சென்னையின் புதிய மால் ஸ்கை வாக்கும் ,பீவிஆரின் 7 புதிய தியேட்டர்களும்....

சென்னையில் தியேட்டர்கள் எல்லாம் கல்யாண மண்டபங்கள் ஆயிற்று என்று ஒரு காலத்தில் வருத்த பட்டு கொண்டு இருந்த தியேட்டரில் படம் பார்க்கும் ரசிர்கள் எல்லாம், இப்போது பல தியேட்டர்கள் சென்னையில் வர தொடங்கிவிட்டன என்று மகிழ்ச்சியில் இருக்கின்றார்களா ? என்றால் இல்லை என்றே சொல்ல தோன்றுகின்றது...

30 ரூபாய்க்கு டிக்கெட், 5 ரூபாய்க்கு சைக்கிள் டோக்கன்,பத்து ரூபாய்க்கு ஒரு பார்ப்கான் பாக்கெட், என இப்படியாக சாதாரண ரசிகன் என் ஜாய் செய்து கொண்டு இருந்தான்... ஆனால் தியேட்டர்கள் எல்லாம் மால் அவதாரம் எடுக்க சாதரண மிடில் கிளாஸ் ரசிகன் ரொம்பவும் ஆடித்தான் போனான்.....இப்போது சென்னையில் பூந்தமல்லி நெடு்ஞ்சாலையில் ஸ்கை வால்க் என்று ஒரு மால் திறந்து இருக்கின்றார்கள்...அதில் ஏழு தியேட்டர்கள் திறந்து இருக்கின்றார்கள்..... இதில் சாதாரண மிடில் கிளாஸ் சினிமா ரசிகன் இதில் படம் பார்கக முடியாது என்பதே நிதர்சன உண்மை.... பல மெட்ரோ நகரங்களில் தன் தியேட்டர்களை நிறுவி விட்டு தற்போது சென்னைக்கு வந்து முதன் முறையாக பீவீஆர் குருப் தியேட்டர்களை திறந்து உள்ளது....

(நிழற்படம் ஜாக்கிசேகர்)

வெகு நட்களாக அண்ணாநகர் வாசிகளுக்கு இருந்த ஒரே தியேட்டர் கிராண்டு தியேட்டர்தான் அந்த தியேட்டரையும் சில வருடங்களுக்கு முன் இழுத்து முடி அதில் கார் கம்பெனியை திறந்து வைத்தார்கள்.... அப்புறம் அவர்கள் பொழுது போக்குவதற்க்கு பக்கத்தில் எந்த தியேட்டரும் இல்லை.. வந்தால் அபிராமி மாலுக்குதான் வந்து படம் பார்க்க வேண்டும்... அண்ணா நகர்வாசிகள் பல நாட்களாக செலவு செய்ய துடிப்பதை கண்டு அவர்களுக்கு வேறு வழியில்லாமல் இருக்க... அவர்களுக்காக ஒரு பெரிய மால் அவசியம் என்று உணர்ந்து, இப்போது ஸ்கைவால்க் என்ற பெயரில் திறந்து வைத்து இருக்கின்றார்கள்...(நிழற்படம் ஜாக்கிசேகர்)

என் நண்பியின் நெருங்கிய தோழியின் அக்கா ஐஏஎஸ் ரேங்.... தினமும் மதியம் வீட்டுக்கு சாப்பிட வரும் போது ரூபாய் பத்தாயிரத்தில் இருந்து இருபதாயிரம் வரை தினமும் லஞ்ச பணம் கொண்டு வருவாளாம்... இப்படி லஞ்ச பணம் தினமும் வந்துகிட்டே இருந்தா? ஏன் இப்படி வந்து மால்களில் பணத்தை தண்ணி மாதிரி செலவு பண்ண மாட்டாங்க???

போனவாரம் ரேஷன் கடைக்கு போனேன் துவரம் பருப்பு கிலோ 85 ரூபாய்னு சொன்ன அப்ப எனக்கு மயக்கமே வந்துடுச்சி... ரொம்ப நாளைக்கு பிறகு இப்பதான் ரேஷன் கடைக்கு போறேன்... அதான்...
(நிழற்படம் ஜாக்கிசேகர்)

ஸ்கை வால்க் மாலின் உள்ளே எல்லாம் கிடைக்கின்றது....டாடா ஒரு சூப்பர்மார்கெட் ஒன்று திறந்து இருக்கின்றது..மிக பெரிதான கடை... உள்ளே பல கடைகள் திறந்து இருக்கின்றார்கள்... எல்லாம் அழகு பொருட்கள் விற்க்கும் கடைகள் , பிரான்ட்உடைகள் விற்க்கும் கடைகள் எல்லாம் அதிகம் உள்ளன...
(நிழற்படம் ஜாக்கிசேகர்)

எல்லா இடத்திலும் பெண்கள் கூட்டம்தான்.. ஆண்கள் கூட்டம் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருந்தது....வெயிலின் தாக்கத்தின் காரணமாக எல்லா பெண்களும் ஷாப்பிங் என்ற போர்வையில் படை எடுத்து வந்து விட்டார்களோ என்று என்ன தோன்றுகின்றது...(நிழற்படம் ஜாக்கிசேகர்)

எல்லா பெண்களும் மிக தைரியமாக யோசிக்காமல் எல்லா பொருட்களையும் வாங்குகின்றார்கள்... ஒரு சிறு பெண் எல்லா இடத்திலும் கிரேடிட் கார்டு யூஸ் செய்து பர்சேஸ் செய்து கொண்டு இருந்தது.. காதலர்கள் வெயிலால் அதிக அளவில் வருகை புரிந்து இருந்தார்கள்...

பக்கத்தில் கூவம் ஆற்று ஓர குடிசையில் வசிக்கும் ஒரு குடும்பம் மாலுக்குவந்து இருந்தது... அவ்வளவு பிரமாண்ட வளகத்தை பார்த்து அது ரொம்பவும் சந்தோஷம் கொண்டது... எல்லாவற்றையும் தொட்டு பார்த்து தனது ஆசைகளை தீர்த்து கொண்டது.... எஸ்கேலட்டரில் அந்த குடும்பத்து சிறுவனும் சிறுமியும் ஏறும் போது சந்தோஷம் கொண்டனர்.... அந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் வருணிக்க முடியாது....(நிழற்படம் ஜாக்கிசேகர்)

என்னிடம் ஒரு பெண் கேஎப்சி எங்கே என்று கேட்க? எனக்கு தெரியாது என்று உதடு பிதுக்கி விட்டு நடந்தேன்... எல்லா பெண்களும் கம்பல்சரியாக லுஸ் ஆடை அணிந்து வந்து இருந்தார்கள்... வெயி்லின் காரணமாக பிரி சைஸ் டிசர்ட் உடை என்பதால் ரொம்ப தூரம் கண்களால் ஊடுருவ முடிந்தது.... ஆண் பசங்கள் இவ்வளவு வெயிலிலும் டைட் சர்ட் அணிந்து வந்து இருந்தார்கள்... எல்லா பையன்களும் பையா கார்த்தி போல தனது ஆம்ஸ் வெளியே தெரியும் படி உடை உடுத்தி இருந்தார்கள்... ஒரு பையன் நாக்கில் ஒரு சின்ன மணியை குத்தி தொங்க விட்டு இருந்தான்...பல பசங்களுக்கு பேண்ட் இடுப்பில் நிற்க்கவே இல்லை...அவர்களின் பின் புறத்தின் ஆரம்ப கோடுகளை பார்க்கும் படி லுசாக பேண்ட் அணிந்து இருந்தார்கள்...
(நிழற்படம் ஜாக்கிசேகர்)

வண்டியயை முதலில் பாலம் வேலை நடை பெற்றுக்கொண்டு இருக்கும் இடத்தில் நிறுத்த நினைத்தேன் ... டிக்கெட் எடுத்து விட்டதும்... சட்டென ஒரு மின்னல் ... என்னைக்கும் இல்லாத திருநாளாக எல்லா வண்டியையும் நோ பார்க்கிங் ஏரியாவுல நின்னுச்சின்னு டிராபிக் போலிஸ் எடுத்துகிட்டு போயிட்டா? அவங்க கிட்ட போயி தலை சொறிஞ்சி நிக்கறதுக்கு பார்க்கிங்ல வண்டியை போட முடிவெடுத்தேன்...பார்க்கிங் போனேன் முதன் முதலாக சென்னையில் அண்டர் கிரவுன்டில் p1 p2 b1 b2ன்னு பல அடுக்குகளில் அண்டர் கிரவுண்ட்டில் வைத்து இருக்கின்றார்கள்....

பார்க்கிங் மற்றும் லிப்ட் என்று மாலின் பல இடங்களில், பெண்களை வேலைக்கு வைத்து இருக்கின்றார்கள்... குறைவான கூலிக்கு நிறைவான உழைப்பு இருக்கும் என்ற நம்பிக்கையா? என்று தெரியவில்லை....

வாகனத்தை ஒரு கேட்டில் நிற்க்கும் போது அங்கு இருக்கும் ஒரு மேசினில் உள்ள பொத்தானை அழுத்தினால் அது டைம் போட்டு ஒரு ரீசார்ஜ் கார்டு போல ஒரு கார்டை துப்பி வைக்க அதன் பிறகு வழி எங்கும் பெண்கள் வழிகாட்டுதல் படி வண்டியை பீடூவில் பார்க் செய்தேன்...

(நிழற்படம் ஜாக்கிசேகர்)

படம் 4,40க்கு என்பதால் லிப்ட்டுக்கு போய் நின்றால் வரவில்லை.. நிறைய பேர் பொறுமை காத்து விட்டு எருமை போல் மூச்சு வாங்க நாலு மாடிக்கு படி வழியே ஏறி போனேன்... நிர்வாகம் பார்கிங்கில் இருக்கும் மக்களை சட்டென மேல்தளத்துக்கு போக இன்னும் இரண்டு லிப்டுகள் கூடுதலாக இணைக்க வேண்டும்....

எனக்கு அதில் உள்ள தியேட்டர்களை பார்க்க ஆவல்...நான் பெங்களுர் பீவி ஆருக்கு போய் இருப்பதால் அது போல் இருக்கும் என்று நினைத்தேன்... இல்லை இதில் கொஞ்சம் வித்தியாசம் செய்து இருக்கின்றார்கள்... அதாவது 4வது மாடி முழுவதும் தியேட்டருக்கு ஒதுக்கி இருக்கின்றார்கள்... ஒரு பக்கம் டிக்கெட் எடுத்து விட்டு மறுபுறம்
(நிழற்படம் ஜாக்கிசேகர்)

அதாவது தியேட்டர் இருக்கும் பக்கம் போக வேண்டும் என்றால் நீங்கள் ஒரு சிறு பாலத்தை கடந்து அந்த பக்கம் போக வேண்டும்... அந்த இடத்தில் உங்களை தரோவாக செக் செய்து அனுப்புகின்றார்கள்...

மொத்தம் எழு ஸ்கீரின்.... டிக்கெட் விலை 120 ரூபாய்....எல்லா இடத்திலும் செக்யூரிட்டி. நான் ஸ்கிரின் 7ல் மேட் டாமோன் நடித்த கிரின் ஜோன் என்ற ஹாலவுட் படத்தை பார்த்தேன்... டிக்கெட் கிழிக்கும் இடத்தில் இருந்த சின்ன ஸ்கிரினில் படத்தின் பெயர்... படம் ஒடும் நேரம்... அடுத்த படத்தின் டைம் எல்லாவற்றையும் டிஸ்பிளேயில் மிரட்டிக்கொண்டு இருந்தார்கள்... இங்கும் பெண்கள் டிக்கெட் கிழித்தார்கள்
(நிழற்படம் ஜாக்கிசேகர்)

இண்டர்வெல்லில் எல்லா உணவும் 50 ரூபாய்க்கு குறைவு இல்லாமல் இருந்தது....50 ரூபாய் இருந்தால் அரை கிலோ துவரம் பருப்பு வாங்கலாம் என்று எதுவும் வாங்க வில்லை.. அப்புறம் எப்படி 120 ரூபாய்க்கு டிக்கெட் என்று கேட்பீர்கள் அது எனது பொழப்பு... அதனால்....
(நிழற்படம் ஜாக்கிசேகர்)

இப்போது எல்லா தியேட்டாகளிலும் ஒன்று கத்து வைத்துக்கொண்டு இருக்கின்றாகள்... இண்டர்வெல் முடிந்து படம் போடுகின்றோம் என்பதை சொல்ல ஒரு காலிங் பெல் ஒன்று அடிப்பார்கள்... எங்கள் ஊரில் ஒரு தியேட்டரில் பல வருடங்கள் ஈனசுரத்தில் முனகியபடி பல காலங்கள் அந்த காலிங் பெல் வேலை செய்து கொண்டு இருந்தது... அதில் கூட எடிசன் என்று எழுதி இருக்கும்... ஆனால் இப்போது சென்னை தியேட்டர்களில் பெல் அடித்து விட்டு படம் போடும் பழக்கமே இல்லை..


பெல் அடித்தால் காண்டின் வருமானம் போய்விடும் என்று சொல்கின்றார்கள்.. ஏன்டா நான் உங்களை ஒன்னு கேட்கிறேன் நாங்க என்ன தீனி தின்னவா வந்தோம் படம் பார்க்கவந்து இருக்கோம்... அதை நல்லா பிரி்ஞ்கிட்டா சரி...

டாய்லட் நீட் என்றாலும் தண்ணியே அதிகம் செலவு செய்யாமல் மறு சுழற்ச்சியில் அதனை செய்வதாக ஏதோ எழுதி இருப்பதை என் ஆங்கில அறிவு உணர்த்தினாலும், அதை ஆழந்து படித்து இருந்தால் கண்டிப்பாக அது எனக்கு புரிந்து இருக்கும்... ஆனால் நான் திரும்பி பார்க்க எனக்கு பின்னால் ஒருவர் பாதி ஜிப்பை திறந்தே வைத்து இருந்தார்... அவ்வளவு அவசரம் போல.....ஒரு சிலர் பொறுமை இல்லாமல் மாற்றுதிறன் உடையோருக்கான கழிப்பறை உள்ளே நுழைய தியேட்டர் சிப்பந்திகள் தடுத்துக்கொண்டு இருந்தார்கள்...

(நிழற்படம் ஜாக்கிசேகர்)

தியேட்டர் சீட் அரேஞ்மென்ட் எல்லாம் நன்றாக இருந்தது... எவர் தலைடியயும் மடிறக்கவில்லை... ஒளி ஒலி குறை சொல்ல முடியாது... பக்கத்தில் ஏதோ வேலை நடக்கின்றது போல் இருக்கின்றது.. சுவற்றில் டிரில் துளையிடும் சத்தம் எல்லாம் வந்து வந்து போய்கொண்டு இருந்தது...
படம் முடிந்து பார்க்கிங்கில் வண்டி எடுக்க போனேன் ஒரு மணி நேரத்துக்கு 10 ரூபாய்... இரண்டு மணி நேரம் ஆகி இருந்தது.. 20 ரூபாய் வாங்கி கொண்டார்கள்....பார்கிங் டிக்கெட் தொலைத்து விட்டால் அதற்க்கு 50ரூபாயாம், ஒரு நாள் நைட் இருந்தால் 70ரூபாயாம்.. என்று ரக வாரியாக விலை பிரித்து வைத்து இருந்தார்கள்...

பார்கிங்கில் கார் வாஷ் வைத்து இருக்கின்றார்கள்.. பர்சேஸ் செய்து விட்டு அல்லது படம் பார்த்து விட்டு வருவதற்க்குள் கார் வாஷ் செய்து வைத்து விடுவார்கள்... பெரிய பார்கிங்...

ஸ்கை வால்க் ஒரு முறை போய்விட்டு வாருங்கள்.... நான் போனது கூட ஒரு புது மால் எப்படி இருக்கும் என்று தெரியாமல் உள்ளே போவதை விட இதை படித்து விட்டு போகும் போது கொஞ்சம் தெளிவாக இருக்கும்....
டிக்கெட்120+20 பார்கிங் என்று மொத்தம் 140 ரூபாயில் படம் பார்க்கலாம் ஆயிரத்தில் ஒருவன் போல் 3மணி நேர படமாக இருந்தால் பார்க்கிங் கட்டணம் உயரும்.... உங்களுக்கு மால் பற்றியும் தியேட்டர் பற்றியும் சொல்லவே ஆர்வத்துடன் போனேன்....


இம்பார்டேன்ட் டிஸ்க்கி.....

இந்த மால் வந்த காரணத்தால லயோலா காலேஜ், நெல்சன் மாணிக்கம் ரோடு வழியா யாராவது அண்ணா நகர் போகனும்னு நினைச்சா அந்த நினைப்பை அழிச்சிடுங்க... செம டிராபிக் ஜாம்... அதுவும் சாயங்காலம் ஒரு வண்டியும் நகராம தேமேன்னு நிக்குது... சோ நெல்சன்மாணிக்கம் ரோட் எடுக்க யோசிங்க சென்னை வாசிகளே..... மாலின் வாகன என்டரன்ஸ் நெல்சன் மாணிக்கம் ரோடு எக்சிட் பூந்தமல்லி ரோடு.... அம்பூட்டுதேன்... சொல்லறதை சொல்லியாச்சு... அப்புறம் உங்க இஷ்டம்.....



அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க

42 comments:

  1. Super அண்ணே. நானே நேரில் போய் பார்த்தது போல இருந்தது

    ReplyDelete
  2. Thanks for sharing. very very informative.Good work.

    ReplyDelete
  3. எல்லா படங்களும் ஜாக்கின்னு ஒரு தடவை போட்டிருந்தா 12 தடவை வாசித்தது ஒரு தடவையா குறைஞ்சிருக்குமே !!

    :)

    ReplyDelete
  4. நன்றி கிருபா.. உங்கள் முதல் வருகைக்கு


    நன்றி தருமி எல்லாபடங்களும் என்னுடையதாக இருந்து இருந்தால் நான் படங்கள் ஜாக்கின்னு போட்டு இருப்பேன்...சில அவுட்டோர் படங்கள் நெட்டில் இருந்து எடுத்தேன் அதனால் அப்படி குறிப்பிட்டேன்....

    நன்றி சுரேஷ்

    நன்றி ராதகிருஷ்ணன்...

    ReplyDelete
  5. கையில் பணமிருந்தா என்ன வேணாலும் பண்ணலாம். எப்படி வேணாலும் வாழலாம்.

    "கையில வாங்கினேன். பையில போடல. காசு போன இடம் புதிய மால்னு " பாடணும் போல் இருக்கு

    ReplyDelete
  6. PVR Groups kittae...kaasu vaangiteengala..kindalakkuthaanae..tension ayidaatheenga.rombha thanks for that traffic info. rombha usefulla irukkum

    ReplyDelete
  7. கையில் காசில்லையென்றால் எல்லா 'மாலு'ம் 'டமால்'தான் :)

    ReplyDelete
  8. [[[ஜாக்கி சேகர் said...
    நன்றி தருமி]]]

    யோவ்.. ஒரு பெரிய மனுஷனை பேர் சொல்லிக் கூப்பிடுற..? என்னா தைரியம்..?

    மதுரைல இருந்தே ஆட்டோ அனுப்பப் போறார் பாரு..!

    ReplyDelete
  9. ஜாக்கி சேகர் தகவல்களுக்கு நன்றி. சத்யம் ஆரம்பித்து வைத்த வழி நன்றாகவே வெற்றி பெற்றுள்ளது..இன்னும் இரண்டு மால்கள் வரப்போகின்றன.

    நீங்க சொன்ன மாதிரி போக்குவரத்து நெரிசல் அதிகமாகத்தான் இருக்கும், இந்தக்கட்டிடம் கட்டும் முன்பே எல்லோரும் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

    எழுத்துப் பிழைகளை தவிருங்கள், அதிகளவில் எழுத்துப் பிழைகள்.

    ReplyDelete
  10. அழகான படங்கள். அருமையான பகிர்வு. எல்லோருக்கும் பயன் தரக்கூடிய மிகச்சிறப்பான தகவல்கள். பார்க்கிங், கேண்டீன், டாய்லெட் என எல்லா பகுதிகளையும் அலசி ஆராய்ந்து எழுதி இருக்கும் உங்கள் ஆர்வமும்,அர்பணிப்பு உணர்வும் மிகவும் பாராட்டுக்குரியவை. வாழ்த்துக்கள் ஜாக்கி.

    ReplyDelete
  11. நீங்க மால் போயிட்டு வந்த அனுபவத்த ரொம்ப அழகா சொல்லிருக்கிறீங்க.. இத படிக்கும்போதே கண்டிப்பா ஒரு தடவை அந்த மால்-க்கு போயிடு வரணும்னு ஆசை வருது..

    அடுத்த டைம் சென்னை வரும்போது கண்டிப்பா போவேன்...

    ReplyDelete
  12. படங்களும், கட்டுரையும்
    நல்லா இருக்கு.

    ReplyDelete
  13. உங்கள மாதிரி ஆளுங்க சொன்னதவச்சிதான் மால்களை நான் தெரிஞ்சிக்கனும். நானெல்லாம் எங்க இங்கல்லாம் போவபோறேன்.

    ஆனாலும் சொன்னவிதம் ரொம்ப அருமை. நேரில் பாத்ததை போலவே இருந்தது.

    ReplyDelete
  14. அறிமுகத்துக்கு நன்றி அண்ணே.....
    கூடிய விரைவில் போறேன்...

    ReplyDelete
  15. சும்மா ஒரு தகவலுக்கு. அங்கே 700 சதுர அடி உள்ள ஒரு Salon & SPA-வின் மாத வாடகை ரூ.1,65,000/- என்று கேள்விப்பட்டேன். 2 டன் து.பருப்பு வாங்கலாம். :-)

    ReplyDelete
  16. ஜாக்கி,

    மாலுக்கு இடுகையின் வழியாக இலவசமாக அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நிச்சயமாக அனைவரும் enjoy பண்ண முடியாத பட்ஜெட். படங்களும், விளக்கமும் அருமை.

    ஸ்ரீ....

    ReplyDelete
  17. இரண்டு லிப்டுகள் கூடுதலாக இணைக்க வேண்டும்....
    ஏங்க‌! க‌ட்டிமுடித்த‌ பிற‌கா சொல்லுவ‌து??ஓன‌ர் ம‌ன‌சு எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌டும் என்று யோசித்தீர்க‌ளா?
    :-)

    ReplyDelete
  18. //30 ரூபாய்க்கு டிக்கெட், 5 ரூபாய்க்கு சைக்கிள் டோக்கன்,பத்து ரூபாய்க்கு ஒரு பார்ப்கான் பாக்கெட், என இப்படியாக சாதாரண ரசிகன் என் ஜாய் செய்து கொண்டு இருந்தான்... ஆனால் தியேட்டர்கள் எல்லாம் மால் அவதாரம் எடுக்க சாதரண மிடில் கிளாஸ் ரசிகன் ரொம்பவும் ஆடித்தான் போனான்//

    எனது இடுகையையும் வாசிக்க வேண்டுகிறேன்

    கல்வியின் விலை - 3 - எங்கே செல்லும் இந்த பாதை

    அதற்கு முன்னர் உள்ள இரு இடுகைகளின் சுட்டி அந்த இடுகையில் உள்ளது

    ReplyDelete
  19. agree with தருமி

    ReplyDelete
  20. கோவை என்று ஒரு ஊர் இருக்கிறதே இவன்க்களுக்கெல்லாம் தெரியாதா? புகையை கிளப்பறாங்கப்பா..

    ReplyDelete
  21. //பக்கத்தில் கூவம் ஆற்று ஓர குடிசையில் வசிக்கும் ஒரு குடும்பம் மாலுக்குவந்து இருந்தது... அவ்வளவு பிரமாண்ட வளகத்தை பார்த்து அது ரொம்பவும் சந்தோஷம் கொண்டது.//

    ஜாக்கி!ஒரு புறம் விளிம்பு நிலை மனிதர்கள்.மறுபுறம் வளைகுடா,அமெரிக்க நகரங்களுக்கு நிகரான அவென்யூ(இங்கே அப்படி ஒன்று இருக்கிறது).

    இந்த மனித இடைவெளிகளில் பணம் கையில் புரளுகின்ற மக்கள் அதிகரித்து ஏழ்மை நிலை குறைகிறதென்று கருதுகிறீர்களா அல்லது இன்னும் பாதிக்கு பாதி என்ற தோற்றமா?உங்கள் கருத்து அறிய விரும்புகிறேன்.

    அப்புறம் இங்கே ஒரு சினிமா டிக்கட் விலை சுமார் ரூ450-500 வரை.அவதார்க்கு மட்டும் சுமார் ரூ700.பிசா,KFC யெல்லாம் சாப்பிட்டு வருவது இயல்பான விசயமில்லை.

    ஊழல் மாதிரியான காசிலேதான் மால் சுற்றமுடியும்ங்கிறது கொஞ்சம் இல்ல அதிகமாகவே மனதுக்கு நெருடல்.

    ReplyDelete
  22. ஒரு தடவ பெங்களுருக்கு வந்துட்டு போங்க சேகர்.. அப்பறம் இந்த சென்னை பரவாயில்லைனு தோணும்.. பசங்கள பாத்தா ரொம்ப பெரிய படிப்பு படிச்சு சம்பாதிக்கற மாதிரியும் தெரியல.. இதுங்களுக்கு எல்லாம் யாரு ட்ரஸ் தைக்கிறா? எவன் காசு கொடுக்குறான்?

    ReplyDelete
  23. //கோவை என்று ஒரு ஊர் இருக்கிறதே இவன்க்களுக்கெல்லாம் தெரியாதா? புகையை கிளப்பறாங்கப்பா..//

    அது:)

    ReplyDelete
  24. சார் நாங்கள் எல்லாம் சவுதியில் இருக்கிறோம். இந்த மாதிரி பெரிய பெரிய மால்களை பற்றி எழுதும்போது படித்து விட்டு தேமே என்று பார்த்து கொண்டிருக்கிறோம். இங்கே இதுமாதிரி மால்களை எல்லாம் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட், ஹைபர் மார்க்கெட்டாக தான் பார்க்க முடிகிறது. மற்றபடி
    சினிமா தியேட்டர் எல்லாம் மூச்...

    அன்புடன்
    ஹரீகா

    ReplyDelete
  25. இந்த மால் நான் சென்னைக்கு வந்த புதுசுல பாதி முடிஞ்சி இருந்தது.. நான் சென்னை விட்டு மதுரைல வேலை கேடிசி கெளம்பும் பொது (மூணு மாசம் முன்னாடி தான் ...) முடிஞ்சது .. இந்த மால் எங்க ஏரியா (அம்ஞ்சிகரை.. கலக்டரெட் காலனி , மேத்தா நகர் , சூலை மேடு) அவங்களுக்கெலாம் .. குஷிய கெளப்புன விஷயம் .. :)

    ReplyDelete
  26. ஜாக்கி புகைபடங்கள் அருமை மால்-ஐ நேரில் பார்த்த உணர்வு.

    ReplyDelete
  27. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  28. ஜாக்கி சேகர்....

    இவ்ளோ விரிவா ஒரு இடத்தை பற்றி எழுதியதில் நான் சமீபத்தில் படித்ததில் இந்த ஆர்டிகிள் தான் பெஸ்ட்... வாழ்த்துக்கள் தலீவா...

    சென்னை சிட்டி செண்டர்ல கூட மேலே ஒரு மாடி முழுதும் ஐநாக்ஸ் திரையரங்கம் தானே....

    என்றாவது ஒரு நாள் போய் பார்த்து தான் ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன்...

    கண்டிப்பா போவேனான்னு கேக்கறீங்களா... போவேன்... ஏன்னா, ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்...

    இங்கேயும் வருகை தாருங்கள் தலைவா...

    மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் http://edakumadaku.blogspot.com/2010/04/blog-post.html

    தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்” http://jokkiri.blogspot.com/2010/04/blog-post.html

    ReplyDelete
  29. இந்த மால் கருமத்த ஓபன் பன்றேன் என்று அந்த ஞாயிறு அன்று எந்த வி ஐ பி வந்தாரோ தெரியவில்லை, அன்று பூந்தமல்லி அன்னா ஆர்ச் முதலேயே ட்ராஃபிக் ஜாம். வண்டிகள் அரைமணிக்கு மேல் நகரவே இல்லை. 8 மணி ரயில் பிடிக்க 6.45 எல்லாம் கோயம்பேடை கடந்தும் கூட அன்னா ஆர்ச்சை 7.30 க்கு தான் தொட முடிந்தது. எப்படியோ குறுக்கும் நெடுக்குமாகக் கடந்து, இண்டு இடுக்குகளில் புகுந்து சரியாக எட்டு மணிக்கு ரயில்வே ஸ்டேஷனில் என் தம்பி என்னை டூவீலரில் கொண்டு விட நல்ல வேளையாக ரயில் 15 நிமிடம் லேட். ரயிலை விட்டோம் என்றே நினைத்தோம். அப்படியும் உள்ளே சென்று ப்ளாட்பாரம் அடைவதர்குள் வண்டி நகரத்துவங்கி விட்டது. அன்ரிஸர்வுடு கம்பார்ட்மென்டில் தொற்றிக்கொண்டு பிறகு திருவள்ளூரில் வண்டி நின்றவுடன் எனது கம்பார்ட்மென்ட்ல் ஏறினேன். இந்த பாழா போன மாலால அன்னைக்கு அடைஞ்ச டென்ஷன் கொஞ்சநஞ்சமல்ல. இவ்வளோ காஸ்ட்லி மால் ஒடம்புக்கு ஆகாது சாமி. நான் சினிமாவை சிடில தான் பாப்பேன்.

    anbudan
    ram

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  30. அருமையான விவரிப்பு.படங்களும் நல்லா இருக்கு. துபாய்ல மால்களைப் பார்க்கும்போது என்னடா இப்படிப் பணத்தைக் கொட்டி இருக்காங்களேன்னு தோணும். இப்ப நாம் ஊரிலியே வந்து விட்டது. பணவீக்கம் தான் காரணம்.அங்கே டி'டமாஸ்னு ஒரு தங்கக் கடை மாலில் நகைகளை அடுக்கடுக்கடுக்காகத் தொங்க விட்டிருப்பதைப் பார்த்து, முதல் தடவை அவைகள் போலி என்றே எண்ணிவிட்டேன். மகன் நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டுச் சொன்னான். நல்ல தள்ளுபடிக்குக் கிடைக்கும்மா இங்க வைரமெல்லாம் என்றான்.சிரித்தபடி. நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை:))

    ReplyDelete
  31. நன்றி தமிழ் உதயன் நீங்கள் சொல்வது 100க்கு 100 உண்மைதான்..

    ReplyDelete
  32. சூர்யா பீவிஆர் குருப்கிட்ட நான் காசுவாங்கல... பீ வீ ஆர் எனக்கு புது படத்துக்கு டிக்கெட் ஸ்பான்ச்ர் பண்ணாலே போதும்... கைகாச தண்ணிய செலவாகுது... அதுவும் பைக் டோக்கன் அந்த வளாகத்துக்குள்ள போகவே பயமுறுத்துகின்றது..

    ReplyDelete
  33. நன்றி மொன்க்ஸ்

    நன்றி தலைவர் உத... அவசரத்துல அப்படி விளித்து விட்டேன் மன்னிக்கவும் தருமி சார்....

    நன்றி கிரி எழுத்து பிழைகள் சரி செய்து விட்டேன்..

    நன்றி சஞ்சனா... நிறைய பணம் எடு்த்துகிட்ட போங்க....நல்லா என்சாய் பண்ணலாம்...

    ReplyDelete
  34. நன்றி சைவ கொத்து பரோட்டா..

    நன்றி வரதன் சார் தொடர்ந்து வாசிப்புக்கு

    நன்றி ஜெட்லி

    நன்றி கும்மி உங்க மேக்ஸ் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சேன்..

    ReplyDelete
  35. நன்றி ஸ்ரீ

    நன்றி வடுவூர் குமார்... உண்மைதான் கட்டண பிறகுதானே இந்த பிரச்சனை..

    நன்றி புருனோ நல்லா எழுதி இருக்கிங்க..

    நன்றி அகமது இர்ஷான்

    நன்றி அழகன்

    நன்றி சஞ்சய் காந்தி... சஙசய் உங்கள் கோபம் புரிகின்றது.. சென்னையில் பொழுது போக்க பல இடங்கள் உள்ளன.. ஆனால் கோவையில் ஏதும் இல்லை..

    ஆனால் கோவை எனக்கு சென்னையை விட ரொம்பவும் பிடித்த ஊர் தெரியுமா?

    ReplyDelete
  36. இந்த மனித இடைவெளிகளில் பணம் கையில் புரளுகின்ற மக்கள் அதிகரித்து ஏழ்மை நிலை குறைகிறதென்று கருதுகிறீர்களா அல்லது இன்னும் பாதிக்கு பாதி என்ற தோற்றமா?உங்கள் கருத்து அறிய விரும்புகிறேன்.//

    இப்போது மட்டும் அல்ல எல்லா காலத்திலும் சமத்துவ நிலை என்று ஒன்று வர வாய்ப்பே இல்லை... அங்கு ஒரு பார்வையாளனாக நடந்த விஷயத்தை பற்றி எழுதினேன்...

    ஆதித செலவு செய்ய அது போலான பணங்களும் ஒரு காரணம் என்று சொல்கின்றேன்...

    உழைத்து செலவு செய்பவர்களும் ஏராளமாக இருக்கின்றார்கள்

    நன்றி ராஜ நடராஜன்..

    ReplyDelete
  37. நன்றி ஜெய் கேமரா வில் படம் எடுக்க கூடாது என்ற காரணத்தால் அந்த பசங்களின் போட்டோ எடுக்கவில்லை...

    பெங்களுரில் நிறைய சுற்றி இருக்கின்றேன்.. என் மனைவி முதன் முதலில் பெங்களுரில்தான் வேலை செய்தேன்...

    அங்கு உடை அணியும் பெண்கள் எல்லாவற்றையும் கடந்து போனவர்கள்..

    ReplyDelete
  38. ஹரிகா..அந்த ஊர் அப்படி என்ன செய்வது... ?

    நன்றி ஹரிகா உங்கள் முதல் வருகைக்கு...

    நன்றி ராஜா சந்தோஷம் ஆனால் கொஞ்சம் நாளுல அந்த இடம் டிராபிக்ல தினறும் பாருங்க...

    நன்றி புதுவை சிவா

    நன்றி போகி ,காம்


    நன்றி கோபி உங்கள் பாராட்டுக்கு....

    நன்றி ஹெராம் உங்களுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை பலருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது...

    கெட்டதில் ஒரு நல்லது டிரைன் லேட்டாக கிளம்பியதுதான்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner