கொள்ளையடிப்பது பெரும்தவறு அதைவிடகொள்ளையடித்த பணத்தை பிரித்து கொள்ளாமால், ஒருவர் மட்டுமே ஆட்டையை போடுவது அதைவிட பெரும் தவறு... அப்படி ஆட்டையை போட்டது மட்டும் ஒரு பெண்ணாக இருந்ததால், அவளின் கதி என்னவாகும்???
ஃபெம்மி பேட்டல் படத்தின் கதை இதுதான்.... இது பிரெஞ்ச் தலைப்பு... என் மனைவி இது பீமேல் ஃபேட்... அதாவது பெண்ணின் தலைவிதி என்கின்றாள்....
கேன்ஸ் உலக படவிழா நடக்கின்றது... அங்கே ரெட்கார்பெட் வரவேற்ப்பு கொடுக்கபடுகின்றது, அந்த விழாவுக்கு விலைமதிக்க முடியாத வைரங்களுடைய உடையை அனிந்து வருகிறாள்...(மேலே இருப்பது அத்தனையும் அப்படியே அப்பட்டமாக தெரியும் போது,அது எப்படி உடையாகும்) அந்த வைரத்தை ஒரு பெண் உட்பட மூன்று பேர் கொண்ட கொள்ளை கூட்டம் கொள்ளையடிக்கின்றது...அதில்வைர உடையை, அந்த பெண்Rebecca Romijn-Stamos மட்டும் சாதுர்யமாக அடித்துக்கொண்டு போய் விடுகின்றாள்....
அவளை கொள்ளை அடித்த கும்பலில் மீதம் இருக்கும் இருவர் அவளை வெறியோடு தேடி அலைகின்றனர்... ஆனால் அவர்களுக்கு அவள் அல்வா கொடுத்துவிட்டு பிரர்ன்சில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பி போகிறாள், போகும் வழியிலேயே...பக்கத்துசீட்டில் உட்கார்ந்து இருக்கும் அமெரிக்கரை கண்ணில் ஜலம் வைத்து ஜலம் நிகழ்த்தி அவனை மயக்கிவிடுகின்றாள்.....
எழுவருடம் கழித்து அவள் பிரான்ஸ் வருகின்றாள் அதுவும் எப்படி அந்த கொள்ளைகாரி கல்யாணம் செய்து கொண்டது பிரான்சுக்கான அமெரிக்க துதரை.... அந்த கொள்ளை காரி அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் வந்ததில் இருந்து... யாருக்கும் முகம் காட்ட மாடடேன் என்கிறாள். அவளை போட்டோ எடுத்து வெளியுலகுக்கு காட்ட வேண்டும் என்று ஒரு பத்திரிக்கை விரும்புகின்றது... அந்த அசைன்மென்டை ஒரு பெப்பரசி புகைபடக்காரனானAntonio Banderas இடம் ஒப்படைக்கபடுகின்றது... அந்த போட்டோ வெளியிடப்பட்டால் பிரான்சில் இருக்கும் அந்த கொள்ளைகாரர்களுக்கு தெரிந்தால் இவள் காலி ... அதே போல் இப்போது அம்பாசிடர் ஒய்பாக வேறு அவள் இருக்கின்றாள் அவளின் கடந்தகாலம் வெளியே தெரிந்தாலும் சிக்கல்...
வைரம் என்னவானது....? கொள்ளையர்கள் அவளை கண்டுபிடித்தார்களா? அம்பாசிட்டர் என்ன செய்து கொண்டு இருந்தார்???? போன்ற கேள்விகளுக்கு ரொம்ப சூடாக உடைகளை குறைத்து பதிலை சொல்லி இருக்கின்றார்கள்....இந்த படம் பார்க்கும் போது அனிச்சையாக கால் மேல் கால் போட்டு படம் பார்க்க வைக்கின்றார்கள்..... அதே போல் கிளைமாக்ஸ் வருவதற்க்கு முன் 15 நிமிடத்திற்க்கு முன் நாம் யாரும் எதிர்பார்க்காத டூவிஸ்ட் படத்தில் உண்டு...அது உங்களை கண்டிப்பாக அடிவயிற்றில் குத்தும் டுவிஸ்ட்.....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
வைரம் என்னவானது என்பது மெயின் டெம்டை வைத்துகொண்டு ரொம்ப அழகான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கின்றார்...Brian De Palma
இது பிரெஞ்சு தேசத்துபடம் என்பதால் அரை நிர்வான காட்சிகளுக்கும் உடலுறவு காட்சிகள் சாதாரணமாக லாலா கடை ஜீலேபி போல் வந்து போகின்றன....
இந்த படத்தின் காட்சிகளில் ஒரு உலகதரம் இருப்பது போன்றதொறு மேக்கிங்...
அஞ்சாதே படத்தில் ஒரு காட்சி முழுவதும் லோ ஆங்கிளில் காலிலேயே எடுப்பதான காட்சியை எடுக்க இந்த படத்தில் இருந்து கூட இன்ஸ்பயர் ஆகி இருக்கலாம்...
பல காட்சிகளில் சினிமாவின் அடிப்படை மொழியான விஷுவல் என்ற விஷயத்தில் பல காட்சிகளில் பி்ன்னுகின்றார்கள்...
ராணுவ உடையுடன் போகும் அந்த பெண்ணின் காலையும் பூட்ஸ் சத்தங்களையும் சத்தமாக காட்டி அந்த பெண் ஒரு வீட்டின் உள்ளே போய் வெளியே வரும் போது அவள் ஓடி வருவதை அவளின் காலை மட்டும் காட்டி அதன் பின் அவளை இரண்டு ஜோடி கால்கள் துறத்தி வருவதை ஸ்லோமோஷனில் காண்பிப்பது அழகோ அழகு...
இந்த படம் 2002ல் வெளிவந்தது... அவார்டு ஏதும் இந்த படம் பெறவில்லை....
இதே காட்சியை பாலஜி சக்திவேல் காதல் படத்தில் பரத் காலை மட்டும் காட்டி, ரிப்பேர் ஆன ஸ்கூட்டி பியூட்டி சந்தியாவுக்கு உதவுவதா? வேண்டமா? என்பதை முடிவெடுக்கவும் மனம் அலைபாய்வதையும் அந்த காலை காட்டும் காட்சியில் வைத்து இருப்பார்....
திரையரங்கில் நடக்கும் லெஸ்பியன் காட்சி டெம்ட் ஏற்றும் ரகம்...
முதல் காட்சியில் அவள் உடையற்று டிவி பார்த்து கொண்டு இருக்க அப்போது அங்கு வரும் நிக்ரோ அவளிடம் பேசிக்கொண்டு இருந்து விட்டு அவள் பாஸ்போர்ட்டை வாங்கி சிரித்து பேசி கொண்டே பச் என கண்ணத்தில் அறையும் போதே இந்த படம் வேறு ஜாதி படம் என்பதை சொல்லாமல் சொல்கின்றது....
மாஸ்க் ஆப் சாரோ அன்டனியோ இந்த படத்தின் கதாநாயகன் என்றாலும் அவருக்கு வேலை அதிகம் இல்லை... ஆனால் கதாநாயகியுடன் பாரில்.................?????
கதாநாயகி ஒரு சில காட்சிகளில் அழகாக இருக்கின்றாள் ஒரு சிசல காட்சிகளில் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்வது போல் இல்லை...
ஹோட்டல் சீன்கள் மற்றும் வெளிப்புற காட்சிகளிலும், மிக முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் ஒளிப்பதிவாளரின் உழைப்புதெரிகின்றது...Thierry Arbogast
பேப்பரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் அதை காட்சி படுத்தும் போதுதான் பயிறுகள் இறையும்.....அந்த வகையில் ஒளிப்பதிவாளரின்Thierry Arbogast துவரம் பருப்புகள் இறைந்து இருக்கின்றது....
சொல்ல போனால் இது பார்க்க வேண்டிய லேபிளில்தான் வர வேண்டும் ஆனால் அந்த கடைசி அரைமணிநேர டுவிஸ்ட் மற்றும், விஷுவலாக பல காட்சிகள் சொன்னதால் இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படங்கள் வரிசையில் வருகின்றது....
போட்டோவுல தாடி வச்சிக்கினு இருக்காறே அவருதான் கேப்டன் ஆப் த ஷிப்பு...
Directed by Brian De Palma
Produced by Tarak Ben Ammar
Written by Brian De Palma
Starring Rebecca Romijn-Stamos
Antonio Banderas
Music by Ryuichi Sakamoto
Cinematography Thierry Arbogast
Editing by Bill Pankow
Distributed by Warner Bros.
Release date(s) France
April 30, 2002
USA
November 6, 2002
Running time 114 min.
Country France
Language English
French
Budget $35 million
Gross revenue Domestic
$6,630,252
Worldwide
$16,838,910
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
me the first
ReplyDeleteநல்ல படெமல்லாம் டீவீடீ போட்டு வையுங்க தல!
ReplyDeleteமொத்தமா வந்து வாங்கிகிறேன்!
Antonio Banderas - இவருடையது ஒரு படம் தான் பார்த்து இருக்கேன்
ReplyDeleteமாஸ்க் ஆஃப் ஸாரோ ...
ரொம்ப பிடிச்சி இருந்தது பெர்ஃபார்மன்ஸ்
இந்த படம் கிடைக்குதான்னு பார்ப்போம் ...
Hmmm nadakkattum nadakkattum.
ReplyDelete/*கொள்ளையடிப்பது பெரும்தவறு அதைவிடகொள்ளையடித்த பணத்தை பிரித்து கொள்ளாமால், ஒருவர் மட்டுமே ஆட்டையை போடுவது அதைவிட பெரும் தவறு... அப்படி ஆட்டையை போட்டது மட்டும் ஒரு பெண்ணாக இருந்ததால், அவளின் கதி என்னவாகும்???*/
ReplyDeleteஇது கூட தெரியாதா.... ரெண்டு இடைதேர்த்தல்லையும் பாராளுமன்ற தேர்தல்லேயும் தோத்து போய் ஏதாவது நாட்டு எஸ்டேட்லே ரெஸடு எடுக்க வச்சிரும்.
சாரி... சாரி...... நான்கூட அரசியல் பத்தி ஏதும் சொல்லுறீங்கன்னு நெனச்சிட்டேன், சொல்லிட்டேன் சாரி... சாரி......
/*மேலே இருப்பது அத்தனையும் அப்படியே அப்பட்டமாக தெரியும் போது,அது எப்படி உடையாகும்*/
ReplyDeleteஇது சிம்பு மேட்டர் சோ, சிம்பு ஸ்டைலிலே...
யாரு "பப்பரக்கா"ன்னு தொறந்து போட்டிருக்கான்னு பார்க்க கூடாது... கடையசியா.. கரெக்டா "மெயினா"னதை மூடி இருக்கானு பார்க்கணும்.
/*அதே போல் கிளைமாக்ஸ் வருவதற்க்கு முன் 15 நிமிடத்திற்க்கு முன் நாம் யாரும் எதிர்பார்க்காத டூவிஸ்ட் படத்தில் உண்டு...அது உங்களை கண்டிப்பாக அடிவயிற்றில் குத்தும் டுவிஸ்ட்.....*/
ReplyDeleteகுத்து அவளுக்கு டிவிஸ்டு நமக்கா...???
/*ஹோட்டல் சீன்கள் மற்றும் வெளிப்புற காட்சிகளிலும், மிக முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் ஒளிப்பதிவாளரின் உழைப்புதெரிகின்றது...Thierry Arbogast*/
ReplyDeleteஅண்ணே வெளிப்புற காட்சி தான் படம் புல்லா விரவி கிடக்குன்னு சொன்னீங்களே... இதுக்கு அந்த நாயகிதான் கஷ்ட பட்டிருக்கணும்.
me the first//
ReplyDeleteநன்றி வால்பையன்
நல்ல படெமல்லாம் டீவீடீ போட்டு வையுங்க தல!
ReplyDeleteமொத்தமா வந்து வாங்கிகிறேன்!//
இருந்தா கண்டிப்பா தரேன்
Antonio Banderas - இவருடையது ஒரு படம் தான் பார்த்து இருக்கேன்
ReplyDeleteமாஸ்க் ஆஃப் ஸாரோ ...
ரொம்ப பிடிச்சி இருந்தது பெர்ஃபார்மன்ஸ்
இந்த படம் கிடைக்குதான்னு பார்ப்போம் ...
நன்றி ஜமால்..
Hmmm nadakkattum nadakkattum.//
ReplyDeleteநன்றி நைனா...
DVD எங்கே சார் கிடைக்கும்
ReplyDeleteஇது கூட தெரியாதா.... ரெண்டு இடைதேர்த்தல்லையும் பாராளுமன்ற தேர்தல்லேயும் தோத்து போய் ஏதாவது நாட்டு எஸ்டேட்லே ரெஸடு எடுக்க வச்சிரும்.
ReplyDeleteசாரி... சாரி...... நான்கூட அரசியல் பத்தி ஏதும் சொல்லுறீங்கன்னு நெனச்சிட்டேன், சொல்லிட்டேன் சாரி... சாரி......-------//
நான் நின்சேன் நீ சொல்லிட்டே...
/*அதே போல் கிளைமாக்ஸ் வருவதற்க்கு முன் 15 நிமிடத்திற்க்கு முன் நாம் யாரும் எதிர்பார்க்காத டூவிஸ்ட் படத்தில் உண்டு...அது உங்களை கண்டிப்பாக அடிவயிற்றில் குத்தும் டுவிஸ்ட்.....*/
ReplyDeleteகுத்து அவளுக்கு டிவிஸ்டு நமக்கா...???//
ஏன்டா பாவி ஒரு பேச்சுக்கு அப்படி சொன்ன அது எப்படி எல்லாம் மாத்திட்டயா நீ...
/*ஹோட்டல் சீன்கள் மற்றும் வெளிப்புற காட்சிகளிலும், மிக முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் ஒளிப்பதிவாளரின் உழைப்புதெரிகின்றது...Thierry Arbogast*/
ReplyDeleteஅண்ணே வெளிப்புற காட்சி தான் படம் புல்லா விரவி கிடக்குன்னு சொன்னீங்களே... இதுக்கு அந்த நாயகிதான் கஷ்ட பட்டிருக்கணும்.//
அந்த பொன்னு கஷ்டப்ட்டா போல தெரியலை அதை பொறுத்த வரைக்கு உடம்புல போட்டு இருக்குற டிரஸ் உறுத்து அவ்வளவுதான்....
DVD எங்கே சார் கிடைக்கும்//
ReplyDeleteநம்ம பர்மா பஜர்ர்ல விக்குது...
ராஜ் எங்க ஆளையே கானோம்...
ReplyDeleteஆணி கொஞ்சம் ஜாஸ்தி சார்.....அதான் படிக்கறதோட சரி...பின்னூட்டம் போட முடியல
ReplyDelete//லாலா கடை ஜீலேபி//
ReplyDeleteஹி ஹி ஹி ரொம்ப இனிக்குமே..
நடத்துங்க நடத்துங்க...
ReplyDeleteஒரே படம் மயம்மா இருக்கு!
உங்க ஸ்டையிலில் அடுத்த பதிவை எதிர்பார்க்கும் உங்கள் ரசிகன்!!
ஆணி கொஞ்சம் ஜாஸ்தி சார்.....அதான் படிக்கறதோட சரி...பின்னூட்டம் போட முடியல--
ReplyDeleteராஜ் ஆணிதான் ரொம்ப முக்கியம் அதை புடுங்கறதுல நேரம் செலுத்துனாதான் வலைக்கு பணம் கட்ட முடியும்...
நன்றி ராஜ்
//லாலா கடை ஜீலேபி//
ReplyDeleteஹி ஹி ஹி ரொம்ப இனிக்குமே..//
சூரியன் அதுபோலதான் ஏன் அதைவிட அதிகமாகவே....
நடத்துங்க நடத்துங்க...
ReplyDeleteஒரே படம் மயம்மா இருக்கு!
உங்க ஸ்டையிலில் அடுத்த பதிவை எதிர்பார்க்கும் உங்கள் ரசிகன்!!//
கலை என் பதிவை அதிகம் கவனிச்சா நான் சினிமாவுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கலைன்னு தெரியும்... இருப்பினும் நீ என் எழுத்துக்கு ரசிகனாய் மாறியது குறித்து மகிழ்கின்றேன்.....