(KATALIN VARGA)18+ உலகசினிமா ரோமானியா.. கற்பழிப்பின் எதிர்வினை...

ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும்.. உங்கள் உடலின் உங்கள் சம்மதம் இல்லாமல் தனியாகவோ அல்லது குழுவாகவோ அத்து மீறும் போது அதனை எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது...அது போல் ஒரு கொடுமையான நிகழ்வு நினைத்து கூட பார்க்க முடியாது...

உலகில் 73 சதவீதம் பேருக்கு பாதிக்கபட்ட கற்பிழந்த பெண்களுக்கு ... தான் யாரால் கற்பழிக்கபட்டோம் என்று நன்றாக தெரியும் என்று ஒரு ஆய்வு சொல்கின்றது ...பாதிக்கபட்ட பெண்களுக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் அது மறப்பதில்லை... ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை சட்டென மறந்து விடுகின்றார்கள்..


ஒரு இரவு நேர விடுதியில்இருவர் சந்திக்கின்றார்கள்... அவர்கள் இருவரும் ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் உறவு கொள்கின்றார்கள்...உச்ச நிலையின் போது பக்கத்தில் இருக்கும் கல்லை எடுத்து மண்டையில் மடேர் என்று அடித்து அந்த பெண் அந்த ஆணை அடித்து கொலை செய்தால் எப்படி இருக்கும்?.... ஏன் கொலை செய்தால்????

KATALIN VARGA உலகசினிமா ரோமானியா.. நாட்டு படத்தின் கதை இதுதான்...
Katalin (Hilda Péter) ஒரு ஒன்பது வயது பையணின் தாய்...Orbán (Norbert Tankó) எப்போதும் தன் தாய் காட்டலிடன் தன் அப்பா யார் என்ற கேள்வியை தினமும் கேட்டு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருப்பவன்...

அவள் தங்கி இருக்கும் வீட்டில் கூட அந்த ஹவுஸ் ஓனரால் அவளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுகின்றது... ஒரு இரவு விடுதியில் ஒருவனை சந்தித்து அவனோடு உறவு கொண்டு கல்லால் அவனை அடித்து கொலை செய்யும் போது அவளின் கதை மெல்ல விரிகின்றது... பத்து வருடங்களுக்கு முன்பு ரேப் செய்தவர்களில் அவனும் ஒருவன்... போலிஸ் அவளை துரத்த அவள் தனது மகனுடன் பயணபடுகின்றாள்... பக்கத்து ஊரின் ஒதுக்கு புற பண்ணை வீட்டில் அடைக்கலாம் கேட்க அந்த தம்பதி அவளுக்கு இடம் கொடுக்கின்றார்கள்...அந்த வீட்டில் காட்டலின் ஆர்பன் இருவரும் அந்த வீட்டில் தங்குகின்றார்கள்.. அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை...அர்பனை பார்த்ததும் அந்த பையனின் மேல் அந்த பண்ணை வீட்டு பெண்ணுக்கு பாசம் வருகின்றது...ஒரு சின்ன டுவிஸ்ட்... அந்த பண்ணை வீட்டு ஆணும் கட்டலினை கெடுத்தவனில் அவனும் ஒருவன்... அவன் பத்து வருடம் கழித்து இப்படி ஒரு நிலைவரும் என்று கனவிலும் அவன் நினைக்காத போது....அவனையும் கொல்ல அவள் வந்து இருப்பதை சொல்கின்றாள்... தன்மீது அளவுகடந்த காதல் கொண்ட கணவன்... கடந்த காலத்தில் ஒரு பெண்ணை கற்பழிப்பு செய்தவன் என்று தெரிந்து அந்த பண்ணைவீட்டு பெண் தூக்கில் தொங்க... காட்டலின் அவனை சொலை செய்தாளா? அதற்க்குள் போலிஸ் அவளை பிடித்து விட்டதா என்பதை வெண்திரையில் காணவும்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

மிக ஸ்லோவான திரைக்கதை ஆனால் சில காட்சிகள் கவிதையாய் இருக்கும்...

இயக்குனர் Peter Strickland கிளைமாக்சில் இது வழக்கமான கற்பழிப்பு கதை போல் இல்லாமல் முடிவு சற்று வித்யாசமாய் வைத்து இருப்பார்...

இந்த படம் சென்னை ஏழாவது உலக படவிழாவில் நிறைவு படமாக சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிடபட்டது...

பல சர்வதேச பட விழாக்களில் இந்த படம் பல விருதுகளை பெற்று இருக்கின்றது..

படத்தின் ஒளிப்பதிவில் லேண்ட்ஸ் கேப் காட்சிகள் உண்மையில் நெஞ்சை தொடும்... மிக முக்கியமாக அந்த பண்ணை நிலத்தில் அந்த பெண் தூக்கு போட்டுக்கொள்ளும் அந்த காட்சியின் போது கேமரா டிராவல் ஆகும் அந்த இடங்கள் அற்புதம்..

இந்த படம் 2009 ஆம் ஆண்டு வெளியிடபட்டது....

நெஞ்சை தொடும் காட்சி....

(இன்றில் இருந்து எல்லா படவிமர்சனங்களில் நெஞ்சை தொடும் காட்சி என்று ஒரு பகுதியை சேர்த்து உள்ளேன்....)

பண்ணை வீட்டு பெண்ணோடு படகில் பயணிக்கும் போது... காட்டலின் தன் கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட கற்பழிப்பு நிகழ்ச்சியை சற்று விவரித்து சொல்லும் போது... அவளின் வலிகளை கேட்டுக்கொண்டே வர...கடைசியில்.. அவள் புருஷனும் அவளை கற்பழித்தவர்களி்ல் ஒருவன் என்று அறியும் காட்சி...
படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்..


இயக்குனர் Peter Strickland அவரின் பிளாக் முகவரி... இங்கே கிளிக்கவும்

இயக்குனர் அவர் மாமாவிடம் கெஞ்சி கூத்தாடி பணம் வாங்கி இந்த படத்தை எடுத்தார்...2007ல் 28000 ஆயிரம் பவுண்டில் இந்த படம் எடுத்துமுடிக்கபட்டு 2009ல் வெளிவந்தது...


அன்புடன்
ஜாக்கிசேகர்...

ஒரு நாளைக்கு சராசரியா என் தளத்தை 1500பேர் வாசிக்கிறிங்க... அதுல ஒரு 100 பேர் ஓட்டு போட நேரம் ஒதுக்கினா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க...

(போதுமா ரோமியோ...மற்றும் கும்கி)

11 comments:

  1. ரைட் ஓட்டு போட்டாச்சு போட்டாச்சு ...

    ReplyDelete
  2. // ஒரு நாளைக்கு சராசரியா என் தளத்தை 1500பேர் வாசிக்கிறிங்க... அதுல ஒரு 100 பேர் ஓட்டு போட நேரம் ஒதுக்கினா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க... //

    இந்த பதிவில் நெஞ்சை தொடும் காட்சி இது தான் அண்ணே... :)

    நீங்கள் ரெக்கமன்ட் செய்யும் படங்களில் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறேன்..

    ReplyDelete
  3. //நெஞ்சை தொடும் காட்சி....

    (இன்றில் இருந்து எல்லா படவிமர்சனங்களில் நெஞ்சை தொடும் காட்சி என்று ஒரு பகுதியை சேர்த்து உள்ளேன்....)//

    நெஞ்சை தொடும் காட்சின்னு போட்டு ஏதும் போட்டோ ஏத்திடுவீங்கன்னு நெனைச்சேன் :)

    ReplyDelete
  4. potachu................... vote

    ReplyDelete
  5. potachu............... vote

    ReplyDelete
  6. A good commentry on the movie. I will search for this movie.
    Thanks
    -Balaji paari

    ReplyDelete
  7. /////////உலகில் 73 சதவீதம் பேருக்கு பாதிக்கபட்ட கற்பிழந்த பெண்களுக்கு ... தான் யாரால் கற்பழிக்கபட்டோம் என்று நன்றாக தெரியும் என்று ஒரு ஆய்வு சொல்கின்றது ...பாதிக்கபட்ட பெண்களுக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் அது மறப்பதில்லை... ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை சட்டென மறந்து விடுகின்றார்கள்..///////


    உண்மைதான் நண்பரே ஆறு மாதங்களுக்கு முன் ஒரு விசாரணைக்காக ஒரு பெண்ணை தேடி சென்றோம் . அப்பொழுது அந்த பெண் மிகவும் தெளிவாக பேசினாள் .

    அப்பொழுது அவளிடம் கடந்த வருடம் நீங்கள் உங்களிடம் சிலர் தவறாக நடந்துகொண்டதாக புகார் செய்து இருக்கிறீர்கள் . இப்பொழுது அதுபோன்ற ஒரு வழக்கில் சிலரை சிறை வைத்திருக்கிறோம் உங்களால் அடையாளம் காட்ட இயலுமா என்று கேட்டேன் .

    அப்பொழுது அந்த பெண் அளித்த பதில் என்னை மிகவும் அதிர்ச்சியில் தள்ளியது . எனக்கு பார்வை இல்லை ஆனால் என்னால் அவனை தடவிப்பார்த்து கண்டு பிடித்துவிடுவேன் என்றாள் .அதுபோல் அவள் மிகவும் சரியாக இரண்டே நிமிடத்தில் அவனை அடையாளம் காட்டினாள் .

    பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  8. ஓட்டும் போட்டாச்சு

    maharaja

    ReplyDelete
  9. ஒட்டு ஒட்டு ன்னு சொல்றீங்களே அதை எப்படி போடணும்னு சொல்லலியே ,,,,,,,,,,

    ReplyDelete
  10. ஒட்டு ஒட்டு ன்னு சொல்றீங்களே அதை எப்படி போடணும்னு சொல்லலியே
    ada sollunga ellarum ada solla matangiringa

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner