வீட்டில் பொய் சொல்லி அதற்க்கு சரியான பதிலை தேர்ந்த எடுத்து திரும்பவும் பொய் பேசி , அதனை மெயின்டெயின் பண்ணுவது பெரிய கலை.... அது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை...
நான் பொய் சொன்ன பத்தாவது நிமிடம் என் மனைவி என்னிடம் மதர்பிரமிஸ் என்று கையை நீட்டினால்... அவ்வளவுதான் சட்டென உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்... எனக்கு அது அதிகம் கைவராத கலை...
உளவாளியாக அரசாங்கத்திடம் வேலை செய்து சம்பாதிக்கும் ஒருவன் வீட்டில் மனைவி மற்றும் தனது ஒரே மகளிடம் கம்யுட்டர் சேல்ஸமேன் என்றுபொய் சொல்லி வாழும் ஒரு அமெரிக்க அரசாங்கத்து உளவாளியின் கதை...
ட்ரூலைஸ் படத்தின் கதை இதுதான்...
அமெரிக்க அரசாங்கத்தின் உளவாளி Harry Tasker( அர்னால்டு) தனது குடும்பத்திடம் தான் ஒரு கம்யுட்டர் பிசினஸ்மேன் என்ற போர்வையில் வாழ்க்கை நடத்துகின்றான்...அவனது மனைவி Helen (ஜேமீ லீ) மற்றும் அவனது ஒரே மகள் டீனாவுக்கு அவன் ரகசிய உளவாளி என்பது தெரியாது... அனால் அவன் மனைவி ஹெலனுக்கு எதாவது சாதிக்க வேண்டும் முக்கியமாக உளவாளியாக வேலை செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டவள்...
தீவரவாதிகளின் தலைவனாக Salim Abu Aziz நியுக்ளியர் பாமோடு அமெரிக்காவை துவம்சம் செய்ய நியுக்ளியர் பாமை கடத்துகின்றான்.... அதில் ஒன்று அமெரிக்காவின் உள்ளேயும் சாமார்த்தியமாக எடுத்து கொ்ண்டு வந்து விடுகின்றான்... அதே நேரத்தில் உளவாளியின் மகளையும் பினைக்கைதியாக பிடித்து வைத்துக்கொள்கின்றான்..எத்தனை பேர் இறப்பார்கள்... எது எதற்க்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும் என்று லிஸ்ட் போடுகின்றான்... அவன் எண்ணம் பலித்ததா? அதுவரை உளவாளி என்ன செய்து கொண்டு இருந்தார்? உளவாளி தனது மகளை எப்படி மீட்டார் என்பதை காமெடி கலந்து சொல்லி இருக்கின்றார்கள்...
படத்தின் சுவராஸ்யங்களில் சில...
இந்த படம் டைட்டானிக், அபைஸ் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 19994ல் வெளி வந்த படம் இது...
இந்த படத்தை நான் பாண்டி பாலாஜியில் பார்த்தேன் அப்போது அர்னால்டு மூன்று வண்ணங்களில் ராஜா என்பவ்ர் வரைந்து வைத்த ஓவியம் ரசிகர்கள் பலரது கவனத்தை பெற்றது....
இந்த படம் ஒரு பக்கா ஆக்ஷன் மற்றும் காமெடி படம்... அதுவும் அர்னால்டு தனது இறுக்கமான முகத்தை வைத்துக்கொண்டு காமெடி செய்ய முயற்ச்சித்து இருப்பார்... இருந்தாலும் அது பல இடங்களில் ரசிக்க தக்கதாகவே இருக்கும்...
இந்த படத்தில் திவிரவாதிகளின் தலைவனை குதிரையில் போக்கு வரத்து மிகுந்த சாலையில் துரத்திக்கொண்டு போவதும்... அவன் பைக்கில் ஒரு ஹோட்டலில் மேல் தளத்துக்கு செல்ல அர்னால்டும் குதிரையுடன் மேல்தளத்துக்கு செல்வது நல்ல ஆக்ஷன் காட்சி....
அர்னால்டு ஓட்டல் அறையில் இருட்டில் அமர்ந்து கொண்டு.. தனது மனைவி்க்கு தன்னை வெளிபடுத்திக்கொள்ளாமல் குரல் மாற்றி பேசி அவள் உடையை ஒவ்வொன்றாக களைய சொல்வது நல்ல காமெடி காட்சி மற்றும் சூடேறும் காட்சியும் கூட...
அர்னால்டின் மனவியாக ஜேமீ லீ நடித்து இருக்கின்றார்... பார்ப்பதற்க்கு வயது முதிர்ந்தவர் போல இருந்தாலும் உடை களைந்து அவர் போடும் கெட்ட ஆட்டம் இருக்கின்றதே... எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ? என்ற பழ மொழியை நிரூபித்த காட்சி அது...
இந்த படம் 1991ல் வெளிவந்த ஒரு பிரெஞ் படத்தின் ரீமேக் இந்த படம்....
படத்தின் முதல் காட்சியில் அர்னால்டு அறிமுகமாகும் காட்சி அந்த பில்டிங் ஏரி போன்றவை எல்லாம் கிராபிக்ஸ் என்று படம் வெளி வந்து போது சொன்ன போது ஆச்சர்யத்தில் வாய் பிளந்து பார்த்தபடம்...
படத்தில் கடலுக்கு நடுவே போகும் பாலத்தில் நடக்கும் ஆக்ஷன் காட்சி அருமை அதே காட்சியை தமிழில் கேப்டன் விஜயகாந்த் செய்து இருப்பார்... படம் பெயர் நினைவில்லை...
டைட்டானிக் படத்தின் ஒளிப்பதிவாளர் Russell Carpenterதான் இந்த படத்துக்கு ஒளிபதிவாளர்...இவர் டைட்டானிக் படத்திற்க்காக பெஸ்ட் சினிமோட்டோகிராபர் ஆஸ்கார் அவார்டு பெற்றவர்...
அதே போல் பெரிய சைஸ் ஜெட் விமானத்தை முதன் முதலாக இந்த படத்தில்தான் நான் பார்த்தேன்...
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்....
Directed by James Cameron
Produced by James Cameron
Stephanie Austin
Written by Claude Zidi
Simon Michaël
Didier Kaminka
James Cameron
Starring Arnold Schwarzenegger
Jamie Lee Curtis
Tom Arnold
Bill Paxton
Art Malik
Tia Carrere
Eliza Dushku
Music by Brad Fiedel
Cinematography Russell Carpenter
Editing by Conrad Buff
Mark Goldblatt
Richard A. Harris
Distributed by - USA/France -
20th Century Fox
Lightstorm Entertainment
- Non-USA/France -
Universal Pictures
Release date(s) July 15, 1994
Running time 141 min.
Country United States
Language English
Arabic
French
German
Budget $110,000,000 (estimated)
Gross revenue $378,882,411 (worldwide
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
really Good movie for Arnold.
ReplyDeletereally Good movie for Arnold.
ReplyDeleteநன்றி விஜய் ஆனந்
ReplyDeleteஸ்டார் மூவிஸ்ல ஒரு 5 தடவாயாச்சும் பார்த்திருப்பேன் இந்த படத்த.. நீங்க சொன்னது மாதிரி பாலத்தில் நடக்கும் சண்டை சூப்பர்,, பிரமாதம்
ReplyDeleteI too have seen this movie.
ReplyDeleteஅந்த குதிரை சேஸ் சீண் ரொம்ப நல்லா இருக்கும்.... அர்ணால்ட்டுக்கு காமெடி பண்ண தெரியலணு சொல்ல முடியாது.... Kindergarten Cop பாருங்க தெரியும்... தலைவா... திரும்பவும் கொலை படம்தானா? அனிமேஷனுக்கு வாங்க....
ReplyDelete/
ReplyDeleteஇயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் '19994'ல் வெளி வந்த படம் இது...
/
அண்ணாத்த டைப்பிங் மிஸ்டேக் சரி பண்ணிடுங்க.
பட அறிமுகம் சூப்பர்.