ஆல்பம்....
இன்று நடக்கும் பதிவர் சந்திப்புக்கு வரும் பதிவர்கள் இந்த முறை சென்னை மெரினாவில் டிராபிக்கில் தினற போகின்றார்கள் என்பது உறுதி... ஒரு கானும் பொங்கலின் போது பார்த்த கூட்டத்தை போன சனிக்கிழமை பார்த்து தொலைத்தேன்...வண்டியை விட முடியவில்லை எடுக்க முடியவில்லை... லீவ் நாள் என்பதால்,கோடை வெப்பம் காரணமாக எல்லாரும் கடற்கரைக்கு வந்து விடுகின்றார்கள்... இந்த சனிக்கிழமை பதிவர்களும்... ஒரு 4,30க்கு வந்தாதான் பார்க்கிங் எங்காவது கிடைக்கும்னு நினைக்கின்றேன்...
===========
தமிழக வீரர்கள் மூவரையும் சேர்த்து 70க்கு மேற்பட்டவர்கள் பலியாகிவுள்ளார்கள்...நக்சல் தாக்குதல்... ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த காரணத்தால் ஆயுதம் எடுக்க வேண்டி வந்தது என்று நக்சல் தரப்பு சொல்கின்றது...இலங்கையில் நடந்த அதே பிரச்சனை இப்போது நமது சொந்த நாட்டிலும் நடக்கின்றது...எவ்வளவு அரசியல் காரணங்கள் சொன்னாலும், எழுபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றன...அதற்கு அரசியல்வாதிகளின் பொறுப்பின்மைதான் முக்கிய காரணம்...... 5லட்சம் மக்கள் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு இதுவரை எந்த அடிப்படை வசதியை மத்திய அரசும் மாநிர அரம் செய்து கொடுக்கவில்லை.....
====================
தமிழகத்தில் சென்னையை தவிர மூன்று மணி நேர மின்வெட்டு அமலில் இருக்கின்றது... மதுரையை சேர்ந்த வக்கில் நண்பர் சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் நெய்யில் பொறித்தவர்களா? அப்ப நாங்கள் என்று கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கின்றார்... நியாயமான கேள்வி...அனால் கடலூருக்கு தற்போது போன போது என் அத்தை அவசரமாக வேலை செய்து கொண்டு இருந்தாள்,... என்னவென்று கேட்க ?
இப்ப மணி என்ன?
பத்தரை...
பதினோரு மணிக்கு கரென்டை நிறுத்திடுவானுங்க என்று பரபரபாய் வேலை செய்து கொண்டு இருந்தார்கள்... அதாவது தினமும் பதினோரு மணிக்கு கரென்ட் போய், இரண்டு மணிக்கு மேலை வந்திடும்.. என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கின்றது...
மதுரை வக்கில் நண்பருக்கு ஒரு செய்தி...
சென்னையில் எப்போது மின்சாரம் போகும் என்று எல்லாம் சொல்ல முடியாது.. எப்போது வரும் என்றும் சொல்ல முடியாது... போனவாரம் புழுதிவாக்கம் பாலைய்யா கார்டன் பக்கத்தில்உள்ள, என் அக்கா வீட்டில் கரண்ட் போய் இரவு முழுவதும், குடும்பமே விசிறியில் விசிறி கொண்டு இருந்ததாம்...போன சனிக்கிழமை லீவ்தானே என்று வாசிங் மெசினில் எல்லா துணியையும் போட்டு விட்டு, சமைக்க மிக்சியில் எல்லாம் போட்டுவிட்டு மீக்கிசயை ஆன் செய்ய, ஒரு ட்ரொயிங் என்று பெருங்குரலெடுத்து சட்டென மிக்சி நின்று போக, என் அக்கா திட்டிய திட்டில்அந்த புழுதிவாக்கம் ஏரியா லைன்மேன்கள் குடும்பத்துடன் தெருவுக்கு இழுத்து வரபட்டார்கள்... சென்னையில் அறிவிப்பே கிடையாது...எங்களுக்கும் மின் தடை உண்டு.. சென்னையில் மின் தடையில்லாத இடங்கள் என்றால் அது கோபாலபுரமும், அதனை சுற்றியுள்ள பகுதிகள்தான்....
============================
சனியா மிர்சா திருமணம் போல் சமீபத்தில் வேறு எந்த பெண்ணுக்கும் திருமணத்தில் சர்ச்சை ஏற்பட்டது கிடையாது....இன்னும் எப்படி யார் ரூபத்தில் வரும் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்...
==============================
எழுத்தாளர் முத்துராமனுக்கு சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சைக்கு, முடிந்த வரை உதவி செய்யுங்கள்... 33 வயதில் இது போலான பிரச்சனையில் எழுத்தாளர் முத்துராமன் இருப்பதால் முடிந்தவர்கள் உதவி செய்ய கிழேயுள்ளவிபரங்கள் போதுமானதாக இருக்கும்... இந்த செய்தியை தங்கள் நண்பர்கள் இடத்தில் கொண்டு செல்லுங்கள்.... எற்க்கனவே இந்த செய்தி எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் மீண்டும் நினைவு படுத்துவது தவறில்லை
முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :
SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090
MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.
முகவரி :
முத்துராமன்,22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
===================================
மிக்சர்....
வாழ்த்துக்கள்....
இளையாராஜாவுக்கும் தமிழக கார் பந்தய வீரர் நரேனுக்கும்... பத்மபூஷன் விருது பெற்றமைக்கு... இளையராஜாவுக்கு ரொம்ப லேட்டான அங்கீகாரம் இது இப்போதாவது இது கிடைத்ததே...ராஜா தாழ்த்தபட்டவர் என்பதே இந்த லேட்டான அங்கீகாரத்துக்கு காரணம் என்பதை மறுப்பதற்க்கு இல்லை
=================
பதிவர் சின்னபையன் மச்சினிச்சி திருமணத்துக்கு போய் சின்னபையனை சந்தித்தேன்... மெய்யாலுமே சின்ன பையனாக இருக்கின்றார்.. திருமண்த்துக்கு மறுநாள் அவர்தம்பிக்கு நிச்சயதார்த்தம்.. அவருக்கும் வாழ்த்துக்கள்... அவரது மச்சினிச்சி திருமணத்தில் என்னை வசிகரித்த பெண் சினனபையனின் 5 வயது மகள் சஹானா... சோ கியூட்... அந்த பட்டு சட்டை பட்டு பாவாடை சான்சே இல்லை..ரவுடி ரங்கன் போல் நான்.... சின்ன பையனாக சின்ன பையன்...
=============================
என் வீட்டுக்கு பக்கத்தில் சென்னை ஏர்போர்ட்டின் இன்னொரு ரன்வே போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்... அதன் வழியில் அடையாறு குறுக்கிடுவதால் அதன் மேலேயே பாலம் அமைத்து ரன்வே போடுகின்றார்கள்....சென்னையை பொறுத்தவரை இது புதுமைதான்...
=========================
டிவி பார்ப்பதே குறைந்து போன நிலையில் இந்த தமிழ் டிஸ்கவரி என்னை ரொம்பவும் வசீகரிக்கின்றது...எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எதாவது ஒரு செய்தியை அது புள்ளிவிவரத்தோடு அது கொடுத்துக்கொண்டு இருக்கின்றது...சில பார்த்து சிலாகித்த பல நல்ல நிகழ்ச்சிகளை தனி பதிவாக உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்...
==============================
பல்லாவரத்துக்கு பக்கத்தில் ஒரு பாலம் கட்டி முடிக்கவில்லை ஆனால் தார் எல்லாம் போட்டு புது பாலம் போல் இருக்க, தங்கைக்கு அப்ளிகேஷன் வாங்க நண்பர் காரை எடுத்துக்கொண்டு போன ஒருவர்.... முடிக்கபடாதா பல்லாவரம் பிரட்ஜில் ஸ்பிட்படத்து பேருந்து போல, முடிக்காத பாலத்தில் 50 அடி உயரத்தில் இருந்து கார் பறந்து பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் விழுந்து நொறுங்கியது... ரயில் அப்போது மட்டும் வந்து இருந்தால், அது மிக பெரிய விபத்தாக வரலாற்றில் பதிவாகி இருக்கும்...நல்ல வேளை... பெரும் காய்ங்களோடு காரோட்டி தப்பி இருக்கின்றார்....பாலம் முடிந்து விட்டடதா? இல்லையா என்பது உள்ளுர்காரனுக்கு தெரியும்...வெளியூர்காரனுக்கு????
முடியாத பாலத்தில் தடுப்பு வைக்காத அட்சியமே இந்த விபத்துக்கு காரணம் ...வழக்கம் போல விபத்து நடந்த உடன்... தடுப்பு மின்னல் வேகத்தில் வந்து விட்டது...
===================
ஊட்டி கிருஸ்துவ பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால் சாமியார் நித்யானந்தாவை போலவே.... இறைவன் பெயரால் இங்கே பல பெண்களை சாப்பிட்டவர் அமெரிக்கா போய் சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை...அமெரிக்கா தேடிக்கொண்டு இருக்கின்றது.... பாதிரியார் அங்கே ஜுட் விட்டு விட்டு ஊட்டியில் இளைப்பாறிக்கொண்டு இருக்கின்றார்.....விசாரனை பிடி இறுகுகின்றது... நித்யாவுக்கும் , ஜோசப்புக்கும் உள்ள ஒரே வித்தியாசம்.... முன்னவர் சாமியார் இவர் பாதிரியார் அவ்வளவே...
=====================
இந்த வார சலனபடம்.... இப்படி கூட வழுக்குமா-?
படித்ததில் பிடித்தது....
கவிதை...
நீ உன் வீட்டு முற்றத்தில்
தலை உலர்த்துகின்றாய்...
என் வீட்டு தோட்டத்து
பூக்கள் எல்லாம்
பெரு மூச்சு விடுகின்றன...
எஸ் கிருத்திகா செல்வன் இந்த வார குமுதத்தில்...
============================
கவிதை..
சாமியும் சாத்தானும்...
யார் செத்தாலும்
அம்மா அப்படித்தான் சொல்வாள்
விஷம் குடித்த
கடைத்தெரு முருகேசன்
தூக்கில் தொங்கிய
வடக்கு வீட்டு மல்லிகா...
லாரியில் அடிபட்ட கணேசன்
இறந்தவர்கள் எல்லாரும்
பெயாகி பயமுறுத்தும்
கதைகளும் கனவுகளும்
அம்மாவுக்கு எப்படித்தான் தெரிகின்றதோ..?
குடும்பத்தாரின்
எல்லாவியாதிகளுக்கும்
இறந்த மனிதர்களின்
பெயரைத்தான் வைக்கிறாள்....
ஐயா போய் சேர்ந்த சிறிது நாட்களில்
ஐயா இப்போ பேயா அலைவாங்களாம்மா?
கேட்ட தங்கச்சியின்
கண்ணம் திருகிய அம்மா
“ ஐயா இப்போ சாமியாயிட்டாங்க ”என்றாள்..
ராஜன் ஆத்தியப்பன்...
=============================
மனைவிதான் தனக்கு உயிரென்று
சொன்னவன் வீட்டில்
திருட்டுதனமாக நுழைகின்றான்
உயிர்கொடுப்பான் தோழன்.....
என் வினாயக முருகன்...
இந்த வார விகடன்....
==============================
நான் வெஜ்....
ஜோக்
அவள் அந்த காலத்து பாட்டி டேட்டிங் கல்சர் பிடிக்காது இருந்தாலும் தனது பேத்தி டேட்டிங் போக வேண்டும் என்று அடம் பிடித்த காரணத்தால் பேத்திக்கு சில அட்வைஸ்கள் செய்தால் ....
பசங்க உன்னை கிஸ் அடிக்க டிரை பண்ணுவாங்க
உனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா ஒத்துக்காதே...
அவன்க கையை உன் கழுத்துக்கு கீழே....................சில்மிஷம் பண்ணுவாங்க..
உனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா ஒத்துக்காதே...
அவனன்க உன் இரண்டு காலுக்கு நடுவில்.....................சில்மிஷம் பண்ணுவாங்க.
உனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா ஒத்துக்காதே...
அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம் நம்ம குடும்ப மானத்தை காத்துல பறக்க வைக்க உள்ளை கீழே படுக்க வைக்க முயற்ச்சி பண்ணுவாங்க.. நீ ஒத்துக்கவே ஒத்துக்காதே என்றாள்...
மறுநாள் டேட்டிங் போய் விட்டு வந்து பேத்தி சொன்னாள்... நம்ம குடும்ப மானத்தை காப்பாத்திட்டேன் பாட்டி நான் கீழே படுக்கவேஇல்லை நான் மேலதான் உட்கார்ந்தேன் என்றாள்....
அன்புடன்
ஜாக்கிசேகர்
(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....
ஆஹா !
ReplyDeleteஅருமையான பதிவு!!
"முடியாத பாலத்தில் தடுப்பு வைக்காத அட்சியமே இந்த விபத்துக்கு காரணம்"
ReplyDeleteActually
-சிறுவர்கள் விளையாடுவதற்காக தடுப்பு கற்களை அகற்றி விட்டதால் விபத்து ஏற்பட்டது
Superb Thala
ReplyDeleteநான்வெஜ் கொஞ்சம் பழசு.இரண்டு மாசத்துக்கு முன்னே கேபிள் சங்கர் எழுதிட்டாறு. பத்மபூஷண்க்கு ரஹ்மான்க்கு பாராட்டு இல்லையா ?
ReplyDeleteNon veg nalla irundadu.
ReplyDelete