பதிவுலகம் சில நாட்களாக சங்கம் தொடர்பான விஷயங்களில் மிகவும் சூடாக இருப்பது தெரிந்ததே...நாமும் எதாவது செஞ்சு ஆகனும் இல்லையா... நமக்கு தெரிஞ்ச உண்மைகளை...பதிவுலகத்துக்கு சொல்வது நம்ம கடமை இல்லையா?
எல்லோருக்கும் பதிவர் உண்மைதமிழன் பற்றி தெரியும்.. எந்த ஒரு செய்தியையும் விரிவாக வலையுலகத்துக்கு கொடுக்கும் பதிவர்...அவர் எப்படி இத்தனை பக்கத்துக்கு சலிக்காமல் எழுதுகின்றார் என்று எனக்கு ரொம்ப நாட்களாக டவுட்... இருப்பினும் நான் வலையுலகத்துக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றது..
பல பதிவர் சந்திப்புகளில் எல்லாம் தேடி தேடி அவரை பார்த்து இருக்கின்றேன் அவரை நான் ஒரு பதிவர் சந்திப்புகளிலும் சந்தித்தது இல்லை... நான் வேண்டி விரும்பி கூப்பிட்டாலும் அவர் இதுவரை வந்து கலந்து கொண்டது இல்லை...எல்லாம் வேலை பளுதான் காரணம்...
ஆனால் என்ன ஆச்சர்யம் இந்தமுறை சங்கம் வேண்டுமா? வேண்டாமா? என்று கேகே நகரில் நடந்த பதிவர் சந்திப்புக்கு அவர் வந்திருந்தார்... சங்கத்தின் அவசியத்தை பற்றி இன்ட்ரோ கொடுத்ததும் அவர்தான்... அந்த பதிவர் சந்திப்பின் போது எடுத்த புகைபடம்தான் கீழே இருப்பது...(எனக்கு ரொம்ப பிடித்த புகைபடம் இது)
பதிவர் சங்கத்துக்காக எதாவது செய்வார்... கோட்பாடுகளை உருவாக்குவார் என்று எதிர்பார்த்தால் அது பற்றி எந்த செய்தியும் இல்லை... நல்ல உழைப்பாளி என்பதால்,சப்போஸ் எதாவது பதவிக்காக தேர்தலில் நின்றால்...நம் ஓட்டை அவருக்கு போட்டு உயர்த்தி விடுவோம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்...ஆனால் அவர் இப்படி செய்வார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை....
அவரின் அரசியல் கட்டுரைகள் படு சூடாக இருக்கும்....மதுரையில் ஒரு நண்பர் கூட, எப்படி இப்படி தைரியமாக எழுதுகின்றார் என்று போன் செய்து தனது ஆச்சர்யத்தை என்னிடம் அவர் வெளிபடுத்தி இருக்கின்றார்...அரசியல் பதிவுகள் எழுதும் அவருக்கு பாதுகாப்பு என்று ஒன்று வேண்டும் அல்லவா?
என் அப்பன் முருகனாவது அவருக்கு அட்வைஸ் கொடுத்து இருக்க கூடாதா? அவர் எப்படி இப்படி ஒரு அவசர முடிவு எடுத்தார்? என்று ரொம்பவும் குழம்பி போய் இருக்கின்றேன்....பதிவுலக நண்பர்களிடம் கூட இது பற்றி ஏதுவும் அவர் சொல்லவில்லை....
அதே போல் ஒரு விஷயத்துக்காக நாம் அவரை பாராட்டியே ஆக வேண்டும்...
அரசியல் சாக்கடை என்று சொல்லிவிட்டு கடந்து போகும் பலரை போல் இல்லாமல் துணிந்து அதில் இறங்கி சுத்தம் செய்ய நினைத்தார் பாருங்கள் அந்த தன்னம்பிக்கைக்காக அண்ணன் உண்மை தமிழனை பாராட்டியே ஆக வேண்டும்...
சனி ஞாயிறு சொந்த ஊருக்கு போய் விட்டு வரும் போது என் நண்பர் சங்கர் கடலூர் பக்கத்தில் இருக்கும் கன்னிய கோவிலுக்கு வர சொன்னார்....... பயங்கர வெயில் ஒரு பீராவது சாப்பிட்டால்தான் சூடு குறையும் என்றார்... அவசரத்தில், கிராண்ட் ஒயின்சுக்கு போகும் போது அந்த அறிவிப்பை கவனிக்கவில்லை... தாக சாந்தி முடிந்து விட்டு வரும் போது பார்த்தால் என் கண்ணால் என்னாலே நம்ப முடியவில்லை....
அண்ணன் உண்மைதமிழன் அரசியல் கட்சியில் இணைந்து விட்ட அந்த காட்சியை சுவற்றில் பார்த்த போது அடித்த பியர் எல்லாம் அதே கலரில் வேறுவழியாக வெளியேறியது....எனக்கு வருத்தம் என்ன வென்றால் அண்ணன் உண்மை தமிழனுக்கு சரக்கு என்றால் அலர்ஜி... ஆனால் அவர் பெயரை ஒரு சரக்கு கடை வாசலில் எழுதி வைத்து இருப்பதை பார்த்த போது எனக்கு சொல்ல முடியாத வருத்தம்...
இப்போது சொல்லுங்கள் இந்த விஷயத்தை அண்ணன் எவ்வளவு ரகசியமாக வைத்து இருக்கின்றார் பாருங்கள்...
ஏப்ரல் 14ம் தேதி ஏதோ விருது வழங்கும் விழாவாம்....இடம் சிங்கார சென்னை...என்னவென்று ஏப்ரல் 14 வரை பொறுத்து இருப்போம்....
அரசியல் கட்சியில் இணைந்த அண்ணன் உண்மைதமிழன் அவர்கள் வாழ்க..வாழ்க....
ஏப்ரல் ஒன்னாம் தேதிதான் எல்லாம் செய்யனுமா???? ஒரு 4ம் தேதி 5ம் தேதி எல்லாம்......
குறிப்பு... இந்த பதிவு சிரிக்க மட்டுமே.. சிந்திக்க அல்ல....
அன்புடன்
ஜாக்கிசேகர்
(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....
அடிச்சுப் பார்த்தேன் ஏறவில்லை. படிச்சுப் பார்த்தேன் ஏறிடுச்சு... :))
ReplyDeleteaniyaayaththukku avara ippadiyaa kalaikkirathu:))
ReplyDeleteஆஹா ...
ReplyDelete:)
பாவம் ஜாக்கி நம்ம உ.த அண்ணன், எல்லாரும் அவரை கும்முறாங்கன்னா, நீயுமா
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஓட்டுப்போட்டுட்டேன்.
ReplyDeleteஇப்படிக்கு,
ஒரு மக்கா :-)
ayyo paavam
ReplyDelete:))
ReplyDeleteஅண்ணே.. சூப்பர் ...
ReplyDeleteஉண்மைத்தமிழன் மட்டுமல்ல... அம்பேத்கர், பிரபாகரன், பெரியார், சேகுவேரா, மார்க்ஸ்,..... என உலகில் உள்ள அத்தனை தலைவர்களும் அந்த கட்சியில் சேர்ந்துவிட்டார்கள்.
ReplyDeleteஉண்மைத் தமிழனுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete:))))
ReplyDeleteசோதனை..:)
ReplyDeleteஎன் பேரை எழுதி வைக்கிறதுக்கு போயும், போயும் டாஸ்மாக் கடைதான் கிடைச்சதா அவங்களுக்கு..?
ReplyDeleteஎன்ன கொடுமை சரவணா இது..?
என்னை மறக்காமல் வைத்திருப்பதற்கு நன்றி தம்பி..!
ReplyDelete//இருக்கும் கன்னிய கோவிலுக்கு வர சொன்னார்....... பயங்கர வெயில் ஒரு பீராவது சாப்பிட்டால்தான் சூடு குறையும் என்றார்..//
ReplyDeleteகன்னிய கோவில்லயா பீர் ஊத்துறாய்ங்க
:-)
ReplyDeleteஅட பாவிகளா,
ReplyDeleteஏன் இந்த உ.த வ போட்டு வாரீங்களோ,
பாவம் அவர விட்டுருங்க.
:-))))))))))))))) ஏதோ வில்லங்கமா சொல்லப்போறிங்கன்னு நினைச்சு வந்தா!!! அடிச்சு ஆடுங்க ஜாக்கி
ReplyDelete///////குறிப்பு... இந்த பதிவு சிரிக்க மட்டுமே.. சிந்திக்க அல்ல....///////
ReplyDeleteஹா ஹா ஹா ஹா . இப்ப நீங்களும் எங்களிடம் அரசியல் பண்ணிட்டீங்க பார்த்தீங்களா !
ஹா. ஹா. ஹா. நல்ல காமெடி ஜாக்கி.
ReplyDeleteசூப்பர் தல.. சிரிச்சு முடியல.
ReplyDeleteஉன்னையெல்லாம் ”சங்கம்” வெச்சு காலி பண்ணனும்.
ReplyDeleteநன்றி துபாய் ராஜா...
ReplyDeleteநன்றி வானம்பாடிகள் மிக்க நன்றி வருகைக்கு..
நன்றி நேசமித்ரன்..
நன்றி ஸ்ரீராம்
நன்றி டாக்டர் டிபி கந்தசாமி... உங்க நகைச்சுவை பின்னுட்டத்தை ரசிச்சேன்..
நன்றி பத்மா உங்கள் முதல் வருகைக்கு...
நன்றி சைவ கொத்து பாரோட்டா...
நன்றி செந்தில்
நன்றி பிராபகரன்..
நன்றி ராதா கிருஷ்ணன்
நன்றி மின்னுது மின்னல்..
நன்றி உண்மைதமிழன்...
நன்றி கேவி ஆர்
நன்றி சாம்ராஜ்ய பிரியன்..
நன்றி காவேரி கனேஷ்
நன்றி
நல்லா ஏமாந்தேன்...
ReplyDeleteஅமாம்.. போனில் உங்களைப் பிடிப்பது கொஞ்சம் சிரமம் போல,...
தம்பி தன்மை உமிழா!!!
ReplyDeleteதெளிவா கண்ணியங்கோவில்ன்னு சொல்லியிருக்காரு ஜாக்கி, தவிர போர்டுல பாண்டிசேரின்னு போட்டிருக்கு ஆனா நீர் \\Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
என் பேரை எழுதி வைக்கிறதுக்கு போயும், போயும் டாஸ்மாக் கடைதான் கிடைச்சதா அவங்களுக்கு..?\\ இப்படி பீரை ராவா அடிச்ச மாதிரி உளறிகிட்டு இருக்கியேப்பா? தமிழ்நாட்டிலே இருந்தா தான் அது டாஸ்மாக், பாண்டியில இருப்பதால் அது பாஸ்மார்க்!!
இப்படிக்கு
அபிஅப்பா
தம்பி தன்மை உமிழா!!!
ReplyDeleteதெளிவா கண்ணியங்கோவில்ன்னு சொல்லியிருக்காரு ஜாக்கி, தவிர போர்டுல பாண்டிசேரின்னு போட்டிருக்கு ஆனா நீர் \\Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
என் பேரை எழுதி வைக்கிறதுக்கு போயும், போயும் டாஸ்மாக் கடைதான் கிடைச்சதா அவங்களுக்கு..?\\ இப்படி பீரை ராவா அடிச்ச மாதிரி உளறிகிட்டு இருக்கியேப்பா? தமிழ்நாட்டிலே இருந்தா தான் அது டாஸ்மாக், பாண்டியில இருப்பதால் அது பாஸ்மார்க்!!
ஏம்ப்பா..
ReplyDeleteஇந்தப் பதிவுக்கு ஒரு எண்ட் கார்டு போட்டா என்ன..?
எத்தனி மாசம்தான் என் மானத்தை கப்பல்ல ஏத்துவ..?