காக்க காக்க படத்தில் நடிகர் சூர்யா ஒரு வரி சொல்லுவார்... பொண்ணுங்க விஷயத்துல நான் ஒன்னும் அவ்வளவு எக்ஸ்பர்ட் இல்லைன்னு... ஆது போலதான் எனக்கு சினிமாவும்.. குறும்படமும்....
நான் எடுத்த குறும்படங்கள் என் திரைவடிவத்தை சோதித்த பார்க்கும் ஆய்வுகூட எலிகள் என்பேன்...எதுவுமே செய்யாமல் அதை செய்து இருக்கலாம்... இதை செய்து இருக்கலாம் என்று சொல்வதை விட, எதையாவது செய்ய வேண்டும் என்று எடுக்கபட்ட படங்கள்தான் எனது குறும்படங்கள்..
அதே போல் சினிமா நான் மட்டும் விளையாடும் விளையாட்டு மைதானம் அல்ல.... அது எல்லோருக்கும் சாத்தியம் ஆன இடம்.... நேரம் இருந்தால் அதில் விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்கள்.... எனது படம் குறைந்த செலவில் நான் சொல்ல வந்த விஷயத்தை பல காம்பரமைஸ்களோடு சொல்லி இருக்கின்றேன்....
என் படத்தினை உங்கள் பார்வைக்கு வைத்தும் உங்கள் வரவேற்ப்புக்கு பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்....
போலி புகழ்ச்சிக்கு ஆட்பட வேண்டாம் என்பதில் இருந்ததுலாஜிக் மீறல் வரை எல்லோரும் நட்போடு உணர்த்தினீர்கள் மிக்க நன்றி...பல பேர் என்ன சொல்ல வந்திங்க என்று கேட்டார்கள்..?
இன்னும் சில பேர் முடிவை ஏன் பாசிட்டிவாக மாற்றவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.... ஒரு திரைப்படம் எல்லோரையும் திருப்தி படுத்தாது என்பது எனக்கு நன்கு தெரியும்....
நண்பர் மூரா சொன்னார்... பணம் இல்லை என்றால் யோசிக்க கூடாதா? என்று உண்மைதான் ஒரு காட்சியை யோசிக்கும் போதே.. பணம் முன்னால் வந்து நிற்கும் நண்பரே... பணத்தையும் இடத்தையும் தேவைகளை வைத்துதான் எல்லா காட்சிகளும் உருவாகும்...அது உங்களுக்கு தெரிய நியாயமில்லை... எனது முதல் படத்துக்கு 60 ஆயிரம் செலவு.... என் நண்பனின் மனைவியின் நகைகள் மார்வாடிகாரணிடம்.... கொஞ்சகாலத்துக்கு ரகசியம் பேசின....
என் நண்பனிடம் இவ்வளவு செலவு ஏன் ஏனும் போது , சினிமா இன்ஸ்டியுட்டில் சேர்ந்து படித்தால் செலவாகும் அல்லவா... அதனால் சினிமா எடுத்து கற்றுக்கொள்கின்றேன் என்றான்....
அந்த “துளிர்”படத்தால் என் வாழ்க்கை உயர்ந்தது... எங்களுக்கு நல்ல பேர் எங்கள் ஊரில் கிடைத்து.. ஆனால் போட்ட காசை எடுக்கும் வித்தை எங்களுக்கு கை வரவில்லை... லோக்கல் கேபிளில் ஒளிபரப்பினோம். மக்கள் முன் எங்கள் படைப்பை வைத்தோம்.. ஒரு இரண்டு கைபேசி எண்ணை கொடுத்தோம்.....சத்தியமாக சொல்கின்றேன் 180 போன் அழைப்புகள் படத்தை பற்றி பாராட்டி வந்த போது அதில் 12 கால் கள் கிளைமாக்ஸ் மாற்றி இருக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தன...
சரி டெம்பட் படத்தின் ஒற்றை வரி என்ன?.... போதைக்காக எடுத்து கொள்ளும் எந்த விஷயமும் ஒரே நாளில் தலை முழ்கும்... சாத்தியம் இல்லை என்பதுதான்...
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்... இன்னைக்கு ராத்திரிக்கு மட்டும் ஊத்திக்கின்றேன் என்ற பாடல்தான்.... அந்த படத்தின் ஒற்றைவரிபாடல்..
சத்தியம் சக்கரை பொங்கல்... போன்ற வரிகள்தான் இந்த படத்தின் ஒன்லைன் ஆர்டர்...
சரி கதைக்கு வருவோம்....
முதலில் கோவிலில் சத்தியமாக இனி சிகரேட் பிடிக்க மாட்டேன் என்று வேண்டிக்கொண்டு வருபவன்... ஏன் சிகரேட் பிடிக்க ஆரம்பித்தேன் என்பதற்க்கு காதல் தோல்வி காரணமாய் இருக்கின்றது....இப்போது அதாவது இந்த நேரத்தில் அவன் சிகரேட் விட்டதற்கு முக்கிய காரணம் அவன் அண்ணன் அவனை அசிங்கமான வார்த்தை சொல்லி திட்ட...சரி சிகரேட் விடு வோம் என்ற முடிவுக்கு வருகின்றான்... காரணம் ஒரு பெண் காதல் என்ற போ்வையில் ஏமாற்றி விட நண்பன் ஒருவன் சிகரேட்டை பழக்க படுத்த அன்றிலிருந்நது சிகரேட்க்கு அடிமை ஆகின்றான்.. அவள் நினைக்கும் போது எல்லாம் சிகரெட் பிடிக்கின்றான்....இதற்க்கு முன் இவன் சிகரேட் பிடிப்பதை இவன் குடும்ப உறுப்பினர்கள் கண்டித்து இருப்பதையும் சொல்கின்றான்... திரும்ப அவளை பற்றி வருனிக்கும் போது அவள் ஞாபகம் வர திரும் என்ன செய்கின்றான் என்பது கிளைமாக்ஸ்....இதுதான் கதை டெம்ட் படத்தின் கதை...
முதலில் இந்த படத்திற்க்கு நான் போடும் பணம் ஆயிரம் என்பது என்னை பொறுத்தவரை பெரிய விஷயம்....ஒரு பத்தாயிரம் இருந்து இந்த படத்தை எடுத்தது இருந்தால் இன்னும் நேர்த்தியாக ஒளிபதிவு செய்து எடுத்து இருக்கலாம்....
அதே போல் இந்த படத்தில் எல்லா காட்சியின் வசனங்களும் லைவ் சவுண்டில் எடுக்கபட்டது...படத்திற்க்கு டப்பிங் என்பதே இல்லை...
நண்பர் முரா அவர்களுக்கு நீங்கள் உங்கள் தரப்பை சொல்லி இருக்கின்றீர்கள்...நீங்கள் அறிமுகபடுத்திய குறும்படம் மிக அருமை... ஆது போல் எடுக்க என்னாலும் முடியும்... ஆனால் அந்த 12 நிமிட படத்தின் பின் டைட்டில் பேர் போடும் போது 50உழைத்த கலைஞர்கள் பெயரை பார்த்தீர்கள் அல்லவா?
இந்த ஏழு நிமிட படத்துக்கு மொத்தம்...4 பேர் உழைத்தோம் என்பதை மறவாதீர்... அது போல் ஒரு நண்பர் என்னிடம் பணம் இருந்தாலும் நீ படம் எடுக்க கொடுக்க யோசிப்பேன் என்று பின்னுட்டம் இட்டு இருந்ததார்...அண்ணே நீங்க யார் பெத்த புள்ளையோ..எனக்கு நீங்க பணம் கொடுத்து படம் எடுக்கறத பத்தி் எல்லாம் யோசிக்காதிங்க.... உங்க தொழிலை பாருங்க....
அதே போல் இந்த படத்தில் ஏன் மற்ற கேரக்டர்கள் இல்லை என்பதை நக்கலாக படம் எடுத்தால் பணம் லாஸ் ஆகும் என்பதை சொல்ல அந்த வரிகளை குறிப்பிட்டேன்.. நான் கலையை வளர்க்க சினிமாவுக்கு வரவில்லை...
ஏனென்றால் நான் நான்கு படம் எடுத்து விட்டு எழுதும் போது ஒவ்வொறு படைப்பாளியின் வேதனையும்... அதன் பின் இருக்கும் சோதனைகளையும் நான் அறிவேன்....மனதில் இருக்கும் காட்சியை திரைவடிவம் ஆக்குவது என்பது அவ்வளவு சாதாரணம் அல்ல.... அது எல்லேருடைய கூட்டு முயற்ச்சி... எல்லோரும் ஒரே அலைவரிசையில் வேலை செய்த படங்கள்தான் வெற்றி பெற்று இருக்கின்றன.....
அதே போல் எனக்கு டைரக்ஷன் என்பது எவரிடமும் நான் அசிஸ்டென்டாக இல்லை... நான் சினிமா பார்த்து சினிமா எடுக்க கொஞ்சமாக கற்றுக்கொண்டவன்.... என் அப்பா ஒரு ஜவுளிகடை குமாஸ்த்தா....என் 22 வயதுவரை நான் என்னவாக போகின்றேன் என்று தெரியாமல் இலக்கில்லாமல் சுற்றிதிரிந்தவன்.....
மற்றபடி அற்புதமான விமர்சனம் முன் வைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.. இன்னும் பல படங்கள் இன்னும் சிறப்பாக செய்வோம்... முரா அறிமுகபடுத்திய குறும்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்...அந்த படம் கீழே...
அந்த 12 நிமட படம்
அந்தபடத்தையும் எனது படத்தையும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள்....அது லீராயல் மெரிடின்...எனது படம் ரோட்டோர சால்னாகடை.... எதாவது மனதை காயபடுத்தும் விதமாய் இந்த பதிவு இருந்தால் மன்னிக்கவும்....
நன்றி
உங்கள் ஆசியுடன்
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
ஏன்?.. இவங்களுக்கு விளக்கம் கொடுத்து
ReplyDeleteஉங்கள் நேரத்தை வேஸ்ட் பண்றீங்க அண்ணே...
முயற்சிகளை கிண்டல் பண்ணுபவர்களை
என்ன சொல்றது....
விளக்கம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் உங்களின் தனிப்பட்ட உரிமை, எனவே அதில் தலையிடவோ அறிவுரை கூறவோ எனக்கு எந்த வித உரிமையயும் இல்லை.
ReplyDeleteஎன் பார்வையில் உங்கள் குறும்படம் மிக அருமை, தொழில் நுட்பம், , லோகசைன், வசனம் , ஒலி போன்றவை எல்லாம் அருமை.
எனது ஒரே வேண்டுகோள் நீங்களும் இன்னும் ஏன் இந்த காதல், புட்கை பிடித்தல், சாராயம் குடித்தல் போன்ற குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறீர்கள். இதை விட்டு வேறு தளத்திற்கு செல்லுங்கள்.
நானும் சமீபத்தில் பல தமிழ் இளம் இயக்குனர்கள், நடன இயக்குனர்கள் பார்க்கிறேன், எல்லாரும் மது அருந்துதல், புகை பிடித்தல் என்ற வட்டதிற்கு உள்ளேயே உள்ளனர். (மதுரை சம்பவம் ஹரி, செனை௨௮ பிரேம், மிஷ்கின்..)
பாலு மகேந்திரா, மணி ரத்னம், கே. விஷ்வநாதன் போன்றவர்களின் ஆரம்ப கால படங்கள் பார்த்தல் அவர்களது சிந்தனை போக்கே வேறு தளத்தில் இருந்தன. நீங்கள் உடனே நான் வளர்ந்த சூழால் அப்படி என்று சொல்ல வராதீர்கள்.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
ReplyDeleteதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
ஜாக்கி, இந்த மாதிரி சத்தியம் செய்து அதே நாளிலேயே கூட சத்தியத்தை மீறியவர்களை நான் பார்த்திருக்கிறேன். அதனால் முடிவை மாற்றுவது பற்றி சொல்பவர்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். என் பார்வையில் ஒரு சில வசனங்களை தவிர அந்தப் படம் மிக அருமை. 4 பேர் மட்டும் உழைத்து ஆயிரம் ரூபாயில் படம் தயாரிப்பது சாதாரண விஷயம் அல்ல. உங்கள் முயற்சியால் மேலும் வளர வாழ்த்துகள்
ReplyDeleteஜாக்கிசேகர் இதற்காக வருத்தப்படாதீர்கள்....உண்மையில் இதில் வருத்தப்பட எதுவுமில்லை..நமக்கு வரும் விமர்சனங்களை நமக்கு கிடைக்கும் ஒரு படிக்கல்லாக மாற்றி கொள்வதே நம் முன்னேற்றத்திற்கு நல்லது.
ReplyDeleteபடம் எடுப்பது எவ்வளவு சிரமமான வேலை என்று படம் எடுப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்..
எனக்கு நமது பதிவர்கள் ஒரு சில திரைப்படங்களை மனசாட்சி இல்லாமல் தாறுமாறாக விமர்சிக்கும் போது ஒரு படைப்பாளியாக அவரின் மனம் எவ்வளவு பாடு படும் என்பது உங்கள் எழுத்தில் இருந்து தெரிகிறது.
கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது..தற்போது உங்களுக்கு கிடைத்து இருக்கும் அனைத்து அனுபவங்களும் உங்கள் முன்னேற்றத்திற்கே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
கடைசியாக... அனைவரையும் திருப்தி படுத்தும்படி கடவுளால் கூட படம் எடுக்க முடியாது.
ஜாக்கி,வாடிக்கையாளர்கள் ஆதரவால் சால்னாக்கடையும் லீ மெர்டியன் ஆகும்
ReplyDeleteநாள் தொலைவில் இல்லை.
களைத்திட வேண்டாம் கண்டனங்கள் கண்டு...
உழைத்திடுங்கள் உற்சாகத்தோடு உயர்வை நோக்கி....
தோழர்கள் நாங்கள் தோள் கொடுப்போம்.....
நண்பரே, வணக்கம் நாலு நாளாக நெட் வரலை. TATA Indicomm-காரண் கடுப்பேத்திட்டான். எனக்கு உங்கள் அறிமுகமான தினத்திலிருந்து உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். என்னுடைய சிறிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஒரு பதிவை இட்டதற்க்கு ஆயிரம் நன்றிகள். உங்கள் படைப்பை விமர்சணம் செய்யும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை.எனக்கு ஒரு சிறு ஆதங்கம் மட்டுமே இருந்தது.ஜாக்கி ஜான் படம் பார்த்து விட்டு தமிழ்ல ஏன் இப்படி ஒரு ஜாக்கி ஜான் வரலனு ஆதங்கபடுவது போல.... சூழ்நிலை... நீங்கள் கூறியது. தலை வணங்கி ஏற்று கொள்கிறேன். ”நான் கலையை வளர்க்க சினிமாவுக்கு வரவில்லை...” என்று உங்களை போண்றவர்கள் கூறும் போது கஷ்டமாக உள்ளது. உங்களை போண்றவர்கள் வர முடியாததால்தான் நாங்கள் இன்னும் சாக்கடையை விட நாற்றமெடுக்கும், கழிசிடை படங்களை பார்த்து கொண்டிருக்கிறோம். மன்னிக்கவும். சினிமா துறை சார்ந்தவரிடம் இப்படி பேசி இருக்க கூடாது.உங்கள் சூழ்நிலை எங்களுக்கு புரிகிறது. ஆனால் முயன்றால் முடியாதது எதுவுமில்லை. நீங்கள் மிகவும் விரும்பும் ஜாக்கி ஜானே பணம் இல்லாமல் கஷ்டபட்டவர்தான்... தடைகளை உடைத்து உங்களை போண்றவர்கள் வர வேண்டும். என்பதுதான் என் எண்ணம். தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும்.
ReplyDeleteசிறு குறிப்பு: எனது புனைபெயர்: மு.இரா, நானொரு வேளாண்மை பட்டதாரி. முரா என நீங்கள் குறிப்பிட்டிருப்பது, ஒரு எருமை மாட்டின் வகை பெயர். இது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இல்லை தெரிந்து கொண்டுதான் அப்படி என்னை அழைக்கிறீர்களோ???? தெரியவில்லை.(சும்மா ஜாலிக்கு...) என்னுடைய அழகான பெயர் மீது கொஞ்சம் கவணம் வைய்யுங்கள். நன்றி. மீண்டும் வருவேன்.
ஏன்?.. இவங்களுக்கு விளக்கம் கொடுத்து
ReplyDeleteஉங்கள் நேரத்தை வேஸ்ட் பண்றீங்க அண்ணே...
முயற்சிகளை கிண்டல் பண்ணுபவர்களை
என்ன சொல்றது....//
ஜெட்லி அது எனது தரப்பு விளக்கம் அவ்வளவுதான்..
விளக்கம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் உங்களின் தனிப்பட்ட உரிமை, எனவே அதில் தலையிடவோ அறிவுரை கூறவோ எனக்கு எந்த வித உரிமையயும் இல்லை.
ReplyDeleteஎன் பார்வையில் உங்கள் குறும்படம் மிக அருமை, தொழில் நுட்பம், , லோகசைன், வசனம் , ஒலி போன்றவை எல்லாம் அருமை.
எனது ஒரே வேண்டுகோள் நீங்களும் இன்னும் ஏன் இந்த காதல், புட்கை பிடித்தல், சாராயம் குடித்தல் போன்ற குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறீர்கள். இதை விட்டு வேறு தளத்திற்கு செல்லுங்கள்.
நானும் சமீபத்தில் பல தமிழ் இளம் இயக்குனர்கள், நடன இயக்குனர்கள் பார்க்கிறேன், எல்லாரும் மது அருந்துதல், புகை பிடித்தல் என்ற வட்டதிற்கு உள்ளேயே உள்ளனர். (மதுரை சம்பவம் ஹரி, செனை௨௮ பிரேம், மிஷ்கின்..)
பாலு மகேந்திரா, மணி ரத்னம், கே. விஷ்வநாதன் போன்றவர்களின் ஆரம்ப கால படங்கள் பார்த்தல் அவர்களது சிந்தனை போக்கே வேறு தளத்தில் இருந்தன. நீங்கள் உடனே நான் வளர்ந்த சூழால் அப்படி என்று சொல்ல வராதீர்கள்.//
நன்றி ராம்ஜி
ஒரு சின்ன விளக்கம் மட்டும்
நீங்கள் சொன்ன கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கின்றேன்...
ஆனால் பத்து வருடத்துக்கு முன்பு தண்ணி அடித்தால் பொறிக்கி... இப்போது ஐடி வந்து விட்டதால் தண்ணி அடிப்பது என்பது வாழ்வோடு கலநத வருடங்கள் பலவாயிற்று...
நிச்சயம் அடுத்த படத்தில் நிச்சயம் உறவுகளை சொல்ல வருகின்றேன்...
நன்றி மு இரா உங்கள் விரிவான கடிதத்திற்க்கும் என் மேல் தாங்கள் கொண்டுள்ள மதிப்புக்கு எனது நன்றிகள்.. நிச்சயம் நீங்கள் சொன்ன விணயத்மதை மண்டையில் ஏற்றி்கொள்கின்றேன்,,,
ReplyDeleteஜாக்கி, இந்த மாதிரி சத்தியம் செய்து அதே நாளிலேயே கூட சத்தியத்தை மீறியவர்களை நான் பார்த்திருக்கிறேன். அதனால் முடிவை மாற்றுவது பற்றி சொல்பவர்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். என் பார்வையில் ஒரு சில வசனங்களை தவிர அந்தப் படம் மிக அருமை. 4 பேர் மட்டும் உழைத்து ஆயிரம் ரூபாயில் படம் தயாரிப்பது சாதாரண விஷயம் அல்ல. உங்கள் முயற்சியால் மேலும் வளர வாழ்த்துகள்//
ReplyDeleteநன்றி ராஜழ அது போல் என் வாழ்விலும் நடந்த விஷயம்தான்...
ஜாக்கிசேகர் இதற்காக வருத்தப்படாதீர்கள்....உண்மையில் இதில் வருத்தப்பட எதுவுமில்லை..நமக்கு வரும் விமர்சனங்களை நமக்கு கிடைக்கும் ஒரு படிக்கல்லாக மாற்றி கொள்வதே நம் முன்னேற்றத்திற்கு நல்லது.
ReplyDeleteபடம் எடுப்பது எவ்வளவு சிரமமான வேலை என்று படம் எடுப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்..
எனக்கு நமது பதிவர்கள் ஒரு சில திரைப்படங்களை மனசாட்சி இல்லாமல் தாறுமாறாக விமர்சிக்கும் போது ஒரு படைப்பாளியாக அவரின் மனம் எவ்வளவு பாடு படும் என்பது உங்கள் எழுத்தில் இருந்து தெரிகிறது.
கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது..தற்போது உங்களுக்கு கிடைத்து இருக்கும் அனைத்து அனுபவங்களும் உங்கள் முன்னேற்றத்திற்கே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
கடைசியாக... அனைவரையும் திருப்தி படுத்தும்படி கடவுளால் கூட படம் எடுக்க முடியாது.//
உண்மை கிரி நீங்கள் சொல்வது உண்மைதான்.. விரிவாய் எனக்கு பின்னுட்டம் இட்டதற்க்கு என் நன்றிகள்...
ஜாக்கி,வாடிக்கையாளர்கள் ஆதரவால் சால்னாக்கடையும் லீ மெர்டியன் ஆகும்
ReplyDeleteநாள் தொலைவில் இல்லை.
களைத்திட வேண்டாம் கண்டனங்கள் கண்டு...
உழைத்திடுங்கள் உற்சாகத்தோடு உயர்வை நோக்கி....
தோழர்கள் நாங்கள் தோள் கொடுப்போம்.....//
நன்றி துபாய் ராஜா இந்த வார்த்தைகளே போதுமானது...
//உழைத்திடுங்கள் உற்சாகத்தோடு உயர்வை நோக்கி//
ReplyDeleterepeateyyy
டெம்ட் குறும்படத்தில் வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று எல்லாம் அருமையாக இருந்தது.
ReplyDelete