
சன்கிளாஸ்,
ஸ்பிரேயர்,
சிகரேட்பாக்கெட்,
மோதிரம்,
ஒரு விசிட்டிங்கார்டு,
துப்பாக்கி தோட்டா,
ஒரு வாட்ச்,
ஒரு சாவி....
இப்படியாக ஒரு 20 அயிட்டங்கள் அவன் முன் இருக்கின்றன... அவனை துரத்துகின்றார்கள்... உயிர்பயத்துடன் ஓடிக்கொண்டு இருக்கின்றான் அவனுக்கு 3 வருடங்களுக்கு முன் நடந்த எந்த சம்பவங்களும் அவன் நினைவுக்கு வரவில்லை... அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடுகின்றான்... என் துரத்துகின்றார்கள் என்று ஆராய்வதை விட உயிரை காப்பாற்றிகொள்வது அவனுக்கு முக்கியமாக படுகின்றது...

அவன் முன் உள்ள அந்த 20 பொருட்களும் அவன் ஓடும் போது அல்லது உயிரை காப்பாற்றி கொள்ள ஓடும் போது எப்படியெல்லாம் உதவுகின்றன என்பதை மகி சுவரஸ்யமாகவும் விறு விறுப்பாகவும் சொல்லி இருக்கின்றார் இதன் இயக்குநர் ஜான் வூ.....
பேசெக் படத்தின் கதை இதுதான்....
(Ben Affleck) - Michael Jennings ஒரு என்ஜினியர் கடந்த 3 வருடங்களுக்கு முன் என்ன நடந்தது என்பது சற்றும் நினைவில் இல்லை... அவனிடம் இருப்பது ஒரு கவரில் இருக்கும் 20 பொருட்கள்.... யார் நல்லவர் யார் கெட்டவ்ர் என்று தெரியாமல் தவிக்கின்றான்...அப்போது அவனை எப்பிஐ அவனை கைது செய்து விசாரிக்கின்றது அங்கே இருந்து அவன் தப்பி ஓடுகின்றான்...அப்போது அவன் கவரில் வைத்து இருந்த 20 பொருட்களும் அவனுக்கு சொல்லி வைத்தது போல் உதவுகின்றன....

(Uma Thurman) - Dr. Rachel Porter என்ற பயலாஜீகல் சயின்ட்டிஸ்ட் அவனுக்கு உதவுகின்றாள்... கடந்து போன மன்னிக்கவும் மறந்து போன 3 வருட வாழ்வில் அவனுக்கு அவள் எந்த வகையில் உதவியாய் இருந்தால் என்பதையும், அது எப்படி 20 பொருட்கள் மிகச்ரியாக அவனுக்கு உதவமுடியும்? என்று நீங்கள் அதி மேதாவிதனமாக என்னிடம் கேள்வி கேட்டால், நீங்கள் உடனே இந்த படத்தை பார்த்து விடுவது நல்லது.....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
ஜான் வூ வோட ஒரு பக்க ஆக்ஷன் பிலிம் இந்த படம்...
அவருக்கு ரொம்ப பிடிச்ச பைக் சேசிங் சீன் இந்த படத்துல சூப்பரோ சூப்பர்....

இந்த படத்தோட தயாரிப்பாளர் இவர்தான்....இந்த படத்துலயும் முகத்துக்குநேரா துப்பாக்கி வச்சிப்பாங்க....
படத்துல ஆரம்பத்துல இருந்து இறுதி வரை விறுவிறுப்பு....அந்த 20 பொருட்களை முன்வைத்து பின்னபட்ட டதிரைக்கதை அபாராம்...
சினிமா ஆர்வலர்களிடம் இந்த படம் இரண்டு தாக்கங்களை முன்வைத்தது
ஒன்று படம் அருமை மற்றது ஜானின் இந்த படம் சொதப்பல்...

நான் அருமை ரகத்தை சோந்தவன்... கேபிள் சங்கர் சொல்வது போல் அவர் நல்ல டெக்னிசியனும் கூட... இந்த படத்தை பார்க்கும் போது அதை நீங்களே உணர்வீர்கள்...
ரயிலில் துரத்தும் காட்சியாகட்டும்,பைக்கில் துரத்தும் காட்சியாகட்டும், கேமரா மேன் Jeffrey Kimball உழைப்பை உணர்வீர்கள்....
Directed by John Woo
Produced by John Woo
John Davis
Terence Chang
Michael Hackett
Written by Short Story:
Philip K. Dick
Screenplay:
Dean Georgaris
Starring Ben Affleck
Aaron Eckhart
Uma Thurman
Music by John Powell
Cinematography Jeffrey Kimball
Editing by Christopher Rouse
Distributed by - USA -
Paramount Pictures
-International-
DreamWorks SKG
Release date(s) United States:
December 25, 2003
United Kingdom:
January 16, 2004
Running time 119 min
Country USA
Language English
Budget $60 million
Gross revenue $96,269,812
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நீங்கள் உடனே இந்த படத்தை பார்த்து விடுவது நல்லது.....]]
ReplyDeleteஅதான் நானும் நெனைக்கன்
/
ReplyDeleteரயிலில் துரத்தும் காட்சியாகட்டும்,பைக்கில் துரத்தும் காட்சியாகட்டும், கேமரா மேன் Jeffrey Kimball உழைப்பை உணர்வீர்கள்....
/
ஆக்ஷன் அதிரடிப்படம்னாலே ரொம்ப நல்லா இருக்கும் டயலாக் கம்மியா இருக்கும். புரிஞ்சிக்க கஷ்டப்பட வேண்டியதில்லை
:)))
அருமையான பட அறிமுகம்.
present sir.
ReplyDeleteநீங்கள் உடனே இந்த படத்தை பார்த்து விடுவது நல்லது.....]]
ReplyDeleteஅதான் நானும் நெனைக்கன்//
நன்றி ஜமால்
ரயிலில் துரத்தும் காட்சியாகட்டும்,பைக்கில் துரத்தும் காட்சியாகட்டும், கேமரா மேன் Jeffrey Kimball உழைப்பை உணர்வீர்கள்....
ReplyDelete/
ஆக்ஷன் அதிரடிப்படம்னாலே ரொம்ப நல்லா இருக்கும் டயலாக் கம்மியா இருக்கும். புரிஞ்சிக்க கஷ்டப்பட வேண்டியதில்லை
:)))
அருமையான பட அறிமுகம்.//
நன்றி சிவா
present sir.//
ReplyDeleteஎஸ் நைனா சார்
சின்ன நாட் வையுங்க!
ReplyDeleteநாயகன் ஞாபகங்கள் மறக்கடிக்கட்ட காரணம், அவன் கண்டுபிடித்த எதிர்காலத்தை சொல்லும் இயந்திரம்!
இன்று HBO வில் இரவு MI2.
பாத்திட வேண்டியதுதான்! அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDelete//சினிமா ஆர்வலர்களிடம் இந்த படம் இரண்டு தாக்கங்களை முன்வைத்தது
ReplyDeleteஒன்று படம் அருமை மற்றது ஜானின் இந்த படம் சொதப்பல்...///
அப்போ பார்க்கலாமா வேணாமா ?இல்ல இங்க வரும் 20 பின்னுட்டம் பர்க்கலாம வேணாமானு முடிவு செய்ய உதவி செய்யுமா ?
கிட்ட தட்ட 3-4 வருடங்களுக்கு முன் இந்த படத்தை பார்த்தேன் ... என்னை பொறுத்த வரையிலும் இது ஒரு அருமையான படம் ... to me its way better than many so called action movies ... எனக்கு ரொம்ப பிடித்தது திரைக்கதை தான் ...
ReplyDeleteஇந்த படத்தின் பிளாஷ்பேக் & கிளைமாக்ஸ் கட்சிகளை ஹிந்தி கிருஷ்'ல் கேவலமாக காபி அடித்திருப்பார்கள் ...
ஜான் வூ எனக்கு ரொம்ப பிடித்த இயக்குனர்.. இவர் படங்கள் அனைத்தும் விரும்பி பார்ப்பேன் .. சண்டை காட்சிகளில் பின்னி பெடலெடுத்து இருப்பார்
ReplyDeleteநான் இந்த படத்தை பார்த்திருக்கேன் ஜாக்கி. எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் இது. கிளைமேக்ஸ் வரைக்கும் அந்த பொருட்களை உபயோகப்படுத்தற உத்தியும் அதற்கான காரணங்களும் கலக்கலா இருக்கும்.
ReplyDeleteஇதை ஹிந்தியில ஹிர்த்திக் படத்துல கொடுமையா எடுத்திருப்பாங்க.. :(( எதிர்காலத்தை கணிக்கறதுன்னு சொல்லி..
http://vphottos.blogspot.com/2009/10/paycheck-movie-download.html
ReplyDelete