வலை பதிவர்கள் சந்திப்பும், ஸ்வீட் சிக்ஸ்டின் திரைப்படமும்....
முதலிலேயே பதிவர் பைத்தியக்காரன், இன்று திரையிடுவதாக இருந்தஆவணப்படம்.... தவிர்க்க இயலாத காரணத்தால் திரையிட முடியவில்லை என்றும் அதனால் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின்... நாடகங்கள் குறித்தான ஆவணபடம் திரையிடப்படும் என்ற அறிவித்தார்......
ஆவணபடங்களை தூக்கி நிறுத்துவது பொதுவாக ஒளிபதிவுதான்... அது இந்த படத்தில் ரொம்ப நிறைவாக செய்து இருந்தார்கள்...அந்த ஒளிப்பதிவாளர் பெயர் தெரியவில்லை.. நண்பர் பைத்தியக்காரனிடம் செல் நம்பர் கேட்டு இருக்கின்றேன்... கொடுத்ததும் அந்த கலைஞனை பாராட்டி வைப்போம்.....
சிங்கை கோவியாரை (கோவி.கண்ணன்)நான் இன்றுதான் சந்தித்தேன்... சிங்கையில் இருந்து வந்து தலையை காட்டி விட்டு செல்வதாக சொன்னார்.... சிங்கையில் இருந்து வெங்காய வெடி போன்ற சாக்லெட்டுகளை அனைவருக்கும் கொடுத்து மகி்ழ்ந்தார்....
பைத்தியக்காரன் வந்திருந்த பதிவர்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தார்.... குடிக்கற தண்ணிதான் சாமி....
ஸ்வீட் ஸிக்ஸ்டீன் படத்தை பற்றி சொல்ல எதுவும் இல்லை....ஒரு படம் பல்வேறு மனநிலையுடன் வரும் பார்வையாளனை பத்தாவது நிமிடத்தில் அசத்த வேண்டும்... இந்த படம் ஒரு மணி நேரம் ஆகியும் யாரையும் அசத்த இயலாத காரணத்தால் ... எல்லோரும் கிழக்கு பதிப்பக மொட்டைமாடியில் சொந்த கதை பேசிக்கொண்டு இருந்தனர்....
படம் மட்டும் நன்றாக இருந்து இருந்தால் இன்னும் இந்த சந்திப்பு சிறப்பாய் இருந்து இருக்கும்... படத்தில் fuck என்ற வார்த்தையை படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் வரிக்கு வரி பேசினார்கள்... படத்தில் பேசாத ஒரே ஜீவன் படத்தில் நடித்த நாய்கள்தான்... திரைக்கதைக்காக இந்த படத்திற்க்கு விருது கிடைத்தாக சொன்னார்கள்... விருது குழுவினரை தேடி வருகின்றேன்...
நான் பைத்தியக்காரனிடம் இந்த பிரச்சனை குறித்து வெளிப்படையாகவே கருத்து சொல்லிவிட்டு வந்தேன்....
முக்கியமாக பாராட்டபட வேண்டிய விஷயம் கிழக்கு பதிப்பக மொட்டை மாடி டாக்கிஸ்.... மிக அற்புதமாக ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தார்கள்... இடத்தையும் ஏற்பாடு செய்த கிழக்கு பதிப்பக நிர்வாகத்துக்கும். பத்ரி சாருக்கும் சென்னை பதிவர் சார்பாய் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்....
மற்றபடி படம் முடிந்து கிழக்கு பதிப்பக வாசலில் ஒரு கூட்டம் போட்டோம்... அதில் பதிபேர் கழண்டு கொண்டார்கள்... அதன் பிறகு டீக்கடை போய் டீ சாப்பிட்டுவிட்டு அதன் பிறகு சின்ன கூட்டம் போட்டு இரவு பத்து மணிவாக்கில் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
பதிவர் வட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
:-)
ReplyDeleteசுடச்சுட புகைப்படத்துடன் பதிவு போட்டாச்சா.
விருது பெறுகின்ற உலகத்திரைப்படம் எல்லாமே எல்லோருக்கும் பிடித்தே தீரணுங்கற கட்டாயமெல்லாம் கிடையாது ஜாக்கிஜி!
இனிய சந்திப்புகள் தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteம் !!!
ReplyDeleteஆனாலும் இவ்வளவு சூடு கூடாது..பதிவைச் சோல்றேன்..
ReplyDeleteஆணாலும் இத்தனை சூடு கூடாது! நான் சிண்டி கிராபோர்டை சொன்னேன்:-))))
ReplyDelete//பைத்தியக்காரன் வந்திருந்த பதிவர்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தார்.... குடிக்கற தண்ணிதான் சாமி....
ReplyDelete//
:))
:) :)
ReplyDeleteஇதற்கு முன்னர் திரையிடப்பட்ட படங்களுடன் ஒன்றிப்போக முடிந்தது போல் இந்த ப்டத்துடன் ஒன்றிப்போக முடியவில்லை
நான் கோளாறு என்னிடம் என்று தான் நினைத்தேன்
இப்பத்தான் தெரியுது விசயம்
:) :) :)
ஜாக்கி,
ReplyDeleteஇவ்வளவு சூடாவா ?
நன்றி + வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
என் படத்தை போட்டாததை வன்மையாய் கண்டிக்கிறேன்.
ReplyDeleteThanks for sharing with photos
ReplyDeleteஅண்ணி ஊர்ல இல்லாததால நீங்க பல கூட்டம் (சின்ன எத்தனை பேரு ஆளுக்கு எவ்ளோ) கூட்டுறீங்கள நடக்கட்டும் கொஞ்ச நாளைக்குத்தானே..
ReplyDelete