(HISTORY OF VIOLENCE) 18+ திருந்தி வாழ்வது தவறா?


பதினாறு வயதினிலே படத்தில் ஒரு ஓனானை பசங்கள் சாவடிக்கும் போது, அதை பார்த்து சப்பானி கேரக்டர்...

“டேய் வேணாம்டா, விட்டுருங்கடா ஓனான் பாவம்” என்று சொல்லும் சப்பானி பின்பு ஒரு பெரிய கல்லை எடுதது பரட்டை தலையில் கல்லை போட்டு பரலோகத்துக்கு அனுப்பி வைப்பது எதனால்?
சூழ்நிலை.....

சூழ்நிலைதான் எல்லாவற்றிர்க்கும் காரணம் என்றால் அது மிகையாகாது...நல்லவனாக வாழ வேண்டும் என்றுதான் நம்மில் பலர் ஆசைபடுகின்றோம்... ஆனால் நாம் நல்லவனாக வாழவேண்டும் என்றாலும் சிலர், பலரது தலையிடல் காரணமாக, அல்லது குடும்ப சூழல் காரணமாக சிலர் தவறான பாதைக்கு சென்று விடுகின்றனர்....


சமீபத்தில் சென்னையில் துப்பாக்கியால் சுடப்பட்ட, இரட்டை கொலை ஒன்று நடந்தது... அந்த கொலையை செய்தவர் காவல் நிலையத்தில் விசாரனையின் போது இறந்துவிட்டார்... அவர் பின்புலத்தை பார்த்தால் அவரின் மனைவி புறநகரில் உள்ள ஒரு சுய நிதி கல்லூரியில் பேராசிரியை....

யோசித்து பாருங்கள் கல்லூரி பேராசிரியை கணவன் வீடு பூந்து கொள்ளை அடித்து கொலை செய்பவன் என்றால்.... அவன் சூழ்நிலை அவனை எப்படி இப்படி பட்டவானாக மாற்றியது... கூடவே இருக்கும் பேராசிரியருக்கு இது தெரியவே தெரியாதா? இப்படி ஒருவனை சூழ்நிலை மாற்றிய கதைதான் ஹிஸ்ட்ரி ஆப் வயலன்ஸ்....


HISTORY OF VIOLENCE படத்தின் கதை இதுதான்....

Tom Stall (Viggo Mortensen) ஒரு பார் ஓனர்தன் வேலை உண்டு தான் உண்டு என்று வாழ்ந்து வருபவன்... அழகான மனைவி Edie (Maria Bello) இவர்களுக்கு ஒரு வயதுக்கு வந்த மகனும் ஒரு 6 வயது பெண்பிள்ளையுமாக வாழ்க்கை இனிமையாக போகின்றது.....

பாரில் டாம் எல்லோரிடமும் முக்கியமாக கஸ்டமர்களிடம் அதிர்ந்து பேசவே மாட்டான். ரொம்பவும் சாதுவானவன்... அப்படி போய் கொண்டு இருக்கும் வாழ்க்கையில் தன்பிள்ளை கல்லுரியில் ஒரு சகமாணவன் எப்போதும் டார்ச்சர் செய்ய கோபத்தில் அவனை கும்மி எடு்த்து விடுகின்றான் டாமின் மகன்... விஷயம் கேள்வி பட்ட டாம் பையனை படிக்கும் போது கோப் எப்படி வரும் என்று பளார் என்று அறைந்து விடுகின்றான்.....

ஒருநாள் பாரில் இரண்டு பேர் துப்பாக்கி முனையில் பணத்தைகொள்ளையடிக்க வர டாம் ரொம்ப சாதூர்யமாக அந்த இருவரையும் தற்காப்புக்காக கொன்று விட லோக்கல் டிவியில் இருந்து.... எல்லா சேனல்களும் அவனை பற்றி செய்தி வெளியிட...மறுநாள் பாருக்கு முகத்தில் தழும்பு உள்ள ஒருவன் Carl Fogarty (Ed Harris) உணவு ஆர்டர் செய்து விட்டு போகும் போது டாமை அவன் “ நீ ரொம்ப தைரியமானவன்,நல்லா இருக்கியா ஜோயி”? என்று கேட்க.... அதற்க்கு டாம் நான் ஜோயி இல்லை டாம் என்று சொன்னாலும்... அவனை தொடர்ந்து வற்புறுத்த, அவன் குடும்பத்துக்கு பல தொல்லைகள் கொடுக்க, ஒரு கட்டத்தில் ஜோயி நான்தான் என்று ஒத்து்கொள்கின்றான்....இதில் கொடுமை மனைவி,மகனுக்கு சுத்தமாக தெரியாது....அவன் ஜோயி என்றால் கடந்தகாலம் என்ன என்பதை வழக்கம் போல் வெண்திரையில் காண்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படம் இதே பெயரில் நாவலாக வெளிவந்த பின்பே இந்த கதையை திரைப்படமாக எடுத்தனர்....

படத்தின் முதல் காட்சி இரண்டு பேர் காரில் ஏறுவதற்க்கு முன் பேசும் அந்த பத்து நிமிட காட்சியும் அதன் பிறகு அதில் ஒருவன் தண்ணீர் பிடிக்க உள்ளே போக ... அதன் பிறகு நடப்பது எல்லாம் பகீர் காட்சிகள் என்பேன்....

படத்தின் சினிமா மொழி் என்றழைக்கபடும்.... டெக்னிக்கல் விஷயங்களை படம் முழுவதும் தூவி இருக்கின்றார்கள்....


மிக முக்கியமாக டயலாக் டெலிவரியும் நடிப்பும் இந்த படத்தின் குறை சொல்ல முடியாத விஷயங்கள்....

அதே போல் படத்தின் முதல் காட்சியும், வீட்டில் டாம் தன் காதல் மனைவியோடு காம வெறியில் மாடி படிக்கட்டில் வைத்து உடலுறவு கொள்ளும் காட்சிகளை காட்சி படுத்திய விதம் அழகிலும் அழகு... ( என்னதான் நடிப்புன்னு சொன்னாலும் அந்த பொம்பளை புள்ள முதுவு என்னத்துக்கு ஆகின்றது) ஒளிப்பதிவாளர்Peter Suschitzk இந்த இரு காட்சிகள் மட்டும் அல்லாமல் படம் முழுவதும் தன் திறமையை வெளிபடுத்தி இருப்பார்... இருப்பார்....

அதே போல் இயக்குனர் இந்த படத்தில் காட்சிகளை எடுக்க அவர்கள் யோசித்த விதம் பற்றியும், அவர்கள் என்னமாதிரி டிஸ்கஷன் செய்து, காட்சிகளை எடுக்க திட்டம் வைத்து இருந்தார்கள்?... எத்தனை ஒன்மோர் போய் இருப்பார்கள்? என்று என் மனது நினைத்து பார்க்கின்றது....
எனக்கு கதாநாயகனை விட தழும்பு முகத்துடன் வரும் Ed Harris பின்னி பெடெலெடுத்து இருப்பார்... அந்த அலட்டலான பேச்சு அற்புதம்...


இயக்குனர்David Cronenberg படத்தை மிக அழகாக மென்மையாக நகர்த்திய விதம் அழகு...

படத்தில் உடலுறவு காட்சி இரண்டு இருக்கின்றது... குழந்தைகளை தவிருங்கள்...

படத்தின் விருதுகள் மற்றும் பரிந்துரைகள்...
Awards and nominations

Won

* Danish Film Critics Association (Bodil Award)
o Best American Picture
* Hollywood Legacy Awards
o Writer of the Year (Josh Olson)
* 12th Dallas-Fort Worth Film Critics Association Awards
o Top Ten Films
* 40th Kansas City Film Critics Circle Awards
o Best Supporting Actress (Maria Bello)
* 31st Los Angeles Film Critics Association Awards
o Best Supporting Actor (William Hurt)
* 40th National Society of Film Critics Awards
o Best Director (David Cronenberg)
o Best Supporting Actor (Ed Harris)
* 71st New York Film Critics Circle Awards
o Best Supporting Actor (William Hurt)
o Best Supporting Actress (Maria Bello)
* 9th Online Film Critics Society Awards
o Best Director (David Cronenberg)
o Best Picture
o Best Supporting Actress (Maria Bello)
* 10th San Diego Film Critics Society Awards
o Best Editing (Ronald Sanders)
* 9th Toronto Film Critics Association Awards
o Best Director (David Cronenberg)
o Best Picture
* Village Voice Film Poll
o Best Picture
o Best Director (David Cronenberg)
o 7th Best Lead Performance (Viggo Mortensen)
o Best Supporting Performance (Maria Bello)
o 5th Best Supporting Performance (William Hurt)
o 7th Best Supporting Performance (Ed Harris)
o 3rd Best Screenplay (Josh Olson)



Nominations

* 78th Academy Awards
o Best Writing, Screenplay Based on Material Previously Produced or Published (Josh Olson)
o Best Supporting Actor (William Hurt) - while his role was acclaimed, Hurt was only in the film for eight minutes.
* 59th British Academy Film Awards
o Adapted Screenplay (Josh Olson)
* Mystery Writers of America Edgar Awards
o Best Motion Picture Screen Play (Josh Olson)
* USC Scripter Awards
o John Wagner and Vince Locke (authors) and Josh Olson (screenwriter)
* 2005 Cannes Film Festival
o Golden Palm (David Cronenberg)
* 63rd Golden Globe Awards
o Best Picture - Drama
o Best Actress - Drama (Maria Bello)
* Gotham Awards
o Best Film (David Cronenberg)
* 31st Los Angeles Film Critics Association Awards
o Best Picture
o Best Director (David Cronenberg)
* 9th Online Film Critics Society Awards
o Best Editing (Ronald Sanders)
o Best Screenplay - Adapted (Josh Olson)
o Best Supporting Actor (William Hurt)
* 10th Satellite Awards
o Best Picture - Drama
o Best Actor - Drama (Viggo Mortensen)
o Best Supporting Actress - Drama (Maria Bello)
* 58th Writers Guild of America Awards
o Best Screenplay - Adapted (Josh Olson)


படத்தின் சிறு திரை முன்னோட்டம்...


படக்குழுவினர் விபரம்.....


Directed by David Cronenberg
Produced by Chris Bender
J.C. Spink
Toby Emmerich
Written by Screenplay:
Josh Olson
Graphic Novel:
John Wagner
Vince Locke
Starring Viggo Mortensen
Maria Bello
Ed Harris
William Hurt
Music by Howard Shore
Cinematography Peter Suschitzky
Editing by Ronald Sanders
Distributed by New Line Cinema
Release date(s) September 23, 2005 (limited)
September 30, 2005
Running time 95 min.
Country United States
Germany
Language English
Budget $32 million
Gross revenue $60,334,064


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

18 comments:

  1. 16 வயதினிலே ஓனான் மேட்டர் பின்பு கல் போட்டு கொல்வது

    இந்த பார்வையில் நான் பார்த்ததில்லை

    அருமை.

    ReplyDelete
  2. இந்த படம் நான் பர்களியே.... சீக்கிரம் பார்த்துரனும்

    ReplyDelete
  3. நட்புடன் ஜமால்.உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்.இந்த கண்ணோட்டத்தில் நான் பார்க்கவில்லை.

    ReplyDelete
  4. நெட் கொஞ்ச நாள் வேலை செய்யவில்லை...அதான் பல பதிவிற்கு பின்னூட்டம் போட முடியவில்லை...இப்போ மறுபடியும் கலத்துல இறங்கிடேன்...விட்ட படங்களை ராத்திரி டௌன்லோட் பண்ணிடுறேன்...

    ReplyDelete
  5. கேட்டுக்கொண்டதுக்கு இணங்க சிண்டியின் ஜில் போட்டோவை மாற்றிய அண்ணனுக்கு ஜே..

    ReplyDelete
  6. என்னதான் நடிப்புன்னு சொன்னாலும் அந்த பொம்பளை புள்ள முதுவு என்னத்துக்கு ஆகின்றது

    ஆஆஆஅவ்வ்வ்வ்வ் ஆமா என்னத்துக்காகிறது..

    ReplyDelete
  7. சூழ்நிலைதான் வன்முறைக்கு வித்திடுகிறது..

    ReplyDelete
  8. நல்லவனாக வாழ வேண்டும் என்றுதான் நம்மில் பலர் ஆசைபடுகின்றோம்..//

    நானெல்லாம் இயற்கையாவே ரொம்ப நல்லவருங்க

    ReplyDelete
  9. 16 வயதினிலே ஓனான் மேட்டர் பின்பு கல் போட்டு கொல்வது

    இந்த பார்வையில் நான் பார்த்ததில்லை

    அருமை.//
    நன்றி ஜமால்..

    ReplyDelete
  10. இந்த படம் நான் பர்களியே.... சீக்கிரம் பார்த்துரனும் சீ//

    சீக்கிரம் பாரு நைனா...

    ReplyDelete
  11. நட்புடன் ஜமால்.உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்.இந்த கண்ணோட்டத்தில் நான் பார்க்கவில்லை.//
    நன்றி இளவட்டம்

    ReplyDelete
  12. நெட் கொஞ்ச நாள் வேலை செய்யவில்லை...அதான் பல பதிவிற்கு பின்னூட்டம் போட முடியவில்லை...இப்போ மறுபடியும் கலத்துல இறங்கிடேன்...விட்ட படங்களை ராத்திரி டௌன்லோட் பண்ணிடுறேன்...//

    அதான பார்த்தேன் எங்கட பையனை ஆளை கானலியேன்னு....

    ReplyDelete
  13. கேட்டுக்கொண்டதுக்கு இணங்க சிண்டியின் ஜில் போட்டோவை மாற்றிய அண்ணனுக்கு ஜே..///

    சிஷ்ய கோடியின் சந்தோசமே என் சந்தோசம்

    ReplyDelete
  14. என்னதான் நடிப்புன்னு சொன்னாலும் அந்த பொம்பளை புள்ள முதுவு என்னத்துக்கு ஆகின்றது

    ஆஆஆஅவ்வ்வ்வ்வ் ஆமா என்னத்துக்காகிறது..//

    சூரியன் படத்தை பாருங்க..

    ReplyDelete
  15. சூழ்நிலைதான் வன்முறைக்கு வித்திடுகிறது..//
    உண்மைதான்

    ReplyDelete
  16. நல்லவனாக வாழ வேண்டும் என்றுதான் நம்மில் பலர் ஆசைபடுகின்றோம்..//

    நானெல்லாம் இயற்கையாவே ரொம்ப நல்லவருங்க//

    அப்படியா? யோ வாய்ஸ்

    ReplyDelete
  17. ரொம்ப நல்ல படம்... கொஞ்ச நாள் பின்ன தான் பாத்தேன்

    ReplyDelete
  18. பார்க்கணும். நல்ல அறிமுகம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner