்வளவு சந்தோசமா இருக்கும்... Amos (Ben Kingsley) ஒரு அதிகாரி... அவரும் கார்லோசை தேடி வரும் அதிகாரி... அவரு கைல அவன் மாட்டிகிட்டான்.... ஆனா அவன் தன்னை அமெரிக்கா நேவி ஆபிசர்Annibal Ramirez என்று சொல்லிக்கொள்ள.... தீர விசாரித்ததில் அவன் அமெரிக்க நேவி ஆபிசர் என்று தெரிய வருகின்றது ....அவன் சர்வதேச பயங்கரவாதி கார்லோஸ் போலவே அவன் இருக்க....சி ஐ ஏ அவனை கார்லோஸ் போல மாற்ற முனைய , முதலிங்ல ஒத்துக்கொள்ள அடம் பிடிக்க ... அதன் பிறகு ஒத்தக்கொள்ள, கார்லோஸ் போல் பழக்க வழக்கம், நடை உடை எல்லாம் மாற்றி கார்லோஸ் கோட்டைக்கு அனுப்ப முயல... சிஐஏ டீம் வெற்றி பெற்றதா? கார்லோஸ் போல் வேடமிட்ட அமெரிக்க நேவி ஆபிசரின்Annibal Ramirez பர்சனல் வாழ்க்கை என்னவானது என்று வழக்கம் போல் வெண்திரரையில் காணுங்கள்..

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

படத்தின் ஆடிநாதம் ஆள்மாறாட்டம் என்ற இருந்தாலும் இதே கதை அமைப்பில் நாம் பல படங்களை பார்த்து இருந்தாலும்... இந்த படத்தின் திரைக்கதையும் நடு நடுவில் வரும் சின்ன சின்ன நிர்வானகாட்சிகளும் படத்தை சூடு குறையாமல் டாப் கியரில் கொண்டு செல்ல பெரிதும் உதவுகின்றன....

படத்துக்கு பெரிய பிளஸ் கேமராமேனின் உழைப்பு முதல் காட்சியில் சிறுவர்கள் சிறுநீர் கழிப்பதில் இருந்து கார்லோஸ் ஒரு பெண்ணிடம் உடலுறவில் ஈடுபட்டு இருப்பது வரை ஒரே ஷாட்....

கார்லோஸ் போல்Annibal Ramirezயை மாற்ற கொடுக்கும் சிஐ ஏ பயிற்ச்சிகள் சவாரஸ்யம் தருபவை ....

படத்தில் உள்ள டுவிஸ்ட்டுகள் பல படத்தில் பார்த்து இருக்கலாம் அல்லது இந்த படம் வந்து பல வருடங்கள் ஆன காரணத்தால், அது போல காட்சிகள் பல படத்தில் வைத்து இருக்கலாம்... படம் வெளியான ஆண்டு 1997...

படத்தின் அந்த கிளைமாக்ஸ் கடைசி சிலந்தி வலை ஷாட் நல்ல டுவிஸ்ட்..

அசைன்மென்ட் என்று டைட்டில் போடும் அந்த காட்சியே இந்த படம் ஒரு வித்தியாசமான படம் என்று சொல்ல வைக்கும்....

இரட்டை வேடத்தில் Aidan Quinn நன்றாகவே பர்பாம் செய்து இருப்பார்...

பென்கிங்ஸ்லி நடிப்பை சொல்லவும் வேண்டுமோ???

நல்ல ஆக்ஷன் திரில்லர் பார்க்க ஆசைபட்டால் இந்த படத்தை பார்க்கலாம்....

படத்தின் டிரைலர்...




படக்குழுவினர் விபரம்..
Directed by Christian Duguay
Produced by Franco Battista
Tom Berry
Written by Dan Gordon
Sabi H. Shabtai
Starring Aidan Quinn
Donald Sutherland
Ben Kingsley
Music by Normand Corbeil
Cinematography Christian Duguay
David Franco
Editing by Yves Langlois
Distributed by Triumph Films (US)
(Sony Pictures Entertainment)
Release date(s) September 26, 1997
Running time 119 min.
Country Canada
Language English
Gross revenue $332,597 (domestic)

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

15 comments:

  1. இப்ப கமென்ட் போட முடியுதான்னு சொல்லுங்க..

    ReplyDelete
  2. /////(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....////////


    போட்டாச்சு

    ReplyDelete
  3. படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது உங்களின் விமர்சனம் . வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  4. இப்ப ஓக்கே ஜாக்கி...

    ReplyDelete
  5. /////(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....////////

    நன்றி மக்கா...

    ReplyDelete
  6. இப்ப ஓக்கே ஜாக்கி..//

    நன்றி துபாய் ராஜா.. கமென்ட் போடுவதில் பிரச்சனை என்று நீங்களாவது சொல்லி இருக்கலாம்...

    ReplyDelete
  7. அண்ணே உங்க பதிவுல பின்னூட்டம் போடா முடியல,

    பின்னூட்டம் ...
    இந்த படம் இன்னும் பார்க்கல, ஆனா உங்க விமர்சனம் உடனே பார்க்க தூண்டுகிறது
    torrent ஆண்டவர் கிட்ட வாங்கி பார்க்கிறேன்

    அன்புடன்,
    கே.ஆர்.பி.செந்தில்


    நன்றி செந்தில் நீங்களாவது சொன்னீர்களே...

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  8. இப்ப கமென்ட் பிரச்சனை சரிசெய்யபட்டதுன்னு நினைக்கின்றேன்..

    ReplyDelete
  9. (ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

    ஓட்டு பட்டயே இல்லயே....

    ReplyDelete
  10. இப்ப கமென்ட் போட முடியுது, ஓட்டும் போட்டாச்சு ..

    ReplyDelete
  11. நல்ல பதிவு ஜாக்கி.. கொஞ்சம் நம்ம பக்கத்தையும் பாத்து கருத்து சொல்லுங்களேன்..

    ReplyDelete
  12. படத்த லிஸ்ட்ல சேர்த்தாச்சு. அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  13. எனக்கென்னமோ உங்க பதிவு சரியாக எழுதப்படவில்லை என தோன்றுகிறது.

    ReplyDelete
  14. வழக்கம் போல கலக்கல்தான்.தமிழில் இதும்போன்ர படங்கள் வந்திருக்கா

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner