தாம்பரத்தில் இருந்து பீச் ஸ்டேஷனுக்கு ரயி்லில் பயணம் செய்து பார்த்து இருக்கின்றீர்களா?... அது ஒரு அற்புதமான அனுபவம்... வேலைக்கு போகும் அவசரத்தில் பெண்கள் அடித்து பிடித்து ஓடினாலும்,தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்ற நேர்த்தி உடை, சிகை ,அலங்காரம், எல்லாவற்றிலும் எதிரொலிக்கும்... ஆண்கள் அதே போல் மற்றவர்கள் தன்னை கவனிக்க வேண்டும் என்றாலும் அவ்வளவு மெனக்கெடல் பெரும்பாலான ஆண்கள் செய்வதில்லை.....
எனக்கு நிறைய ரயில் பயண அனுபவம் இல்லை என்றாலும்,தொடர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் ரயிலில் பயணித்த அனுபவம் உண்டு.... அதில் எத்தனை நண்பர்கள்?எத்தனை காதல்கள்? கணக்கில் அடங்காத ஒரு எண்ணிக்கை அது...
இப்படி ரயில் காதல் பற்றி பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டு போகலாம்... ஆனால் ஒருவனை காதலித்துக்கொண்டு இருக்கும் போது இன்னொருவனை காதலிக்க முடியுமா? முடியும் என்று சொல்ல வருகின்றது இந்த சூஹு டிரெயின் படம்
Zhou Yus Train படத்தின் கதை இதுதான்....
ஒரு பீன்கான் பாத்திரங்க்ளில் ஓவியம் வரையும், வேலை செய்யும் பெண் தினமும் 30 கீலோ மீட்டர் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் அப்போது ரயிலில் பயணம் செய்யும் ஒரு கவிஞனை காதலிக்கின்றாள் அவனோடு செக்சும் வைத்துக்கொள்கின்றாள்.... அவன் வேலை விஷயமாக திபெத் போக... அதே ரயிலில் பயணம் செய்யும் ஒரு வெட்னரி டாக்டரை காதலித்து பின்பு அவனுடனும் படுக்கையில் சாய்கின்றாள்.... முடிவு என்ன என்பதை வெண்திரையில் காண்க....
படத்தின் சுவாரஸ்யங்களி்ல் சில..... இந்த படத்தை பொறுத்தவரை... என்னை கவர்வது அந்த உணர்ச்சி பூர்வமான காதலும்.... அந்த பெண் கதாபாத்திரத்தின் ரயில் பயணத்தோடு நாமுஙம் பயணிப்பது இந்த படத்தின் சிறப்பு...
இந்த படத்தின் ஒளிப்பதிவு என்பது அற்புதாமான படைப்பு என்பேன்..,. அதற்க்கான மெனக்டெல் ஒவ்வோறு காட்சியிலும் பார்வையாளனை உணர்ச்செய்து இருப்பார்கள்....
இரண்டு பேரோடு காதல் என்பதை நம்மவர்கள் ஏற்றுக்கொள்ள விட்டாலும்... நம் தமிழகத்தில் சமீபமாய் பெருகிவரும் கள்ளகாதல் கொலைகள்.. நாம் வேஷம் போட்டு கொண்டு இருப்பதை வெட்ட வெளிச்சமாக்குகின்றது..
அவளுக்கு அடுத்த காதல் தோன்றுவதும் அதற்க்கு அவள் முதலில் ஒத்துக்கொள்ளாமல் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதும் கவிதையான காட்சிகள்...
படத்தின் லோக்கேஷன்களும்.... அதில் வரும் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களும்... அற்புதமான லைட்டிங்ககில் படம் பிடித்து இருப்பார்கள்...
படத்தின் காதல் மென்மையை குறிப்பதால் படம் நெடுகிலும் சாப்ட் லைட்டிங்கில் படத்தை எடுத்து இருப்பார்கள்...
மிக முக்கியமாக ரயில் பயணிக்கின்றது என்பதை காட்ட எடுத்துக்கொண்ட லாங் ஷாட் காட்சிகள் எல்லாம் அருமை ரகம்...
பாலத்தின் மேல் ரயில் போக ஆற்றில் இருக்கும் கேமரா கொஞ்சம் டச் ஆங்கிளில் சாய்த்து வைத்து பின்புலத்தில் சூரியன் சுட்டு எரிக்க ரயில் போகுவதை எடுத்து இருக்கும் காட்சிகளும்.... ஒளிப்பதிவாளர்Wang Yu வின் உழைப்பை சொல்லுகின்றன...
நூலக அறையில் நடக்கும் உடலுறவு காட்சியில் லைட்டிங்கும், டே லைட், இண்டோர்லைட்டும் மேட்ச் பண்ணியது அழகு....
இரவில் அதே பாலத்தில் போகும் ரயிலை டாப் அங்கிளில் எடுத்து இருப்பதும் அது மினியேட்சரா அல்லது உண்மையா என்று குழம்பும் வகையில் எடுத்து இருப்பது சிறப்பு...
இரண்டு பேரும் பிரிவதை ரயி்லில் இருந்து பக்கத்தில் போகும் சிங்கிள் டிராக்கில் பயணிக்கும் கேமரா சட்டேன இரண்டு டிராக்காக மாறும் காட்சி அருமை....
அதே போல் குகைளில் ரயில் பயணிக்கும் காட்சிகள் அருமை...
பெர்லின் பிலிம் பெஸ்ட்டிவலில் இந்த படம் அபிசியல் செலக்ஷ்னில் தேர்ந்து எடுக்கபட்டது...
படத்தின் ஆரம்பத்தில் அந்த பெண் ரொம்ப சப்பையாக இருக்கின்றதே என்று என்னும் போது படத்தில் போக போக அந்த பெண் நம் இதயத்தில் நன்றாக இடம் பிடித்துக்கொள்கின்றாள்...
படத்தின் டிரைலர்
Directed by Sun Zhou
Produced by Huang Jianxin
William Kong
Sun Zhou
Written by Sun Zhou
Zhang Mei
Bei Cun (novel)
Starring Gong Li
Tony Leung Ka-Fai
Sun Honglei
Music by Shigeru Umebayashi
Cinematography Wang Yu
Editing by William Chang
Distributed by Sony Pictures Classics
Release date(s) China:
August 1, 2002
Running time 92 min.
Country China
Language Mandarin
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
mee firste...
ReplyDeleteஜாக்கி
ReplyDeleteவிடியோகேசட்
கடை எதோ வைச்சிருக்கிங்களா!
நான் பார்த்த முதல் ஆங்கிலப்படம்
"மை பாதர் இஸ்
HERO" இந்த படத்தைப்பற்றி
உங்களுக்கு
தெரிந்தால் பதிவிடவும்.
எல்லா மொழி படமும் பார்த்திடுவீங்களொ தல?
ReplyDeleteநல்ல விமர்சனம் சார். ரோமன்ஸ் காமெடி வகையாரா படங்களை பற்றி அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete/
ReplyDeleteஒளிப்பதிவுக்காக பார்க்கவேண்டிய படம்...
/
டவுன்லோட் பண்ற விடியோல என்ன குவாலிடி கிடைக்க போகுது.
//"தாம்பரத்தில் இருந்து பீச் ஸ்டேஷனுக்கு ரயி்லில் பயணம் செய்து பார்த்து இருக்கின்றீர்களா?... அது ஒரு அற்புதமான அனுபவம்... "//
ReplyDeleteஒரு முறை சென்றிருக்கிறேன்... மறக்க முடியாத அனுபவம்
"படத்தின் ஆரம்பத்தில் அந்த பெண் ரொம்ப சப்பையாக இருக்கின்றதே என்று என்னும் போது படத்தில் போக போக அந்த பெண் நம் இதயத்தில் நன்றாக இடம்"
ReplyDeleteஅட போங்க சார் நம்ம கோங்க்லிய போயி இப்படி சொல்லி போட்டிங்க
இந்த பொண்ணு நடிச்ச படங்கள பார்த்துட்டு ஒரு பதிவு போடுங்க
(1) quijuo story
(2) ju do story
(3)the red latern
(4)the road home
இந்த பொண்ணுடைய ஆஸ்தான இயக்குனர் சியாங் சிமு
ஒரு கொசுறு செய்தி இந்த பொண்ணு பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி
ஒரு சிங்கபூர் பையான கலியாணம் பண்ணிகிட்ட
nice..
ReplyDeletey no sandwich nowadays???