(LONG KISS GOOD NIGHT ) சினேகா மாதிரி குடும்ப குத்து விளக்கு....பொதுவாக தமிழக இளைஞர்களிடம் சர்வே எடுத்து பாருங்கள்... உங்கள் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று.... எனக்கு சினேகா மாதிரி பொண்ணு வேண்டும் என்று சொல்லி விட்டு மதியம் கந்தசாமி பார்த்து விட்டு மாலை நண்பர்களுடன் பேசுகையில் மியாவ் மியாவ் சாங்குல அந்த கருப்பு சேலை கட்டிகிட்டு கெட்ட ஆட்டம் போடறது சூப்பர் மாமே என்று பேசும் நண்பர்களை நான் அறிவேன்.... வீட்டு வாசலை விட்டு தாண்டாமல் தனக்கே தனக்கு சேவை செய்யும் வேலைக்காரியாகவே அன்பு , பாசம் போன்ற போர்வையில் இன்றும் பல பெண்கள் நடத்த படுகின்றார்கள்....


நம்ம அம்மாக்கள், அல்லது மனைவிகள் எல்லாம் பல்லிக்கும் கரப்பானுக்கு பயந்து வீல் என்று கத்தி அவ்வப்பபோது வயிற்றில் புளியை கரைத்து வைக்கும் போது, அதே பாலினத்தை சேர்ந்த பெண்கள் ராணுவத்திலும், போராளி குழுக்களாகவும், இருந்து சாதனை செய்து வாழ்ந்து வருகின்றார்கள்...

சென்னையில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் போதே அதனை வாய்பிளந்து பார்க்கும் இந்த சமுகம்... ஏன் சென்னை பெண்களே கூட இன்னும் அந்த ஆச்சர்ய அதிர்ச்சியில் இருந்து மீள வில்லை என்பேன்... அவர்களும் பெண்கள்தான்... இவ்வளவு காலத்துக்கு பிறகு இப்போதுதான் பெண் ரயில் ஓட்டுனர் வந்து இருக்கின்றார்...

இந்த மாதிரி பெண்களை எனக்கு நிரம்ப பிடிக்கும் ஆணாதிக்க சமுகத்தில் தன்னையும் நிரூபிப்பவளை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்...?
அப்படி குடும்ப குத்துவிளக்காக கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சேவை செய்து கொண்டு இருக்கும் ஒரு பெண்னை சர்வதேச கடத்தல் கும்பல் துரத்தினாள் எப்படி இருக்கும் என்பதுதான் லாங் கிஸ் குட் நைட் படத்தின் கதை...


LONG KISS GOOD NIGHT படத்தின் கதை இதுததான்.....


பள்ளி ஆசிரியராக வாழ்க்கை நடத்தும் சமந்தா (ஜீனா டேவிஸ்) 6 வயது குழந்தைக்கு அம்மா, அழகான கணவன், அமைதியான வாழ்க்கை, ஆனால் 8 வருடத்துக்கு முன் தனக்கு என்ன நேர்ந்தது அல்லது அதற்க்கு முன் தான் என்னவாக இருந்தோம் என்பது வெற்றி விழா கமல் போல் ஒன்றும் தெரியாது... ஆனால் தான் யார் என்று அறிந்து கொள்ள பிரைவேட் டிடெக்டிவ் மிச்(சாமுவேல் ஜாக்சன்) உதவியை நாடுகின்றாள்... அவள் ஒரு கொலைகாரி என்பதும் சீஐஏவிற்க்கு, கொலை செய்தவள் என்பதும் தெரிகின்றது.... அவளை சர்வதேச கடத்தல் கும்பலும், சீஐஏவும் தேட அவள் கடத்தல் கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றாள்... அவள் எப்படி தப்பித்தாள்? கணவன் குழந்தை என்னவானார்கள்... கடைசியில் கொலைகாரியா? அல்லது குடும்பத்து குத்துவிளக்கா? என்பதை டிவிடியில் பார்த்து மகிழுங்கள்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இந்த படத்தின் இயக்குனர்தான் இந்த படத்தின் ஹீரோயினுடைய கணவர்....

இந்த படத்தின் இயக்குனர் இதற்க்கு முன் ஸ்டோலன் நடித்த கிளிப் ஹாங்கர் மற்றும் டை ஹார்டு போன்ற படங்களை எடுத்தவர்....

மிக ஆழகான வாழ்க்கையில் சமையல் அறையில் கத்தியை கண்டாலே தொடை நடுங்கும் அவளுக்கு ஒரு கத்தியால் காய் கறி நறுக்க அந்த கத்தி அவள் கைகளில் விளையாடம் அழகேஅழகு... அவளால் தன்னை கன்ரோல் பண்ண முடியாத அளவுக்கு அந்த கத்தியை சுழற்றி கொண்டே இருப்பாள்... அந்தளவுக்கு வேகம் தன்னிடம் உள்ளது எனில் தான் யார் என்று கேட்க? கதையும் நாமும் சுடு பிடிக்கின்றோம்.....

ஒரு பெண்ணை அமைதியாக காட்டி விட்டு அவளை சித்தரவதை செய்வது அவள் உடை எல்லாம் உருவி ஒரு பெட்டிகேட்டை மட்டும் விடுத்து அவளை ஐஸ் நீரில் முழ்கி அவளை சித்தரவதை செய்யும் போது நமக்கு இங்கு பரிதாபம் மேலிடும்...

ஆக்ஷன் காட்சிகளில் ஜீனா டேவிஸ் பின்னி பெடலெடுத்து இருப்பார்...


படத்தின் டிரைலர்...படக்குழுவினர் விபரம்...
Directed by Renny Harlin
Produced by Stephanie Austin
Shane Black
Renny Harlin
Written by Shane Black
Starring Geena Davis
Samuel L. Jackson
Patrick Malahide
Craig Bierko
Brian Cox
With David Morse
And G.D. Spradlin
Tom Amandes
Yvonne Zima
Music by Alan Silvestri
Cinematography Guillermo Navarro
Editing by William Goldenberg
Distributed by New Line Cinema
Release date(s) October 11, 1996
Running time 120 minutes
Country United States
Language English
Budget $65,000,000

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

10 comments:

 1. நன்றி, ஆனால் இந்த கொலை, கொள்ளை படங்களை விட்டுட்டு, மகிழ்ச்சிகரமான, கொஞ்சம் குழந்தைதனமான, படங்களை பட்டியல் இட்டால்... மிக நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 2. நானும் பார்த்துட்டனே.. ஆனா பத்தோட பதினொன்னாவது படம்.. அவ்வளவுதான்..!

  ReplyDelete
 3. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
  www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

  இவண்
  உலவு.காம்

  ReplyDelete
 4. அடுத்து ABYSS திரை விமர்சனமா....?

  ReplyDelete
 5. அடுத்து ABYSS திரை விமர்சனமா....?

  ReplyDelete
 6. அடுத்து ABYSS திரை விமர்சனமா....?

  ReplyDelete
 7. இந்த படத்தின் இயக்குனர்தான் இந்த படத்தின் ஹீரோயினுடைய கணவர்....]]

  அருமை.


  ஹீரோ என்ற பதமற்று ...

  ReplyDelete
 8. வணக்கம் ஜாக்கிசேகர்
  நான் FLY படம் பார்த்ததிலிருந்து GEENA Davis FAN, இந்த படம்
  இன்னும் பார்க்கலை

  ReplyDelete
 9. படம் பற்றிய நல்ல அறிமுகம்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner