உலகில் சில பேருக்கு இது நிகழ்ந்து தொலைக்கும்...இவர்களுக்கு சபிக்கபட்டவர்கள் என்று பெயர்... இவர்கள் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைத்து வைப்பார்...
எல்லோருடைய க கனவுகளுக்கும் செயல் வடிவம் கொடுக்கும் போது, எந்த பிரச்சனையும் வரவில்லை... அது தனக்கு மட்டும் வேறுமாதிரியாக நடக்கும் போது ஒரு பெண்ணால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் என்று நீங்களே சொல்லுங்கள்..
சிறுவயது முதலே கனவுகளோடு இருக்கும் இவர்கள்... அந்த கனவுகளின் இழப்பை சிறுவயது முதலே சந்திப்பர்....புறக்கனிப்பை சிறு வயது முதலே அனுபவிப்பர்...
சிதைந்த கனவுகளுடன் வாழும் இவர்கள் கோபங்கள் எல்லாம் ஒரு நாள் வெளிப்பட்டால்? அது நம்பமுடியாத அளவுக்கு சேதத்தை உருவாக்கும் என்பதை உண்மை கதை மூலம் இந்த படத்தில் சொல்லி இருக்கின்றார்கள்...
MONSTER படத்தின் கதை இதுததான்...
Aileen Wuornos (Theron) ஒரு விலை மாதர்... ஏதோ சிறு வயது முதலே விலை மாதராக ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எல்லாம் அவள் தொழிலுக்கு வரவில்லை...சிறுவயதுமுதலும் பருவ வயதிலும், அந்த வயதில் எல்லோருக்கும் கிடைக்கும் விஷயங்கள் அவளுக்கு கிடைக்கவே இல்லை என்பதே உண்மை.... பருவ வயதில் ஒருவனோடு உறவு கொண்ட போது அவன் சாப்பிட்டு விட்டு கை கழுவி விட்டு செல்வதில் குறியாக இருந்தான்...
இன்னொருவன் ஒரு படி மேலே போய் படுத்த நேரத்தை கண்க்கிட்டு காசு கொடுக்க அதில் இருந்து அவள் விலைமாதர் ஆனாள்... அதே போல் அவள் மேனாரிசங்கள் ஆண் சாயலை நினைவுபடுத்தும் படி இருக்கும்.... காரில் லிப்ட் கேட்டு ஏறி அவசரத்துக்கு ஓரல் செக்சில் ஈடுபட்டு வரும் காசில் வயிற்றை கழுவி வருபவள்...
Selby Wall (Ricci) யைAileen Wuornos (Theron) ஒரு கே பாரில் முதன் முதலாக சந்திக்கின்றாள்.. முதல் பார்வையிலேயே இருவருக்கும் பிடித்து விடுகின்றது... இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.... ஷில்பி ஒரு லெஸ்பியன் பெண்...அயிலின் ஒன்றும் லெஸ்பியன் இல்லை என்றாலும்.... இதுவரை எல்லா ஆண்களும் அவளை அவசரத்துக்கு யூஸ் செய்து விட்டு செல்லும் நிலையில்... மனதுக்கு ஆதரவாக பேசுவது செல்பி மட்டும்தான் அதனால் இருவரும் மனம் ஒத்து லெஸ்பியனாக வாழ முடிவு எடுக்கின்றனர்.....
இருவரும் மனது ஒத்து ஒரு இடத்தில் சந்திக்க நேரம் சொல்ல, அந்த இடத்தில் இருவரும் சந்திக்க கிளம்ப... வழியில் ஒருவன் அயிலினுக்கு லிப்ட் கொடுத்து ஒதுக்கு புறமான இடத்தில் அழைத்து போய், அவளை கட்டி போட்டு அவளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்க, கை கட்டில் இருந்து விடு பட்டு பக்கத்தில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து அவனை பர லோகத்துக்கு அனுப்புகின்றாள்.... அந்த முதல் கொலை செய்த போது ஒரு சந்தோஷம் வருகின்றது... அதன் பிறகு ஒரு எட்டு பேரை அதே ஸ்டைலில் பரலோகம் அனுப்ப... போலிஸ் என்ன பூப்பறித்துக்கொண்டு இருந்ததா? படத்தின் முடிவில் இருவருடைய லெஸ்பியன் காதல் வெற்றி பெற்றதா? என்பதை திரையில் பார்த்து மகிழுங்கள்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
உண்மை கதை என்பதால் இந்த கதையின் மீது நம்மை அறியாமல் ஒரு பிடிப்பு வந்து விடும்... கொஞ்சம் கூட்டி குறைத்து எடுத்தாலும் இந்த வாழ்க்கையை ஒரு பெண் வாழ்ந்து இருக்கலாம் என்ற நினைக்கும் போதே... அந்த படத்தின் மீது ஒரு ஈர்ப்பு வரும்...
2003 ல் நடந்த அக்கடாமி அவர்டில் சிறந்த நடிகைக்கான விருதையும் கோல்டன் குளோப் விருதையும், Monster as Aileen Wuornos கேரக்கடரில் நடித்தமைக்குCharlize Theronக்கு கிடைத்தது....
Charlize Theronன் உடல் மொழி மிக அற்புதமாக வெளிபடுத்தி இருப்பார்... மிக முக்கியமாக நடந்து போகும் போது ஒரு தெனாவெட்டு நடை .. பேசும் போது பல்லை காட்டியபடி பேசும் அந்த பாடி லாங்வேஜ் அற்புதம்...
சில்பிக்கும், அயிலனுக்கும் காமத்தில் பாருக்கு வெளியே இரண்டு பேரும் கி்ஸ் செய்து கொள்ளும் அந்த சீன் ஒரு லைவ் போல இருக்கும்.... பார்க்கும் போதே ரொம்ப சூடாக இருக்கும்... இருவரும் பெண்கள்தான்.. நடிக்கின்றார்கள்தான்.. ஆனால் அந்த பர்பாமென்ஸ் அவ்வளவு அற்புதமாக வெளிபடுத்தி இருப்பார்கள்...
அன்புக்கு ஏங்கும் அயிலுக்கு ஷில்பி நட்பு கிடைக்கும் போது அந்த சந்தோஷத்தை ரொம்ப அலட்சியமாகவே வெளிபடுத்தி இருப்பார்Charlize Theron....
காரில் குனிய வைத்து கட்டி போட்டு விட்டு அயிலின் பிறப்புறுப்பில் ஒரு இரும்பு ஸ்பேனரை விட்டு ஆட்டும் போது நமக்கும் ரேகம் எல்லாம் சிலிர்கின்றது... அதே இடத்தில் பூட்ஸ்காலோடு எட்டி உதைக்கும் போது அயிலின் வலியால் துடிடிக்கும் போது நமக்கு ஒரு பதட்டம் உருவாவது அந்த நடிப்பின் வெற்றி என்று சொல்லலாம்...
கொலை தன்னை அறியாமல் செய்வதையும்.. அந்த கொலைகள் செய்யும் போது ஆத்ம திருப்தி கிடைப்பதையும் அழகாக காட்டி இருப்பார்கள்...
படம் ரொம்ப ஸ்லோ... கிளைமாக்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கும்... அந்த சின்ன பெண்ணை போலிசிடம் இருந்து காப்பாற்றும் இடம் அருமை...
சின்ன வயதில் கண்மூடிதனமாக ரசிக்கும் லெஸ்பியயன் காதல்கள் கூட ஒரு கட்டத்தில் கசக்கும் என்பதையும்... எதுவுமே நிலையற்றது என்று சொல்வதும் அழகு....
Charlize Theron இந்த படத்துக்காக 30 பவுண்ட் செலவு செய்து தனது பல் அமைப்பு எல்லாம் மாற்றிக்கொண்டு நடித்தது குறிப்பிடதக்கது...
படத்தின் டிரைலர்.....
படக்குழுவினர் விபரம்.....
Directed by Patty Jenkins
Produced by Charlize Theron
Mark Damon
Clark Peterson
Donald Kushner
Brad Wyman
Written by Patty Jenkins
Starring Charlize Theron
Christina Ricci
Bruce Dern
Lee Tergesen
Annie Corley
Music by BT
Cinematography Steven Bernstein
Distributed by Newmarket Films
Media 8 Entertainment
Release date(s) United States:
December 17, 2003 (premiere)
Running time 109 min.
Country United States
Germany
Language English
Budget $8 million
Gross revenue $60,378,584
அன்புடன்
ஜாக்கிசேகர்
(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....
விமர்சனம் அருமை ஜாக்கி.
ReplyDeleteநல்ல விமர்சனம் ஜாக்கி.
ReplyDelete