(அறிவிப்பு)பதிவுலகிற்க்கு ஒரு மாதம் விடுப்பு விடுகின்றேன்...


அன்பின் என் இனிய பதிவுலக நண்பர்களுக்கு ,
ஜாக்கியின் முதல் வணக்கம்...

எனது பாடாவதி டாடா இன்டிகாம் இண்டெர்நெட் கனெக்ஷனுக்கு இன்றோடு கடைசிநாள்....

இன்று மாலை சென்ட்ரலில் இருந்தது (ஆலப்புழா) கேரளா செல்கின்றேன்...வெளிப்புற படப்பிடிப்பு கேரளாவில் நடப்பதால் நான் ஒருமாதம் கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் இந்த ஒருமாதம் பதிவுலகிற்க்கு நான் விடுப்பு விட உத்தேசித்து உள்ளேன்... அதே போல் ஷுட்டிங் கொஞ்சம் சீக்கரம் பேக்கப் ஆனால் எதாவது நெட் சென்டரில் வந்து உங்கள் பின்னுட்டங்களை பார்க்கின்றேன்... ஆனால் பதில் எழுத முடியாது....

ஒரு மாதம் அவுட்டோர் முடிந்து வந்து உங்களை வெகுவிரைவில் சந்திக்கின்றேன்...அப்புறம் ஊருக்கு போய் வந்த பிறகுதான்... எர்டெல் கனெக்ஷன் எடுப்பது பற்றி யோசிக்க வேண்டும்... எனெனில் கொஞ்சம் கஷ்ட் ஜீவனம்தான் நடத்துகின்றேன்... கல்லூரியில் வேலை செய்த போது பத்து நாளுக்கு ரூ5000சம்பளம் வந்தது இப்போது அதே பத்துநாள் பணிக்கு ரூ1500 பேட்டா பெறுகின்றேன்.... வேறு என்ன பொருளாதார நிலை பொறுத்து விரைவில் நான் உங்களை வந்து சந்திக்கின்றேன்...

இந்த வலையுலகை பொறுத்தவரை நான் முதலில் எனது எழுத்து எல்லோரிடமும் போக வேண்டு்ம் என்று அசைப்பட்டேன்.. அது கடவுள் புண்ணியத்தில் சிறப்பாய் நடந்தேறியது...எனக்கு பெரிய நண்பர் வட்டம் சென்னையில் இல்லை ஆனால் இப்போது நல்ல நண்பர் வட்டத்தை எனக்கு இந்த பதிவுலகம் உருவாக்கி தந்து இருக்கின்றது... மிக்க நன்றி...

அண்ணன் தண்டோரா, பதிவர் நித்யா போன்ற நண்பர்கள்.. நான் தினம் ஒரு பதிவிடுவதை பார்த்து எனக்கு பெண்டு கிழியும் வேலை எனக்கு விரைவில் வரவேண்டும் என்று வேண்டி கொண்டனர்... அண்ணன் தண்டோரா பதிவர் நித்யாவிடம்.. சும்மா ஜாலிக்காக , ஜாக்கியை , உட்டா லேஸ் பாக்கெட் ,மெடி்மிக்ஸ் சோப் போன்றவற்றிர்க்கு விமர்சனம் எழுதுவார் போல என்று வேறு சொல்லி இருக்கின்றார்...தண்டோரா சார் இப்ப சந்தோஷமா????...

இதுவரை தினமும் எனது பதிவுகளை சலிக்காமல் படித்து அலுக்காமல் பின்னுட்டம் போடும் எனது பதிவுலக நண்பர்களுக்கு எனது நன்றிகள்...இந்த ஆளு ஊருக்கு போயிட்டான் ... நாம சும்மா இருக்கலாம்னு நினைக்காதிங்க....
எதாவது ஒரு நல விசாரிப்பை நாட்டு நடப்பை எனக்கு தெரிய படுத்துங்கள்... நேரம் கிடைத்தால் பதில் போடுகின்றேன்....

தொடர்ந்து திங்கள் கிழமை ஆனால் சாண்ட்விச் அண்டு நாண்விச் எழுதினேன்... அது எழுதுவதை விடுத்து பல வாராங்கள் ஆகின்றன...ஆனால் ஒரு பயபுள்ள கூட ஏன் எழுதலை அப்படின்னு கேட்கலை...சஜான என்ற பாலோயர் மட்டும்தான்... ஏன் இப்பவெல்லாம் சாண்ட்வெஜ் கானோம் என்று??? கேட்டு இருக்கின்றார்...

முதலில் வேளைபளு.. கடனுக்கு என்று எழுதுவதுஎனக்கு பிடிக்காது...அதே போல் ரேங் போஸ்ட்டில் எனது சமுக மற்றும் பட பதிவுகளை விட சாண்ட்விச் பதிவுகள் அதிகம் இடம் பிடித்து இருக்கின்றது.... அது எனக்கு சந்தோஷமே... நேரம் கிடைக்கு்ம் போது நிச்சயம் எழுதுகின்றேன்...

விரைவில் வந்து சந்திக்கின்றேன்..

ப்ரியங்களுடன்
ஜாக்கிசேகர்

43 comments:

  1. ரொம்பவே கவலையாயிருக்கு ஜாக்கி சார்.

    உங்க பதிவ மிஸ் பண்ணாம வாசிக்கிறவங்களில் நானும் ஒருத்தன், ஒரு மாதம் கழித்து வந்து எழுதுங்கள்.

    உங்கள் போகும் காரியம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சந்தோஷம்...

    பின்ன இருக்காத நீங்க பாட்டுக்கு இந்த படம் நல்லாருக்கு அந்த படம் நல்லாருக்குனு சொல்லிகிட்டே இருக்கீங்க பார்க்க வேணாம..ஒரு 15 படமாச்சும் உங்க சிபாரிசுல பார்த்தாச்சு அத 30 ஆக்கிருவோம்...

    போய் வேலைய மட்டும் பாருங்க சேச்சி நல்லாருக்குனு குறும்படம் எடுத்துராதீங்க..(ஹி ஹி ஹி எடுத்தா எனக்கு மெயில்ல அனுப்ப மறக்காதீங்க)

    ReplyDelete
  3. all the best for your project to comeout successfully. See you soon.

    ReplyDelete
  4. பயணத்திற்கு வாழ்த்துக்கள் அன்பரே. இந்தியாவின் வெனிசிற்கு பயணம் செய்ய இருக்குறீர்கள். ஆலப்புழாவை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. All the best my dear...

    சென்று வா... வென்று வா..

    மறக்காம நேந்திரம் சிப்ஸ் வாங்கி வா...

    ReplyDelete
  6. அன்பின் ஜாக்கி,

    பெரியதிரையில் சாதிக்கப் போகும் உங்களுக்கு இந்த சேரநாட்டுப் பயணம் உதவட்டும். ஆல் தி பெஸ்ட்...

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  7. வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்விற்கு வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  8. Ungaladhu payanam vetrigarama amaiya valthugal..Apparam,If possible, oru laptop+USB internet vangiteenganna ungha tour in podhu naanga ungalai miss panna vendiya avasiyam irukkathulla...Porulaathara nilaimai seeraga aarambicha udane idhai konjam consider pannunga..

    ReplyDelete
  9. பயணத்திற்கும் / பெரியதிரையில் சாதிக்கவும்... எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. நல்ல படியா போயிட்டு வா ஜாக்கி,
    schedule வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்கள்.

    அப்புறம், உன்னுடைய வருமானத்தப் பத்தியெல்லாம் எழுதனும்னு அவசியமில்ல. என்னடா இவன் எத்த சொன்னாலும் குத்தம் சொல்றானேன்னு பாக்கத, ரொம்ப வெள்ளந்தியா இருக்குறது நல்லதில்ல..

    திரும்பி வந்து கலக்கு, காத்திருக்கிறேன் (றோம்)
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்..

    ReplyDelete
  11. நல்லபடியா போய்ட்டு வாங்க பாஸ்..

    ReplyDelete
  12. கடலின் அக்கரை போனோரே
    காணான் பொன்னினு போனோரே
    ("காண்போம் பொன் என்று")
    போய் வரும்போழ் எந்து கொண்டு வரும்??

    ReplyDelete
  13. we are going to miss you posts..
    Good Luck with your work....

    நீங்க வருவதற்குள் பார்க்காத படம் எல்லாம் பார்த்து முடிக்க முயற்சி செய்கிறேன்...

    ReplyDelete
  14. சந்தோஷமா போயிட்டு சந்தோஷமா வாங்க :-)

    ReplyDelete
  15. அண்ணே,
    நல்லபடியாக போய்ட்டு வாங்க,
    வாழ்க்கையில் பெரிய ஒளிப்பதிவாளராக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. All the best for your outdoor shooting... come back soon to write a review movies.. we are waiting..

    ReplyDelete
  17. all the very best for your outdoor shooting work.

    Once u come back to Chennai please write about your shooting experiences, incidents.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அட என்ன ஜாக்கி நீங்க,
    கவலையே படாதீங்க, உங்களுக்கென்று ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. ஆறுதலா வாங்க... நாங்கள் காத்திருக்கிறோம். தொழிலில் விரைவில் ஜெயிப்பீர்கள், உழைப்பவன் வெல்வான் என்ன கொஞ்சம் காலம் எடுக்கும்

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் அன்பரே.

    கவலைப்படாதீங்க, கடை வாசலிலேயே காத்துட்டு இருக்கிறோம்.

    ReplyDelete
  21. என்னப்பு என்ன மறந்துடீங்களே....
    நன்றி, மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  22. ஒரு மாதம் எல்லாம் ரொம்ப ஓவர்
    என்ன செய்வது,உங்களுடைய எல்லா பதிவுகளையும்
    ஒருமுறை திரும்ப படிக்க வேண்டியதுதான்.
    நண்பர்கள் வட்டம் சென்னை வரை மட்டுமல்லஉலகம் முழுவதும் உள்ளது (நம்பள விட்டுடிங்களே)
    பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. பெரியதிரையில் சாதிக்கவும்... எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  24. ஜாக்கி..நித்யா போன் பண்ணி பார்ட்டி கேக்குறாரு..வாழ்த்துக்கள் ஜாக்கி(எப்படியும் வந்தவுடனே சேர்த்து வச்சு கும்ம போறதானே)

    ReplyDelete
  25. தண்டோரா அண்ணே...

    பராசக்தி படத்துல, சிவாஜி சொல்ற முதல் டயலாக்க சொல்லி சொல்லி சிரிக்கறாப்ல இருக்கே...

    அந்த முருகப் பெருமான் நம்ம உணாதனாவுக்கும் ஒரு கண்ணைக் காட்டி நம்மள காப்பாத்துனால் பரவாயில்ல...

    அன்பு
    நித்யன்

    ReplyDelete
  26. "பதிவுலகிற்க்கு நான் விடுப்பு விட உத்தேசித்து உள்ளேன்..."

    சொற்ப்பிழை உள்ளது உமது பதிவில்.விடுப்பு எடுக்கிறேன் என்று சொல்வதுதானே முறை.(சும்மா தமாசு.)தொடர்ந்து படித்தாலும் பின்னூட்டம் இதுவரை இட்டதில்லை.அதான் இப்படி கோணங்கித்தனமா.

    ReplyDelete
  27. அண்ணே,
    நல்லபடியாக போய்ட்டு வாங்க,
    வாழ்க்கையில் பெரிய ஒளிப்பதிவாளராக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. Dear Mr. J....All the best for your professional trip...really we will miss you and your articles...as other said...in this one month I will see the films which you recommended...hope after your kerala trip we will see lots of விஷுவல் டேஸ்ட்...photos (U, U/A, A, A+).....have a nice trip "J"

    ReplyDelete
  29. வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  30. சீக்கிரம் ஓடியா ஜாக்கி,
    இங்க உ த சரவணன் (சரியா கவனிங்க நான் சொன்னது உ த சரவணன்) Jackie chan பேர ஆசையா வெச்ச உன்ன ஜட்டி பேர சொல்லி கூப்பிடறார் பாரு...

    உண்மைத்தமிழன் - Jus kidding, Hope you take my comment in the sportive spirit.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  31. //சீக்கிரம் ஓடியா ஜாக்கி,
    இங்க உ த சரவணன் (சரியா கவனிங்க நான் சொன்னது உ த சரவணன்) Jackie chan பேர ஆசையா வெச்ச உன்ன ஜட்டி பேர சொல்லி கூப்பிடறார் பாரு...

    :))))))))

    ReplyDelete
  32. உங்க பதிவ மிஸ் பண்ணாம வாசிக்கிறவங்களில் நானும் ஒருத்தன், ஒரு மாதம் கழித்து வந்து எழுதுங்கள்.

    nanri yoivais en ella pathiukkum unkal pinnuttam parthu santhoshapattu irukken varen menndum... naadri ungal anbukku


    your
    jackie

    ReplyDelete
  33. சந்தோஷம்...

    பின்ன இருக்காத நீங்க பாட்டுக்கு இந்த படம் நல்லாருக்கு அந்த படம் நல்லாருக்குனு சொல்லிகிட்டே இருக்கீங்க பார்க்க வேணாம..ஒரு 15 படமாச்சும் உங்க சிபாரிசுல பார்த்தாச்சு அத 30 ஆக்கிருவோம்...


    nanri suriyan ... ungal anbukku..

    nenegal solvathu pola intha gap nechayam nengal vedupatta padangalai parkalam

    your
    jackie

    ReplyDelete
  34. hmmmmmmmmmmmmm.....still busyaaaaaaaa?......achoooooooooo....

    ReplyDelete
  35. வாழ்வில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner