(SLIVER) 18++அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவரா? அவசியம் படிக்கவும்



நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் குடி இருக்கின்றீர்கள். அது 35 மாடி உள்ள கட்டிடம் அது. அதில் உள்ள எல்லா வீட்டின் அறையிலும்,பெட்ரூம்,பாத்ரூம் உள்பட கேமரா வைத்து ஒருவன் கண்கானித்தால் எப்படி இருக்கும்...?பகீர் என்று இருக்காது?
அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப்பார்பது என்பது பால்யகால வெளிப்பாடு, அது சுவற்றில் ஒன்னுக்கு அடிக்கும் தூரத்தை கணக்கிட்டு ,ஏன் தூரம் கம்மியாக இருக்கின்றதே, அடுத்தவனுடையது எப்படி இருக்கின்றது? என்று அறியும் ஆவல் பாலய்காலத்து சங்கதிகள்... இருப்பினும் இந்த விழைவு படிப்படியாக வயதுக்கு வந்த பிறகு அது பெண்பால் பக்கம் போகின்றது...

எதிர்பால் உடலமைப்பு எப்படி இருக்கும்?, அதன் அங்க அமைப்பு எப்படி இருக்கும்? என்ற விழைவும்,இயற்கையின் ஆதார சுருதியும் அதை கிளறிவிட... அதை பற்றிய தேடல், ஒரு பெண்ணை முழுதாய் கானும் வரை ஆனை துரத்திக்கொண்டே இருக்கின்றது.

அந்த தேடல் ஆர்வம் ஒரு போதும் முற்று பெறுவதில்லை, அடுத்தவர் அந்தரங்கத்தை ரசிக்காத மனிதனே இந்த உலகில் குறைவு... இது அதிகபடியாக போகின்ற போதுதான்... அவன் இந்த விஷயத்துக்கு முழு நேரமும் செலவிடுகின்றான்... சதா சர்வகாலமும் அதனை பற்றிய எண்ணத்துடன் இருக்கின்றான்....அடுத்தவர் அந்தரங்க காட்சிகளை , வீடியோ கேமராவில் அல்லது செல்போனில் படம் பிடிக்கின்றான்....

அடுத்தவர் அந்தரங்கத்தை படம்பிடித்து மகிழ்ச்சிகானும்,அப்படிபட்ட ஒருவனை பற்றிய கதைதான் ஸ்லீவர் படத்தின் கதையும்...

ஸ்லீவர் படத்தின் கதை இதுதான்


ஸ்லீவர் அப்பார்மென்ட் என்பது ஒரு 35 மாடி அடுக்குமாடி குடியிருப்பு அதில் ஒரு எழுத்தாளர்Carly Norris( ஷெரன் ஸ்டோன்) 35 வயது பெண் குடி வருகின்றார்.... அவள் குடி வந்த 35 வது மாடி பால்கனி யிலுருந்து ஏற்க்கனவே அங்கு குடியிருந்தவள் மேலே இருந்து விழுந்து சாகின்றாள்...அவள் அந்த அப்பார்மென்ட் வீட்டில் இருக்கும் போது எல்லாம் அவளுக்கு அவளை கண்கானிப்பது போன்ற பிரமை வருகின்றது... அதே போல் அவள் அந்த குடியிருப்பில் இருக்கும் போதே சில விரும்பதகாத நிகழ்வுகள் நடக்கின்றன...

அவளுக்கு அதே அப்பார்ட்மென்டில் பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவர் கொலையாகின்றனர், அதே அப்பார்ட்மன்டில் வசிக்கும்Zeke (Baldwin) பழக்கம் ஏற்படுகின்றது... அவனோடு உடலுறவும் வைத்துக்கொள்கின்றாள்.... ஒரு கட்டத்தில் அந்த அப்பார்ட்மென்டில் இருக்கும் எல்லா வீட்டிலும் ரகசிய கேமரா இரு்கின்றதை கண்டு பிடிக்கின்றாள்... அப்புறம் என்ன? வாயை திறந்து கதை கேட்காம போய் படத்தை வாங்கி பாருங்கைய்யா....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

அந்த காலத்து அழகான ராட்சசி நடித்தபடம்...இந்த ராட்சசி படட்ம் நான் ஷரனுக்கு கொடுக்க காரணம் பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தை பார்த்வர்களுக்கு தெரியும்...

1993ல் படம் வெளி வந்தது....

இந்த படத்தை நான் சென்னை சத்தியத்தில் பார்த்தேன்....இந்த படத்துக்கு, நிறைய கணவன் மனைவிகள் வந்து பார்த்து ரசித்தார்கள்....வயதுக்கு வந்தவன் ஆண்மகன் மட்டுமே என்று தப்பு கணக்கு நான் போட்ட காலம் அது... உடலுறவு காட்சிகளை கணவனோடு வந்த பெண்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்த போது எனக்கு முதலில் ஆச்சர்யம்... அவர்கள் கொஞ்சமாவது வெட்கத்தில் குனிவார்கள் என்று ஆர்வத்தோடு அந்த பெண்ணின் பின் சீட்டில் இருந்து பார்த்துகொண்டுதான் இருந்தேன்...ம்ஹும்.எந்த சலனமும் இல்லை... எனக்குதான் சற்று கூச்சம்... அப்போதைய என் மனது ஆப்பாயில் போல் உருபெறாமல் ரெண்டாம் கெட்டானாக இருந்த நேரம்....அதன் பிறகு செக்சில் ஆண்பெண் சமம் என்பதை வாழ்க்கை புரிய வைத்தது......


இந்த படத்தின் ஸ்கிரீன் பிளே ரைட்டர்Joe Eszterhas,தான், பேசிக் இன்ஸ்டிங்ட் படத்துக்கும்...

இந்த படத்தின் ஷரன் ஷவர் குளியலும், அதன் பிறகு அவளுக்கு குளியல் அறையில் ஏற்படும் விரகதாபமும் அதற்க்கு கேமரா விளையாட்டும், அதற்க்கான எக்ஸ்பிரஷனும் உலக பிரசித்தம்...

பெரிய மனிதர்கள் என்று நாம் நினைப்பவர்கள் அந்தரங்கத்தை உற்று பார்த்தால் ரொம்ப கலிஜாக இருக்கும் என்பதை உணர்த்தும் படம்...

இந்த படத்தி்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை சுட்டிகாட்டி இருப்பார்கள்...

ஷரன் நடிக்கும் கூடல் காட்சிகளின் போது காம போதையை இவர் அளவுக்கு உலகில் எனக்கு தெரிந்து எந்த நடிகையாலும் ஏற்ற முடியாது.... அவ்வளவு இன்வால்வ்மென்ட்....

இந்த படம் சினிமா விமர்சகர்களால் வெகுவாய் குத்தி கிழிக்கபட்டது....

இந்த படத்தில் ஆனின் முன்னபக்கத்தை காட்டி,பிரச்சனை ஆகி ,அப்புறம் ரீ ஷூட் செய்தார்கள்...
Directed by Phillip Noyce
Produced by Robert Evans
Written by Novel:
Ira Levin
Screenplay:
Joe Eszterhas
Starring Sharon Stone
William Baldwin
Tom Berenger
Music by Howard Shore
Cinematography Vilmos Zsigmond
Editing by Richard Francis-Bruce
William Hoy
Distributed by Paramount Pictures
Release date(s) May 21, 1993
Running time 108 min.


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி..

12 comments:

  1. தேடிப்பிடித்துப் பார்க்கிறேன். இதே போல ஒரு கதையுள்ள ஹந்திப்படம் ஒன்று பார்த்தேம். மனிஷா கொய்ராலா நடித்திருப்பார். படத்தின் பெயர் ஞாபகமில்லை.

    ReplyDelete
  2. நல்ல பதிவுகள் தொடருங்கள் நண்பரே...

    ReplyDelete
  3. எனக்குதான் சற்று கூச்சம்... அப்போதைய என் மனது ஆப்பாயில் போல் உருபெறாமல் ரெண்டாம் கெட்டானாக இருந்த நேரம்.]]


    ஆம்!

    ReplyDelete
  4. இன்னைக்கும் தப்பிருச்சே...

    5 வது...

    ReplyDelete
  5. கிளம்பிட்டேன்.. டிவிடி கடைக்கு...

    ReplyDelete
  6. ரைட்டு பாத்துருவோம்!

    ReplyDelete
  7. மதுரைல இந்த படத்த நான் ரெண்டு தடவ பார்த்தேன் இது ரிலீஸ் ஆனப்போ... அப்போ நான் பத்தாவது முடிச்சிருந்தேன்.. ஹிஹி.. ஆனா அங்க ரிலீஷ் ஆன வருசம் 1997 ந்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  8. தேடிகிட்டு இருக்கேன்...உள்ளூர்ல இருந்திருந்தா உங்க கிட்டயே வாங்கியிருக்கலாம் :) ;)

    ReplyDelete
  9. ஒரு படம் விடலை போலிருக்கு..!

    நானும் அதே சத்யத்துலதான் ஆபீஸை கட் அடிச்சிட்டு வந்து பார்த்தேன்..!

    ஹி. ஹி.. ஹி...

    ReplyDelete
  10. ரொம்ப ஆர்வத்தை தூண்டி விட்டுட்டீங்க கண்டிப்பா பார்த்து விடுகின்றேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner