புது புது அர்த்தங்கள் படத்தில் ஒரு பாடல் வரி வரும்... அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே என்று... வாழ்க்கையில் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று.... சக மனிதர்கள் கொடுக்க முடியாத வரத்தை இறைவன் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றான். அதில் இருக்கும் பல சிக்கல்களுக்கு இறைவன் கொடுத்தால்தான் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றான்...
சரி இங்கே அழகான மனைவி என்று குறிப்பிடபட்டு இருக்கின்றது... அதாவது அழகான மனைவி அமைந்தால் அது இன்னும் பேரின்பம் என்று சொல்லலாம்...குறைந்த பட்சம் ஒரு 500க்கு மேல் திருமணம் நிச்சயதார்த்தம் வீடியோ போட்டோ எடுத்து இருக்கின்றேன்....அதில் இரண்டு சதவீத தம்பதிகள்தான் மேட்பார்ஈச்அதராக இருப்பார்கள்.... பல திருமணங்களில் பல ஜோடிகளை எல்லாம் பார்க்கவே முடியாது என்று சொல்லுவார்கள்..... சில ஜோடிகளை பார்க்கவே சகிக்காது என்று சொல்லுவார்கள்...ஆனாலும் அந்த தம்பதிகள் அவர்கள் மனது ஒத்து இன்னும் சுபிட்சமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்....இன்றும் மெரினா பீச்சுக்கு வரும் காதலர்களில் மேட்பார்ஈச்அதர் கப்பிள்களை தேடித்தான் பிடிக்க வேண்டும்.....
அதே போல் மேட்பார்ஈச் அதர் ஜோடிகளில் திருமணம் ஆன மூன்றாம் நாளே முறுக்கி கொண்டு நிற்க்கும் அளவுக்குஈகோ அதிகம் வளர்ந்து டைவர்ஸ் வரை போன தம்பதிகளை நான் அறிவேன்..... மேட் பார் ஈச் அதர் என்பது ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு , விட்டு கொடுத்து வாழ்வது என்பது பல பேருக்கு புரிவது இல்லை..ஈச் அதர் என்பது... அழகு சம்பந்தபட்ட விஷயமாக மட்டுமே இங்கு புரிந்து கொள்ளபடுகின்றது...
தமிழ் நாட்டில் அந்த காதல் திருமணம் நடந்த போது மூலைக்கு மூலை அந்த திருமணத்தை பற்றிய பேச்சாகவே இருந்தது.. எப்படி நடந்தது? எப்படி அவனை அந்த பெண் மனம் ஒத்து எப்படி திருமணம் செய்து கொண்டாள்..?சிலர் அந்த பையனுக்கு லக் என்று சொன்னார்கள்... அந்த தம்பதி வேறு யாரும் அல்ல நடிகை தேவயானி, ராஜகுமாரன்...ஏனோ தமிழ் சமுகத்து ஆண்கள் பலர் தேவயானி தேர்ந்து எடுத்த வாழ்க்கைக்கு வருத்தபட்டனர்...அடிப்படையில் பொறாமைதான் அதற்க்கு காரணம்.... இராமன் மெச்சியதே ரம்பா என்பது போல் அந்த பெண்ணுக்கு பிடித்தவனே அவளது கணவன்....
எனை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்...
என் கல்லூரிக்கு திருமணம் முடிந்து என் மனைவியை அழைத்து போனேன்... எப்படி இந்த பொண்ணு உன்னை போய் லவ் பண்ணிச்சி என்று என் காதுபடவே கேட்டார்கள்... அது அவகிட்ட கேட்க வேண்டிய விஷயம் என்று சொன்னேன்...
சில பெண்களை சட்டென பிடித்து போகும்.... அது தங்கையாக, நண்பியாக. நண்பியின் தோழியாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்...
என் உறவுக்கார பெண்.. சமுக விஷயங்களில் அதீத ஈடுபாடு.. படித்த பெண்ணாக இருந்தாலும் நியாயமாக பேசுவாள்...சத்தியபாமாவில்தான் படிக்கின்றாள்.. அவள் மீது ரொம்பவும் எனக்கு மரியாதை... ஒரு நாள் வீட்டுக்கு போய் இருந்தேன்.. பேசிக்கொண்டு இருந்தேன்...
மாம்ஸ் அப்பா வாணியம்பாடி போயிட்டு சீக்கரம் வந்துட்டார்...
வரும் பொது வாணியம்பாடி பிரியாணி வாங்கி வந்தார்...நாங்க சாப்பிட்டுவிட்டோம்... கொஞ்சம் இருக்கு...
அக்கா உனக்கு எங்க நான் வெஜ் செஞ்சு போட போறா? அதை சூடு பண்ணி எடுத்து வாரேன் சாப்பிடுங்க... என்று என் அனுமதி இல்லாமல் எழுந்து போய் எனக்கு சூடு பண்ணி தட்டு நிறைய பிரியாணியை வைத்த போது...நல்ல பசி அப்போது பார்த்து, அந்த சூடான பிரியாணி வந்த போது...என் கண்கள் கலங்கின... அந்த பெண் மீது மரியாதை போய் அதீத பாசம் வந்து ஒட்டிக்கொண்டது....
எனது நன்பரின் மனைவி...அவரின் குழந்தை அந்த பெண்ணை போட்டு பாடாய் படுத்தும்.... இருந்தாலும் அவள் என் தலை பார்த்ததும்.... அண்ணா காப்பி,டீ எது வேனும்???நண்டு கொழம்பு வச்சி இருக்கேன்... அது ஒருவாய் சாப்பிடுங்க....என்று பரபரபக்கும் போது அந்த பெண்ணின் மீது இயல்பாய் பாசம் வந்து விடுகின்றது... பழகும் எந்த பெண்களாக இருந்தாலும் ஒரு ஆண் அந்த பெண்ணிடம் மிகுந்த நேசமும் பாசமும் வைத்து இருப்பது என்பது அந்த பெண் அந்த ஆணை பார்த்துக்கொள்வதில்தான் இருக்கின்றது....
அம்மா என்பவள் மட்டும்தான் அவள் ஆணுக்கு எத்தனை வயதானாலும், பிறந்த போது எப்படி பார்த்துக்கொண்டாலோ, அதே போல் பார்த்துக்கொள்ளுபவள்.. ஆனால் அப்படி பார்த்துக்கொண்ட அம்மா இறந்து போய்விட்டாள்.... அந்த இடத்தை தாரம் என்பவள் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் அப்படி நிரப்பாத போது... அந்த ஆறுதலையும் அந்த நேசத்தையும் ஒரு 5வயது குழந்தை கொடுத்தால் கூட அவள் மீது காதல் பெருகும்....அப்படி ஒருவனுக்கு காதல் மறுக்கபட்டு,வீட்டில் நிம்மதியும் இல்லாமல் இருந்தால்???? எல்லோருக்கும் தாய் மடிக்கு பிறகு தாரத்தின் மடி கிடைக்க வேண்டும் அந்த அன்பும் அறவனைப்பும் இல்லாத போது....
பாராட்ட
மடியில் வச்சி தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் உள்ள ஒருவனின் வாழ்க்கை வலியையும்
ஊரே மரியாதையாய் பார்க்கும் ஒருவனின் உள்ளக்குமுறலை மிக அழகாய் செல்லூலாய்டில் பதியபட்ட படம்தான் முதல் மரியாதை...
முதல்மரியாதை படத்தின் கதை இதுதான்...
மலைச்சாமி( சிவாஜிகணேசன்) தேவர் ஊரின் பெரிய கை... ஆனால் வீட்டில் மனைவி பொன்னாத்தா (வடிவுக்கரசி) ரொம்பவும் மோசமானவள்... எப்போதும் லொட லொட வென பேசிக்கொண்டு இருப்பவள்... எப்போதும் டாம்பீகம் பேசி திரிபவள்.. கணவனை எப்போதும் மதித்ததி்ல்லை.. அதே போல் கணவனும் மனைவியிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை.... மலைச்சாமி தேவரின் தங்கை மகன் செல்லகண்ணு அவரோடே வாழ்கின்றான்... பொன்னாத்தா அவனையும் தேவரையும் எப்போதும் மதித்ததே இல்லை.... பொன்னாத்தாவுக்கு ஒரு பெண் மட்டுமே...அவள் கணவன் குடிகாரன்....செல்லகண்ணு அதே ஊரில் செருப்பு தைக்கும் செங்கோடன் மகள் செவலியை காதலிக்கின்றான்... ஊருக்கு பஞ்சம் பொழைக்க வரும் குயில்(ராதா) குடும்பம்... வேலை ஏதும் கிடைக்காத காரணத்தால் அந்த ஊரின் ஆற்றில் பரிசல் ஓட்டி வயிற்று பிழைப்பை நடத்துகின்றாள்..வெள்ளைசாமி தேவருக்கும் பரிசல் ஓட்டி பிழைக்கும் குயிலின் துடிக்கான பேச்சு பிடித்து போகின்றது... குயிலுக்கும் பெரிசுவின் நடவடிக்கை நல்ல குணம் பிடித்து போக... இருவரும் நட்பாகின்றனர்...தனது தங்கை மகன் காதலை எதிர்க்கும் மலைச்சாமியை காதலுக்கு ஜாதி ஒரு தடையில்லை என்று சொல்லி செல்லகண்ணு செவலி திருமணத்தை நடத்தி வைக்கின்றாள்... ஒரு சில நாட்களில் செவலி கொலையாகின்றாள்... அந்த கொலையை செய்தது யார்? மலைச்சாமி குயில் நட்பை தப்பாக ஊருக்குள் தப்பாக பேசுகின்றார்கள்... அந்த பேச்சு குயிலுக்கு பிடித்து இருக்கின்றது... மலைச்சாமிக்கு அது பிடிடிக்கவில்லை.. இருப்பினும் குயிலின் காதல் ஜெயித்ததா? பெரிய திருப்பமாய்... குயில் ஒரு கொலை செய்து விட அது ஏன் செய்தாள், எதற்க்கு செய்தாள்? என்பதை வெண்திரையில் காண்க...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
கிராமத்தையும் அதன் வீட்டையும் சென்னை ஸ்டுடியோ செட்களில் காட்டிய தமிழ் சினிமாவை உண்மையான கிராமத்துக்கே போய் படம் எடுத்து அவுட்டோர் ஷுட்டிங்கை பிரபலபடுத்திய இயக்குனர் பாரதிராஜா....
இந்த படத்தின் திரைக்கதை மிகவும் அற்புதம் என்று சொல்லுவேன்... முதலில் இறக்கும் தருவாயில் இருக்கும் சிவாஜிஅவர்களை காண்பித்து விட்டு அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பிளாஷ் பேக்கில் கதையை சொல்லி இருப்பது அருமை...படத்தின் பிற்பகுதி வரை அவருக்கும் அவர் மனைவிக்கும் என்ன பிரச்சனை என்று ஊரார் வாயாலும், காட்சிகளாலும் சொல்லி இருப்பது நல்ல திரைக்கதைக்கு சான்று...
அதே போல் சிவாஜி வடிவுக்கரசி இருவர் இடையே உள்ள பினக்கை அறிமுகமான ஒரு சில காட்சிகளில் பார்வையாளனுக்கு புரிய வைத்தது அழகு என்பேன் ....
அதிகமான கட் ஷாட்டுகளில் உணர்வுகளை சொல்வதில் பாரதிராஜா கை தேர்ந்தவர்...வீட்டில் மூக்கு சளி சிந்தி அதே கையால் சோறு போடும் மனைவியையும். அவள் போடும் சோற்றையும் ஒதுக்கிவிட்டு,கொள்ளிக்கி கிளம்பி போகும் போது... தண்ணியை மேலே தெரியாமல் ஊற்றினாலும்... கொஞ்சமும் பதறாமல் வடிவுக்கரசி இருக்க, நாய் வலை எப்ப நிமித்த முடியும்?என்று சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியே வந்ததும்....
சிவாஜி முகத்தில் ஒரு மகிழ்ச்சியும், நீல வானமும், கரன்ட் கம்பியில் உட்கார்ந்து இருக்கும் பறவைகள்,அசையும் மரம் என்று பார்த்து விட்டு உற்ச்சாகமாகி நடக்கும் நடை அழகு... அதுவரை வீட்டில் சோக இசை இசைக்க வீட்டை விட்டு வெளியே வந்ததும் அந்த உற்சசாகதை இளையராஜா இசையில் நிரப்பி வைக்க அந்த உற்சாகம் பார்வையாளனுக்கும் வந்து ஒட்டிக்கொள்வதுதான்.... ஆச்சர்யம்..
சிவாஜி நடிப்பின் சிகரம் என்றாலும் மிகை படுத்த பட்ட நடிப்பை இந்த படத்தில் எந்த இடத்திலும் அவர் வெளிபடுத்தி இருக்கமாட்டார்...சில எக்ஸ்பிரஷன் அதிகமாக கொடுத்த போது கூட அவ்வளவு வேண்டாம் என்று பாராதிராஜா ஒன்மோர் போக வைத்ததாக சொல்லுவார்கள்...
சிவாஜியின் நடிப்புக்கு ராதா வீட்டில் மீன் குழம்பு சாப்பிடும் அந்த ஒரு காட்சி போதும்... பசியும் மீன் குழம்பு சுவைக்கு மயங்கி போய் இருக்கும் கேரக்டர். ஓகோ சாப்பிட்டுகிட்டு இருக்கியா? என்று கேட்டு பேச்சை ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் ராதா சாப்பாடு போட போகும் போது.. அந்த சாப்பாடுக்கு ஏங்கும் படி தட்டை கரண்டிக்கு அருகில் வைத்து பரபரப்பை காட்டும் அந்த காட்சியும்....
புள்ளை உண்மையிலேயே சொல்லறேன்.. உன் கை பக்குவத்தை சாப்பிடும் போது என் ஆத்தா ஞாபகம் வருது என்று சொல்லி கண் கலங்கும் இடம் அற்புதம்... அந்த ஒரு காட்சி போதும்.., அதே போல் வடிவுக்கரிசி மகளிடம் பேசம் போது நீ என்ன கேக்க போறேன்னு எனக்கு தெரியும் ஏழு ஜென்மத்துக்கு நீதான் என் மகள்... என்று சொல்வதும்... ஒரு பெரிய கல்லை தூக்கி விட்டு அதை ராதா பார்த்ததும் கூச்சபட்டு ஓடும் அந்த காட்சி நடிகர் திலகம்தான்...
ராதா படத்தில் ஜாக்கெட் போடாமல் நடித்ததை பற்றியும்கேழ்வரகு தின்னும் போது,அக்குள் சொறியும் அந்த காட்சியை பற்றி என் அம்மா சிலாகித்து என் சித்தியிடம் பேசியதும் அந்த தைரியத்தை பேசி பேசி ஆத்து ஆத்து போனது இன்னும் என் ஞாபக அடுக்குகளில்...
துடைப்பத்தால் அடிவாங்குவது போல் நடித்ததும்...சிவாஜியை ரொம்ப மரியாதையுடன் பார்வைகளில் பார்க்கும் அந்த காட்சிகள் எல்லாம் ராதா நடிப்பு ஏ ஒன் ரகம்.. பரிசலில் இருக்கம் காதல் ஜோடியை சிவாஜி கயிற்றில் பிடித்தபடி இருக்க...
பஞ்சம் பொழைக்க வந்தவளுக்கு பரம்பரை கவுரவத்தை பத்தி என்ன தெரியும் என்று சிவாஜி கேட்க???
ஒன் பரம்பரை கவுரவம் நீ புடிச்சிகிட்டு இருக்கற கவுத்தலதான் இருக்குதுன்னா... அதை விட்டுட்டு உன் கவுரவத்தை பார்த்துக்கோயா? என்று சொல்லும் அந்த காட்சி ராதா நடிப்புக்கு ஒரு சான்று..... அதே போல் சிவாஜி யாரை கிழவன்னு சொல்லறே.. குடிசையெல்லாம் காலி பண்ணிடுவேன் ஆமாம் என்று சொல்லும் போது முழித்து விட்டு சிரிய்யா அந்த கல்லை துக்கிட்டா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லும் அந்த காட்சி ராதா நடிப்புக்கு வாவ்...
வடிவுக்கரசி....அந்த லொட லொட பேச்சின் ஊடே துருபிடிச்ச சொரட்டுக்கும் பத்து வெள்ளாடோடு வந்தாக என்று சிவாஜியை குத்திகாட்டி பேசுவதிலாகட்டும்... மூக்கை சிந்தி சோறு போடும் போதும், துடப்பகட்டையால் ராதாவை நடு ரோட்டில் விளாசும் போதும், வாழ்ந்து முடிந்து போன,ஏதோ ஒரு அப்பாத்தாவின் வாழ்க்கையை பார்ப்பதாக இருக்கின்றது.....
கதை வசனம் செல்வராஜ்... படத்தின் பெரிய பலம்...
அட என் மருமவனே... அக்யும் இருப்பான் இங்கயும் இருப்பான் திங்கற சோத்துல பங்கும் கேட்பானாம் என்பது போன்ற வசனங்கள் ஊடே ஆரம்பிக்கும் உரையாடல் அந்த மண்ணில் வாழ்வது போல் இருக்கின்றது...
“ஆசையுள்ள கிழுவனுக்கு அததுவானம் கையிலன்னு சொல்லுவாங்க.....”
“உனக்குதான் கூடு இல்லை கூடி வாழ போற இந்த கூட்டை கலைக்கனுமா??”
“எல்லாரும் கேட்டுக்குங்க... ஆமா அவளை வச்சிருக்கேன்...”
“நீ என் தங்கச்சி மகன் மட்டும் இல்லை என் குலம் காக்க வந்த சாமின்னு என் காலை புடிச்சிகிட்டு கதறனான்... என் மாமன் காலை தொட்டுட்டான்னுட்டு 20 வருசமா நான் செருப்பு கூட போடலை...”
ஐயா சாமி எனக்கு ஒரு உண்மைதெரிஞ்சாகனும்க.... போன்ற டயலாக்குகள் அற்புதம்..
இசையி்ல் ராஜா துள்ளலையும் சோகத்தை சரிபாதியாக கலந்து தந்திருப்பார்...
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் ராசாவின் பின்னனி இசை... இந்த படத்தில் ராஜா போட்ட எல்லா இசையும் டிரைலர் வீடியோவில் இருக்கின்றது கேட்டு மகிழுங்கள்...
சிவாஜி ராதா சொன்ன கல்லை துக்கும் போது கொடுக்கும் பின்னனி இசை எனக்கு ரொம்ப பி்டித்த ஒன்று....
வைரமுத்து....வரிகள்... இப்போதும் என் அப்பா... படுக்கையில் பெருங்குரலெடுத்து..
என்ன செய்வேன் என் உள்ளம் தாங்கலை...
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை.. என்று பாடுவார்...
பாடல் வரிகளில் அவர்களுடைய வாழ்க்கையையும் வலியையும் சொல்லி இருப்பார்..
பூவுக்கும் வாசம் உண்டு்
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கும் வாசம் வந்தது ஓ மானே..என்பதாகட்டும்
கையகட்டி சொல்லி நிக்க சொன்ன காட்டு வெள்ளம் நிக்காது...
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்க சுத்தாது...
புத்திகெட்ட தேசம் பொடி வச்சி பேசும்
சாதிமத பேதமெல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்....
இரத்தினமே முத்தம் வைக்கவா அதுக்காக பட்டணம் போய் வக்கில் வைக்கவா?
வரிகளில் கவிஞர் பூந்து விளையாடி இருப்பார்... இருப்பி்னும் இந்த கூட்டனி முறிந்தது.. நமெக்கால்லாம் பெரிய இழப்புதான்...
வெளிப்புறபடபிடிப்புக்கு என் கேமராமேன் கண்ணன் கண்களை மட்டும் கொண்டு செல்வேன் என்பது போல கண்ணன் அற்புதமாக ஒளிப்திவு செய்து இருப்பார்...
அறிமுகம் தீபன், ரஞ்சனி... நடிகை ரஞ்சனி ஒரு சில படங்களில் தலை காட்டினார்...நடிகரை வேறு எந்த படத்திலும் நான் பார்க்கவில்லை..
கடைசிகாட்சிகளில் வந்தாலும் சத்யராஜ் அவர் கேரக்டரை பேச வைத்து இருப்பார்...
கடைசி வரை சிவாஜிக்கு ராதாமேல் வருவது பாசம் ,மரியாதை மட்டுமே.. ஆனால் ஊரார் பேசும் பேச்சுக்காகதான் அதை ஆம் என்று சொல்வது போல் இருப்பதும்...நீ வச்சிகிட்டு இருக்கியா என்று வடிவுக்கரசி துடைப்பத்தால் அடிக்கும் வரை ராதாவுக்கும் அது போல் எண்ணம் இல்லை அடித்த பிறகுதான் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவள் நினைப்பதாக சொல்லி இருப்பது இய்க்குனரின் அனுபவத்திறனுக்கு ஒரு சான்று....
இப்போது பல படங்களில காமெடி கேரக்டர் செய்யும் ஒளிப்பதிவாளர் இளவரசு இந்த படத்தல் அசி்ஸ்டென்ட் கேமராமேனாக பணியற்றியவர்... படத்தின் டேர்னிங் பாயிண்டாக இருக்கும் ராதா, சிவாஜி இருவரும் சந்தையில் எடுக்கும் போட்டோ எடுக்கும் போட்டோகிராபராக நடித்து இருப்பார்...இன்னொருவர் தனபால் இவர் பாராதிராஜா உறவுக்காரர் என்று நினைக்கின்றேன்... ஜெயாடிவியில் பணி புரிந்தார்.. சில நாட்களுக்கு முன் சென்னை பிரசாத் டெலிசினிலேபில் பார்த்தேன்...
ஒரு காதலை எந்த விகல்பமும் இல்லாமல் மனது மட்டும் முக்கியம் என்று காட்டிய அந்த துணிவு பாராதிராஜவை பாராட்டியே ஆக வேண்டும்....
எல்லா கிராமத்துலேயும் ஜனகராஜ் போல் ஒரு கேரக்டர் இருக்கும்....
வெட்டி வேரு வாசம் பாடலில் மான்டேஜ் ஷாட்டுகள் பிரமாதம்... அதுவே ஒரு கவிதையாய் இருக்கும்...
இந்த படத்தில் சிவாஜி எப்படி பெண்களிடம் வம்பு செய்வாரோ அது போலவே என் அப்பாவும் எல்லா ஊர் பெண்களிடமும் கிண்டலாக பேசுவார்....
இந்த படத்தை பார்த்து விட்டு வந்து என் அம்மா வீட்டில் சிலாகித்து பேசும் போதே எனக்கு தெரிந்து விட்டது இந்த படம் பெரிய அளவில் பேசபடும் என்று... அப்போது எனக்கு வயது பத்து....என்னிடம் இந்த படத்தின் முழு கதையை அம்மா என்னிடம் சொல்லி இருக்கின்றாள்...சிவாஜி நடிப்பை சிலாகித்து சொல்லி வியந்து போய் இருக்கி்ன்றாள்..
இந்த படம் தமிழில் பார்த்தே தீர வேண்டிய படம்.... ஒரு கிராமத்து வாழ்க்கை வாழ இந்த படத்தை பார்ககவும்...
விருதுகள்..
1985 National Film Awards (India)
* Won - Silver Lotus Award - Best Lyricist - Vairamuthu
* Won - Silver Lotus Award - Best Regional Film (Tamil) - Muthal Mariyathai - Bharathiraja
படத்தின் டிரைலர்... இளையராஜவின் பின்னனி இசையும்...
படத்தில் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு பாடல்
படக்குழுவினர் விபரம்
Directed by Bharathiraja
Produced by Bharathiraja
Written by Bharathiraja
Starring Sivaji Ganesan
Radha
Sathyaraj
Vadivukkarasi
Music by Ilaiyaraaja
Release date(s) 1985
Running time 160 mins
Language Tamil
காலையில் ஏழுமணிக்கு உட்கார்ந்து டைப் அடிக்க ஆரம்பித்து, படம் டிரைலர் எல்லாம் தேடிபிடித்து எடுத்து, ரசித்து டைப் அடிக்க... நடு நடுவே வீட்டு வேலைகள் எல்லாம் செய்து இதை பதிவை முடிக்க மதியம் ஒரு மணி....
அன்புடன்
ஜாக்கிசேகர்
(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....
அட!!!!!
ReplyDeleteஎன்னோட, பிடித்த "பத்து படங்கள்"
பதிவுல இந்த படமும் ஒன்னு தல.
நேரம் கிடைத்தால் பாருங்கள்.
அப்பவே தியேட்டரில் 3 முறை நான் பார்த்தேன்..காலெஜ் 2வது வருடம் படித்துக் கொண்டு இருந்தேன்..
ReplyDeletenegative ரோல் ஆக இருந்தாலும் வடிவுக்கரசி கலக்கி இருப்பார் .
ReplyDeleteராதாவுக்கு படத்தில் இரவல் குரல் கொடுத்தவர் ராதிகா ..அவருடைய உழைப்பும் குறிபிடத்தக்க வையே ..
[Radha dubbing voice என்பதால் தன award வாய்பு தவற விட்டாரென கேள்வி பட்டு இருக்குறேன் ..Sindhu bairavi suhasini ku adhu kidaithadhu
MY ALL TIME FAVOURITE MOVIE.
ReplyDelete//காலையில் ஏழுமணிக்கு உட்கார்ந்து டைப் அடிக்க ஆரம்பித்து, படம் டிரைலர் எல்லாம் தேடிபிடித்து எடுத்து, ரசித்து டைப் அடிக்க... நடு நடுவே வீட்டு வேலைகள் எல்லாம் செய்து இதை பதிவை முடிக்க மதியம் ஒரு மணி....
ReplyDelete//
அடேங்கப்பா!!!
சூப்பர் ஜாக்கி. :)
பார்த்தே தீர வேண்டிய படம்
ReplyDeleteபடித்தே தீர வேண்டியபதிவு
well analyzed and presented. Worth the time you have spent on it.
ReplyDeleteஅட!!!!!
ReplyDeleteஎன்னோட, பிடித்த "பத்து படங்கள்"
பதிவுல இந்த படமும் ஒன்னு தல.
நேரம் கிடைத்தால் பாருங்கள்
நன்றி சைவ கொத்து பரோட்டா..
அதை இப்பதான் பார்த்தேன்..
அப்பவே தியேட்டரில் 3 முறை நான் பார்த்தேன்..காலெஜ் 2வது வருடம் படித்துக் கொண்டு இருந்தேன்..//
ReplyDeleteஅமுதா அக்கா எனக்கு அப்போ பத்து வயசுதான்...
நன்றி தகவலுக்கு
negative ரோல் ஆக இருந்தாலும் வடிவுக்கரசி கலக்கி இருப்பார் .
ReplyDeleteராதாவுக்கு படத்தில் இரவல் குரல் கொடுத்தவர் ராதிகா ..அவருடைய உழைப்பும் குறிபிடத்தக்க வையே ..
[Radha dubbing voice என்பதால் தன award வாய்பு தவற விட்டாரென கேள்வி பட்டு இருக்குறேன் ..Sindhu bairavi suhasini ku adhu kidaithadhu////
நல்ல தகவலை சொல்லி இருக்கின்றீர்கள்.. இது போல் இந்த படத்து பற்றிய தகவல் யாருக்கேனும் தெரிந்தால் அதையும் இங்கு பகிர்ந்து கொள்ளவும்...
MY ALL TIME FAVOURITE MOVIE.//
ReplyDeleteபென்னி என்னோடதும்தான்..
எல்லாம் செய்து இதை பதிவை முடிக்க மதியம் ஒரு மணி....
ReplyDelete//
அடேங்கப்பா!!!
சூப்பர் ஜாக்கி. :)//
ரொம்ப இன்டரஸ்ட்டா எழுத எழுத வந்துகிட்டே இருக்கு..சங்கர்
well analyzed and presented. Worth the time you have spent on it.//
ReplyDeleteநன்றி சௌரி அவர்களே..
//அம்மா என்பவள் மட்டும்தான் அவள் ஆணுக்கு எத்தனை வயதானாலும், பிறந்த போது எப்படி பார்த்துக்கொண்டாலோ, அதே போல் பார்த்துக்கொள்ளுபவள்.. ஆனால் அப்படி பார்த்துக்கொண்ட அம்மா இறந்து போய்விட்டாள்.... அந்த இடத்தை தாரம் என்பவள் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் //
ReplyDeleteTrue . If anyone got wife who understand MOther's unbiased love, his life will be full of happiness...
//ஜாக்கி சேகர் said...
ReplyDeleteஅப்பவே தியேட்டரில் 3 முறை நான் பார்த்தேன்..காலெஜ் 2வது வருடம் படித்துக் கொண்டு இருந்தேன்..//
அமுதா அக்கா எனக்கு அப்போ பத்து வயசுதான்...//
ஜாக்கி உன் தன்னடக்கத்துக்கு அளவே இல்லையா?
எனக்கும் என் தந்தைக்கும் மிகவும் பிடித்த படம்.
ReplyDeleteஇப்படி ஒரு படத்தை பாராதிராஜாவையே மீண்டும் எடுக்கச் சொன்னாலும் எடுக்க முடியாது. அருமையான படத்திற்கு ஒரு அருமையான பார்வை.
நல்ல எழுதிருக்கேங்க தல
ReplyDeleteஅருமையான படம்தான் ஜாக்கி
ReplyDeleteஆனால் எனக்கேதோ சிவாஜி நடிப்பு இதிலும் மிகையாகத்தான் தெரிந்தது
நல்ல படம் ஜாக்கி.
ReplyDeleteஅண்ணே அருமையான விமர்சனம்,ஊர்ல தான் இருக்கேன்,வெய்யில் மிக கொடுமை,விரைவில் சந்திப்போம்
ReplyDeleteHi Mr.Sekar..
ReplyDeleteHope its your name..? and hope u r doing well .. frequently i'm visiting ur blogger and reading the article all r very interesting and its make me to send a mail 2 u,
and recently i red the review about the "Muthal Mariyathai" thats was the brilliant and fantastic one and no other word about Sivaji's acting scope, Barathirajah Directing scope and
Raja's music score, just u mention about the director Rajakumaran wedding .. recently I show Koffe wit Annu that couple came for the interview , really I surprised about
rajakumaran, I hope he is a good human being that's what c is fallen love with him.. ( actually I don't know may you know about them bcause u also in the same field)
I wishing your success in your filed and keep writing
Kind Regards
Vasee
நடிகர் திலகம் என்னும் சிங்கத்துக்கு பெரும் பாலும் தயிர் சாதம் கொடுத்தே திருப்தி பட்டு விட்டோம் என கமல் ஒரு முறை சொன்னார் . சிவாஜி என்னும் சிங்கத்துக்கு பிற்காலத்தில் தயிர்சாதம் கொடுக்காமல் நல்ல இறச்சி கொடுத்தது பாரதிராஜாவும் ,கமலும் (தேவர்மகன்) .ஆனால் யார் என்ன வகையான நடிப்பு கேட்டாலும் கொடுக்கிற அட்சய பாத்திரம் நடிகர் திலகம்.
ReplyDeleteஅந்த மீன்குழம்பு சாப்பிட ஆசைபடும் இடம், அந்த பர்ஃபார்மென்ஸ், சான்ஸே இல்லை, ஏ களாஸ். மறக்கவே முடியாத படம்
ReplyDelete//"(முதல் மரியாதை) சிவாஜிக்கும் பாராதிராஜாவுக்கும் ஒரு மணி மகுடம்..."//
உண்மை
ஜாக்கி ...கலக்கீடீங்க...படத்தை இன்னொரு தடவை பார்க்கும் ஆவலைத் தூண்டி இருக்கிறது ...உங்களின் பதிவு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteமிகவும் திறன்ப்பட்ட விமர்சனம்.
முடிந்தால் இந்த பதிவை பாரதிராஜாவுக்கு அனுப்பி வையுங்கள்.
ரொம்பவும் சந்தோசம் கொள்வார்.
கதை,பாத்திரங்கள்,நடிப்பு, பாடல்கள், கேமரா என வரிவரியாக சிலாகித்து எழுதியிருப்பது அருமை.
ReplyDeleteI think Story is R Selvaraj, not Bharathiraja
ReplyDelete//அந்த இடத்தை தாரம் என்பவள் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் அப்படி நிரப்பாத போது... அந்த ஆறுதலையும் அந்த நேசத்தையும் ஒரு 5வயது குழந்தை கொடுத்தால் கூட அவள் மீது காதல் பெருகும்....//
ReplyDeletenice explain sir. keep it up.
saravanan,
kurumbalur.
அந்த ஜோடி "நாளெல்லாம் பௌர்ணமி" படத்துல (பிரபு சார் கூட) நடிச்சிருப்பாங்க.
ReplyDeleteசரவணன்,
குரும்பலூர்.
ஜாக்கி....
ReplyDeleteபிரமாதம்.... பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள்....
உதயம் தியேட்டரில் முதல் வாரத்தில் பார்த்தேன்....
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று...
இளையராஜாவின் இசையை பற்றி புதிதாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை... அவ்வளவு ஜாலங்கள் புரிந்திருப்பார்...
பார்த்த படங்களுள் இதுவும் பிடித்தது. பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteசேகர்,
ReplyDeleteமுதல் மரியாதை படம் பற்றிய அருமையான பார்வை.
சென்னையில் கல்லூரி சேர்ந்த பிறகு சென்னையில் பார்த்த முதல் படம். கிராமத்து மனிதனான எனக்கு மிகவும் பிடித்த படம். இந்த படத்தில் வரும் சிவாஜியைப் போலத்தான் எனது அப்பாவின் உடலமைப்பும், உட்ல மொழியும். அப்பா ஞாபகம் வரும்போதெல்லாம் இந்தப் படத்தை பார்ப்பதால் எந்தனை முறை பார்த்திருக்கிறென் என்ற கணக்கு கிடையாது!!
“பூங்காற்று திரும்புமா” என்னுடைய மிகவும் விருப்பமான பாடல். இந்த படத்தைப்பற்றி இன்னும் நிறைய எழுதலாம்............
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
This comment has been removed by the author.
ReplyDelete"அந்த நெலாவத்தான்" பாடலில்
ReplyDelete"ஓடி வா ஓடப்பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக,மாசத்துல மூணு நாளு ஒதுக்கணும் பொதுவாக", என்று கேசட் பாடல்களில் இருக்கும்.ஆனால் படத்தில் பாடலில்
"ஓடி வா ஓடப்பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக,அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாக" என்று (பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து)அழகாக மாற்றியிருப்பார்கள்.எத்தனை பேர் இதனை கவனித்திருக்கிறார்களோ தெரியவில்லை.
மேலும் படத்தில் முழுமையாய் இடம் பெறாத "ராசாவெ ஒன்னெ நம்பி"
பாடல்."காதுல நரச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது,சுழியில படகு போல எம்மனசு சுத்துது சுத்துது" என்ற வரி வரும் போது நம் மனசும் சுத்தும்.எத்தனையோ தடவை கேட்டிருந்தாலும் இதனை படித்த பின்பு அந்த பாடலை அமைதியான சூழலில் கேளுங்கள்.நிச்சயம் மனசு சிலிர்க்கும்.
"ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க."
ReplyDeleteஅட இந்த யுக்தி நல்லாருக்கே.
Arpudhamaa padhivu panni irukeenga, Jackie..Nandri.
ReplyDeleteanna naan intha padathai pala murai parthu irukkeyn. aanalum ungal vaarthaikalil meendum oru murai paartheyn.thanks
ReplyDelete