(RAIN MAN) அனைவரும் பார்த்தே தீர வேண்டிய படம்


சில படங்களை சட்டென புறந்தள்ளி விடுவோம் .. அந்த வகையில் இந்த படத்தின் டிவிடி என் கையில் கிடைத்த போது எல்லாம் நான் இந்த படத்தினை பார்க்க ஆர்வம் கொள்ள வில்லை...

சில பதிவுகளுக்கு முன் யாரோ ஒரு நண்பர் இந்த படத்தை பார்க்க சொல்லி எழுதி இருந்தார்...சரி என்னதான் இருக்க போகின்றது என்று ரொம்ப அலட்சியமாக பார்க்க ஆரம்பித்த படம் இது... சட்டென மனதில் நீர் திவலைகளுடன் ஒட்டிக்கொண்டது...

பொதுவாய் நான் ஆக்ஷன் படத்தின் காதலன் இத போன்ற மென் சோக படங்கள் பார்க்க நல்ல மூட் வேண்டும்... அந்த மூட் இருந்தால் மட்டுமே இது போன்ற படங்களை நான் பார்பேன்....

காலயில் பின்னுட்டம் இட்ட நண்பர் மு இரா அவர்கள் எப்போதும் கொலை கொள்ளை படங்கள் பற்றி எழுதுகின்றீர்கள் மனதுக்கு இதமாய் படஙக்ளை அறிமுகபடுத்த கூடாதா? என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்... அவருக்காக இந்த பதிவும் படமும்.....

நிறைய அற்புதமான நெஞ்சை நெகிழ வைத்த படங்களில் இந்த படமும் ஒன்று என்று சொல்லாம்....
ரெயின் மேன் படத்தின் கதை இதுததான்....
Charlie Babbitt (Cruise) லாஸ் ஏன்ஜல்சில் கார் டீலராக வாழ்க்கை நடத்துபவன்... கொஞ்சம் கடன் இருந்தாலும் அவன் அவள் காதலியுடன் பால் ம் எனும் இடத்துக்கு விக்கெண்டுக்கு போகின்றான் போகும் போது அப்பா மண்டையை போட்டுவிட்டார் என்ற தகவல் கிடைக்க சட்டென டிரப்பை கேன்சல் செய்து விட்டு ஓஹியோவில் இருக்கும் அப்பாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்கின்றான்.....

சொத்து வரும் என்று வக்கிலை பார்த்தால் அவர் அவனுக்கு ஒரு பைசாவும் அப்பா எழுதி வைக்கவில்லை என்று எழுதியதை படித்து காட்ட இடி விழுந்தது போல் இருக்கின்றான்.. சரி அதுவாவது பராவாயில்லை... 3 மில்லியன் டாலர் பணத்தை மென்டல் ஆஸ் பத்திரிக்கு வேறு தானமாக எழுதி வைக்க.. ஏன் அப்படி எழுதி வைத்தார்? என்று ஆராய அந்த மருத்துவமைனைக்கு போய் விசாரிக்கும் போதுதான் அவனுக்கு ஒரு அண்ணன்Raymond (Hoffman) இருக்கின்றான் என்ற தகவல் தெரிகின்றது....

சற்றே மன நலம் பிழன்றவனிடம் 3 மில்லியன் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவனை லாஸ் ஏன்ஞசல்சில் உள்ள வக்கிலிடம் ஒப்பினியன் கேட்க அவனை அழைத்து செல்கின்றான்... அவனுக்கு எளிதில் எதையும் கிரகிக்கும் தன்மை அவனுக்கு இருக்கின்றது....ஒரு உதாரணத்துக்கு டெலி போன் டைரக்டரியில் உள்ள எல்லா பேர்களும் நம்பர்களும் அவனுக்கு நினைவில் இருக்கும்......

அப்படி பட்டவனை ஒரு கட்டத்தில் அவனை லாஸ் வேகாஸ் சூதாட்ட விடுதி்யில் போய் அவன் ஞாபக சக்தியை பயண்படுத்தி நிறைய பணம் சம்பாதித்து கடனை அடைத்து.... முதலில் அவன் அண்ணனை வெறுத்தாலும், பின்பு அவன் அண்ணன்மேல் காதல் கொள்கின்றான்...
ஆனால் டிரஸ்ட்டில் வந்து அண்ணனை வைத்து நீ சம்பாதிக்கின்றாய் என்று சொல்லி சட்டபடி அவனை அழைத்து கொண்டு போக முயல அவன் அண்ணனை இழந்தான...? பாசம் ஜெயித்ததா? என்பதை ரொம்பவும் நெகி்ழ்ச்சியாக சொல்லி இருக்கின்றார்கள்....படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

மேலே உள்ளபடத்தின் இயக்குனர் Barry Levinson இதற்க்கு முன் பல படங்களை எடுத்தாலும் டாய்ஸ் மற்றும் டிஸ்குளோசர் போன்ற படங்கள் எடுத்தவர்... இந்த படம் இவர் வாழ்வின் பெஸ்ட் என்று சொல்ல முடியும்...


இந்த படத்தின் பெரிய பலம் மென்மையான இயக்கம் என்றால் அது மிகையாகாது மனதில் ஓடிய காட்சிகளை செல்லுலாய்டில் வடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலை அல்ல... அதை இயக்குனர் சிறப்பாக செய்து இருக்கின்றார்


படத்தில் நடிப்பில் பின்னி பெடலெடுத்து இருப்பவர் Dustin Hoffman என்றால் மிகை இல்லை... அந்த கேரக்டர் பார்த்தால் சிற்ப்பிக்குள் முத்து கமல் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை...

அதே போல் படத்தில் முதுகெலும்பாக இருப்பது கேமராமேன்John Seale தொழில் நுட்ப அற்புதம்.... ஒரு சாதாரண சாலையையும் அதில் டாமும் ஆல்ப் மேனும் நடக்கும் காட்சியை கோணங்களில் காட்சி படுத்திய விதம் அற்புதம் அதே போல் காரில் ஓஹீயோவில் இருந்தது லாஸ் வேகாஸ் போகும் வழி காட்சிகள் அற்புதம் நீங்கள் பார்த்தால்தான் நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்கு புரியும்....படத்தில் இந்த படத்தின் முதுகெலும்பு கேமரா மேன் John Seale


லிப்டில் தம்பியின் காதலி மனநலம் குன்றிய அண்ணனை உதட்டில் முத்தமிட்டு எப்படி இருக்கின்றது என்று கேட்க ஈரமாக இருக்கின்றது என்று சொல்லும் போது.... திரைக்கதையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை


அதே போல் இன்னும் இரண்டு வாரத்டதில் உன்னை சந்திப்பேன் என்று சொல்லும் போது அதற்க்கு எத்தனை நாட்கள் , எத்தனை மணி துளிகள்,எத்தனை நிமிடம் , எத்தனை நொடி என்பதை நொல்லும் காட்சியில் கண்ணில் நீர் வரும் காட்சி....

அதே போல் சட்டப்டி அவனை அனுப்புவதா ? என்று டிஸ்கஷன் செய்யும் போது டாம், ஹால்மேனிடம் பக்கத்தில் வந்து பேசும் போது மென்மையாக தலைசாய அப்போது கேமரா மெல்ல ஜீம் இன் ஆகும் காட்சி அற்புதம்....

படத்தின் முதலில் டாமை சுயநலக்காரன் என்று வெறுத்தாலும் பின்பு அவரை ரசிக்க முடிகின்றது...

பெற்ற விருதுகள்....
Rain Man won Academy Awards for Best Picture, Best Actor in a Leading Role (Dustin Hoffman), Best Director, and Best Writing, Original Screenplay. It was nominated for Best Art Direction-Set Decoration, Best Cinematography (John Seale), Best Film Editing, and Best Music, Original Score.

The film also won a People's Choice Award as the "Favorite Dramatic Motion Picture."

The film also won the Golden Bear at the 1989 Berlin International Film Festival. , Rain Man is the only film to have won both the Golden Bear and the Academy Award for Best Picture.


படத்தின் டிரைலர்...


படக்குழவினர் விபரம்...

Directed by Barry Levinson
Produced by Mark Johnson
Written by Screenplay:
Barry Morrow
Ronald Bass
Story:
Barry Morrow
Starring Dustin Hoffman
Tom Cruise
Valeria Golino
Music by Hans Zimmer
Cinematography John Seale
Editing by Stu Linder
Distributed by United Artists
Release date(s) December 16, 1988 (1988-12-16)
Running time 133 minutes
Country United States
Language English
Budget $25 million
Gross revenue $172 million


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

15 comments:

 1. வணக்கம் ஜாக்கி
  டாமை படம் என்பதனால் ஆக்ஷன் படமாக இருக்கும் என நினைத்து இந்த டிவிடியை வாங்கினேன்.

  பின்பு படம் பார்த பின்புதான் தெரிந்தது இது பாசபினைப்பை மிக சிறப்பாக சொன்ன படம் என்று.

  நன்றி ஜாக்கி

  ReplyDelete
 2. கிட்டத்தட்ட இதைத் தழுவிதான் சுபாஷ் காய் யுவராஜா படத்தை எடுத்திருப்பார்.
  ஞாபக சக்திக்கு பதிலாக இசையில் கரை கண்ட அணில் கபூர் தம்பி சல்மான் கான் என
  ஒருமுறை சுஜாதா கற்றதும் பெற்றதுமில் Grand master G.S. Pradeep பற்றி எழுதும் போது இப்படம் பற்றிக் குறிப்பிட்டதாக ஞாபகம்.

  ReplyDelete
 3. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

  இவன்
  உலவு.காம்

  ReplyDelete
 4. Dustin Hoffman ஒரு நல்ல நடிகன். அவரைப் பற்றி எதுவும் சொல்லத் தேவை இல்லை. Action hero Tom Cruise உம் ஒவ்வொரு கட்டத்திலும் தனது உணர்வுகளை நன்றாகவே வெளிப்படுத்தி இருப்பார். சுயநலம், குழப்பம், கோபம், ஆதங்கம், இறுதியில் பாசத்துடன் நெகிழ்வு என்று.

  கடைசியில் தம்பியை உள்வாங்கி Kmart sucks சொல்வது, சிக்னல் விழுந்ததும் நடு ரோட்டில் நிற்பது, தம்பியின் காதலியுடன் நடனம் என்று பாசத்தின் நெகிழ்வினிடையே வரும் நகைச்சுவைகளும் சுவாரஸ்யமானவை.

  ReplyDelete
 5. இந்த படம் பார்த்திருக்கிறேன்...அருமையான படம்

  ReplyDelete
 6. prusuit of happyness பிறகு உங்கள் விமர்சனத்தில் ஒரு மென்மையான படம்... நிச்சயம் பார்க்கணும்...

  ReplyDelete
 7. //dustin hoffman "ரெயின் மேன்" (rain man) படம் பார்த்திருக்கிறீர்களா? அட்டகாசமான நடிப்பு.. அடுத்து அந்த படத்தை பற்றி எழுதுங்கள். கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய படம்.//

  kramer vs. kramer படவிமர்சனத்தின் போது நான்தான் மேலே சொன்னவாறு பின்னூட்டம் இட்டேன்! ஞாபகம் வைத்து படம் பார்த்து, விமர்சனம் எழுதியமைக்கு... ஒரு ஷொட்டு!

  ReplyDelete
 8. படம் இன்னும் பார்க்கலை.

  உங்கள் விமர்சணம் மென்மையாக இருக்கின்றது என சொல்ல வந்தேன்

  கிஷோர் சொல்லிவிட்டார்.

  ReplyDelete
 9. எல்லோரும் நன்று எனக்கூறிவிட்டீர்கள் பார்த்திட வேண்டியதுதான்.

  ReplyDelete
 10. அருமையான விமர்சனம் சார்.

  ReplyDelete
 11. /
  மாதேவி said...

  எல்லோரும் நன்று எனக்கூறிவிட்டீர்கள் பார்த்திட வேண்டியதுதான்.
  /

  அதே அதே!

  ReplyDelete
 12. நல்லதொரு விமர்சனம் ஜாக்கி.

  ReplyDelete
 13. நன்றி, நண்பரே எனக்காக இந்த பதிவை இட்டதற்கு, Rain man நான் இன்னும் பார்க்கல... இப்பதான் பதிவிறக்கம் (டவுன்லோட்) கொடுத்துள்ளேன்.
  இது போல சிறப்பான பதிவுகள் இட வாழ்த்துக்கள்.
  குறிப்பு: இந்த படத்தினை Torrent பதிவிறக்கம் செய்ய விரும்புவோர்க்காக.....
  இணைப்பு: http://isohunt.com/torrent_details/30182413/rain+man?tab=summary
  மேலும் சந்தேகங்களுக்கு.... Torrent-ல் பதிவிறக்கம் செய்வது எப்படி?
  http://tamilsoftwaredownload.blogspot.com/2009/09/torrent.html

  ReplyDelete
 14. ஜாக்கி - ரைன் மேன் பட ஹீரோவுக்கு உள்ள பிராப்ளத்தைப் பற்றி நான் எழுதியது

  http://pinnokki.blogspot.com/2009/09/blog-post_04.html

  படித்து பாருங்கள். இந்த பிராப்ளம் உள்ளவர்களை நான் பார்த்திருக்கிறேன். அதனால் அவரின் நடிப்பை பார்த்து பிரம்மிப்பை ஏற்படுத்தியது. அவ்வளவு அருமையான நடிப்பு.

  ReplyDelete
 15. hello jackisir,
  thanks for your review
  i thing malayalam movie ALEXANDER THE GREAT(2010)
  COPY FROM RAIN MAN
  mmm..... malayalam movie um copy adikiranka doiiiiiiiiiii

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner