சிலேட்டும் பலப்பமும்(பாகம்/9 கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்)

அம்மாவின் புடவை தலைப்பை பிடித்துக்கொண்டு சுற்றியவனை, திடும் என்று வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்ள அவனை சிறைபிடிக்கும் சிறைசாலைகளுக்கு, கல்வி கூடம் என்ற நாகரிக பெயரும் உண்டு...

என் அம்மா தன் ஒரே மகனைபெரிய ஆளாக மாற்ற வேண்டும் என்ற கனவோடு என்னை பள்ளியில் சேர்க்கும் நாளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தாள். அந்தநாளும் வந்தது...நான் கடலூர் திருப்பாதிரிபுலியூரில் உள்ள, ராமகிருஷ்னா உதவி பெரும் நடுநிலைப்பள்ளியில்தான் என் பள்ளி வாழ்க்கை ஆரம்பம் அனது...

அப்பா முதல் நாள் இரவே...எனக்கு ஒரு ஜொல்னா பையும் சிலேட்டும் அ,ஆவன்னா அட்டை புத்தகமும் , சிலேட்டு பலப்பமும் வாங்கி வந்து விட்டார்...நாளையிலிருந்து பள்ளி போக வேண்டும் என்று நினைக்கும் போது மனதில் கொஞ்சம் சந்தோஷமும் நிறைய வேதனையான மனநிலையில் நான் இருந்தேன்...

ஒரு விஜயதசமி நாள்... என் அம்மா அம்மாவோடு பள்ளிக்கு போனேன்...என் வலது கையை தலைக்கு மேல் அரைவட்டம் அடித்து காது பிடிக்க சொன்னார்கள்... செய்தேன் இத்தனைக்கும் எனக்கு 5 வயதுதான் 6 வயது என்று பொய் சொல்லி என்னை பள்ளியில் சேர்த்தார்கள்....அன்று என் கைபிடித்து பெரிய வாத்தியார் என்பவர், சரஸ்வதி சாமி படத்திற்க்கு எதிரில், வாழை இலையில் பரப்பி வைக்கபட்ட அரிசி்யில், அ, ஆ என்று கைபிடித்து எழுதி என் கல்விகண்ணை ஓப்பன் பண்ணினார்...

என் அம்மாவும் அப்பாவும் என்னை விட்டு போகும் போது எனக்கு கண்ணில் நீர் முட்டிக்கொண்டது...ஆரஞ்சு பழ சுளை போன்ற மிட்டாய்கள் அப்போது ரொம்ப பேமஸ் ,அதனை என் வகுப்பு தோழர்களுக்கும் தோழிகளுக்கும் கொடுத்து விட்டு பள்ளியில் உட்கார்ந்தேன்..

(அந்த காட்சி எங்கள் பக்கத்து ஊர் காரர் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கிய அழகி படத்தில் தனலட்சுமி கேரக்டர் பள்ளியில் சேரும் போது அந்த காட்சி அழகி படத்தில் வைத்து இருப்பார்... ஒரு பிள்ளை பள்ளியில் சேரும் போது, எங்கள் கடலூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வு அது )

டீச்சர் ரோசரின் என்பவர் எனக்கு வகுப்பு ஆசிரியை.... “அ” என்பதை மட்டும் முதல் நாள் பாடமாக, போர்டில் எழுதி போட்டு அதனை அனைவரும் எழுதினோம் ..டீச்சர் பலப்பத்துடன் வந்து எல்லோருடைய சிலேட்டிலும் ரைட் போட்டு சென்றார்....

அதன் பிறகு 3ஆம் வகுப்பு வரை சிலேட்டும் பலப்பமாகவே பள்ளி வாழ்க்கை ஓடியது...

ஒரு பாடம் எழுதி அதன் பிறகு கணக்கு பாடம் எழுத சிலேட்டை அழிக்க என்ன செய்வேண்டும் என்றால் சட்டென சிலேட்டில் (எச்சிலை) காரி துப்பி அதனை சட்டென்று துடைத்து அடுத்தபாடம் எழுதுவோம்.... என் வகுப்பில் ரவி என்பவன் படித்தான் அவன் சற்று மூளை வளர்ச்சி இல்லாதவன்... அவன் சிலேட்டில் பாடம் அழிக்க எச்சில் துப்பினான் என்றால் , நான்கு பேர் தள்ளி உட்கார்ந்து இருக்கும் என் மேல் தெரிக்கும் என்றால் பார்த்துகொள்ளுங்கள்....

உடனே ரவி உட்டேன்னு சொல்லு என்பார்கள்.. எச்சில் பட்டால் உட்டேன் என்று சொல்வது மாணவ மாணவிகள் மரபாகும்... ஒரு நாளைக்கு ரவி சிலேட்டு துடைக்க துப்பிய எச்சிலை மட்டும் சேகரித்தால் ஒரு ஆப் லிட்டர் பெப்சி பாட்டில் அளவுக்கு சேகரிக்கலாம்....
ஒரு சில நேரத்தில் பள்ளிக்கு பல் விளக்காமல் வந்து விடுவான்...ஊத்தை நாற்றத்தோடு சேர்ந்த எச்சிலை...அதோடு கூடிய ஒரு வித நாற்த்தை வகுப்பு முழுவதும் ஆக்ஸ் ஸ்பிரேயர் போல் வகுப்பு முழுதும் மனம் கமழ செய்வான்...

அதே போல் சிலேட்டில் பால் அச்சு கொட்ட கோவை கொடி இலைகளை பயன்படுத்துவோம்... அப்படி பயன் படுத்தும் போது சிலேட்டில் இலையை நசுக்கும் போது ஒரு வாசம் வரும்.. அந்த வாசத்தை இப்போது உள்ள பிள்ளைகள் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை....

இரண்டாவது வந்ததும் கொஞ்சம் நாகரிகம் கற்று 1431 பயோரியா டப்பாக்களில் கோவை இலைகளை பறித்து ஸ்டாக் வைத்து சிலேட்டில் எச்சி துப்பி துடைப்பதற்க்கு பதில் பயன்படு்த்துவோம்... இதில் பிரச்சனை என்வென்றால் 4 நாளைக்கு முன் பறித்த இலை சின்ன டப்பியில் காற்று போகாமல் புழுங்கி ஒரு வித அழுகின நாற்றத்துடன் யூஸ் செய்வோம்.... அப்போதும் கூட ரவி சிலேட்டை எச்சில் துப்பிதான் துடைப்பான்....

பலப்பம் போல் டேஸ்ட்டான ஒரு உணவு பொருள் உலகத்தில் வேறு ஏங்காவது இருக்கின்றதா என்று தெரியவில்லை... பொதுவாக மதியம் 3 மணிக்கு மேல் சற்று வெறுப்பாக இருக்கும் நேரத்தில் பலப்பம் சாப்பிடுவோம்...நல்ல டேஸ்ட்...

எங்கள் பள்ளி ஒர இந்து பள்ளி... பெரிய வாத்தியார் என்ற ஜயர் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். அதனால் இந்து பிள்ளைகள் அத்தனை பேரும் நெற்றியி்ல் விபூதி வைக்க வேண்டும்... அப்படி வைக்காதவர்கள் தலையில் ஒரு நறுக் கொட்டு கிடைக்கும். அதற்க்கு பயந்து நாங்கள் வாத்தியாரு வருகிறார் என்றால் பலபத்தை தரையில் தேய்த்து அதனை எடுத்து நெற்றியில் விபூதி போல் பூசிக்கொள்வோம்...

40 பிள்ளைகளும் தலமை ஆசிரியர் வகுப்புக்கு வரும் போது, எழுந்த வணக்கம் சொல்ல எழுந்தால், தரையில் பயத்தில அவசரத்தில், பலப்பத்தை விபூதிக்காக தரையில் தேய்த்த சுவடுகள் எல்லோரும் எழுந்து நிற்க்கும் போது தரையை பார்த்தால் அந்த தேய்த்த சுவடுக்ள் ஒரு மார்டன் ஆர்ட் போல் இருக்கும்....

கல் சிலேட்டகள்தான் என் பேவரெட் ஆனால்,அந்த சிலேட்டுகள் கைதவறினால் கோவிந்தாதான்...அதன் பிறகு தகரத்தில் சிலேட்டுகள் வந்தன ... ஆனால் அதில் கோவை இலையை வைத்து அழி்த்த பின் தகர சிலேட்டுகளில் நன்றாக எழுத வராது....கல் சிலேட்டுகள் போல் பால் அச்சி கொட்டாது...

பலப்பத்தில் ட கருப்பு கலரில் குச்சி போல் சில பலப்பங்கள் வந்தன இருந்தாலும் பால் அச்சி கொட்டாத காரணத்தால் அவைகள் சடுதியில் மறைந்தன....சிலேட்டில் பலப்பத்தில் எழுத பழகிய கை விரல்கள் இப்போது கம்யூட்டர் கீ போர்டுகளில் தமிழ்வார்த்தை உருவாக்க நாட்டியம் ஆடுகின்றன... காலம்தான் எவ்வளவு விரைவாய் மாற்றங்களை விரைந்து அறிமுகபடுத்துகின்றது...


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

25 comments:

  1. உங்களுக்கு வயசாயிடிச்சி என்பது கண்பர்ம் ஆகிவிட்டது... !!!!

    பின்னே.... அசத்திட்டீங்க... கண்கலங்கிடுச்சி... சூப்பர்ன்னு எத்தனை பதிவுக்கு தான் பின்னூட்டம் போட்றது....

    ReplyDelete
  2. உங்களுக்கு வயசாயிடிச்சி என்பது கண்பர்ம் ஆகிவிட்டது... !!!!

    பின்னே.... அசத்திட்டீங்க... கண்கலங்கிடுச்சி... சூப்பர்ன்னு எத்தனை பதிவுக்கு தான் பின்னூட்டம் போட்றது....

    ReplyDelete
  3. அது ஒரு அழகிய நிலாக் காலம்
    கனவினில் தினம் தினம் உலா போகும்

    ReplyDelete
  4. 1வது படிச்ச அனுபவத்தை கூட ஞாபகம் வச்சியிருக்கீங்க?
    எனக்கு அது எல்லாம் மறந்துபோச்சி.. எதோ இப்ப நீங்க சொன்னத்து அப்புறம் கொஞ்சம், கொஞ்சம் ஞாபகம் வருது! நன்றி தலைவா..

    ReplyDelete
  5. ஓரே பீலிங்க் பதிவா போட்டு தாக்குறீங்களே?

    ReplyDelete
  6. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவன்
    உலவு.காம்

    ReplyDelete
  7. இதைப் படிக்கும் போதே;
    ஊர்ச் சின்னப் பள்ளிக்கூடம் ஒரு தடவை சென்று வந்துவிட்டேன்.

    ReplyDelete
  8. எனக்கு கடல் குச்சி அப்படின்னு ஒரு குச்சி வச்சு எழுதின ஞாபகம். ஒரு வித கடல் வாழ் உயிரினம். பல்பம் தான் ரெகுலர் அயிடம். இது ஸ்பெஷல் அயிட்டம்

    // ஆரஞ்சு பழ சுளை போன்ற மிட்டாய்கள் அப்போது ரொம்ப பேமஸ் //

    எங்க ஊருலயும் கூட அது பேமசு. (பைசாவுக்கு முட்டாயி).

    //ஒரு பிள்ளை பள்ளியில் சேரும் போது, எங்கள் கடலூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வு அது //

    நான் படிச்ச பள்ளியிலும் இது உண்டு.

    பசுமையான நினைவுகள். தேங்க்ஸ் தல

    ReplyDelete
  9. சிலேட்டில் பலப்பத்தில் எழுத பழகிய கை விரல்கள் இப்போது கம்யூட்டர் கீ போர்டுகளில் தமிழ்வார்த்தை உருவாக்க நாட்டியம் ஆடுகின்றன... காலம்தான் எவ்வளவு விரைவாய் மாற்றங்களை விரைந்து அறிமுகபடுத்துகின்றது...]]


    உண்மை தான் நண்பரே

    ReplyDelete
  10. தங்கமணி வீட்ல இல்லாத்துனால ஒரே பீலிங்க்ஸ் ஆப் இந்தியா தானா?.........

    ReplyDelete
  11. யப்பா ஜாக்கி
    விசுவின் பேச்சரங்கம் மாதிரி ஒரே பீலிங்க்ஸ் பதிவாப் போட்டுத் தாக்கரியே
    ஏதாவது காமடி பதிவு போடுப்பா ஒரு
    சேஞ்சுக்கு
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  12. சிலேட்டமும்,பலப்பமும் காலஓட்டத்தில் காணாமல் போனாலும் மனதின் ஓரத்தில் என்றும் மறுக்க முடியாத இடம் கொண்டவை.

    ReplyDelete
  13. நன்றி யோ வாய்ஸ்

    ReplyDelete
  14. உங்களுக்கு வயசாயிடிச்சி என்பது கண்பர்ம் ஆகிவிட்டது... !!!!

    பின்னே.... அசத்திட்டீங்க... கண்கலங்கிடுச்சி... சூப்பர்ன்னு எத்தனை பதிவுக்கு தான் பின்னூட்டம் போட்றது.//
    நன்றி ராஜன் ,... இத பாராட்டா அல்லது நக்கலா???

    ReplyDelete
  15. அது ஒரு அழகிய நிலாக் காலம்
    கனவினில் தினம் தினம் உலா போகும்//

    உண்மைதான் பிளாக் பாண்டி

    ReplyDelete
  16. 1வது படிச்ச அனுபவத்தை கூட ஞாபகம் வச்சியிருக்கீங்க?
    எனக்கு அது எல்லாம் மறந்துபோச்சி.. எதோ இப்ப நீங்க சொன்னத்து அப்புறம் கொஞ்சம், கொஞ்சம் ஞாபகம் வருது! நன்றி தலைவா..//
    நன்றி கலை என்ன செய்வது எப்போதுமே கூர்மையாக கவனித்து பழக்கமாகி விட்டது

    ReplyDelete
  17. ஓரே பீலிங்க் பதிவா போட்டு தாக்குறீங்களே?//
    பிலீங் இல்ல சூரியன் மறந்து போனயை நினைவு படு்த்தும் பதிவு

    ReplyDelete
  18. இதைப் படிக்கும் போதே;
    ஊர்ச் சின்னப் பள்ளிக்கூடம் ஒரு தடவை சென்று வந்துவிட்டேன்.//
    இந்த நினைப்பே இந்த பதிவுக்கான வெற்றி என்பேன்

    ReplyDelete
  19. எனக்கு கடல் குச்சி அப்படின்னு ஒரு குச்சி வச்சு எழுதின ஞாபகம். ஒரு வித கடல் வாழ் உயிரினம். பல்பம் தான் ரெகுலர் அயிடம். இது ஸ்பெஷல் அயிட்டம்

    // ஆரஞ்சு பழ சுளை போன்ற மிட்டாய்கள் அப்போது ரொம்ப பேமஸ் //

    எங்க ஊருலயும் கூட அது பேமசு. (பைசாவுக்கு முட்டாயி).

    //ஒரு பிள்ளை பள்ளியில் சேரும் போது, எங்கள் கடலூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வு அது //

    நான் படிச்ச பள்ளியிலும் இது உண்டு.

    பசுமையான நினைவுகள். தேங்க்ஸ் தல//

    உண்மைதான் நாஞசில் நாதம் மிக்க நன்றி தொடர் பின்னுட்டத்தி்ற்க்கு

    ReplyDelete
  20. சிலேட்டில் பலப்பத்தில் எழுத பழகிய கை விரல்கள் இப்போது கம்யூட்டர் கீ போர்டுகளில் தமிழ்வார்த்தை உருவாக்க நாட்டியம் ஆடுகின்றன... காலம்தான் எவ்வளவு விரைவாய் மாற்றங்களை விரைந்து அறிமுகபடுத்துகின்றது...]]


    உண்மை தான் நண்பரே//

    நன்றி ஜமால்...

    ReplyDelete
  21. தங்கமணி வீட்ல இல்லாத்துனால ஒரே பீலிங்க்ஸ் ஆப் இந்தியா தானா?.........//
    அடப்படி எல்லாம் இல்லை நேசன்

    ReplyDelete
  22. யப்பா ஜாக்கி
    விசுவின் பேச்சரங்கம் மாதிரி ஒரே பீலிங்க்ஸ் பதிவாப் போட்டுத் தாக்கரியே
    ஏதாவது காமடி பதிவு போடுப்பா ஒரு
    சேஞ்சுக்கு
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்//

    நன்றி ஸ்ரீராம் இது தொடர்ந்து எழுதுறதுதான்

    ReplyDelete
  23. சிலேட்டமும்,பலப்பமும் காலஓட்டத்தில் காணாமல் போனாலும் மனதின் ஓரத்தில் என்றும் மறுக்க முடியாத இடம் கொண்டவை.//

    ஆனால் இப்போது உள்ள பல பிள்ளைகள் அந்த வாழ்வை மிஸ் செய்கின்றன..

    ReplyDelete
  24. /

    பலப்பம் போல் டேஸ்ட்டான ஒரு உணவு பொருள் உலகத்தில் வேறு ஏங்காவது இருக்கின்றதா என்று தெரியவில்லை... பொதுவாக மதியம் 3 மணிக்கு மேல் சற்று வெறுப்பாக இருக்கும் நேரத்தில் பலப்பம் சாப்பிடுவோம்...நல்ல டேஸ்ட்...
    /

    பலப்பம் தின்ன கோஸ்டியா நீங்க???
    :))))))))))))

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner