
இந்த பூமியில் டைனோசர் கொடி நட்டு மண்ணோடு மண்ணாக போனபிறகு, இந்த பூமியில் நாம் ஜனித்து வளர்ந்தது, அடித்துக்கொண்டு வாழ்ந்து வருவது வரலாறு... ஆனால் நாம் போடும் ஆட்டம் இருக்கின்றதே? யம்மாடி கொஞ்சம் நஞ்சம் ஆட்டம் அல்ல... அப்படி அடங்காமல் பேய் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கின்றோம்...
என்னை தவிர இந்த உலகில் யாரும் இருக்ககூடாது என்ற மனநிலையில்தான் பல மனிதர்கள் சுய நலத்தோடு வாழ்கின்றார்கள்... பல நாடுகளும் அப்படித்தான்... தோ பக்கத்தில் இருக்கும் இலங்கை கூட அப்படித்தான், அப்புறம் அமெரிக்கா என ஏராளமான தேசங்கள் இப்படி பட்ட மனநிலையில் தான் இருக்கின்றன...
இதனாலேயே நாடுகளுக்கிடையே போர்கள் உருவாகின்றன.... அப்பாவிகள் கொல்லபடுகின்றார்கள்.... அதிபர்கள் டிவி பார்த்து டீ குடித்து விட்டு, செக்கரட்டரி உள்ளே என்ன கலர் போட்டு இருக்கின்றாள் என்று கவனித்து விட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட போகின்றனர்....
அங்கே போர் முனையில் வீரர்கள் அடித்துக்கொண்டு சாகின்றார்கள்....
மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் மரணம் வெகு நிச்சயம், ஆனால் மயக்கமடித்து விழுந்தவன் திரும்பவும் அந்த இடத்தை விட்டு எழுந்தால், வெடித்து சிதறி விடுவான் என்றால் எப்படி இருக்கும்???? அதுவும் அவன் உடல் பிஸ் பிசாக போய் வீடும். உடலை பக்கெட்டி வழித்து போட்டுதான் எடுத்து செல்ல வேண்டும்...சாவில் கோரமான சாவு... அப்படி ஒருவன் போர் முனையில் பாம் அருகில் விழுந்ததால் மூச்சையாகின்றான், மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் அவன் வெடித்து சிதறிவிடுவான் என்பதும், அவனுக்கும் அது தெரிந்தால் அவன் நிலை எப்படி இருக்கும் என்பதையும் அழகாக சொன்னபடம் நோ மேன்ஸ் லேண்ட்....

நோ மேன்ஸ் லேன்ட் படத்தின் கதை இதுதான்....
போஸ்னியா நாட்டுக்கும் செர்பிய நாட்டுக்கும் போர், போஸ்னியா பகுதிக்கும் சொ்பிய பகுதிக்கும் நடுவில் உள்ள பகுதி மனிதர்கள் வாழ தகுதியற்றது... ஏனென்றால் அது இரு நாட்டின் எல்லை கோடு... எப்போது வேண்டுமானாலும் பாம் போடுவார்கள்.....
அதனால் அந்த இடத்தில் மனிதர்கள் வாழ முடியாது... இரண்டு பக்கமும் பதுங்கு குழி அமைத்து அதில் இரண்டு தரப்பு ராணுவமும் சண்டை போட்டுகொண்டு இருக்கின்றது... அதில் போஸ்னிய பகுதியில் உள்ள பதுங்கு குழியில் நடந்த சண்டையில் போஸ்னிய வீரன் ஒருவனும், செர்பியன் வீரன் ஒருவனும் உயிர் பிழைக்கின்றார்கள்....இதில் செர்பியர்கள் பினம் என்று நினைத்து மல்லாந்து படுத்து கிடக்கும் ஒரு வீரனின் முதுகுக்கு கிழே கண்ணி வெடி பொருத்தி விடுகின்றனர்.... அதாவது போஸ்னிய வீரர்கள் இறந்து கிடப்பவனின் உடலை புரட்டினால் அல்லது இழுத்தால் அங்கு இருக்கும் எல்லோரும் உடல் சிதறி இறப்பார்கள்( என்ன ஒரு கொடுர எண்ணம்) அனால் கொஞ்சம் நேரத்தில் அவனுக்கு மயக்கம் தெளிய... அவன் எழுந்தால் அந்த பதுங்கு குழியில் நடந்த சண்டையில் உயிர் பிழைத்து இரண்டு பேரும், படுத்துகிடப்பனை சேர்த்து மூன்று பேரும் இறக்கவேண்டி வரும்.. இதில் உயிர் பிழைத்த செர்பிய வீரனும் இன்னோருவனும் சேர்ந்துதான் அந்த கன்னிவெடியை போஸ்னிய வீரன் முதுகுக்கு கிழே வைத்து இருப்பார்கள்... அதனால் போஸ்னிய வீரன் அந்த மொட்டை தலை செர்பியன் மேல் கோபத்தில் இருக்கின்றார்கள்...

இந்த செய்தி மீடியாவுக்கும்...யுனைட்டேட் நேஷன் போர்சுக்கு தெரிகின்றது, அதன் பின் யுயைட்டேட் போர்ஸ் படை வீரர்கள், இரு நாட்டு சம்மதத்துடன் அந்த இடத்துக்கு மீடியா வோடு செல்கின்றனர்...
படுத்துகிடந்தவன் முதுகுக்கு கிழே இருந்த பாம் அகற்றப்பட்டதா? அந்த பதுக்கு குழியில் மாட்டிக்கொண்ட மூவர் நிலை என்ன என்பதை வெண்திரையில் கான்க....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
இந்த படம் 2001ல் வெளி வந்த படம்.....
போரின் மறுபக்கத்தையும் அதன் தனிமனித வேதனைகளை உளவியல் ரீதியாக சொன்ன படம்...
இரண்டு எதிரி நாட்டு வீரர்கள் ஒரு பதுங்கு குழியில் மாட்டிக்கொண்டாள்? எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையோடு சொல்லி இருக்கின்றார்கள்...

செர்பிய வீரன் தன்னை அறிமுகப்டுத்திக்கொண்டு போஸ்னிய வீரனிடம் கை கொடுக்க முயலா... நாம் என்ன பிசினசா பண்ண போறோம், நீ உன் பக்கம் போனதும் நான் என் பக்கம் போனதும் திரும்பவும் சண்டை போடதான் போறோம்... என்று கையை தட்டி விடும் காட்சி, அடிப்படை உண்மையை அக்குவேறாக சொல்லி இருக்கும் அந்த காட்சி சுகம்...
வெந்த புன்னில் வேல் பாய்ச்சும் மீடியாவை ஒரு புடி புடித்து இருக்கின்றார் இயக்குனர் Danis Tanović இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாகும் போது அதனை ஒழுங்காக ஷுட் செய்தாயா? என அந்த லேடி ரிப்போர்டர் கேமராமேனிடம் கேட்கும் காட்சியும் அதனை அழகாக காட்சி படுத்திய விதமும் அழகு....

விடியலும் அதன் பின் நடக்கும் போர் காட்சியும் ஒளிப்பதிவுக்கு ஜே போட்ட இடம்...
இந்த படம் ரசிகர்களாலும், பட ஆர்வலர்களாலும் மிகுந்த பாராட்டை பெற்றது* Best Foreign Language Film, (2001) 74th Academy Awards
* Best Foreign Language Film, 2002 Golden Globe Awards
* Best Screenplay, 2001 Cannes Film Festival
இந்தபடம் ஆஸ்கார் விருதில், சிறந்த பாரின் லான்ங்வேஜ் கேட்டகிரியில் வெற்றி பெற்றது அந்த நேரத்தில் இதனோடு போட்டி போட்டு தோற்ற படம் ,நம்ம அமீர்கானின் லகான் திரைப்படம்தான்...

இந்த படத்தின் கிளைமாக்ஸ் கனத்த இதயத்தோடு இருக்கும்.... இங்கு சேவை மனப்பான்மை, நிதர்சன உண்மை, எல்லாம் மாறுபாடு கொண்டவை என்பதை படத்தின் கிளைமாக்சில் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருப்பார் இயக்குனர்...
இந்த படத்தை பார்த்தால் இரவில் உங்களுக்கு உறக்கம் வராது...அந்த படுத்துகிடந்தவனின் முதுகுக்கு கீழே இருக்கும் பாம் எப்போது வெடிக்கும் என்ற யோசனையுடன் படுத்து இருப்பீர்கள்....
படுத்துகிடந்தவன் இருமும் போது அவன் அசைந்து பாம் வெடித்து விட்டால் என்ன செய்வது? என்ற அவன் அசையாமல் பார்த்துகொள்ளும் காட்சிகள்.. அருமை...

என்னதான் உதவி செய்ய முன்வந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலை வரும் பாருங்கள்... அதனை இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உங்களுக்கு உணர்த்தும்...
Directed by Danis Tanović
Produced by Čedomir Kolar
Written by Danis Tanović
Starring Branko Đurić
Rene Bitorajac
Filip Šovagović
Distributed by MGM Distribution Co.
Release date(s) 12 May 2001 (premiere at Cannes)
7 December 2001 (NYC only)
14 December 2001 (LA only) 17 May 2002 (UK)
Running time 98 mins
Language Bosnian / French / English / German
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நல்ல விமர்சனம். படம் பார்க்கணும் போல இருக்கு.
ReplyDeleteஅண்ணே எங்கே இருந்து படமெல்லாம்
வாங்குரீங்க?......
உங்கள் விமர்சனம் நல்லா இருக்கு.. பார்க்க வேண்டிய படம் தான் போல.....
ReplyDeleteஒரு நல்ல படம் அறிமுகம். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் ஜாக்கி! முன்னுரைதான் கொஞ்சம் நீளம்... ஆவ்..! விமர்சனம் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். விமர்சனத்தில் திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, மற்ற இலக்கியங்களோடு உள்ள பகிர்தல் என்று கொஞ்சம் கலர் சேர்த்துப்பாருங்கள்.. பிச்சுக்கும்!
ReplyDeleteநல்ல விமர்சனம். படம் பார்க்கணும் போல இருக்கு.
ReplyDeleteஅண்ணே எங்கே இருந்து படமெல்லாம்
வாங்குரீங்க?......=//
நன்றி ஜெட்லி இதற்க்கென ஒரு நண்பர்கள் கூட்டம் ஒன்று எனக்கு உண்டு அதான்..
உங்கள் விமர்சனம் நல்லா இருக்கு.. பார்க்க வேண்டிய படம் தான் போல....//
ReplyDeleteகிஷோர் இது பார்த்தே தீர வேண்டிய படம் கிஷோர்...
ஒரு நல்ல படம் அறிமுகம். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் ஜாக்கி! முன்னுரைதான் கொஞ்சம் நீளம்... ஆவ்..! விமர்சனம் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். விமர்சனத்தில் திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, மற்ற இலக்கியங்களோடு உள்ள பகிர்தல் என்று கொஞ்சம் கலர் சேர்த்துப்பாருங்கள்.. பிச்சுக்கும்!//
ReplyDeleteநன்றி ஜெகநாதன் தங்களின் வெளிப்படையான பாராட்டுக்கு என் நன்றிகள்.. பல
Dear Jacki
ReplyDeleteGood day to you.
Past few weeks I am reading your blog. Think I completed reading all your post in these days. Most of your post are really great. I respect your post with frustrations.
Now I am enjoying the posts coming under topic பார்த்தே தீர வேண்டிய படங்கள். I used to read wekipidia to know about films. Your review have more technical informations.
I wish and hope tamil film industries's lime light will fall on you very soon.
Regards
Rajkumar
Dubai
நன்றி ராஜ்குமார் உங்கள் மனம் திறந்த மடலுக்கு என் வந்தனங்கள்... உங்களை போன்றவர்களின் பாராட்டுகளே என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும்
ReplyDeleteநன்றி
ஜாக்கி
I wish and hope tamil film industries's lime light will fall on you very soon
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கு நன்றி ராஜ் குமார்...
எல்லாபுகழும் இறைவனுக்கே...
ஆனால் நாம் போடும் ஆட்டம் இருக்கின்றதே? யம்மாடி கொஞ்சம் நஞ்சம் ஆட்டம் அல்ல... அப்படி அடங்காமல் பேய் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கின்றோம்...\\
ReplyDeleteசரியா சொன்னீர்கள் நண்பரே!
வெறும் பட விமர்சணம் என்பதையும் தாண்டி, இப்போதைய மனநிலைக்கேற்பவும் தங்கள் வார்த்தைகள் இருக்கின்றன ...
விமர்சனத்தை நீங்கள் எழுதும் ஸ்டைல் சூப்பர் அதுக்காகவே படம் பார்க்கணும்!
ReplyDelete:))
"brassed off"
ReplyDeleteஅண்ணே, நீங்க இந்த படம் பார்த்துஇருக்கிங்கள
இந்த படத்த சமிபத்தில் "sony செட் மாக்ஸ்இல" பாத்தேன் மிக அருமையான படமா இருக்கு
நீங்க இந்த பட பத்தி விமர்சனம் பண்ணனும்
இது என் வேண்டுகோள்!
present sir.
ReplyDeleteஆனால் நாம் போடும் ஆட்டம் இருக்கின்றதே? யம்மாடி கொஞ்சம் நஞ்சம் ஆட்டம் அல்ல... அப்படி அடங்காமல் பேய் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கின்றோம்...\\
ReplyDeleteசரியா சொன்னீர்கள் நண்பரே!
வெறும் பட விமர்சணம் என்பதையும் தாண்டி, இப்போதைய மனநிலைக்கேற்பவும் தங்கள் வார்த்தைகள் இருக்கின்றன ...//
நன்றி ஜமால் இந்த முறை பலருக்கு பிடித்தும் இருக்கின்றது
விமர்சனத்தை நீங்கள் எழுதும் ஸ்டைல் சூப்பர் அதுக்காகவே படம் பார்க்கணும்!
ReplyDelete:))//
நன்றி சிவா.. மிக்க நன்றி எனக்கு வெண்பூவும் நீங்களும்தான் எனக்கு பின்னுட்டம் இட்டு என்னைவெளிபடுத்தினீர்கள் நன்றி...
"brassed off"
ReplyDeleteஅண்ணே, நீங்க இந்த படம் பார்த்துஇருக்கிங்கள
இந்த படத்த சமிபத்தில் "sony செட் மாக்ஸ்இல" பாத்தேன் மிக அருமையான படமா இருக்கு
நீங்க இந்த பட பத்தி விமர்சனம் பண்ணனும்
இது என் வேண்டுகோள்!//
அந்த படத்தோட டிவிடி கிடைச்சா கண்டிப்பா எழுதுறேன்... டிவிடி கிடைச்சா எனக்கும் கொடு..
நன்றி பிஸ்கோத்து பயல்
நன்றி நைனா...
ReplyDeleteரொம்ப நல்ல படங்களில் இதுவும் ஒன்னு, தெளிவான விமர்சனம், நன்றி நண்பரே
ReplyDeleteநேற்று தான் பார்த்தேன் ஜாக்கி ஸார். நீங்கள் சொன்னது உண்மை. படம் பார்த்து விட்டு, தூக்கம் வர ரொம்ப நேரம் ஆகிவிட்டது.
ReplyDelete