(TENDERNESS) ஒரு கிரைம்...

பதிவர்கள், வாசகர்கள்..அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.... வரும்காலங்களில் நலமும் வளமும் வந்து சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்...


ஒரு விஷயம் நாம செய்றோம்னு வச்கிக்கிங்க... நாம நினைச்சிகிட்டு இருப்போம் அது யாருக்கும் தெரியாதுன்னு... ஆனா இந்த உலகம் அதை உத்து பாத்துகிட்டுதான் இருக்கும்.... உலகம்னு சொல்லறது நீ, நான் எல்லாம்தான்...இன்று உலகில் நடக்கும் குற்றங்களுக்கு முடிவு என்பது இது போலான யோரோ எவரோ உற்று கவனிப்பதுதான்

TENDERNESS படத்தின் கதை இதுதான்...


எரிக் பெற்றோரையே சாகடிச்ச கொலைக்காரன்... அவனுக்கு தண்டனை கிடைக்குது...கிருஸ்ட்டோ (ரசல் குரோவ்) ஒரு டிடெக்டிவ்... அவருடைய மனைவி கோமாவில் இருக்கும் ஒரு பேஷன்ட்.. எரிக் ஒரு சைகோபத்னு முடிவு செய்யற கிருஸ்டோ அவனை பாலோ செய்யறார்... எரிக்குக்கு லோரின்னு ஒரு 16வயசு பொண்ணு பழக்கமாகின்றாள்... சில பல காரணங்களுக்காக அவர்கள் ஒன்றாக ஒரே காரில் பயணம் செய்ய நேர்கின்றது... அவன் சைகோ என்பதால் அந்த பெண்ணை கொலை செய்ய நேரம் பார்த்து கொண்டு இருக்கி்ன்றான்... அவன் கொலை செய்தானா? அவனை பாலோ செய்யும் டிடெக்டிவ் கிருஸ்ட்டோவிடம் அகபட்டானா என்பதை வெள்ளிதிரையில் பாருங்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில......

கிளாடியேட்டர் படத்துக்கு அவார்டு வாங்கிய ரசல்குரோவ் நடிச்சபடம்னு இந்த படத்தை பார்த்தேன்... அதே போல் டென்டர்னஸ் படத்தின் கேப்ஷனுக்கு கிழே உங்களுடைய சீட்டுக்கு நுனியில் உங்களை உட்கார வைக்கும் திரில்லர் படம் என்று விளம்பரத்தை பார்த்து இந்த படத்தை பார்த்தேன்... அப்படி ஒன்றும் ஈர்க்கும் படமாக இது இல்லை... இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம்....

திரில்லர் படமாக இருந்தாலும் ரொம்ப ஸ்லோவாக போகும் படம் இது...

படத்தின் ஒளிப்பதிவு பராட்டும படியாக இருக்கின்றது...


லோரியாக நடித்த அந்த பெண்ணின் இளமையும்... அந்த பேச்சும் ரசிக்கும் படியாகவே இருக்குகின்றன...

ஒரு சிலருக்கு இந்த படம் ரொம்பவும் பிடித்த படமாக கூட இருக்கலாம்...

முதல் காட்சியில் லேக் பக்கத்தில் ஒரு பெண்ணின் அரை நிர்வாண உடம்பில் ஒரு கோழி இறகால் எரிக் வருடுவதை கட் ஷாட்டில் காட்டும் போது இருக்கும் விஷயம், ஒரு பரபரப்பு படம் நெடுகிலும் கொண்டு போய் இருக்க வேண்டும்...

வேறு என்ன சொல்ல..????

படத்தின் டிரைலர்....படக்குழுவினர் விபரம்....
Directed by John Polson,
Written by Robert Cormier (novel)
Emil Stern (screenplay)
Starring Sophie Traub
Tim Hopper
Russell Crowe
Music by Jonathan Goldsmith
Cinematography Tom Stern
Editing by Lisa Zeno Churgin
Andrew Marcus
Distributed by Lionsgate
Release date(s) January 15, 2009 (Israel)
December 11, 2009 (US ltd.)
Running time 101 minutes
Country United States
Language Englishஅன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

9 comments:

 1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. எனக்கெல்லாம் நாலு படம் பதிவிலெ சேர்க்கறதுக்குள்ளே நாக்கு தள்ளுது. எப்படி ஜாக்கி இவ்வளவு படங்களும், வீடியோவும்... இந்த விஷயத்தில் நீங்க ரொம்ப பொறுமைசாலிதான்...

  தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள் ஜாக்கி...

  ReplyDelete
 3. இனிய தமிழ்புத்தாண்டு ஜாக்கி!

  ReplyDelete
 4. புத்தாண்டு வாழ்த்துக்கள். நிறைய படங்களை இந்த வாரத்தில் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். Fair Game பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்தது இந்தப் படம் பார்க்கவேண்டும்.

  ReplyDelete
 5. அன்புடையீர்,

  அனைவருக்கும் ஒரு நாள் லேட்டான, அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்.

  ஜாக்கி சார், பதிவு அருமை. இன்னமும் பார்க்காத ஒரு படம்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கு நன்றி சைவ கொத்து பரோட்டா...

  கொஞ்சம் நேரம் இருக்குது அதான் நன்றி துபாய் ராஜா...

  வாழ்த்துக்கு நன்றி தனா  நன்றி பின்னோக்கி எழத எவ்வளவோ படம் கொட்டி கிடக்குது எழுத நேரமும் பொறுமையும்தான் இல்லை...  நன்றி கிங் விஸ்வா உங்கள் வாழ்த்துக்கு

  நன்றி இராஜபிரியன்..

  ReplyDelete
 7. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  மெயில் கிடைத்ததா?

  ReplyDelete
 8. படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது உங்களின் விமர்சனம் . வாழ்த்துக்கள் .

  பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் மீண்டும் வருவேன் .

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner