எனது இரண்டாவது குறும்படம்...“முதல் படி”மற்றும் எனது மீடியா நேர்க்காணல், உங்கள் பார்வைக்கு....
நம் நாட்டு பெண்கள்.. அதாவது நன்றாக அழகாக இருக்கும் பெண்கள் கை நிறைய சம்பாபதித்தாலும் கூட திருமணம் என்று வரும் போது வரதட்சனை, மூக்கு கொஞ்சம் பெரிசு, குள்ளம், கண் லேசாக சாய்ந்து இருக்கின்றது, போன்ற விஷயங்களை காரணம் காட்டி நிறைய பெண்கள் இன்னும் நம் நாட்டில் வீட்டின் ஜன்னல் பக்கம் தன் பார்வை வெறித்த படி இன்னும் வாழ்கின்றார்கள்...
சரி நன்றாக, அழகாக, கை நிறைய சம்பாதிக்கும் பெண்களுக்கே திருமணம் நடை பெறுவதில்,வரதட்சனை,நிறம் போன்றவற்றால் மிமணம் நடைபெறுவதில் சிக்கல் என்றால்... சற்றே உடல் குறைபாடு கொண்ட பெண்கள் என்ன செய்வார்கள்...?அவர்கள் கடைசி வரை கணவன், குழந்தை,என்பதை கற்பனையில்தான் கழிக்கவேண்டுமா? அவளின் உடல்சுகம் என்பது நீராகரிக்கபட்ட ஒன்றா? கணவன் பாசமாய் நெற்றியில் முத்தமிட்டுவதை கடைசி வரை கற்பனையில்தான் அவள் யோசிக்க வேண்டுமா?
பெண் பார்க்க போய் விட்டு சில ஆண்கள் போடும் ஆட்டம் முகம் சுலிக்க வைக்கும் ரகம்... பெண் பார்த்த பெண்ணின் உடம்பில்அது சரியில்லை, இது சரியில்லை என்று லிஸ்ட் போடும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும்...
நான் இந்த குறும்படத்தில் சொல்ல வந்த கருத்து என்னவெனில் போலியோ
நோயினால் கால் சூம்பி போய் இருக்கும் அல்லது அவலட்சனமான பெண்களை கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை... அந்த அளவுக்குபரந்தம் எண்ணம் இருந்தால் ரொம்ப சந்தோஷம்.... ஆனால் சின்ன சின்ன உடல் குறைபாடு கொண்ட பெண்களை ஒதுக்காதீர்கள் என்றும் அவர்களும் பெண்கள்தான்...அவர்களுக்கும் வாழ்க்கை கனவுகள் உண்டு என்றும்... பரந்த மணதோடு வாழ்க்கை கொடுங்கள் என்றும்... மூக்கு சின்னதாக இருக்கின்றது, போன்ற அற்ப காரணங்களை காட்டி பெண்களை ஒதுக்காதீர் என்று வலியுறுத்த எடுத்த படம்....
பவித்ரா உடலில் சிறு குறைபாடு கொண்ட பெண் .. அவளுக்கு நிச்சயதார்த்தம் நடந்து தனது வருங்கால கணவனோடு பேசுகின்றாள்... அப்போது அவளை போன்ற சிறு உடல் குறைபாடு கொண்ட் பெண்களை எப்படி எல்லாம் இந்த பாழாய் போன சமுகம் எப்படி எல்லாம் மனதை காயப்டு்த்துகின்றது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொண்டு அவனுக்கு நன்றி தெரிவிக்கின்றாள்..... அதுதான் கதையே...
இந்த படம் இரண்டு மணி நேரத்தில் எடுக்கபட்டது....
படத்திற்க்கான தயாரிப்பு செலவு...750 ரூபாய் மட்டும்....
படத்திற்க்கு டப்பிங் இல்லை.... லைவ் சவுண்ட்தான்.... ஆனால் நடித்த பையனின் குரலும் சரியாக இல்லை அதனால் அவனுக்கு மட்டும எனது குரலில் டப்பிங் கொடுத்தேன்......
படத்தின் மிகப்பெரிய குறை இந்த படத்தில் நடித்த பையன் கார்த்திக்... ரிகர்சலில் நன்றாக டயலாக் பேசியவன்.... டேக்கில் கேமரா ஸ்டார்ட் சொன்னதும் அவனுக்கு ஒரு நடுக்கம் வந்த வேர்த்து விடுகின்றது... கண்கள் இயல்பாய் இல்லாமல் பட பட வென அடித்து கொள்ள.... வேறு என்ன செய்வது தலையெழுத்தே என்று கடனுக்கு எடுத்த படம் இது.... படம் எடுத்து கொண்டு இருக்கும் போதே அவனுக்கு பயத்தில் ஜுரம் வந்து விட்டது...
படத்தில் நடித்த பெண் எனது நண்பி. பெயர்... பவித்ரா... எனது படத்தின் முதல் கதாநாயகி... என்னோடு கல்லூரியில் பணி புரிந்தவர்...நான் இப்படி ஒரு கதையமைப்பை சொல்லி நடிக்க பெண் தேடிக்கொண்டு இருக்கையில்... (எனது படத்தில் பைசா வாங்காமல் நடிக்க வேண்டும்)படத்தை டிராப் செய்து விடலாமா? என்று யோசிக்கையில்.... கவலைபடதிங்க.... தனசேகரன்சார் இந்த படம் வந்தா நாளுபேராவது திருந்துவாங்க... அல்லது பொண்ணுங்களை அட்லிஸ்ட் குத்தம் சொல்றதையாவது நிறுத்துவாங்க என்று சொல்லி நடித்து கொடுத்தார்..... அவரு்டைய அந்த உதவி எந்த காலத்திலும் நான் மறக்க முடியாத ஒன்று...... நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்...இப்போதும் நட்புபாராட்டுபவர்....
எனது இரண்டாவது குறும் படம் “முதல்படி” உங்கள் பார்வைக்கு கீழே.....
போன மார்ச் மாதத்தில் சென்னை பிலிம் சேம்பரில் 3வது உலக குறும்படவிழா நடந்தது... அதில் எனது மூன்று படைப்புகளும் திரையிட தேர்வு செய்யபட்டன.... அப்போது சன்டிவியில் எல்லாம் இன்டர்வியு எடுத்தார்கள்.... காலம் கடந்தாலும்...
எனது நேர்கானல் உங்கள் பார்வைக்கு...
எனது படத்தினை பாராட்டி எடிட்டர் லெனின் அவர்கள் எனக்கு சால்வை போத்தி ஆசிர்வதித்தார்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
நான் இயக்கிய குறும்படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள் ஜாக்கிசேகர்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சேகர்..
ReplyDeleteதாங்கள் என்னவித கேமிரா உபயோகப் படுத்தப் பட்டது, 5 மெகா பிக்சல் கேமிரா போதுமானாதா.. போன்ற தகவல்களையும் அளிக்கவும்
பத்ரிநாத்
படம் நெகிழ வைத்தது...
ReplyDeleteவாழ்த்துகள்....
வாழ்த்துக்கள்......
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி... நல்லாருக்கு...
ReplyDeleteஆரம்ப டயலாக்குகள் கொஞ்சம் இயல்பிலில்லாமல், டிவி சீரியல் போல் தொனித்தது...
ஹீரோவின் டப்பிங் குரல் அருமை...
வாழ்த்துக்கள் தல
ReplyDeleteநல்லா இருக்குங்க! வாழ்த்துகள்!
ReplyDelete// டேக்கில் கேமரா ஸ்டார்ட் சொன்னதும் அவனுக்கு ஒரு நடுக்கம் வந்த வேர்த்து விடுகின்றது... கண்கள் இயல்பாய் இல்லாமல் பட பட வென அடித்து கொள்ள.//
அதையே அந்த கதாபாத்திரத்தின் குறையாக வசனத்தில் புகுத்தி சரி செய்து விட்டீர்களே ..சபாஷ்!
குறும்படம் நல்ல கான்செப்ட்!
ReplyDeleteஆனா ஓவரா சமூகத்துக்கு கருத்து சொன்னா மாதிரி இருக்கு!
நெகிழ்ச்சியாக இருந்தது
ReplyDeleteசீக்கிரமே முழுநீள திரைப்படம் இயக்க வாழ்த்துக்கள்
நல்லாருக்கு ஜாக்கி
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஇவண்
உலவு.காம்
குரும் படம் என்பதால் “பஞ்ச்” கம்மியாக இருக்கிற மாதிரி இருக்கு ஆனா மெசேஜ் இருக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி ஸார்...படத்தின் கடைசி நொடியில் நிரூபித்து விட்டீர்கள்.
ReplyDeleteஉங்கள் அளவிற்கு Technical சமாச்சாரங்கள் இல்லையென்றாலும், நாங்கள் நண்பர்களாக சேர்ந்து எங்கள் கல்லூரி நாட்களில் எடுத்த குறும்படத்தின் ("The Last Minutes") லிங்க் கொடுத்துள்ளேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்.
http://www.youtube.com/watch?v=nXbYjDDJqRg
ஜாக்கி சேகர், வசனங்களை முடிந்த வரை இயல்பாக கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நீங்கள் வெற்றி பெற
தல உங்க ரெண்டு குறும் படம் அருமை. என்னையும் யூஸ் பணிகோங்க எதாவது ரோல் இருந்த குடுங்க பண்ணி பார்க்கலாம் ..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteஅருமை ஜாக்கி அண்ணே
ReplyDeleteரொம்ப அருமையாக வந்துள்ளது.
இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்ததற்கு இதை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸுக்கு அனுப்பி வைங்க.
கண்டிப்பா யாரும் இவ்வளவு தரமாக
குறும்படத்தை 750 ரூபாயில் எடுக்க முடியாதுங்க.
வளர்க உங்கள் பணி
அருமையான கருத்து ஜாக்கி.
ReplyDeleteஇறுதியில் நல்ல டுவிஸ்ட்.
கால் ஊனமாக இருக்கும் என எதிர்பார்த்தேன்.ஆனால் படத்தின் முடிவில் முடியை ஒதுக்கி செவித்திறன் குறைவை சிம்பாலிக்காக கண்பித்திருப்பது சற்றும் எதிர்பாராதது.
வாழ்த்துக்கள் ஜாக்கி.
வாழ்த்துக்கள் சேகர்..
ReplyDeleteஅற்புதமாக இருக்கிறது. மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்......
ReplyDeleteமுழுநீள திரைப்படம் இயக்க வாழ்த்துக்கள் தனசேகரன் சார்
ReplyDeleteவெறும் வாழ்த்துக்கள், உபயோகபடாத வார்த்தைகள். 10த்தில் ஒன்று 11ஆக நான் விரும்பவில்லை. இன்னும் வசணங்களில் கவணம் கொண்டிருக்கலாம். தோற்பவராயினும், முடிந்தவரை போராடி தோற்பதே வீரனுக்கு அழகு. போராடி தோறுங்கள்.
ReplyDeleteநண்பரே... உங்களுடைய இக்குறும்படம் சிறப்பாணதாக அங்கீகரிக்க பட்டுள்ளது. மன்னிக்கவும் எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் நான் இங்கு இப்படத்தை விமர்சித்தாக வேண்டும்.
ReplyDeleteநீங்கள் காட்டிய இப்படத்தில், ஒரு காது கேளாத பெண், அவளை பற்றிய கதை...அவள் ஊணத்தை பொருட்படுத்தாமல் (அ) ஏற்று அவளை கை பிடிக்கும் காதலன், நீங்கள் சொல்லவருவது ”சின்ன சின்ன குறைகளை ஏற்று கொள்ளுங்கள், அவர்களை வெறுத்து ஒதுக்காதீர்கள்” தயவு செய்து பார்க்க இக்குறும்படம்: http://www.youtube.com/watch?v=HkHOKWQAny0&feature=related
இதில் ஒரு இளைஞன் கால் ஊணத்தால், மற்றவர்களால் வெறுக்கபடுகிறான். இல்லையெனில் அவமாணப்படுகிறான். கால் ஊணமாக இருந்தாலும் அவன் திறமை ஊணமில்லை என்றே சொல்லவருகிறார்கள். இங்கு குறிப்பிடபட்டுள்ளது அவன் திறமையை எண்ணி அனைவரும் அவனை ஏற்றுகொள்கிறார்கள். நீங்கள் காட்டும் பெண், திறமையினால் அவன் காதலன் அவளை ஏற்று கொண்டானா? இல்லை நீங்கள் காட்டும் பெண் திறமையினால் அவன் ஏற்றுகொள்ளவில்லை. நீங்கள் கூறுவது ஊணம் இருந்தாலும் பரவாயில்லை. ஏற்றுகொள்ளுங்கள். அனுதாபத்தில் இருப்பது போல இல்லை? உங்கள் படம் மறைமுகமாக ஊணமானவர்களை காயப்படுத்துவது போல இல்லையா? நான் இப்படி உங்கள் படத்தை பற்றி கணித்தது சரியா? உங்கள் விளக்கம் தேவை.... நான் குறிப்பிட்ட குறும்படம் போல், ஊணமிருந்ந்தால் என்ன? எனக்கு திறமையுண்டு... என்னும் எண்ணம் சரியா? நான் ஊணமா இருந்தும், என்ன ஏற்றுகிட்டயே... தாங்ஸ் என்ற எண்ணம் சரியா? தயவு செய்து சொல்லுங்கள்....
மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்..!
ReplyDeleteநண்பர் மு இரா அவர்களுக்கு வணக்கம்...
ReplyDeleteஅந்த கதையை பாருங்கள் , இந்த கதையில் இப்படி சொன்னார்கள் என்ற ஒப்பீடு வேண்டாம்.. வசந்தபவன் சாம்பாரில் கறிவேப்பிலை அதிகம் இருக்கின்றது போலான விஷயங்கள் வேண்டாம்... அந்த பெண் அவனை நன்றாக பார்த்துக்கொள்கின்றாள்...20 வருஷத்துக்கு அப்புறம் செத்து போன தன் அம்மா பாசத்தை உன்னிடம் பார்க்கின்றேன் என்று சொல்லி.. ஊனத்தை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் திருமணம் செய்து கொள்கின்றான்.... ஊனம் உள்ள அத்தனை பேரும் திறமையானவர்கள் என்றால் எல்லோரும் அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பார்கள்.... அப்ப மக்காய் இருக்கும் உடல் ஊனமுற்றவர்கள்... என்ன செய்வார்கள்.... என் கதாநாயகி என்னை போல் மக்கு....
அன்புடன் ஜாக்கி
(பதிவையும் அதற்க்கான முன்னோட்டத்தையும் , படத்தின் வசனங்களையும் கவனித்து விட்டு கேள்வி கேளுங்கள் நண்பரே..)
வணக்கம் நண்பரே,
ReplyDeleteஒற்றை சொல்லில் மிக நன்று. என்று கூருவது மிக எளிது. அதைதான் நீங்கள் விரும்புகிறீர்களா? உங்கள் முன்னோட்டம் அவசியம் இல்லாதது, படம் பார்க்கும் ஒவ்வொருவரிடம் போய் முன்னோட்டம் சொல்ல முடியாது. நீங்கள் படத்தில் என்ன குறிப்பிட்டுள்ளீர்கள் அதுதான் முக்கியம்.
ரெண்டாவது நீங்கள் குறிப்பிட்ட படி வசணம்:
வசணம் 1சிவா: என்ன பவி? என்ன ஆச்சு? அழுதா எனக்கு பிடிக்காதுனு உணக்கு தெரியுமில்ல? முதல்ல கண்ன துடமா..
பவித்ரா: சிவா என்னால நம்பவே முடியலடா… நல்லா இருக்கற பொண்ணுங்களுக்கே, 30 வயசுக்கு மேல கல்யாணம்கிறப்போ, எணக்கு இந்த வயசுல நிச்சயதார்த்தம்ங்கறப்போ, என்னால நம்பவே முடியலடா… சிவா எங்க ஜாதியில மண்டபத்துக்கு, மாப்பிள வர கார் வாடகை கூட, நாங்கதான் தரணும். தெரியுமா?
சிவா: Leave it பவி… உணக்கு மட்டும் ஏன் இவ்ளோ Inferiority complexனு தெரியல..
பவித்ரா: சிவா உணக்கு தெரியாது, என்னோட Point of view-ல இருந்து பார்த்தாதான் இந்த அழுகையோட, அர்த்தம் உணக்கு தெரியும். காலேஜ் சேர்ந்தப்போ, என்ன பத்தி முழுசா தெரியாத ஒருத்தன் வந்து I love u சொன்னான், மதியானம் என்ன நினைச்சானோ தெரியல… it’s a joke just like itda… sollittu அவன்பாட்டுக்கு போய்ட்டான். நான் முழுசா உடைஞ்சதே, அன்னிக்குதான் தெரியுமா?
சிவா: உண்னை எல்லாரும் எப்படி பார்த்தாங்கனு எனக்கு தெரியாது… ஆனா நீ என்ன குழந்தையா பார்த்துகிட்ட… 20 வரிஷத்துக்கு அப்புறம் செத்துபோண எங்க அம்மா பாசத்த உன்கிட்ட பாக்குறேன். எனக்கு அது போதும்டா…
பவித்ரா: இந்த சமூகம் பரிதாபம்ங்கற பேர்ல… எல்லா இடத்திலும் எங்கல ஒதுக்கி, ஒதுக்கி வைச்சிருக்கு.ஒரு Application form fillup பண்ணி கொடுக்கறதனாலும், எங்களுக்குனு ஒரு தனி Column ஓதுக்கி இருக்கு. அத டிக் பண்ணி கொடுத்ததான் எங்க தேவையே நிவர்த்தி ஆகும். சிவா என்ன பிடிச்சி இருக்கா?
சிவா: என்னடா? இதெல்லாம் ஒரு கேள்வியா? என்ன பொருத்தவரைக்கும், சிவப்பா அழகா இருக்கறவங்க எல்லாம், நல்லவலும் கிடையாது. கருப்பா அசிங்கமா, இருக்கறவங்கயெல்லாம் கெட்டவங்களும் கிடையாது. எந்த குறையும் இல்லாம ஒரு பெண்ண கல்யாணம் பண்ணி, அது கல்யாணத்துக்கு அப்புறம் Adamond –அ இருந்துதுனா? என்ன பண்ணுவ? என்ன பொருத்தளவுல மனசளவு இருக்கறதுதான் பெரிய ஊணம்.
பவித்ரா: Thanks siva… thank you so much. வீட்ல இருக்கற வரைக்கும் எனக்கு எதுவுமே, தெரியாது தெரியுமா? ஆனா வெளியல போய்ட்டனா, என்ன எல்லாரும் வித்தியாசமா பார்ப்பாங்க… வித்தியாசமா பேசுவாங்க… பழகிய ரெண்டாவது செகண்ட் மூஞ்சிய சோகமா வைச்சிகிட்டு, உணக்கு ஏன்மா இப்படி ஒரு நிலமை… அப்படினு கேப்பாங்க… இவ்ளோ அழகா இருக்கற உணக்கு கடவுள் இப்படி ஒரு சோதனையை கொடுத்துட்டாறேனு சொல்லிட்டு குசலம் எல்லாம் விசாரிப்பாங்க… எவ்ளோ கஷ்டமா இருக்கும் தெரியுமா? சிவா நான் Steadya இருந்தாலும், பரிதாப பட்டு எல்லாரும் என்ன மனசலவுள்ள நோகடிச்சுடுவாங்க தெரியுமா?
சிவா: ஏய், எனக்கு கூடத்தான், எப்போதும் என் கண் துடிச்சிகிட்டே இருக்கு. இதுக்கு என்னெக்காவது கவலை பட்டிருக்கனா? எல்லாரும் சொல்லற மாதிரி நானும் சொல்லறேண்டி, இவ்ளோ அழகா இருக்கற உனக்கு கடவுள் ஏண்டி இந்த குறையை கொடுத்தாரு…
பவித்ரா: ஏய், சிவா இப்பகூட ஒண்ணும் குறச்சி போகல, காலெஜில ஒரு கடங்காரண் சொண்ணான் இல்ல… Hey just a jokeya, just like that அப்படி சொண்ணான் இல்ல.. அந்த மாதிரி சொல்லிட்டு நீ கிளம்பறதனாலும், கிளம்பலாம்.
சிவா: காமடியா பேசறண்ட், ரெண்டு பேர சேர்த்து அசிங்க படுத்தாத புரியுதா?
பவித்ரா: Thanksda… thanks ya lot.
மொத்தம் 6.25 நிமிஷம் ஓடும் படத்தில், இவ்வளவு பெரிய வசணங்கள் 3.3 நிமிஷத்தில் பேச படுகிறது.
எதையும் கவணிக்காமல் கேள்வி கேட்கும் பழக்கம் இல்லை என்னிடம்...
நான் வலியுருத்தும் சில விஷயங்களை கவணிக்க வேண்டும். வெறும் ஒப்பீடுவதற்க்காக நான் அப்படத்தை உங்களுக்கு காட்டவில்லை. அதில் இருக்கும் Energy (Motivation Energy) நீங்கள் ஏன் காட்டி இருக்ககூடாது என்றுதான் கேட்கிறேன். உங்கள் கதை ஒரு பெண்ணை பற்றியதால், பெண்களுக்கு எதற்கு அது என்று விட்டு விட்டீர்களா? பெண் என்றால் அவள் இன்னொருவனை நம்பிதான் இருக்க வேண்டும். என்று நீங்கள் குறிப்பிடுவது போல உங்கள் கதாநாயகியும் Thanks, Thanks - ணு சொல்லி கொண்டே இருக்கிறாள்.
இல்லை, எங்க கடை சாம்பாரில் கறிவேப்பிலை கொஞ்சம்தான் இருக்கும்னு சொல்லுவீங்களா? அப்புறம் மக்காய்.... அப்படி ஏதோ சொன்னீர்கள்... அப்படி யாரும் என் கண்களுக்கு தெரியவில்லை... உண்மையில் இவ்வுலகத்தில் யாருமே மக்கு கிடையாது....
சிறு குறிப்பு: மு.இரா என்று தெளிவாக குறிப்பிட்டமைக்கு நன்றி.
அன்பின் நண்பர் மு. இரா அவர்களுக்கு வணக்கம்...
ReplyDeleteபொதுவாக புத்தகத்தை படித்து விட்டு பேசுவது என்பது வேறு... வாழ்க்கையை அதன் அனுபவத்தோடு சேர்ந்து பார்ப்பது என்பது வேறு...உங்கள் படத்தில் ஏன் இப்படி 3 நிமிஷத்துக்கு பேசறங்க... என்கின்றீர்கள்... முதலில் அது எனது இரண்டாவது குறும்படம்....நாண் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எடுத்த படம்.... வசனமே இல்லாத கமல் எடுத்த பேசும் படத்தை நாம் ஒன்றும் அப்படி ஆகா ஓஹோ என்று கொண்டாட வில்லை....
பெண்களில் எல்லோரும் வேலைக்கு போய் சம்பாதித்து சுய தொழில் புரிந்து சொந்த காலில் நிற்க்க வேண்டும் என்று நினைப்பதில்லை...40 பர்சென்ட் பேர்தான் தன் சொந்தகாலில் நிற்க்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்...
எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் கால் சற்றே விந்தி விந்தி நடக்கும் அக்கா தனக்கு எல்லா பெண்கள் மாதிரி அழகான கணவன் கிடைத்து, குழந்தை பெற்று செட்டில் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டால்.... நீங்கள் சொல்வது போல் பெண் ஆணை சாராமல் வாழ இன்னும் 20 தலைமுறைகளாவது தேவை... நண்பா....
எல்லா பெண்களும் தன் தனித்தன்மையை நிருபிக்க அவசியம் இல்லை....வெளிநாட்டுல டௌரின்ற விஷயமே இல்லை... ஆனா இங்க அழகான படிச்ச பொண்ணுங்களே பத்து பவுன் போட்டாதான் படுக்கையில இடம்....ஆனா இந்த மாதிரி ஊணமுள்ள கல்யானம் பண்ணி செட்டில் ஆகனும் நினைக்கற பொண்ணோட கதை இது...
அதுமட்டும் இல்லாம , எற்க்கனவே ஐ லவ்யு சொன்னவன் இவள் ஊணமுற்றவள்னு சொல்லி நிராகரிச்ச வலி அவகிட்ட நிறைய இருக்கு அதனால வாழ்க்கை கொடுத்தவனக்கு தேங்ஸ் சொல்லறா....
புத்தகம்பெண் உரிமை என்பது வேறு இயல்பான வார்க்கை என்பது வேறு...
நான் எப்போதுமே இரண்டையம் குழப்பிக்கொள்வது இல்லை...
நன்றி மு,இரா...படத்தை பார்த்து வரிக்கு வரி வசனத்தை அடித்து சொல்லி இருக்கின்றிர்கள்... அதற்க்கான உங்கள் மெனக்கெடல் எனக்கு பிடித்து இருக்கின்றது ...
ஆனால் நான் விரிவாய் இது போல் பின்னுட்ம் இடுவது இல்லை... உங்களுக்குதான் முதலில்... எனக்கு பெரிதாய் விவாதம் செய்து பதில் சொல்ல நேரம் இருப்பதில்லை....
என்னை பொறுத்தவரை ஒரு படைப்பை மக்கள் மத்தியில் வைத்து விட்டு அதன் சாதக பாதகங்கள் பற்றி கவலை படாமல் அடுத்த விஷயத்துக்கு போக வேண்டும் அதுதான் ஒரு படைப்பாளிக்கு நல்லது...
நன்றி மு,இரா சந்தோம்தானே
நன்றி
அன்புடன்
ஜாக்கி
வாழ்த்துக்கள் ஜாக்கிசேகர்.-
ReplyDeleteநன்றி மக்களுர் சிவா மிக்க நன்றி
வாழ்த்துக்கள் சேகர்..
ReplyDeleteதாங்கள் என்னவித கேமிரா உபயோகப் படுத்தப் பட்டது, 5 மெகா பிக்சல் கேமிரா போதுமானாதா.. போன்ற தகவல்களையும் அளிக்கவும்
பத்ரிநாத்//
பத்ரி படத்தின் பின்னாடி வரும் டைட்டிலில் என்ன கேமரா? என்ன எடிட்டிங் சாப்ட்வேர் உபயோகபடுத்த பட்டது என்பதை டைட்டிலில் போட்டு இருக்கின்றேன்...
நன்றி பத்ரி
படம் நெகிழ வைத்தது...
ReplyDeleteவாழ்த்துகள்....//
நன்றி வழி போக்கன்...
வாழ்த்துக்கள்......//
ReplyDeleteநன்றி சங்கர் மிக்க நன்றி
வாழ்த்துக்கள் ஜாக்கி... நல்லாருக்கு...
ReplyDeleteஆரம்ப டயலாக்குகள் கொஞ்சம் இயல்பிலில்லாமல், டிவி சீரியல் போல் தொனித்தது...
ஹீரோவின் டப்பிங் குரல் அருமை...//
உண்மைதான் றண்பரே எனக்கே இப்ப பார்க்கறப்ப அப்படிதான் இருக்கு...
ஹீரோ டப்பிங் அடியேன்தான் நன்றி
தமி்ழ்
வாழ்த்துக்கள் தல//
ReplyDeleteநன்றி யோ வாய்ஸ்
நன்றி ஜோ நுனுக்கமாய் படத்தை பார்த்து குறிப்பிட்டதற்க்கு....
ReplyDeleteமிக்க நன்றி
குறும்படம் நல்ல கான்செப்ட்!
ReplyDeleteஆனா ஓவரா சமூகத்துக்கு கருத்து சொன்னா மாதிரி இருக்கு!//
உண்மைதான் வால்
அது ஒரு ஆர்வக்கோளறு படம்
நெகிழ்ச்சியாக இருந்தது
ReplyDeleteசீக்கிரமே முழுநீள திரைப்படம் இயக்க வாழ்த்துக்கள்//
நன்றி மேஷக் மிக்க நன்றி
நன்றி ராதாகிருஷ்னன் வடுவூர் குமார் மிக்க நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி ஸார்...படத்தின் கடைசி நொடியில் நிரூபித்து விட்டீர்கள்.
ReplyDeleteஉங்கள் அளவிற்கு Technical சமாச்சாரங்கள் இல்லையென்றாலும், நாங்கள் நண்பர்களாக சேர்ந்து எங்கள் கல்லூரி நாட்களில் எடுத்த குறும்படத்தின் ("The Last Minutes") லிங்க் கொடுத்துள்ளேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்.
http://www.youtube.com/watch?v=nXbYjDDJqRg//
கண்டிப்பாக பிரதீப் நன்றி
ஜாக்கி சேகர், வசனங்களை முடிந்த வரை இயல்பாக கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நீங்கள் வெற்றி பெற//
உண்மைதான் கிரி அது எனது இரண்டாவது படம்... அதில் உள்ள குறைகளால்தான் அதனை இத்தனைநாள் வெளிபடுத்தாமல் இருந்தேன்...
தல உங்க ரெண்டு குறும் படம் அருமை. என்னையும் யூஸ் பணிகோங்க எதாவது ரோல் இருந்த குடுங்க பண்ணி பார்க்கலாம் ..//
ReplyDeleteகண்டிப்பா ராஜராஜன்
நன்றி ஸ்டார்ஜன்
ReplyDeleteஅருமை ஜாக்கி அண்ணே
ReplyDeleteரொம்ப அருமையாக வந்துள்ளது.
இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்ததற்கு இதை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸுக்கு அனுப்பி வைங்க.
கண்டிப்பா யாரும் இவ்வளவு தரமாக
குறும்படத்தை 750 ரூபாயில் எடுக்க முடியாதுங்க.
வளர்க உங்கள் பணி
நன்றி கார்த்தி மிக்க நன்றி
அருமையான கருத்து ஜாக்கி.
ReplyDeleteஇறுதியில் நல்ல டுவிஸ்ட்.
கால் ஊனமாக இருக்கும் என எதிர்பார்த்தேன்.ஆனால் படத்தின் முடிவில் முடியை ஒதுக்கி செவித்திறன் குறைவை சிம்பாலிக்காக கண்பித்திருப்பது சற்றும் எதிர்பாராதது.
வாழ்த்துக்கள் ஜாக்கி.//
நன்றி துபாய் ராஜா
நன்றி நாஞ்சில் நாதம், எம்ஜெவி, சதிஷ்குமார், உண்மைதமிழ்ன் எல்லோருக்கும் எனது நன்றிகள்...
ReplyDeleteமகிழ்ச்சி நண்பரே...
ReplyDeleteஆனால் காலம் மாறி வருகிறது. புரட்சி பெண்கள்,இனி தோண்றுவார்கள். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக உங்களுடைய அடுத்த படைப்பு இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
மக்களுக்கு, பிடித்த மாதிரி படம் எடுத்தேன் சொல்லுவதை விட, என் படம் மக்களுடைய விருப்பத்தையே மாற்றும் என்ற நம்பிக்கை சிறந்தது. உங்களுடைய முதல் குறும்படத்தையும் காட்டுங்கள். விமர்சணம் பண்ண காத்திருக்கிறேன். பதிலளிக்க நேரம் இல்லை என்று சொன்னீர்கள்... நான் உங்களுக்கு, கருத்துரை சொல்லவே... தனியாக நேரம் ஒதுக்கியுள்ளேன்.... கொஞ்சம் Animation படங்களை பற்றி கூறினால் நல்லா இருக்கும். அனிமேஷன் படம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.... நன்றி, வணக்கம்.
வாழ்த்துக்கள் ஜாக்கிசேகர்...
ReplyDeleteபடம் நல்லா இருந்தது. வாழ்த்துகள்.
ReplyDeleteஎல்லாம் நல்ல சொன்னீங்க கடைசிலே அது என்ன தலைவா "This film is dedicated to those individuals who whole heartedly accepts physically challenged Women(?!) as their life partners."
ஏன்? அதே போன்ற பறந்த எண்ணங்கொண்ட பெண்களுக்கு இல்லையா?
குறும்படம் நன்றாக இருந்தது.உங்களது முதல் குறும் படம் லிங்க் இருந்தால் அனுப்புங்கள் என் முகவரிக்கு
ReplyDeletespackiyarajkumar@gamil.com