சுறா,காசிதியேட்டர்,விஜய்ரசிகர்கள்...


நான் கடைசியாக விஜய் நடித்த படத்தை தியேட்டரில் பார்த்தது குஷிபடம்தான்... அதன் பிறகு விஜய் நடித்த எந்த படத்தையும் நான் பார்த்தது இல்லை.. இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல்... இந்த படத்தில் பாதி படம் வரை பணி புரிந்தவன்நான்....சில பல காரணங்களால் படத்தை தொடர முடியவில்லை..
பொதுவாக எந்த படத்தையும் ரசித்து பார்க்கவேண்டும்...இல்லையென்றால் பார்க்காமல் இருந்து விட வேண்டும் என்ற கொள்கை உடையவன்நான்...முதல் நாளில் போய் பார்க்கும் போது ரசிகர்கள் கரகோஷத்தால் பல காட்சி அமைப்புகள் புரியாமல் போய் விடும் என்பதால் அதனை தவிர்த்து விடுவேன்.. ஆனால் சில படங்கள் அப்படி அல்ல...முதல்காட்சி எப்படியாவது அடித்து பிடித்து பார்த்து விடுவேன்...

சுறா படத்தின் முதல் நாள் முதல் காட்சியை எடுத்தது கேரளா ஆலப்புழாவில் உள்ள ஒரு பெரிய சர்ச்சில்.... விஜய் சர்ச்சில் விழுந்து கும்பிடும் காட்சி அது.. அப்போது கேரளாஆலப்புழாவில் நடிகர் விஜய்க்கு இருந்த மாஸ் பார்த்து வியந்து போனேன்... அதுவும் ஒரு நோட்புத்தகம் வாங்க ஆசைப்பட்டேன்... அதில் சில குறிப்புகளை எழுத வாங்கிய போது அதில் விஜய் படம் போட பட்டு இருந்தது...அந்த அளவுக்கு விஜய் பேமஸ்....அந்த பகுதியில் உள்ள பள்ளி பிள்ளைகளுக்கு விஜய் படத்தின் படபிடிப்பு என்று தெரிந்ததும்.. அங்கு கூடிய கூட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை... விஜயின் கை அசைப்புக்கு அந்த இடமே அதிர்ந்தது...

(பத்திரிக்கையில் வந்த புகைபடத்தில் விஜய் பின்புறம் வீடியோ எடுத்துக்கொண்டு இருப்பவர் பக்கத்தில் கழுத்தில் சன் கிளாஸ் மாட்டியபடி நிற்பது இந்த ஜாக்கிதான்...)


ஆலப்புழாவில் இருந்த போது விஜய் படபிடிப்புக்கு வந்து இருக்கும் செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை வெளியிட்டது... அவ்வளவுதான் 150மற்றும் 200 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து எல்லாம் ரசிகர்வந்து குவிய ஆரம்பித்துவிட்டர்கள்.. அதில் ஒரு பையன் கையில் காலில் பெரிய பெரிய தழும்புகளை காட்டிய படி விஜய் நடித்த ஆதி படத்தை பார்க்க நண்பர்களுடன் பைக்கில் போகும் போது ஆக்சிடென்ட் ஆகிவிட்டதையும் ஒருமுறை விஜய்சாரை பார்த்துவிட்டால் போதும் என்று கொளுத்தும் வெயிலில் நின்று பார்த்து விட்டு போனார்கள்... அந்த அளவுக்கு மாஸ்...

பெண்பிள்ளைகள் படபிடிப்பு நடக்கும் போது பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு ஒரு போட்டோவுக்கு தவம் கிடந்த பருவவயது பெண்கள் ஏராளம்...கேரளாவில் இவ்வளவு ரசிகர்களை பார்த்துநான் வியந்து போனேன்...
சரி சுறா படத்தின் கதை என்ன?...

வழக்கமான கமர்சியல் தமிழ்சினிமா... வேறுஏதும் சொல்லறதுக்கு இல்லை..

காசி தியேட்டர்...
எல்லா தியேட்டரும் புல் என்பதால் பதிவர் நித்யா.. காசியில் தியேட்டரில் இணையத்தில் டிக்கெட் புக்செய்தார்.... அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் பார்க்க போனோம்....

புது படம் என்பதால் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்த காரணத்தால் சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வாகனத்தை நிறுத்தி டிபிகல் இந்தியனாக தங்களை காட்டிக்கொண்டார்கள்...
(மெயின் ரோட்டில் குவிந்து டிராபிக் ஏற்படுத்தும் ரசிககர்கள்...)

படம் போடுவதற்க்கு முன் ஒரு சிலைட் போட்டார்கள்... பாசகார ரசிகர்கள் கத்தல் போட்டு அதை வரவேற்றார்களா, அல்லது எதிர்த்தார்காளா? என்பது தெரியவில்லை... படம் சேட்டிலைட் வழியாக புரோஜெக்ட ஆவதால் ஒன்ஸ்மோர் கேட்கவேண்டாம் என்று ஸ்லைட் போட்டார்கள்...

(ஒன்ஸ்மோர் கேட்காதே ஸ்லைடு...)

படத்தை போட்டதும்... விஜய் இன்ட்ரோ கொடுத்ததும்... தியேட்டரில் ரசிகர்கள் சாமியாடி தீர்த்துவிட்டார்கள்... சிலர் திரை அருகே போய் திருப்பதி பெருமாளை சாஷ்டாங்கமாக வணங்குவது போல் நெடுங்சான் கிடையாக திரை பக்கத்தில் விழுந்து வணங்க.. தியேட்டர் சிப்பந்தி எல்லோரையும் திரைக்கு பக்கத்தில் இருந்து விரட்டிக்கொண்டு இருந்தார்....

சன்பிக்சர் கலாநிதிமாறன் என்று பெயர் போடும் இடங்களில் கைதட்டல்,விசில்சத்தம் காதைபிளந்தது...

எனக்கு மட்டும் வீடுகட்டிக்கொள்ள கேட்கலை பாதர் எங்க ஜனம்1500 பேருக்கும் வீடு வேண்டும் என்று சர்ச்சில்.... விஜய் பாதர் ராதரவியிடம் சொல்லும் காட்சியில் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ரசிகர் ரொம்பவும் பீல் பண்ணி கைதட்டிக்கொண்டு இருந்தார்...

மற்றும் ஒரு ரசிகர் கோக் பாட்டிலில் டாஸ்மார்க்கை நிரப்பி கொண்டு வந்து எங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு தாக சாந்தி பண்ணிக்கொண்டே படத்தை ரொம்பவும் ரசித்து பார்த்தார்... சமயங்களில் அவர் தொண்டை கிழிந்து விடும் அளவுக்கு கத்த எனக்கு பயம் வந்து விட்டது இருந்தாலும்...அவர்குடித்துக்கொண்டு இருக்கும் கோக் செய்யும் வேலை என்பதால் பயத்தை தவிர்த்தேன்...

பாடல்காட்சிகளில் தஞ்சாவூர் ஜில்லாகாரி பாட்டுக்கும்... புலன்விசாரனை கோட் அணிந்து கொண்டு ஆடும் கடைசி பாடலுக்கும் ரசிகர்கள்..திரை அருகில் வந்து தங்கள் ரசிப்பு ரசனையை விஜய் பிம்பத்துக்கு பறை சாற்றினார்கள்...(திரை அருகே ஆடும் ரசிகர்...)

காசி தியேட்டரில் 20 ரூபாய்க்கு கோக் கொடுத்தார்கள்... எக் பப்ஸ் பத்து ரூபாய்தான்....கமலா தியேட்டரில் வண்டி பார்க்கிங்க்குகே 15ரூபாய் வாங்குகின்றார்கள்...என்ன காசி தியேட்டரில் வாகனம் நிறுத்ததான் வசதி இல்லை...

காசிதியேட்டருக்கு படம் வெளியான முதல்நாள் கார்எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு வந்தால் கொஞ்சம் கஷ்ட்டம்தான்...

டிராபிக்....
ஐந்தரைக்கு படம்விட்டதால் கிண்டி வரை டிராபிக் நீண்டு கொண்டே போனது...
நானும் பதிவர் நித்யாவும் கிண்டியில் காளான் பிரை சாப்பிட்டு விட்டு ஜுட் விட்டோம்...

அன்புடன்
ஜாக்கிசேகர்...

ஒரு நாளைக்கு சராசரியா என் தளத்தை 1500பேர் வாசிக்கிறிங்க... அதுல ஒரு 100 பேர் ஓட்டு போட நேரம் ஒதுக்கினா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க...


குறிப்பு ..,

கொஞ்சம் வேலை பளு .. நாளை பாண்டி வரை போக இருக்கின்றேன்... அதனால் பின்னுட்டத்துக்கு பதில் பொறுமையாக எழுதுகின்றேன்...

ஆறுலட்சம் ஹிட்ஸ்கள் வழங்கி தொடர்ந்துவாசிக்கும் உங்களுக்கு என் நன்றிகள்....

47 comments:

 1. //ஒரு நாளைக்கு சராசரியா என் தளத்தை 1500பேர் வாசிக்கிறிங்க... அதுல ஒரு 100 பேர் ஓட்டு போட நேரம் ஒதுக்கினா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க//

  ஆயிரத்தி ஐநூறிலே ஒருவர் நான்

  ReplyDelete
 2. அண்ணே படத்த பத்தி ஒண்ணுமே சொல்லல?

  ReplyDelete
 3. அன்பின் ஜாக்கி

  வணக்கம் !உங்களின் ப்ரஸண்டேஷன் திறன் கண்டு எப்போதும் வியந்திருக்கிறேன். இந்த இடுகையில் நீங்கள் டிஸ்ப்ளே செய்திருக்கும் விதம் உங்களின் ஒளிப்பதிவு சாயல் சார்ந்து இருப்பதாக பெருமித வெளிப்பாடு

  ஆனால் விமர்சனம் செய்வதற்காகவே படம் பார்த்தது போன்ற பாவனை தவிர்க்க இயலாமல் துருத்திக் கொண்டிருக்கிறது இந்தப் பதிவில்
  ****************************
  எதையுமே உணர முடியாவிட்டாலும்
  நீராட்டி புத்தாடை அணிவித்து
  பன்னீர் தெளித்து மலர்த்தூவி
  பறை இசைத்து நடனமாடி அடக்கம் செய்பவர்கள்தானே நாம்
  காரணம் .... அறிந்ததே
  அப்படித்தான் இந்தப் படமும்
  பதிவுலகில்

  இது நீங்களும் அறிந்ததே

  :)

  ReplyDelete
 4. sir இந்த வண்டிதான் சுறாலே விஜய் வச்சுருக்கார் ....

  ReplyDelete
 5. nalla vimarsanam, padam sumarthan....

  ReplyDelete
 6. நான் கடைசியாக விஜய் நடித்த படத்தை தியேட்டரில் பார்த்தது குஷிபடம்தான்...

  //

  உண்மை.. நல்ல படம் வந்தா தானே பார்க்க முடியும்.

  ReplyDelete
 7. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 8. இவ்வளவு மாஸ் இருக்கும் போது, இப்படி படம் எடுக்கத்தான் தோணும். விஜய் மேல தப்பு இல்லை!

  ReplyDelete
 9. Dear Jack,

  Thanks for not commenting this picture. i realyy afraid about ur comment about that picture. because so many followers u have. if u comment anything about sura, ur followers never like to see sura or postpone to see the picture.YES IT IS ABSOLUTELY TOTAL COMMERCIAL PICTURE. WE LIKE TO SEE AND ENJOY THIS TYPE PICTURES.

  THANKS
  S.SAKUL HAMEED

  [I HOPE U REMEMBER ME - NAANTHANGA VETTAIKARANKUKA SUPPORT PANNATHU]

  ReplyDelete
 10. நல்ல பகிர்வு ஜாக்கி அண்ணா. சென்னையில் இருந்தபோது காசி தியேட்டர்தான் எனது பேவரிட் ஸ்பாட். நந்தம்பாக்கத்தில் தங்கியிருந்ததால் புதிதாக எந்தப் படம் ரிலீஸானாலும் காசி தியேட்டருக்குத்தான் செல்வோம். போலவே உதயம் தியேட்டரும். உங்களின் இந்தப் பதிவு அந்த நாட்களை நினைவு படுத்தியது.

  ReplyDelete
 11. ..//நான் கடைசியாக விஜய் நடித்த படத்தை தியேட்டரில் பார்த்தது குஷிபடம்தான்... அதன் பிறகு விஜய் நடித்த எந்த படத்தையும் நான் பார்த்தது இல்லை/..

  கொடுத்து வச்ச மகராசன்..
  ம்ம்ம். அவசரப்பட்டுட்டீங்க...
  பரவாயில்லை
  நடந்தது நடந்துபோச்சு.

  ஓட்டும் போட்டுட்டு
  கமெண்டிட்டு
  போயிட்டு வரேன்.

  அடுத்த படம் ஆரம்பிச்சிட்டாராம்.
  சூதனமா நடந்துக்கப்பு.........

  ReplyDelete
 12. சுறாக்கு வந்த நல்ல விமர்சனங்களில் இதுவும் ஒன்னு வாழ்த்துகள்..

  ReplyDelete
 13. \\பதிவர் நித்யா.. காசியில் தியேட்டரில் இணையத்தில் டிக்கெட் புக்செய்தார்.... \\

  ம்முடியல..!
  :-)

  ReplyDelete
 14. //சிலர் திரை அருகே போய் திருப்பதி பெருமாளை சாஷ்டாங்கமாக வணங்குவது போல் நெடுங்சான் கிடையாக திரை பக்கத்தில் விழுந்து வணங்க.//


  இதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் என்ன நன்மை /? படம் நல்லாயிருந்தால் ரசிக்கலாம் அதற்காகா இப்படியா?

  ReplyDelete
 15. தியேட்டரில் படம் எடுக்க முடியுமா?

  ReplyDelete
 16. வோட்டு போட விருப்பந்தான் ஆனா
  அங்க போன register பன்னசொல்லி அலுப்படிகிறாங்க

  ReplyDelete
 17. huh...

  neenga rajini padatthukku idhukku munthi ponadhu illaiya?

  rajini mass munnadi vijay mass dhoosu-ya

  madhumidha
  madhumidha1@YAHOO.COM

  ReplyDelete
 18. போறப் போக்கைப் பார்த்தா விஜய் கேரள அரசியல்ல இறங்கிடுவார் போல இருக்கு. வளைகுடா நாடுகளிலும் கேரள சேட்டன்கள் விஜய்/அஜித் ரசிகர்களாகவே இருக்கிறார்கள் :-)

  Audi car - கலக்குங்க :-)

  ReplyDelete
 19. ஆயிரத்தில் ஒருவன்
  நூறில் ஒருவனாக
  முற்சிக்கிறேன்......

  ReplyDelete
 20. உங்கள் தளத்தை நான் எப்போதாவது வந்து வாசிப்பேன். அனால் ஓட்டு போடமாட்டேன். ஏனென்றால் நீங்க ரொம்ப நல்லவர். இப்ப கெட்டு போயிட்டீங்க. அரசியல்வாதி மாதிரி ஓட்டு கேட்கிறீங்க. இது நல்லாவா இருக்கு சும்மா தமாஸ்.

  ஒரு தடவை சுஜாதா சார் கூட சொல்லி இருக்கார். நல்ல ரசிகர்கள், வாசகர்கள் கருத்து சொல்ல/எழுத மாட்டார்கள் என்று, அதை போல் தான் இதையும் நீங்க எடுத்து கொள்ளனும் சரியா சார்.

  ReplyDelete
 21. படம் நல்ல இல்லை இதுக்கு ஒட்டு போட முடியாது

  ReplyDelete
 22. இவன் படத்தப் பத்தி இவனுக்கே தெரியும்..அத விடுங்க...உங்க பதிவுல உங்க சுய புராணம் கொஞ்சம் ஓவரா இருக்கிற மாதிரி தெரியுது...

  நானும் எவ்ளவோ பேர் பதிவ தினம் படிக்கிறேன்..பட் இன்று வரை எனக்கு ஒரு id கூட நான் create பண்ணல...

  நான் யாருக்கும் ஓட்டும் போட்டதில்ல...பட் நீங்களும் சரி இந்த கேபிள் சங்கரும் சரி கொஞ்சம் சுய புராணம் ஜாஸ்தியாவே எழுதறீங்க ...ஏன்னு தெரியல..

  இந்த கமெண்ட் போஸ்ட் பண்ணனும்னு அவசியம் இல்ல...மனசில பட்டத சொன்னேன்

  ReplyDelete
 23. அன்பு ஜாக்கி அவர்களே...

  உங்கள் விமர்சனத்தைப் பார்த்த பின்னரே வெளிநாட்டுப் படங்களை நான் டௌன்லோட் செய்வேன்... உங்களின் ஆழ்ந்த ஆராய்ச்சி மிகவும் அருமையானது..

  ஆனால் நீங்கள் பணி செய்ததாலோ என்னவோ தெரியவில்லை. படத்தைப் பற்றி மிக அழகாக உங்கள் ஸ்டைலிலேயே மழுப்பி விட்டீர்..இந்தப் பதிவில் மட்டும் மனசாட்சியைக் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டீர்.. சரிதான் இதன் மூலம் உங்கள் தொழில் பாதிக்கப் படலாம்..அதனால் அதில் தவறில்லை.. ஒரு உரிமையோடு சொல்லி விட்டேன்.. உங்களைப் போன்ற நல்ல ஆராயும் கலைஞர்கள் தமிழில் வர வேண்டும் என்ற ஆதங்கத்தோடு..

  மைனஸ் போட நினைத்தேன்... ஆனாலும் உங்கள் எழுத்திர்காக ப்ளஸ் போட்டு விட்டேன்..நம்ம ஜாக்கிதானே..

  தொடர்ந்து உங்களின் சேவையைச் செய்ய வாழ்த்துகள்..

  ReplyDelete
 24. Dear Mr.Mokka
  First read the message below the "Leave your comment" it says
  உங்கள் கருத்துக்களே என்னை செதுக்கி கொள்ள உதவும்... அன்புடன் ஜாக்கிசேகர்... பர்சனலாக கருத்து சொல்ல...dtsphotography@gmail.com மெயிலவும்

  If you are really wrote that comment with good heart...you must have sent to "dtsphotography@gmail.com"

  An Old Man insisting "THANKS GIVING MEETING" even for doing his duty every month.

  If you buy Vikatan or Kumudam or any other tamil weekly it won't entertain us more than 30 mins. But they are claiming that NO1...No2..entertainer. we are ready to pay for that with out any comment.

  This guy entertaining us regularly in quality manner...still you not satisfied haa?

  ethulaa extra bitu veraa..."இந்த கமெண்ட் போஸ்ட் பண்ணனும்னு அவசியம் இல்ல...மனசில பட்டத சொன்னேன்"

  Kindly extend some courtesy while commenting an artist.

  ReplyDelete
 25. நன்றி நசரேயன்...உங்கள் மெனக்கெடலுக்கு...

  நன்றி கேஆர்பி செந்தில்...

  ReplyDelete
 26. நன்றி நேசமித்ரன்...விமர்சனம் செய்ய இந்த படத்தை நான் பார்க்கவில்லை நான் சிலகாலம் வேலை செய்த படம் என்பதால் பார்த்தேன்...அதனால்தான் படத்தை பற்றி ஒரு வரியில் முடித்து விட்டேன்...


  இந்த தளத்தை பொறுத்தவரை ஒரு படம் நல்லா இல்லை என்று எந்த இடத்திலும் சொல்லியது இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.. நன்றி உங்கள் வெளிப்படையான பகிர்தலுக்கு...

  ReplyDelete
 27. sir இந்த வண்டிதான் சுறாலே விஜய் வச்சுருக்கார் ....//

  ஆம் தமிழ் சினிமா செய்திகள்..

  ReplyDelete
 28. நன்றி ராய்ஸ்

  நன்றி வெறும்பய...

  நன்றி ரமேஷ்கார்த்திகேயன் உழைப்பாளர்தின வாழ்த்துக்கு...

  ReplyDelete
 29. நன்றி சரவணகுமரன்.

  ReplyDelete
 30. Dear Jack,

  Thanks for not commenting this picture. i realyy afraid about ur comment about that picture. because so many followers u have. if u comment anything about sura, ur followers never like to see sura or postpone to see the picture.YES IT IS ABSOLUTELY TOTAL COMMERCIAL PICTURE. WE LIKE TO SEE AND ENJOY THIS TYPE PICTURES.

  THANKS
  S.SAKUL HAMEED

  [I HOPE U REMEMBER ME - NAANTHANGA VETTAIKARANKUKA SUPPORT PANNATHU]//


  நன்றி சாகுல்

  ஒரு படத்தை கிழி கிழி என்று கிழிப்பது என் நோக்கம் அல்ல... எனக்கு தெரியும் வலையுலகில் என் கருத்துக்கு கொஞ்சம் மதிப்பு இருப்பது....அதனால் அந்த படத்தை ஒரு கமர்ஷியல் படம் என்று ஒரு வரியில் விமர்சனம் செய்தேன்...

  ReplyDelete
 31. நல்ல பகிர்வு ஜாக்கி அண்ணா. சென்னையில் இருந்தபோது காசி தியேட்டர்தான் எனது பேவரிட் ஸ்பாட். நந்தம்பாக்கத்தில் தங்கியிருந்ததால் புதிதாக எந்தப் படம் ரிலீஸானாலும் காசி தியேட்டருக்குத்தான் செல்வோம். போலவே உதயம் தியேட்டரும். உங்களின் இந்தப் பதிவு அந்த நாட்களை நினைவு படுத்தியது.//

  நன்றி சரவணன்...

  ReplyDelete
 32. நன்றி கூல்பாய்..


  நன்றி ராஜி

  ReplyDelete
 33. //சிலர் திரை அருகே போய் திருப்பதி பெருமாளை சாஷ்டாங்கமாக வணங்குவது போல் நெடுங்சான் கிடையாக திரை பக்கத்தில் விழுந்து வணங்க.//


  இதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் என்ன நன்மை /? படம் நல்லாயிருந்தால் ரசிக்கலாம் அதற்காகா இப்படியா?//

  இன்னும் சிலர் காலை காட்சியின் போது பால் அபிஷேகம் எல்லாம் நடந்ததாம்.. வெங்கட்

  ReplyDelete
 34. நன்றி புகளினி...முழுபடத்தையா எடுத்தோம்... நாலு ஸ்டில்ஸ் அவ்வளவுதான்.. ஆனால் எடுக்க கூடாது...

  ReplyDelete
 35. வோட்டு போட விருப்பந்தான் ஆனா
  அங்க போன register பன்னசொல்லி அலுப்படிகிறாங்க//

  நன்றி மாயூரன்... ஒரு முறை ரிஜிஸ்டர் பண்ணிட்டா அப்புறம் பண்ண வேண்டாம்...

  ஓட்டு என்பது இந்த இடுக்கை முன்னனியில் வந்து நாலு பேர் படிப்பாங்க... அவ்வளவுதான்... ஒரு ஆத்ம திருப்திக்கு...

  ReplyDelete
 36. huh...

  neenga rajini padatthukku idhukku munthi ponadhu illaiya?

  rajini mass munnadi vijay mass dhoosu-ya

  madhumidha
  madhumidha1@YAHOO.COM//

  ஸ்வீட் என்ன அப்படி சொல்லிபுட்டிங்க..
  நிறைய படங்களை அப்படி போய் பார்த்து இருக்கின்றேன்...

  காசி தியேட்டரில் நடந்த நிகழ்வை மட்டுமே எழுதி இருந்தேன்... அவ்வளவே..

  ReplyDelete
 37. போறப் போக்கைப் பார்த்தா விஜய் கேரள அரசியல்ல இறங்கிடுவார் போல இருக்கு. வளைகுடா நாடுகளிலும் கேரள சேட்டன்கள் விஜய்/அஜித் ரசிகர்களாகவே இருக்கிறார்கள் :-)

  Audi car - கலக்குங்க :-//

  உண்மை கேவீஆர்.. இது சத்தியமான வார்த்தை.... அங்கு தமிழ்நடிகர்களுக்கும் தமிழ் சாங்குக்கும் பெரிய மரியாதை..

  ReplyDelete
 38. ஆயிரத்தில் ஒருவன்
  நூறில் ஒருவனாக
  முற்சிக்கிறேன்......//

  நன்றி மணி உங்கள் பிரசன்ஸ்ஆப் மைன்ட் வரிகளுக்கு என் நன்றிகள்..

  ReplyDelete
 39. உங்கள் தளத்தை நான் எப்போதாவது வந்து வாசிப்பேன். அனால் ஓட்டு போடமாட்டேன். ஏனென்றால் நீங்க ரொம்ப நல்லவர். இப்ப கெட்டு போயிட்டீங்க. அரசியல்வாதி மாதிரி ஓட்டு கேட்கிறீங்க. இது நல்லாவா இருக்கு சும்மா தமாஸ்.

  ஒரு தடவை சுஜாதா சார் கூட சொல்லி இருக்கார். நல்ல ரசிகர்கள், வாசகர்கள் கருத்து சொல்ல/எழுத மாட்டார்கள் என்று, அதை போல் தான் இதையும் நீங்க எடுத்து கொள்ளனும் சரியா சார்.///

  நன்றி ஹரிகா...

  எனக்கு பெரிய மாஸ் எல்லாம் இல்லை... இங்கு ஓட்டு என்பது பலர் படிக்க இந்த இடுக்கை சில புக்மார்க்குளில் முன்னனியில் வந்தால் நிறைய பேரை சென்று சேரும்...

  நீங்கள் சொல்வது நியாம்தான்..நன்றி..

  ReplyDelete
 40. நான் யாருக்கும் ஓட்டும் போட்டதில்ல...பட் நீங்களும் சரி இந்த கேபிள் சங்கரும் சரி கொஞ்சம் சுய புராணம் ஜாஸ்தியாவே எழுதறீங்க ...ஏன்னு தெரியல..

  இந்த கமெண்ட் போஸ்ட் பண்ணனும்னு அவசியம் இல்ல...மனசில பட்டத சொன்னேன்//

  அன்பின் மொக்கை...
  ரெண்டு பேரும் சினிமாகாரங்களா இருக்கறதால கூட இருக்கலாம்...

  மனசில பட்டதை சொன்னதுக்கு மிக்க நன்றி... போஸ்ட் பண்ணமா இருக்கும் அளவுக்கு உங்க கமேன்ட் அவ்வளவு மோசம் இல்லை...

  ReplyDelete
 41. ஆனால் நீங்கள் பணி செய்ததாலோ என்னவோ தெரியவில்லை. படத்தைப் பற்றி மிக அழகாக உங்கள் ஸ்டைலிலேயே மழுப்பி விட்டீர்..இந்தப் பதிவில் மட்டும் மனசாட்சியைக் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டீர்.. சரிதான் இதன் மூலம் உங்கள் தொழில் பாதிக்கப் படலாம்..அதனால் அதில் தவறில்லை.. ஒரு உரிமையோடு சொல்லி விட்டேன்.. உங்களைப் போன்ற நல்ல ஆராயும் கலைஞர்கள் தமிழில் வர வேண்டும் என்ற ஆதங்கத்தோடு..

  மைனஸ் போட நினைத்தேன்... ஆனாலும் உங்கள் எழுத்திர்காக ப்ளஸ் போட்டு விட்டேன்..நம்ம ஜாக்கிதானே..//

  பிரகாஷ் நான் உங்க ஜாக்கிதான்...அந்த வார்த்தை எனக்கு ரொம்ப சந‘ந்தோணத்தை கொடுத்தது...

  முதலில் இந்த படத்தை நான் விமர்சனம் செய்யும் முடிவில் இல்லை... நான் படத்துக்கு போன நிகழ்வை உங்களுக்கு சொன்னேன்...

  படவிமர்சன்ம் என்றால் இந்த படத்தை பார்த்தே, பார்க்க, டைம்பாஸ் லிஸ்ட்டில் நிச்சயம் எழுதி இருப்பேன்..

  நன்றி பிரகாஷ்

  ReplyDelete
 42. Dear Mr.Mokka
  First read the message below the "Leave your comment" it says
  உங்கள் கருத்துக்களே என்னை செதுக்கி கொள்ள உதவும்... அன்புடன் ஜாக்கிசேகர்... பர்சனலாக கருத்து சொல்ல...dtsphotography@gmail.com மெயிலவும்

  If you are really wrote that comment with good heart...you must have sent to "dtsphotography@gmail.com"

  An Old Man insisting "THANKS GIVING MEETING" even for doing his duty every month.

  If you buy Vikatan or Kumudam or any other tamil weekly it won't entertain us more than 30 mins. But they are claiming that NO1...No2..entertainer. we are ready to pay for that with out any comment.

  This guy entertaining us regularly in quality manner...still you not satisfied haa?

  ethulaa extra bitu veraa..."இந்த கமெண்ட் போஸ்ட் பண்ணனும்னு அவசியம் இல்ல...மனசில பட்டத சொன்னேன்"

  Kindly extend some courtesy while commenting //

  அன்பின் ராஜ்
  என் மீது தாங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு நன்றி..

  அவருக்கு போஸ்ட் பண்ணவேண்டாம்னு சொல்லிதான் போட்டாரு அதுல ஏதும் தவறு இல்லை... அதனால போஸ்ட் பண்ணேன்,..

  நான் அதிகமா சுயபுராணம் பாடறதா... அவருக்கு புரிஞ்சி இருக்கு... விடுங்க... அது அவர் கருத்து...

  எப்பயும் கால ஆட்டிக்கி்னே இருக்கனும்... அது பல விஷயத்துல நல்லது...

  நன்றி ராஜ்குமார்...

  ReplyDelete
 43. This comment has been removed by the author.

  ReplyDelete
 44. இரத்ததானப் பின்னூட்டத்தை வெளியிட்டு உதவியமைக்கு நன்றி.

  ReplyDelete
 45. சுறா -தியேட்டருக்கு வந்து படம் பாக்குறதுக்கு" முன்னாடி ஒரு தடவைக்கு பல தடவை யோசி. "உள்ள வந்துட்ட" அப்புறம் உன்னால யோசிக்கவே முடியாது.

  ReplyDelete
 46. Thanks Jacky!

  Friends,
  Ellarum Vijay padamna theatrela parka mudiyalanguranga... appuram en poi thirumba thirumba adutha padathai parkuraanga... nalla irukkunu thaaney... Masalanu thaan theriyuthula kodutha 100Rs. ku padam ok vanu parthutu vandhudanum.. ennamo namma thaan PRODUCER mathiri entha padathai pathiyum comment thappa panna vendam friends... avaruku enna varutho avaru pannuraru nambalal mudinthal parpom illaina result thaana theriyum...

  Thanks to all for understanding my comment in right manner...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner