(xxy) 18+ (அர்ஜென்டினா/ உலகசினிமா)பெண்பிள்ளை ஆணாக மாறினால்?

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது,அதனினும் குருடு ,செவிடு போன்ற குறைபாடுகள் இல்லாமல் பிறத்தல் வேண்டும் என்று, ஔவை பாட்டி சொல்லி இருக்கின்றார்....

ஒரு தகப்பன் தன் பிள்ளையிடம் எந்த குறைபாடுகளையும் தாங்கி கொள்ள முடியும், ஆனால் வளர்ந்த பிறகு மெல்ல மெல்ல வேற்று பாலினமாக மாறுவதை எப்படி தாங்கி கொள்ள முடியும்.... அதே போல் அந்த குறைபாடுகளோடு இருக்கும் அந்த பெண்ணை அவர் வெறுக்கவில்லை...


ஒரு பெண் தனது 15 வயதில் தனக்கு ஆண்தன்மை இருப்பதாக நினைத்து, அவள் மெல்ல மெல்ல ஆணாக மாறும் போது அது எந்த வகையில் அந்த குடும்பத்தையும், சமுகம் எப்படி அந்த குடும்பத்தை உற்று நோக்கும் என்பதை உனர்வுபூர்வமாக அர்ஜெண்டினாவின் பெண் இயக்குனர்Lucía Puenzo இந்த படத்தை இயக்கி இருக்கின்றார்....

எக்ஸ் எக்ஸ் ஒய் படத்தின் கதை இதுதான்....
அலெக்ஸ் ஆண்மை பெண்மை இரண்டும் கலந்து வளரும் பெண் அவள் தந்தை அர்ஜென்டினாவில்,Néstor Kraken (Darín) மெரைன் பாயாலிஜீஸ்ட் ஆக பணி புரிகின்றார்.... அலெக்ஸ் இந்த குறைபாட்டுக்காக மருந்து எடுத்தக்கொள்கின்றாள்... அனால்ல் சட்டென அவ்ள மருந்து சாப்பிடுவதை நிறுத்த அவளை அர்ஜென்டினாவில் இருந்து உருகுவே எனும் கடற்கரை கிராமத்து ஒதுக்குபுற வீட்டிற்க்கு குடி போகின்றார்கள்......ஏனென்றால் சமுகம் தன் மகளை எந்த வகையிலும் குத்திக்காட்டிவிடும் என்ற பயம்தான் அதற்க்கு காரணம்...

ஒருநாள் நெஸ்டர் மனைவியின் நண்பியும் அவள் சர்ஜன் கணவன், அவளது மகன் Álvaro (Piroyansky) ஆகியோர் அர்ஜென்டினாவில் இருந்தது வருகின்றனர்... காரணம் அலெக்ஸ்க்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்திக்கவைக்க அல்லது பேசி பார்க்க வருகின்றனர்...
வந்த இடத்தில் அலெக்ஸ் அல்வரோ உடன் செக்ஸ்வைத்துக்கொள்ள விரும்புகின்றாள்.... அவள் செக்ஸ் வைத்க்கொள்ளும் போது அவளது அப்பா பார்த்து அதிர்ந்து போகின்றார்....அந்த பெண் அல்வரோ வை குப்புற படுக்கவைத்து அவள் பி்ன்புறமாக புனரும் போதுதான்.... தன் இதுவரை நினைத்தது போல் தனது மகள் அல்ல அவள் மகனாக மாறிவிட்டான் என்று தகப்பன் புரிந்து கொள்கின்றான்..... அதன் பிறகு அந்த பெண்ணின் பெற்றோரின் நிலைப்பாடு என்ன? அவள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அந்த அலெக்ஸ் பெண் ஒத்துக்கொண்டாளா? அந்த அல்வரோடு நட்பாக இருந்தாளா? போன்றவற்றை வெண்திரையில் காண்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படத்தை ஒரு பெண் இயக்கி இருக்கின்றார் என்பது பெருமைக்கு உரிய விஷயம்....இதுவே நமது ஊராக இருந்து இருந்தால் கலாச்சார போர்வை அந்த பெண் இயக்குனரை (Lucía Puenzo) வாங்கு வாங்கு என்று வாங்கி இருப்பார்கள்...

படத்தின் பல நிர்வாணகாட்சிகள் இருந்தாலும்,ஒரு பெண்ணாக இருந்தது ஆணாக மாறுபவனின் மன வேதனையையும் உளவியல் காம சிக்கலையும் அழகாய் பதிவு செய்ய Lucía Puenzo தவறவில்லை....

படத்தின் டைட்டில் பெயர் போடும் காட்சி அற்புதம்....

படத்தின் போஸ்டரில் அந்த பெண்ணின் நிர்வாணத்தில் ஒய் போட்டு அவள் அங்கத்தை மறைத்து இருப்பது நல்ல கற்பனை..


எந்த இடத்திலும் அந்த பெண்ணி்ன் உறுப்பை காண்பிக்காமல் எல்லாவற்றையும், வசனங்களில் சொன்னது நீட் ரகம்...

அந்த பெண்ணுக்கு ஆண் குறி வந்து விட்டது என்பதை,அவளும் அவள் நண்பனும் நின்று கொண்டே சிறுநீர் கழிக்கும் அந்த காட்சி இயக்குனரின் காட்சிஅழகுக்கு சான்று எனலாம்....

எல்லா ஊரிலும் உள்ள இளவட்டங்கள் போலவே
“உன்னை ஏதும் செய்யமாட்டோம் ... உனக்கு எப்படி இருக்குன்னு நாங்க தெரிஞ்சிக்கனும் ” என்று அந்த பெண்ணை மறைவுக்கு தூக்கிபோய் உடை களைவதையும் அந்த பெண் அதற்க்கு புழுவாய் துடிப்பதையும் நன்றாக பதிவு செய்து இருக்கின்றார் இயக்குனர்...

கொஞ்சமும் உறுத்தாத ஒளிப்பதிவு படத்துக்கு பக்கபலம்...

தனது பெண் நன்பி அப்பா முன் எந்த விகல்பமும் இல்லாமல் உடை மாற்றுவது ஆண் தன்மை வந்து விட்டதாய் காண்பிக்கும் காட்சிகள்... அதே போல் அன்று இரவு அலெக்ஸ்க்கு நெயில் பாலிஷ் வைத்து விட அவள் அதை அழிப்பது போன்றவை நல்ல காட்சிகள்....

நம் ஊர் போலவே அவளுக்கு இளவட்டங்கள் பாலியல் தொந்தரவு கொடு்த்தும் அவள் குடும்பம் நம்ம ஊர் போலவே போலிசுக்கு பேகவில்லை... காரணம் சமுகபயம்.....

இந்த படம் பல விருதுகளை பெற்று இருந்தாலும் இது பார்த்தே தீர வேண்டிய படங்கள் லிஸ்ட்டுக்கு போகாமல் பார்க்க வேண்டிய லிஸ்ட்டுக்கு போகின்றது.... ஏதோ ஒரு நுலிழை குறைகின்றது....
அது என்ன வென்று எடு்த்து சொல்ல எனக்கு தெரியவில்லை... படம் பார்த்து விட்டு யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்...

Directed by Lucía Puenzo
Produced by José María Morales
Carla Pelligra
Luis Puenzo
Fernando Sirianni
Fabienne Vonier
Written by Lucía Puenzo
Starring Ricardo Darín
Valeria Bertuccelli
Inés Efron
Martín Piroyansky
Carolina Peleritti
Music by Andrés Goldstein
Daniel Tarrab
Cinematography Natasha Braier
Editing by Alex Zito
Release date(s) June 14, 2007
Running time 87 minutes
Country Argentina
Language Spanish

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

14 comments:

 1. நான் பலமுறை நினைத்ததுண்டு

  ஆணாக பிறந்த பெண்ணியம் கொண்டு பெண்ணாக மாறி -----

  இப்படி பலரை கேள்விபடுகின்றோம் சந்திக்கவும் செய்கின்றோம்,

  ஆனால், இதுவரை பெண்ணாக பிறந்த எவரும் ஆணாக மாறியதாக கேள்விபடவில்லை.

  ம்ம்ம்

  பார்க்க முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 2. நிச்சயம் பார்க்கிறேன்....

  ReplyDelete
 3. இதுபோல இன்னொரு படமும் இருக்குண்ணே..

  அது "Boys Don't Cry (1999)" அருமையான படம்!
  கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!!

  ReplyDelete
 4. ரைட்டு... நல்ல அறிமுகம்.

  ReplyDelete
 5. அண்ணே நீங்கள் இதுவரை பார்த்தே தீர வேண்டிய , பார்ககாலாம் , பார்க்கவேணாம் என்கிற படப்பட்டியல ஒரு பதிவா இல்ல எதாச்சும் ஒரு சைடுல கொடுத்தீங்கன்னா ரொம்ப சந்தோசப்படுவேன். ஒரு படத்த தேடி புடிச்சு வாங்கி பார்க்குரதுக்குள்ளே அடுத்து ஒரு 4 படத்த போட்டுடுறீங்க ..

  முடியலேனே..

  ReplyDelete
 6. /
  இந்த படத்தை ஒரு பெண் இயக்கி இருக்கின்றார் என்பது பெருமைக்கு உரிய விஷயம்....இதுவே நமது ஊராக இருந்து இருந்தால் கலாச்சார போர்வை அந்த பெண் இயக்குனரை (Lucía Puenzo) வாங்கு வாங்கு என்று வாங்கி இருப்பார்கள்...
  /

  கரெக்டா சொன்னீங்க ஜாக்கிண்ணா!

  படம் டவுன்லோடோ இல்ல இங்க லைப்ரரிலயோ கிடைக்குதா பார்க்கிறேன்.

  ReplyDelete
 7. ஆனால், இதுவரை பெண்ணாக பிறந்த எவரும் ஆணாக மாறியதாக கேள்விபடவில்லை.

  ம்ம்ம்

  பார்க்க முயற்சிக்கிறேன்.//

  நன்றி ஜமால் பார்த்து விடுங்கள்

  ReplyDelete
 8. நிச்சயம் பார்க்கிறேன்....//

  நன்றி விக்னேஷ்

  ReplyDelete
 9. இதுபோல இன்னொரு படமும் இருக்குண்ணே..

  அது "Boys Don't Cry (1999)" அருமையான படம்!
  கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!!//

  கண்டிப்பாக அந்த படம் கிடைத்தால் அவசியம் பார்க்கின்றேன்

  ReplyDelete
 10. ரைட்டு... நல்ல அறிமுகம்.//
  நன்றி நைனா

  ReplyDelete
 11. interesting , will try to see ..//
  நன்றி சூரியன்

  ReplyDelete
 12. அண்ணே நீங்கள் இதுவரை பார்த்தே தீர வேண்டிய , பார்ககாலாம் , பார்க்கவேணாம் என்கிற படப்பட்டியல ஒரு பதிவா இல்ல எதாச்சும் ஒரு சைடுல கொடுத்தீங்கன்னா ரொம்ப சந்தோசப்படுவேன். ஒரு படத்த தேடி புடிச்சு வாங்கி பார்க்குரதுக்குள்ளே அடுத்து ஒரு 4 படத்த போட்டுடுறீங்க ..

  முடியலேனே..//

  லேபிளை தட்டினால் எல்லா லிஸ்ட்டும் கிடைத்து விடும் நண்பா...

  ReplyDelete
 13. இந்த படத்தை ஒரு பெண் இயக்கி இருக்கின்றார் என்பது பெருமைக்கு உரிய விஷயம்....இதுவே நமது ஊராக இருந்து இருந்தால் கலாச்சார போர்வை அந்த பெண் இயக்குனரை (Lucía Puenzo) வாங்கு வாங்கு என்று வாங்கி இருப்பார்கள்...
  /

  கரெக்டா சொன்னீங்க ஜாக்கிண்ணா!

  படம் டவுன்லோடோ இல்ல இங்க லைப்ரரிலயோ கிடைக்குதா பார்க்கிறேன்.//ஹ
  நன்றி சிவா..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner