(Final Destination 2)படம் பார்த்து விட்டு பாத்ரூம் போகவே பயந்தபடம்...


இரவில் சிறு வயதில் நீங்கள் தனியாக சு்சுசு போகும் போது கொடுர முகங்கள்,வெள்ளை சேலை பேய் போன்றவை நம் அருகே வந்து கற்பனை வெளியில்,மற்றும் மனத்திரையில் வந்து பயமுறுத்தி சுச்சு ஒழுங்காக போகவிடாமல் தொந்தரவு செய்யும்.... இதனால் சுச்சு அவசர அவசர முடித்து என்பதைவிட, பயத்தில் பாதியில் செயல் முழுமை பெறாமல், தூக்கி உள்ளே போட்டுக்கொண்டு ஓடகால்டவுசரில் அதன் மிச்சம் வீட்டின் வெளிச்சத்தில் எட்டிப்பார்க்கும்.....

ஆனால் இந்த படம் பார்த்து விட்டு அதுவும் இரவில் பார்த்துவிட்டு சுச்சுவோ அல்லது வெளித்தெருவுக்கோ சட்டென போக முடியாது என்பதே உண்மை... அப்படி பட்ட பயமா? எனக்காக? என்று யாரும் சொல்ல வேண்டாம்... எங்க தலைவர் கமல் குருதியுனல் படத்திலேயே வீரம்ன்றது பயம் இல்லாதது போல நடிக்கிறதுன்னு சொல்லிட்டார்....

நீங்கள் இயல்பான வாழ்க்கையில் கடந்து போகும் அல்லது கவனிக்க மறந்து போகும் சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் உயிருக்கு உலைவைக்கலாம் என்பதுதான் பைனல் டெஸ்ட்டினேஷன் 2 படத்தின் கதை .....

வெக்கேஷனுக்கு தன் நண்பர்களுடன் காரில்செல்லும் Kimberly Corman ( A.J. Cook)க்கு தன் மனத்திரையில் அவள் போகும் ஹைவேசில் நடக்கும் மிகப்பெரிய சாலை விபத்து அவள் மனக்கண்ணில் தெரிகின்றது... அவள் அலரி அடித்து நடக்கவிருந்த பெரும் விபத்தை தடு்த்து நிறுத்துகின்றாள்... அவள் தடுத்து நிறுத்தியதால் ஒரு 9 பேர் உயிர் பிழைத்து இருப்பார்கள்...

உயிர் பிழைத்த அவர்கள் எப்படி கொடுரமாக சாகின்றார்கள் என்பதும் அவர்களுக்கு இறப்பு என்பது எப்படி வருகின்றது என்பதையும் சுவாரஸ்யத்தோடு கொடுரத்தையும் அள்ளி தெளித்து கதை சொல்லி இருக்கின்றார்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
இந்த படத்தின் முதல்பாகம் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது... அந்த படத்தில் விமானவிபத்து இந்த படத்தில் நெடுஞ்சாலை விபத்து...ஏனோ முதல் பகுதி, மூன்றாம் பகுதியை விட இந்த படம் எனக்கு பிடித்து படம்....

ஆப்பு ஒருவனக்கு ரெடியாகி விட்டால் அவன் எந்த தேசத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அவன் மரனத்துக்கு தப்ப மடியாது என்பதுதான் படத்தின் ஒன்லைன் ஆர்டர்....

அந்த நெடுஞ்சாலை விபத்தை எப்படித்தான் கற்பனை செய்தார்களோ? அதே போல் அதற்க்கு திரைக்கதை எழுதிவிட்டு அதை திரையில் கொஞ்சமும் பிசகில்லாமல் திரையில் கொண்டு வந்தார்கள் பாருங்கள் அதற்க்கு இந்த படகுழுவுக்கு ஒரு ராயல் சல்யூட்.....

பெரும்பாலும் எல்லோரும் இந்த படத்தின் விப்ததை ஆக ஓஹோ என்றாலும் அந்த சமையலறையில் நுடுல்சை வெளியில் கொட்டி, அவன் கண்ணில் ஏணி வந்து குத்தி இறப்பது... கொடுரத்தின் உச்சம் என்றாலும் அதனை லாஜிக்கொடு பாடமாக்கியது அருமை....

இந்த படத்தின் சாலை விபத்து காட்சியை தமிழ் படத்தில் தழுவி எடுத்து இருப்பார்கள் என்ன படம் என்று நினைவு இல்லை....


அடுத்து என்ன நடக்க போகின்றது, இவன் எப்படி சாக போகின்றான் என்று பதபதைப்பிலேயே நம் உயிர் போய் விடும் அளவுக்கான திரைக்கதை அமைப்பும் அதன் அபார குழு உழைப்பும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்....

வசிஸ்டர் வாயால் பிரம்மரிஷி வாயால் பட்டம் வாங்குவது போல், இயக்குனர் குவண்டன் டிரான்டினோ இந்த படத்தின் சாலைவிபத்து காட்சியை பார்த்து மெய்சிலிர்த்தேன் என்று பாராட்டி இருக்கின்றார்....


இந்த படத்தை குழந்தைகளுடன் பார்க்காதீர்கள், வளர்ந்த நமக்கே பயம் என்றால், அவர்கள் மனம் ரொம்ப பாதிக்க படும்...

இந்த படம் பாத்து விட்டு, காய்வெட்டுவது ,பாத்ரூமில் ஹீட்டர்போடுவது, அயன் பண்ணுவது, என்று எது செய்தாலும் பயம் வந்து தொலைக்கும்....

ஒரு ஆமானுஷ்ய சக்தி நம்மை கவனிப்பதாகவே நமக்கு படும்....

சிறுவர்களை பயமுறுத்துவது ஒரு பெரிய விஷயமே அல்ல, அனால் இரண்டு கழுதை வயசான நம்மளை பயமுறுத்துறாங்க பாருங்க... அதுதான் பெரிய விஷயம் அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் David R. Ellis பெரும் வெற்றி பெற்று இருக்கின்றார் என்பேன்....

இந்த படத்தை தியேட்டரில் பார்க்கவும், அல்லது 5,1 ஹோம் தியேட்டரில் பார்க்கவும்....
Directed by David R. Ellis
Produced by Craig Perry
Warren Zide
Associate Producer:
Sheila Hanahan
Co-Producer:
Justis Greene
Executive Producer:
Toby Emmerich
Richard Brener
Matt Moore
Jeffrey Reddick
Written by Screenplay:
J. Mackye Gruber
Eric Bress
Story:
J. Mackye Gruber
Eric Bress
Jeffrey Reddick
Characters:
Jeffrey Reddick
Starring Ali Larter,
A. J. Cook,
Michael Landes,
Keegan Connor Tracy,
Jonathan Cherry,
James Kirk,
Lynda Boyd,
Justina Machado,
Sarah Carter,
TC Carson,
David Paetkau,
Tony Todd
Music by Shirley Walker
Cinematography Gary Capo
Editing by Eric Sears
Studio Zide/Perry Productions
Distributed by New Line Cinema
Release date(s) United States:
January 31, 2003
U.K:
February 7, 2003
Australia:
March 6, 2003
Running time 90 min.
Country Flag of Canada Canada
United States
Language English
Budget $26,000,000
Gross revenue Worldwide: $90,426,405

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

37 comments:

 1. /
  சிறுவர்களை பயமுறுத்துவது ஒரு பெரிய விஷயமே அல்ல, அனால் இரண்டு கழுதை வயசான நம்மளை பயமுறுத்துறாங்க பாருங்க... அதுதான் பெரிய விஷயம் அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் David R. Ellis பெரும் வெற்றி பெற்று இருக்கின்றார் என்பேன்....
  /

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  தாயத்தெல்லாம் மந்திரிச்சி கட்டிகிட்டுதான் பாக்கணுமா?

  :))))))

  ReplyDelete
 2. நானும் படம் பார்த்து கொஞ்சம் மிரண்டுதான் போய்ட்டேன் ஜாக்கிண்ணா..!

  ReplyDelete
 3. பலருக்கு பயத்திலே தானே பாத்ரூமே வரும்... நீங்க மாற்றி சொல்லுறீங்க...

  ReplyDelete
 4. Movie is ok.

  But no climax jus wait for viewers to finish the game.

  May be many of us expect heroine will escape but no one escape from destiny

  ReplyDelete
 5. இப்ப நினைச்சாலும் பேமாக்கீது

  3ஆம் பாகம் வரை பார்த்தாயிற்று ...

  ReplyDelete
 6. முன் காணும் கனவே பத்து படத்துக்கு சமம்!

  ReplyDelete
 7. வணக்கம் ஜாக்கி

  அந்த படத்தின் சாலை விபத்து மறக்க முடியாதது

  காதநாயகி நடிப்பு அ1 (A1)

  ReplyDelete
 8. 4th part is on the way, check the trailor in you tube

  ReplyDelete
 9. ரகளையான படம்...
  அந்த ஹைவே விபத்து காட்சியை.. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த "அர்ஜுன்" படத்தில் கொஞ்சம் கூட வெக்கபடாம "சுட்டு "வைத்து இருப்பார்கள்.. தமிழிலும் டப் ஆகி வந்தது.."வரேண்டா மதுரைக்கு.."

  ReplyDelete
 10. Vanakkam sekar avargaley,

  4 aam paagam august 28 andru veliyaagirathu. Intha murai
  3D il varugirathu. 3D il paarka innum thrilling aaga irukkum ena ninaikkiren.. Car race thaan intha murai concept. Car race vibathil thappiyavargal 12 per eppadi vithiyaal(???) kollapadugiraargal enbathe immurai varavulla kathai. Halloween paagam 2 m Andre velivarugirathu. Sariyaana potti thaan.

  ReplyDelete
 11. உண்மையில் இந்த படம் தான் மயிர் குச்சரியும் படம்
  ஜி...... நினைவுகளுக்கு நன்றி சேகர்.

  ReplyDelete
 12. விமர்சனம் என்றால் இப்படித்தான் எழுத வெண்டும் - நடுவில் குறும்புக்கும் பஞ்சமில்லை - சுச்சா போகாமல் உள்ளே தூக்கிப் போட்டுகொண்டு ஓட கால்டவுசரில் அதன் மிச்சம் .....

  ஹா ஹா நல்லா இருக்கு

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 13. no no no....i can not watch film like this....

  அப்படி பட்ட பயமா? எனக்காக? என்று யாரும் சொல்ல வேண்டாம்... எங்க தலைவர் கமல் குருதியுனல் படத்திலேயே வீரம்ன்றது பயம் இல்லாதது போல நடிக்கிறதுன்னு சொல்லிட்டார்....

  ReplyDelete
 14. ஜாக்கி சொல்றத பாத்தா நைட் தூங்க முடியாது போல

  ReplyDelete
 15. வணக்கம்

  உண்மையில் இந்த படம் தான் மயிர் குச்சரியும் படம்

  ReplyDelete
 16. ரொம்ப நாள் கழித்து உங்களிடம் இருந்து ஒரு நல்ல பதிவு.

  ReplyDelete
 17. ஆமா தல இந்த படம் பயம் ஆரம்பம் ..

  ReplyDelete
 18. ம்ஹூம்...பில்லா (அஜித்), பில்லா (ரஜினி). எது ரொம்ப பிடிக்கும். என்னதான் பில்லா (அஜீத்) ஸ்டைலிஷ் என்றாலும், பில்லா (ரஜினி) தான் நம்மை ஈர்க்கும். அது போல முதல் பகுதி தான் அருமை. காரணம், படம் ஹிட்டானதும் அதன் அடுத்த பகுதியை மிகும்த பொருட் செலவில் எடுப்பார்கள். அதனால் படத்தின் திரைக்கதையை விட பிரஸன்டேசன் நன்றாக இருக்கும்.

  முதல் பகுதி முழுக்க முழுக்க ரொம்ப சிம்பிளா இருக்கும். பாத்ரூமில் இருக்கும் ஒரு கயிறு கழுத்தை இருக்கு கண் கருவிழி வெடிப்பது, ஒரு சிறு தகடு தலையை தனியே சீவுவது, ஒரு அடி பின்னால் வைத்ததும் ஒரு ஹாரன் சத்தம் கேட்கும் பின் திரையில் இருந்து சட்டென அவள் விலகுவாள் போன்றவை.

  இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க செயின் ரியாக்ஷன் போல விபத்து நடக்கும். ஒரு கயிறு அறுந்து விழுவதால் பின் என்னவெல்லாம் நடக்கிறது என்று, கையில் இருந்து அனைக்காமல் போட்ட சிகரெட், சும்மா வெளியே போட்ட நூடுல்ஸ் என்ன செய்கிறது போறவை.

  அதற்காக இரண்டாம் பாகம் நன்றாக இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இரண்டாம் பாகத்தைவிட முதல் பாகம் சிம்பிளாக, ஆனால் பவர்ஃபுல்லாக இருக்கிறது என்று சொல்கிறேன்.

  ReplyDelete
 19. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

  ReplyDelete
 20. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  தாயத்தெல்லாம் மந்திரிச்சி கட்டிகிட்டுதான் பாக்கணுமா?


  கண்டிப்பா சிவா

  ReplyDelete
 21. நானும் படம் பார்த்து கொஞ்சம் மிரண்டுதான் போய்ட்டேன் ஜாக்கிண்ணா..//
  நன்றி டக்லஸ்

  ReplyDelete
 22. பலருக்கு பயத்திலே தானே பாத்ரூமே வரும்... நீங்க மாற்றி சொல்லுறீங்க...
  நன்றி நைனா நல்ல கண்டுபிடிப்பு

  ReplyDelete
 23. Movie is ok.

  But no climax jus wait for viewers to finish the game.

  May be many of us expect heroine will escape but no one escape from destiny நீங்கள் சொல்லும் கருத்து உண்மைதான் யாசவி

  ReplyDelete
 24. இப்ப நினைச்சாலும் பேமாக்கீது

  3ஆம் பாகம் வரை பார்த்தாயிற்று ...//

  நன்றி ஜமால்

  ReplyDelete
 25. முன் காணும் கனவே பத்து படத்துக்கு சமம்!//
  உண்மைதான் வால்பையன்

  ReplyDelete
 26. வணக்கம் ஜாக்கி

  அந்த படத்தின் சாலை விபத்து மறக்க முடியாதது

  காதநாயகி நடிப்பு அ1 (A1)//
  நன்றி புதுவை சிவா...

  ReplyDelete
 27. 4th part is on the way, check the trailor in you tube//
  நன்றி தன்ஸ் தங்கள் தகவலுக்கு

  ReplyDelete
 28. நன்றி படத்தின் பெயரை சொன்னதுக்கு

  ReplyDelete
 29. Vanakkam sekar avargaley,

  4 aam paagam august 28 andru veliyaagirathu. Intha murai
  3D il varugirathu. 3D il paarka innum thrilling aaga irukkum ena ninaikkiren.. Car race thaan intha murai concept. Car race vibathil thappiyavargal 12 per eppadi vithiyaal(???) kollapadugiraargal enbathe immurai varavulla kathai. Halloween paagam 2 m Andre velivarugirathu. Sariyaana potti thaan//

  எல்லா விபரமும் ஒகே... ஆனால் 3டியில் வந்து மிரட்ட போவது என்பது பீதியை கிளப்புகின்றது...

  ReplyDelete
 30. உண்மையில் இந்த படம் தான் மயிர் குச்சரியும் படம்
  ஜி...... நினைவுகளுக்கு நன்றி சேகர்.//
  நன்றி ஜெட்லி

  ReplyDelete
 31. விமர்சனம் என்றால் இப்படித்தான் எழுத வெண்டும் - நடுவில் குறும்புக்கும் பஞ்சமில்லை - சுச்சா போகாமல் உள்ளே தூக்கிப் போட்டுகொண்டு ஓட கால்டவுசரில் அதன் மிச்சம் .....

  ஹா ஹா நல்லா இருக்கு

  நல்வாழ்த்துகள்//ஹ
  நன்றி சீனா மதுரைகாராரே

  ReplyDelete
 32. no no no....i can not watch film like this....

  அப்படி பட்ட பயமா? எனக்காக? என்று யாரும் சொல்ல வேண்டாம்... எங்க தலைவர் கமல் குருதியுனல் படத்திலேயே வீரம்ன்றது பயம் இல்லாதது போல நடிக்கிறதுன்னு சொல்லிட்டார்....//
  நன்றி டிரியிள் எக்ஸ்

  ReplyDelete
 33. ஜாக்கி சொல்றத பாத்தா நைட் தூங்க முடியாது போல//

  ஸ்டாஜன் தூங்க முடியாது என்பது வேறு பாத்ரூமுக்கு போகவே பயமாக இருக்கும் என்பதுதான் மேட்டர்

  ReplyDelete
 34. வணக்கம்

  உண்மையில் இந்த படம் தான் மயிர் குச்சரியும் படம்//
  உண்மை லிங்கம்

  ReplyDelete
 35. ரொம்ப நாள் கழித்து உங்களிடம் இருந்து ஒரு நல்ல பதிவு.//
  நன்றி இன்டி

  ReplyDelete
 36. அதற்காக இரண்டாம் பாகம் நன்றாக இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இரண்டாம் பாகத்தைவிட முதல் பாகம் சிம்பிளாக, ஆனால் பவர்ஃபுல்லாக இருக்கிறது என்று சொல்கிறேன்.//
  உண்மைதான் சீனு உங்கள் கத்தை ஏற்க்கின்றேன் அதிலம் அந்த அறையில் எல்லா பொருட்களையும் சேப்டி செய்ய காற்று மெட்லல அசைந்து வரும் அந்த இடம் திக் திக் ரகம்தான்

  ReplyDelete
 37. ம்ம்ம் அடுத்த பாகமும் வரப்போகுது . .அதுவும் 3D யில் வரப்போகுதாம் . . .

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner