இதுவரை நான் நான்கு குறும்படங்கள் இயக்கி இருக்கின்றேன்... அதில் 4 வது குறும்படமான டெம்ட் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்....
குறும்படம் எடுப்பது எனக்கு காதலான விஷயம் என்றாலும்... அதற்க்கு எனது பொருளாதாரம் எனக்கு எப்போதுமே இடம் கொடுத்ததில்லை...
எனது முதல் குறும்படம் “துளிர்”... மாவட்ட அளவிலான குறும்பட போட்டியில் 3வது பரிசை பெற்றது.. அதன் பிறகு “முதல் படி” என்ற ஒரு படம் எடுத்தேன்... அதன் பிறகு “பரசுராம் வயது 55” என்று ஒரு படம் எடுததேன் ....
இதில் சிறப்பு என்னவெனில் இந்த மூன்று படங்களும் சென்னையில் நடந்த உலககுறும்பட போட்டியில் திரையிட தேர்வு செய்யபட்டதாகும்...
என்னிடம் இருக்கும் கெட்ட விஷயம் எனது படைப்பை இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம் என்று எப்போதும் நினைப்பதால் அதனை மக்கள் மன்றத்தில் வைக்க சிறு தயக்கம்...
கவிதை , கதை எழுதி நன்றாக இல்லை என்று கிழி்த்து போடுவது போல.....
ஆனால் நண்பர்கள் பல பேரின் வற்புறுத்தல் காரணமாக இப்போது ஓவ்வொன்றாக வெளியிட உத்தேசித்து உள்ளேன்....
இவ்வளவுநாள் வெளியிட இன்னொரு தயக்கம் எனக்கு யூடியுப் தொழில் நுட்பம் போன்றவை எனக்கு தெரியாது ... நண்பர் பதிவர் வடிவேலு அவர்கள் உதவியுடன் இந்த படம் உங்கள் பார்வைக்கு...
என் படங்களில் நடித்த எவருக்கும் கேமரா முன்னால் நின்ற அனபவம் கிடையாது... ரைட் லுக் லெப்ட் லுக் எதுவும் தெரியாது...அவர்களுக்கு நடிப்பு சொல்லி கொடுத்து....ஸ்கிரிப்ட் எழுதி ஒளிப்பதிவும் செய்தும் இயக்குவது ரொம்ப சிரமமான விஷயம் என்பேன்....
முதலில் பதிவர் ஜியோராம் சுந்த்ரின் ஒரு கதையை தேர்வு செய்து எடுக்க இருந்தேன் ஆனால்அதற்க்கு பொருளதாரம் இடம் கொடுக்காத காரணத்தால் இந்த படத்தை எடுத்தேன்... அதே போல் அவர் கதையை படமாக்கி கொள்ள அனுமதி கேட்ட போது நிச்சயம் செய்து கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார் அவருக்கு என் நன்றிகள்....
இந்த படத்தை இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் எனில் இன்னும் பண்ம் வேண்டும்... கையில் இருந்த காசை போட்டு ரூபாய் ஆயிரத்தில் எடுத்தது...
எந்த உதவியாளனும் எனக்கு இல்லை இவ்வளவு ஏன் ஒரு தெர்மகோல் பிடிக்க கூட ஆள் இல்லை...
ஸ்கிரிப்ட் எழுதவும் ,டிஸ்கஸ் செய்யவும் ஆங்கில சப்டைட்டில் அடிக்கவும் எனது மனைவியின் உதவி மகத்தானது.... மதல் நாள் இரவில் ஸ் கிரிப்ட் எழுதி மறுநாள் கதலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்குள் முடித்து சாயிந்திரம் 8 மணிக்கெல்லாம் படத்தை டிவிடியில் அவுட் எடுத்தோம்....
படம் எடுத்த கொண்டு இருக்கும் போது பதிவர் நித்யா என்னோடு ஒத்துழைத்தார்... எனது மனைவி மோர் ரெடி செய்து எடுத்து வந்து நடித்த நண்பர்களுக்கு கொடுத்து புரொடெக்ஷன் வேலை செய்தார்கள்....
இந்த படத்தின் வசனங்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் எதிர்பார்க்கின்றேன்....படத்தின் முடிவில் எனது போன் நம்பர் இருக்கின்றது தயவு செய்து இந்திய நேரப்படி இரவில் போன் செய்ய வேண்டாம் என்று நண்பர்களை கேட்டுக்கொள்கின்றேன்...பின்னுட்டத்திற்க்கு ஜீமெயில் மட்டும் பயண்படுத்தவும்
இந்த படத்தில் நடித்த இருவரும் எனது மனைவியி்ன் அலுவலகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் பணி புரிந்த நண்பர்கள்.... அதுதான் இந்த படத்தின் கூடுதல் சிறப்பு என்பேன்....
இந்த படத்தின் கால அளவு எழு நிமிடங்கள் மட்டுமே
எனது குறும்படம் டெம்ட்
இயக்குனர் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் குறும்பட விழாவில் இப்படி சொன்னார்... ஒரு குறும்படம் என்பது ஆற்றில் இருக்கும் குழங்கல்லை எடுத்து அற்புதமாக துடைத்து பட்டை தீட்டி அதனை மீண்டும் ஆற்றில் தூக்கிபேடுவதுபோல்தான்... ஏனென்னறால் அதனால் எந்த வருமானமும் இல்லை என்றார்.... குறும்படங்கள் ஒரு ஆத்ம் திருப்திக்கு மட்டுமே என்றார் அவர் சொல்வதுதான் எவ்வளவு உண்மை.....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நல்ல கருத்து...
ReplyDeleteகடைசில வச்சீங்க பாத்தீங்களா ஆப்பு???
:)))
ஆத்ம திருப்தி தான் சார் முக்கியம் ! பணத்தை விட சந்தோஷத்தை அது தான் தரும் !
ReplyDeleteபடங்களுக்கு டவுன்லோட் லிங்க் குடுத்தா இன்னும் சந்தோஷபடுவேன் !
ReplyDeleteஅருமை ஜாக்கி அண்ணன் அவர்களே
ReplyDeleteரொம்ப அருமையாக குறும்படம் தயாரித்து இயக்கி உள்ளீர்கள்.
ஜாக்கி அண்ணாச்சி இந்தப் குறும்படத்தை என் பேஸ்புக்கில் போஸ்ட் செய்ய அனுமதி தருவீர்களா?
ReplyDeleteஅருமையான கருத்துச் செறிந்த குறும்படம், அடுத்த படிக்கட்டுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பு ஜாக்கிசேகர்
ReplyDeleteநல்ல முயற்ச்சி.
நேர்த்தியான ஒளிப்பதிவு. அங்கங்கே சில குறும்புத்தனங்களும் ரசிக்கதக்கதாக இருந்தது.
நேர்மறையா சில விமர்சனங்களை சொல்வதை சரியான பதத்தில் எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
ஆனால் லாஜிக் இடிக்கிறது. அன்ணன் சொல்லித்தான் விட்டேன் என்று ஒரு இடத்திலும் பிறகு அப்பா அம்மா, தங்கை என்று பிறிதொரு இடத்திலும் சொல்லி இருக்கீங்க. அதே போல கதாநாயகனா நடித்தவர் குரல் கொஞ்சம் ஹைபிட்சில் இருக்கிறது. இயல்புத்தன்மையும் குறைவாக இருக்கிறது. சிகெரெட் குடிப்பதற்கும் காதலுக்கும் உள்ள இணைப்பு ரெம்பக் குறைவு. சமுக விழிப்புணர்வுதான் நோக்கமென்றால் தேவையில்லாது பெண்மீதான வெறுபுணர்வு ஒட்டாமல் இருக்கிறது. மேலும் பல சிறப்பான படைப்புகளை தர வாழ்த்துகள்
வணக்கம் ஜாக்கி
ReplyDeleteஇதுதான் ஜாக்கி டச், நான் குறும்படங்கள் அதிகமாக பார்த்ததில்லை, இது உங்களுடைய Inimitable தண்மையை பிரதிபலிக்கிறது,
இதில் ஒளி, மற்றும், ஒலி அமைப்பு சூப்பர், இந்த குறைந்த செலவில், இவ்வளவு நேர்த்தி ஆச்சர்யம், நல்ல முயற்ச்சி என்று ஒரு சில வார்த்தைகளில் முடிக்க முடியவில்லை, நன்றி
ஜாக்கி
ReplyDeleteமிக அருமை, வாழ்த்துக்கள்.
லிங்க் ஆரம்பித்ததும் ஐயோ 6.42 நிமிடம் பார்க்க வேண்டுமா என்ற எண்ணத்தோடு தான் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் சலிப்பு அடைய வில்லை.
வசனங்கள் லோகசன் அருமை. அவரின் வசன டெலிவரி யும் அருமை
என் ஆலோசனைகள்:
ஆங்கில sub title font நிறம் மாற்றுங்கள், சரியாக படிக்க முடிய வில்லை.
அந்த அண்ணன் பாத்திரத்தில் நீங்கள் கூட நடித்து இருக்கலாம்.
முடிவில் அவர் புகை பழஅக்கதை விடுகிற மாத்ரி மாற்றுங்கள், பாசிடிவ் ஆகா இருக்கும் அப்போதுதான்.
Overall it is excellent. I will give 9.5 marks out of 10 Jackie.
நல்ல கருத்து...
ReplyDeleteகடைசில வச்சீங்க பாத்தீங்களா ஆப்பு???
:)))//
நன்றி வழி போக்கன் தங்கள் பாராட்டுக்கு...
ஆத்ம திருப்தி தான் சார் முக்கியம் ! பணத்தை விட சந்தோஷத்தை அது தான் தரும் //
ReplyDeleteநன்றி ராஜா...
அருமை ஜாக்கி அண்ணன் அவர்களே
ReplyDeleteரொம்ப அருமையாக குறும்படம் தயாரித்து இயக்கி உள்ளீர்கள்//
நன்றி கார்த்தி மிக்க நன்றி
ஜாக்கி அண்ணாச்சி இந்தப் குறும்படத்தை என் பேஸ்புக்கில் போஸ்ட் செய்ய அனுமதி தருவீர்களா?
ReplyDeleteஅருமையான கருத்துச் செறிந்த குறும்படம், அடுத்த படிக்கட்டுக்கு வாழ்த்துக்கள்//
நல்ல செய்யுங்கள் அனுமதி பெற்றதற்க்கு மிக்க நன்றி
நன்றி கேபி்எஸ் சார் தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
ReplyDeleteஆனால் லாஜிக் இடிக்கிறது. அன்ணன் சொல்லித்தான் விட்டேன் என்று ஒரு இடத்திலும் பிறகு அப்பா அம்மா, தங்கை என்று பிறிதொரு இடத்திலும் சொல்லி இருக்கீங்க. அதே போல கதாநாயகனா நடித்தவர் குரல் கொஞ்சம் ஹைபிட்சில் இருக்கிறது. இயல்புத்தன்மையும் குறைவாக இருக்கிறது. சிகெரெட் குடிப்பதற்கும் காதலுக்கும் உள்ள இணைப்பு ரெம்பக் குறைவு. சமுக விழிப்புணர்வுதான் நோக்கமென்றால் தேவையில்லாது பெண்மீதான வெறுபுணர்வு ஒட்டாமல் இருக்கிறது. மேலும் பல சிறப்பான படைப்புகளை தர வாழ்த்துகள்//
ReplyDeleteஅமைதிக்கு பெயர்தான் சாந்தி என்று பாடல் கேட்டு கொண்டே ஆறாம் விரலாய் சிகரேட் பிடிப்பவர்களை நான் பார்த்து இருக்கின்றேன்...
இருப்பினும் தங்கள் கருத்தை நன்றாக தெரிவித்து இருக்கின்றீர்கள்...
வீட்டில் எல்லோருமே சிகரெட் பிடிப்பதை எதிர்க்கும் போது அவன் அண்ணன் ரொம்ப அசிங்கமாக ஒர வார்த்தை சொல்ல அதன் பிறக விட வேண்டும் என்று கோவிலுக்கு வந்ததாக காட்சி அமைத்து இருந்தேன்....
நன்றி...
படம் மிக அருமை
ReplyDeleteபாராட்டுகள்
மிக அருமை, வாழ்த்துக்கள்.
ReplyDeleteலிங்க் ஆரம்பித்ததும் ஐயோ 6.42 நிமிடம் பார்க்க வேண்டுமா என்ற எண்ணத்தோடு தான் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் சலிப்பு அடைய வில்லை.
வசனங்கள் லோகசன் அருமை. அவரின் வசன டெலிவரி யும் அருமை
என் ஆலோசனைகள்:
ஆங்கில sub title font நிறம் மாற்றுங்கள், சரியாக படிக்க முடிய வில்லை.
அந்த அண்ணன் பாத்திரத்தில் நீங்கள் கூட நடித்து இருக்கலாம்.
முடிவில் அவர் புகை பழஅக்கதை விடுகிற மாத்ரி மாற்றுங்கள், பாசிடிவ் ஆகா இருக்கும் அப்போதுதான்.
Overall it is excellent. I will give 9.5 marks out of 10 Jackie.//
நன்றி ராம்ஜீ மிக்க நன்றி
இந்த படத்தின் ஒலிபதிவு டப்பிங் அல்ல லைவ் சவுன்ட்...
ஆங்கிலி சப்டைட்டில் போடும் போதே நிறைவு எனக்கு வரவில்லை..
இருப்பினும் நேரம் கருதி காம்பரமைஸ் செய்து கொண்டேன் அதனை இனு மாற்றுவது என்பது அசோகர் நட்ட மரத்தை வேறு இடத்தில் நடுவது போல் அதற்க்கு மெனெக்கெடும் நேரத்துக்கு அடுத்த படம் ஒன்று.. எடுத்து விடலாம்
நன்றி நண்பா... அந்த நண்பர் நிறைய டேக் வாங்கனார்...
அருமை ஜாக்கி
ReplyDeleteபடம் மிக அருமை
ReplyDeleteபாராட்டுகள்//
நன்றி கதிர் மிக்க நன்றி
அருமை ஜாக்கி//
ReplyDeleteநன்றி ராதா கிருஷ்ணன்... மிக்க நன்றி தங்கள் பாராட்டுககு
மிக அருமை ஜாக்கி அண்ணே!
ReplyDeleteநல்ல atTEMPT ஜாக்கி! அசத்திட்டீங்க!!! பின்னால ஒயிட் பேக்ரவுண்ட் வர்றச் சொல்ல மட்டும் கொஞ்சம் க்ளார் அடிக்குதே அந்த லைட்டிங்க அடுத்த தபா சரி பண்ண முடியுமா?
ReplyDeleteஒரு சின்ன ட்விஸ்ட் பண்ணி ஒரே ஒரு ஷாட் சேர்த்து பாஸிட்டிவ் முடிவாகவும் மாத்திரலாம்!
தொடர்ந்து நெடும்படம் எடுக்க வாழ்த்துக்கள் வாத்யார்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
நல்ல முயற்சி ...பாராட்டுக்கள்.. நடிக்க நடிகர் / நடிகை கிடைப்பது கஷ்டம் என்று சொல்கிறீர்கள் .... வாய்ப்பு தேடி நடக்கும் புது முகம் நிறைய கிடைக்குமே...அவர்களுக்கு காமெரா முன் நின்றாலே அது ஒரு வாய்ப்பு தான் .... எனக்கு தெரிஞ்சத சொன்னேன் ... தவறு இருந்தால் மன்னிக்கவும்
ReplyDeleteமிக அருமை ஜாக்கி அண்ணே
ReplyDeleteநன்றி மங்களுர் சிவா...
நல்ல atTEMPT ஜாக்கி! அசத்திட்டீங்க!!! பின்னால ஒயிட் பேக்ரவுண்ட் வர்றச் சொல்ல மட்டும் கொஞ்சம் க்ளார் அடிக்குதே அந்த லைட்டிங்க அடுத்த தபா சரி பண்ண முடியுமா?
ReplyDeleteஒரு சின்ன ட்விஸ்ட் பண்ணி ஒரே ஒரு ஷாட் சேர்த்து பாஸிட்டிவ் முடிவாகவும் மாத்திரலாம்!
தொடர்ந்து நெடும்படம் எடுக்க வாழ்த்துக்கள் வாத்யார்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு//
முதலில் வெள்ளை கிளாருக்கு பின்புலத்தில் அதிக லைட் அதற்க்கு ஒரு தெர்மொகோல் பவுன்சாவது கொடுத்து இருந்தால் இந்த குறைப்பாட்டை நீக்கி இருக்கலாம்... ஆனால் பணம் ரொம்ப முக்கியம் ஒருவரை அழைத்தால் அதற்க்கு ஏதாவது செய்யவேண்டும்...அதனால்தான்...
இரண்டாவது ஏன் பாசிட்டிவ் முடிவு வைக்க வேண்டும் என்று சொல்லுகின்றீர்கள்...
சில பழக்கங்களில் இருந்து உடனே வரமுடியாது என்பதை சொல்லவே அந்த முடிவு.. என்னதான் மண்டை ஓட்டு படம் போட்டுபயமுறுத்தினாலும்... எல்லோரும் சிகரேட் பிடித்து கொண்டுதான் இருக்கின்றார்கள்... அது மட்டும் அல்ல ஒரு படம்... அட்வைஸ் பண்ண வேண்டும் என்று எடுப்பது குறும்படம் அல்ல.. அதற்க்கு பெயர் டாக்குமென்டரி...
நல்ல முயற்சி ...பாராட்டுக்கள்.. நடிக்க நடிகர் / நடிகை கிடைப்பது கஷ்டம் என்று சொல்கிறீர்கள் .... வாய்ப்பு தேடி நடக்கும் புது முகம் நிறைய கிடைக்குமே...அவர்களுக்கு காமெரா முன் நின்றாலே அது ஒரு வாய்ப்பு தான் .... எனக்கு தெரிஞ்சத சொன்னேன் ... தவறு இருந்தால் மன்னிக்கவும்//
ReplyDeleteநான் சொன்னது தேர்ந்த நடிகர்கள் பணம் கொடுத்துதான் நடிக்க வைக்க முடியும்...
அதே போல் வாய்பு தேடி அலைபவன் எல்லாம் நடிகன் அல்ல...ஒரு டயலாக்கை ஏற்ற இறக்கத்தோடு இயக்குனர் சொல்லி கொடுப்பது போல் பேசவேண்டும்... அது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை...
வாழ்த்துக்கள்.. :)
ReplyDeleteஜாக்கி...
ReplyDeleteசின்னச் சின்ன லாஜிக் மீறல்கள் (மேலேயே சொல்லிட்டாங்க) இருந்தாலும் நல்லாயிருக்கு.. முக்கியமா வசனம் மற்றது அந்த சின்ன ட்விஸ்ட்.... ஜெயிப்பீங்க ஜாக்கி.. சீக்கீரமே
//வெள்ளை கிளாருக்கு பின்புலத்தில் அதிக லைட் அதற்க்கு ஒரு தெர்மொகோல் பவுன்சாவது கொடுத்து இருந்தால் இந்த குறைப்பாட்டை நீக்கி இருக்கலாம்... ஆனால் பணம் ரொம்ப முக்கியம் ஒருவரை அழைத்தால் அதற்க்கு ஏதாவது செய்யவேண்டும்...அதனால்தான்...//
ReplyDeleteஇதுல இவ்ளோ விஷயம் கீதா? அப்டீன்னா உடுங்க அடுத்த தபா பாத்துக்கலாம்!
//இரண்டாவது ஏன் பாசிட்டிவ் முடிவு வைக்க வேண்டும் என்று சொல்லுகின்றீர்கள்...//
பாசிட்டிவ் முடிவுதான் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நீங்கள் காட்சி அமைத்திருக்கும் விதத்தில் இன்னும் ஒரே ஒரு ஷாட் சேர்த்தால் பாசிட்டிவ் முடிவாகவும் மாத்திரலாம் அப்டீன்னுதான் சொல்லிகிறேன் வாத்யார். அது ஒரு complimentary கமென்டுதான் :-))
மொத்தத்துல படம் சூப்பர்! தொடர்ந்து அசத்துங்க!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
வணக்கம், போலி புகழ்ச்சிக்கு மயங்க வேண்டாம்.
ReplyDeleteஉங்கள் என் கருத்துப்படி இரண்டாம் தர நிலையில் இருக்கிறது.
கொஞ்சம் யோசிச்சு எடுக்க கூடாதா? பணம் இல்லை, அதனால யோசிக்க கூடாதா? யோசிக்க பணம் வேண்டுமா? ஒவ்வொரு வசணமும் அழகாக இருக்க வைக்கலாம். ஏனொதானோனு வசணம் இருக்குது. உங்கள் குறும்படத்தோட Aim தான் என்ன? ஒரு Motivation இருக்க வேண்டாமா? ஏன் தமிழ்படம் போல வெறும் வெட்டி முடிவையே வைக்கிறீர்கள்? பெரிய பெரிய விஷயங்கள விட்டு விட்டு சின்ன சின்ன விஷயத்துல கவணம் வைய்யுங்க.... சின்ன சின்னதா எவ்வளவோ.. பண்ணலாம். கொச்சை வசணங்கள உபயோகபடுத்தாதீங்க.... அது உங்க கற்பனையையே கெடுத்துடும்.
ரொம்ப பேசறானானேனு நினைக்கிறீர்களா? http://www.youtube.com/watch?v=uy0HNWto0UY இந்த குறும்படத்தை பாருங்க... ஏன் நீங்க இதுபோல தரமான படமா எடுக்க முடியாதா? தவறாக பேசி இருந்தால மன்னிக்கவும்
படம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல முயற்சி நண்பரே!
ReplyDeleteநல்ல கருத்து.
ReplyDeleteநல்ல நடிப்பு.
வசனங்களும்,காட்சி அமைப்பும் அருமை.திருந்திவிட்டார் என்று நினைத்தால் ஒரு தம்மு போட்டு வர்றேன் சார் என்று சொல்லியது நல்ல திருப்பம். இவரைப்போல் இருக்ககூடாது என சிகரெட் பிடிப்பவர்கள் நிச்சயம் நினைப்பார்கள்.
வாழ்த்துக்க்கள் ஜாக்கி.
சேகர் அண்ணா !
ReplyDeleteகுறும்படம் அருமை! ஏனையவற்றையும் பார்க்கக் காத்திருக்கிறோம்....
நன்றிகளுடன்
மாயா
நன்றாக இருந்தது ஜாக்கி ஸார்...சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லிவிட்டீர்கள். மற்ற குறும்படங்களையும் அடுத்தடுத்து வெளியிடுங்கள்...பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
ReplyDeleteதொடர்ந்து நெடும்படம் எடுக்க வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteபடத்துக்கு தமிழ் பேரு வைத்திருக்கலாமே...பெயர்களும் தமிழிலேயே இருந்திருக்கலாம்!!
ReplyDeleteமேலும் சிறப்பான படம் எடுக்க வாழ்த்துக்கள் !!
நன்றி மு இரா அவர்களே !! உங்கள் இணைப்பில் இருந்த படம் அட்டகாசம் !!!
அருமையான கதை முடிவு .. வாழ்த்துக்கள் சார் ... சீக்ரமே உங்கள் இயக்கத்தில் வெள்ளித்திரை காவியம் படைக்க வாழ்த்துக்கள்..
ReplyDeletesuper.
ReplyDeleteaanaa, editing panni, contrast ellaam adjust panni irukkalaam. over bright in the background.
nice work though.
பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. ஆனால் நான் சிகரெட் குடிக்க மாட்டேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
Hi
ReplyDeleteI don't want to give a wrong feed back. It was not that impressive.
Don't keep say 'KASHTAPATTU' no money etc.
If I have money, i may hesitat to invest on you after seeing this film.
Regards
Sudharsan
ஜாக்கி,
ReplyDeleteநல்ல கருத்து. நல்ல முயற்சி. தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள்!!
அய்யா, வணக்கம். உங்களை பார்த்து ஆரம்பித்த வலைபூ நீங்கள் பார்த்து கருத்துரை இட கேட்டு கொள்கிறேன்.
ReplyDeletehttp://kavincinema.blogspot.com/2009/09/cj7-alien.html
நல்ல முயற்சி. வசனம்தான் ரொம்ப நீளமா இருக்கு.
ReplyDeleteலைவ் சௌண்டா? டப்பிங்கா?
முதல் காட்சி கோயிலில் இருந்து மங்களகரமாக தொடங்குகிறது.
ஜாக்கிசான் படத்தில் வருவது போல் கடைசியில் முக்கியமான ஷூட்டிங் நிகழ்ச்சிகளை சேர்த்தது நன்றாக இருந்தது. மேலும் பல நல்ல படைப்புகளை தர வாழ்த்துக்கள்.
சிகரெட்டை குறை சொல்லகூடாது!
ReplyDeleteஅதுக்கு காரணமாக இருந்தா ஸ்நேகாவை(அது மாதிரி) தான் சொல்லனும்!
good effort....
ReplyDeletewe expect more creation like these from u
:) nanum pathuttu oru dhum poda poitten
ReplyDeletenalla muyarchi
ReplyDeletenandraaga irunthathu, inum sirappaga seithu irukkalaam
kavalai padatheenga, adutha murai kuraikalai kuraikka muyarchi seiyalaam
nandri
ஜாக்கி, நல்லா இருக்கு. ஆனா சில இடங்கள்ல வசனங்கள் கொஞ்சம் செயற்கையாவும் திணிச்ச மாதிரியும் இருக்கு. முக்கியமா, குறும்படச் செலவு பத்தி வர்றது. இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பியா இருந்திருக்கலாம்ன்னு தோணுது.
ReplyDeleteமிக நல்ல முயற்சி..
ReplyDeleteதங்களுடைய ’முதல்படி’யும் பார்த்திருக்கிறேன்.. நன்று !!!
இந்த குறும்படத்தின் கதாநாயகன் (அரவிந்த்?), SRM EEC யில் என்னுடைய மாணவர்.. அப்பவே துறைசார்பாக நாடகங்களில் இடம்பெறுவார்.. இதிலும் நன்றாக செய்துள்ளார்.. என் வாழ்த்துக்கள் அவருக்கும்..
காரணம் ஆயிரம்™