சாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(22•04•2010)

ஆல்பம்...

பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பியது சரி என்று தன் திருவாய் மலர்ந்தவர் பதிவர் டோண்டு மட்டுமே. எல்லோரும் தன் கையாகலாகதா தனத்துக்கு நெளிந்து கொண்டு இருக்கும் வேலையில்... அப்படி செய்தது சரி என்று சொன்னது அவர் மட்டும்தான்...அழுவாச்சி பேட்டிகளை கொடுத்து, அவரை அப்புறபடுத்துவதே பெரும்பாடு ..... போன்ற தத்து பித்துகளை எழுதி வைக்க பதிவுலகம் மொத்தமும் போர் தொடுத்தது... அதில் சிலர் அவரை பர்சனலாக தாக்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை...அதே போல் அவர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த பிராமணர்களை எதிர்பதும் எனக்கு உடண்பாடு இல்லை... இருப்பினும் பிராமண எதிர்ப்பு ஜோதியை டோண்டு அணையாமல் பாதுகாத்த பெருமைக்கு உரியவர்... மிஸ்டர் டோண்டு உங்களுக்கு வேண்டுமானால் அந்த வலி வேதனை தெரியாமல் இருக்கலாம்.. அது நீங்கள் வாழ்ந்த முறையாக கூட இருக்கலாம்... எங்கள் வேதனைகளில் வேல் பாய்ச்சவேண்டாம்.. சீக்கியர்கள்,கர்நாடத்தினர், மலையாளிகள் போல இங்கு ஒற்றுமை இல்லை.. அதனால் இங்கு யார் வேண்டுமானாலும் எதுவும் பேசலாம்...அதே போல் திரு. டோண்டு அப்படி பேச ,இன்னொரு காரணம் வட இந்திய மீடியாக்கள் தமிழகத்தின் ஒட்டு மொத்த குரலாக எப்போதும் சோவையும், சுப்ரமணிசவாமியை கருத்து கேட்பதால்... இவரும் சோ போல கருத்து சொல்லிவிட்டார்... அவ்வளவுதான்...
====================================
ஐபில் கோடிகளையும் அதன் உள்விளையாட்டுகளையும் நினைக்கும் போது...ஒன்று மட்டும் புரிந்தது... இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் மீதுள்ள அதீத வெறி இங்கே கோடிகளாக கொட்டபடுகின்றது...என் மனைவியின் உறவுக்கார பையன் பெங்களுருவில் இருக்கின்றான்... வீட்டில் கரெண்ட் போனதும் போன் செய்து ஸ்கோர் கேட்டுக்கொண்டே இருந்தானாம்...பெங்களுர் சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வெடித்ததும் கூட்டம் கலைந்து வீட்டு்க்கு போய்விடுவார்கள் என்று பார்த்தால் அவர்கள் நகரவேயில்லை... போட்டியை பார்த்துவிட்டுதான் நகருவோம் என்று நின்ற போது இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த கிரிக்கெட்டை ஒன்னும் செய்ய முடியாது....
=====================================
மிக்சர்....

இந்த வருடத்தின் மிகப்பெரிய காமெடி..நமது முதல்வர்... எனக்கு பேப்பர் பார்த்துதான் பார்வதி அம்மாள் வந்தது தெரியும் என்று சொன்ன போது எனக்கு சிரிப்புதான் வந்தது...அதைவிட இப்போதும் கடிதம் எழுதுகின்றேன் என்று சொன்ன போது ஏம்பா... சண்முகநாத அந்த பேப்பரையும் போனவையும் எடுத்து கொஞ்ச நாளைக்கு ஒளிச்சி வச்சிடுப்பா... என்று சொல்ல தோன்றியது....

==============================
வெயிலின் தாக்கத்தால் பேருந்தின் முன்புற கண்ணாடிகள் பலதும் எதிர்பாராத நேரங்களில் வெடித்து விடுகின்றது... பல பயணிகள் காயம் அடைகின்றார்கள்.. கோடை காலத்தில் அன்பர்கள் பேருந்தின் முன் சீட்டில் பயணம் செய்வதை தவிர்த்தல் நலம்...
=============================
வாழ்த்துக்கள்...
எனது மாணவியும் பதிவர் தண்டோரா மகளுமான நிலாவின் அரட்டை இந்த வார குமுதத்தில் யூத்சர்வே பகுதியில் வந்து இருக்கின்றது....
=======================
எதிர்பார்ப்பு...
இராவன் படபாடல்கள்...விண்ணைதாண்டிவருவாயா கேட்டு சலித்து விட்டது.. சோ அடுத்தபடத்துக்கு வெயிட்டிங்....
=================

பார்த்தது கேட்டது.....

வேளச்சேரிவழியாக என் மனைவியை அவள் அலுவலகத்தில் இருந்து அழைத்துக்கொண்டு பைக்கில்வந்து கொண்டு இருந்தேன்...டிராபிக் காரணமாக வண்டிகள் ஆமை போல் ஊர்ந்து செல்ல எனது பக்கத்தில் வண்டியில் வந்த காதலர்கள்.. சம்பாஷனை கீழே....

பிளிஸ் சதிஷ் நான் வெளையாட்டுக்குதான் சொன்னேன்...

நீ இப்படி ஹர்ட் ஆவன்னு எனக்கு சத்தியமா தெரியாது...

அவன் எந்த ரியாக்சனும் காட்டாமல் இஞ்சி தின்ன குரங்கு போல் முகத்தை வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான்..

மதர் பிராமிசா எனக்கு தெரியாது நீ இப்படி கோச்சுக்கவன்னு... சொல்லறதை சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம்பா என்று சொல்லிவிட்டு நயகரா போல் அவள் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்து...

டிராபிக் கிளியர் ஆக அவன் சட்டென வேகம் எடுத்து போய்விட்டான்...
விரைவு பேருந்தில் போடும் படத்தில் கிளைமாஸ்க்கு முன்னதாக முடிவு தெரியாமல் நாம் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் இறங்கி விடுவோமே இது போல எனக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது...

அந்த பெண் அப்படி என்ன சொல்லி இருப்பாள்..
அவன் ஏன் எந்த வார்த்தையும் பேசவில்லை..
இந்த சண்டை எத்தனை மணி நேரம் நீடிக்கும் போன்ற வினாக்களோடு இரவில் உறக்கம் வராமல் தவித்தேன்...
குறி்ப்பு... அந்த பெண் அப்படி ஒரு அழகு....
========================================

சேனல் மாற்றிக்கொண்டு வரும் போது.. நேற்று இரவு வசந்த் டிவியில் அந்தரங்க கேள்வி நிகழ்ச்சியில்... ஒரு பெண்மணி நேரலையில் டாக்டர் காமராஜிடம் கேள்வி கேட்டார்கள் ...

டாக்டர் திருமணமாகி 20 வருஷம் ஆகுது டாக்டர்..

சொல்லுங்க..

உச்சகட்டத்துல என் ஹஸ்பண்ட் ........ வாயிலை வாங்க சொல்லறார்...

இது செக்சில் ஒரு பகுதிதான்... அதை முழுங்கிடாதிங்க.... பொதுவா இது போல விஷயத்துல பெரும்பாண்மையான ஆண்கள் கிளர்ச்சி அடையறாங்க.. அதனால இது தப்பு இல்லை... எடுத்துக்கறதும் கொடுக்கறதும் செக்சில் இயல்பும்மா...

எப்படி முழுங்காம இருக்கறது டாக்டர் ...

பக்கத்துல எதாவது கர்சிப் வச்சிகிட்டு அதுல அதை துப்பிடுங்கம்மா....

நான் கையால ஏதாவது செய்துக்க முடியுமா?

செய்யலாம் சிங்கபூர் போன்ற நாடுகளில் அதற்க்குபொருட்கள் கிடைக்கின்றது என்று சொல்லிக்கொண்டு போக...சின்ன தயக்கத்தோடு அந்த பெண்மணி கேள்விகள் கேட்தும் அதற்க்கு டாக்டர் எப்படி நேரலையில் பதில் சொல்வது என்று தெரியாது சற்று வழிந்தபடி பதில் சொன்னதும் பார்க்க நகைச்சுவையாக இருந்தது...

==============================

இந்தவார சலனபடம்.. 18+=========================
படித்தது...

மன்னா நீங்கள் தேரை ஏற்றிக்கொன்ற ஆட்டுகுட்டியின் தாய் ஆராய்ச்சி மணி அடித்துக்கொண்டு இருக்கின்றது மன்னா...
பலே மட்டன் பிராயனிக்கு எற்பாடு செய்யுங்கள்....

குசி கோவிந்த ராஜன்.. இந்தவார குமுதம்...

=============================
குறுந்தகவல்...
அப்பா அம்மா பாத்துகிட்டா அதுக்கு பேரு ரெஸ்ட்ரக்ஷன்னு சொல்லுவாங்க... இதுவே லவ்வர், பாய் பிரண்டு பார்த்துகிட்டா அதுக்கு பேரு கேரிங் என்ன உலகம்டா இது...
===================
கவிதைக்கும் காதலுக்கும் உள்ள வித்யாசம் என்ன?
கவிதை என்பது வார்த்தைகளின் தொகுப்பு...
காதல் என்பது வயசு கொழுப்பு...

வாசகர் சில்க் சதிஷ்...
===========================

நான்வெஜ்...
தப்பா புரிஞ்சிக்கறதுன்னா என்ன?

நேற்று இரவு எங்கள் பசங்க நல்ல பர்பார்ம் கொடுத்தாங்க... நான் அவுங்களை மறக்கவே மாட்டேன்...நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்..

ஷில்பா ஷெட்டி ஒரு பேட்டியின் போது கூறியவை...

==========================
மனைவி கணவனிடம் கேட்டாள்....
ஒருவேளை நான் உன் நெருங்கிய பிரண்டு கூட உறவு வச்சிகிட்டா? உனக்கு மனசுல என்ன சட்டுன்னு தோனும்....
கணவன் சொன்னான்... நீ லெஸ்பியனான்னு எனக்கு தோனும்....
========================
போன நான்வெஜ் பகுதியில் ஜோக் புரியாமல் எல்லோரும் மண்டை குழம்பி கொள்ள...சரியான பதிலை சொன்ன இலங்கை பதிவர் மாயூரனுக்கு மேய்யாலுமே இந்த விஷயத்துல கற்பூர புத்திதான் ஒத்துக்குறேன்...
நெக்ஸ்ட் மீட் பண்ணறேன்..
=======================

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

39 comments:

 1. //அதே போல் அவர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த பிராமணர்களை எதிர்பதும் எனக்கு உடண்பாடு இல்லை... இருப்பினும் பிராமண எதிர்ப்பு ஜோதியை டோண்டு அணையாமல் பாதுகாத்த பெருமைக்கு உரியவர்... மிஸ்டர் டோண்டு உங்களுக்கு வேண்டுமானால் அந்த வலி வேதனை தெரியாமல் இருக்கலாம்.. அது நீங்கள் வாழ்ந்த முறையாக கூட இருக்கலாம்... எங்கள் வேதனைகளில் வேல் பாய்ச்சவேண்டாம்..//

  பார்பனருக்கு பிராமணர் பட்டம் கொடுத்து எழுதுவதற்கு எனது கண்டனங்கள். நீங்கள் பார்பனரை பிராமணர், அந்தணர் என்றால் பிற சமூகத்தினரை சூத்திரன் என்று அவர்கள் சொல்லுவதை ஒப்புக் கொள்வதாகும்.

  ReplyDelete
 2. பார்த்தது, கேட்டது ஒரு சஸ்பென்ஸ் கதை
  மாதிரியில்ல இருக்கு!!!

  ReplyDelete
 3. //அழுவாச்சி பேட்டிகளை கொடுத்து, அவரை அப்புறபடுத்துவதே பெரும்பாடு ..... போன்ற தத்து பித்துகளை//
  என்ன செய்வது உங்களுக்கு தத்துபித்துகளாக படுவது எல்லாமே மத்திய மானில அரசுகளுக்கு உண்மையான காரணங்களாக பட்டிருக்கின்றனவே.

  நான் சொன்னது எனது கருத்து மட்டுமே. அதற்காக பார்ப்பனர்களை சாடியவர்கள் டி.வி. ராதாகிருஷ்ணன், பத்ரி போன்றவர்கள் எழுதியதற்காக பார்ப்பனர்களை பாராட்டியும் இருக்க வேண்டுமே?

  எனது கருத்து மைனாரிட்டி என வைத்து கொண்டால், பார்ப்பனர்களில் பெரும்பாலானோர் கருத்து மெஜாரிட்டியைத்தானே சேர்ந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கு மைனாரிட்டி கருத்து மட்டும் தெரிகிறது என்பதற்கு அப்பட்டமான பார்ப்பன வெறுப்புத்தான் காரணம் என நான் பதிவு செய்கிறேன்.

  நான் சொன்னது எதார்த்த நிலை. அவரை திருட்டுத்தனமாக உள்ளே வரவழைத்து fait accompli ஆக மாற்ற நினைத்தவர்களின் எண்ணத்தில் அரசு மண்ணையள்ளிப் போட்டதுதான் நிஜம்.

  அதில் அந்த பெண்மணி பகடைக்காயானதும் நிஜம். எங்கு கோபப்பட வேண்டுமோ அங்கு போய் கோபப்படுங்கள்.

  //அதில் சிலர் அவரை பர்சனலாக தாக்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை//
  இந்த பாசாங்கெல்லாம் வேண்டாமே. நேரடியாகவே பாப்பான் எனத் தாக்குபவனை கூட சகித்து கொள்ளலாம். இந்த போலி அனுதாபமெல்லாம் தேவையில்லை.

  டோண்டு ராகவன்

  ReplyDelete
 4. //அதில் சிலர் அவரை பர்சனலாக தாக்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை//
  இந்த பாசாங்கெல்லாம் வேண்டாமே. நேரடியாகவே பாப்பான் எனத் தாக்குபவனை கூட சகித்து கொள்ளலாம். இந்த போலி அனுதாபமெல்லாம் தேவையில்லை.

  டோண்டு ராகவன்//

  அன்பு ஜாக்கி
  பாலுக்கும் காவ‌ல் பூனைக்கும் தோழ‌னாக‌ இருக்க‌ முய‌ல்கிறீர்க‌ள்

  ReplyDelete
 5. //நான் சொன்னது எனது கருத்து மட்டுமே. அதற்காக பார்ப்பனர்களை சாடியவர்கள் டி.வி. ராதாகிருஷ்ணன், பத்ரி போன்றவர்கள் எழுதியதற்காக பார்ப்பனர்களை பாராட்டியும் இருக்க வேண்டுமே?//

  பார்பனர்களுக்கு ஒரு பார்பனர் செய்யும் பார்பன துரோகம் என்பது இது தான். மேல் குறிப்பிட்டவர்கள் வலைப்பதிவில் எங்கும் தாங்கள் பார்பனர் என்று குறிப்பிடாத போது அது பற்றி டோண்டு ஏன் பதிவர்களுக்கு போட்டுக் கொடுக்க வேண்டும், 'என்னை பார்பனராக விளம்பரப்படுத்துங்கள்' என்று திருவாளர் டோண்டுவிடம் மேற்கூறியவர்கள் சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை.

  ReplyDelete
 6. //கவிதை என்பது வார்த்தைகளின் தொகுப்பு...
  காதல் என்பது வயசு கொழுப்பு...//


  hahahahahahha

  superb...

  ReplyDelete
 7. //மிஸ்டர் டோண்டு உங்களுக்கு வேண்டுமானால் அந்த வலி வேதனை தெரியாமல் இருக்கலாம்.. அது நீங்கள் வாழ்ந்த முறையாக கூட இருக்கலாம்...//

  விடுங்க பாஸு...நாளைக்கு இவருக்கு ஏதாவது ஒன்னு ஆகி, இவர ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா தூக்கிட்டு போய், அங்க ரூல்ஸ் பேசி திருப்பி அனுப்பினா புரிஞ்சுக்க போறாரு. இதையெல்லாம் சிரியஸா எடுத்துகிட்டு.

  //சோ அடுத்தபடத்துக்கு வெயிட்டிங்....//

  சோ???!!! ;)

  ReplyDelete
 8. எப்படி, ஜாதி, மதம்,அரசியல், சினிமா, போலி ஆன்மீகம் போன்ற அருவருப்புகள் நம்மை சூழ்ந்து பிணைத்திருக்கிறதோ, அப்படியே கிரிக்கெட்டும் ஆகிவிட்டது நண்பரே. வேதனைப்படுவது தவிர வேறொன்றும் முடியாது.

  அப்புறம் சென்னைல இருக்கற போக்குவரத்து நெரிசல்ல, பக்கத்து பைக்ல நடக்கற பேச்சு வார்த்தையெல்லாம் கேக்குற அளவுக்கு பொறுமை இருக்குதா தலைவா??????

  ReplyDelete
 9. ////அதில் சிலர் அவரை பர்சனலாக தாக்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை//
  இந்த பாசாங்கெல்லாம் வேண்டாமே. நேரடியாகவே பாப்பான் எனத் தாக்குபவனை கூட சகித்து கொள்ளலாம். இந்த போலி அனுதாபமெல்லாம் தேவையில்லை.

  டோண்டு ராகவன் //

  ராகவன் ஜி
  இதை எப்படி நீங்க பாசாங்குன்னு முடிவு செஞ்சீங்க??

  உங்களோட கருத்துடன் எனக்கும் துளியும் உடன்பாடில்லை, எனினும் உங்களையும் உங்க கருத்தையும் பிரித்துப் பார்க்கும் பக்குவம் எனக்கு இருக்கு, அதனால ஒரு சில பதிவுகளில் கண்ணியமா எதிர்ப்பைச் சொல்லுங்க, தனி மனிதத் தாக்குதலும் தகாத வார்த்தைகளும் வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்தேன், அதையேத்தான் ஜாக்கியும் சொல்லியிருக்கிறான் - இதில் என்ன குத்தம் கண்டீர்???

  இப்பவும் நான் உள்பட பல பேர் உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து விளிக்கிறோம். உங்களுக்கென்று ஒரு கருத்து இருக்கலாமென்று மதிக்கிறோம். ஆனால் நீங்க பிறர் மனம் புண்படும்படி எழுதுவதையும் பேசுவதையும் மாத்திக்கணும் நெனைக்கிறோம். நீங்க மாற மாட்டீங்கன்னு தெரிஞ்சும் இங்கு என் எண்ணத்தைப் பதிவு செய்கிறேன்.

  நான் இந்த மாதிரி ஒரு பதிவு போட்டு மத்தவங்க இதே மாதிரி பேசியிருந்தா, நான் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன் ஆனால் நான் எழுதியது Unintentional ஆக பிறர் மனதை புண்படுத்தியதால் பதிவினை அழிக்கிறேன்னு சொல்லியிருப்பேன்.

  உங்கள பர்சனால திட்டியது தப்புன்னு சொன்ன ஜாக்கியைப் பாத்து “பாசாங்கு”ன்னு சொன்ன உங்ககிட்ட அவ்வளவு பெருந்தன்மையெல்லாம் எதிர் பார்க்க முடியாது..

  பன்மொழி வல்லுனரான உங்களுக்கு Famous / Notorious ரெண்டுக்கும் வித்தியாசம் நல்லாவே தெரியும். நீங்க Notorious ஆக இருந்து இன்னும் பல லட்சம் ஹிட்ஸ் பெற வாழ்த்துக்கள்.

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 10. //காதல் என்பது வயசு கொழுப்பு...
  //


  அப்போ முத்தம் என்பது வாய் கொழுப்பா???

  ReplyDelete
 11. முதல் மேட்டர் தவிர எல்லாமே ரசனை.. ட்ராஃபிக்ல கூட மேட்டர் கலெக்ட் பண்றாங்கப்பா.. சைட்ல ஜொள்ளு வேற.. வீட்டம்மாக்கு இது தெரியுமா? :))

  ReplyDelete
 12. //இருப்பினும் பிராமண எதிர்ப்பு ஜோதியை டோண்டு அணையாமல் பாதுகாத்த பெருமைக்கு உரியவர்... //
  பன்மொழி வல்லுநர் என ஒத்துக் கொண்ட ஸ்ரீராமுக்கு நன்றி.

  வரிகளுக்கு இடையில் படிப்பது என்பதும் ஒரு கலையே. மேலும் இம்மாதிரி பார்ப்பன எதிர்ப்புகள் பல பார்த்த எனக்கு உள்ளுணர்வு என்பது ரொம்பவும் வலிமையானது.

  மேலும் எனது பின்னூட்டம் அவருக்கானது. அவர் கூறட்டும்.

  டோண்டு ராகவன்

  ReplyDelete
 13. நன்றி கோவி... நான் அந்தளவுக்கு எல்லாம் யோசிக்கலை...

  ReplyDelete
 14. பார்த்தது, கேட்டது ஒரு சஸ்பென்ஸ் கதை
  மாதிரியில்ல இருக்கு!!!//

  நன்றி சைவ கொத்து பரோட்டா...

  ReplyDelete
 15. //அதில் சிலர் அவரை பர்சனலாக தாக்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை//
  இந்த பாசாங்கெல்லாம் வேண்டாமே. நேரடியாகவே பாப்பான் எனத் தாக்குபவனை கூட சகித்து கொள்ளலாம். இந்த போலி அனுதாபமெல்லாம் தேவையில்லை.

  டோண்டு ராகவன்//

  சரி போலி அனுதாபம் என்று எப்படி வேண்டுமானலும் வைத்துக்கொள்ளுங்கள்...உங்கள் வயதுக்கு மரியாதை கொடுத்து எழுதினேன்...

  கொஞ்சம் டிசன்டாக எழுதினால் நீங்கள் இப்படித்தான் டிரீட் செய்வீர்கள் போல் இருக்கின்றது...

  நான் தீவிர பார்பான எதிர்பாளன்தான்..

  இப்போது கூட உங்கள் வயதுக்கு மரியாதை கொடுத்த எழுதுகின்றேன்...

  அதைவிட நேற்று உங்களை பதிவுலகில் கொண்டாடி மகிழ்ந்தனர்... அங்கு உங்களை வெளிபடுத்திக்கொள்ளவில்லை...உங்கள் கருத்தை உறக்க சொல்லவில்லை...

  கோவி பதில்தான் உங்களுக்கு...


  பார்பனர்களுக்கு ஒரு பார்பனர் செய்யும் பார்பன துரோகம் என்பது இது தான். மேல் குறிப்பிட்டவர்கள் வலைப்பதிவில் எங்கும் தாங்கள் பார்பனர் என்று குறிப்பிடாத போது அது பற்றி டோண்டு ஏன் பதிவர்களுக்கு போட்டுக் கொடுக்க வேண்டும், 'என்னை பார்பனராக விளம்பரப்படுத்துங்கள்' என்று திருவாளர் டோண்டுவிடம் மேற்கூறியவர்கள் சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை.//


  ஸ்ரீராம் உங்கள் தவறை சுட்டிகாட்டிய போதும்உங்களுக்கு புரியவில்லை எனில் நான் என்ன செய்ய...

  ReplyDelete
 16. //அதில் சிலர் அவரை பர்சனலாக தாக்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை//
  இந்த பாசாங்கெல்லாம் வேண்டாமே. நேரடியாகவே பாப்பான் எனத் தாக்குபவனை கூட சகித்து கொள்ளலாம். இந்த போலி அனுதாபமெல்லாம் தேவையில்லை.

  டோண்டு ராகவன்//

  அன்பு ஜாக்கி
  பாலுக்கும் காவ‌ல் பூனைக்கும் தோழ‌னாக‌ இருக்க‌ முய‌ல்கிறீர்க‌ள்//

  இல்லை கரிசல் அப்படி இல்லை..என் கருத்தை ரொம்ப டிசன்டாக பதிவு செய்து இருக்கின்றேன்... அவ்வளவுதான்...

  ReplyDelete
 17. பார்பனர்களுக்கு ஒரு பார்பனர் செய்யும் பார்பன துரோகம் என்பது இது தான். மேல் குறிப்பிட்டவர்கள் வலைப்பதிவில் எங்கும் தாங்கள் பார்பனர் என்று குறிப்பிடாத போது அது பற்றி டோண்டு ஏன் பதிவர்களுக்கு போட்டுக் கொடுக்க வேண்டும், 'என்னை பார்பனராக விளம்பரப்படுத்துங்கள்' என்று திருவாளர் டோண்டுவிடம் மேற்கூறியவர்கள் சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை.//

  ரொம்பஅழகா சொல்லி இருக்கிங்க.. நன்றி...

  ReplyDelete
 18. நல்ல தொகுப்புகள்

  ReplyDelete
 19. //கவிதை என்பது வார்த்தைகளின் தொகுப்பு...
  காதல் என்பது வயசு கொழுப்பு...//


  hahahahahahha

  superb...//

  நன்றி சஞ்சனா தொடர்ந்து வாசிக்கின்றீர்கள்ா?

  ReplyDelete
 20. /சோ அடுத்தபடத்துக்கு வெயிட்டிங்....//

  சோ???!!! ;)//

  சீனு அது வேற சோ...

  ReplyDelete
 21. சலன படம் புர்ல...//

  செந்தில் உங்களுக்கு இன்னும் 18வயசு ஆகலைன்னு நினைக்கி்றேன்..

  ReplyDelete
 22. அப்புறம் சென்னைல இருக்கற போக்குவரத்து நெரிசல்ல, பக்கத்து பைக்ல நடக்கற பேச்சு வார்த்தையெல்லாம் கேக்குற அளவுக்கு பொறுமை இருக்குதா தலைவா??????//

  புல் டிராபிக்ல... அப்படியை தேமேன்னு ரெண்டு நிமிசம் கூட சிக்னல் இல்லாம நிப்போம்.. அப்ப கேட்டதுதான்...

  ReplyDelete
 23. இப்பவும் நான் உள்பட பல பேர் உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து விளிக்கிறோம். //

  ஸ்ரீ அப்படித்தான் எழுதினேன்...அப்ப எல்லாம் எழுத கூடாதுன்னு நினைக்கின்றார் போல இருக்கு..

  ReplyDelete
 24. /காதல் என்பது வயசு கொழுப்பு...
  //


  அப்போ முத்தம் என்பது வாய் கொழுப்பா???//

  உண்மைதான் விசா...

  ReplyDelete
 25. முதல் மேட்டர் தவிர எல்லாமே ரசனை.. ட்ராஃபிக்ல கூட மேட்டர் கலெக்ட் பண்றாங்கப்பா.. சைட்ல ஜொள்ளு வேற.. வீட்டம்மாக்கு இது தெரியுமா? :))//

  நன்றி காந்தி...நம்ம காதுல விழுந்துச்சி.. ஆத உங்க கைல போட்டேன்..

  ReplyDelete
 26. \\மனைவி கணவனிடம் கேட்டாள்....//

  நச்சு பதில் .. சூப்பர் பாஸ் .

  voted

  ReplyDelete
 27. நன்றி வெங்கட்

  நன்றி ரோமியோ..

  ReplyDelete
 28. அனைத்தும் அருமை.. :) குறிப்பாக பார்த்தது , கேட்டது.. .. எனக்கும் இப்போ அந்த ஆர்வம் வந்துவிட்டது.. அப்படி என்ன்ன சொல்லியிருப்பார் அந்த பெண் என்று அல்ல.. ......................... அந்த குறிப்பை பார்த்து.. :)
  ஆல்பம் பற்றி என்பதிவை படிக்க - www.myownscribblings.blogspot.com

  ReplyDelete
 29. டோண்டு பின்னூட்ட புயலில் அந்த 'மேட்டர்' டாக்டர் காமராஜ் மேட்டர் (எவ்ளோ மேட்டர் பா?) அடிபட்டு போச்சு..என்னை கேட்டால் தமிழ்நாட்டை நிஜமா 'முன்னேற்ற' பாதையில் அழைத்து போவது அவர்தான்னு நெனைக்றேன். யப்பா, டெக்சதீஷ்களா? வசந்த் டிவி ஸ்ட்ரீம் பண்ணுங்கப்பா நெட்ல..

  உங்கள் பைக் 'டயலாக்' முடிவு இப்படி இருக்குமோ? சதீஷ் "ஏம்மா ரம்யா? இந்த அண்ணன் உனக்காக அமெரிக்காவுல மாப்பிள்ளை பார்த்தா நீ லவ் பண்றேன்னு சொல்றியே" அப்டின்னு சொல்லிருந்தா (குமுதம் ஒருபக்க கதை பாணில..)

  ReplyDelete
 30. புது வீட்டுக்கு போனப்புறம் உங்க பதிவுகள்ள புது பொலிவு தெரியுது ..கலக்குறீங்க... சர்ச்சை க்கு உள்ளான விசயங்களை நிதானமாகவே அணுகி இருக்குறீர்கள் ..வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 31. //நான் தீவிர பார்பான எதிர்பாளன்தான்..
  //
  முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். சற்றே பொறுமையாகக் கேட்கவும்.

  உண்மையில் நீங்கள் பார்ப்பன எதிர்ப்பாளர் இல்லை என்பதில் நான் உறுதியாகவே அறிவேன். இருந்தாலும் வேண்டுமென்றே அந்த பின்னூட்டத்தில் அவ்வாறு நீங்கள் இருப்பதாகக் நான் கூறியது, ஒன்றை தெளிவாக்கவே.

  நீங்கள் உடனேயே கோபத்துடன் ஆமாம் அப்படித்தான் என பதில் போட்டீர்கள் அல்லவா? அதைத்தான் நான் இப்போது குறிப்பிடுகிறேன்.

  பதிவுக்கு வந்த ஒரு மாதத்துக்குள் போலி டோண்டு மூர்த்தி என்னை பாப்பான் பாப்பான் என பலமுறை திட்டியதில் நானும் ஆமாம் அதுக்கென்ன இப்போ என பதில் கூறினேன். ஆக, நான் அபோதிருந்தே ஊரறிந்த பாப்பானாகி விட்டேன்.

  இணையத்தில் நிலவும் பார்ப்பன வெறுப்பால் பல பார்ப்பனர்கள் பயத்தால் தத்தம் அடையாளத்தை மறைத்தபோது அவர்களுக்காகத்தான் எனது வெளிப்படையான எண்ணங்களை பதிவாக இட்டேன். அதில் நான் ஃபார்மலாக என் சாதியை குறிப்பிட்டு, சகபார்ப்பனர்கள் தேவையின்றி பயப்பட வேண்டாம் என கூறினேன். அதுவும் நடந்து பல ஆண்டுகள் ஆயின.

  ஆனால் பார்வதி அம்மாள் விஷயத்தில் எனது உண்மை கருத்து மற்றும் எதார்த்த நிலை என நான் எழுதியபோது நான் பாப்பான் என்பதாலேயே அதை எழுதினேன் என பலர் சாடவே நானும் கோபப்பட்டேன்.

  உங்கள் நட்பை நான் மதிக்கிறேன். ஆகவே அதை காப்பாற்றிக் கொள்ளவே இப்பின்னூட்டத்தை இடுகிறேன்.

  ஸ்ரீராமிடமும் சற்றே கடுமையாக பேசினேன், அவரும் என்னை மன்னிக்கட்டும்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 32. ராகவன் ஜி
  நீங்க வேற.. நாங்க ரெண்டு பேரும் சின்னப் பசங்க (நானும் ஜாக்கியும் உங்களோடு கம்பேர் செய்யும் போது), எங்ககிட்ட நீங்க மன்னிப்பெல்லாம் கேக்க வேண்டியது கிடையாது.

  1. ஜாக்கியைப் பத்தி எனக்கு நல்லா தெரியுமென்பதால் நான் ப்தில் சொன்னேன்.

  2. பார்வதி அம்மாள் விஷயத்தில் சிலர் தேவையற்ற பார்ப்பன எதிர்ப்பைக் காட்டினாலும், பலரும் (நான் உள்பட) எதிர்த்தது பதிவின் தொனி மற்றும் சில வாக்கியங்கள் மற்றும் பார்வதி அம்மாள் - அழுகாச்சி மீட்டிங் ETC.

  நான் போன பின்னூட்டத்தில் சொன்னது போல, உங்களுக்குன்னு ஒரு கருத்து இருப்பதைப் பற்றி யாரும் குறை சொல்ல முடியாது. கருத்தையும் கருத்தின் சொந்தக்காரரையும் பிரித்துப் பாக்கும் பக்குவம் எனக்கு உண்டு இது எல்லாருக்கும் இருந்தா நல்லா இருக்கும்.

  இப்பவும் சொல்றேன், தேவையில்லாமல் உங்களையோ வேறு ஒருவரையோ பாப்பான்னு சொல்லித் திட்டினா, நானும் ஜாக்கியும் உங்களுக்கு ஆதரவா நிப்போம், ஏண்டா ஜாட்டான்னு அப்படி சொல்றவங்களை கேப்போம்..

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 33. நன்றி ஸ்ரீராம் மற்றும் ஜாக்கி சேகர்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 34. பார்பான எதிர்ப்பு என்பது எப்போதும் இருக்கும் ஒரு விஷயம்தான்... அது ஒரு நாளில் மாற போவதில்லை... பார்பான எதிர்ப்பு பதிவுலகில் மட்டும் அல்ல எல்லா இடத்திலும் விரவி கிடைக்கின்றது...

  நீங்கள் சொன்ன அழுகாச்சி போன்ற வார்த்தைகள் என்னை மிகவும் காயபடுத்தியது.. அதனால்தான் அந்த நாகரீக எதிர்ப்பு... என் இனத்தை கேவலபடுத்தும் எவரையும் எனக்கு கிஞ்சித்தும் பிடிக்காது...

  ஆனால் உங்கள் கருத்துக்கு உங்களுக்கு பதில் கருத்து எப்படி வேண்டுமானாலும் எதிர் கருத்து சொல்லலாம்.. ஆனால் உங்கள் பிறப்பு பற்றி பேசியவை எல்லாம் இப்போதும் மட்டும் அல்ல அது எந்த பதிவருக்கு நேர்ந்தாலும் என் எதிர்ப்பு நிச்சயம்...

  நீங்கள் மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம்.. நீங்கள் பெரியவர்.. இரண்டு மொழிகளில் வல்லவர்.. உங்கள் அனுபவத்தோடு நான் ஸ்ரீ எல்லாம் சும்மா...

  சென்சிடிவ் விஷயங்களில் நீங்கள் மெத்தபடித்தவர் என்றாலும்...சில விஷயங்களை நாகரிகமான முறையில் சொல்லவும்...

  ReplyDelete
 35. 2. பார்வதி அம்மாள் விஷயத்தில் சிலர் தேவையற்ற பார்ப்பன எதிர்ப்பைக் காட்டினாலும், பலரும் (நான் உள்பட) எதிர்த்தது பதிவின் தொனி மற்றும் சில வாக்கியங்கள் மற்றும் பார்வதி அம்மாள் - அழுகாச்சி மீட்டிங் ETC.//

  ஸ்ரீ கரெக்டா சொல்லி இருக்க...

  ReplyDelete
 36. வழமைய விட இந்த தடவ‌‌'சாண்ட்விச் அண்டு நான்வெஜ்' ரொம்ப டேஸ்ட்டு.
  அதுலயும் நான்வெஜ் மேட்டர் எல்லாமே தூக்கல்.
  வசந்த் டீ.வி இங்க இல்லாம போச்சே! :)

  ReplyDelete
 37. //இரண்டு மொழிகளில் வல்லவர்.//

  என்னது இரண்டா? ஆறு மொழிகள் ஐயா, அவ்வ்வ்வ்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 38. டோண்டு,
  ஜாக்கி தரம் பற்றி தெரியும் தானே. இதற்க்கு மேல அவர் கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner