(SOLLAMALE) தாழ்வு மனப்பான்மை காதல்...




நீ அழகாய் இருக்கின்றாய் , என்று அம்மா சொல்லுவது ஒரு மேட்டரே அல்ல... காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு....நாம் வளரும் பருவத்தில் நம்மோடு நட்பு பாராட்டக்கூடிய நபர்கள் நாம் அழகாக இருப்பதாக சொல்ல , சொல்ல நாமும் அழகாய் இருப்பதாக நம் மனம் நம்பத்தொடங்குகின்றது...

ஆனால் சிறுவயதில் நம்மை எதாவது ஒரு வகையில் நம் முகத்தை கேலி செய்ய,செய்ய அது பிஞ்சுமனதில் பதிந்து..தான் மற்றவர்கள் பார்க்கும் அளவுக்கு அழகாக இல்லையோ என்று நம் மனதில் தாழ்வு மனப்பான்மை அரக்கள் குடி கொள்கிறான்...

அதன் பிறகு நுகர்வு காலாச்சரத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் செய்யும் விளம்பர ஜோடனைகளை நம்பி, பேரன் லவ்லி, அழகு சாயங்கள் என மனம் அடுத்தக்கட்டத்திற்க்கு சென்று தன்னை அடுத்தவரிடம் அழகாக அடையாளப்படுத்த துடிக்கின்றது....

எனக்கு எனது 16 வயதில் தாழ்வுமணப்பான்மை எனக்கு அதிகம் அதிலும் 22 வயதில் மண்டையில் முடி உதிரும் போது அது இன்னும் அதிகம் அயிற்று.... எனக்கு காதல் என்பது என் வாழ்வில் நட்க்க வாய்ப்பே இல்லாத சமாச்சாரம் என்று என் மனம் சத்தியம் அடித்து நம்ப தொடங்கியது... விடியலில் சேவல் கத்தும் வரை உறங்காமல் கற்பனை காதலியோடு, ஊடலாகவும், காதலாகவும் வாழ்ந்த இரவுகள் நிறைய...

அப்படி இருக்கும் போதே நிஜத்தில் எனக்கு காதல் வரத்தொடங்கியது.. என்னை காதலித்த பெண்கள் மிக அழகாய் இருந்தார்கள், அது எப்படி என்று எனக்கு விளங்கவில்லை... நான் ரசிக்கபடதவன் என்ற எண்ணம் எனக்கு மட்டும்தானே ஒழிய மற்றவர்களுக்கு இல்லை என்பது எனக்கு என்னோடு பழகிய பெண்கள் மூலம் எளிதில் விளங்கிற்று....
காதல் என்பது அழகாய் இருப்பவனுக்கு மட்டுமே அழகான பெண் கிடைப்பாள், காதல் வயப்படுவாள் என்பது எல்லாம் பேத்தல்....

சரக்கு இருப்பவனிடம் மட்டுமே காதல் சாத்தியம்... வெள்ளைதோலை வைத்து வரும் காதல்கள் வெகுசிலதே... நான் பொய் சொல்லிகின்றேன் என்றால் மெரினா போய் பாருங்கள்... பொன்னு பார்பதற்க்கு ஏப்ப சாப்பையாக இருக்கும் பையன் செம சூப்பரா இருப்பான்.... அதே போல் பொண்ணு செம அழகா இருக்கும் பையன் பொறுக்கி போலவே இருப்பான்..... அவனிடம் அல்லது அவளிடம் ஏதோ ஒரு நல்ல விஷயம் அல்லது ரசிக்கும் செயல் இருக்க வேண்டும்.....
உதாரணம் ராஜகுமாரன் தேவயானி நட்சத்திர தம்பதிகள்... அந்த பெண்ணுக்கு வேறு யாருமே கிடைக்கலையா? என்று அப்போது உரெல்லாம் ஒரு பேச்சு இருந்தது....ராஜகுமாரனிடம் ஏதோ ஒரு வசீகரம் இருந்து இருக்க வேண்டும்....

அப்படி தான் அவலட்சனமான இருக்கின்றோம் என்ற தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ஒருவனுக்கு காதல் வந்தால்????

சொல்லாமலே படத்தின் கதை இதுதான்....

தாழ்வு மனப்பான்மையில் வாழ்க்கை நடத்தும் நட்ராஜ் (லிவிங்ஸ்டன்) வேலை தேடி சென்னைக்கு வருகின்றான்... ஸ்வேதா(கௌசல்யா) இந்திய கலை மீதும் கல்சர் மீதும் காதல் கொண்டவள் அமெரிக்க பிரஜை வேறு.. இரக்க சுபாவத்தின் மறுபிறப்பாய் அந்த பெண்.... அவள் பரதநாட்டியம் கத்துகொள்ள சென்னை வருகின்றாள்... சென்னை வந்த நட்ராஜ் தனது நண்பன் ரூமில் தங்கி வேலை தேடுகின்றான்... சென்னை பெண்களும், அவனது நண்பர்கள் அழகான பெண்களுடன் பேசும் போது தாழ்வுமனப்பான்மையில் தலை குனிந்து ஏங்கி நிற்க்கின்றான்.... அவனுக்கு சென்னையில் பேனர் ஆர்டிஸ்ட் வேலை கிடைக்கின்றது அப்போ அந்த நடராஜனுக்கு ஸ்வேதாவுக்கும் ஒரு எதிர்பாபராத சந்திப்பில் நட்பு உருவாகின்றது... சந்தர்ப்ப சூழ்நிலையால் நடராஜ் உமை என்பதை தவறாக புரிந்து கொள்ளுகிறாள்... உண்மை தெரிந்த நடராஜ் அவள் நட்பு போய்விடக்கூடாது என்பதற்க்காக..அவளிடம் ஊமையாக நடிக்கின்றான்... அவளுக்கு உண்மை தெரிந்ததா? அவள் அவனை காதலித்தாலா? நட்பு எப்போது காதலாக மாறியது போன்றவற்றை வெண்திரையில் காண்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இயக்குநர் சசி படங்களில் ஒர யதார்த்தம் இருக்கும் அவர் படைப்புகளில் இந்த படம் ஒரு அற்புதமான பதிவு...

இந்த படத்தின் வசனங்கள் ரொம்ப அற்புதமாக இருக்கும்... இந்த படம் 1998 ஆகஸ்ட்டில் வெளி வந்தது...

இசை பாபி... இவரின் இசையில் வ்நத சொல்லதே சொல்ல சொல்லதே என்ற பாடல் நல்ல மெலடி ரகம்...

“ஒருத்தனை நீ உண்மையா நேசிச்சா நீ அவன்கிட்ட உன்னால பொய் சொல்ல முடியாது... அப்படி பொய் சொல்லறன்னா.. நீ அவனை உண்மையா நேசிக்கலைன்னு அர்த்தம்” என்கின்ற வசனங்களாகட்டும்...

நீ ஒரு பொருளை உண்மையாக நேசித்தால் அதனை சுதந்திரமாய் பறக்கவிடு அது எங்கு சென்றாலும் உன்னை தேடி வரும் என்ற பொருள் கொண்ட அந்த பிறந்தநாள் கவிதை போன்றவைகளை குறிப்பிட்டு சொல்லலாம்....

படம் நெடுக இந்த படத்தின் காமெடி அற்புதம்... சென்னைக்கு வரும் கிரமாத்து பசங்கள் சென்னை வந்ததும் எப்படி எல்லாம் பெயர் மாற்றம் செய்து கொண்டு பில்டப் கொடுக்கின்றார்கள்... என்பதை ஏலே வையாபுரி விவேக் கத்தும் போது தியேட்டரில் சிரிப்பலை....

எப்போதுமே நகரம் ஒருவனைதன் அடையளங்களை தொலைத்து விட்டு நிற்கதியாய் நிற்க்க வைக்கின்றது.... ஒருவன் தெரிந்தோ, தெரியாமலோ, இந்த நகரங்கள் ,வேஷக்காகரனாக மாற்றி விடுகின்றது என்பதை அழகாகய் குத்தி காட்டி இருப்பார் இயக்குனர் சசி...சென்னையில் உள்ள எல்லோருமே என்னையும் சேர்த்துதான் புற அடையாளங்களையும், அகடையாளங்கயையும் சற்றே தொலைத்துவிட்டுதான் இருக்கின்றோம்...

கௌசல்யா நண்பர்கள் டிரிட் கேட்டார்கள் என்று ஒரு ரெஸ்டரண்ட் போய் பாத்ரூம் பக்கம் போய் லிவிங்ஸ்டன் தன் பர்ஸ் திறந்து பணம் இல்லாமல் தவிப்பதும்,தன் நிலை குறித்து புழுங்குவதும்.... அந்த இடத்தில் ரகசிமாக கெளசல்யா லிவிங்ஸ்டன் பாக்கெட்டில் பணத்தை திணித்து நீ தான் , எங்க எல்லாருக்கும் செலவு பன்னனும் என்று சொன்னதும் அதற்க்கு லிவிங்ஸ்டன் ஒரு பார்வை பார்பார் பாருங்கள் அது ஆயிரம் நன்றிகளுக்கு சமமான பார்வை.... இந்த காட்சியில் எனக்கு கண்களில் நீர் தளும்பி நெகிழ்ந்து பார்த்த இடம்...

கிளைமாக்சில் பிரகாஷ் ராஜுடன் அவர் தன் தரப்பை பற்றி வேகமாக பேசும் டயலாக் தாழ்வுமனப்பான்மை உள்ளவனால் அதனை எளிதில் புரிந்து கொள்ள முடியும்....

லிவி ஆங்கிலம் படிப்பதும், அதற்க்கு விவேக் அடிக்கும் டைமிங்கும் சூப்பர்....

கரன் அவருக்கு கொடுத்த வேலையை நம்மவர் படத்தில் வந்தது போல் சிறப்பாய் செய்து இருப்பார்....
கௌசல்யாவுக்கு லிவி மேல் காதல் உருவாகும் அந்த இடம் அற்புதமான இயக்கம் என்பேன்....

நானும் ஒரு பெண் படம்கூட ஒரு பெண்ணின் தாழ்வுமனதை ஒத்த திரைக்கதை என்றாலும் எப்படியாகட்டும் அதனை பறிமாறும் இடத்தில் வித்யாசம் காட்டுவதே நல்ல இயக்குனருக்கு அழகு என்பேன்.....
நல்ல நடிகனான லிவிங்ஸ்டனை தமிழ் திரையுலகம் அவரை காமெடியனாக மாற்றியது பெரிய சோகம்... இப்போது அவர் என்ன செய்து கொண்டு இருக்கின்றார் என்று தெரியவில்லை...

கடைசியாக சிவாஜி படத்தில் பார்த்தது..... நல்ல நடிகர்....


இந்த படத்தின் கமெடி பலம் விவேக் நக்கல் நையாண்டிதான்....

தாழ்வு மனப்பான்மை கொண்டவனை இந்த சென்னை நகரம் எப்படி எல்லாம் படுத்தி எடுக்கும் என்பதையும்... மனிதனாக பார்க்காமல் அவனை மனதளவில் குத்தி கிழிப்பார்கள் என்பதை லிவிக்கு, விவேக்கின் பெண் நண்பர்கள் மார்க் போடும் அந்த காட்சி போதுமானது....இயக்குனர் சசி உணர்வுபுர்வமாக இயக்குபவர் என்பதை புரிய வைத்த படம்

Hero ....... Livingston
Heroine ....... Kausalya
Director ....... Sasi
Producer ....... R.B.chowdry
Director ....... Sasi
Producer ....... R.B.chowdry
Hero ....... Livingston
Heroine ....... Kausalya
Actor ....... Anand
Dhamu
Karan
Mohan ram
Prakashraj
Raju sundaram
Sakthi kumar
Vaiyapuri
Vivek
Actress ....... Fathima babu
Music director ....... Bobby
Lyricist ....... vasan
Arivumathi
Kalaikumar
Playback ....... Bobby
Hariharan
Mano
S.P.balasubramaniam
Sabesan
Screenplay ....... Sasi
Dialog ....... Sasi
Editor ....... Jai shankar
Photography ....... Arthur wilson
Art ....... Maniraj
Country: India
Language ....... Tamil
Censor date ....... 30-07-1998
Release date ....... 01-08-1998

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

11 comments:

  1. உண்மை தான் நண்பரே!


    தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு கொடிய அரக்கன் தான்.


    இந்த படம் இரசிக்கும் படியாக இருந்தது.

    ReplyDelete
  2. என்ன அண்ணாத்தே... தமிழ் படத்திலே பூந்துட்டீங்க.

    அப்புறம் சில இடங்களிலே தட்டச்சு தவறு உள்ளது... சரி பண்ணலாமே... அது போல் அந்த இறுதியில் உள்ள லிஸ்டில் சில பெயர்கள் இரண்டு முறை வந்துள்ளது... அதையும் பாருங்க.

    ReplyDelete
  3. மிக அற்புதமான படம்,

    ReplyDelete
  4. நான் எப்பவும் ரசிக்கும் படங்களில் இதுவும் ஒன்று. அதுவும் லிவிங்ஸ்டன் நடிப்பு அற்புதம். ஆனால், சரியான வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விட்டது. “தமிழ்” படத்தில் கூட வெளிநாட்டில் இருந்து வரும் அண்ணன் கேரக்டரை உணர்ந்து நடித்திருப்பது போல தோன்றும்.

    ReplyDelete
  5. எனக்கு ரொம்ப பிடிச்ச படம்,, வெறும் விமர்சனமா இல்லாம அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்கள், குறிப்பா உங்களைப் பற்றி சொல்லி இருப்பதும் அருமை..

    ReplyDelete
  6. தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு கொடிய அரக்கன் தான்.


    இந்த படம் இரசிக்கும் படியாக இருந்தது.--//

    நன்றி ஜமால்

    ReplyDelete
  7. என்ன அண்ணாத்தே... தமிழ் படத்திலே பூந்துட்டீங்க.//
    படத்துக்கு மொழி முக்கியமில்லை நைனா

    ReplyDelete
  8. மிக அற்புதமான படம்,//

    நன்றி கைபுள்ள

    ReplyDelete
  9. நான் எப்பவும் ரசிக்கும் படங்களில் இதுவும் ஒன்று. அதுவும் லிவிங்ஸ்டன் நடிப்பு அற்புதம். ஆனால், சரியான வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விட்டது. “தமிழ்” படத்தில் கூட வெளிநாட்டில் இருந்து வரும் அண்ணன் கேரக்டரை உணர்ந்து நடித்திருப்பது போல தோன்றும்./
    நன்றி ராஜா

    ReplyDelete
  10. எனக்கு ரொம்ப பிடிச்ச படம்,, வெறும் விமர்சனமா இல்லாம அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்கள், குறிப்பா உங்களைப் பற்றி சொல்லி இருப்பதும் அருமை.///

    நன்றி கார்த்திகை பாண்டியன்

    ReplyDelete
  11. /

    தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு கொடிய அரக்கன் தான்.
    /

    கண்டிப்பாக
    இந்த படம் பார்த்திருக்கிறேன்
    எனக்கும் பிடிக்கும். இந்த அளவு ஊன்றி பார்க்கவில்லை. சந்தர்பம் கிடைத்தால் மீண்டும் பார்க்கிறேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner