பொண்ணுங்க விஷயத்துல நான் ஒன்னும் அவ்வளவு எக்ஸ்பர்ட் இல்லை...அனால் பொதுவாய் பெண்கள் என்னை ரசிப்பார்கள்... அனால் முதல் பார்வையில் பெண்களுக்கு என்னை சுத்தமாக பிடிக்காது....
நான் ஆட்டோ ஓட்டிய காலத்திலேயே என்னை பார்த்து, எனது பின்புலமான பொருளாதாரம் போன்றவற்றை தெரிந்தே , என்னை விட அதிகம் படித்த என் மனைவி, என்னை விரும்புகின்றேன் என்று சொன்னபோது அவள் மீது எனக்கு அதீத அன்பு வந்ததில் வியப்பில்லை...
என் தங்ககைள் இருவர் திருமணம் முடியும் வரை பொறுத்து இருந்தவள்... ஒருவருடம் இல்லை இரண்டு வருடம் இல்லை 10 வருடம் எங்கள் காதலுக்கு நாங்கள் இருவரும் காவல் காத்தோம்.... போன வருடம் திருமணம் செய்து கொண்டோம் அப்போதைய காலகட்டத்தில் நான் இல்லாளை நினைத்து பேனாவில் இருந்த மை சரியாய் எழுதுகின்றதா? என்றுடெஸ்ட் செய்ய தமிழில் ஒன்றன் பின் ஒன்றாய் எழுதிய வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள் இங்கே...
நான்
நானாக இருக்க
முக்கியகாரணம்
நீதான்......
......................................................
ஜீபூம்பா மாதிரி
நேரங்களும்
நொடிகளும்
நிமிடங்களும் செல்கின்றன...
உன்னோடு நான் பேசுகையில்....
..............................................................
எத்தனை தவறுகள் செய்தாலும்
உன்னிடம் மட்டும், நான்
உண்மையாகவே
இருக்கவிரும்புகின்றேன்.....
................................................................
முடியாது என்று தெரிந்தும்
விடாமுயற்ச்சியுடன்
என்னையும் அழகு படுத்து
முயற்ச்சிப்பவள் நீதான்....
............................................................
நீ
எனை தொட்ட
நொடிகளில்
லேடிஸ் பிங்கரின் அர்த்தம்
முழுதாய் விளங்கியது...
...........................................................
எதைகண்டு
மயங்கினாய் என்னிடம்?
லேசானநகைச்சுவையும்,
பளிர்சிரிப்பையும் தவிர,
என்னிடம் என்ன இருக்கின்றது???
.................................................................
சில நேரங்களில்
பயங்கர கோபம்வரும்
உன்மீது....
உன்னைஅழ வைக்க
எனது மனம் கணக்கு போடும்...
சாத்தியமில்லாத செயல், என்று
சிரிக்கின்றது...
எனது மனசாட்சி...
...........................................................
மாதத்தில் இரண்டு பீரை
ஒன்றாக குறைத்த சர்வாதிகாரி
நீதான்....
....................................................
நீ
நானாக இருப்பதால்,
நான் நானாக இல்லை...
.....................................................
உன்னிடம் மட்டும்
முடியாது என்று தெரிந்தும்...
முடியும் என்று ,
பந்தயம் கட்டுகின்றது
என் இளகிய மனது...
......................................................
நீ
என் மடியில்
தலைசாயும் போதுதான்..
பல
கூடுதல் பொறுப்புகள்
நினைவுக்கு வந்து தொலைக்கின்றன....
..........................................................
அரைமணிநேரம்
என்வாயில்
அரைபட்ட
சூயிங்கம் கூட
உனக்கு அல்வாதான்....
.............................................................
கண்ணெதிரே
கூடுதல் சுவை சேர்க்கபட்டது
நீ
கடித்து கொடுத்த,
சாக்லெட்டில்...
..................................................
இது கவிதை அல்ல என் உணர்வுகளின் வெளிப்பாடு... சிலதை என் மனைவி படித்து இருந்தாலும் பலது இன்னும் அவள் படித்திருக்கவில்லை...
அன்புடன்
ஜாக்கிசேகர்....
அண்ணி பக்கத்துல இல்லாததால் நினைவுகளா?
ReplyDeleteஅசத்துங்க
முடியாது என்று தெரிந்தும்
ReplyDeleteவிடாமுயற்ச்சியுடன்
என்னையும் அழகு படுத்து
முயற்ச்சிப்பவள் நீதான்....
அய்ய்ய்ய்ய் ....
மாதத்தில் இரண்டு பீரை
ReplyDeleteஒன்றாக குறைத்த சர்வாதிகாரி
நீதான்....
இப்போ எத்தனண்ணே...?
உணர்வுகளின் வெளிப்பாடு அழகான வார்ததைகளாக..
ReplyDeleteகாதல் பற்றிய உணர்வுகள் என்றுமே கவிதைகள் தான்..
I hope you are missing your wife too much. Don't worry you have waited for 10 years and now it will be nothing.
ReplyDeleteஅனைத்தும் அருமை.
ReplyDeleteஅடிக்கடி கவிதைகள் எழுத முயற்சியுங்கள்.
அனைத்தும் அருமை
ReplyDeletereally amezing.....
ReplyDeletekeep writing poems....
Woow... Nice Thoughts...
ReplyDeleteஎப்பிடி ராத்திரியோட ராத்திரியா உக்காந்து மோட்டுவளைய பாத்து யோசிச்சு எழுதினீங்களா??
ReplyDeleteஅண்ணி ஃபாரின் போனதும் கவித அருவியா கொட்டுது??
:))))))))
எத்தனை தவறுகள் செய்தாலும் உன்னிடம் மட்டும் உண்மையாக இருக்க விரும்புகிரேன். உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்.
ReplyDeleteAzhagaa irukku kavithaiyum unga kaadhalum...neram kidaitthaal en kavithaikalum konjam padichu paarunga..nanbaa
ReplyDeleteநான் ஆட்டோ ஓட்டிய காலத்திலேயே என்னை பார்த்து, எனது பின்புலமான பொருளாதாரம் போன்றவற்றை தெரிந்தே , என்னை விட அதிகம் படித்த என் மனைவி, என்னை விரும்புகின்றேன் என்று சொன்னபோது அவள் மீது எனக்கு அதீத அன்பு வந்ததில் வியப்பில்லை...
ReplyDeleteஎன் தங்ககைள் இருவர் திருமணம் முடியும் வரை பொறுத்து இருந்தவள்... ஒருவருடம் இல்லை இரண்டு வருடம் இல்லை 10 வருடம் எங்கள் காதலுக்கு நாங்கள் இருவரும் காவல் காத்தோம்.... போன வருடம் திருமணம் செய்து கொண்டோம்
the one and only love
ஜாக்கி சேகர்..
ReplyDeleteஇப்போதுதான் உங்கள் வலைப்பூவுக்குள் நுழைகிறேன். ஒரு படைப்பாளிக்கு முதல் முக்கியம் அனுபவம்தான். உங்களின் எதார்த்தமான அனுபவம் அதன் தெறிப்புக்களாக அமைந்த காதல் கவிதைகளை ரசித்தேன். வாழ்த்துக்கள். அன்புடன் உறரணி.
ஜாக்கி சேகர்..
ReplyDeleteஇப்போதுதான் உங்கள் வலைப்பூவுக்குள் நுழைகிறேன். ஒரு படைப்பாளிக்கு முதல் முக்கியம் அனுபவம்தான். உங்களின் எதார்த்தமான அனுபவம் அதன் தெறிப்புக்களாக அமைந்த காதல் கவிதைகளை ரசித்தேன். வாழ்த்துக்கள். அன்புடன் உறரணி.