(HARD TARGET) உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் என்ன செய்வீர்கள்.....???நடுத்தர குடும்பத்திடம் பணம் அதிகம் இருந்தால் என்ன செய்வோம்... நல்ல ஹோட்டலி்ல் குடும்பத்துடன் சாப்பிடுவோம், சத்தியத்தில் பாப்கான் விலை பற்றி கவலை கொள்ளாமல் குடும்பத்துடன் படம் பார்ப்போம்...நயாகரா நீர் வீழ்ச்சியை பார்க்க ஆசைப்படுவோம்.. ஊருக்கு ஒதுக்கு புறமாய் கொஞ்சம் நிலம் வாங்கி போட்டு, மகள் திருமணத்திற்க்கு வரதட்சனை பிச்சைக்கு நிலத்தை விற்று பெண் திருமணத்தை பயம் இல்லாமல் நடத்துவோம்...

பணத்தை பற்றி கவலை படாமல் புறநகர் பொறியியல் கல்லூரியில் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைப்போம்....ரொம்ப நாளாய் பிள்ளை நச்சரித்த பல்சர் பைக் வாங்கி கொடுக்க முயல்வோம்... பெண்ணின் அழகு நிலைய செலவுக்கு கவலை கொள்ளாமல் இருப்போம்...

சரி அளவுக்கு அதிகமான பணம் இருந்தால் என்ன செய்வார்கள்..???
முதலில் போதைக்கு பெரும் பணம் போகும் , நண்பர்களோடு அடிக்கடி பார்ட்டி கொண்டாடுவார்கள். அந்த பார்ட்டி மூலம் பெண்கள் பழக்கம் ஆவார்கள்.. அதில் ஆழகாய் இருக்கும் பெண்ணுக்கு வலைவிரிப்பார்கள்.. அல்லது திரைப்பட முன்னனி கனவுக்கன்னியை 78வது முறையாக கன்னி கழிய வைப்பார்கள்... சமுகத்தில் அவர்களை எதிர்க்கும் ஆட்களை ரௌடிகளை வைத்து கொன்று போடுவார்கள்... தான் என்றஆகம்பாவம் மனதில் சம்மனம் போட்டு உட்கார்ந்து கொள்ளும்.....
சரி இந்த அதிக அளவு பணத்தோடு நிறைய செல்வாக்கும் சேர்ந்து கொண்டால்? வித்யாசமாய் விளையாட ஆசைப்படுவார்கள்... எப்படி பட்ட விளையாட்டு என்பதை ஹார்ட் டார்கெட் படம் சொல்லும்...
ஹார்டு டார்கெட் படத்தின் கதை இதுதான்....

நியு ஆர்லின்ஸ் நகரத்தில், யாரெல்லாம் அனாதையாக இருக்கின்றார்களோ அல்லது அவர் இறந்து போனால் சமுகத்தில் எந்த கேள்வியும் இல்லாதவர்களை பணத்தாசை காட்டி அவர்களை வரவைப்பார்கள்... பத்தாயிரம் டாலர் கையில் கொடுப்பார்கள்.. அதனை எடு்துதுக்கொண்டு ஓட வேண்டும்... இவர்கள் குழு துரத்தும்... தப்பித்தால் அந்த பணம் அவருக்கு மாட்டினால் சங்குதான்... யாரும் பணத்தை எடு்த்து கொண்டு தப்பித்ததாய் சரித்திரம் இல்லை... அப்படி பணத்துக்கு ஆசைப்பட்டு இறந்து போனவரின் மகள் அவரை தேடி வருகின்றாள்....தனக்கு யாரும் இல்லை என்று பொய் சொன்னதால்தான் அவரை அந்த விளையாட்டுக்கு சேர்த்து கொள்கின்றார்கள்...இறந்து போனவரை தேடிவரும் மகள்Natasha (Yancy Butler) அப்பவை தேடுகி்ன்றாள் அப்போது அந்த நகரத்தில் இருக்கும் பிட்பாக்கெட் நபர்களிடம் இருந்து படத்தின் ஹீரோ Chance Boudreaux (Jean-Claude Van Damme) காப்பாற்றுகின்றார்.... தன் அப்பாவை கண்டுபிடிக்க நடாஷா பவுண்டரிடம் உதவி கேட்கின்றாள்.. முதலில் மறுத்தாலும் பின்பு ஒத்து்கொள்கின்றான்...

பணத்தை கொடுத்து ஓட வைத்து கொலை செய்யும் கும்பலிடம் இவர்கள் இருவரும் மாட்டுகின்றார்கள்,.. அவர்கள் என்னவானார்கள் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லி இருக்கின்றார்கள்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


இந்த படத்தின் இயக்குனர் ஜான் வூ

ஒரு நல்ல ஆக்ஷன் படம் எப்படி எடுக்க வேண்டும், எப்படி ஹீரோ என்டிரி இருக்க வேண்டும் என்று அற்புதமாய் சொன்ன படம்...

ஆக்ஷன் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இந்த படத்தை
பார்க்கவும்...

படத்தின் முதல் காட்சியில் ஒருவனை ஓட ஓட விரட்டி கொல்லும் போது அவன் என்ன தப்பு செய்தான்...ஏன் இப்படி இந்த படுபாவிகள் இந்த அப்பாவியை துரத்தி சாகடிக்கின்றார்கள் என்று என்னும் போதும் அந்த இரவு நேரக்காட்சியை படமாக்கிய விதமும்.... கடைசியாக தண்ணியில் இறந்து தண்ணியில் விழு்மி போது இயக்கம் ஜான் வூ என்று டைட்டில் போடும் காட்சியாகட்டும்... படத்தின் ஹீக் காட்சி என்று சொல்லலாம்....

ரெஸ்டரண்டில் ஹீரோ உட்கார்ந்து இருக்கும் காட்சிக்கு அதாவது ஹீரோ என்ட்ரி்க்கு போடும் கிடார் இசையும் அதற்க்கு கேமராவின் விளையாடல்கள் அழகிலும் அழகு...


கதாநாயகியிடம் பர்ஸ் அடிக்க ஒரு திருட்டு கூட்டம் முயல அதனை ஜேன் சண்டை போடும் அழகு இருக்கின்றதே... என்ன ஒரு அற்புதமான சண்டைகாட்சி தெரியுமா? ஜேனின் ஸ்லோமோஷன் சண்டை காட்சிக்கு மேலும் சிறப்பு... அதுவும் பின்னால் பறக்கும் அவர் முடி அற்புதம்...இந்த படத்தின் முதல்சண்டைகாட்சிகளை பார்த்தால் வேட்டையாடு விளையாடு , அஞ்சாதே போன்ற படத்தி்ன் சண்டை காட்சிகள் நினைவுக்கு வருவதை தடுக்க முடியாது..

படத்தின் தொடக்கத்திலேயே ஒரு ஸ்டைலிஷான படம் எடுக்க வேண்டும் என்று டைரக்டரும் கேமரா மேனும்.... ஏன் அந்த குழுவே பேசி வைத்து வேலை பார்த்து இருப்பது படத்தின் ஒவ்வொறு பிரேமிலும் தெரிகின்றது...

படத்தில் சில லாஜீக் ஓட்டடைகள் இருந்தாலும் இந்த படம் நல்ல ஆக்ஷன் படம் என்பதில் சந்தேகம் இல்லை...


படத்தின் ஒளிப்பதிவாளர் டைட்டானிக் படத்தி்ன் கேமராமேன்Russell Carpenter ஒரு அமெரிக்கர் இவர் அமெரிக்கன் சாசைட்டி ஆப் சினிமோட்டோகிராபியில் மெம்பர் இவர்... ஜேம்ஸ் கேமரோனின் ஆஸ்தான கேமராமேன் இவர்..

இயக்குனர் ஜான் ஒரு ஹாங்காங் டைரக்டர் அமெரிக்காவில் ஜானின் முதல் படம் இததான்...

அவரின் ஆங்கில புலமை பார்த்து இவ்வளவு பணம் போட முதலில் தயாரிப்பு தரப்பு யோசித்தது வேற கதை..


ஜானை மேற்பார்வையிட ஒரு டைரக்டரையும் நியமித்தார்கள்... ஜான் முதலில் எக்சிகியுட்டிவ் சிஷன் ஹீரோ கர்ட் ரசலைதான் மனதில் வைத்து இருந்தார் ஆனால் கிடைத்ததோ ஜேன் குளுட் வேன்டேம்தான்..
இந்த படம் நல்ல ஆக்ஷன் படம் என்றாலும் ஸ்கிரிப்டில் வீக்கான படம் என்ற முத்திரையை குத்திக்கொண்ட படம்...

படத்தின் டிரைலர்...
படத்தின் மேக்கிங்....படக்குழுவினர் விபரம்...
Directed by John Woo
Produced by James Jacks
Sean Daniel
Daryl Kass
Sam Raimi
Written by Chuck Pfarrer
Starring Jean-Claude Van Damme
Lance Henriksen
Yancy Butler
Arnold Vosloo
Wilford Brimley
Music by Graeme Revell
Cinematography Russell Carpenter
Editing by Bob Murawski
Distributed by Universal Pictures
Release date(s) United States:
August 20, 1993 (1993-08-20)
Running time 97 min.
Country United States
Language English
Budget $19.5 million[1]
Gross revenue $32,589,677அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

18 comments:

 1. சூப்பர் படம், நான் பலமுறை பார்த்த படம் தான் என்றாலும், உங்கள் விமர்சனம் பார்த்த பின்பு மீண்டும் பார்க்க தோன்றுகிறது

  ReplyDelete
 2. அப்பாபாபாடா இந்த ஒரு படம் தான் உங்க விமர்சனத்துக்கு முன்னாடியே பாத்தது.

  ReplyDelete
 3. கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்
  கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
  வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

  ReplyDelete
 4. வேண்டமே படும் பார்க்க வேண்டுமே


  பார்த்துடுவோம் ...

  ReplyDelete
 5. வணககம் ஜாக்கிசேகர்

  இன்னும் பார்க்கலை
  பார்த்துடுவோம்

  ReplyDelete
 6. வணககம் ஜாக்கிசேகர்

  இன்னும் பார்க்கலை
  பார்த்துடுவோம்

  ReplyDelete
 7. 'ஜீன் கிளேட் வேன் டெமே' எனக்கு மிகவும் பிடித்த ஆக்சன் நடிகர். அவரது படங்கள் அனைத்திலும் ஆகசன் காட்சிகள் அருமையாக இருக்கும்.உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உண்டு.

  நமது 'கேப்டன்' தரையில் கால்படாமல் சுற்றி சுற்றி அடிப்பதெல்லாம் இவரைப் பார்த்துதான்.

  நல்லதொரு பகிர்வு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. நல்ல படம் இது..--

  நன்றி சூரியன்

  ReplyDelete
 9. சூப்பர் படம், நான் பலமுறை பார்த்த படம் தான் என்றாலும், உங்கள் விமர்சனம் பார்த்த பின்பு மீண்டும் பார்க்க தோன்றுகிறது//
  நன்றி யோ
  இப்போது கூட இந்த படத்தை பார்த்து விட்டுதான் விமர்சனம் எழுதினேன்

  ReplyDelete
 10. அப்பாபாபாடா இந்த ஒரு படம் தான் உங்க விமர்சனத்துக்கு முன்னாடியே பாத்தது.//
  நன்றி நாஞ்சில் சாதம்...

  ReplyDelete
 11. பார்க்க தோன்றுகிறது//
  கண்டிப்பாக பாருங்கள்

  ReplyDelete
 12. கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்
  கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
  வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு//
  நன்றி பாண்டி

  ReplyDelete
 13. வேண்டமே படும் பார்க்க வேண்டுமே


  பார்த்துடுவோம் .../

  ஜமால் இன்னுமா பார்க்கல????

  ReplyDelete
 14. வணககம் ஜாக்கிசேகர்

  இன்னும் பார்க்கலை
  பார்த்துடுவோம்//
  பாத்ததுட்ட பின்னுட்டத்தில் உங்கள் கருத்தை தெரிவியுங்க..

  ReplyDelete
 15. நம்ம ரெண்டு பேரோட (சினிமா) ரசனையும் ஒத்துப் போகுதே.....!!! அது எப்படி...!!!

  ReplyDelete
 16. tazameti கதை மாதிரியே இல்ல?

  vandamme படம் சூப்பராதான் இருக்கும் பாத்திடறேன்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner