ட
ஏனோ நம்மவர்கள் ஹாலிவுட்காரர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம்மவர்களுக்கு நாம் ஏனோ கொடுக்க தவறி விடுகின்றோம்...நமது தமிழ் மொழியில் உணர்வுபூர்வமாய் ஒரு அற்புதமான படம் எடுத்து இருக்கின்றார்கள்... ஆனால் நாம் அந்த படத்தை மிகச்சரியாக கொண்டாடவில்லை என்பது என் கருத்து...
அதே போல் நம்மவர்கள் சினிமா பார்க்கும் பார்வை நிச்சயம் மாற வேண்டும்... இப்போதெல்லாம் நல்லபடங்கள் யார் எடுக்கின்றார்கள்? என்று அங்கலாய்ப்பு மட்டுமே நம்மிடம் உண்டு... ஆனால் அப்படி ஒரு படம் எடுத்தால் அந்த படத்துக்கு ஆதரவு என்பது நம்மில் எத்தனை பேர் கொடுக்கின்றோம்.... படத்தில் எந்த பிரேமிலும், எந்த வித ஆபாசமும் இல்லாத இந்த படத்துக்கு தமிழ் சமுதாயம் சரியான வெற்றியை கொடுக்கவில்லை என்பது என் எண்ணம்..
ரொம்ப அற்புதமான ரொமாண்டிக் தமிழ் மூவியாக நான் சொன்னது... பெண் இயக்குனர் பிரியா இயக்கிய “கண்ட நாள் முதல்” படத்தைதான்... இந்த படத்தை எப்போது பார்த்தாலும் ஒரு உற்ச்சாகம் ... என்னோடு ஒட்டிக்கொள்ளும்.... இது ஒரு கவிதையான காதல் படம்.....
ரொம்ப அற்புதமான படம்... நம் எல்லோருக்கும் ஒரு குணம் உண்டு . ஆணோ,பெண்ணோ அவர்களை நமக்கு முதலில் பிடிக்காதது போல்தான் தோன்றும் ஆனால் போக போக மனதளவில் நாம் அவர்களை நேசிப்போம் என்பதுதான் படத்தின ஒன்லைன்ஆ ர்டர்.... என் மனைவி அவள் பள்ளியில் படிக்கையில் என்னை பார்த்த போது என்னை பொறுக்கி என்றாள்... என்னோடு பேசவே அச்சப்படுவாள்....தேவ்ர்மகன் படம் வந்து பங்க் வைத்து அலைந்த நேரம் அது....
கண்டநாள் முதல் படத்தின் கதை இதுதான்....
கிருஷ்ணா(பிரசன்னா), ரம்யா (லைலா) இருவரும் சிறுவயதில் செங்கல் பட்டில் நடக்கும் ஒரு திருமணத்தில் சண்டை போட்டு கொள்கின்றார்கள்... விதியின் விளையாட்டு அவர்கள் 20 வருடம் கழித்து திரும்பவும் ஈரோட்டில் இருக்கும் ஒரு கல்லூரி ஆண்டு விழாவில் திரும்பவும் சண்டை போட்டு கொள்கின்றார்கள்....
சென்னையில் கிருஷ்ணாவின் நண்பன் அரவிந்(கார்த்திக்) நடத்தும் கம்யூட்டர் நிறுவனத்தை பார்த்துகொள்ள சொல்லி கிருஷ்ணாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அமெரிக்கவில் இருக்கின்றான்....கிருஷ்ணாவின் நண்பன் அரவிந்துக்கு திருமணம் செய்ய அரவிந் அம்மா ரமணி(லட்சுமி) ஆசைப்பட... பெண் பார்க்கும் போது அது கடைசியில் இவனோடு சிறு வயதில் இருந்தே சண்டை போடும் ரம்யாதான் தன் நண்பனின் மனைவியாக போகின்றாள் எனபது தெரிந்தும்... அவளை திருமண்ம் செய்து கொள்ள வேண்டாம் என்றும், ரம்யாவின் அடங்காபிடாறி தனத்தை நண்பனிடம் கிருஷ்ணா எடு்த்து சொல்லிகின்றான்...அததே போல் முகத்துக்கு நேரே ரம்யாவிடம் அர்விந் தனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று சொல்லிவிட்டு அமெரிக்கா பறக்க இங்கே ரம்யாவிட்டில் அவள் தங்கையால் குழுப்பம் நேரா... ரம்யாவின் அம்மாவுக்கு (ரேவதி) ஹார்ட் அட்டாக் வர அந்த ஆண் துனை இல்லாத வீட்டில் பொறுப்பாய் சில பல உதவிகள் ரம்யா குடும்பத்துக்கு செய்கின்றான்.... இருவருக்கும் சண்டை மறைந்த காதல் பூ பூத்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்து அரவிந் ரம்யாவையே கல்யாணம் செய்து கொள்கின்றேன் என்று வர குழப்ங்களுக்கு தீர்வை மிக கவிதையாக சொல்லி முடிக்கின்றார் இயக்குனர் ப்ரியா
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
முதல் பட வாய்ப்பை பெண் என்று நினைக்காமல் இயக்குனர் பிரியாவின் திறமையை நம்பி அவருக்கு வாய்ப்பு கொடுத்த பிரகாஷ்ராஜ் மற்றும் டுயட் பட நிறுவனத்துக்கு எனது மானசீக நன்றிகள்....
அதே போல் முதல் பட இயக்குனருக்கு பெரிய டெக்னிஷியன்கள் கொடுப்பது எல்லாம் பெரிய விஷயம்... ஒளிப்பதிவு பிசி... இசை யுவன் என்று சொல்லிக்கொண்டு போகலாம்....
ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒரு வயதுக்கு வந்த பெண், துணியை அயன் பண்ண போகின்றேன் என்று சொல்லி விட்டு ,காதலனோடு ஓடிப் போகும்பெண்ணாகளால், அந்த வீடுகள் தவிக்கும் தவிப்பை மிக அழகாக பதிவு செய்து இருப்பார் இயக்குனர்....
இருவர் சண்டையும் அதற்க்கு பின் அவர்கள் உணரும் மெல்லிய காதலும் அதை பார்வையாளனுக்கு காட்சி படுத்திய விதத்தில்இயக்குனர் நன்றாவே செய்து இருப்பார்... பிரசன்னாவின் காதலை ஆண் பார்வையாளனும் லைலாவின் காதலை பெண் பார்வையாளரும் படம் பார்க்கும் போது நிச்சயம் அந்த குறு குறுப்பு பிலிங்கை இரு பாலரும் உணர்வார்கள்...என்பதில் துளியும் சந்தேகம் இல்லை...
படத்தில் கடியும், கண்ணத்தில் பளீர் அறையும் வாங்கும் ஹீரோ எந்த இடத்திலும் தன் புஜபலத்தை படத்தில் காண்பிக்க வில்லை....
படத்தில் சண்டை காட்சிகளே இல்லை......
வீட்டிற்க்கு வரும் பிரசன்னா ரூமில் யார் வந்தாலும் கதவை திறக்க மாட்டேன் என்று சொல்லும் லைலா, பிரசன்னா வந்ததும் கதவை திறந்து வெளியே வரும் போதே அந்த காதலை நாம் உணர முடிகின்றது....
அதே போல் அவள் மூட் அவுட்டுக்கு காரணம் லைலா ஆபிஸ் மேனேஜர் காரணம் என்பதை அறிந்து, எதெச்சையாக டிராபிக்கில் அவனை பார்க்க....லைலா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் , காரில் ஏறி ஒரு ரவுண்ட் அடித்து விட்டு பிரச்ன்னா காரை விட்டு இறங்கியதும், மேனேஜர் வீங்கிய உதடுளுடன் மன்னிப்பு கேட்கும் போது அங்கே லைலா அவனை எவ்வளவு உயர்வாய் மதித்தாள் என்பதையும் நடு ரோடு என்று கூட பார்க்காமல் அவன் தோள்சாவதும் அதனுடே வரும் பின்னனி இசையும் கவிதையான நெகிழ்ச்சியான காட்சிகள்..... அதன் பிறகு வண்டியில் போகும் போது இவன் எனக்கானவன் என்பதாய் அவள் கையை எடுத்து அவள் தோள் மேல் போட்டு இறுக்கி கொள்வது...சிறப்பு..
வசனங்களில் ராமதாஸ் நன்றாக எழுதி இருப்பார் உதாரணத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் பிரசன்னாவிடம் லைலா நான் நானாக இல்லமல் இருப்பதும் உன்னாலதான் என்று பேசும் அந்த வசனம் மிக அற்புதம்....
தன் காதலை நண்பனுக்காக விட்டு கொடுக்கும் பிரசன்னாவிடம் லைலா தேசிய நெடுஞ்சாலையில் பேசி விட்டு நடக்கும் காட்சியில் பின்னனியில் காதலே எனத்தொடங்கும் பாடல் கவிதை....
டிரெஸ் அளவுக்காக பிரச்ன்னாவிடம் லைலா கேட்க, அப்போது டல்லாக இருக்கும் பிரச்ன்னாவிடம் லைலா உடம்பு சரியில்லையா என்று கேட்கும் போது? கையை நீட்டி தனக்கு ஜீரம் இருக்கின்றதா என்று பிரச்ன்னா கை நீட்ட அதனை தட்டி விட்டு வைலா பிரச்ன்னா கழுத்தில் நெற்றியில் கை வைத்து பார்க்கும் இடத்திர் இயலாமையில் மனதளவில் பிரச்ன்ன புழுங்கும் காட்சிகள் பிரமாதம்....
ஒளிப்பதிவு பிசி உறுத்தாமல் காட்சிக்கு தேவையானதை மட்டும் சிறை படுத்தி இருப்பார்...
பாடல்களில் மெலடி அனைத்தும் அருமை...ஒரு பாடலில் பிரேம்ஜி நடித்து இருப்பார்...
ரேவதி , லட்சுமி, தேவதர்ஷினி போன்றவர்கள் நடிப்பு இயல்பானது....
மேற்க்கே மேற்க்கேதான் சூரியன் உதித்திடுமே சாங்கும் லோக்கேஷனும், அதில் லைலா கட்டிக்கொண்டு வரும் அனைத்து டார்க் கலர் சாரியும் , மனசை என்னவோ பின்னும் போங்க...
அதே போல் படம் நெடுக கார்னாடக சங்கீதம் இழையவிட்ட இசை படத்தை உறுத்தால் இல்லாமல் பார்க்க உதவும்....
இயக்குனர் பிரியா இயக்குனர் மணிரத்தனத்தின் உதவியாளர்....
ஒரு பெண் இயக்குனர் படம் என்பதால் படம் நெடுக ஒரு மென்னைமயை உணர முடிகின்றது....(படத்தில் இயக்குனர் பிரியா காட்சியை விளக்கும் போது....)
லைலா நல்ல நடிகை என்பது நிருபிக்கப்ட்ட விஷயம்தான்.. இந்த படமும் அதைதான் செய்கின்றது....
ரேடியோ மிர்ச்சி சுசித்தரா புருசன் ,கார்த்திக் நன்றாகவே நடித்து இருப்பார்...வழக்கம் போல நுனி நாக்கு ஆங்கிலம்....
ஏர்போர்ட்டில் லைலா கார்த்திக் கையை தொட்டு பேச அவனை தொட்டு பேசாதை எனக்கு பிடிக்கலை என்ற வெளிப்படையாக புலம்புவதம் , எல்லோரும் என்னை புரிந்து கொள்வார்கள் என்று சொல்லி விட்டு கண்கலங்கும் போது உண்மையிலேயே இயல்பான நடிகன் என்பதை பிரசன்னா நிருபித்து இருப்பார்...
அதே போல் லைலாவை பார்த்து “இவ பார்த்தாலும் சாகடிக்கிறா, பார்க்ாட்டாலும் சாகடிக்கறாடா” என்று சொல்லி புலம்பும் காட்சி கவிதை...
அதே போல் இந்த படத்தில் எ பில்ம் பை என்று இயக்குனர் பேர் மட்டும் போடாமல் படத்தில் வேலை செய்த எல்லோருடைய பெயரையும் போட்ட இயக்குனர் பிரியா உண்மையிலேயே வித்யாசமானவர்தான்....
ஏற்க்கனவே இந்த படத்தை பார்த்தவர்கள் மறுபடியும் நான் குறிப்பிட்ட விஷயங்களோடு இந்த படத்தை மீண்டும் பார்த்தால் இன்னும் ரசிப்பீர்கள்....
படத்தின் டிரைலர் பார்க்க கீழ் உள்ள தளத்துக்கு போகவும்.... http://www.indiaglitz.com/channels/tamil/trailer/7728.html
படத்தின் குழு விபரம்...
Director: Priya
Producer: Prakash Raj
cinematography: P.C. Sreeram
MUSIC_DIRECTOR: Yuvan Shankar Raja
Karthik Kumar - Aravind
Laila - Ramya
S.N. Lakshmi - Arvind's Mother
Srinivas Murthy - Ramya's father
Prasanna - Krishna
Revathi - Ramya's Mother
புகைபடங்கள்... நன்றி இன்டியா கிளிட்ஸ்
அன்புடன்/ஜாக்கிசேகர் தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
வந்துட்டேன்
ReplyDeleteசிறப்பான விமர்சனம் ஜாக்கி
ReplyDeleteலைலாவின் நடிப்புக்கு பெயர் சொல்லும் படம்.
ஒட்டும் போட்டாச்சு
நல்ல படம்..
ReplyDeleteஉங்களின் விமர்சனமும் ரசிப்புத்தன்மையும் அழகு..
நல்லா இருக்கு உங்கள் விவரிப்பு.
ReplyDeleteஆனா அந்த படம் இங்கே வரலியே....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
உட்டாலக்கடி தமிழனின் விமர்சனம் ரேஞ்சுக்கு ரொம்ப நீளம் :-)
ReplyDeleteபொதுவா ஷார்ட் & ஸ்வீட்டா சொல்வீங்களே?
//...தேவர்மகன் படம் வந்து பங்க் வைத்து அலைந்த நேரம் அது....//
ReplyDeleteஇன்னாதூ "பங்க்கா"?? நம்ம ஜாக்கியா ?? சேரி ...அத்தெல்லா ஏன் நைனா கழட்டி கடாசிகினே???
ஹி ஹி ஹி ...............................................
சிறப்பான விமர்சனம்
ReplyDeleteஎனக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும் ........
ReplyDeleteஉங்கள் விமர்சனம் அருமை ...........
நான் அடிக்கடி டிவிடி இல் பார்த்து ரசிக்கும் படங்களில் இதுவும் ஒன்று.. மன வெறுப்பின் நடுவே அருமையான மெல்லிய காதல் இழை ஓடும் கதை...
ReplyDeleteபடத்தில் என்னை ரசிக்க வைத்தது... லைலா கார்த்திக் பிரசன்னா மூவரும் வெளில் செல்லும் போது... லைலா கார்த்திக்கு என்ன பிடிக்குமோ அதையே தனக்கும் பிடித்தது போல நடந்து கொள்ள.. அதற்கு பிரசன்னா அடிக்கும் கமெண்ட்.. அருமையான காட்சி அமைப்பு... கடைசியில் இருவரும் காதலை உணர்ந்து வெளிக்காட்டும் இடமும் அருமை..
எல்லாம் சரிதான் நண்பரே, ஆனால் முக்கியமான சீன விட்டுடீங்களே...
ReplyDeleteஒரு Cafe Bar- ல லைலாவும், அந்த அமெரிக்க மாப்பிள்ளையும் உட்கார்ந்திருப்பாங்க... மேலை பிரசன்னா நின்னுகிட்டு லைலா பண்ணுவதை கமெண்ட் அடிப்பாரு... “அமெரிக்க மாப்பிள்ளைன்னா, எப்படி வழியறலாலுங்க.... Something Like... எனக்கு சரியா ஞாபகமில்லை.. அந்த சீனுக்காகவே படம் பார்க்கலாம்.
பின் குறிப்பு: ஏதாச்சும் அடங்காபிடாரி பொண்ணுங்கனாவே, அவங்களுக்கு ரம்யா-னுதான் பேர் இருக்கு ஏன் தலைவா?
இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சமே, தனியாக காமெடியன் காமெடி ட்ராக் என்று இல்லாவிட்டாலும் ஒரு மென்மையான நகைச்சுவை படம் முழுக்கவே இருக்கும்.. பிரசன்னா கலக்கோ கலக்கென்று கலக்கியிருப்பார்.. அதுவும் லைலா-பிரசன்னா-கார்த்திக்-லாலா தங்கச்சி காட்சிகளில் பிரசன்னா அடிக்கும் காமெண்ட்ஸ்.. அருமையாக இருக்கும். என்னுடைய Personal Collection (ஒரு 0.5 TB External Harddisk முழுக்க வைத்திருக்கிறேன்) இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று..
ReplyDeleteவணக்கம் ஜாக்கி
ReplyDeleteநல்ல படம், உங்கள் விமர்சனம் அருமை
நல்ல படம்.நல்ல விமர்சனம்.
ReplyDelete//...தேவர்மகன் படம் வந்து பங்க் வைத்து அலைந்த நேரம் அது....//
இன்னாதூ "பங்க்கா"?? நம்ம ஜாக்கியா ?? சேரி ...அத்தெல்லா ஏன் நைனா கழட்டி கடாசிகினே???//
ஜாக்கி,உங்களோட பல பதிவுகள்ல
'பங்க்' ஹேர்ஸ்டைல் வச்சிருந்ததைப் பத்தி சொல்லிட்டிங்க.இப்ப இருக்கிற போட்டோவை எடுத்திட்டு அந்த
'பங்க்' வச்சிருந்தபோது எடுத்த போட்டோ ஏதாவது இருந்தா பிளாக்ல போடுங்களேன்....
இப்பவும் வசிக்கலாம் தலைவரே, கல்ப் கேட் போங்க சும்மா சூப்பர பங்க் வச்சி உடுரானுங்க.....என்ன டிசைன் வேணும் என்றாலும் வச்சி தராங்க
ReplyDeleteநல்ல படம், அதை விட நல்ல விமர்சனம்
ReplyDeleteஉலக திரை படங்களை பற்றி எழுதும் எல்லோரிடமும் நான் கேட்க நினைத்த கேள்வி. தமிழ் படம் பற்றி நீங்கள் எந்த விமரிசனமும் எழுதவில்லையா என்பது. உங்களிடமும் கேட்கலாம் என்று நினைத்தேன்.
ReplyDeleteஇதோ எழுதிட்டிங்க... நன்றி....
குப்பை படங்களை கொண்டாடும் நாம், எப்போது இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு தரபோகிறோம்.... ?
நாம் ஆதரவு தரவில்லை என்பதலாயே தரமான படங்கள் தயாரிக்க(தயாரிப்பாளர் காசு போடுவதில்லை) முடிவதில்லையோ ?
அண்ணே உங்களை ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன். உங்க பங்களிப்பை செய்யுங்களேன்.
ReplyDeleteஜாக்கி,உங்களோட பல பதிவுகள்ல
ReplyDelete'பங்க்' ஹேர்ஸ்டைல் வச்சிருந்ததைப் பத்தி சொல்லிட்டிங்க.இப்ப இருக்கிற போட்டோவை எடுத்திட்டு அந்த
'பங்க்' வச்சிருந்தபோது எடுத்த போட்டோ ஏதாவது இருந்தா பிளாக்ல போடுங்களேன்....
வந்துட்டேன்--
ReplyDeleteநன்றி ஜோதி கார்த்திக் அடிக்கடி வாங்க...
சிறப்பான விமர்சனம் ஜாக்கி
ReplyDeleteலைலாவின் நடிப்புக்கு பெயர் சொல்லும் படம்.
ஒட்டும் போட்டாச்சு//
நன்றி புதுவை சிவா, தொடர் வருகைக்கு
நல்ல படம்..
ReplyDeleteஉங்களின் விமர்சனமும் ரசிப்புத்தன்மையும் அழகு..//
நன்றி தீப்பெட்டி உங்கள் வெளிப்படையான பாராட்டுக்கு
நல்லா இருக்கு உங்கள் விவரிப்பு.
ReplyDeleteஆனா அந்த படம் இங்கே வரலியே....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
நைனா இந்த படத்தை மிஸ் பண்ணாம பாரு
உட்டாலக்கடி தமிழனின் விமர்சனம் ரேஞ்சுக்கு ரொம்ப நீளம் :-)
ReplyDeleteபொதுவா ஷார்ட் & ஸ்வீட்டா சொல்வீங்களே?//
நன்றி லக்கி சில படங்களை அப்படி சொல்ல முடியாது... அவ்வளவு ரசிக்க தக்க விஷயங்கள் அதில் இருக்கும்..
//...தேவர்மகன் படம் வந்து பங்க் வைத்து அலைந்த நேரம் அது....//
ReplyDeleteஇன்னாதூ "பங்க்கா"?? நம்ம ஜாக்கியா ?? சேரி ...அத்தெல்லா ஏன் நைனா கழட்டி கடாசிகினே???
ஹி ஹி ஹி ...............................///
நடந்து போற பாதையில புள்ளு மொளைக்காது அது போல அதிகம் யோசிக்கற இடத்துல முடி தங்காது...
சிறப்பான விமர்சனம்//
ReplyDeleteநன்றி ராதா கிருஷ்னன்
எனக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும் ........
ReplyDeleteஉங்கள் விமர்சனம் அருமை ...........//
நன்றி உலவு திரட்டி டீம்
நான் அடிக்கடி டிவிடி இல் பார்த்து ரசிக்கும் படங்களில் இதுவும் ஒன்று.. மன வெறுப்பின் நடுவே அருமையான மெல்லிய காதல் இழை ஓடும் கதை...
ReplyDeleteபடத்தில் என்னை ரசிக்க வைத்தது... லைலா கார்த்திக் பிரசன்னா மூவரும் வெளில் செல்லும் போது... லைலா கார்த்திக்கு என்ன பிடிக்குமோ அதையே தனக்கும் பிடித்தது போல நடந்து கொள்ள.. அதற்கு பிரசன்னா அடிக்கும் கமெண்ட்.. அருமையான காட்சி அமைப்பு... கடைசியில் இருவரும் காதலை உணர்ந்து வெளிக்காட்டும் இடமும் அருமை..//
நன்றி கிஷோர் படத்தை பற்றி தங்கள் பாராட்டுக்கு
எல்லாம் சரிதான் நண்பரே, ஆனால் முக்கியமான சீன விட்டுடீங்களே...
ReplyDeleteஒரு Cafe Bar- ல லைலாவும், அந்த அமெரிக்க மாப்பிள்ளையும் உட்கார்ந்திருப்பாங்க... மேலை பிரசன்னா நின்னுகிட்டு லைலா பண்ணுவதை கமெண்ட் அடிப்பாரு... “அமெரிக்க மாப்பிள்ளைன்னா, எப்படி வழியறலாலுங்க.... Something Like... எனக்கு சரியா ஞாபகமில்லை.. அந்த சீனுக்காகவே படம் பார்க்கலாம்.
பின் குறிப்பு: ஏதாச்சும் அடங்காபிடாரி பொண்ணுங்கனாவே, அவங்களுக்கு ரம்யா-னுதான் பேர் இருக்கு ஏன் தலைவா?//
பேரை பத்தி எனக்கு தெரியாது என்னை ஏன்பா வம்புல மாட்டி உடற...
நீங்க சொல்லறது சரிதான் அந்த காட்சி அற்புதம்...
இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சமே, தனியாக காமெடியன் காமெடி ட்ராக் என்று இல்லாவிட்டாலும் ஒரு மென்மையான நகைச்சுவை படம் முழுக்கவே இருக்கும்.. பிரசன்னா கலக்கோ கலக்கென்று கலக்கியிருப்பார்.. அதுவும் லைலா-பிரசன்னா-கார்த்திக்-லாலா தங்கச்சி காட்சிகளில் பிரசன்னா அடிக்கும் காமெண்ட்ஸ்.. அருமையாக இருக்கும். என்னுடைய Personal Collection (ஒரு 0.5 TB External Harddisk முழுக்க வைத்திருக்கிறேன்) இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று..//
ReplyDeleteநன்றி கிருத்திகன்... உங்கள் வெளிப்பாடுக்கு நன்றி நீங்களம் என்னை போல் படத்தை ரசித்து இருக்கின்றிர்கள்
வணக்கம் ஜாக்கி
ReplyDeleteநல்ல படம், உங்கள் விமர்சனம் அருமை//
நன்றி வெட்டிபையன் தொடர் வருகைக்கு...
நல்ல படம்.நல்ல விமர்சனம்.
ReplyDelete//...தேவர்மகன் படம் வந்து பங்க் வைத்து அலைந்த நேரம் அது....//
இன்னாதூ "பங்க்கா"?? நம்ம ஜாக்கியா ?? சேரி ...அத்தெல்லா ஏன் நைனா கழட்டி கடாசிகினே???//
ஜாக்கி,உங்களோட பல பதிவுகள்ல
'பங்க்' ஹேர்ஸ்டைல் வச்சிருந்ததைப் பத்தி சொல்லிட்டிங்க.இப்ப இருக்கிற போட்டோவை எடுத்திட்டு அந்த
'பங்க்' வச்சிருந்தபோது எடுத்த போட்டோ ஏதாவது இருந்தா பிளாக்ல போடுங்களேன்....//
தேடிப்பார்க்கின்றேன்.. ராஜா கிடைத்தால் அப்லோட் செய்கின்றேன் ஆர்வத்துக்கு நன்றி
இப்பவும் வசிக்கலாம் தலைவரே, கல்ப் கேட் போங்க சும்மா சூப்பர பங்க் வச்சி உடுரானுங்க.....என்ன டிசைன் வேணும் என்றாலும் வச்சி தராங்க//
ReplyDeleteநன்றி கலாட்டா பையன் உங்கள் தகவலுக்கு
நல்ல படம், அதை விட நல்ல விமர்சனம்//
ReplyDeleteநன்றிற கோஸ்ட்..
உலக திரை படங்களை பற்றி எழுதும் எல்லோரிடமும் நான் கேட்க நினைத்த கேள்வி. தமிழ் படம் பற்றி நீங்கள் எந்த விமரிசனமும் எழுதவில்லையா என்பது. உங்களிடமும் கேட்கலாம் என்று நினைத்தேன்.
ReplyDeleteஇதோ எழுதிட்டிங்க... நன்றி....
குப்பை படங்களை கொண்டாடும் நாம், எப்போது இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு தரபோகிறோம்.... ?
நாம் ஆதரவு தரவில்லை என்பதலாயே தரமான படங்கள் தயாரிக்க(தயாரிப்பாளர் காசு போடுவதில்லை) முடிவதில்லையோ ?//
உண்மைதான் இளங்கோ உங்கள் ஆதங்கம்தான் என் ஆதங்கமும்..
உலகத்தில் தானே தமிழ்நாடும் இருக்கின்றது... அதில் தமிழ் சினிமாவும் இருக்கின்றது.. அதனால் நமது படங்களும் எப்போதும் எனது லிஸ்ட்டில்...
ஜாக்கி,உங்களோட பல பதிவுகள்ல
ReplyDelete'பங்க்' ஹேர்ஸ்டைல் வச்சிருந்ததைப் பத்தி சொல்லிட்டிங்க.இப்ப இருக்கிற போட்டோவை எடுத்திட்டு அந்த
'பங்க்' வச்சிருந்தபோது எடுத்த போட்டோ ஏதாவது இருந்தா பிளாக்ல போடுங்களேன்....//
நன்றி நாஞ்சில் நாதம் அப்போத எல்லாம் புகைபடம் எடுத்துக்கொள்ள வசதி வாய்ப்பு இல்லை... இருந்தால் போடுகின்றேன் தங்கள் ஆர்வங்ததுக்கு நன்றி
நன்றி நைனா நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றறேன்..
ReplyDelete