அந்த நடராஜன் தம்பதியருக்கு வெகு நாட்களக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை அது,நடராஜன் ஆண் குழந்தையை விட பெண் குழந்தை மேல் மிகுந்த ஆசை கொண்டவன்.... அந்த பெண் குழந்தையின் ஒவ்வொறு அசைவுகளும் அவனுக்கு அத்துப்படி, அவள் முதன் முதலாக தத்தி தவழ்ந்த போது அவன் சந்தோஷத்தில் மிதந்தான்....
அவனின் செல்லமகளுக்காக அதிக நேரம் செலவிட்டான்...அவள் முதன் முதலாக அம்மா என்பதற்க்கு பதில், அப்பா என்றுதான் அழைத்தாள். முதல் குழந்தை அதுவும் பெண் குழந்தை, எல்லா குழந்தைகளை போல் அம்மா என்று அழைக்காமல் அப்பா என்று அழைத்த போது ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தான்...
அதை நாளேல்லாம் அலுவலகத்தில்,சொந்தங்களிடம் சொல்லிக்காட்டி மிகிழ்ந்ததான்... வீட்டிற்க்கு வந்த விருந்தாளிகளுக்கு இது ரோதனையாகவே போயிற்று
“ என் மகள் எப்படி அப்பா என்று வாய் நிறைய அழைக்கின்றாள் பாருங்கள்”
என்று சொல்லி பெருமைகொண்டான்...நல்ல சுபயோக நேரத்தில் அவளுக்கு அனிதா என்று பெயர் வைத்தான்....
அவன் மகள் எதிர்காலத்தில் உலகத்தில் போட்டி போட சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டான். அதனால் பணத்தை அள்ளி வீசி உயர் வகுப்பினர் படிக்கும் பத்மா சேஷத்தி்ரி பள்ளியில் சீட் வாங்கினான்.... இந்த கதையை இத்தோடு நிறுத்தி 22 வருடம் கழித்து பார்கலாமா?
அனிதா வேகமாக சத்தியம் சினிமாஸ் கிளம்பிக்கொண்டு இருந்தாள்,சென்னை புறநகரில் கல்வி தந்தைகள் வழி நடத்தும் கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருந்தாள்....அனிதா கிளம்பிக்கொண்டே
“ டாடி,நான் சத்தியத்துல படம் முடிச்சிட்டு அப்படியே ஸ்பென்சர் போய் வர லேட்டாகும்”
அதனால் கவலை படவேண்டாம் என்றாள்...
நடராஜன்,
“நீ எப்ப வேனா வா, ஆனா ரொம்ப நாளா கேட்க நினைச்ச ஒரு கேள்வி உன்கிட்ட கேட்கடட்டுமா அனிதா?
அனிதா, “கேளுங்க டாடி”
நடராஜன் ,வளர்ந்த அழகான, நவநாகரிக பெண்ணாக எதிரில் நிற்க்கும் தனது மகள் அருகில் வந்து...
“சின்னவயசுல அப்பா அப்பான்னு கூப்பிட்டு சந்தோஷப்படுத்துவியே, இப்ப ஏன்மா என்னை டாடின்னு சொல்லி கூப்பிடுற?” என்றார்
அனிதா நிதனமாக சொன்னாள்...
“அப்பான்னு தமிழ்ல கூப்பிட்டா கஷ்டப்பட்டு போட்ட லிப்ஸ்டிக் கலைஞ்சிடுது”....
குறிப்பு...
எனக்கு சின்ன குறுந்தகவலாக வந்த இந்த செய்தி உங்கள் முன் சிறுகதையாக உங்கள் முன்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
கதை சூப்பர் !முடிவு அருமை!
ReplyDeletenalla iruku..
ReplyDeletenice jackie...
ReplyDeleteமுடிவு கலங்கடித்த உண்மை !
ReplyDeleteஅண்ணாத்தே.......
ReplyDeleteநீ எங்கேயோ போய்ட்டே அண்ணாத்தே....
/
ReplyDelete“அப்பான்னு தமிழ்ல கூப்பிட்டா கஷ்டப்பட்டு போட்ட லிப்ஸ்டிக் கலைஞ்சிடுது”....
/
haa haa
fantastic!
:))
ஆகா! எப்டியெல்லாம்
ReplyDeleteதமிழ் கலாச்சாரத்தை
காப்பாத்துறாங்கப்பா...
///
ReplyDeleteஎனக்கு சின்ன குறுந்தகவலாக வந்த இந்த செய்தி உங்கள் முன் சிறுகதையாக உங்கள் முன்....
///
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...
(வசன உதவி - “நாடோடிகள்” சமுத்திரக்கனி)
அன்புடன் நித்யன்
ஓ அதான் டாடி டாடினு கூப்பிடுறாங்களோ ..
ReplyDeleteகதை சூப்பர் !முடிவு அருமை!//
ReplyDeleteநன்றி பிஸ்கோத்து பயல்
nalla iruku..
ReplyDeleteநன்றி சஜனா மிக்க நன்றி
nice jackie...//
ReplyDeleteநன்றி தன்டோரா
முடிவு கலங்கடித்த உண்மை !//
ReplyDeleteநன்றி பிஸ்கோத்து பயல்
அண்ணாத்தே.......
ReplyDeleteநீ எங்கேயோ போய்ட்டே அண்ணாத்தே....==“
நன்றி நைனா
/
ReplyDelete“அப்பான்னு தமிழ்ல கூப்பிட்டா கஷ்டப்பட்டு போட்ட லிப்ஸ்டிக் கலைஞ்சிடுது”....
/
haa haa
fantastic!
:))
நன்றி சிவா
ஆகா! எப்டியெல்லாம்
ReplyDeleteதமிழ் கலாச்சாரத்தை
காப்பாத்துறாங்கப்பா..‘
நன்றி கலை இப்படித்தான் நம் இளைய சமுகம் இருக்கின்றது
எனக்கு சின்ன குறுந்தகவலாக வந்த இந்த செய்தி உங்கள் முன் சிறுகதையாக உங்கள் முன்....
ReplyDelete///
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...
(வசன உதவி - “நாடோடிகள்” சமுத்திரக்கனி)
அன்புடன் நித்யன்//
முடிந்த வரை நேர்மையாக இருக்க முயற்ச்சிக்கின்றேன் நன்றி நித்யா
ஓ அதான் டாடி டாடினு கூப்பிடுறாங்களோ ..//
ReplyDeleteஆம் சூரியன்
அட வித்தியாசமா இருக்கே கதை
ReplyDeleteஎன்னோட வலை பக்கம் வந்து பாருங்க பாஸ் ..
கதையின் முடிவு காலத்தின் கொடுமை. அருமையான கதை.
ReplyDelete:-)))))
ReplyDeleteஉண்மையில், சிந்திக்க பட வேண்டிய விஷயம்.
ReplyDeleteada paavame :(
ReplyDeleteவாவ், நல்லா இருக்கு, ரசித்தேன்! ;)
ReplyDelete