ஆல்பம்...
35 கோடி செலவில் தாயாரித்த கிரையோஜினிக் என்ஜினோடு பல கோடி மதிப்பிலான சுதேசி ராக்கெட் கடலில் விழுந்துவிட்டது... பணம் ஒரு பிரச்சனை இல்லை... பல கோடிகள் லஞ்சம் விளையாடும் நாட்டில், பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேச்சி பிரச்சனையை சால்வ் செய்யாமல், ஐபி எல்லில் லஞ்சம் வாங்கியது எவ்வளவு என்று நாடளுமன்றத்தில் அமளிதுளியில் ஈடுபட்டு கண்களுக்கு தெரிந்தே பல கோடி ரூபாய் இழப்புகளை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் போது இந்த 35 கோடி ரூபாய் வீண் அல்ல இது முதலீடு....ஸ்ரீ ஹரிகோட்டாவில் முதன் முதலாக நிறைய எடையோடு ஒரு ராக்கெட் பறக்கும் போது அங்கு இருந்தேன்.... அது பறக்கும் போது வீடியோவில் படம் எடுக்க வேண்டும்... அந்த ராக்கெட் பறந்த போது எனக்கு அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.... அவர்கள் உழைப்பை நேரில் பார்த்தவன்... அதனால் அவர்கள் கவலை பட தேவையி்ல்லை.. இன்னும் வானம் தொட்டுவிடும் தூரம்தான்... எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட எதையாவது செய்ய வேண்டும் என்பதே எனது தாரக மந்திரம்... அதனால் இந்த ராக்கெட் உழைப்பில் ஈடுபட்ட அத்துனை விஞ்ஞானிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.....
================================
ஒரு பெண் ஒரு கவிதை எழுதுகின்றாள்... அது ஆபாசமாக இருப்பதாக சொல்லபடுகின்றது...அந்த பெண் எழுதியது ஆபாசமே என்றாலும் அதை எழுத கூடாது என்று சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது... அப்ப எதுக்கு கருத்து சுதந்திரம்????அதற்க்கு ஒருவர் வழக்கு தொடுக்கின்றார்....அந்த பெண்ணின் குடும்பம் விஷயம் நடு ரோட்டுக்கு இழுத்துவரபடுகின்றது... அவர்கள் நடத்திய கூட்டத்தில் கருத்து சொல்கின்றோம் என்று சொல்லிவிட்டு எழுதியதை விட ஆபாசமாக சொந்த வாழ்க்கையை பேசி இருக்கின்றார்கள்...... எழுதியது ஆபாசம் என்றால் அதை சபையில் அதே வார்த்தையை பேசுவதும் ஆபாசம்தான்.... எனக்கு தெரிந்து அந்த பெண் பெண்ணாக இருப்பதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்..
===================================
நேற்று புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார்... மலேசிய விமானத்தில் இருந்து சென்னைக்கு வந்தார் தனது பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்னை வந்தார்... ஆனால் இந்தியாவில் நுழைய அனுமதி இல்லை என்று அதே விமானத்தில் திருப்பி அனுப்பிவிட்டாகள்...எப்போதும் போல் இந்த விஷயத்திலும் சட்டம் தன் கடமையை செய்து தன்னை திருப்தி பட்டுக்கொண்டது...
====================================
மிக்சர்....
பதிவர் மயில்ராவணன் சத்யம் தியேட்டருக்கு தனது மனைவியுடன் படம் பார்க்க போய் இருக்கின்றார்.... 140 ரூபாய் மதிப்புள்ள காம்பளான் பேக் படம் பாக்க வந்3த எல்லோருக்கும் கொடுத்து இருக்கின்றார்கள்... இரண்டு டிக்கெட் என்பதால் ரூபாய் 280க்கு பொருள் கிடைத்து இருக்கின்றது...டிக்கெட் விலை 240தான்....மயிலுக்கு அன்னைக்கு மச்சம் போல இந்த விஷயத்தை நண்பரிடம் சொல்ல அவர் சத்தியத்துக்கு வண்டி எடுத்துக்கொண்டு போனார்... வந்து உதடு பிதுக்கினார்... நான் சொன்னேன் தினமும் அம்மாவாசை சோறு கிடைக்காது என்று.....
=================================
பெசன்ட் நகர் பீச்சில் நேற்று இரவு நானும் என் மனைவியும் பீ்பிள் என்ற கடையில் சாப்பிட போய் இருந்தோம்... ஸ்டுடன்ட் பேக் என்ற ஒரு ரேட் வைத்து இருக்கின்றார்கள்... அது மதியம் ஒன்றில் இருந்து மாலை 6 வரைதானாம்.... ஆனால் 6 மணியில் இருந்து அவர்கள் கொடுக்கும் அதே உணவு பொருள் இரு மடங்குக்கு விலை ஏறிவிடுகின்றது... அந்த லாஜிக் என்னவென்றே புரியவில்லை..
======================================
இந்த வார சலன வீடியோக்கள்...18+ must see
========================================
படித்ததில் பிடித்தது...
விதி..
திருவிழா
கூட்டத்தில்
யாருமற்ற
தெருவில்
அலைகிறது
கடந்த
திருவிழாவில்
தொலைந்து போன
சில மனங்கள்....
சிவபாரதி சிதம்பரம்... குமுதம் வார இதழ்..
==========================
கலைஞருக்கு பிறகு யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று மு.க அழகிரி சொல்வதன் பொருள்....????
தம்பி டீ இன்னும் வரலை
/சிக்ஸ் முகம் கள்ளியம்புத்தூர்... நானே கேள்வி நானே பதில் ஆனந்த விகடன்
==============================
ரசித்த குறுத்தகவல்....
நம்ம நாட்டுலேயே... ரொம்ப ரொமன்டிக் ஸ்டேட் என்ன தெரியுமா? நம்ம தமிழ்நாடுதான்... எப்படி? எல்லா நைட்டும் எல்லார் வீட்டுலயும் கேன்டில் லைட் டின்னர்தானே சாப்பிடுறோம்....
நன்றி தமிழ்நாடு மின்சாரவாரியம்....
==========================
ஹேய் ஹேய் ஹேய் உங்களுக்கு வேல்ட் பெஸ்ட் பஞ்ச் டயலாக் தெரியுமா?
LOOSE MOTION NEVER COMES IN SLOW MOTION
============================
பாக்கிஸ்தான்ல இப்ப பிச்சி உதறும் பார்வேடு எஸ் எம் எஸ் எது தெரியுமா?
ஜபிஎல்லில் ஜஸ்ட் 11 பாக்கிஸ்தான் வீரர்களை ரிஜெக்ட் செய்தார்கள்.. ஆனா சானியா மிர்சா இந்தியாவுல இருக்கின்ற எல்லா ஆம்பளைங்களையும் ரிஜெக்ட் பண்ணிடுச்சி...
=====================
வேண்டுகோள்..
1...எனது மனைவி எனக்கு பரிசாக ஒரு சாம்சங் மாடல் எண்...gt-s 5233 கொடுத்தார்.. இதுல தமிழ் மொழியே சேட்டிங்ஸ்ல இல்லை... என் மொபைலில் தமிழ் சாப்ட்வேர் செலுத்தி தமிழ் எழுத்துக்களை படிக்க முடியுமா? தெரிந்தால் சொல்லவும்...
======================
2.எஸ் எம் எஸ் அனுப்பும் வாசக நண்பர்கள்.. தங்கள் பெயரையும் போட்டு அனுப்ப வேண்டுகின்றேன்.. நல்ல தகவல்கள் நல்ல ஜோக் அனுப்பும் அனைவருக்கும் என் நன்றிகள்..
=============================
நான்வெஜ்..
ஜோக்....
ஒரு தம்பதி 25 வருடத்துக்கு பிறகு ஹனிமூன் கொண்டாட போனார்கள்...மனைவி சொன்னாள்... நாமதான் எல்லாத்தையும் இதுக்கு முன்னாடியே அனுபவிச்சிட்டோமே? என்று சொல்ல அதற்க்கு கணவன்... படுக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டு இப்ப என்னோட முறைன்னு சொல்லிவிட்டு ஐயோ அது எவ்வளவு பெரிசு என்று கத்தி அழ ஆரம்பித்தான்...
இந்த ஜோக் புரியவில்லை என்றால் போன் செய்ய வேண்டாம்...
என்னதான் தமிழ்ல சொன்னாலும் சிலது ஆங்கிலத்துல சொன்னதான் கிக்...
A Boy takes his new girl friend for dinner...
she orders COSTLY French champagne & Oysters for starters. Next, when she orders king lobsters,
He asks her, " Do you eat like this at your mother's house?"
She replies " No, but my mother doesn't s want to Fuck me after dinner." :-)
அன்புடன்
ஜாக்கிசேகர்
(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....
"அந்த பெண் பெண்ணாக இருப்பதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.."
ReplyDeleteஇந்த விசயத்தில் தோழர்கள் தங்கள் பெயரை கெடுத்துகொண்டனர்
ஆயிரமாயிரம் கோடிகளில் ஐ.பி.எல். மேட்ச் நடக்கும் நாட்டில் 35 கோடி எல்லாம் பெரிய பணம் இல்லை என்றாலும் நமது விஞ்ஞானிகள் தோல்வி கண்டு மனம் தளராமல் தொடர்ந்து சாதிக்கவேண்டும்.
ReplyDelete//35 கோடி செலவில் தாயாரித்த சுதேசி ராக்கெட் கடலில் விழுந்துவிட்டது..//
ReplyDelete35 கோடி செலவில் சிவகாசியில்தான் ராக்கெட் தயார் பண்ண முடியும். அனேகமா இதைவிட பத்து பதினைந்து இருபது மடங்கு ஒரிஜினல் காஸ்ட் இருக்குமுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் செக் பண்ணி பாருங்க ஜாக்கி!
அய்யா ஜக்கி
ReplyDeleteலிணா கவிதை க்கு விளக்கம் கோரப்பட்டது உட்பட 6 கேள்விகளில் கவிதையை ம.க•இ.க• தோழர்கள் புரிந்துகொண்ட வித்த்தில் இருந்து நாகரிகமான முறையில்தான கேள்வி கேட்டார்கள். அதன் எழுத்து வடிவம் கூட விநியோகிக்கப்பட்டது. கூசாமல் குடும்ப விவகாரத்தை பேசினார்கள் என்று புரளியைக் கிளப்பி 6 கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சட்டசபையில் துரைமுருகன் கையப் பிடிச்சு இழுத்திட்டாருன்னு அந்தம்மா பேசுதுண்ணா இதுக்கு இம்புட்டு ஜால்ராவா..
ராக்கெட் தோல்வி அடைந்தாலும்,
ReplyDeleteநல்ல முயற்சி.
எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட எதையாவது செய்ய வேண்டும் என்பதே எனது தாரக மந்திரம்.
ReplyDeleteநன்று..
--------------------
நெசமாலுமே சோக்கு புரியலங்கண்ணா...
35crore is when Sujatha wrote about that. Now it would be 350 crores.
ReplyDelete//
ReplyDeleteமோனி said...
எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட எதையாவது செய்ய வேண்டும் என்பதே எனது தாரக மந்திரம்.
நன்று..
நெசமாலுமே சோக்கு புரியலங்கண்ணா..//
REPEAT.....
ஜோக்கு நெஜமாவே புரியல, நீயே போன் பண்ணி வெளக்கம் சொல்லு
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அப்புறம் ராக்கெட் தயாரிக்க ஆன செலவும் 420 கோடின்னு படிச்சதா ஞாபகம், செக் பண்ணிப் பாரு
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நன்றி கேஆர்பி செந்தில்...
ReplyDeleteநன்றி துபாய் ராஜா...
லக்கி..கொஞ்சம் தப்பாதான் எழுதிட்டேன்..கிரையோஜனிக் என்ஜின் ரேட்டை ராக்கெட் ரேட்டுன்னு எழுதிட்டேன்...
நன்றி கேஆர்பி செந்தில்...
ReplyDeleteநன்றி துபாய் ராஜா...
லக்கி..கொஞ்சம் தப்பாதான் எழுதிட்டேன்..கிரையோஜனிக் என்ஜின் ரேட்டை ராக்கெட் ரேட்டுன்னு எழுதிட்டேன்...
ம.க•இ.க• தோழர்கள் புரிந்துகொண்ட வித்த்தில் இருந்து நாகரிகமான முறையில்தான கேள்வி கேட்டார்கள். //
ReplyDeleteஅய்யா ரோவுக்கு ஜல்ரா தட்ட எனக்கு எந்த அவசியமும் இல்லை..
இரண்டாவது அந்த கூட்டத்துக்கு நான் வரலை...
மூன்றாவதுவது அவரது குடும்பத்தினரை தப்பாக பேசவில்லை என்று நிங்கள் சொல்கி்றீர்களா?
நீங்க நியாயமானவர்தான்...
நன்றி
ராக்கெட் தோல்வி அடைந்தாலும்,
ReplyDeleteநல்ல முயற்சி.
நன்றி சைவ கொத்து பரோட்டா..
எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட எதையாவது செய்ய வேண்டும் என்பதே எனது தாரக மந்திரம்.
ReplyDeleteநன்று..//
நன்றி மோனி
35crore is when Sujatha wrote about that. Now it would be 350 crores.//
ReplyDeleteராம்ஜி என்ஜீன் மேட்டடிர மட்டும் சொல்லி இருக்கிங்க..
நன்றி ஸ்ரீ
ReplyDeleteநன்றி சச்சனா
ஜோக் புரியாதவர்கள் போன் செய்யவும்.. அதை போனில் சொல்லத்தான் முடியும்..
//35 கோடி செலவில் தாயாரித்த சுதேசி ராக்கெட் கடலில் விழுந்துவிட்டது..//
ReplyDeleteகடந்த 18 ஆண்டுகளாக 2 ஆயிரம் விஞ்ஞானிகளின் கடும் உழைப்பில் உருவான இந்த ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் மற்றும் ஜிசாட்-4 செயற்கைகோளின் மதிப்பு ரூ.420 கோடியாகும்.
- தினமணி
’’ு...அந்த பெண் எழுதியது ஆபாசமே என்றாலும் அதை எழுத கூடாது என்று சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது... அப்ப எதுக்கு கருத்து சுதந்திரம்’’
ReplyDeleteகருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதை
வேண்டுமானாலாம் சொல்லலாமா..?
செம ஜோக்கு அவ 25 வர்டங்களிட்கு முதல் சொன்னத அவன் இப்ப சொல்றான் ,, இந்த விசயங்களில் எனக்கு கொட்பூர புத்தி
ReplyDeleteபன்ச் டயலாக் சூப்பர்
ReplyDeleteஎத்தனை கோடி செலவானாலும் விஞ்ஞான முயற்சிகளில் பின் தங்கி விட கூடாது.
ReplyDeleteநல்லா சொல்லி இருக்கீங்க.
superappu
ReplyDelete//நம்ம நாட்டுலேயே... ரொம்ப ரொமன்டிக் ஸ்டேட் என்ன தெரியுமா? நம்ம தமிழ்நாடுதான்... எப்படி? எல்லா நைட்டும் எல்லார் வீட்டுலயும் கேன்டில் லைட் டின்னர்தானே சாப்பிடுறோம்....//
ReplyDeleteவேதனையான சோக்கு! வேதனையிலும் ஒரு ஆறுதல் தமிழ்நாட்டை விட ரொமன்டிக் ஸ்டேட் எல்லாம் இருக்கு என்பது தான். தமிழ்நாட்டின் இந்த நிலைக்காக இங்கு கடந்த இருபது ஆண்டுகளாக ஆட்சில் இருந்தவர்கள், இருப்பவர்கள் வெட்கப்பட வேண்டும்...
// பாக்கிஸ்தான்ல இப்ப பிச்சி உதறும் பார்வேடு எஸ் எம் எஸ் எது தெரியுமா?
ஜபிஎல்லில் ஜஸ்ட் 11 பாக்கிஸ்தான் வீரர்களை ரிஜெக்ட் செய்தார்கள்.. ஆனா சானியா மிர்சா இந்தியாவுல இருக்கின்ற எல்லா ஆம்பளைங்களையும் ரிஜெக்ட் பண்ணிடுச்சி... //
அந்த FWD அனுப்புபவர்களுக்கு யாராவது இந்த REPLY-ஐ அனுப்புங்கப்பா...
"Rejected by Sania is a BLESSING in disguise"