(the piano teacher)(18+ உலக சினிமா/ பிரெஞ்ச்) மாணவன் மேல் டீச்சருக்கு உண்டான காதலும் காமமும்.....

பொதுவாக சிறுவயதில் அம்மாவுக்கு அடுத்தபடியாக அதிகம் உற்றுநோக்கும் பெண்ணாக நான் பாடம் சொல்லிக்கொடுக்கும் டீச்சரைதான் சொல்லுவேன்... ஏனெனில் அம்மாவின் முந்தானை பிடித்து சுற்றிக்கொண்டு இருப்பவனை சட்டென பள்ளியில் 8 மணிநேரம் வகுப்பு ஆசிரியையுடன் இருந்துதான் ஆக வேண்டும்... என்ற கட்டாயம் வரும் போது வேறு வழி???

அதுவும் நான் ஒன்றாம் வகுப்பு படித்த காலங்களில் ஒன்றாம் வகுப்பு ஏ பிரிவு டீச்சர் என்பவர் வருடம் முழுவதும் அவரோடுதான் வாழ்ந்தாக வேண்டும்... அ ஆ வன்னா முதல் கொண்டு, கணக்கு , பாடல், அறிவியல் எல்லாவற்றையும் அவர் ஒருவர்தான் சொல்லிக்கொடுக்க வேண்டும்... நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதுதான்.. கணக்கு பாடத்துக்கு தனி வாத்தியார் வந்தார், ஆங்ககிலத்துக்கு தனி ஆசிரியை வந்தார்...

ஆனால் முதல் இரண்டு வருடங்கள், வருடம் முழுவதும் ஒரே ஆசிரியருடன் குப்பை கொட்ட வேண்டும் ... எனக்கு ஒன்றாம் பாடம் எடுத்த ரோசரின் டீச்சர் எனக்கு உலகத்தை கற்றுக்கொடுத்த முதல் குரு... அப்படி பார்த்தால் எனது அம்மாதான் முதல் ஸ்தானம் என்றாலும், என் ரத்தம் சம்பந்தம் இல்லாத பெண்மணி எங்கள் டீச்சர் ரோசரின்தான் எனது குரு...ஒரு வருடம் அவரையே பார்க்க வேண்டும் அவரோடு பழக வேண்டும் என்றாலும்... சில விஷயங்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்த போது, என்னையறியாமல் ரோசரின்டீச்சரை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்...

அவர் கருப்பாகதான் இருப்பார்... ஆனால் அவர் நேர்த்தியாக உடை உடுத்துவார், என் அம்மா புடவை கட்டி மிக நேர்த்தியாக புடவை கொசுவத்தை வயிற்று பகுதியில் செறுகியது போல்... அதே போல் அவரும் செருகி இருப்பார்... தொப்புளுக்கு மேல்தான் சேலை கட்டியிருப்பார்... மாணவ மாணவிகள் மத்தியில் ஒரு நாளும் தன் சேலையை சரி செய்தது இல்லை....எனக்கு அவரிடம் பிடித்தது சொன்னால் நம்படாட்டீர்கள்... அவர் கையில் கட்டி இருக்கு வாட்சும் அவர் கையின் மணிக்கட்டு பகுதியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்...அந்த மணிக்கட்டை எப்போது பார்த்தாலும் எனக்கு பிடிக்கும் அவர் வந்தாலே அந்த இடத்தை பார்க்க தோன்றும்... இன்றுவரை வாட்சில் மெட்டல்ஸ்டராப் இல்லாமல் தோலால் ஆன ஸ்டராப்பை கட்ட ரோசரின் டீச்சர்தான்காரணம்.... அந்த டீச்சரின் மேல் நான் மதிப்பு மிக்க காதல் கொண்டேன் என்பதே உண்மை...ஆனால் அந்த வயதில் என்னோடு படித்த பருத்தி வீரன் முத்தழகு போல் இருந்த பெண்ணை நான் வேறு பார்வை பார்த்து வேறு விஷயம்.... எங்கள் டீச்சர் எங்கள் மேல் பரிவும் பாசமும் கொண்டவர் ஆனால் இந்த படத்தின் டீச்சர் அப்படியே நேர் எதிர்...தான் என்ற அகம்பாவம் கொண்ட டீச்சர்...இந்த படத்தின் பியானோ டீச்சர் ஒரு சேடிஸ்ட்....

the piano teacher படத்தின் கதை இதுதான்....Erika (Isabelle Huppert)ஒரு பியானோ டீச்சர்... அவள் தனது அம்மாவுடன் அப்பார்ட்மென்டில் வசித்து வருகின்றாள்.... அவள் ஒரு கண்டிப்பான பியனோ டீச்சர்... அவளின் தண்டனைகள் ரொம்ப கொடுமையானது...Walter (Benoît Magimel) என்ற அழகான 17 வயது பொறியியல் படிக்கும் மாணவனை, ஒரு பியானோ வாசிக்கும் நிகழ்ச்சியில் சந்திக்க நேர்கின்றது... அவ்னன பியா னோவாசிப்பில் இவள் லயிக்கின்றாள்... ஆனால் அவனை வெறுப்பது போல் நடிக்கின்றாள்... காரணம் அவள் ஆண்களை வெறுப்பவள்.. திருமணம் ஆகாதவள்... அப்பாவை இழந்தவள்...இந்த வயதிலும் அம்மாவோடு படுக்கையில் படுத்தக்கொள்பவள்... இருப்பினும் வால்டரின் திறமையும் அவன் அழகும் அவளை ஈர்க்கின்றது... அவன் ஒரு பெண்ணிடம் பேசினால் கூட டென்ஷன் அகும் அளவுக்கு நிலமை முத்தி போகின்றது.... அதன் பிறகு தன் மேல் டீச்சர் காமம் கொண்டதும் பையன் தெரிந்து இருவரும் தங்கள் காதலை வெளிபடுத்த அதன் பின் டீச்சர் கேட்கும் விஷயங்கள் அவளின் இச்சைகள் அவனை வெறுக்க செய்கின்றது.... முடிவு என்ன டவுன் லோட் பண்ணி பாருங்கள்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


2004ல் நோபல் பரிசு இலக்கியத்துக்கா பெற்ற எழுத்தாளர்Elfriede Jelinek எழுதிய நாவல்தான் இந்த படத்தின் கதை...

டைட்டிலின் போதே பியனோ கீ போர்டை டாப் அங்கிளில் காட்டி அதில் வெவ்வேறு மனிதர்கள் விரல்கள் நடனமாடுவதை காட்டும் போதே நம்மை இந்த படம் வேறு தளத்துக்கு அழைத்து போகின்றது...

அந்த பியனோ டீச்சருக்கு ஆண்களை பிடிக்கவில்லை என்பதும், அவள் செருக்கு மிகுந்தவள் என்பதும் லிப்ட் அருகில் வந்தவனை ஏற்றாமல் கதலை சாத்தி அவனை படிகளில் ஓடி வர வைக்கும் போதே அவள் பிரச்சனையை இயக்குனர் காட்சிகளில் சொல்லிவிடுகின்றார்....

அதே போல் பியானோ வாசிப்பு நிகழ்ச்சியில் எதிர்புரத்தில் வாசிக்கும் ஆண் மரியாதை நிமித்தமாக அவர் இவளை பார்த்து தலை அசைக்க டீச்சர் ரொம்ப அலட்சயத்துடன் அதை ஏற்றுக்கொள்வதும்...
அதே நிகழ்ச்சியில் அந்த 17 பையன் தன் திறமையை வெளிபடுத்தும் போது அவளுக்கு வைத்து இருக்கும் குளோசப் காட்சியில் சில இசை நோட்களில் அவன் திறமை வியந்து கொஞ்சமாக உதட்டில் புன்னகை வர வைக்கும் காட்சி அற்புதம் ... இதைதான் மிகையில்லாத நடிப்பு என்ற சொல்வது...

ஒரு பையன் புக் ஷாப்பில் செக்ஸ் புத்தகம் பார்த்தான் என்பதற்க்காக பியனோ கிளாசில் வாங்கு வாஙகு என்ற வாங்குவது அழகு.... அந்த இடத்தில் அந்த பையனின் நடிப்பு அற்புதம்...

டீச்சர் இவ்வளவு யோக்கியம் சொல்லிவிட்டு செக்ஸ் பார்லரில் பாலன வீடியோ வகை வகையாக பார்த்து விட்டு அங்கு வந்து போனவர்கள் கைமைதுனம் செய்து போட்டு விட்டு போன டிஷ்யூ பேப்பரை எடுத்து முகர்ந்து பார்க்கும் போது அந்த டீச்சரின் மேல் பரிதாபம் வருகின்றது...

அதீத காமத்தின் காரணமாக அந்த டீச்சர் ஒரு பிளேடை எடுத்து தன் பிறப்புறுப்பில் கிழித்து ரத்தம் வர வைப்பது என்ன ரகம்....

டீச்சரும் அந்த மாணவனும் பாத்ரூமில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி 15 நிமிடம் அதில் அந்த பையனாக நடித்த(Benoît Magimel) பையன் ஒரு திறமையான நடிகன்... அந்த காட்சியை பார்த்தால்தான் நான் சொல்வதின் அர்த்தம் விளங்கும்...

தனிமையின் கோரபிடியில் சிக்கி தவிக்கு்ம் டீச்சரின் காம இச்சை வேறு விதமாக அல்லது வேறு வடிவமாக மாறும் போது...அந்த டீச்சரின் மேல்
பரிதாபம்தான் ஏற்படுகின்றது....


ஒரு பெண் சார்ந்து வாழ்பவள் அப்படி சார்ந்து வாழ முடியாது என்று திருமணம் செய்து கொள்ளமால் 40 வயதில் பல பெண்கள் இதே மனநிலையில் நான் பார்த்து இருக்கின்றேன்... எல்லோர் மீதும் ஏதாவது ஒரு காரணத்தை கற்பித்து கொண்டு அவர்களுக்கு என்று தனி வளையம் உருவாக்கி கொண்டு, நான் தான் பெரியவள் எதற்க்கும் அஞ்சாதவள் என்ற வெளிகாட்டும பெண்கள் பலர் அந்தரங்கத்தில் இந்த டீச்சர் போல் மோசமான மனநிலையில்தான் இருக்கின்றனர்..........

தனிமையின் துக்கமும், சரியான கம்பேனியன் இல்லாத காரணத்தாலும் அந்த பையனிடம் தன்னை வெளிபடுத்திக்கொள்ள தெரியாத காரணத்தால் அவன் காலடியில் சிறு பிள்ளை போல் அழுகும் டீச்சர்... அவன் கோபத்தோடு போனதும் அந்த ஆற்றாமையை தன் அம்மா கேள்வி கேட்கும் போது அம்மாவின் உதடோடு உதடு பொறுத்தி ஐ லவ் யூ என்று கதறும் போது நம் கண்கள் கதறுகின்றது...

அம்மா என் மாணவனுடன் நான் ரூமில் பேசிக்கொண்டு இருக்கின்றேன் என்று சொல்லும் பெண்ணை கதவு சாத்தியதும், அந்த ீருமில் என்ன நடக்கின்றது என்று அறிய ழுனை போல் போய் பார்க்கும் போது எல்லா இடத்ிலும் வாழ்வ மனிதர்கள் அவர்கள் மனநிலை எப்போதும் வேறுபாடு கொண்டதில்லை என்று சொல்லும் காட்சி அது...


உலக படவிழவில் பிரெஞ் படங்களில் இந்த படத்தின் டீச்சர் நடித்த பல காட்சிகள் நான் பார்த்து இருக்கி்றேன்... முகத்தில் பல புள்ளிகள் இருந்தாலும் நிர்வாணமாய் நடிப்பதில் இவருக்கு இவர் நிகரே...
உடை போட்டு நடிப்பதை விட் உடையில்லாமல் சுற்றிலம் யூனிட் ஆட்கள் இருக்க பார்பார்ம் செய்வது என்பது ஒரு பெண்ணை பொறுத்தவரை சாதாரண விஷயம் இல்லை ...

இந்த படம் சென்னை உலக படவிழாவில் இப்போது இல்லாமல் போய் விட்ட ஆன்ந் தியேட்டரில் ஓப்பனிங் படமாக திரையிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது....
ஒரு மதிக்கதக்க ஆசிரியை, தனிமை, பகிர ஆளிள்ளலாமை,காதலின் சுவை, காமத்தின் அருமை, இவையெல்லாம் கிடைக்காத பெண் எந்தளவுக்கு மனதளவில் பாதிக்கபடுவாள் என்பதை கவிதையாய் இயக்குனர் உணர்த்தி இருக்கின்றார்....மேலுள்ள புகைபட்த்தில் நம்ம டீச்சர்...

இந்ம படம் உலக அளவில் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய படம்... இந்த படம் பெற்ற வெற்றிகள் கீழே....

படத்தில் டீச்சர் மாணவனாக நடித்த இருவரும் பல விருதுகள் இந்த படத்துக்காக பெற்றனர் விபரம் கீழே..சேலைகட்டிய பெண் பக்கத்தில் வெள்ளை உடுப்பில் நம்ம டீச்சர்... இந்த படத்தை பார்த்து முடிக்கும் போது இந்த டீச்சரை நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.. அதே போல் அந்த டீச்சர் மேல் பரிதாபமும் ஏற்படும்...
இந்த படம் பெற்ற வெற்றிகள்....
2001 Cannes Film Festival

* Grand Prix
* Best Actor - Benoît Magimel
* Best Actress - Isabelle Huppert

2002 César Awards

* Best Supporting Actress - Annie Girardot

2002 German Film Awards

* Best Foreign Film

2001 European Film Academy

* Best European Actress - Isabelle Huppert

2001 French Academy of Cinema

* Best Supporting Actress - Annie Girardot

2002 L.A. Film Critics Association

* Best Actress (Runner-up) - Isabelle Huppert

2002 National Society of Film Critics

* Best Actress (Runner-up) - Isabelle Huppert

2001 Russian Guild of Film Critics

* Best Foreign Actress - Isabelle Huppert
* Best Foreign Film

2002 San Francisco Film Critics Circle

* SFFCC Award - Best Actress - Isabelle Huppert

2002 Seattle International Film Festival

* Golden Space Needle Award - Best Actress - Isabelle Huppert

[edit] Nominated

2002 Bafta Awards

* Best Film not in the English Language

2003 Bodil Awards

* Best Non-American Film

2001 Cannes Film Festival

* Golden Palm

2002 César Awards

* Best Actress - Isabelle Huppert

2001 British Academy Awards

* Best Foreign Language Film - Michael Haneke
* Best Foreign Language Film - Veit Heiduschka

2001 European Film Academy

* Best European Film
* Best European Screenplay - Michael Haneke

2001 French Academy of Cinema

* Best Actress - Isabelle Huppert

2002 Independent Spirit Award

* Best Foreign Film

படத்தில் இருந்து சில காட்சிகள்...

பட்குகுழுவினர் விபரம்...


Directed by Michael Haneke
Written by Michael Haneke
Elfriede Jelinek (novel)
Starring Isabelle Huppert
Benoît Magimel
Music by Martin Achenbach
Cinematography Christian Berger
Editing by Monika Willi, Nadine Muse
Distributed by Kino International
Release date(s) 2001
Running time 120 minutes
Country Germany, Poland, France, Austria
Language French


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

10 comments:

 1. ஐயன்மீர்...

  விரைவில் பெண்டெடுக்கும் வேலைகளுடன் உதா வின் முருகப் பெருமான் உங்களை சந்திக்க ஆணையிடுகிறேன்.

  நீங்கள் பதிவிடுவதற்கு எதிராக தண்டோரா ஸ்டே வாங்கும் எண்ணத்தில் இருப்பதால் தாங்கள் தயாராக இருக்கவும்.

  பேரன்பு நித்யன்

  ReplyDelete
 2. தல டவுன்லோட் செஞ்சி பாருங்கன்னு சும்மா சொன்னா பத்தாது. லிங்க் கொடுக்கனும்

  ReplyDelete
 3. /
  டீச்சரும் அந்த மாணவனும் பாத்ரூமில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி 15 நிமிடம் அதில் அந்த பையனாக நடித்த(Benoît Magimel) பையன் ஒரு திறமையான நடிகன்... அந்த காட்சியை பார்த்தால்தான் நான் சொல்வதின் அர்த்தம் விளங்கும்...
  /

  அவ்வ்வ்வ்

  இந்த காட்சியிலதான் அது புரியுமா?

  படக்கதை நல்லா இருக்கு. பார்த்துட வேண்டியதுதான்.

  ReplyDelete
 4. Interesting review for the movie.


  //தல டவுன்லோட் செஞ்சி பாருங்கன்னு சும்மா சொன்னா பத்தாது. லிங்க் கொடுக்கனும்//

  Torrent-aaya namaha!
  Vuze-aaya namaha!


  //சேலைகட்டிய பெண்//

  She is Sharmila Tagore, Pataudi's wife and Saif's mother.

  ReplyDelete
 5. http://rapidshare.com/files/24508794/svartvakt_0254686_warezbb.part1.rar

  http://rapidshare.com/files/24524525/svartvakt_0254686_warezbb.part2.rar

  http://rapidshare.com/files/24534893/svartvakt_0254686_warezbb.part3.rar

  http://rapidshare.com/files/24541587/svartvakt_0254686_warezbb.part4.rar

  http://rapidshare.com/files/24549337/svartvakt_0254686_warezbb.part5.rar

  http://rapidshare.com/files/24565969/svartvakt_0254686_warezbb.part6.rar

  http://rapidshare.com/files/24659674/svartvakt_0254686_warezbb.part7.rar


  Winrar software இருந்தால் தான் பார்க்முடியும்

  winrar download here:

  http://rapidshare.com/files/276877417/wrar390.complete.zip

  Please scan by any antivirus then open.

  ReplyDelete
 6. jackie...

  sooper review. this is such a great movie dealing with human feelings.

  ReplyDelete
 7. என்னமோ போங்க.... இந்த வயசுல என்னாத்துக்கு... உங்களுக்கு இதெல்லாம்...

  இப்படத்தை பதிவிறக்கம் செய்ய...
  http://thepiratebay.org/torrent/4010609/THE_PIANO_TEACHER_DVDRIP_FRENCH_SUBENG_LGLuX.mp4

  ReplyDelete
 8. தனிமை ஏக்கம் எந்தளவுக்கு இட்டு செல்லும் என்பதற்கு இது ஒரு உதாரணம்..

  ReplyDelete
 9. சினிமா பார்த்ததில்லை. ஆனால் நாவல் படித்திருக்கிறேன். எனக்குப் பிடித்திருந்தது அந்த நாவல்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner