(பையா)கார்த்தி, தமன்னாவோடு ஒரு கார் பயணம்....

ஒரு படம் டிரைலரில் மிரட்ட முடியுமா? அப்படி மிரட்டிய படம்தான் பையா....சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்தது பையா படத்தின் டிரைலர் என்பேன்... நல்ல டிரைலர் கட்...

ரோட்டில் போகும் எத்தனையோ பெண்கள் நம் கவனத்தை கலைத்தாலும் ஒரு சில பெண்கள் நம் நினைவில் வந்து போய் கொண்டே இருப்பார்கள்... அந்த பெண்ணுக்காக எதுவும் செய்யலாம் என்று தோன்றும்...வேலை வெட்டி பற்றி கவலைபடாமல் அந்த பெண்ணுக்காக சுற்றி இருக்கின்றோம்... இப்போதும் சுற்றி வருகின்றார்கள்...

பையா படத்தின் கதை இதுதான்..

சிவா(கார்த்தி) பெங்களுரில் வேலை தேடிக்கொண்டு இருக்கும் இன்றைய நவநாகரிக இளைஞன்.. ஒரு நாள் பேருந்தில் பயணிக்கும் போது, ஒரு பெண்ணை பார்க்கின்றான்..அவள் பெயர் சாரு (தமன்னா) அவளுக்கு இருக்கும் பிரச்சனையே அவளுக்கு இருக்கும் சொத்துதான்.. அவளுக்கு சென்னையில் கட்டாய கல்யாணம் செய்து வைக்க அவள் அப்பா முயல...அவள் அங்கு இருந்து தப்பி கார்த்தி காரில் அடைக்கலம் புகுகின்றாள்... அவளை அப்பாவின் அடியாட்கள் கூட்டம் எல்லா இடத்திலும் தேடி அலைய, அவள் பாட்டி வீடு பம்பாயில் இருக்க, அங்கு தன்னை சேர்பித்து விடும் படி காத்தியிடம்,டாக்சி டிரைவர் என்ற நினைப்பில் சொல்ல, அவளுக்கு சிவா உதவகின்றான்.... இருவரும் பம்பாய்க்கு காரில் பயணம் செய்ய அது துரத்தல்களுடன்,கனவுகளுடன், சண்டைகளுடன் அந்த பயணம் தொடர முடிவு என்ன என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

பட்டாபட்டி மற்றும் கைலியில் இருந்து விட்டு விடுதலையாகி இருக்கும் கார்த்தியின் அழகும் சிரிப்பும், சண்டைகாட்சிகளின் போது காட்டும் மேனாரிசங்களும், அடுத்த படத்து கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் உறுதி என்று கைதட்டல்கள் உறுதி செய்கின்றது....

கார்த்திக்கு இந்த படத்தில் ஹேண்ட்சம் பாய் வேடம் பார்த்து ரசிக்கும் விதமாக இருக்கின்றார்...அதுவும் அவர் காலை உதறிவிட்டு ஸ்டைலாக சிட்டி அடித்தபடி நடந்து , முகத்தில் சிரிப்புமாக வரும் அவர்.... ரொம்ப உற்சாகத்தை பெண்களுக்கும், சொற்ப்ப உற்சாகத்தை ஆண்களுக்கும் தருகின்றார்....

பாடல்காட்சிகளிலும், சண்டைகாட்சிகளிலும் மிகுந்த உற்சாகத்தோடு நடித்து இருப்பது நன்றாக இருக்கின்றது..
“நீ எவனா இரு, யார இரு உன் அளு என் மேல கைவச்சான் அதான் அடிச்சேன்”என்று சொல்லும் உடல்மொழியும் டயலாக் டெலிவரியும் அற்புதம்.... நன்றாக இருக்கின்றது....

இந்த படத்தில் நடித்த தமன்னா, மிலிந் சோமன் இருவரோடும் நான் வெவ்வேறு படங்களில் பணிபுரிந்து இருக்கின்றேன்...

இந்த படத்தை இன்னும் ரசிக்க தமன்னாவும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகது...தமன்னா நெய் ரோஸ்ட் தின்னும் போது ,உதட்டில் ஒட்டிய சிறு தோசை பருக்கு கூட மிக அழகாகவே இருக்கின்றது...

அடடா மழைடா சாங் பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்க போவது நிச்சயம்...அதுவும் மான் போல் துள்ளி துள்ளி குதிக்கின்றார்... தமன்னாவின் தொப்பை இல்லாத சின்ன இடையை 48 ,96பிரேம் ஸ்பீடுகளில் அதிர வைத்து படம் எடுத்து இருக்கின்றார்கள்...

இருவருக்குமான உடை வடிவமைப்பு நன்றாக இருக்கின்றது.. முக்கியமாக கார்த்தியின் முரட்டு டிரஸ் மற்றும் பெங்களுர் ஆபிஸ் உடுப்புகள் அற்புதம்...

பெண்கள் சீத்ருவாக சுடிதார் போட்டால் அதற்கு உள்ளே ஸ்லிப் என்று உள்ளே ஒரு உடை அணிவார்கள்.. அதையே பெரும்பாலான காட்சிகளில் தமன்னா போட்டு வருகின்றார்...உடைகள் வடிவமைப்பு பிரியாமணிகண்டன்...இவர் ஓம் சாந்தி ஓம் படம் எடுத்து பாலிவூட்டை கலக்கும் கேமராமேன் மணிகண்டன் அவர்கள் துணைவியார்....


படத்தின் துள்ளளுக்கு மிக முக்கிய காரணம். யுவன் இசை என்றால் அது மிகையில்லை...முக்கியமாக பம்பாயில் மிலிந் சோமனுடன் நடக்கும் சண்டையின் போது பின்னனி இசை...எல்லா பாடல்களும் சூப்பர் என்பதால் அது இன்னும் அழகாய் படமாக்கபட்டு இருக்கின்றது....

ஒளிப்பதிவாளர் மதியின் உழைப்பு படம் நெடுகிலும் உணர முடிகின்றது... ஒரு டேபிள் பேனின் இறக்கை சுழலும் போது தமன்னா மற்றும் கார்த்தியை காட்டிய இடம் அற்புதம்...

எல்லா படத்திலும் லிங்கு ஒரு குளோஸ் வைப்பார்.. ரன் படத்தில் மாதவனுடன் சண்டைக்கு பேருந்தில் பயணபடும் வில்லனின் பயத்தை வேர்வை வழிதலிலும்,மாதவன் கையை பேண்டில் தடவி வியர்வை சரி பண்ணுவது போல் செய்யும் காட்சிகளின் குளோசப் பிரசித்தம்... இந்த படத்தில் தமன்னா இருட்டில் காரில் இருந்து இறங்கியதும் அவர் உடை சரி செய்யும் காட்சிகளுக்கு குளோசப் போட்டு இருக்கின்றார்....

படம் நெடுகிலும் இருவர் மட்டுமே.... அதை சுவாரஸ்யமாக சொன்ன விதத்தில் தான் ஒரு தேர்ந்த இயக்குனர் என்று சொன்னாலும், கிளைமாக்ஸ் பற்றி அடுத்த பத்தியி்ல் படியுங்கள்
லிங்குசாமியின் ஏனைய படங்களை பார்த்தவர்களில் இந்த படமும் அதில் ஒன்று என்று கடந்து போகலாம்.. சிலர் ரசிக்கலாம்... என்னால் ரசிக்க முடிந்தது...கதையோடு என்னால் பயணிக்க முடிந்தது...ஆனால் ரயிலில், எதிர் சீட்டில் ஒரு பெண் உட்கார்ந்து, நம்மிடம் சிரிக்க சிரிக்க பேசி, நம்மை ரசிக்கவைத்து,அந்த கணங்களை மனதில் அசைபோட்டுக்கொண்டு இருக்கும் போது,ஸ்டேஷன் வந்ததும் “போயிட்டு வரேன்” என்று சொல்லாமல் எழுந்து போய் விடுவார்களே அது போல் படத்தின் இறுதி இருந்தது....

படத்தின் டிரைலர்...

படக்குழுவினர்விபரம்...
Banner: Thirupathi Brothers
Cast: Karthi, Tamannah
Direction: Lingusamy
Production: Subash Chandrabose
Music: Yuvan Shankar Raja


தியேட்டர் டிஸ்க்கி...

அதே கமலா தியேட்டர்தான்... ஆனா காலையில சென்னையில காலை 8,15 ஸ்பெஷல் ஷோ இதுதான் முதல் படம்....

காலையிலேயே 7,30 மணிக்கு மஞ்சள் சடிதாரில் லூஸ்ஹேரில் பின்பக்கம் பேக் மாட்டியபடி, அக்டிவா ஸ்கூட்டரில் வேகம் எடுத்த பெண்ணி்ன் முகம் பார்க்க போருர் சிக்னலில் இருந்து விரட்ட அந்த பெண் புயல் வேகத்தில் சென்று சாலிகிராமம் சிக்னல் அருகில் கட் செய்து அவள் போய் விட்டாள், கடைசி வரை அவள் முகம் பார்க்கவில்லை.. என் பைக் சீட்டி100 இடம் இருந்து பயங்கர முச்சு இரைச்சலுடன், போடாங் நீயெல்லாம் ஒரு, என்று திட்ட... சபை நாகரீகம் கருதி அந்த கெட்டவார்த்தைகளை தவிர்த்து விட்டேன்...

காலையிலேயே ஒருவர் குடும்பத்துடன் ,வெள்ளிக்கிழமை கோவிலுக்கு கிளம்பியது போல், மனைவி பிள்ளை குட்டிகளுடன் காலை 8 மணிக்கே படத்துக்கு வந்து இருந்தார்...

டோக்கன் போடும் இடத்தில் 15 ரூபாய் பைக் டோக்கன் என்றதும் ஷாக்காகி பத்து ரூபாய்தான் வைத்த இருந்தார் போல... யாரிடம் கேட்பது என்று தவித்தவருக்கு நான் 5 ரூபாய் கொடுத்தேன்... அந்த உதவியை சட்டென எதிர்பார்க்காதவர் நன்றி சொல்லிக்கொண்டே இருந்தார்...

கமலா தியேட்டா உள்ளே... போகும் போதே பான்பராக், சிகரேட் ,பீடி போன்றவற்றை செக் செய்து அனுப்புகின்றார்கள்...

கமலா தியேட்டரில்பாப்கானுடன் சிவப்பு கலரில் ஒரு மசாலா பொடி கொடுக்கின்றார்கள்... அதை திறந்தாலே துவைக்காத சாக்சை மோந்து பார்த்தது போல ஒரு நாத்தம் அடிக்கின்றது....

பப்பிள்காம் மென்ற இளைஞனை கமலா தியேட்டர் சிப்பந்தி ஒருவர்..

என்னது வாயில....
பைப்பிள்கம்

மென்னுட்டு மறக்காம
அதை குப்பை தொட்டியில் துப்ப சொன்ன போது எனக்கு மயக்கமே வந்தது...

தியேட்டரில் சிகரேட் பிடிக்க தடை என்பதால், பாடல்காட்சிகளின் போது எவரும் எழுந்து வெளியே போகவில்லை..

கமலா டிக்கெட் ஸ்பான்சர் செய்த பில்டர் செந்திலுக்கு நன்றிகள்..

பையா... ஜாலியாக பார்க்கலாம்....


அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

30 comments:

  1. vimarsanam arumai sir..vote podalamnu partha neenka innum tamilish-la submit pannala pola irruku..sikiram submit pannunka sir..

    ReplyDelete
  2. அண்ணே
    விமர்சனம் அருமை
    ஃபார்மாலிட்டிஸ் டன்

    ReplyDelete
  3. இதிலும் தியேட்டர் டிஸ்கி அருமை,குறிப்பா அந்த பார்கிங் ரொம்ப ரசித்தேன்

    ReplyDelete
  4. சுடச்சுட விமர்சனம்,
    பாக்கலாம்.

    ReplyDelete
  5. ஒரு முடிவாத்தான் இருப்பீங்க போல ஜாக்கி பொளந்து கட்டுங்க.விமர்சனம் அருமை .

    ReplyDelete
  6. அடடா மழை பாட்டு அட்டகாசம் ..... THANGA THALAVI THAMANNAH................ இடுப்பு பேஜாருங்க ,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  7. சீக்கிரம் பார்த்திடலாம் ஜாக்கி.

    ReplyDelete
  8. தமன்னா அக்காவுக்காக, இன்னைக்கு NIGHT பர்த்திடுவோம்.

    மனோ

    ReplyDelete
  9. காலையில் 8 மணிக்கே படமா?ம்

    ReplyDelete
  10. இன்னிக்கு நைட் ஷோ போறதா இருக்கேன், போலாமா வேணாமான்னு சீக்கிரமா சொல்லு
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  11. நான் விமர்சனம் படிக்காமல் படம் பார்க்கும் ஜாதி, அதனால் இந்த விமர்சனம் படம் பார்த்துவிட்டுத்தான் படிப்பேன்(தமிழ் படம் மட்டும்தான்). டிஸ்கி மட்டும் படித்தேன். ஓட்டு போட்டாச்சி.

    ReplyDelete
  12. Paiya trailor is not that great. Have you seen Trailors of Inaindha kaikal, aboorva sagotargal.

    ReplyDelete
  13. Most of the bloggers say the film is not that interesting

    ReplyDelete
  14. ஒரு ஒட்டு போட்டாச்சு போட்டாச்சு!!!

    ReplyDelete
  15. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    http://www.thalaivan.com

    Hello

    you can register in our website http://www.thalaivan.com and post your articles

    install our voting button and get more visitors

    http://www.thalaivan.com/button.html


    Visit our website for more information http://www.thalaivan.com

    ReplyDelete
  16. mazhai song superb,... waiting for release in Muscat... thanks for u r review...
    Then Jackie Sir House Warming ku wish panna mudiyala..
    Belated Wishes...

    Regards
    Vijay
    Muscat

    ReplyDelete
  17. பொறாமையா இருக்கு. படம் வந்து சில நாட்களில் பார்த்துவிடுகிறீர்கள்.

    அங்காடித்தெரு, உங்கள் வரிகளில் பார்த்த உணர்வு கொடுத்தது. உங்கள் அனுபவத்தை எழுதியிருந்தது அருமை.

    பையா ! - துள்ளல் நடையில் விமர்சனம். பைக் சேஸிங் பயங்கரம். பார்த்து நிதானமாக சேஸ் செய்யவும் :)

    தியேட்டர் பற்றி எழுதுவது வித்தியாசமாக இருக்கிறது

    ReplyDelete
  18. தமன்னாவுக்காக பார்த்திடலாம்

    ReplyDelete
  19. vimarsanam arumai sir..vote podalamnu partha neenka innum tamilish-la submit pannala pola irruku..sikiram submit pannunka sir..--


    நன்றி வெங்கட் உங்கள் ஆர்வத்துக்கு..

    ReplyDelete
  20. நன்றி கார்த்தி...

    நன்றி சைவ கொத்து பாரோட்டா....

    நன்றி அன்பு...

    நன்றி ஷாபி..


    நன்றி மனோ...

    நன்றி ரகுலன் சந்திரா,....

    நன்றி ராம் ஜி... அது அவரவர் பார்வை நாம் என்ன செய்ய முடியும்...

    நன்றி துபாய் ராஜா...

    நன்றி ஸ்ரீராம்...

    நன்றி கல்ப் தமிழன்..


    நன்றி ரஞ்சித் ஓட்டு போட்டதற்க்கு...


    நன்றி காஞ்சி சுரேஷ்

    நன்றி டிவிராதகிருஷ்ணன்

    நன்றி புதுவை சிவா...

    நன்றி சுரேஷ்


    நன்றி விஜய்.. வாழ்த்துக்கு

    நன்றி பின்னோக்கி... இப்ப கொஞ்சம் பிரியா இருக்கேன் அதான்...வந்த படத்தை ஒடனே பார்த்துடறேன்..

    ReplyDelete
  21. /
    பெண்கள் சீத்ருவாக சுடிதார் போட்டால் அதற்கு உள்ளே ஸ்லிப் என்று உள்ளே ஒரு உடை அணிவார்கள்..
    /

    ஆனாலும் ரொம்ப டெக்னிக்கலா விமர்சனம் பண்றீங்கண்ணே!
    :)))))))))))

    ReplyDelete
  22. I am going to file a police complaint for chasing me.

    ReplyDelete
  23. இந்தப் படத்தோட டிரெய்லரை பார்த்துவிட்டு ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் என்னிடம் சொன்ன கமண்ட் என்னவென்றால், ”இந்தப்படத்துக்கு ஏம்பா “பையா”-ன்னு பேரு வச்சாங்க... பேசாம ”காரு வேகமா போகுது” ன்னு பேரு வச்சரிருக்கலாம்”

    லிங்குசாமியின் பயனம் தொடர வாழத்துக்கள்.

    ReplyDelete
  24. நண்பா. விமர்சனம் சூப்பர். என்னை ஞாபகம் இருக்கும்னு நெனைக்கிறேன்.
    ----------
    பையா... பக்கா மசாலா படம். பீமா தந்த தோல்வியை சரி கட்ட, லிங்கு மிகவும் கஷ்டப்பட்டு கலக்கிய ஒரு மசாலா கலவை. அவ்வளவே. தினமும் தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாப்பிடும் போது காரமா ஹைதராபாத் பிரியாணி பொட்டலத்தை பிரித்து வைத்து சாப்பிடற மாதிரியான ஒரு படம். இதோ என்னுடைய விமர்சனம் http://www.cpraveen.com/suvadugal/paiyya-tamil-movie-review/

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner